12/26/2006

கமான் ஆஸி கமான்



ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் "தி லெஜென்ட்" ஷேன் வார்னே இங்கிலாந்தின் ஆன்ட்ரூ ஸ்ட்ராசை வீழ்த்தி முதன்முறையாக 700வது விக்கெட்டை கிரிக்கெட் வரலாற்றில் எடுத்தவர் என்ற சாதனை படைத்த காட்சி.

ஷேன் வார்னேவிற்கு எமது வாழ்த்துக்கள்.

கோ ஆஸீ...5-0

12/23/2006

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகும் முதல் தலித்


டெல்லி: உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கே.ஜி.பாலகிருஷ்ணன் அடுத்த மாதம் பொறுப்பேற்கிறார். இந்தப் பதவிக்கு வரும் முதல் தலித் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு சுதந்திரம் பெற்று 50 ஆண்டுகளுக்கு மேலாகியும் நாட்டில் பெரும்பான்மையாக உள்ள தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவியை இப்போது தான் எட்டிப் பிடிக்கிறார்.

இப்போது தலைமை நீதிபதியாக உள்ள ஒய்.கே.சபர்வால் அடுத்த மாதம் 14ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான கே.ஜி.பாலகிருஷ்ணன் இப்பொறுப்பை ஏற்பார்.

தலைமை நீதிபதியாகும் பாலகிருஷ்ணன் கேரளாவைச் சேர்ந்தவரென்பது குறிப்பிடத்தக்கது. 2010ம் ஆண்டு வரை இவர் இந்தப் பதவியில் இருப்பார்.

உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக இருப்பவர் தலைமை நீதிபதியாக பதவி ஏற்பது என்ற மரபு எமர்ஜென்சி காலத்தில் இருந்தே பின்பற்றப்பட்டு வரும் மரபாக உள்ளது.

ஆனால், கடந்த 1975ம் ஆண்டு மூன்று மூத்த நீதிபதிகளை ஓரங்கட்டி விட்டு, ஏ.கே.ராய் என்பவர் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதைக் கண்டித்து, மூன்று நீதிபதிகள் ராஜினாமா செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி:தட்ஸ்தமிழ்

12/20/2006

சாந்திக்காக...

நம்மூரின் செமன்யா காஸ்டர், சாந்தி சவுந்தரராஜன். இந்த பதிவு சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் எழுதப்பட்டது. ஆனால் இதே போன்ற ஒரு பிரச்சினையை தென் ஆப்பிரிக்காவின் காஸ்டர் செமன்யாவும் சந்தித்து வருகிறார். ஆனால் அங்கு அமைச்சர், பிரதம மந்திரி என அனைவரும் அந்த வீராங்கனைக்காக அதரவாய் இருப்பது ஆறுதல் தருகிறது. கருப்பை இல்லாதவர் பெண்கள் கிடையாது என்பது சூத்து வழியாய் சிரிக்கக்கூடிய IAAFன் கேவலமான பிரகடனம்.

கடந்த 29ம் திகதி சாந்தி சௌந்தரராஜன் TIME பத்திரிகைக்கு அளித்த செவ்வி
http://www.time.com/time/world/article/0,8599,1919562,00.html

*****
கடந்த மூன்று நாட்களாக ஊடகங்களில் அதிகமான அளவில் எதிர்மறையான எண்ணங்களையும் கருத்துக்களையுமே சார்ந்து வீராங்கணை சாந்தியின் சர்ச்சைக்குரிய பதக்கப் பறிமுதல் விவாதிக்கப்பட்டுவந்தது.

நேற்று இந்து நாளிதழ் சாந்திக்கு இரயில்வேயில் வேலை மறுக்கப்பட்டதற்கு காரணமாக பாலினப் பரிசோதனையை கூறியது. மேலும் மற்ற மாநில அல்லது இந்திய அல்லக்கை பத்திரிகைகளைப் பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால் இந்து நாளிதழ் இம்மாதிரியான விளிம்பு நிலையில் வாழும் ஒரு பெண்ணுக்கு சிறிதளவாவது ஆதரவாக எழுதும் என நான் எதிர்பார்த்தேன்.ஆனால் அதுவும் ஒரு ஆதிக்க சிந்தையிலேயே செய்திகளை வெளியிட்டிருந்தது.இந்து நாளிதழ் மிகவும் சிரமப்பட்டு அந்த இரயில்வேயின் ஹைப்ரொஃபைல் அதிகாரியிடம் பெற்ற விடயத்தை வேறு எந்த மருத்துவரையோ அல்லது இந்திய விளையாட்டு சம்மேளன மருத்துவ அதிகாரியிடமோ பேட்டியெடுத்து சாந்திக்கு ஆதரவாக எழுதியிருந்தால் சந்தோசப்பட்டிருக்கலாம்.

