4/30/2006

வல்லரசும், ஒரு கனவும்...

எல்லாம் வல்ல
அரசா
எதுவும் வெல்ல
அரசா

வெள்ளைச் சொக்காய்
கொத்தடிமைகளை
கொண்டவளுக்கு ஒரு கனவு
அதுவும்
வல்லரசுக் கனவு

******
முப்பது ஆண்டுகட்கு பிறகு இம்மாதம் 21ம் தேதியன்று ஆஸ்திரேலிய தேசம் கடனில்லா நாடாக அறிவித்துக் கொண்டிருக்கிறது. இது தொடர்பான அந்நாட்டின் கருவூல அமைச்சரின் பேச்சை எழுத்து வடிவாக இங்கே காணலாம். ஆஸ்திரேலியாவிற்கென்று தனியொரு அளவில் பெரிதான வெளியுறவுக் கொள்கைகள் கிடையாது. ஆஸ்திரேலியாவின் இராணுவப் படையும் அவ்வளவாக பலமிக்கதும் இல்லை.ஆஸ்திரேலியாவின் கடற்படை, அதனுடைய எல்லைக்குட்பட்ட கடற்புறத்தைக் கூட காக்க இயலாத ஒன்று. அந்த ஒரு காரணத்தினாலேயே நேச நாடு என்ற போர்வையில் அமெரிக்காவிற்கு "சொம்பு" தூக்கிக் கொண்டிருக்கிறது. இதை ஆஸ்திரேலியர்களே வேண்டா வெறுப்பாக ஏற்றுக் கொண்டுள்ள உண்மை. ஆயினும் உணவுத் தேவையிலும், இன்னபிற அத்தியாவசியத் தேவைகளான எரிபொருள், மின்சாரம் போன்றவற்றிலும் தன்னிறைவை எட்டிக் கொண்டிருக்கிறது.
***

அமெரிக்காவின் ஏகாதிபதியமும், பொருளாதாரச் சுரண்டலும் உலகறிந்ததே.அமெரிக்காவிற்கும், ஒருங்கிணைந்த சோவியத் கூட்டமைப்பிற்கும் நடந்த, யார் பெரியவன் என்ற பனிப்போரில் அமெரிக்க 100% வெற்றியடைந்ததிற்கு காரணமாகச் சொல்லபடுவது அமெரிக்காவின் தன்னிறைவும், தன் மக்களிற்கு அத்தியாவசியத் தேவையைப் பூர்த்தி செய்ததுமேயாகும். அமெரிக்காவின் தன்னிறைவிற்கு காரணமாகக் கருதப் படுவது 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட தொழிற்புரட்சியும், அதைத் தொடர்ந்த பசுமைப் புரட்சியுமேயாகும். இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப் பட்ட அனைத்து பொருட்களும் (இரும்பு உலோகத்திலான) 'பிட்ஸ்பர்க்"ல் இருந்து தான் சென்றதாகவும் சொல்லக் கேள்வி. இந்த கால கட்டத்தில் அமெரிக்காவின் பெரும்பாலான மக்கள் "உழைக்கும் வர்க்கத்தை" சார்ந்தவர்கள்.

***
கனவு காணுங்கள் என்று இந்தியக் கூட்டமைப்பின் குடியரசுத் தலைவரே கூறிவரும் நிலையில், எந்தவொரு இந்தியக் குடியும் தனது தேசத்தை ஒரு வல்லரசாக சித்தரித்து கனவு காண்பதில் எவ்விதமானத் தவறும் இல்லை. அகில உலகில் இந்தியாவின் நிலையும் நிலவரமும், உலகின் அடுத்த வல்லரசு என்ற பிம்பமாக இந்தியருக்கும், ஏழை பிச்சைக்கார மற்றும் வெள்ளைச் சொக்காய் கூலிகளை உற்பத்தி செய்யும் நாடாக மேற்கத்தியவருக்கும் தெரிகிறது.

