9/29/2006

கட்டிப்புடி வைத்தியம்

நானும் நேற்று ஒரு செய்தியை படித்தேன். அது கொசப்பேட்டையாரின் பதிவுக்கு நேர்மாறானது. இதையும் படியுங்க...படித்துவிட்டு திங்கட்கிழமை மதியம் சிட்னி "மார்டின் ப்ளேஸ்"க்கு வந்துடுங்க...

இங்க போனீங்கன்னா ஒலி/ஒளிப்பதிவையும் பார்க்கலாம்.

XXXX

அய்யாமாரே...அம்மாமாரே...ஏற்கனவே இருக்கிற இம்சைகள் போதாதென்று இன்னொறு இம்சையாக "ராதாராகவன்" என்ற பெயரில் மற்றுமொரு வலைப்பீ...மன்னிக்கவும்...வலைப்பூ.
"ங்" மக்கள் கொஞ்சம் சரிபார்த்து அந்த "பீ"யை தடை செய்தால் நன்றாயிருக்கும். இல்லையென்றால் கொஞ்சம் வக்கிரம் தான்...
இதுக்காக எவனாவது எம்மேல கோவப்பட்டு... போலிப்பதிவு... ஆபாசப்பதிவு போடனும்னு நெனச்சீங்கன்னா, தாராளமா போட்டுக்கலாம்...I am bloody single...I dont give a FUCK.

9/24/2006

இதைத்தான் எதிர்பார்த்தேன்!!!

It's BRONCOS vs STORMS



"New South Wales" or "Sydney" மக்களுக்கு சின்ன சந்தோசம் AFLல் "Sydney Swans" இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. "Victoria" மக்களுக்கு அதில் ஆப்பு.ஆனால் அவர்கள் சந்தோசப்பட "NRL" ல் "Melbourne Storms" இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. நம்ம "Brisbane Broncos"க்கு 6 வருடம் கழித்து "Premiership"தூக்குவதற்கான அருமையான வாய்ப்பு. "State of Origin"ல் நியூ சவுத் வேல்ஸ்க்கு வாயில் குச்சிமிட்டாயை வைத்த Maroon man "Lockeyer" மீண்டும் ஒரு முறை தனது திறனை நிரூபிப்பாரா?
we gonna witness an "eventful" Grand finale in recent times.

9/14/2006

yuk...I am disgusted!

8/24/2006

குறி அறு(ரி)ப்பு - அரசியல் - விளிம்பு நிலை

கடந்த வாரத்தில் பூனைக்கு மணி கட்டுவதாக நண்பர் லக்கி லுக்கின் லிவிங் ஸ்மைல் மீதான விமரிசனமும் அதைத் தொடர்ந்து எழுதப்பட்ட பல பதிவுகளும் பின்னூட்டங்களும் அவரவர் கருத்தை முன் வைத்தாலும் விடாது கருப்பு - ரோசாவசந்த் ஆகிய பதிவர்களின் சொற்போர் சில தன்னிலை விளக்கங்களையும் பல யோசிக்க வைக்கும் கருத்துகளையும் முன்வைத்திருந்தனர்.

இந்தியாவில் சுயமரியாதைக்கும் தற்பெருமைக்கும் வித்தியாசம் அறியாத அறியாமைக்கூட்டம் இருக்கும்வரை இது மாதிரியான கருத்துகள் ஏற்படுவதில் ஆச்சர்யம் இல்லை. இந்தியாவில் ஒரு ஆண் 30,35 வரை திருமணம் செய்ய விரும்பாமல் இருந்தால் அவனை குறியற்றவன் என்பதில் தொடங்கி அவனுக்கு "எயிட்ஸ்" என்பது வரையான கருத்துகளும் கிசுகிசுப்புகளும் ஏற்படுகின்ற வாய்ப்புள்ளது. இதுவே ஒரு பெண்ணுக்கு திருமணமாகாமல் இருந்தால் அவளை தேவடியா என்பதில் தொடங்கி ஒன்றுக்கும் உதவாத சாலையின் ஓரத்தில் ஓசி பீடிக்காக காத்திருக்கின்ற தெருபொறுக்கிகளும் தன் குறிஅரிப்பு தாங்காமல் நா கூசாமல் "வரியா" என்பது வரை கேட்பார்கள். இதுவே ஒரு இளம் விதவையாக இருந்து விட்டால் போதும் அவள் வேலை பார்க்கின்ற இடம் தொடங்கி குடியிருக்கும் வீடு வரை பார்க்கின்ற அனைத்து ஆண்களும் ஒரு நாள் படுப்பதற்காக அலையும் சமூகம் தான் "இந்திய" "தமிழக" சமூகம். மேலை நாடுகளிலும் இவை உள்ளது. ஆனால் அங்கெல்லாம் பாதிக்கப்படுகின்ற ஆணோ அல்லது பெண்ணோ வெளிப்படையாக எதிர் கொள்ள முடியும் ஆனால் இந்தியாவில் அது சாத்தியப்படுமாவென்று நாம் யோசிக்கக் கூட முடியாத நிலையில் இருக்கிறொம். என்னதான் பன்மொழிப் புலமை இருந்தாலும், மெத்தப் படித்திருந்தாலும் "கால் சென்டர்" பணியாட்களை விபச்சாரி என்று கட்டம் கட்டும் அளவிற்கு கீழ்த்தரமான சமூகம் நமது சமூகம். பாலியல் தொழிலாளர்களை விபச்சாரிகள் என்றழைக்கக் கூடாதெனவும் விபச்சாரம் என்பதையே அகராதியிலிருந்து எடுக்க வேன்டுமெனப் போராடி வரும் சமூகத்தினரும் இங்கே தான் இருக்கிறார்கள். அறியாமையினால் ஏற்படுகின்ற உடல் உபாதைகளையும், பால்வினை நோய்களையும் தவிர்க்கும் பொருட்டுதான் ஆணுறை போன்றவற்றை பயன்படுத்த அரசாங்கம் ஊக்குவிக்கின்றதேயொழிய அனைவரும் பாதுகாப்பான முறையில் குறி அரிப்பையும் இச்சையையும் தீர்த்துக் கொள்ள அல்ல என்பது இந்த படித்த முட்டாள்களின் மரமண்டைகளில் ஏறாதது வியப்பல்லவே.

உலகில் வேறெங்கும் இல்லாத அளவு நம்பிக்கை துரோகம் நடப்பது இந்தியாவில் மட்டுமே. குறி அரிப்பினால் என்றாவது தவறு செய்பவர்கள் தான் மேலை நாடுகளில் உண்டேயொழிய இந்தியாவைப் போன்று திருமாண பின்பும் விரையரிப்பு தாங்காமல் கள்ளக் காதலனோ, காதலியோ வைத்திருப்பவர்கள் மிகவும் குறைவு. இதனடிப்படையில் தான் நடிகைகளும் பெண்ணுரிமை பேசி வருகிறார்கள்.

கைக்கஞ்சு வாய்க்குப் பத்து சமாசாரம்...

இது போன்ற அனுபவங்கள் "விடாது கருப்பு" மட்டுமல்ல பலருக்கும் ஏற்படுகின்ற வாய்ப்புள்ளது. தனியாக வாழ முயல்கின்ற ஆண், பெண் என்கிற சமூகத்தினால்? அங்கீகரிக்கப்பட்ட பாலினத்துக்கே அதே சமூகத்தினால் ஏற்படுகின்ற துன்பங்களை எண்ணிப் பார்க்கும் பொழுது, பெற்றொர் தொடங்கி, உற்றார் உறவினர் சகோதரர் வரை அனைவராலும் ஏற்றுக்கொள்ள இயலாத ஒதுக்கப்பட்ட சமுகத்தைச் சார்ந்தவர்கள் பிச்சை எடுக்காமலோ இருன்ட தொழில் செய்யமலோ எப்படி வாழ முடியும். படிப்பறிவில்லமல், பொருளாதாரத்தில் நலிந்து அறியாமையினால் அல்லல் படுகின்ற ஆண் பெண் சமூகங்கள் இருக்கும் நிலையில் ஒருவர் நான் இவ்விரண்டிலும் சேராதவரின் சுய முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் எந்தளவிற்கு உள்ளது இந்த இந்திய வல்லரசில்?!. இன்று பார்பனரின் சூழ்ச்சியால் தான் சாதிகளும் பிரிவினைகளும் ஏற்பட்டதென்று இடஒதுக்கீட்டுக்காக போராடுகின்ற நாம் கேவலம் பிறப்பினால் உள்ள ஒரு சிறுகுறையை காரணம் காட்டி ஒரு பாலினத்தையே ஒதுக்கி ஒதுக்கி வைக்கிறோமே. அது தவறில்லையா? அவர்கள் கைக்கஞ்சு வாய்க்குப்பத்து ஏன் கேட்கப் போகிறார்கள் அவர்களுக்கும் ஆண், பெண்ணைப் போன்று சமமாகப் பாவித்து தொழிற்கூடங்களிலோ அல்லது இன்ன பிற பணிகளிலோ வேலை கொடுத்தால்...

இந்தியாவில் நான் அறிந்த வரையில் எந்த ஒரு படிவத்திலும் பாலினம் என்று நிரப்பப்பட வேண்டிய இடத்தில் ஆண், பெண் என்றுதான் இருக்குமேயொழிய "பிறர்" என்று ஒரு கட்டம் இருப்பதாக நான் அறிந்ததில்லை. ஆக இதன் மூலம் இந்திய அரசினாலேயே அங்கீகரிக்கப் படாத நிலையில் தான் "திருநங்கைகள்" இருக்கிறார்கள். இங்கொன்றும் அங்கொன்றுமாக அரசியலில் அதிகாரம் தரக்கூடிய பதவிகளில் சில "திருநங்கைகள்" இருந்தாலும் அவருடைய பண, படை பலத்திற்கு ஈடு கொடுக்க முடியாத காரணத்தினால் தானேயொழிய அவரை ஒரு "திருநங்கை" என அங்கீகரித்து சமூகத்தினால் கொடுக்கப்பட்டப் பதவிகளில்லை.

இப்படிபட்ட ஒரு சமூகத்தில் படித்து வேலை பெறுவதென்பது ஒரு போராட்டம் தான். அந்த போராட்டத்தில் போராடி வெற்றிபெற்று தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை நிறுவ முயன்று அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கின்ற "லிவிங் ஸ்மைல்" கர்வம் கொள்வதில் தவறேதும் இல்லை. மேலும் அவருக்கான இந்த வெற்றி ஒரு ஆணோ அல்லது ஒரு பெண்ணோ பெற்றிருக்கின்ற வெற்றியைப் போன்றே சமமாகப் பாவிக்கலாம். உதாரணத்திற்கு அச்சு ஊடகங்களில் தம்முடைய படைப்புகள் வெளியாவதையொட்டிய கர்வம் வலைபதிவருக்கு வருவதைப் போன்ற கர்வம் தம்முடைய சுய முயற்சியினால் வெற்றி பெருகின்ற சமூகத்தினால் ஒடுக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட ஒரு பாலினத்தை சேர்ந்தவரும் கொள்ளலாம்.

8/18/2006

ஊர் மேயப் போறேன்...

ஒடம்பு ரொம்ப சூடாச்சு...அதான் ;)







நான் சுட்டது இவற்றிற்கு முன் சப்பையாய் இருப்பதால் நீங்கள் இங்கேயே சென்று பார்த்துக்கொள்ளவும்

8/17/2006

அரைவேக்காட்டுத் தலைகளுக்காக...

