அடடா...அடடா... தமிழ்மணத்தில் இருந்து விடாது கருப்பு, ஏமாறாதவன், இரவுக்கழுகார், விட்டுது சிகப்பு ஆகியோர் விலக்கப்பட்டு இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. காரணம் அழுவுணிகளும், சண்டியர்களும் இனி சண்டையிடுவதோ அல்லது மண்டியிடுவதோ எவ்விதத்திலும் நன்மை பயக்கப் போவதில்லை என்கிறபடியாலும், கவாஸ்கர் - பாண்டிங் சர்ச்சை மிகவும் நாகரிகமான நகைச்சுவை கட்டத்தை எட்டிக்கொண்டிருக்கிறது. இதில் இவன் செய்தது நியாயம் அவன் செய்தது அநியாயம் என்று சொல்லுவது சில குஞ்சுகளுக்கு உவப்பாய் இருந்தாலும், இதில் கவாஸ்கர் தன் சுயத்தை நக்கி மிகவும் அருவெறுக்கத்தக்க வகையில் இரண்டாம் இன்னிங்ஸ் ஆட்டத்தை தொடங்கி இருக்கிறார்.
நான் அவுஸ்திரேலிய அணியின் விசிறியாயிருந்தாலும், போண்டிங் கின் சமீபகால நடவடிக்கைகள் பிடிக்காததாலும், அவுஸ்திரேலிய அணியின் ஏகாதிப்பத்தியம் சமீபத்தில் வீழ்ந்தது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இது நாள் வரை ஒரு சாதாரண மாகாண அவுஸ்திரேலிய அணி கூட மற்ற நாடுகளின் தேசிய அணியை மண்ணைக் கவ்வ வைக்கும் என்கிற அதீத நம்பிக்கை தகர்க்கப்பட்டிருப்பது ஒரு விதத்தில் மகிழ்ச்சியே. அதன் பின்னரான கவாஸ்கரின் செவ்வியும் அதற்கு போண்டிங் கின் பதிலும் இந்தியாவில் மட்டுமே சலசலப்பை ஏற்படுபடுத்தியிருக்கிறது என்பது தான் உண்மை. அவுஸ்திரேலிய மக்கள் அதை ஒரு பொருட்டாக மதித்து அவ்வளவாக கதைப்பதில்லை. இதில் மூக்குடைப்பட்டவர் கவாஸ்கர் மட்டும் தான் என்பது ஊரறிந்த உலக ரகசியம். அடிபட்ட நாய் எட்டிச் சென்று வனாந்திரத்தில் குரைப்பது போன்று, கவாஸ்கரின் இரண்டாம் கட்ட பதில் உள்ளது. கவாஸ்கர் டேவிட் ஹூக்*ஐ பற்றி அதிகம் அறிந்திருப்பாரா அல்லது அவரது உயிர்பிரிந்த துயரமான சம்பவத்தை அறிந்திருப்பாரா என்பதும் சந்தேகமே!
கலாச்சாரம், மயிரு, மண்ணாங்கட்டி என்று பேசும் இந்தியத் திருநாட்டில் பிறந்த கவாஸ்கர் இறந்து போன ஒருவரை தூற்றியிருப்பது அவர் இப்பொழுது இருக்கின்ற இருப்பிற்கு உகந்ததாயில்லை. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, இங்கு கிரிக்கெட் வீரர்களோ அல்லது இன்னபிற நட்சத்திரங்களுக்கோ 5* தரமளித்து தலைமேல் தூக்கிவைத்து ஆடுவதில்லை. இந்தியாவில் இம்மாதிரியான நட்சத்திரங்கள் செல்லும் கள்ளுக்கடைகளுக்கு சாதாரணமாக குடியானவர்கள் செல்லமுடியாது. அப்படியே சென்றிருந்தாலும் அவ்வாறு ஒரு கிரிக்கெட் வீரரை அடிக்கும் அளவிற்கு துணிவிருக்காது இந்திய தேசபக்தர்களுக்கு. சமீபத்தில் கூட யுவராஜ் சிங் குடித்துவிட்டு செய்த கலாட்டாக்கள் செய்தியாக வந்திருந்தது. ஆக வழக்கம் போல் வெளியில் கலாச்சார கருமாந்திரம் பேசிவிட்டு இரவில் அவுத்துப் போட்டு ஆடுபவர்கள் தான் இந்திய கிரிக்கெட் வீரர்கள்.