பலவிதமான வர்ணங்களும் வண்ணங்களும் அரசியல் குப்பையில் திளைத்தூறிக் கொண்டிருக்கிறது.எங்களின் பலமே சனநாயகமும், மதச்சார்பின்மையும் என்று கூறிக் கொண்டு ஐ ஐ டி களிலும் ஏ ஐ ஐ எம் எஸ் களிலும் வருங்கால வெள்ளைச்சொக்காய் அடிமைகள், பிச்சைகாரனை பிச்சைக்காரனாகவே இருக்க விடுங்கள் என்றப் போராட்டம் வேறு.

கல்வித்துறையின் கடந்த 50 ஆண்டுகளில் பெரிதான முன்னேற்றம் அடைந்திருந்தாலும், இன்றைய அளவில் இந்தியானின் ஒட்டுமொத்த மக்களில் 60% மட்டுமே கல்வியறிவு உள்ளவர்களாக இருக்கிறார்கள். இதில் 10% - 20% வரை வெறும் கையெழுத்து மட்டுமே போடத் தெரிந்தவர்களாக இருப்பார்கள்.உணவுத் தேவையிலாவது தன்னிறைவு அடைந்திருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. வசிப்பிடம் பற்றி கூறவேத் தேவையில்லை உலகின் மிகப்பெரிய சேரிகளும் இந்திய நகரங்களில் தான் இருக்கிறது. ஆக மனித வாழ்விற்குத் தேவையான அடிப்படை வசதிகளே இன்னமும் 50% கூட பூத்தியாகாத நிலையில் வல்லரசுக் கனவுத் தேவையா?

அடுத்ததாக இந்தியா போன்ற வளர்கின்ற நாடுகளின் இன்றைய இன்றியமையாதத் தேவையாக இருப்பது எரிபொருள் தேவை. இது தான் அனைத்து பொருளாதாரத்தையும் தாங்கி நிற்கிறது.அனைத்து கனிம வளங்களும் சுருங்கி வருகிற நிலையில் அண்டை நாட்டில் கையேந்தி நிற்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது இந்தியா. நீர் சார்ந்த மின் உற்பத்தியும், நிலக்கரி சார்ந்த மின் உற்பத்தியும் ஏறக்குறைய அற்று போன நிலையில் மின் உற்பத்தி தனியார் மயமாக்கப்பட்டது. ஆயினும் மின்னுற்பத்தியில் இந்தியா இன்னமுன் தன்னிறைவை அடைவில்லை என்பதே உண்மை. எத்தனை சதவிகிதத்தினர் மின்சாரத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்ற புள்ளி விவரங்கள் சரிவரக் கிடைக்கவிடினும், விவசாயத்திற்கு இன்றியமையத்தத் தெவையாக இருப்பது மின்சாரம் மட்டுமே. ஆக உணவு உற்பத்தியும் மின்சாரத்தேவையை பொறுத்தே அமைகிறது. இந்தியாவின் தேசியத் தொழிலாகக் கருதப்படுவது விவசாயம். மின் தட்டுப்பாடினாலும், நடுவன் அரசின் பாரா முகத்தினாலும் விவசாயத் தொழில் இன்று நலிந்து வருகிறது.

இவ்வருடத்திற்கான இந்திய அரசின் செலவாணிய(பட்ஜெட்?) கணக்கில் இராணுவத்திற்கும், அணு ஆரய்ச்சிக்கும் ஒதுக்கிய தொகையில் எவ்வளவிற்கு மரபு சாரா எரிபொருள் ஆராய்ச்சிக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் என எண்ணும் பட்சத்தில் கேள்விக் குறியே மிஞ்சும். அன்னிய நாட்டினரிடமும், உலக வங்கியினிடமும் கடன் மேல் கடன் வாங்கி அணு ஆராய்ச்சியிலும், இராணுவத் தளவாடங்களிலும் செலவினத்தை அதிகரிப்பதை விட உள்ளூரில் கிடைப்பதைக் கொண்டு மின் உற்பத்தியை பெருக்குவது என்ற ஆராய்ச்சியில் செலவிட்டால் இந்தியா தன்னிறைவு அடைவதில் ஒரு படியாவது மேலெடுத்து வைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. உணவு உற்பத்தியில் தன்னிறைவும், அடிப்படை உள்கட்டமைப்பும் இல்லத வகையில் வருமை கோட்டிற்கு கீழே இருப்பவர்கள் கடைசி வரை அவ்வாறாகத் தான் இருப்பார்கள். இவர்கள் இந்தியாவின் மொத்த மக்கட்தொகையில் 50% மேற்பட்டவர்களாகவும் இருப்பார்கள். ஆக அன்னிய முதலீட்டினாலும், மேல் நடுத்தரக் குடிகள் மென்மேலும் முன்னேறுவதால் மட்டுமே இந்திய தேசம் வல்லரசாக முடியும் என்றால் அது ஒரு நிறைவேறாக் கனவு தான்.