காலையில் படித்த சந்திரசேகரின் பதிவு அதைவிட கேவலம். இங்கு கேவலம் என்று நான் சொல்வது அவரது வார்த்தைப் பிரயோகம் தான். வார்த்தைக்கு வார்த்தை நடுநிலை என்று இவராகவே ஒரு முன்முடிவை எடுக்கொண்டு எழுதுவது என்னைப் பொருத்தவரை கேவலம் தான். இதைத் தான் இன்றைய ஆதிக்க மனப்பான்மையுள்ள அச்சு ஊடகங்களும் செய்துவருகின்றன.ஹார்மோன் குறைபாடுகளும் உடலளவிலும் குறைபாடுகள் உள்ள திருநங்கைகளை பெண்களாக அல்லது அவர்களது விருப்பப்படி தனி பாலினமாகவோ அறிவிக்க வேண்டும் என அரசாங்கமே யோசித்துக் கொண்டிருக்கிற வேளையில், சாந்தியின் பாலினத்தை ஊறுகண்ணுடன் பார்த்து அதன் போக்கிலேயே எழுதியிருப்பது அறிவின்மையே.உடலளவிலும் மனதளவிலும் பெண்ணாகவே பிறந்து, பெண்ணாகவே வளர்ந்து ஏதோ ஒரு சில ஹார்மோன்களின் குறைபாடுகளால் பெண்ணாக “சாந்தி” என்கிற பெண் அங்கீகரிக்கப்படாதது எனக்கு வேதனையளித்தாலும், அந்தப் பெண் ஒரு வெற்றியாளர் தான்.அவர் பெண்ணாக தான் படித்துள்ளார், பெண்ணாகத் தான் வளர்ந்துள்ளார், பெண்ணாகத் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். ஆகையால் எவ்விதத்திலும் அவருடைய பெண்மையில் சந்தேகமில்லை. இதை எழுதுவது/விவாதிப்பதைக் கூட கேவலமாகத் தான் நினைக்கிறேன். இதற்காக அவரை விளக்கமளிக்கக் கோருபவர்கள் அறிவில் சிறியவர்களாகத் தான் என்னால் பார்க்க முடியும்.(உதாரணம்: எல்லாவகையிலும் ஆணாகவே வளர்ந்து வாழ்ந்து ஒரு கட்டத்தில் உயிரணு உற்பத்தி செய்ய இயலாத ஒருவனை நீ ஆணல்ல இன்றிலிருந்து பெண்களுக்கான இடமோ அல்லது சந்திர சேகர் சொல்கிற மாதிரி "நடுநிலை" என்று சொல்லும்போது ஒரு சராசரி ஆணாக தன்னைக் கருதி கொண்டிருப்பவனுக்கு எழும் அதே உணர்வு)

மேலும் இலங்கையிலும், தென்கொரியாவிலும் ஏற்படாத இந்த பிரச்சினை தோகாவில் ஏற்பட்டதற்கான காரணம் “யாரோ” ஒரு போட்டியாளர் புகாரிட்டதனால் தான். இந்தப் புகார் கண்டிப்பாக வெளிநாட்டவரி ஒருவரினால் கொடுக்கப்பட்டிருக்குமா? என்பது என்னளவில் ஒரு கேள்விக்குறி தான். இந்திய அணி சார்பிலேயே அணியில் பங்கு கொண்டு இறுதி சுற்றுக்கு தகுதி பெற இயலாத ஒரு சக போட்டியாளர் கூட இதைச் செய்திருக்கலாம் என்று தான் எனக்கு எண்ணத் தோன்றுகிறது. அவசர அவசரமாக சாந்தி தோகாவிலிருந்து இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட பின் அவரது இடத்தைப் பூர்த்தி செய்த ஒரு பெண் போட்டியாளர் வழியிலேயே வழுக்கி விழுந்துள்ளார்…

இன்று சாந்திக்கு தமிழக முதல்வரினால் கொடுக்கப்பட்ட சன்மானத்தை கேள்விக்குள்ளாக்கி இருக்கும் பத்திரிகைகள் இந்திய விளையாட்டு சம்மேளனத்தைப் பார்த்து ஏதாவது கேள்வியெழுப்பி இருக்கிறதா என்றால் மிகக் குறைவே. சாந்தி ஹார்மோன் குறைபாடுள்ள பெண் எனத் தெரிந்த பின்னும் அவருக்கு அந்த குறைபாடுகளை நீக்க இந்திய ஒலிம்பிக் சம்மேளனமோ அல்லது சம்மந்தப்பட்ட விளையாட்டு ஆணையமமோ எந்தளவிற்கு சாந்தியை பெண் என்ற அந்த தகுதியை முழுமையாகப் பெறுவதற்கு எவ்வகையிலாவது உதவியதா என்றால் அதுவும் கேள்விக்குறி தான்.

அதுமட்டுமன்றி இங்கே பார்ப்பனர்களைப் பற்றியோ ஆத்திகத்தை பற்றியோ கேள்வியெழுப்பினால் ஓடோடி வந்து பதிலிடும் பதிவர்களும் சரி, ரஜினிக்கு பிறந்த நாள் என்று சந்தோசப்பட்ட சமூகசிந்தனையாளர்களும் சரி, இப்பிரச்சினையைப் பற்றி வாய் திறக்கவில்லை.

எது எப்படியோ கலைஞர் கூறிய இவ்வரிகள் எனக்கு பிடித்திருந்தது.

// When someone expressed doubts whether the cash award should be given, the Chief Minister said: “Finally, that is the body which ran and won. That’s all that matters.”