ஆக கிரிக்கெட் தான் எங்களது ரிலிஜியன், சச்சின் தான் கடவுள் என கொக்கரிக்கும் அரைவாண்டுகளும் சற்றே சிந்தித்துப் பார்த்தால் தெரியும், அய் சி சி யின் பொறுப்பில் இருக்கும் ஒரு மனிதன் அவனது இருப்பை விட்டு இறங்கி வந்து ஒரு அணியின் காப்டனிடம் சரிக்கு சரியாக சண்டை போடுவது நன்றல்ல. இதனால் பி சி சி அய் க்கு தான் நட்டமேயொழிய் கிரிக்கெட் அவுஸ்திரேலியாவிற்கு அல்ல. இந்திய தேசிய ஜல்லிகள் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டங்களை கண்டு சலித்துவிட்டதால் அவுஸ்திரேலியாவிடம் அதிக ஆட்டங்கள் ஆடினால் நன்றாக வசூலாகும் என்ற கனவிலிருக்கும்பொழுது கவாஸ்கரின் இந்த அரைவேக்காட்டுத் தனமான உளறல்கள் இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளை பலப்படுத்தப்போவதில்லை. மாறாக வெறுப்புணர்ச்சியை தான் வளர்க்கும்...இங்கு ஏற்கனவே சில அரைவேக்காடுகள் கவாஸ்கர்-பார்டர் டிராபி என்ற பெயரிலிருந்து கவாஸ்கர் பெயரை நீக்க வேண்டுமென கூவ ஆரம்பித்துவிட்டன.
அடுத்ததாக நான் ஆவலோடு எதிர்பார்த்த ரக்பி லீக் போட்டிகள் ஆரம்பித்துவிட்டன இங்கு. நடப்பு சாம்பியனான பிரிஸ்பேன் ப்ரோங்க்கோசும், நம்மூரின் கவ்பாய்ஸும் நேற்றைய துவக்க ஆட்டத்தில் மோதினர். கடந்த நாண்கு ஆண்டுகளாக பிரிஸ்பேன் ப்ரோங்கோசு விசிறிதான் என்றாலும் நம்மூரின் கவ்பாய்ஸை விட்டுக்கொடுக்க முடியாத நிலை. போட்டியின் ஆரம்பம் முதல் கவ்பாய்ஸின் ஆதிக்கமே மேலோங்கியிருந்தது.பிரிஸ்பேனின் முதல்பகுதி ஆட்டம் நடப்பு சாம்பியன் அணி ஆடியது போல் இல்லை. விளைவு கவ்பாய்ஸ் 16-6 புள்ளிகளில் முன்னணி பெற்றிருந்தார்கள். ஆனால் பிரிஸ்பேன் அணியினரின் மீள்வருகை மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். கடந்த வருட அரையிறுதிப் போட்டியில் பிரிஸ்பேன் அணியினர், கேண்டர்பரி புள்டாக்ஸுடனான போட்டியில் 0-20 என்ற புள்ளியளவில் ஆட்டத்தின் முதல்பாதியில் பின் தங்கியிருந்தனர்.ஆனால் அடுத்தப் பகுதியாட்டாத்தில் 28-20 என்ற கணக்கில் வெற்றியும் பெற்றனர். அதுமாதிரி இப்போட்டியையும் வென்று விடுவார்களெனவே நானும் நினைத்திருந்தேன். அதே போல் ஆட்டம் முடிய கடைசி நிமிடம் வரை 16-16 என்ற சமன்பாட்டிலேயே இருந்தது. ஆனால் கடைசி நிமிடத்தில் மேட் போவெனின் ற்றையும் அதற்கடுத்து கடைசி வினாடியின் கள கோலும் 23-16 என்ற அளவில் கவ்பாய்ஸ் வெற்றி பெற்றிருந்தனர்.
அதற்கடுத்ததாக மெல்பர்ன் ஸ்டார்ம்ஸின் சிட்னி வெஸ்ட் டைகர்ஸ்க்கு எதிரான வெற்றி. மிகவும் பரபரப்பான ஆட்டத்தில் 18-16 என்ற அளவில் மெல்பர்ன் வெற்றி பெற்றது. சென்ற ஆண்டு வரை பிரிஸ்பேன் தான் புது டீன் ஏஜ் மிருகங்கங்களை களத்தில் இறக்கி விடும் அணியாகவும், டீம் டு பீட் என்ற எதிர்பார்ப்புடனும் இருக்கும். ஆனால் அதை இவ்வாண்டு மெல்பர்ன் ஸ்டார்ம்ஸ் எடுத்துக் கொண்டது. கடந்த ஆண்டு சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சில துரதிர்ஷ்டமான முடிவுகளால் தோல்வியைத் தழுவிய மெல்பர்ன் இவ்வாண்டு அதிர்ஷ்டமாக இருக்குமென நம்புவோம்.