நன்றி : திரு. ஆலன் கான் (அமெரிக்க சமூக & பொருளாதார நிபுனர்)

4/29/2006

இன்றுடன் முப்பது நாள்!

ஒரு துன்பியல் சம்பவம்...

எவ்வித எதிர்பார்ப்புமின்றி, காளையாய் திரிந்திருந்த என்னை உலகறியப் போட்டுத் தள்ளிய தினமலருக்காக கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குகிறேன். எங்களுடைய சுற்றத்தில் 16ம் நாள் நடைபெறும் கருமகாரியத்தைவிட 30ம் நாள் நடக்கும் ஒப்பாரியே முக்கியத்துவம் வாய்ந்தது. தினமலரில் என்னுடைய வலைப்பூவை குறிப்பிட வேண்டிய அவசியம் என்னவென்று எனக்கு இதுவரை ஒரு புரியாத புதிராகவே இருந்து வந்துள்ளது. ஆயினும் துக்கத்தை அடக்க முடியாததாலும், எனக்கு நடுநிலைவியாதி இல்லாததாலும் - நடுநிலை பத்திரிகையான தினமலரை விமர்சிக்கும் தகுதி எனக்கு இல்லாததனாலும், உலகறிய ஒப்பாரியில் கலந்து கொள்ள வருமாறு வருத்தத்துடன் அழைக்கிறோம்.

அங்கீகாரம் = கேலிக்கூத்து

உதாரணத்திற்கு சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களின் பின்னூட்டங்கள். அவர் சுயமாகவே சிந்தித்து பின்னூட்டமிடுபவராய் இருந்தாலும் தினமலரின் கேலிக்கூத்தைக் கணக்கில் கொண்டு என்னுடைய பதிவுகளை அங்கீகரித்து வாழ்த்து கூறி இருக்கிறார். அவரிட்ட பின்னூட்டம் இங்கே!இதனுடைய தமிழாக்கம்
"தினமலர் உங்கள் இன்றையப் பதிவை பற்றி போட்டு இருக்கிறார்கள்.நடுவில் சறுக்கினாலும் உங்கள் பதிவு நல்ல விதமாக முடிந்ததற்கு வாழ்த்துக்கள்"


நடுவில் சறுக்கிய என்னுடைய பதிவுகள், தினமலரில் ஒரு துன்பியல் சம்பவமாக அச்சேறிய காரணத்தால் எனக்கு வாழ்த்துக்கள்...வெட்கக்கேடு!!!


இதற்கு அவர், உம்மையெல்லாம் எப்படி தினமலரில்...? என போட்டிருந்தால் மிக்க மகிழ்ச்சியாய் இருந்திருக்கும்.