Asked why he had come out in support of her, he said: “That’s my training. That’s what a person who follows Periyar would do.”//

quoted from “THE HINDU”

12/16/2006

தூங்க விடுங்கப்பா...


செந்தழலாரின் "கஞ்சா குடிக்கி" பதிவில்
...டேய் வாடா, தண்டவாளத்தில தலைகானி இருக்கு...அங்கே படுக்கலாம் என்கிறான்...ழேய் வேழாண்டா என்று வாழ் குழற ழொல்லுறேன்...

தண்டவாளத்துல பழுக்க வேழாண்டா, டிழெயிழ் வழும் என்று சொல்லுவது அவன் காதில் விழுவதாக தெரியலை....

எங்க ஊருக்கு வரும் ஒரே ட்ரெயின் காலை மணி 12 க்கு வரும் என்பது தெரியும்...தொலைவில் ட்ரெயின் வரும் குக்கூ சத்தம் கேக்குது...அது ஏதோ மண்டைக்குள்ளே ஒலிக்கிற மாதிரி இருக்கு...

தண்டவாளத்துக்கு போக முயற்ச்சி செய்யறவனை இழுத்து ப்ளாட்பார்ம் பெஞ்சுல போழ முயழ்ச்சி செய்யழேன்...

பழ்ழி, என்னா கழம் கழக்குது என்று சொல்லிக்கொண்டே பெஞ்சுக்கு இழுத்துவந்துவிட்டேன்...


என்று அவருடைய அண்ணனின் தண்டவாளத்தில் தலை வைத்து தூங்கும் ஆர்வத்தை எழுதியிருந்தார். இங்கிலாந்தில் நேற்று முந்தினம் ஒருவர் தண்டவாளத்தில் பாஸ்டு அவுட் ஆகியிருக்கிறார்.

பாவம்...ஒரு மனுசனை நிம்மதியா தூங்க விடமட்டறாங்கப்பா...

வீடியோவை பார்த்து எஞ்சாய் பண்ணவும்...

12/14/2006

அவா வீட்ல அப்பாவ மாமான்னு தான் கூப்பிடுவா...

பார்ப்ஸெல்லாம் சேர்ந்து புதுசா ஒரு யூனிவெர்சிட்டி தெரந்திருக்காளாம். வேந்தர், துணைவேந்தர், சின்டிகேட், செனேட் மெம்பர்ஸெல்லாம் உங்களுக்கு தெரியும் தானே. தெரியலன்னா செத்த நாழி வெயிட் செய்யுங்கோ. அவாளே வந்து அட்டென்டன்ஸ் கொடுப்பா...

சமீபத்தில் பட்டம் பெற்றவர்கள்:
காக்கா - திருமா
சமத்துவ மாமா- கருணாநிதி
பெரிய மாமா- ஈ வெ ராமசாமி

இதெல்லாம் சரி ஓய்...டாபிக் ரிலேட்டடா ஏதும் பேசமாட்டேங்கறேளே ...அப்டின்னு முனகரது காதுல விழரது...

வந்துட்டேன்டா அம்பி...

சமீபத்தில் தோழர் விடாதுகருப்பு அவர்கள் எழுதிய "பார்ப்பனர்களின் குலத்தொழில்" என்கிற இந்த பதிவிற்கு கொந்தளித்து எழுந்தது மாமிகள் கூட்டம். இப்பொழுதெல்லாம் "உஷா"ராக எழுதப் போவதாக கூறியிருந்த ஒரு பெண்ணீய சிந்தனாவாதி ஒருவர் மிகவும் விசனப்பட்டு பதிவெல்லாம் போட்டு விடாதுகருப்புவின் அந்த சம்மந்தப்பட்ட பதிவை தமிழ்மணத்திலிருந்தே தூக்கி எறியச் செய்தார். ஆனால் அவர் அன்று வருந்திக் கூறியதை இன்று பார்ப்பன பருப்பு பல்கலைக்கழக "பட்டம்" வழங்கிகள் மெய்யாக்கி உள்ளனர்.

ஒப்புதலுக்கு நன்றி ஓய்!

என்ன புரியலையா...அதாங்க நாங்கல்லாம் "தந்தை" பெரியார் என்போம். அவா "மாமா" பெரியார் ங்கரா...

பெரியவா (இது காமகேடி பெரியவா இல்லை) அப்பவே சொல்லி இருக்காங்க ஓய். தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்னு...

அவா ஆத்துல அவாளோட தந்தைங்க அதான் ஓய்...அப்பாக்கள் மாமா வேலை பாத்த பழக்க தோஷத்துல அவாளோட தந்தையையே மாமான்னு கூப்பிட்டு பழகியிருக்கா...அதே நெனப்புல தந்தை பெரியாரையும் "மாமா பெரியார்"ன்னிட்டா.

12/13/2006

இராகு காலம் - நீங்களும் சொல்லுங்க

புலம் பெயர்ந்த ஈழ எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் மகாராஜாவின் இரயில் வண்டி என்ற சிறுகதை தொகுப்பிலிருந்து...

...ஆனால் வெகுகாலமாகியும் மாரியோவுக்குப் பிடிபடாத விஷயம் ஒன்று இருந்தது. அது தான் ராகு காலம்.