உலகத் தமிழர் பேரமைப்பு எப்பொழுது தொடங்கப்பட்டது, ஏன் தொடங்கபபட்டது அதனுடைய நோக்கம் என்ன? இவை பற்றியெல்லாம் சிறிது அறிந்திராமல் அல்லது அறிந்து கொள்ளக்கூட முயற்சி செய்யாமல் கிராமப்புறங்களில் உள்ள வேலையில்லா வாலிபர்களும் வயோதிகர்களும் ஊர் மரத்தடியில் உள்ள திண்ணையில் வெட்டியாகக் கதைத்து நேரவிரயம் செய்து கொண்டிருப்பதைப் போல மஞ்சுளா நவநீதன் என்பவர் திண்ணை இணையதளத்தில் உலகத் தமிழர் பேரமைப்பு - ஒற்றுமையா? பிரிவினையா என்று கேள்வி எழுப்பி இருக்கின்றார்.அவரைச் சொல்லிக் குற்றமில்லை.

சாதிகள் ஏன் இன்னமும் உள்ளது எவனோ ஒருவன் சொல்லிச் சென்றான் என்பதனால் இன்னமும் கண்மூடித் தனமாக பின்பற்றி வரும் நமக்கு ஒரு மொழி தான் இனத்தின்/நாகரீகத்தின் அடையாளம் என்பது ஏற்றுக் கொள்வதில் பிரச்சினை இருப்பதில் வியப்பேதும் இல்லை. அவர் தன்னை ஒரு மேதாவியாகத் தன்னை நினைத்துக் கொண்டு எழுப்பியிருக்கும் கேள்விகள்தாம் நகைப்பிற்குரியதேயொழிய உலகத்தமிழர் பேரமைப்பு(கூட்டமைப்பு)இன் நோக்கங்கள் நிச்சயமாக எதிர்காலத் தமிழ் மொழி/இனத்திற்கான வழிகாட்டியாக இருக்குமென்பதில் சிறிதொரு ஐயமும் இல்லை.

சேலம் மாநாட்டில் இயற்றப்பட்டத் தீர்மானங்கள்:

1. உலகத் தமிழ்க் குழந்தைகளின் கல்வி

உலகில் பல நாடுகளில் வாழும் தமிழர்களின் குழந்தைகள் தமிழ் மொழி, இசை, கலை, பண்பாடு ஆகியவற்றைக் கற்க, போதுமான வாய்ப்பு இன்மையால் தாய் மொழியான தமிழையும், நமது கலை, இசை போன்றவற்றையும், நமக்கே உரிய தனித்த பண்பாட்டினையும் அறிந்து கொள்ள முடியாமல் பிற மொழி, பிற பண்பாட்டுடன் வளர வேண்டிய, வேண்டாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த அவல நிலையைப் போக்குவதற்கான திட்டங்களை வகுக்கவும், அதனைச் செயற்படுத்துவதற்குமான பொறுப்பினைத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு அளிப்பதோடு அதற்குத் தேவையான நிதி ஆதாரங்களைத் தமிழக அரசும், இந்திய அரசும் அளிக்க முன்வரவேண்டுமென இம்மாநாடு வேண்டிக்கொள்கிறது.

2. பிறநாட்டுத் தமிழர் நிலை ஆராயக்குழு

மலேசியா, சிங்கப்பூர், அரபு நாடுகள் முதலிய பல நாடுகளுக்குப் பிழைப்புத் தேடிச் சென்ற தமிழர்கள் பல வகையான ஒடுக்குமுறைகளுக்கும், சுரண்டல்களுக்கும் ஆளாகி நலிகிறார்கள். இந்நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் அவர்களுக்கு உதவ முன்வருவதில்லை. இவர்களின் இன்னல்களைப் போக்கும் பிரச்னைகளில் போதுமான அக்கறை காட்டுவதில்லை.மேற்கண்ட நாடுகளில் நிலவும் உண்மை விவரங்களை அறியாத நிலையில் ஏராளமான தமிழர்கள் பிழைப்புத் தேடி இந்நாடுகளுக்கு மேலும் மேலும் சென்று பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகிறார்கள். வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் நிலை குறித்து முழுமையாக ஆராய்ந்து இந்திய அரசுக்கு ஆலோசனை கூறத் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்றை அனுப்ப வேண்டும் என இம்மாநாடு வற்புறுத்துகின்றது.

3. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தை மேம்படுத்துக

சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் உலக அளவிலும், இந்திய அளவிலும் நடக்க வேண்டிய உயர்நிலைத் தமிழ் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. ஆனால் அந்தப் பணி முழுமையாக நிறைவேறவில்லை. எனவே இந்நிறுவனத்தை உலகளவில் சிறந்த தமிழாராய்ச்சி நிறுவனமாக உயர்த்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசை இம்மாநாடு வேண்டிக் கொள்கிறது.

4. செம்மொழித் தமிழ் உயராய்வு மையம்

செம்மொழிப் பட்டியலில் தமிழ் மொழியையும் சேர்க்க வேண்டும் என்று நூறாண்டு காலத்திற்கும் மேலாக வற்புறுத்தி வந்த தமிழ் மக்களின் கோரிக்கையை ஏற்ற இந்திய அரசுக்கும் அதற்குக் காரணமான தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், தமிழறிஞர்கள் ஆகியோருக்கும் இம்மாநாடு பாராட்டினையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது. அதே வேளையில் செம்மொழியின் கால அளவினை 1500 ஆண்டுகளாகக் குறைத்திருப்பதை மாற்றி 2000 ஆண்டுகளாக ஆக்க வேண்டும் என வலியுறுத்துகிறது. மேலும் பண்பாட்டுத் துறையில் இருந்து, கல்வித் துறைக்கு முழுமையாக மாற்றியமைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.தமிழ்ச் செம்மொழி தொடர்பான பணிகளை, எந்த நிறுவனத்திடமும் ஒப்படைக்காமல், அதற்கென்று தனியாகச் செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் (Centre for Excellence of Classical Tamil) என்று தனியான நிறுவனத்தை நிறுவி அதற்குத் தேவையான நிதியுதவியை அளிக்க முன்வருமாறு இந்திய அரசை இம்மாநாடு வேண்டிக் கொள்கிறது. செம்மொழித் திட்டம் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

5. தமிழீழ விடுதலைப் போரை அங்கீகரிக்க வேண்டுதல்

இலங்கை இனப்பிரச்னையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவோ, போர் நிறுத்த உடன்பாட்டினைத் தொடர்ந்து கடைப்பிடிக்கவோ சிங்களப் பேரினவாத அரசு சிறிதளவு கூட விரும்பவில்லை என்பது வெளிப்படையாக தெரிந்துவிட்ட நிலையில் இந்திய அரசும், உலக நாடுகளும் தங்கள் நிலையினை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியமும், அவசரமும் ஏற்பட்டுள்ளன.தமிழ்நாட்டு மக்களோடு தொப்புள் கொடி உறவு பூண்டு மொழி, இனம், பண்பாடு, பழக்க வழக்கங்கள் ஆகியவற்றால் மிக நெருக்கமாக இருக்கக்கூடிய தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தை அங்கீகரித்து அவர்களுக்குச் சகல உதவிகளைப் புரிய முன்வருமாறும், அவ்வாறே செய்யுமாறு உலக நாடுகளை வற்புறுத்துமாறும் இந்திய அரசை இம்மாநாடு வேண்டிக் கொள்கிறது.

6. ஈழத் தமிழ் ஏதிலியருக்கு உதவி

சிங்கள இனவெறியர்களின் திட்டமிட்ட இனப் படுகொலைத் தாக்குதல்களிலிருந்து உயிர் தப்பிப் பிழைக்கத் தமிழ்நாட்டை நோக்கி ஈழத்தமிழர்கள் ஏதிலிகளாக ஓடிவருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நிலைமை தொடர்ந்து நீடித்து வருகிறது. தமிழ்நாட்டில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட ஈழத்தமிழர்கள் ஏதிலிகளாக முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். போதுமான உணவு, சுகாதார வசதிகள், உறைவிட வசதிகள் இல்லாமல் பெரும் துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர்.ஐ.நா. பேரவையில் துணை அமைப்பான ருசூழஊசு என்னும் அமைப்பு உலகின் பல்வேறு நாட்டு அகதிகளுக்கு எல்லா வகையிலும் உதவி புரிந்து சிறப்பாகத் தொண்டாற்றி வருகிறது. எனவே ஈழத் தமிழ் ஏதிலிகளை பராமரிக்கும் முழுப் பொறுப்பினையும் UNHCR வசம் ஒப்படைக்க வேண்டும் என இந்திய அரசை இம்மாநாடு வற்புறுத்துகிறது.

7. தாய்த்தமிழ் வழிப் பள்ளிகள்

தமிழ்நாட்டில் தமிழ் உணர்வாளர்களின் முயற்சியால் உருவாக்கப்பட்ட தாய்த் தமிழ் வழிப் பள்ளிகள் தமிழக அரசின் உதவியோ அங்கீகாரமோ இல்லாமல் தத்தளிக்கின்றன. இந்தப் பள்ளிகள் சிறப்பாகச் செயல்படவும் நவீன தொழில் நுட்ப ஆலோசனைகள் வழங்கவும் உலகத் தமிழர்கள் முன் வர வேண்டும் என இம்மாநாடு வேண்டிக் கொள்கிறது. வெளிநாடுகளில் உள்ள தமிழரமைப்புகள் தமிழ்நாட்டில் உள்ள தாய்த் தமிழ்ப் பள்ளிகளைத் தத்தெடுத்துக் கொண்டு உதவ முன்வருவதன் மூலம் தமிழ்வழிக் கல்வி வளர்ச்சிக்குத் துணை புரிய வேண்டுமென இம்மாநாடு வேண்டிக் கொள்கிறது.

8. ஈழத்தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்துப் பேசுக

இலங்கைக் குடியரசுத் தலைவர், அமைச்சர்கள் அடிக்கடி தில்லி வந்து இந்தியப் பிரதமரையும் மற்ற அமைச்சர்களையும் சந்தித்துத் தங்கள் நிலைப்பாட்டினைத் தெரிவித்து ஆதரவு திரட்ட அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதைப் போல இலங்கை நாடாளுமன்ற தமிழ் உறுப்பினர்கள் தில்லி வந்து இந்தியப் பிரதமரைச் சந்தித்து தங்கள் நிலைப்பாட்டினை எடுத்துக் கூற வாய்ப்பு அளிக்க வேண்டும் என இந்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

9. கடலடி ஆய்வை மேற்கொள்ளுக

பூம்புகாரில் கடலடி ஆய்வை மேற்கொண்ட கிரகாம் ஆன்காக் உலகின் தலை சிறந்த தாய் நாகரிகம் எனக் கருதத்தக்க ஒரு நகர நாகரிகம் கடலடியில் மூழ்கிக் கிடப்பதாகவும் அது 11,000 ஆண்டுகள் பழைமை கொண்டதாகவும் அறுதியிட்டுக் கூறினார். பல்வேறு காரணங்களால் அவரின் ஆய்வு தடைப்பட்டுள்ளது. இச்சூழலில் கிரகாம் ஆன்காக் அவர்களைக் கொண்டு பூம்புகாரிலும் மற்றுமுள்ள தமிழகக் கடற்கரை நகரங்களிலும் கடலடி ஆய்வை மேற்கொள்ள தமிழக அரசை இம்மாநாடு வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

10. பழந்தமிழ் எழுத்துக்கள்

தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டு வரும் சங்க காலத்திற்குரிய தமிழ் எழுத்துக்கள் யாவும் அசோகனின் காலமான கி. மு. 258-க்கும் அஃதாவது கி. மு. 3-ஆம் நூற்றாண்டிற்குப் பிந்தியவை என்றும், அசோகனின் பிராமி எழுத்தைப் பின்பற்றி அமைக்கப்பட்டவை என்றும் ஒரு சில ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் அண்மைக்காலத்தில் தமிழகத்தில் கிடைக்கும் கல்வெட்டுகள் காலத்தால் முந்தையனவாக உள்ளதால் தமிழ் எழுத்துக்களைத் தமிழ் பிராமி எழுத்துக்கள் என அழைக்காமல் அவற்றைப் பழந்தமிழ் எழுத்துக்கள் என்று அழைக்க வேண்டும் என இம்மாநாடு தமிழ் ஆய்வாளர்களைக் கேட்டுக் கொள்கிறது.