அட இதுவும் பதிவிற்கு சம்மந்தம் இல்லை...
அடுத்தபடியாக நேற்றே மெல்பர்னில் தொடங்கிவிட்ட F1 திருவிழா. ஒவ்வொரு ஆண்டும் எம்மாதிரியான சூழ்நிலையிலும் தவறாமல் கலந்துகொள்வேன். இவ்வாண்டு சிலபல பிரச்சினைகளால் செல்ல இயலவில்லை. அதுவுமல்லாமல் "தல" சூமேக்கர் ஓட்டாததும் ஒரு காரணமாயிருக்கலாம். ஆனால் இவ்வருடம் ரெய்க்கனன்னுக்கு சாதகமாக இருக்குமென எதிர்பார்க்கிறேன். வழக்கம் போல இன்றைய தகுதிசுற்றிலும் சிறிதளவு தூறல் போட்டு ஓட்டுனர்களுக்கு ஒருவிதமான கிலி ஏற்படுத்திவிட்டது. ஈரமான ஓட்டுகளத்தின் "தல" சூமேக்கர் இல்லாததால் இவ்வருடம் ஈரபாதையில் பந்தயம் நடைபெரும்பட்சத்தில் நிறைய நிகழ்வுகள் நடைபெற வாய்ப்பிருக்கிறது.என்னுடைய நண்பர்கள் சொல்லுவதுண்டு, டெண்டுல்கர் ரிட்டையராகிவிட்டால் இந்தியாவில் கிரிக்கெட் செத்துவிடும் என்று. ஆனால் சூமேக்கர் ரிட்டயர் ஆனதால் F1 போட்டியே என்னைப் போன்ற பலருக்கு ஒருசுவாரசியம் குறைந்த நிகழ்வாகவே தெரிகிறது. சூமேக்கரின் அசாத்திய துணிச்சலும், இண்ட்ஸ்டண்ட் திங்க்கிங் இன்னமும் எந்தவொரு ஓட்டுனருக்குமில்லை என்று தான் நான் கருதுகிறேன். ஆனாலும் சென்ற முறை தவறவிட்டதை இம்முறைவிடாது சிகப்புபெர்ராரி!!!!!!!!!! வ்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரூரூம்.....
கிறிஸ்துமஸ் தீவில் சிறை வைக்கப்பட்டிருக்கும் ஈழ அகதிகளை உடனடியாக சிறீலங்கவிற்கு திரும்ப அனுப்பாவிடில் அவுசுதிரேலியா, நூற்றுக்கணக்கான பொருளாதார அகதிகளுக்கு தமது எல்லைகளைத் திறக்க வேண்டி வரும்.இப்படி கூறியவர் அவுசுதிரேலிய அரசியல்வாதியோ அல்லது அமைச்சரோ அல்லது அமைச்சகம் சார்ந்த அலுவலரோ அல்ல. சிங்களப் பேரினவாத அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் நிர்மல் சிறிப்பல தி சில்வா. இவரது அறிக்கை மனிதாபிமானமோ அல்லது அரசக் காரியதரிசிக்கான பொறுப்புணர்ச்சியோ இல்லாமல் குடித்துவிட்டு நா குழன்று உளருகின்ற வெற்றுக்கோஷமாக இருக்கிறது.
இதோடு மட்டுமன்றி இன்னுமொரு வரலாற்று சிறப்புமிக்க சந்தேகத்தையும் உரக்க எழுப்பியுள்ளார். அதாவது, சிறீலங்காவில் இருந்து 40 மைல்கல் தொலைவில் உள்ள இந்திய தேசமும் தமிழகமும் சிறீலங்காவில் இருந்து உயிர்பிச்சை தேடி வரும் அகதிகளை இரு கை விரித்து அழைக்கையில்; அங்கிருந்து பல்லாயிரக்கணக்கான மைல்கற்களுக்கு அப்பால் உள்ள அவுசுதிரேலியாவிற்கு அவர்கள் ஏன் வரவேண்டும்? பொருளாதார ரீதியில் நல்லதொரு வாழ்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தானே!வென்று...