ஒரு நாள் பதட்டமாக வந்து சேர்ந்தான். டொன் அவனைக் கடுமையாகத் திட்டிவிட்டதாகச் சொன்னான்.காரணம் அவன் பத்து நிமிடகாலம் தாமதமாக வந்ததுதான். அன்று அவர் வெளிநாட்டுப் பயனத்திற்காக விமான நிலையம் செல்வதற்கு இருந்தார். அது ஒரு வெள்ளிக்கிழமை. பிளேன் பின்னேரம் இரண்டு மணிக்குத்தான் புறப்படுவதாக இருந்ததாம். டொன் என்றால் காலை பத்து மணிக்கு முன்பெ வீட்டை விட்டுக் கிளம்புவதற்குத் தயாராய் இருந்தார். அன்று பார்த்து மாரியோ லேட்டாக வந்ததால், ராகு காலம் தொடங்கிவிட்டதாக அவனைக் கண்டித்து,பயனத்தையே கான்ஸல் பண்ணிவிட்டார்.

ஓர் ஆப்பிரிக்க டிரைவருக்கு ராகு காலத்தின் சூட்சுமம் பற்றி விளக்குவது எவ்வளவு கடினம் என்பதைக் கற்பனை திறன் உள்ளவர்களிடம் விட்டுவிடுகிறேன்.மாரியோவின் முகத்தைப் பார்த்த பிறகு எப்படியும் இந்த ராகு கால மர்மத்தை இவனுக்குத் தெளிவுபடுத்த வேண்டுமென்று தீர்மானித்தேன்.

விஷ்ணு எப்படி மோகினியாக மாறி அமிர்தம் பங்கிட்டாரென்றும், அதை ராகு, தேவ உருவத்தில் பெற முயற்சித்தததையும், சூரிய சந்திரர் இதை அறிந்து விஷ்ணுவுக்குக் கோள் சொல்லியதால் ராகுவுக்கும் சூரிய சந்திரருக்கும் தீராப் பகை ஏற்பட்டதையும் விவரித்தேன். ராகுவின் பழி தீர்க்க்கும் படலம் இன்றும் தொடர்கிறது. சூரிய சந்திரர் இயக்கத்தில் பிறக்கும் ஒவ்வொரு நாளிலும் ஒரு சில மணி நேரங்களை ராகு பீடித்துக் கோள்கிறான். அதுதான் ராகு காலம், அந்தக் காலங்களில் என்ன செய்தாலும் அது உருப்படாது என்று விளக்கினேன்.


ஒரு சிறுபிள்ளையின் குதூகலம் அப்போது மாரியோவுக்கு ஏற்பட்டது.விளக்கம் இவ்வளவு சுலபமாக இருக்கும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை போலும். எந்த நாட்களீல் எவ்வளவு மணி நேரங்களை ராகு பாதிப்பான் என்று அவன் கேட்டதற்கும் என்னிடம் ஒரு சூத்திரம் தயாராக இருந்தது.

MOTHER SAW FATHER WEARING THE TURBAN SURELY .இந்த வசனத்தை அவனை மனப்பாடம் செய்ய வைத்தேன். இந்த ஏழு வார்த்தைகளும் ஏழு நாட்களை குறிக்கும். முதலாவது வார்த்தை MONDAY என்றால் இரண்டாவது வார்த்தை SATURDAY, மூன்றாவது FRIDAY. இப்படியே கடைசி வார்த்தை SUNDAYயை குறிக்கும். இந்த முறைப்படி முதலாம் நாள் இராகு காலம் ஏழரை முதல் ஒன்பது வரை நீடிக்கும்.ஒரண்டாம் நாள் ஒன்பது முதல் பத்தரை, மூன்றாம் நாள் பத்தரை முதல் பன்னிரண்டு இப்படியே விரியும் என்று விளக்கினேன். அவனும் புரிந்தது போல பெரிதாகத் தலையை ஆட்டினான்...

12/10/2006

நீ சிக்குனுக்கீறீயே...

12/09/2006

Curry Shop - Rajini in Australia

12/08/2006

பூர்வீகமும் - கடற்பாறையின் சிற்ப காலமும்


முந்தைய சோவியத் கூட்டமைப்பின் நகரமான "கியேவ்"விலிருந்து அனா என்றொரு பெண்மணி பட்டறையில் கலந்துகொள்ள வந்திருந்தாள். ஏறத்தாழ முப்பது வயதிருக்கும், மிகுந்த பெண்மையுடனும், கவர்ச்சியாகவும் இருந்தாள்.பட்டறையின் கடைசி நாளும் முடிந்துவிட்டது.ஓர் இரவுதான் மிச்சம்.ஏரியைப் பார்த்திருக்கும் உணவகத்தில் நாங்கள் நாலு பேரும் உணவருந்துவதென முடிவானது. நாங்கள் அனைவரும் கியேவ் பெண்மணி அனாவுக்காகக் காத்திருந்தோம்.