நன்றி:

திண்ணை
தென்செய்தி

8/14/2006

புதியதொரு எழுச்சியில்...

தற்போது இலங்கையில் நடைபெற்றுவரும் நிகழ்வுகள் புதியதொரு வரலாறு எழுதப்படுவதற்கான முன்னுரையாகவே எமக்குத் தெரிகிறது. அதில் அமையப் போகவிருக்கும் உலகின் முதல் தமிழ் தேசத்தை அங்கீகரிக்க வேண்டிய நிலையை சிங்களப் பேரினவாத அரசு உலகநாடுகளின் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஈழத்தில் நடைபெற்றுவரும் நான்காம் விடுதலைப் போரில் தமிழீழப்புலிகள் பெரியதொரு வெற்றியின் அருகாமையில் இருப்பதாகவேத் தெரிகிறது.

தற்போதுள்ள சூழ்நிலையில் யாழ் தீபகர்பத்தை ஆக்கிரமித்து வந்த சிங்களப் படையினருக்கான அத்தியாவசியப் பொருட்கள் போக்குவரத்தை அடியோடு அழித்திருப்பதன் மூலம் தமிழீழப் புலிகளின் கைகள் ஓங்கியுள்ளதை தெளிவாக அறியலாம். யாழ்குடாவிற்கான தரைவழி போக்குவரத்தை மட்டும் துண்டித்ததல்லாமல் வான்வழி போக்குவரத்திற்கான பலாலி இராணுவ விமானதளத்தையும் வான்புலிகள் தகர்த்துள்ளனர்.

இதன் மூலம் தமிழீழப்புலிகள் முப்படைகளையும் கொண்டுள்ளனர் என்பதும் "தமிழீழப்புலிகள்" ஒரு இயக்கமல்ல தமிழீழ அரச படைகள் என்று உலக நாடுகள் அறிந்திருக்கக் கூடும். சிங்களப் பேரினவாத அரசின் அடாவடிப் படையினரின் ஒரே தொடர்பு கடல்வழி மட்டுமே. ஆனாலும் ஆண்மையற்ற சிங்களப் பேரினவாத அரச படையினரால் கடற்புலிகளை எதிர்த்து போரிட துணிவில்லாத காரணத்தால் தமதுப் பேரினவாத படையினரைக் காக்கும்பொருட்டு இந்திய கூட்டமைப்பின் கப்பற்படையின் உதவியை நாடியுள்ளதாகத் தெரிகிறது.

ஈழ பூமியில் ஏற்கனவே தமது படையினரை இழந்திருக்கும் இந்திய கூட்டமைப்பின் அரசானது இலங்கையின் சிங்களப் பேரினவாத அரச படையினருக்கு பாதுகாப்பளிக்கத் துணியாது என தெரிகிறது. பிராந்திய ரீதியில் சிங்களப்பேரினவாத அரசின் சமீபத்திய நடவடிக்கைகள் இந்திய கூட்டமைப்பை எரிச்சலடையவே செய்திருக்கின்றன. மேலும் இந்திய கூட்டமைப்பின் தேசிய பாதுகாப்புத்துறையின் தலைவரான நாராயணனும் "புலிகளால் இந்தியாவிற்கு ஆபத்தேதும் இல்லை" எனத் தெரிவித்திருப்பதன் மூலம் இந்தியக் கூட்டமைப்பு, தற்போது ஈழத்தில் நடைபெற்று வரும் போரில் எந்தவொரு ரீதியிலும் ஈடுபடாது என அறிந்து கொள்ள முடிகிறது.

*****
நேற்று சேலத்தில் உலகத்தமிழர் கூட்டமைப்பின் நான்காம் ஆண்டு நிறைவு விழா பல்வேறு அடக்குமுறைகளையும் தடைகளையும் தகர்த்து இனிதே நடந்தேறி இருக்கிறது. கூட்டத்தில் பேசிய பல்வேறு தமிழர் சமூக, அரசியல் தலைவர்களும் தனி தமிழீழமே தமிழர் தம் உரிமையை திரும்பப் பெறுவதற்கான தீர்வாக இருக்கும் என்று ஒருமனதாக கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் தமிழீழ தேசியத் தலைவரின் மீதான பற்று தமிழகத்தில் அதிகமாகியுள்ளதும், அதை வெளிப்படையாக தெரிவிக்கவும் பொதுமக்கள் தயங்கவில்லை எனவும் தெரிகிறது. ஆக இந்தப் புதியதொரு எழுச்சி ஈழத்தில் மட்டுமல்லாமல் தாய்த் தமிழகத்திலும் பொங்கி வருவது இனியதொரு விடியலை நோக்கியே...

*****
தமிழீழப் புலிகளின் எழுச்சியையும் தமது தோல்வியையும் தாங்க இயலாத சிங்களப் பேரினவாத அரசு யாருமற்ற ஒன்றுமறியாப் பச்சிளம் சிறார்களின் மேல் குண்டுகள் வீசிப் படுகொலை செய்துள்ளனர். ஒரு பாவமும் அறியா ஆதரவற்ற இச்சிறார்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலி.

8/05/2006

போலியென்றார்
பொறம்போக்கென்றார்
ஜாட்டானென்றார்
ஜென்ம புத்தியென்றார்

சாதி வெறியனென்றார்
சாதிப்பெருமை
பேசுகின்றேனென்றார்
சூரியத்தனமான
கண்டுபிடிப்பென்றார்

குழுவென்றார்
குழுமமென்றார்
கீழ்ப்பாக்கத்திற்கு
வழிதேடும்
கீழ்ப்பாக்கமென்றார்

நடுநடுவே
நட்சத்திரமென்றார்
உப்புசப்பில்லாமல்
எழுதியதை
அச்சேட்டிலேற்றினார்

அதை மறுபதிவு
செய்து
பின்னூட்டப்புகழ்
பட்டமளித்தார்
ஒருகூட்டார்

தவழ்ந்தேன்
நடந்தேன்
ஓடினேன்
மூச்சிரைத்தேன்

முக்கினேன்
முனகினேன்
திக்கினேன்
தவறினேன்

எட்டி நின்று
பார்த்ததில்
நானும் கடந்த
பத்து மாதங்களாக
கிறுக்கியதில்
குறைப் பிரசவமாய்
இதுவும் ஐம்பதாக

இன்னுமொரு பதிவு

***
-ஐக்கிய அமெரிக்க மாகாணங்களின் எண்ணிக்கை 50.
-தொலைக்காட்சி ஒளிபரப்பான ஹவாய் 5O என்றிருப்பது,ஹவாய் 50ம் மாகாணமாய் இருப்பதால் தான்.
-தானியங்கி துப்பாக்கியின் தோட்டாவின் அளவு 0.50 அங்குலம்.
-யூதர்களின் மர்ம? குழுவான கபாலாவில் உண்மையை புரிந்துணர 50 கதவுகளும், அசுத்தத்தை உணர 50 கதவுகளும் திறக்கப்பட வேண்டும்.
-சொல் வழக்கத்தில் சரிசமான பகுதியை 50 - 50 என்று விளிப்பதுண்டு.
-புகழ்பெற்ற அமெரிக்க கானாப் புகழ் பாடகர் ஒருவரின் அடையாளப் பெயர் 50 சென்ட்ஸ்.
-திருமண வாழ்வில் 50 ஆண்டு நிறைவை பொன்விழாவாகவும் கொண்டாடுவர்.
-இந்தியா குடியரசானது 1950ல்.
-புகழ் பெற்ற இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் மொகிந்தர் அமர்நாத் பிறந்ததும், சுதந்திர இந்தியாவின் அரசியல் நட்சத்திரமான இந்தியாவின் இரும்பு மனிதன் "சர்தார் வல்லபாய் படேல்" இறந்ததும் 1950.
-நவீன இந்தியாவின் சாத்தானாகக் கருதப்படும் குசராத்தின் முதன்மந்திரி "மோடி" பிறந்ததும் 1950 தான்.
- 565 சுயாட்சி, சார்பு சுயாட்சி மாகாணங்கள் இணைக்கப்பட்டு இந்தியா என்ற ஒரு குடியரசு நாடு உருவானதும் '50ல் தான்.

7/29/2006

"பாடி காட்" முனீசு

...அப்பொழுது இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். நானும் அண்ணனும் தான் எங்கள் வீட்டின் சிங்கக் குட்டிகள். என்னுடைய உடை முதல் காலணி வரை எல்லாமே அவன் பயன்படுத்தியதாகத் தான் இருக்கும். இதனாலேயே அவன் மேல் எனக்குப் பொறாமையாக இருக்கும். பல நேரங்களில் நான் ஏன் அண்ணனுக்கு அண்ணனாகப் பிறந்திருக்கக் கூடாது என்ற எண்ணம் எழும். என்ன தான் அவன் என்னைவிட இரண்டு வயது மூத்தவனாக இருந்தாலும், இதுவரை அவனை அண்ணனாக பாவித்து பெயருக்கு கூட அண்ணா என்றழைத்ததாக நினைவில்லை. அண்ணன் கொஞ்சம் சாது (அ) பயந்த சுபாவம் உள்ள சிங்கக்குட்டி. இதை நான் என்னுடைய பலமாகக் கருதிக் கொண்டேன். நானும் பயந்த சுபாவம் தான் என்றாலும் அதை என்றும் வெளிக்காட்டியதில்லை. இதனாலேயே பொழுது சாய்ந்த நேரங்களில் அவன் வெளியே செல்லவே பயப்படுவான். துணைக்கு ஒரு ஆள் இருந்தால் தான் வெளியே செல்லுவான். இதனால் பல நேரங்களில் நான் தான் அவனுக்கு "பாடி காட்"...

...அம்மாவுக்கு என்னுடைய மன வலுவை? சிலாகித்துப் பேசுவதில் கொள்ளைப் பிரியம். சதா சர்வ காலமும் அக்கம் பக்கத்து அத்தைகளிடம் "சின்னவன் ரொம்ப தைரியசாலி, பெரியவனுக்கு அவன் தான் துணை" என்று சொல்லும் பொழுது நான் வானில் பறப்பது போன்று உணர்வேன். இந்த "ஸ்டேடஸ் கோ"வை தக்க வைத்துக் கொள்வதற்காகவே பக்கத்து வீட்டு அக்கா சந்தைக்கு செல்லும் பொழுது கூட நானாகவே வலிய சென்று அவளிடம் துணையாக வருகிறேன் என்று கூறி ஒட்டிக்கொள்வேன்...