ஆகா என்னே ஒரு பொறுப்புணர்ச்சி!!!
அடுத்ததாக பெயர் சொல்ல விரும்பா ஒரு தெற்காசிய தூதுவ காரியதரிசி இன்னுமொரு தத்துவார்த்தமான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்படுவதாவது, தென் கிழக்காசியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட ஈழ அகதிகள் அவுசுதிரேலியாவிற்கு கடத்தப்படுவதற்காக காத்துக்கிடப்பதாகவும் அவர்கள் அனைவரும் ஏதாவது ஒரு வகையில் சிறீலங்காவின் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக உள்நாட்டு போரில் ஈடுபட்டிருக்கும் புலிகள் பயங்கரவாத அமைப்பிற்கு தொடர்புடையவர்களெனவும் தெரிவித்துள்ளார். அத்தோடு மட்டுமில்லாமல் இம்மக்கள் ஈழத்தைவிட்டு வெளியேறி புலிகளின் அமைப்பிற்காக உதவும் வண்ணம் பொருளாதார அகதிகளாக வெளிநாடுகளுக்குப் பயனம் மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.இவ்வாறு கடத்தப்படுவதற்கு இவர்கள் புலிகளுக்கு தலா 10,000/- டொலர் வீதம் வரி செலுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
புலிகள், புலம்பெயர் ஈழவாசிகள் தாயகம் திரும்பும் பொழுது வரி வசூலிப்பது உண்மையென்றாலும், இவ்வாறு அகதிகளாக உயிர் பிச்சை கேட்டும் சுகாதாரமாக வாழவேண்டிய வாழ்க்கைக்காகவும் மேற்கத்திய நாடுகளுக்கு செல்வதை பொருளாதார அகதிகள் என்றழைப்பது மிகவும் ஆட்சேபகரமான ஒன்று.இதைப் பொருளாதார அகதியான நான் சொல்வதற்காக வெட்கப்படவில்லை.
இன்றோ நாளையோ அல்லது இன்று நள்ளிரவோ வல்லரசாகக் கூடிய இந்திய தேசத்தைவிட்டு வந்தேறியாக இங்கிருக்கும் நாட்டிற்கு சேவை :-)) செய்து வரி செலுத்தி வாழ்ந்துவரும் நான் பொருளாதார அகதி தான். ஆனால் அமெரிக்காவிலோ இன்னபிற வல்லரசு மற்றும் வல்லரசாக இல்லாத ஆனால் முன்னேற்றமடைந்த நாடுகளில் வசிக்கும் வருங்கால வல்லரசு இந்தியாவின் குடிமக்களை என்னவென்று அழைப்பது? ஆங்...அவர்கள் தகுதிக்கும் அறிவுக்கும் இந்திய வல்லரசால் டொலர்களில் சம்பளம் கொடுக்க இயலாதபடியினால் அவர்கள் தகுதிக்கேற்ற ஊதியத்திற்காகவும் சுகமான வாழ்க்கைக்காகவும் முன்னேறிய நாடுகளால் வரவேற்கப்படுகிறார்கள். :-))))
ஆனால் உயிர்பிச்சைக்காகவும், மூன்று வேளை சாப்பாட்டிற்காக எச்சில் தட்டுகளையும், கக்கூஸையும் கழுவுவதற்காக புலம்பெயரும் ஈழத்தமிழர்கள் பொருளாதார அகதிகளாம். அந்த மெத்தப்படித்த அரைவேக்காட்டு தூதரக காரியதரிசி உளறியுள்ளது.இந்த உளரலுக்கு சொந்தக்காரனோ அல்லது சிறீலங்காவிற்கான அவுஸ்திரேலிய தூதுவனோ கிறிஸ்துமஸ் தீவிற்கு சென்று அப்பொருளாதார அகதிகளை சந்தித்தனரா என்றால் அதுவும் இல்லை.(அல்லது எனக்குத் தெரிந்து இல்லை)