இந்தப் பட்டறை முடிவதற்குள் இவளுடன் மிகவும் அந்நியோன்யமான ஒரு சம்பவம் நடக்கப்போவது எனக்கு அப்போது தெரியாது. ஆகவே மிகவும் சாதாரணமாக ஒதுக்குபுறமான கிராமத்தில் காசு மாற்றும் சிரமத்தைப் பற்ற்ப் பேசிகொண்டோம்.பிறகு வங்கி ஊழியரிடம் எனக்குப் பரிந்துரைத்து என் பயண ஓலைகளை மாற்ற உதவி செய்தாள்.நன்றியை எதிர்பாராது விறுக்கென்று திரும்பி மறைந்துவிட்டாள்.பட்டறை நேரங்களில் எப்பவும் ஒரு கும்பல் அவளைச் சுற்றி கலகலவென்று இருக்கும். போஸ்னிய இலைஞன் அவளிடம் மனதைப் பறிகொடுத்திருந்ததும் அவள் பார்வையில் சிக்குவதற்கும், அவளோடு தனிமையில் கதைப்பதற்கும் அவன் சமயம் பார்த்திருந்தது அப்பட்டமாகத் தெரிந்தது.

இரவு எட்டு மணியாகியும் சூரியன் மறைவதற்குத் தயங்கிக் கொண்டிருந்தன். நாங்கள் வைன் ஆர்டர் பண்ணி சுவைத்துக் கொண்டிருந்தபொழுது அனா வந்து சேர்ந்தால். மாலை வேளைக்கான நீண்ட உடையில் இருந்தால். வந்த உடனேயே அன்றைய இரவு நிகழ்ச்சிகளுக்கும் பிரெஞ்சு மொழி பரிவர்த்தனைகளுக்கும் அவள் பொறுப்பேற்றுக் கொண்டாள்.மெல்லிய நீண்ட கிளாஸில் பறிமாறிய வைன் உள்ளெ இறங்க இறங்க, எங்கள் இறுக்கம் தளர்ந்து அந்நியோன்யம் கூடியது.அனாவின் சிரிப்பலை அடிக்கடி எழும்பி ஏரி அலைகளுக்கு மேல் தவழ்ந்து போனது.

என்னுடைய முழுப்பெயரையும் கேட்டுவிட்டு,"ஓ! நீங்கள் தமிழரா?" என்றாள் ஆச்சரியமான குரலில்."மன்னிக்க வேண்டும், இனிமேல் அந்தத் தவறைச் செய்யமாட்டேன்" என்றேன். அவள் சிரித்துக் கொண்டே "தமிழ் மிகவும் கடினமான மொழியாயிற்றே! எப்படி சமாளிக்கிறீர்கள்?"என்றாள். "என்ன செய்வது, கஷ்டம் தான். ஆனால் எங்கள் ஊரி ஒரு நூதனமான வழக்கமுண்டு. தாய்மாரே தங்கள் பிள்ளைகளுக்குப் பாலுடன், மொழியையும் புகட்டிவிடுவார்கள். அது மாத்திரமில்லை. பிறந்தவுடன் ஒரு தடித்த அகராதியையும் கையிலே தந்துவிடுவார்கள்" என்றேன்.

என் தாயார் மிகவும் கண்டிப்பானவள். இப்படி முன்பின் தெரியாத ஆண்களுடன் நான் வைன் அருந்துவதைப் பார்த்தால் "என் கதி அதோ கதிதான்" என்று கூரிவிட்டு கலகல்வென்று சிரித்தாள். பல தலைகள் இப்போது எங்கள் பக்கம் திரும்பின. நடன இசை ஆரம்பமானது. போஸ்னிய இளைஞன் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு "நடனம் ஆடலாம?"என்றான். இவளும் யோசிக்காமல் சரியென்று உடனே எழுந்துவிட்டாள். நடனமேடையில் ஒருவருமில்லை. இவர்களிருவர் மட்டுமே ஆடினார்கள். பலநாள் பிரிந்திருந்து கூடியிருந்த காதலரைப்போல் ஆரத்தழுவி ஆடினர்.

நடனமேடையில் நின்றவாறே அவள் தன் தலைமயிறை விரித்து விட்டாள். அப்படி விரித்த பிறகு அவள் அழகு முற்றிலும் புதிதாக்கப்பட்டது. கண்களில் மயக்கும் தன்மை கூடியது. சிறிது தள்ளாட்டமும் தெரிந்தது. கலகலவென சிரிக்கும் குரல் கூட இப்போது கொஞ்சம் மாறிவிட்டது.

இப்பொழுது எங்கள் உணவின் பிரதான அம்சம் வந்தது. இத்த பிரெஞ்சுக்காரர்கள் உணவுக் கலையை நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்கள். உணவின் அலங்காரமும், ருசியின் நேர்த்திமையும் உலகை மறக்கச் செய்தன.ஏரிக்கரைக் காற்று வீச, சிவப்பு வைன் மெல்லிய போதை தர, எங்கள் மனது முன்பின் அறியாத ஒருவித சந்தோசத்தில் மிதந்துகொண்டிருந்தது.