...அப்பொழுதெல்லாம் தோட்டது வீடு இல்லை. வீட்டை ஒட்டியே கழிப்பிடம் இருந்தாலும் தோட்டத்தில் இருந்த குப்பை மேடு தான் எனக்கு மூத்திரம் அடிக்க இலகுவான இடம். குப்பையை ஒட்டி ஒரு புளிய மரமும் அதற்கு பக்கத்தில் எப்பொழுதும் இலையே விடாத ஆனால் நீண்டு வளர்ந்திருந்த ஒதிய மரமும் இருக்கும். இப்போதைய தோட்டத்து வீட்டின் சமையற்கூடம் இருக்கும் இடத்தில் ஒரு வேப்ப மரமும் பல வருடமாக குள்ளமாகவே இருந்த நான்கு தென்னங்கன்றுகளும் இருக்கும்...

...அப்போது இரவு மணி ஒன்று ஆகியிருக்கும். எனக்கு அவசரமாக மூத்திரம் போக வேண்டுமென்ற உணர்வு. ஆனால் யாரை எழுப்புவதென்று எனக்கு விளங்கவில்லை. அப்பா அம்மா அண்ணன் என்று அனைவருமே நல்ல நித்திரையில் இருக்கிறார்கள்.யாரை எழுப்பினாலும் வசை வாங்குவது உறுதி. அது மட்டுமல்லாமல் "தைரியமான சிங்கக்குட்டி" என்ற பிம்பம் தகர்வதற்கான சாத்தியங்களும் உண்டு. அண்ணன் நாளை என்னை எள்ளலாகப் பார்ப்பான். ஆனாலும் புளிய மரத்தடியில் மூத்திரம் பெய்ய வேண்டுமென்றால் கூடுதலான மெய்யான மன வலு வேண்டும். அதுவும் பச்சையம்மாள் பாட்டியின் மகளான "தனம்" அக்கா தூக்கு மாட்டிக் கொண்ட மரம் வேறு...

...எப்போதும் படுக்கையிலேயே மூத்திரம் போகும் எனக்கு ஏன் இன்று மட்டும் வெளியே சென்று மூத்திரமடிக்க வேண்டுமென்ற உந்துதல் என்று தெரியவில்லை. ஒவ்வோர் இரவும் படுக்கையை ஈரமாக்கியதால் இப்போதெல்லாம் எனக்கு தனிப் படுக்கை தான். ஆனாலும் பெரும்பாலான நேரங்களில் அம்மா எனக்கு வேறுடுப்பு உடுத்தி அவளோடு படுக்க வைத்துக் கொள்வாள்.ஆனால் அவளுக்கு உடம்பு சுகமில்லை இப்பொழுது. அதனால் அவளுக்கும் தனிப்படுக்கை தான். ஆக என் படுக்கையை ஈரமாக்கினால் கூட நான் அம்மாவைக் கட்டிக் கொண்டு தூங்க இயலாது...

...அம்மாவிற்கு அறுவை சிகிச்சை முடிந்துள்ளதால் அவளை சுத்தமாக இருக்க வேண்டுமென்று மருத்துவர் அறிவுறுத்தியிருப்பதாகத் தெரிகிறது. அதனால் அவள் வெண்மையான உடைகளையே உடுத்துகிறாள். படுக்கை முதல் போர்வை வரை அனைத்துமே வெண்மை தான்...

...என்ன ஆனாலும் சரி யாரையாவது துணைக்கு எழுப்ப வேண்டியது தான் என எண்ணி அம்மாவை எழுப்பினேன்.அவள் "ம்" கொட்டினாளேயொழிய எழும்புவதற்கான ஒரு அறிகுறியும் தென்படவில்லை. மீண்டும் எழுப்புகிறேன். பொழுது புலர்ந்து விட்டதாக என்னிடம் கூறிவிட்டு இப்பொழுது தலையையும் சேர்த்து மூடிக் கொண்டாள். எனக்கோ அவசரம். மீண்டும் எழுப்புகிறேன். அம்மா அப்பாவிடம் என்னோடு துணைக்கு செல்லுமாறு கட்டளையிட்டுவிட்டு திரும்பவும் தலையை போர்வைக்குள் நுழைத்துக் கொண்டாள்...

...அது மார்கழி மாதம். இரவிலும், இளங்காலை நேரத்திலும் சிறிதளவு பனி பெய்யும். சில நேரங்களில் பனி மூட்டமாகவும் இருக்கும். இதனால் அக்கம் பக்கத்து அத்தைகள் தலையில் முக்காடு போட்டுக் கொண்டு தான் வாசலில் சாணி தெளித்துக் கோலம் போடுவார்கள். அம்மாவும் அதற்கு விதி விலக்கல்ல. இப்பொழுது அம்மாவுக்கு உடம்பு சரியில்லாததால் செல்வியக்கா தான் அம்மாவிற்கு அனைத்து வீட்டடி வேலைகளிலும் உதவியாக இருக்கிறாள்...

...தோட்டத்து வீடு அப்பொழுது இல்லாத்தால், பிரதான வீட்டு தோட்ட வாசலில் இருந்து அவரைப் பந்தல் ஆரம்பிக்கும். ஒரு பத்தடி வரை வெற்றிடமாகவும் எஞ்சியுள்ள பகுதிகளில் மஞ்சள் மற்றும் சிவப்பு கனகாம்பரச் செடிகளும், பல்வேறு வண்ண திசம்பர் செடிகளும் இருக்கும். அவரைப் பந்தலுக்குக் கீழே இருந்த மண் தரையிலும் அம்மா சாணி தெளித்துக் கூட்டியதால் அது கட்டாந்தரையாகி விட்டிருந்தது. அங்கே மதிற்சுவரை ஒட்டி நானும் அண்ணனும் சேர்ந்து ஒரு செம்மண் கோபுரம் கட்டியிருந்தோம். அதனுள் ஒரு ஈசுவரனும் பொம்மையாக அமர்ந்திருந்தான்...

...என்ன தான் எழுப்பினாலும் அம்மா எழப்போவதில்லை. அடுத்த இலக்கு அப்பா தான் அவரை எழுப்பலாமா என நினைக்கிறேன். சரியென்று அப்பாவை துணைக்கழைக்க அவரும் பொழுது விடிந்து விட்டதாகவும் வெளியே வெளிச்சமாக இருப்பதாகவும் கூறுகிறார். நம்முடைய மனவலுவிற்கு சோதனையா? என்றெண்ணி எம்பி குதித்து தோட்டத்து மின்விளக்கை "ஆன்" செய்தேன்...

...வயலில் போட்டது போக எஞ்சியிருந்த "செனப்பை" விரையை குப்பையில் கொட்டியிருந்தார்கள். அது அப்பொழுது தான் துளிர் விட்டிருந்தது. காலையில் பூ பறிக்கும் பொழுது அந்த செனப்பைத் துளிர்களையேப் பார்த்துக் கொண்டிருப்பேன். பச்சையம்மாள் பாட்டியின் கோழிகள் வந்து குப்பையை சீந்துவதற்கு இப்பொழுதெல்லாம் அனுமதிப்பதில்லை. ஆனாலும் கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருக்கிறேன். அவளது கோழி அடிபடுவதை அவள் பார்த்தாளென்றால் இட்லிக்கு கெட்டி சட்னி கொடுக்க மாட்டாள். நான் பள்ளிக்கூடத்திற்கு நீர்த்த சட்னிக்காக இன்னுமொரு சுமையையும் சேர்த்து சுமக்க வேண்டியிருக்கும்...

...ஒரு வழியாக தோட்டத்துக் கதவை ஓசை படாமல் திறந்து விட்டேன். மின்னொளியில் செம்மண் கோபுரம் கோபத்தில் சிவந்த மூக்கினைப் போன்று சிவந்திருக்கிறது. உள்ளிருக்கும் ஈசுவரனோ அவனுடைய தூக்கைத்தை நான் கெடுத்து விட்டதாக எண்ணி என்னை நோக்கி உக்கிரமான பார்வையை வீசிக் கொண்டிருக்கிறான். அவனுடையை கண்களைப் பார்த்து எனக்கு பயமேதும் இல்லை. ஏனென்றால் இந்நேரத்தில் வரும் "தனாக்கா" கண்டிப்பாக ஈசுவரன் கண்ணை பார்த்து பயந்து ஓடியிருப்பாள். குப்பை மேட்டில் புளிய மரத்தடியில் அவசர கதியில் என் அவசரத்தை வெளிக்கொட்டினேன்.இப்பொழுது தான் பெருஞ்சுமை குறைந்து இருக்கிறது.இதைச் சொல்லியே அண்ணனை இன்னும் ஒரு வாரத்திற்கு மட்டம் தட்டலாம் என மனதில் குதூகலம்...

...அவசர அவசரமாக தோட்டத்துக் கதவை நோக்கி நடக்கிறேன். பாதி அவரைப் பந்தலை தாண்டியவுடன் தான் கவனிக்கிறேன் அம்மா என்னைக் கடந்து செல்வதை.அவள் அதே வெள்ளைப் புடவை தான் அணிந்திருந்தாள், முக்காடு வேறு போட்டிருந்தாள். கோபத்தோடு அம்மா என்றெலற அவள் என்னைத் திரும்பி பார்காமலேயே என்ன என்று என்னையே திருப்பி கேட்கிறாள். நான் கூப்பிட்ட பொழுது வராமல் இப்பொழுது ஏன் வந்தாய் என நான் கேட்க, வந்த வேலை முடிந்ததால் நான் செல்கிறேன் என்று தூக்கத்தில் உளறிக்கொட்டிச் சென்றாள்.குழப்பத்தோடு உள்ளே வந்து தோட்டத்துக் கதவை தாழிடாமல் அம்மாவிற்காக திறந்து வைத்தேன்.ஆனால் அம்மா உள்ளிருந்து கதவை தாழிடும்படி குரல் கொடுத்தாள்...

...காலையில் அம்மாவிடம் விவரம் கேட்க, அம்மா பாட்டியிடம் விவரம் கேட்க பாட்டியோ பொழுது சாய்ந்தவுடன் மாமரத்தடியில் உள்ள "முனி" கோவிலுக்கு வரும்படி சொல்லிவிட்டு சென்றுவிட்டாள். நானும் அம்மாவும் முனியைப் பார்க்கச் சென்றோம். அங்கே பாட்டி சொன்னாள். முனீசுவரன் தான் எங்களது குல தெய்வமாம். அவனுக்கு குழந்தை என்றால் கொள்ளைப் பிரியமாம் அதனால் தான் எனக்குத் துணையாக நேற்றிரவு வந்ததாக சொன்னாள். என்னால் நம்பவும் முடியவில்லை நம்பாமலும் இருக்கமுடியவில்லை...

***
97ல் வடக்கிந்திய கட்டிடக்கலை உலாவிற்கு சென்ற பொழுது "சென்னை - மத்திய தொடர்வண்டி நிலையத்திற்கு" அருகேயுள்ள "பாடி காட்" முனிசுக்கு நாங்கள் சொல்லாமலேயே ஆட்டோக்காரர் சூடமேற்றி எல்லோருக்கும் நெற்றியில் திருநீறு அணிவித்து பயபக்தியுடன் வழியனுப்பி வைத்தார்.

7/18/2006

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சதி!

இன்றைய பதிவுலகை கோலோச்சிக் கொண்டிருப்பவர்கள் பெரும்பாலும் மென்பொருள் வல்லுனராகவும், தகவல் தொழில் நுட்ப வல்லுனாராகவும் இருக்கிறார்கள். இவர்களில் 98% பேர் அமெரிக்காவிலும் அமெரிக்க கம்னாட்டிகள் மன்னிக்கவும் கம்பெனிக்காகவும் வேலை செய்பவர்களாகவும் இருக்கிறார்கள்.