தேன்கூடு = வெரும்கூடு

தேன்கூடு பதிவுகள் திரட்டிக்கு யாரோ ஒரு சகோதரி/சகோதரர் தான் தினம் ஒரு வலைபூவை அறிமுகம் செய்து வருகிறார், அவராவது கொஞ்சம் யோசித்திருக்க வேண்டாம்? என்னுடைய வலைப்பதிவு யாருக்கும் எவ்விதத்திலும் உபயோகமாய் இருந்ததில்லை, உபத்திரமாகவே இருந்திருக்கிறது. தினமலரில் போட்டு விட்டார்கள் என்ற காரணத்தினாலேயே என்னுடைய வலைப்பூவை அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏன்? தினமலராவது பரவாயில்லை ஒரு பத்தியளவிற்கு என்னைக் கிழித்துக் கொன்றிருந்தது. தேன்கூட்டிற்கு எதைக் குறிப்பிட்டு என் பதிவை அறிமுகப்படுத்துவது என்று தெரியாமல் "பின்னூட்டப்புகழ் சத்யா" என்று குறிப்பிட்டிருந்தனர். ஆக இப்படியெல்லாம் என்னை அவமானப் படுத்த வேண்டுமா? என்று என்னுடைய துக்ககரமான இந்த முப்பதாவது நாளில் ஒரு சிறு கேள்வியோடு முடித்துக் கொண்டு, சுற்றத்தார் அனைவரையும் ஒப்பாரியில் கலந்து கொள்ள வருத்தத்துடன் அழைக்கிறேன்.

4/27/2006

தனிமனிதத் தாக்குதல்

கீழ்ப்பாக்கத்திற்கு செல்ல வழி?

நாளிதழ்களில் தினமலரைத்
தவிர
வேறறியோம்

வெட்டி ஒட்டுவது
தவிர
வேறறியோம்!

வெட்டி ஒட்டினாலும்
நன்றி நவிழ
யாமறியோம்

என்னிடத்தில் வாருங்கள்

கீழ்ப்பாக்கத்திற்கு கூட
இலண்டன்
வழியாகவழி சொல்லுவோம்


அது மட்டுமா
இங்கே இலவசமாக
ஜோக்கர், பொறம்போக்கு
போன்ற பட்டங்களும்
வழங்கப்படும்

பல்கலையின் துணைவேந்தர்

4/24/2006

இரத்தக் கண்ணீர்!






















வெளிக்குத்தும் இல்லண்ணா
உள்குத்தும் இல்லண்ணா...
வெரும் படம் தான்னா
யாரயாச்சும் ரிமைன்ட் பண்ணாக்கா
நா பொறுப்பில்லண்ணா...

"தல" - ரெட்

வாங்கடா வாங்க... என் வண்டிக்கு பின்னால...



வரலாறு படைத்த
தன்னிகரில்லா தலைக்கு வாழ்த்துக்கள்!!!

4/17/2006

வூடு கட்டிக்கறாங்க! - 2 (Frank Owen Gehry)

சமீபத்தைய மின்மடலில் வந்த "உலகின் மிக வித்தியாசமான கட்டிடங்கள்" சிலவற்றை கட்டியவர்கள் எவரென்று தெறியாவிடினும், ஒரு சில கட்டிடங்களை உடனடியாக அடையாளங்கண்டு கொள்ள முடிந்தது.அப்படிபட்ட கட்டிடங்களை வடிவமைத்தவர்களில் ஒருவர் "ஃப்ரான்க் ஓ கெர்ரி"(Frank Owen Gehry). இவர் கட்டிடக்கலையின் "நோபல்" பரிசாகக் கருதப்படும் "ப்ரிட்ஸ்கெர்" (Pritzker Prize) பரிசை இள வயதில் வென்றவர் என்ற பெருமைக்குறியவராவார். இப்பரிசானது கட்டிடக்கலையில் வித்தியாசமாகவும் கற்பனை மற்றும் கிரியாஊக்கி போன்றவயை முழுமையாகப்(lifetime achievement) பயன்படுத்துபவருக்குக் கொடுக்கப் படுகிறது.

Dancing house:

அப்போதைய ஹாலிவுட் கதாபாத்திரங்களான ஃப்ரெட் - ஜிஞ்சர் ஜோடியை உருவகப்படுத்தி கட்டப்பெற்றது இந்த அலுவலகக் கட்டிடம். அந்த ஜோடியின் நளினம் சிறிதளவு கூட இக்கட்டிடத்தில் காண இயலாது. நான் கண்டது, இடைபெருத்த பெண்ணையும் போதையின் உச்சத்தில் ஊன்றுவதற்கு இடம் பேணும் ஆணையும் தான்!