திடீரென அனா மீண்டும் பேசினாள்."என்னுடைய அம்ம மிகவும் கண்டிப்பானவள். என் கற்பைக் காப்பதில் தன்னுடைய வாழ்நாளில் அரைவாசியை அவள் செலவழித்தாள். என் நண்பிகள் ஆண் சிநேகிதர்களுடன் வெளியே போஇ கேளிக்கைகளில் ஈடுபடும்போது நான் கோப்பைகளைத் துடைத்துக்கொண்டு வீட்டிலேயே இருந்தேன். நேரத்தை எவ்வளவு வீணாக்கிவிட்டேன்." போஸ்னியாக்காரனும் கொஞ்சம் குடி மயக்கத்தில் இருந்தான். அந்தத் துணிவில் அவன், "அனா, கவலையை விடு. நான் உதவி செய்கிறேன். YOU CAN MAKE UP FOR THE LOST TIME" என்றான். எல்லாரும் சிரித்தார்கள். அனாவின் சிரிப்பு கலகலவென்று மேலோங்கி நின்றது.

அனா அக்கம்பக்கம் பார்த்து ரகசியக் குரலில் "உங்களுக்கு இது தெரியுமா?" என்று கேட்டபடியே மேசையில் குனிந்தாள். நாங்கள் எல்லாம் ஆர்வத்துடன் எங்கள் கழுத்துக்களை வளைத்து அவள் பக்கம் நீட்டித் தலைகள் மேசையில் படக் காத்திருந்தோம். அவளோ கலகலவென்று சிரிக்கத் துவங்கினாள். "தனக்குத் தேவை இல்லாத விடயத்தைத் தெரிவதற்கு மனிதன் எவ்வளவு தாழ்ந்து போகவும் தயங்கமாட்டான்" என்றாள். எங்களுக்கு வெட்கமாகி விட்டது.

இன்னும் வைன் வேண்டும் என்று சிறுபிள்ளைபோல அடம்பிடித்தாள்.எங்களுக்கு மிகப்பெரிய பங்கை ஊற்றிக்கொண்டும், அவளுக்கு ஒரு சொட்டு கிளாஸில் வார்த்துக் கொடுத்தோம். அசிங்கமாகத் திட்டியபடியே அவள் எழுந்து நின்றாள். இரண்டு பக்கமும் அவள் உடல் ஆடியது.

"என்னுடைய அம்மா மிகவும் கண்டிப்பானவள். நான் உங்களுக்குச் சொல்கிறேன். மிகக் கவலையாகச் சொல்கிறேன். என்னுடைய நீண்ட கன்னிமையை கலைக்க ஆள் தேவை. உங்களில் யார் தயாராக இருக்கிறீர்கள்" என்று நேராக உரத்த குரலில் கேட்டாள்.

"நன்றி கோழைகளே!" என்றாள். படுக்கையில் சாய்ந்தபடி எங்களைக் கூர்ந்து பார்த்தாள். தன் வலது கையை மார்புக்குள் விட்டு இடது மார்பை எடுத்து எறிந்தால். பிறகு வலது மார்பைப் பிடுங்கி என் மூஞ்சியில் வீசினாள். பஞ்சுப்பொதி போல ஒன்று பறந்து வந்து என் முகத்தில் லேசாக உரசிக் கீழே விழுந்தது.

எங்கள் நிறுவனத்தில் மாதாந்த புதினப் பத்திரிகையை அசிரத்தையாக ஒரு நாள் தட்டிக் கொண்டிருந்தேன்.அதிலே அனாவின் படம் வெளியாகி இருந்தது. அதற்கு கீழே இப்படி போட்டிருந்தார்கள்.

பெண்கள் மறுவாழ்விற்காக இடையறாது பாடுபட்ட கியேவ் பெண்மணி, பத்து வருட காலமாக புற்று நோயுடன் போராடி இறுதியில் காலமானார். அவருடைய பெயர் அன்னலட்சுமி சேரகோவ்.

புலம் பெயர்ந்த ஈழ எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் மகாராஜாவின் இரயில் வண்டி என்ற சிறுகதை தொகுப்பிலிருந்து... நன்றி - எஸ். பாலபாரதி

கடந்த மாதம் சிட்னியின் போண்டாய் கடற்கரையில் உலகின் வெகுசில நகரங்களில் மட்டுமே நடைபெரும் "SCULPTURE BY THE SEA" என்கிற சிற்ப கண்காட்சியிலிருந்து திரும்பும் வழியில் பேருந்திலும், தொடர்வண்டியுலுமான பயன நேரத்தில் படித்த சிறுகதை இன்னமும் ஒரு கணத்த உணர்வை உள்ளுக்குள் மீட்டிக்கொண்டிருக்கிறது. அது எதனால் என்றுத் தெரியவில்லை.