ஓரிரண்டு வருடங்களுக்கு முன் ஹோம்புஷ்ஷில் இருக்கும் ஒரு மளிகைக் கடையில் ஈழமுரசு படிக்கும் வாய்ப்பு கிட்டியது. அதில் தற்போது நோர்வேயில் இருக்கும் ஒரு சகோதரி அவருடைய பொருளாதார அகதி அட்டை வாங்குவதற்கு முன் ஏற்பட்ட துன்பங்களைத் தொகுத்திருந்தார். அய்ரோப்பாவில் இருக்கும் அனைத்து ஈழத் தமிழகதிகளுக்கும் இங்கிலாந்து மோகம் காட்டித் தான் கடத்தப்படுகின்றனர். பல்லாயிரக்கணக்கான கள்ளத்தோனி பயனம், அதற்கப்பால் கரைசேரும் நாட்டில் உள்ள ஏஜெண்டின் கைக்கூலிகள் வன்புணறல் அது தவிர்த்து 10லிருந்து 20ஆயிரம் வரையிலான டொலர் அவிழ்க்க வேண்டும். இது அனைத்தும் சுமூகமாக முடிந்தால் கண்டெயினர் டிரக்குகளில் மூட்டைகளுக்கு இடையே மறைக்கப்பட்டு போதைப்பொருள் கடத்துவது போல் கடத்திச் செல்லுவார்கள். வழியில் ஏதாவது ஒரு பனிப்பிரதேசத்தில் இறக்கிவிட்டு இது தான் இங்கிலாந்து என்று தள்ளிவிட்டுப் போவார்கள். இது பற்றி சாருவின் எழுத்துக்களில் இருந்தும் நிறைய அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு பொருளாதார அகதிகளாக பட்டம் கட்டப்பட்ட ஈழ அகதிகளை திருப்பி அனுப்பும்பொருட்டு அவுசுதிரேலிய அரசாங்கம் இந்தோனேசிய அரசாங்கத்திடம் முன்வைத்த அகதிகளைத் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கையை அவ்வரசு ஒட்டுமொத்தமாக நிராகரித்தபட்சத்தில் இந்த 83 ஈழ அகதிகளுக்கு அவுசுதிரேலிய அரசாங்கம் அரசியற்புகலிடம் அளிக்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ளது. இந்தியாவைவிட மூன்று மடங்கு அதிகமான நிலபரப்புள்ள அவுசுதிரேலியாவில் இந்த 83 பேருக்கா இடமிருக்காது?
உண்மையில் சொல்லப்போனால் இன்றளவில் பெரும்பாலான நாடுகளின் பொருளாதாரம் உயர்ந்து நிற்பதே இவ்வாறான அகதிகள், பொருளாதார அகதிகள் என்றழைக்கப்படுபவர்களால் தான்.
கடந்த வெள்ளியன்று இங்கு நடைபெற்ற ஒரு தொழில்முறை விருந்தில் ஒரு உள்ளூர் கட்டிடக்கலை நிபுணர் பின் தங்கிய அல்லது வளரும் நாடுகளைச் சார்ந்த வளரும் கட்டிடக்கலைஞர்கள் தான் அவருக்கு தேவையெனவும் அவர்கள் தான் சோர்வின்றி உழைப்பவர்கள் எனவும் என்னிடம் தெரிவித்தார்.
இன்று நகரங்கள் என்றழைக்கப்படும் அவுசுதிரேலியாவின் சில குட்டி கிராமங்கள்கூட புலம்பெயர்ந்த வந்தேறிகளாலே கட்டப்பெற்றது. உதாரணத்திற்கு சொல்லவேண்டுமானால் அவுசுதிரேலியாவின் வரண்ட செம்மண் பூமியின் நகரமான அலீஸ் ஸ்ப்ரிங்க்ஸ் நிர்மாணமும் அதன் பொருளாதார வளர்ச்சியும் ஒரு காலகட்டத்தில் அகதிகளாக வந்த பஞ்சாபிய சீக்கியர்களால் தான். இதை அவுசுதிரேலியர்களே ஒத்துக்கொள்ளக்கூடிய உண்மை.
மேலும் வடக்கு குயின்ஸ்லாந்தின் இடாலியா மற்றும் அதற்கும் மேலுள்ள நாட்டுப்புற கிராமங்கள் குயின்சுலாந்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டது என்றால் அது மிகையாகாது. காரணம் இந்திய துணைக்கண்டத்தின் பூர்விகப் பணப் பயிர்களான வாழை, மா, கரும்பு போன்றவற்றின் விளைச்சல்கள் தான். இவையனைத்தும் இந்திய / ஈழ அகதிகளாக வந்தவர்களால் தான். உணமையில் சொல்லப்போனால் என்னைப்போன்ற பொருளாதார அகதிகளை விட, உழைத்து உயிரோடு வாழவேண்டும் என்ற வெறியோடு வரும் வெளிதேசத்து அகதிகளால் தான் சில நாடுகளின் பொருளாதாரம் உயர்ந்து நிற்கின்றது.