Image Hosted by ImageShack.us

New Guggenheim Museum - Bilbao, Spain

டிகானின் ஐகானாக திகழும் காட்சியகம். வெளிப்புறம் முழுதும் மெருகேற்றப்பட்ட இரும்பு உலோகத்தினால் க்லாட் செய்யப்பட்டக் கட்டிடம். வெளிப்புறத்தின் வடிவத்திற்கேற்ப உட்புறம் வடிவமைக்கப்பட்டது.

Image Hosted by ImageShack.us

Stata center - MIT

Image Hosted by ImageShack.us

இவருடைய கட்டிடக் கலையானது "டிகான்"(De-Constructivism- late modernism) வகையைச் சார்ந்தது. இவருடைய கட்டிடக் கலையில் எமக்கு அவ்வளவாக ஆர்வம் இல்லாவிடினும், இவரின் சாதனை அபரிதமானது. க்யூபிஸ்டுகளும், மினிமலிஸ்டுகளும், வெண்மையும் கொலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் தனியொருவருவராக கட்டிடங்களைச் சிற்பங்களாய் செதுக்கியவர். இவருடைய கட்டிடங்களில் பயன்படுத்தப்படும் கட்டுமானப் பொருள்களும் தனித்துவமாக இருக்கும். உதாரணமாக, உலோகங்கள் அதிகளவில் பயனபடுத்தப்படும். இவரது கட்டிடங்களின் உள்வடிவமைப்பு வெளிப்புற வடிவத்தைப் பொருத்தே அமைகிறது. இதனாலேயே இவருடைய கட்டிடங்கள் தனித்துவம் பெறுகிறது.

ஆனால் இந்த டிகானின்(Deconstructivism) தந்தை பீட்டர் எய்சென்மேன்(Peter Eisenmann) ஆவார். அவரின் வழி வந்தவர்கள் தான் ஸாஹா ஹதித்(zaha hadid), டேனியல் லெபிஸ்கைன்ட்(Daniel Libeskind), ஃப்ராங்க் கெர்ரி(Frank gehry), ரெம் கூஹ்லாஸ்(Rem Koolhaas) போன்றோர். இதில் பீட்டரை தவிர்த்து ஸாஹா, கெர்ரி, கூலாஹ்ஸ் போன்றோர் ப்ரிட்ஸ்கெர் பரிசை வென்றுள்ளனர். அதிலும் ஸாஹா அவர்களுக்கு அப்பரிசு கொடுக்கப்பட்ட பொழுது அவர் மிகவும் சொற்ப அளவிலான(only 6 realized buildings, rest were paper projects) கட்டிடங்களையே வடிவமைத்து கட்டியிருந்தார்.

இப்பதிவு தருமிக்காக!அவரின் ஆசிர்வாதங்களுக்காக...:-)

4/14/2006

மரித்தலும், உயிர்த்து எழுதலும்!

உயிர்த்தெழுவான் என்று
தெரியாமலே
மரிக்கப்பட்டான் ஒருநாள்!

பிறிதொரு நாளில்
கடவுளாய் அவதரித்தான்
உலகினை காக்க

ஆனால் அவன்
இயேசு மட்டுமல்ல!

4/09/2006

எல்லோரும் வாய்விட்டு சிரிச்சிக்கோங்க...

இதுவரை "இது தான்டா போலிஸ்" போன்ற திரைப்படங்களில் மட்டுமே கண்டு வந்த "டயலாக்"குகள் இன்றைய தமிழக அரசியலிலும் அரங்கேறி வருகின்றன. அதில் ஒன்று தான் இன்றைய தமிழக முதல்வரான ஜெயலலிதாவின் பேச்சும்! அவர் பேசியது பின்வருமாறு...
கருத்துக் கணிப்பு முடிவுகள் அதிமுகவுக்கு சாதமாக இருப்பதால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து தேர்தலை நிறுத்த திமுக சதி செய்கிறது என முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரை நகரில் தீவிர பிரசாரம் மேற்கொண்ட ஜெயலலிதா செய்தியாளர்களிடம் பேசுகையில்,
எப்படியாவது தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலை நடத்த விடாமல் தடுக்க திமுக தலைவரும், அவரது கூட்டாளிகளும் பயங்கர சதித் திட்டத்தை தீட்டியிருக்கிறார்கள்.