12/05/2006

வேலியைத் தேடி - களவாடப்பட்ட சந்ததியினர்

1770 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவை "காப்டன் குக்" ஆக்கிரமித்தபொழுது 250,000லிருந்து 1 மில்லியன் வரை இருந்திருக்கலாம் என தோராயமாக கணக்கிடப்பட்ட பூர்வக்குடிகள் இன்று 400,000த்து சொச்சமாக இருக்கிறது. அடிப்படையில் எந்தவொரு முன்னேற்றமுமின்றி அவர்களது உரிமைகள் ஒட்டுமொத்தமாக பறிக்கப்பட்டும், இது நாள் வரை அரசாண்டு வருகின்ற வெள்ளைக்கார பேரினவாத அரசினால் சமநிலை குடிமக்கள் என்ற பெயரில் ஒடுக்கப்பட்டும் ஒதுக்கப்பட்டும் வாழ்க்கையை ஓட்டிவருகின்றனர் ஆஸ்திரேலியாவின் பூர்வகுடிகள். நியூசிலாந்தில் இருக்கும் மாவோரி பூர்வகுடிகளுக்கு கொடுக்கப்படும் உரிமையில் 20% கூட இங்கே இருக்கும் பூர்வக்குடிகளுக்கு அளிக்கப்படுவதில்லை என்பதும் எப்பொழுதெல்லாம் நியூசிலாந்தின் முதன்மை அமைச்சர் "ஹெலென்", மாவோரி பூர்வகுடிகளுக்கான சலுகைகள் அறிவிக்கிறாரோ அப்பொழுதெல்லாம் இங்கு இருக்கும் முதன்மை அமைச்சரவையில் முனுமுனுப்புகள் எழுவதும் வாடிக்கையாகி விட்டது. 2004 ஆம் ஆண்டின் "சிட்னி சமாதானப் பரிசு", இந்தியாவின் இடதுசாரி எழுத்தாளரான "அருந்ததி ராய்"க்கு வழங்கப்பட்டத் தொகையான் $ 50,000 த்தினை ஆஸ்திரேலிய பூர்வக்குடிகளுக்கான தொண்டு நிறுவனத்திற்கு அவர் அளித்த பொழுது "WE DONT NEED A PARIAH TO CALL US PARIAH" என்று சிட்னி மார்னிங் ஹெரால்டு தலையங்கம் எழுதியது.ஆனால் இன்றும் REDFERN ரயில் நிலையத்தின் வாசலில் இருக்க இடமின்றி குளிர்காலத்திலும் சாலையின் ஓரத்தில் நெருப்பு மூட்டி குளிர் போக்கும் நிலையிலும் $20க்கு கஞ்சா பொட்டலங்களை விற்றும் தான் அன்றாட வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர்.

1948ம் ஆண்டிலேயே தேசியக் குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட்டிருந்தாலும் 1968 வரையிலான காலம்வரை ஆஸ்திரேலியாவின் பூர்வீகக்குடிகளுக்கு ஓட்டுரிமை மறுக்கப்பட்டு வந்துள்ளது என்ற விடயம் திகைக்க வைக்கும் விடயமாகும். அதுமட்டுமன்றி இந்தகாலம் வரை இம்மக்கள் ஓட்டுரிமை என்று ஒன்று இருப்பதாகவே அறிந்திருக்கவில்லை. தெற்கு ஆஸ்திரேலியா, விக்டோரியா, நியூசவுத்வேல்ஸ் மாகாணங்களில் பரவலாக பூர்வீகக்குடிகள் தம் ஓட்டுரிமையை அவ்வெல்லையின் ஆளுகைக்குட்பட்ட அரசு பறித்திராவிட்டாலும், பூர்வீகக்குடிகளின் உரிமையை அவர்களுக்கு எடுத்துரைக்க தவறியது. இங்கே இப்படியென்றால் குயின்ஸ்லாந்து,வடக்கு மாகாணம், தாஸ்மேனியா, மேற்கு ஆஸ்திரேலிய மாநிலங்களில் பூர்வீகக்குடிகள் நாலாந்தரக் குடிமக்களாகவும், அடிமைகளாகவும் வலுக்கட்டாயமாக உரிமைகள் பறிக்கப்பட்டும் வந்துள்ளனர். மேலும் 1971ம் ஆண்டு வரை இம்மக்களை பரங்கித்தலை அரசாங்கமானது ஒரு மனித இனமாகவே அங்கீகரிக்காதது, அவர்களை ஆஸ்திரேலியாவின் சனத்தொகையின் அங்கமாக கணக்கெடுத்ததில்லை என்பதிலிருந்து அறிந்து கொள்ளலாம். இங்கிலாந்து அரசியின் அடிவருடி, அடிமையாகக் கருதப்பதும் ஆஸ்திரேலிய மக்கள் 1967ல் 90% அளவில் பூர்வீகக்குடிகளும் ஆஸ்திரேலியாவின் அங்கம் எனவும், அவர்களையும் சனத்தொகை கணக்கெடுப்பில் சேர்க்கப்படவேண்டும் என கருத்து தெரிவித்திருந்தாலும் 1971ல் தான் கும்பினிய அரசாங்கம் அதை செயல்படுத்தியது.