இவர்கள் அனைவரும் மென்பொருள் குறியீட்டில் அளவுக்கு அதிகமான ஸ்மைலிகளும், அனைத்து குறியீடுகளும் அர்த்தம் புரியாமல் இருந்ததாலும், பெரும்பாலான குறியீடுகளுக்கு ஹெச் ரெப் போட்டு லின்க் கொடுத்திருந்ததாலும் அமெரிக்க சிஐஏ வின் நிரந்தர ஏஜண்டான முத்து (தமிழினி)க்கு ஒரு அமௌண்ட் கொடுத்து குழப்பத்திற்கான காரணத்தை கண்டு பிடிக்க சொல்லியிருந்தார்கள்.

ஆனால் முத்து (தமிழினி)யின் பால் வடியும் பாப்பா முகத்தை கண்டு ஏமாந்த பல தமிழ் மென்பொருள் வல்லுனர்களும், தகவல் தொழில் நுட்ப வல்லுநர்களும் அந்த பதிவிற்கு பின்னூட்டம் அளித்திருந்தனர். இதனை ஒப்புதல் வாக்குமூலமாக எடுத்துக் கொண்ட அமெரிக்க ஏகாதிபத்தியம், அவர்களின் அடிவருடியான இந்தியாவிற்கு 9 கட்டளைகளில் ஒன்றாக ப்லொக்ஸ்பாட்டிற்கு தடை விதிக்கும்படி கேட்டுக் கொண்டதாகவும் தெரிகிறது. இதை நமது அகில உலக சிறப்பு நிருபரான "ஆசை, தோசை, அப்பளம், வடை" மிகுந்த சிரமத்திற்கு இடையே புலன் விசாரணை செய்து கண்டு பிடித்திருக்கிறார்.

அவசர செய்தி:இந்தியாவைத் தொடர்ந்து இந்த களையெடுப்பு பணி அமெரிக்காவிலும் ஆரம்பமாகியுள்ளதாகவும், முதற்கட்டமாக அமெரிக்காவில் இருக்கும் தமிழ் வலை பதிவாளர்களின் ப்ரொஃபைலை தமிழ்மணம், தேன்கோடு ஆகிய வலை திரட்டியிடமிருந்து கேட்டிருப்பதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிப்பதாகவும் நமது "ஆசை, தோசை, அப்பளம், வடை" தெரிவித்திருந்தார்.

7/07/2006

ரவி ஸ்ரீனிவாஸின் அடாவடித்தனம்!!!

ஆதிக்க சாதி வெறி பிடித்த பார்ப்பனர்கள் கதறுவது மனதுக்கு இதமாக இருக்கின்ற பொழுதும் இது மாதிரியான வக்கிரம் உனக்குத் தேவையா என்று உள்மனம் தலையின் மேல் செல்லமாக குட்டுகின்ற பொழுதும், நூற்றுக்கணக்கான ஆண்டுகள் இல்லாத ஒன்றைச் சொல்லி அடிமைப்படுத்திய சமத்துவம்(சாதி ரீதியிலான) என்ற வார்த்தை இச்சமூகத்தில் உருவாவதற்கு காரணமாக இருந்த மனு தர்மத்தை உருவாக்கியவனும் அவன் வழி வந்தவனும் கதறியழுவதைப் பார்ப்பதற்கும் அதை இந்நூற்றாண்டில் கண்டு களிப்பதற்கும் இதமாகவே இருக்கின்றது.

இன்று இணைய ஊடகம் உட்பட இந்தியாவின் அனைத்து ஊடகங்களும் மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணிக்கும் அனைத்திந்திய மருத்துவ அறிவியற்கழகத்தின் இயக்குநர் வேணுகோபாலுக்கும் இடையேயான அல்லது மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்துக்கும் அதன் பராமரிப்பில் இயங்கி வரும் அனைத்திந்திய மருத்துவ அறிவியற்கழகத்திற்கும் இடையேயான நிர்வாக மோதலை அளவிற்கதிகமாகவே ஊதி பெரிதாக்கி விட்டன. அதற்கான காரண காரிய உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெள்ளத் தெளிவாக இருந்தாலும் அதைப் புரிந்து கொள்ள ஆதிக்க மற்றும் தரகு சாதி வெறி பிடித்த மரமண்டைகள் மறுக்கலாம்.

இங்கு எனக்குத் தோன்றும் கேள்விகள் மிக இயல்பான ஒன்றே. இதையே தான் முத்து(தமிழினி)வின் முந்தைய பதிவில் எழுப்பியிருந்தேன். அதற்கு இதுவரை யாரும் பதிலளித்ததாகவோ அல்லது அது தொடர்பாக விவாதித்ததாகவோ தெரியவில்லை. வலைபதிவில் விவாதிப்பதின் மூலம் ஒரு மயிரையும் யாரும் சாதித்ததாக தெரியவில்லை என்றாலும் வலைபதிவாளர்கள் ஒரு சமூகமாக இருப்பதினால் ஏற்பட்ட சில பல கருத்துப்பரிமாற்றங்களினால் பலரும் (நான் உட்பட) சிலபல விடயங்களை அறிந்து கொண்டதுண்டு.

ஆனால் சிறப்பானதொரு எழுத்தை வழங்கிக் கொண்டிருப்பதாக தனக்குள்ளேயே(தங்களுக்குள்ளெயே) மார் தட்டி கொண்டிருக்கும் அறிவுக் கொழுந்துகளுக்கு இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் போனதேன்?எந்த அடிப்படை அறிவு???

மத்திய அரசாங்கத்தினால் செயல்படுத்தப்படவிருக்கின்ற ஒரு சட்டவடிவம் அனைத்திந்திய் மருத்துவ அறிவியற்கழகத்தின் மருத்துவர்களை எவ்விதத்தில் பாதிக்கும்? அதற்காக 3 வாரங்கள் வேலைநிறுத்தம் செய்ய வேண்டிய அவசியம் என்ன? அரசாங்க பணத்தின் மூலம் இயங்கும் எந்தவொறு நிறுவனமும், அத்தொழிலாளிகளுக்கு எவ்விதத்திலும் பாதிப்பு வராத வகையில் இம்மாதிரியான தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதாக வரலாறு கூறவில்லை. அப்படியே இருந்தாலும் இட ஒதுக்கீடுக்கும் தற்போது வேலையில் இருக்கும் மருத்துவர்களுக்கும் என்ன சம்மந்தம். பின்னாளில் இட ஒதுக்கீட்டின் மூலம் நியமனம் ஏற்படுகின்ற நிலையை எதிர்த்து இந்த போராட்டம் நடந்தது என்று பலரும் பல்லிளிக்கும் பட்சத்தில், தகுதியுடைய பிற்பட்ட வகுப்பை சேர்ந்த ஒரு மருத்துவன் மருத்துவனாக வேலை செய்வதில் தவறில்லையே..என என்னாலும் சவடால் விட இயலும். இன்று உலகின் பல சிறந்த நிபுணர்களும், அறிவாளிகளும் அனுபவத்தினால் கற்று கொண்டு முன்னேறியவர்களேயொழிய வானத்திலிருந்து பறந்து வரும் தேவதைகளைப் போன்று பல்கலைக்கழகத்திலிருந்து நேரடியாக குதித்தவரல்லர்.

ஒரு நிறுவனத்தின் மூலம் கல்வி பயிலும் மாணவர்கள் ஒரு போராட்டம் நடத்தும் பட்சத்தில் அது ஒரு அடையாள வேலை நிறுத்தமாக மட்டுமே இருக்கும் (அதுவும் அவர்களை நேரடியாக பாதிக்காத வகையில்). ஆனால் இங்கே அரசாங்க பணத்தில் கல்வி பயிலும் மாணவர்களும், அரசாங்க பணத்தை சம்பளமாகப் பெற்று ஊழியம் செய்ய வேண்டிய மருத்துவர்களும் தங்களுக்கு துளியும் சம்மந்தமில்லாத ஒரு சட்டத்திற்காக அடாவடித் தனத்தில் ஈடுபடுகிறார்கள். இதைத் திறம்பட சமாளிக்க வேண்டிய இயக்குநர்(வேணு) அதை தீர்க்க முயலாது மாணவர்களை மட்டுமல்லாமல் ஊழியம் செய்ய வேண்டிய மருத்துவப் பணியாளர்களையும் தூண்டி விட்டு அனைத்திந்திய மருத்துவ அறிவியற்கழகத்தின் பணிகளை முடக்கி விட்டுக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல், மாணவர் ஊழியர் மட்டுமன்றி சில பல வெளியாட்களையும் அரசாங்கக் கட்டிடத்தில் கூட்டம் போட்டு அரசாங்கத்திறு எதிராக ஆற்ற வேன்டிய பணிகளைப் பற்றி விவாதிக்கிறார்கள். இதையெல்லாம் கூலிக்கு மாரடிக்கும் எழவு வீட்டுப் பெண்களைப்போல தெள்ளத் தெளிவாக அரங்கேற்றியிருக்கிறான் பிஜேபியைச் சேர்ந்த சாதி வெறி பிடித்த வேணுகோபால்.

இதைப் பார்த்துக் கொண்டு அமைச்சரும் அமைச்சகமும் சும்மா கைகட்டி வாய்பொத்தியிருக்க வேண்டுமாம்.

வேணுகோபால் செய்தது தவறு என்றே வைத்துக்கொண்டாலும் கூட அவருக்கு என்ன தவறுசெய்தீர்கள் என்று அறியத்தந்து அவர் தரப்பு வாதத்தினை கேட்ட பிறகல்லவா மேல் நடவடிக்கைஎடுக்க வேண்டும்.

என்னே ஒரு சாதிப்பாசம் ஸ்ரீனிவாஸுக்கு...

ஜெயலலிதாவின் ஆணவப் போக்கையும், அன்புமணியின் கடமையாற்றலையும் சரிசமானமாகப் பார்ப்பதே தவறு என்பேன் நான். தமிழ்நாட்டில் நடந்தது அரசு ஊழியர்கள் தமக்கன அவசிய/தேவையான படியுயர்வு சம்பள உயர்வு தொடர்பாக போராட்டம் நடத்தினார்கள். அது தொடர்பான எந்தவொரு கோரிக்கைக்கும் ஜெயலலிதா செவி மடுக்க மறுத்ததால் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்ந்தது. இதனால் டெஸ்மா சட்டத்தை இயற்றி அனைவரையும் வேலையிலிருந்து தூக்கியெறிந்தது இந்த ஆணவம் பிடித்த பெண்மணி. பின்னர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கம் போல் குட்டு வாங்கியும், பாராளுமன்றத் தேர்தலில் தர்ம அடி வாங்கியும் பசு வேடம் பூண்டது ஜெயா என்கிற பிசாசு.

ஆனால் அனைத்திந்திய மருத்துவ அறிவியற்கழகத்தில் நடைபெறும் சமாச்சாரமோ இதற்கு நேரெதிர். துளியும் சம்மந்தமில்லாத விடயம். இரண்டையும் சம்மந்தப்படுத்துவதன் மூலம் மற்றுமொரு முறை ஸ்ரீனிவாஸ் தம்முடைய மங்கிய மூளையை இவ்வாறாக வெளிப்படுத்துகிறார்.

ஒட்டுமொத்தமாக அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்த ஜெயலலிதாவின்நடவடிக்கைக்கும், அன்புமணி செய்திருப்பதற்கும் என்ன வேறுபாடு.