பல்வேறு பத்திரிகைகள், நிறுவனங்கள் நடத்தி வரும் கருத்துக் கணிப்பு முடிவுகள் அதிமுக கூட்டணிக்கு சாதகமாக இருப்பதால், தேர்தலைய நடத்த விடாமல் செய்வதே அவர்களது இப்போதைய ஒரே திட்டமாக உள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு அத்தனை கருத்துக் கணிப்புகளிலும் அதிமுக கூட்டணிக்கு சாதகமாக முடிவுகள் வந்து கொண்டுள்ளன. அதிமுக மிகப் பெரிய மெஜாரிட்டியோடு ஆட்சி அமைக்கும் என்று கருத்துக் கணிப்புகள் கூறி வருகின்றன.

எனவே திமுகவும், கூட்டணிக் கட்சிகளும் பெரும் தோல்வியை சந்திக்கும் என்பதை உணர்ந்ததால் திட்டமிட்டபடி மே 8ம் தேதி தேர்தலை நடத்த விடாமல் செய்ய வேண்டும் என்று அவர்கள் சதித் திட்டம் தீட்டியுள்ளனர்.அவர்களுடைய திட்டமே இதுதான். கூலிப்படைகளை வைத்து தமிழகம் முழுவதும் வன்முறையைக் கட்டவிழ்த்து விட வேண்டும். அதன் பின்னர் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்று காரணம் காட்டி தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்த முடியாது என்று சொல்லி தேர்தலையே ஒத்திப்போட வேண்டும்.

இதுதான் அவர்களுடைய திட்டம். கருணாநிதியின் திட்டம்.

மே 21ம் தேதி வரை தேர்தல் நடைபெறவில்லை என்றால் மே 21ம் தேதிக்குப் பிறகு குடியரசுத் தலைவர் ஆட்சி தானாகவே வந்து விடும். அதன் பின்னர் ஆளுனர்தான் ஆட்சி செய்வார்.

அத்தகைய சூழ்நிலையில் தேர்ததல் நடத்தப்பட்டால் தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள். இதுதான் அவர்களுடைய திட்டம். இதற்கு முதல்படியாகத்தான் பசுபதி பாண்டியன் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் அவர் தப்பி விட்டார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரது மனைவி இறந்து விட்டார். இதுதான் அவர்களது திட்டத்தின் முதல்படி.

அவர்கள் எதிர்பார்த்தபடி இந்த சம்பவம் அமையவில்லை.இந்த சதித் திட்டம் நம்பகமான சில தகவல்கள் மூலம் எனக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவேதான் இதனை மக்களுக்குத் தெரிவிக்கிறேன். மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும்.

எங்கேயும் வன்முறை சம்பவத்துக்கு இடம் அளித்து விடக் கூடாது. காவல்துறையினர் நிச்சயம் விழிப்புணர்வுடன் இருப்பார்கள். ஆனால் கருணாநிதியும், அவரது கூட்டாளிகளும் எவ்வளவு கீழ்த்தரமான அரசியல் நடத்தத் துணிந்து விட்டார்கள் என்பதை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்பதற்காக இதைச் சொல்கிறேன் என்றார் ஜெயலலிதா.
எப்படி ஒரு பொறுப்புள்ள முதல்வர் இவ்வாறெல்லாம் பேச முடியும்? இவருக்கு நம்பகச் செய்திகள் வந்துள்ளதாக கூறுகிறார்.அப்படியென்றால் சம்பந்தப்பட்டவரைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தியிருக்கலாமே, சங்கர மடத்துக்காரர்களைக் கைது செய்தது போல்...

கீழ்த்தரமான அரசியல் பற்றி ஜெயாவெல்லாம் பேசும்படி ஆகிவிட்டது தமிழக அரசியல்.