மொத்தத்தில் நிர்வாகத்தை திறம்பட இயக்க வேண்டிய இயக்குநர் நிர்வாகத்தை ஒட்டு மொத்தமாக சீர்குலைத்து விட்டார். இதை விளக்கமளிக்க வேண்டிய நேரத்தில் விடுப்பு எடுத்துக் கொண்டு திருட்டுப் பூனை மாதிரி ஓடி ஓளிந்து கொண்டார். இவரை வேலையிலிருந்து துரத்தியடித்தது மிகச் சரியே. திறமை மிக்கவர் பேரறிவாளி என்று கதறுபவர்கள் இவரது இந்த கேடுகெட்ட நிர்வாகத்தைப் பற்றியும் சிறிது எழுதினால் நானும் படித்து தெரிந்து கொள்வேன்.

பலரும் இள வயது அமைச்சரினால் தான் இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம் என்று அலறுவதைக் கண்டு சிரிப்பதா அழுவதாவென்று தெரியவில்லை.ஒரு சாதாரண இயக்குநருக்கே உதவாக்கரை கட்சியான பிஜேபியின் ஆதரவு இருக்கும் பொழுது பழம் தின்னு கொட்டை போட்ட பல தலைவர்களின் ஆதரிவிலேயே அன்புமணி செயல்பாடுகள் அமைகிறது என்பதில் ஐயமேதும் இல்லை.

அது மட்டுமல்லாமல் கம்யூனிஸத் தோழரான யெச்சூரி முகத்தில் துப்பினாலும் தகும். அன்றாடங்காய்சிகளின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக 18ம் நூற்றாண்டில் ஏற்படுத்திய தொழிலாளர்களூக்கான தொழிற் புரட்சி இந்தியாவில் பார்ப்பனரின் அடிவருடுவது கேவலமான விடயம்.

7/06/2006

கண்ணீர் அஞ்சலி!


இன்று காலை 30 குழந்தைகளை சுமந்து சென்ற வேன் விபத்துக்குள்ளானதில் 6 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் 6 குழந்தைகள் கவலைக்கிடமான நிலையில் கடலூர் அரசு மறுத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

வேனை ஓட்டிச் சென்ற ஓட்டுனர் செல்போனில் பேசிகொண்டே ஒரு பேருந்தை முந்த முயன்ற போது இவ்விபத்து நடைபெற்றதாக நண்பர்கள் தெரிவித்தனர்.

இறந்து போன குழந்தைகளில் சில குடும்ப நண்பர்களின் குழந்தைகளும் அடக்கம். ஒரு பாவமும் அறியாத இச்சிறார்களின் ஆன்மா அமைதியடைய என்னுடைய மௌன அஞ்சலி.

7/05/2006

இரத்த ஆறு

அவரவர் படித்த ஆறு, பிடித்த ஆறு, வெறுத்த ஆறு, ரசித்த ஆறு, ருசித்த ஆறு, சிரித்த ஆறு என்று காட்டாற்றின் வெள்ளம் போல் அலையாய் அடித்து செல்ல, எனக்கென்று குறிப்பிட்டு சொல்ல ஒரு ஆறாவது இருக்கிறதா என்று தேடியலைந்து எப்பொழுதும் வற்றியே இருக்கும் தென்பெண்ணையின் கானல் ஆறாய் வெக்கையின் உக்கிரத்தில் மரித்து போகும் சிறு நீரோடையின் நானலாக சுருங்கி சருகாகி குப்பையாற்றில் சிக்கித்தவிக்கிறேன்.

ஏற்கனவே எனக்கு பிடித்தவைகளை இங்கும், முத்துக்குமரனின் முத்துச்சரத்தில் ஒரு நன்மணியாக இல்லாவிட்டாலும் சுவைக்கச் சிறந்த முஸ்ஸெல்(mussel) ஆக சிலவும் சமைத்தாயிற்று. ஆயினும் "விடாது கருப்பு"வின் விடாத அன்பின்பால் :-) ஏதாவது ஒரு ஆறு அல்லது 6 என்ற இலக்கம் வரும்படியாக சிறிது குப்பையை கிளறவே இந்த ஆறு.

69ம்...96ம்...

69 என்ற இலக்கம் சிலருக்கு எதை எதையோ அறுவறுப்பான, வெறுக்கத்தக்க எண்ணங்களை நினைவூட்டினாலும் எனக்கு அது ஒரு மகிழ்ச்சிகரமான நிகழ்வே. ஆம் நான் இங்கே குறிப்பிடுவது தமிழக அரசின 69% இடஒதுக்கீடு. இடஒதுக்கீடு என்றதும் முதலில் எனது நினைவுக்கு வருவது மருத்துவர் ராமதாசும், எம்ஜிஆரும், வி பி சிங்கும் தான். இன்று (நவீன கால)இந்திய அளவில் ஒரு சமூக மாற்றத்திற்கான எழுச்சி ஏற்படுவதற்கான வித்து தமிழ் நாட்டில் '86 களில் உருவாக்கிய பெருமை ராமதாசையே சாரும். ஒரு சமூகத்தின் பெயரினால் அன்று அவர் போராட்டங்களை நடத்தாமல் இருந்திருந்தால் இன்று பல சமூகத்தினரும் இட ஒதுக்கீட்டின் சுவையை ருசிக்கவும் "மரம் வெட்டி"கட்சி என்று அழைக்காமலும் இருந்திருக்க முடியும். இன்று என்னால் க்லென் மர்கட்டுடனும், பௌல் கீட்டிங்குடனும் பணி நிமித்தமாக உரையாட முடிகிறதென்றால் அதற்கு காரணம் '96 ல் எனக்கு கிட்டிய 69% ஒதுக்கீட்டின் வாய்ப்பு. அதற்காக என்னை விட நன்மதிப்பெண் பெற்றவர்களின் வாய்ப்பை நான் தட்டி பறித்து விட்டேன் என சிலர் கொக்கரித்தால் என்னால் அவர்களைப் பரிதாபமாகவே பார்க்க முடியும். சென்னையின் புகழ் பெற்ற, கட்டிடகலை நுழைவுத் தேர்விற்காக தயார் செய்யும் கட்டிடக் கலை நிபுனர் "சாலமன் வேதமுத்துவின்" மாணவர்களை விட ஓரளவு சிறப்பான மதிப்பெண்களையே கட்டிடக்கலை நுழைவுத்தேர்வில் பெற்றிருந்தேன். நிச்சயமாக தமிழக அளவில் முதல் 25 மாணவர்களில் ஒருவனாக இருந்திருப்பேன்.

ஆனால் இன்று பொருளாதார அளவிலேயே இடஒதுக்கீட்டை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கதறுபவர்களுக்கு புறநகரிலும், கிராமங்களிலும் வாழும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட சமூகத்தினரின் வாழ்க்கையைப் பற்றி என்ன தெரியும். கடலூர் புனித வளனாரில் படிக்கும் பொழுது, மூன்றாம் தயாரிப்புத் தேர்வு முடிந்த பின்னர் "இரட்சகர்" அனைத்து மாணாக்கரையும் கூட்டி தொழிற்கல்வி குறித்தும், இட ஒதுக்கீடு பற்றியும் பேசாமலிருந்திருந்தால் நானும் இந்நேரம் கடலூர் சிப்காட்டில் ஒரு கெமிச்டாகவோ இல்லை ஒரு இடை நிலை ஊழியனாகவோ இருந்திருப்பேன். கடலூர் புனித வளனாரில் படித்தவனுக்கே இந்நிலை என்றால் நெல்லிகுப்பம் மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள கிராமத்தில் படித்த அல்லது வசிக்கும் மாணவர்களுக்கு எந்த அளவிற்கு தொழிற்கல்வி பற்றிய அறிவு/தெரிவு இருக்கும்?

அது மட்டுமல்லாமல் அவர்கள் வளரும் சூழலில் பிஈ எம்பிபிஎஸ் என்ட்ரன்ஸ் எக்சாம் போன்ற பேச்சுக்களை விட தே... பையா, கன்... ஓழி போன்ற புனிதமான சொற்களையே கேட்டிருப்பார்கள். இந்த சூழலில் பள்ளிக் கல்வி முடித்தலே பெரிதான காரியம். அதுவும் தாய் தந்தையர் பள்ளிக் கூட வாசலைத் தாண்டாதவர்கள் என்னும் பட்சத்தில் நிலைமை இன்னமும் மோசம். பெற்றோருக்கே தொழிற்கல்வி பற்றிய புரிந்துணர்வு இல்லாத பட்சத்திலும், இட ஒதுக்கீடு என்றால் என்ன என்பது பற்றிய் தெளிவான தெரிதல் இல்லாத பட்சத்திலும் பொருளாதார அளவில் இட ஒதுக்கீடு என்ற கூப்பாடு அர்த்தமற்றது.

இங்கே விவாததிற்கான விடயம் ஒரு முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவன் இழக்கும் தொழிற்கல்வி பற்றியல்ல, சமூகத்தின் மிகப் பெரிய அங்கமாக உள்ள ஒரு சமுதாயத்தின் மொத்த சதவிகிதத்தில் எத்தனை சதவிகிதம் பேர் தொழிற்கல்வியோ அ சமூகத்தில் ஒரு சுய அந்தஸ்துடனோ இருக்கிறார்கள் என்பது தான்.

வடக்கில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் போராடியதை விட முற்பட்ட சமூகத்தினர் நடத்திய போராட்டங்களே அதிகமாக ஊடகங்களில் வெளிவந்தது. இதற்கான காரணம் என்னவாக இருக்கும்?வட இந்தியாவில் இட ஒதுக்கீடு என்றால் என்ன என்பது பற்றிய புரிந்துணர்வு இல்லாமலே இன்னமும் இருக்கின்றனர் பிற்படுத்தப்பட்ட மக்கள். அங்கே அனைத்திந்திய மருத்துவ மற்றும் அறிவியற் கழகத்தில் நடத்தியது போன்று இங்கே தமிழ்நாட்டில் நடத்தியிருக்க வேண்டியது தானே. அவர்களுக்கு தெரியும் இங்கே அவர்களின் நாடகங்களை அரங்கேற்ற முடியாதென்று. அப்படி நடத்தியிருந்தால் இங்கே இரத்த ஆறு ஓடியிருக்கும்.

இப்பொழுது தான் முதல் தலைமுறையே அனுபவிக்கத் தொடங்கியிருக்கும் இந்த சமூக ரீதியிலான 69% இட ஒதுக்கீடு இன்னும் 69 ஆண்டுகள் அவசியம் தேவை. அப்பொழுதாவது அனைவரும் பீ அள்ளவும், மயிர் திருத்தம் செய்யவும் சமச்சீராய் சமத்துவம் செய்வார்கள் என எதிர்பார்ப்போம்.

69ன் மற்றுமொரு சிறப்பம்சம் 1969 woodstock festival. அதை ஒரு "Revival of Gypsy life" எனவும் சொல்லலாம். அது மட்டுமல்லாமல் '69 ல் தான் உலகின் மிகச் சிறந்த கட்டிடக்கலை நிபுனர்களான வால்டர் க்ரூபியசும், மீஸ் வேன்டெற் றோ வும் இயற்கை எய்தினர்.

6/20/2006

"சுயத்த" மீட்கின்ற பதிவு.

நான் இரண்டாம் வகுப்பு படிக்கையில் வகுப்பாசிரியை அவர்கள், தலைமையாசிரியை அழைத்ததன் விளைவாக வகுப்பு மாணவர்கள் அனைவரும் அமைதியாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் அனைவரும் அமைதியாக இருக்கவும் என்று சொல்லிவிட்டு சென்று விட்டார். வகுப்பும் அமைதியாக தான் இருந்தது.
திடீரென எனக்கு முன் மூன்றாவது "பென்ச்"ல் அமர்ந்திருந்த "நிர்மல்", சத்தியா என்னை அடித்து விட்டான் என்று அலற ஆரம்பித்தான். நானோ அமைதியாக?! பக்கத்தில் அமர்ந்திருந்த "காயத்ரி"யோடு நாளைக்கு செய்ய வேண்டிய வீட்டுப் பாடத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். நிர்மலின் கூச்சலோ எனக்கு புரியாமலே இருந்தது. எட்டிப் பாய்ந்து அடித்தால் கூட 2 பென்ச் தாண்டி போய் தான் அவனை அடிக்க முடியும். மேலும், அவன் எனக்கு நண்பனும் இல்லை எதிரியும் இல்லை, அவனை போய் நான் எதற்கு அடிக்க வேண்டும்? அவன் முகம் கூட எனக்கு சரியாகத் தெரியாது.
இத்தனைக்கும் நிர்மல் சரியான சேட்டைக்காரன், க்ளாஸ் லீடரையே அடிக்கடி கலாய்ப்பான். யாராவது கேட்டால், எங்கப்பா ...எங்கம்மா, ரென்டு பேரும் டாக்டர்...அவங்ககிட்ட சொல்லி உனக்கு ஊசி போட்டுடுவேன்,எங்க தாத்தா எஸ்பி அவர்கிட்ட சொல்லி உன்னை ஜெயிலில் போட்டுடுவேன் என்று பயமுறுத்துவான். அதனாலேயே அவனை யாரும் சீந்தக் கூட மாட்டார்கள். நானோ ஒரு வாயில்லாப் பூச்சி?!, ரொம்ப அமைதியான சுபாவம்...அவனிடம் ஏதாவது கேட்டால் அடித்து விடுவானோ என்ற பயத்தில், அவன் என்னை பல முறை கலாய்த்த பொழுதும் இந்த காதில் வாங்கி அந்த காதில் தள்ளி விட்டு வந்துவிடுவேன். இப்படிபட்ட சூழ்நிலையில் அவன் என்னை பார்த்து அலறியது இன்று வரை எனக்கு புரியாத புதிராகவே உள்ளது.

ஆனால் நிர்மலின் இந்த ஆகாயப் புளுகை நம்பாத சின்னாவும், ராமனும் நிர்மலின் கதறலைப் பார்த்து கை கொட்டி வாய் விட்டு சிரித்து விட்டார்கள். ஏனென்றால் இவர்கள் இரண்டு பேருக்கும் நிர்மலின் சேட்டைகளும், நீலிக்கண்ணீரும், ஆகாயப் புளுகும் நன்கு பரிச்சயம். அவர்களோ சிரித்துக் கொண்டே நிர்மலிடம், என்னப்பா சத்தியா தான் 3 பென்ச் பின்னாடி உட்கார்ந்திருக்கானே அவன் எப்படி உன்னை அடித்திருக்க முடியும் என்று கேட்க...நிர்மலின் குய்யோ ...முறையோ...கூச்சல் அதிகமானதேயொழிய குறையவில்லை. அதோடு இல்லாமல் சின்னாவிடம், நீ சத்தியாவோட நெருங்கிய நண்பன், அதனால் தான் நான் வலியால் அழுவது கூட உங்களுக்கு சிரிப்பாகத் தெரிகிறது என்று சின்னாவின் மேலேயே குற்றஞ்சாட்ட ஆரம்பித்தான்.எனக்கோ நிர்மல் அழுது பார்ப்பது வித்தியாசமான அனுபவமாக இருந்ததால் அமைதியாக மனதுக்குள்ளே சிரித்துக் கொண்டிருந்தேன்.
ஆனால் நிர்மல் சின்னாவிடம் கூறியது எனக்கு கொஞ்சம் எரிச்சலாகவே இருந்தது. ஏனென்றால் நான் சின்னாவிடம் அதிகமாக பேசியதில்லை...அவன் வீட்டிற்கும் இதுவரை சென்றது கிடையாது. மேலும் சின்னா தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பவன் அவனும் நானும் எங்காவது மற்ற நண்பர்களின் வீட்டில் பார்த்தால் கூட பேசிக் கொண்டது இல்லை. அப்படிபட்ட நிலையில் நிர்மல் கூறியது யாருக்கும் எரிச்சல் ஏற்படுத்தவே செய்திருக்கும்.

அத்தோடு நில்லாமல் ஆதாரமாக என்னுடைய் பென்சிலை வேறு காட்டி, இதை வைத்து தான் சத்தியா என்னை குத்தினான் என்று என் மேல் குற்றச்சாட்டை வலுப்படுத்தினான். அது மட்டுமல்லாமல் பக்கத்து வகுப்பிற்கு சென்று அவனுக்கு தெரிந்தவர்களை வேறு உதவிக்கு அழைத்தான். உடனே சின்னாவும், ராமனும் நிர்மலிடம் சென்று...நிர்மல், உன்னைக் குத்தியது சத்தியா தான் என்று சந்தேகம் இருந்தால் வகுப்புத் தலைவனிடமோ அல்லது வகுப்பாசிரியரிடமோ கூறலாமே அதை விட்டு விட்டு பக்கத்து வகுப்பு ஆட்களையெல்லாம் ஏன் அழைக்கிறாய் என கேட்க, நிர்மலின் கூச்சல் இன்னும் அதிகமானது. இப்போது நிர்மலோடு இன்னும் இரண்டு பேர் வேறு சேர்ந்துக் கொண்டு, நிர்மலின் வேதனை எங்களுக்கு தான் தெரியும்...அதனால இந்த நேரத்தில் வகுப்பில் இல்லாமல் போன டீச்சரை கண்டிக்கிறோம் என கும்பலாக சேர்ந்து கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்கள்.

இப்பொழுது தான் எனக்கு ஒரு விடயம் புரிந்தது. அதாவது முந்தைய நாள் கடைசி மணி அடித்தவுடன் வீட்டிற்கு செல்லும் அவசரத்தில் பென்சிலைத் தவற விட்டு வந்தது நினைவில் வந்தது. இது அடிக்கடி நிகழும் ஒரு நிகழ்ச்சி தான். பல முறை எனது நண்பர்கள் பென்சிலை என்னிடமே தந்து விடுவார்கள். இதனால் பென்சில் பற்றிய் கவலையும் இல்லாமல் போனது. ஆனால் இந்த வாரம் "இழந்த பொருட்கள்" என ஒரு பெட்டி இருப்பதை இப்பொழுது தான் கவனித்தேன். அதாவது அதில் தவற விட்டுச் சென்ற பொருட்களை யார் வேண்டுமானாலும் அதில் போடவும், எடுக்கவும் முடியும் என்பது தான். அடடா இந்த விசயத்தை கவனிக்காமல் விட்டு விட்டோமே என என்னையே நொந்துக் கொண்டு, பிரச்சினையை பெரிதாக்க விரும்பாமல் மூன்று பேருக்கும் பொதுவாக மன்னிப்பு கேட்டுவிட்டு வந்து விட்டேன். ஆனாலும் நிர்மல் அமைதியாயிராமல் இந்த வகுப்புஆசிரியையினால் தான் பள்ளியின் அமைதியே குலைகிறது ஆகையினால் வகுப்புத் தலைவனும், வகுப்பாசிரியையும் எனது வேதனையை உணர்ந்து என்னிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று சம்மந்தாசம்மந்தமில்லாமல் பிதற்றிக் கொண்டிருந்தான். நானும் அதை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டேன்.
ஆனால் ஒரு வாரம் கழித்து தான் தெரிந்தது உண்மையான நிலவரம் என்னவென்று. சமீப காலங்களில் நிர்மல் மற்றும் அவனது சகாக்களை யாரும் அவ்வளவாகக் கண்டு கொள்ளாததால் எரிச்சல் அடைந்த நிர்மல், அவனாகவே என்னுடைய பென்சிலைத் திருடி அவனாகவே குத்திக் கொண்டு ஒரு வாரமாக அனைவரிடமும் சண்டியிட்டு வந்திருக்கிறான் என்று. இதனையறிந்த வகுப்பு மாணவர்கள் அனைவரும் "நிர்மல்"ஐ ஒரு மன நோயாளியாக கருதி அவனோடு கதைக்க வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டோம்.

நீங்கள் இதுவரை படித்தது 20 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு நிகழ்வு.

இதை என் மனவலையில் எழுப்பியது தற்போது முகமூடியின் பதிவில் அனாமதேயமாக பின்னூட்டமிட்டு வரும் ச.திருமலை எங்கிற ஒரு "அனானி". அவர் உறுப்பினாராகவே அல்லாத ஒரு வலை திரட்டியில் ஒரு "குறிப்பிட்ட சமூகத்தை" தரக்குறைவாக "குறி"யீட்டு சொல் இருந்ததால் இவர் சொல்லொனாத் துயரம் அடைந்ததாகவும், ஆனால் தமிழ்மண நிர்வாகி(கள்) இதை கண்டு கொள்ளாமல் விட்டதாகவும் எழுதுகிறார். தமிழ்மண நிர்வாகிகளுக்கு அவர் என்ன மாதா மாதம் படியளக்கிறாரா என்ன? ஆற்றில் ஓடுகிற நீரை ஆளுக்கொரு வாய் என்ற வகையில் பயன்படுத்திக் கொண்டிருக்கிற வகையில் உலகின் ஏதோ ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு இவர் மனம் வேதனை அடையுமாம், அதை உலகின் இன்னொரு மூலையில் இருக்கின்ற நிர்வாகிகள் புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டுமாம்.

குறைந்த பட்சம் சிந்திக்கக் கூடிய மனிதர்களுக்கு கூட "ஒரு சுய புத்தி" இருக்கும். ஆனால் பத்தி பத்தியாய் எழுதுகின்ற "திருமலை", அந்த "வேதைனையளிக்கும் "குறி"யீடை"ப் பார்த்த பின் தமிழ்மணத்தில் புகார் கூறக் கூடத் தோன்றாமல் "முகமூடி"யின் பதிவில் வந்து பின்னூட்டமிடுகிறார். அங்கேயே வேதனைப் படுகிறார் வேறு. நான் தான் ஒரு பதிவே போட்டு என்னையறியாமல் ஏற்பட்டுவிட்ட இந்த தவறுக்கு பொறூப்பேற்று பகிரங்கமாக வருத்தம் தெரிவித்த பின்னும் அரைத்த சுண்ணாம்பையே திரும்ப அரைக்கும் செக்கு மாட்டை போன்று சுற்றி சுற்றி வந்து அனைவரையும் தாக்குகிறார். அது மட்டுமல்லாமல்,
"உங்களுக்கு பொட்டீக்கடை நெருக்கமான நண்பர் போலிருக்கிறது. அவர் சொல்லியிருக்க
மாட்டார் என்று உறுதியாக அவருக்காக உங்களால் வக்காலத்து வாங்க முடிகிறது. நான்
இவ்வளவு சொன்ன பொழுதும் இது வரை தமிழ் மணத்தில் இருந்து முறையாக யாரும் வந்து, அது
தவறுதான் அல்லது தவறு இல்லை, எப்படி அது நடந்தது, இனி நடக்காமல் இருக்க என்ன
செய்துள்ளோம் என்றெல்லாம் எதுவும் சொல்லவில்லை."
என்று உரிமையோடு ஆதங்கப் படுகிறார்.இதுவரை சன்னாசி பெயரை கேள்விபட்டிருக்கிறேனேயொழிய இதுவரை நாங்கள் இருவரும் வேறு ஒருவரின் பதிவில் கூட அவருடன் உரையாடியதாய் நினைவில்லை. அவர் பதிவிற்காகவாவது சென்றிருக்கிறேனா என்றால் அது கூட நினைவில்லை. ஆனால் "ச.திருமலை" அவரை எனது நெருங்கிய நண்பராக அறிவித்திருக்கிறார். இது ச.திருமலை என்கிற அனானியின் மனநோயின் உச்சத்தையே காட்டுகிறதுஇவர் முறையாக உறுப்பினராகவே(அ)பதிவாளராகவே இல்லாமல் ஒரு அமைப்பிடமிருந்து இவருக்கு விளக்கம் அளிக்க வேண்டுமாம். இவர் என்ன வலையுலக பிராமண சங்கத்தின் தலைவரா? இவரிடம் வந்து தமிழ்மண நிர்வாகிகள் விளக்கமளிக்க... "பார்ப்பன நாய்கள்" என எழுதி என் பதிவை "tag" செய்ததே ச.திருமலை எங்கிற அனானி தான் என நான் நினைக்கிறேன். விளக்கமளிப்பாரா ச.திருமலை?..."ஸ்க்றீன் ஷாட்ஸ்" எடுத்து வைத்திருப்பதாகக் கூறுகிறார்.ஃபொட்டோஷாப் மென்பொருள் இருந்தால் எட்டாம் வகுப்பு படிக்கும் சிறு பிள்ளை கூட 300 ஸ்க்ரீன் ஷாட்ஸ் எடுக்கலாம். இதையெல்லம் ஒரு கேள்வியாக எழுப்பி ச.திருமலை என்கிற அனானி அளவிற்கு நான் இறங்க விரும்பவில்லையென்ற போதிலும், இன்னமும் "பொட்'டீ'கடை"யின் கதவை "முகமூடி"யின் பதிவில் இடித்துக் கொண்டிருப்பதால் ஒரு சிறு "சுயத்த" விளக்கும் பதிவு.
பிகு ; இதையும் மீறிப் பிராண்டிக் கொண்டிருந்தால் நடுவிரலைத் தூக்கி முகத்தின் எதிரே காட்டுவதைத் தவிர வேறு வழியில்லை.


6/19/2006

அக்யூஸ்டு!!!


என்னுடைய தீய்ந்து போன முகம்.இந்த படத்தை தான் என்னுடைய் "போர்ட்ஃபோலியோ"விலும் போட்டு இருக்கேன். இதை வெச்சி தான் இந்தியாவிலும் சரி, வெளியூரிலும் சரி பல்கலை முதல் தற்போதைய பணியிடம் வரை அனைத்தையும் வெற்றிகரமாக "அச்சீவ்" செய்திருக்கிறேன்.

அதை விடக் கொடுமையான மேட்டர் என்னன்னா, இந்த் மூஞ்சியப் பாத்துட்டு நம்ம நண்பரான "சாரு", உனக்கு அருமையான "சோழ மண்டல" முகம்னு சொல்லி ஒரு "போர்ட்ரைட்டு" போட்டு ஒரு ஃப்ரென்ச்காரிக்கு வித்துப்புட்டான். அவளும் ஒரு டிபிக்கல் "திராவிட மொகம்" கிடச்சதேன்னு வாங்கி இருக்கலாம்?! :-)) ஆக மொத்தம் வெளியூரிலும் நம்ம மொகம் "ஷோ" காமிச்சிகினு இருக்கும்.

மத்தபடி எங்க தாத்தாவிலிருந்து இன்ன பிற நண்பர்கள் வரை அனைவரும் "அக்யூஸ்டு" ஃபேஸ் மாதிரி இருக்கு இத மொதல்ல மாத்துன்னு சொல்லி அலுத்து போயிட்டாங்க. ஆனாலும் "சுயத்த" மறைக்க முடியுங்களா? முடியாதில்ல...அதான் எல்லாரும் பாத்துக்கோங்க.

6/16/2006

என்ன எழவுடா இது!

இந்த "tag" பன்றது, "tag" பன்றதுங்கறாங்களே அது எப்பிடிங்கண்ணா. ஏதோ ஒரு நாதாரி நாய் "பார்ப்பன நாய்கள்"னு குறிப்பிட்டு என்னுடைய பதிவை "tag" பன்னிட்டு போயிருக்கு. எதேச்சையா தமிழ்மண சர்க்கஸ் கம்பெனியின் கட்டியங்காரரான மொகமூடியோட பதிவுக்கு போனா "பொட்"டீ"கடைய" போட்டு உருட்டிட்டு இருக்கறாங்க.

அவனவன் அனானியா வந்து மானாவாரியா அள்ளிக் கிடாசிட்டு போவானுங்களே, அந்த எழவையெல்லாம் நாம படிச்சி மட்டுறுத்தல், மயிருறுத்தல்ன்னு நம்ம நேரத்த வீணாக்க வேணாமேன்னு பின்னூட்டப் பகுதியையே எனக்காக மட்டும்னு போட்டு பூட்டி வெச்சிருந்தா வழக்கம் போல் "முகமூடி" மயிர பிச்சிக்கினு, கை நடுநடுக்க கட்டுரை கணக்கா எல்லா சாதிக்காரனுங்களையும் அசால்டா நாய்ங்க நாய்ங்கனு கடிச்சிக் கொதறிக்கினு கெடக்கறார்.

சப்ப மேட்டரா இருந்தா கூட பயங்கரமா அனாலிசிஸ் எல்லாம் பன்றவரு, இதுல எப்டி தகிடுதத்தோம் ஆடறார்னுதான் எனக்கு தெரியல. என்ன எழவோ! நா தப்பு பண்ணியிருந்தனா யார்கிட்டேயும் மன்னிப்பு கேட்பதற்கோ வருத்தம் தெரிவிக்கிறதுக்கோ தயங்கனது கெடையாது. முகமூடியின் சர்க்கஸ் பதிவில் நடந்து வரும் ஓரணா பொறாத சமாச்சாரத்துக்கும் அதாங்க இந்த "tagging" சமாச்சாரத்துக்கும் பொட்"டீ"கடைக்கும் எந்தவொரு கனெக்ஷனும் கெடையாது.

ஏற்கனவே ஒருத்தர் என்னை ஜாட்டான் (அது சரி, ஜாட்டான்னா என்னங்ணா) எனவும், ஜென்ம புத்தியை காட்டியதாகவும் சொல்லிட்டாரு. அடுத்ததா "மொகமூடி" புள்ளி புள்ளிய வெச்சி என்ன என்னவோ சொல்லிக்கினு இருக்கறாரு. எனக்கோ வழக்கம் போல தமாசோ தமாசு தான்...சிரிப்பு அடக்க முடியலீங்கோவ்...

இவ்ளோ பேச்சு பேசறீங்களே...என்னோட மின்னஞ்சல் முகவரி யாருக்கும் தெரியாதா என்ன? ஒரு மெயில் அடிச்சி கேக்க வேண்டியது தானே? அதை உட்டுபுட்டு "போலி" "போளி"ன்னு மறுபடியும் தமாசு பன்னிக்கினு இருக்கறீங்க...எது எப்டியோ எல்லாருக்கும் டைம் பாஸ் ஆனா சரிதான்.

இப்போதைக்கு நான் அப்பீட்டு!
பிகு: இங்கு நாய் என்பதை திருவாளர் என படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்

6/15/2006

முகமூடி(கள்)!


அமிலத்தினால் எரிந்து போன இந்த திருவாளரின் முகத்திற்கு, எந்த முகமூடி நன்றாயிருக்கும்?




முகமூடிகள்,இப்பொழுதெல்லாம் மிக மலிவாகக் கிடைப்பதாக அறிகிறேன். பரிதாபத்திற்குரிய திருவாளரின் தீய்ந்து போன முகத்திற்காக ஒரு பொது சேவை.

ஒரு சின்ன கேள்வி? நாய் என்பது இழிசொல்லா? இல்லடா நாயே என்று கொஞ்ச வருபவர்களுக்கு முன்னதாகவே எனது நன்றிகள்.

அப்போ ஏன் சிலர் எல்லாத்துக்கும் நாய்(கள்) என குறிப்பிடறாங்க?

5/18/2006

இவன்தான் தமிழன்!

இவன்தான் தமிழன்!
கவிவேந்தர் வேழவேந்தன்

வந்தவர்க்கே பந்திவைப்பான் தமிழன்;வந்தோர்
வாய்மொழிக்கே தாள்திறப்பான் தமிழன்;வீட்டுள்
எந்தமொழி நுழைந்தாலும் தலைமேல் தூக்கிஏற்றி
அதைப் போற்றிடுவான் தமிழன்; ஈன்ற
சொந்தமொழி நொந்தழிந்தே நைந்த போதும்
சுரணையின்றி உறங்கிடுவான் தமிழன்; இஃது
செந்தமிழ்த்தாய் பெற்றுவந்த சாபம்; இன்றேல்
திருந்தாத இவன்வந்தா பிறந்தி ருப்பான்?
ஒற்றுமையா என்னவிலை? என்றே கேட்கும்
உன்மத்தன் மறுபெயர்தான் தமிழன்; ஈது
வெற்றுரையா வரலாற்றை உற்றுப் பார்த்தால்
வீரமுடன் போரிட்டோர் யார்? யார்? சேரன்
முற்றுகையால் சோழர்களை வென்றான்; சோழன்
முனைப்போடு பாண்டியரைக் கொன்றான் என்றால்,
உற்றஉடன் பிறப்புடனே மோதி மோதி
உதிரநிதி ஓடவிட்டோன் தமிழன் தானே!
இனப்பற்றா என்ன பொருள்? என்றே கேட்கும்
என்தமிழன் மாண்புக்கோர் சான்றாய் ஆங்கே
மனையிழந்தும், உறவிழந்தும், உயிர்கள் ஈந்தும்
மனப்போர் நகழ்த்துகிறான் ஈழத் தோழன்!
வினைப்போரில் தமிழீழம் வென்றால், ஐ நா சபையின்
வெளிமுகப்பில் தமிழர்கொடி பறக்கும்; ஆனால்
தினையளவும் துணைநல்க முனைந் திடாமல்

உணர்வைத் திருடத் தூண்டியது...

5/16/2006

ரிலாக்ஸ் ப்ளீஸ்!

பாட்டு கேளுங்க. புத்துணர்வு அளிக்கும்... அலைபாயும் மனதிற்கு.எனக்கு பிடித்தப் பாடகர் "John Butler"ன் இந்தப் பாடலை நீங்களும் கேட்டுக்கங்க...நான் ரசித்த வரிகள்...சிவப்பு நிறத்தில்...
ZEBRA Lyrics © John Butler 2004
I can be loud man, I can be silent
I could be young or I could be old.
I can be a gentleman, I can be violent.
I could turn hot or I can be cold.
I could be just like the calm before the storm
Waiting for all hell yeah to break loose.
I could be innocent or I could be guilty
Doesn't mean that I man believe in no noose
I could be rich like a wandering Gypsy
I could be poor like a fat wallet lost.
I could be first or I could come last
Its not who breaks the ribbon
It's how you get across.
I could be red blue black + white sunset
Darkest at day man brightest at night
I could be the sun man I could be the moon
I'm made up from the stars man
I shining so bright.

I could be asleep man, I could be awake
I can be alive or be the walking dead
I can be ignorant, I could be informed
I could lead my life or i could be led
I can be anything i put my mind to man,
all i gotta do is give myself half a chance
I can bring love back into my life
and share it with the world if i got some balance
ஒரு சிலருக்கு அவசியம் தேவை இம்மாதிரியான பாடல்கள்!
பாடலை நேரடியாக எப்படி ப்லாக்கரில் ஏற்றுவது என்று யாராவது கற்று கொடுக்கவும்.
நன்றி!