...இந்தியாவிலும் இது போன்ற அடக்குமுறைகள் பரங்கியரின் காலனியாதிக்க காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தாலும், இதிலும் பெரும்பாலும் விளிம்பு நிலையில் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட சமுதாயத்தினரே அடக்கியாளப்பட்டு வந்துள்ளனர் என்பதும் அதில் மறைந்துள்ள பார்ப்பனீய நுண்ணரசியலும் தெளிவாக நமக்கு விளங்கும். இந்தியாவின் பூர்வீகக்குடிகளாக அறியப்படுபவர்கள் பெருவாரியாக இருந்ததினாலேயே கும்பினியரும் சரி, அதற்கு முன் ஆண்டு வந்த இசுலாமியப் பேரரசர்களும் சரி அல்லது அதற்கு முன் மூடநம்பிக்கைகளின் பெயரிலும், தனது தரகு புத்தியினால் அதிகாரத்தை கைக்குள் கொண்டும் ஆரியப் பார்ப்பனர்கள் முழுவதுமான இனவொழிப்பை எற்படுத்த முயன்று அதில் தோல்வியைக் கண்டிருந்தனர். இந்தத் தோல்வியின் காரணத்தினாலேயே மனுவின் பெயரில் தேவ பாடையும், கற்பனையான வேத பாடங்களும் வருணாசிரம தர்மங்களும் உருவாக்கம் பெற்று இன்றுவரை ஒருசாராரின் உரிமைகள் ஆதிக்க சமுதாயத்தினரினால் ஒடுக்கப்பட்டவரின் உரிமைகள் மறுக்கப்பட்டே வந்திருக்கின்றன. இதன் சான்றுகளாகவே கீழ்வெண்மனிப் படுகொலையும், சிறுதொண்டமாதேவி பாலியல் வன்முறைகளும், பாப்பாரப்பட்டி,கீரிப்பட்டி ஓட்டுரிமை மறுப்பும் அரங்கேறி வந்துள்ளன...

1890 தொடங்கி 1970 வரையிலான காலகட்டங்களில் சற்றேறக்குறைய 110,000 பூர்வக்குடிகளின் குழந்தைகள் வலுக்கட்டாயமாக பெற்றோரிடமிருந்து பறிக்கப்பட்டும் கடத்தப்பட்டும் அவர்களுடைய மொழி, கலாச்சாரம் வாழ்வியல் முறை மரூக்கப்பட்டும் ஆங்கிலப்பேரினவாத அரசதிகாரிகளால் "பூர்வக்குடிகளின் குடியுரிமை பாதுகாப்புச் சட்டம்" என்ற பெயரில் மனவியல் வன்முறையைக் கையாண்டு இனவொழிப்பை நடத்திவந்துள்ளனர். இவ்வாறு நாடுகடத்தப்பட்ட குழந்தைகளில் பெரும்பாலோனோர் 5 வயதிற்கு உட்பட்டவராகவும் எஞ்சியவர் பால்மனம் மறவாக் குழந்தைகளும் தாம். இவ்வாறு கடத்தப்பட்ட குழந்தைகள் அவர்தம் பெற்றொரை எவ்விதத்திலும் சந்திக்கவோ தொடர்பு கொள்ளவோ முடியாது.இவ்வாறு கடத்தப்பட்டக் குழந்தைகள் பல்லாயிரக்கணக்கான மைல்கற்களுக்கு அப்பால் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இவர்களது மொழியும் கலாச்சாரமும் வாழ்வியல் முறையும் மறக்கடிக்கப்பட்டு ஆங்கில மொழியையும், கலாச்சாரத்தையும் திணிக்கப்பெற்றனர்.இந்தக் குழந்தைகள் (HALF CASTE) பெரும்பாலும் வெள்ளைகாரனின் குறியரிப்பில் பலியான பூர்வக்குடியைச் சேர்ந்த பெண்களுக்கும் பிறந்தவர் தாம். இவர்களில் வெள்ளைக்காரனின் நிறத்தையொட்டிய குழந்தைகள் நகரங்களில் உள்ள பள்ளிகட்கு அனுப்பி வெள்ளைக்காரர்களாகவே பாவிக்கப்பட்டனர்.எஞ்சிய பெரும்பாலானவர்கள் பணக்கார வெள்ளைக்காரனின் பண்ணையில் வேலை செய்வதற்காகவே உடலளவிலும் மனதளவிலும் தயாரிக்கப்பட்டனர். இவர்களை "களவாடப்பட்ட சந்ததியினர்" என்றழைக்கப்படுகிறார்கள். இவ்வாறு 1931ல் களவாடப்பட்ட மூன்று இளஞ்சிறுமிகளின் கதையை திரைப்படமாக எடுக்கப்பட்டது தான் "RABBIT PROOF FENCE".இது 2002 ஆம் ஆண்டு உலகளவில் திரைக்கு வந்தபோது தான் "களவாடப்பட்ட சந்ததியினர்"ன் அவலங்களும் வெளியுலகிற்கு எட்டியது. இந்த மூன்று சிறுமிகளில் ஒருவரான "மோலி க்ரைக்"ன் மகளான "டோரிஸ் பில்கிங்டன் கர்ரிமரா" எழுதிய நாவலின் அடிப்படையாகக் கொண்டு இயக்கப்பட்டது தான் இந்தத் திரைப்படம்.

இனி "RABBIT PROOF FENCE" செல்வோம் .

ஜிகலாங் என்னும் இடத்தில் "மோல்லி க்ரைக்"(13 வயது),"டெய்சி க்ரைக்"(5 வயது) இவர்களின் சின்னம்மாவின் மகளான "க்ரேசி ஃபீல்ட்ஸ்"(9 வயது) ஆகிய மூவரும் "கலப்பினமாக" அடையாளம் காணப்பட்டு வலுக்கட்டாயமாக 1500 மைல்கற்களுக்கு அப்பால் உள்ள "மூர் ரிவர்" பூர்வீகக்குடிகளின் முகாமிற்கு கடத்தப்படுகின்றனர். இம்முகாமில் நடக்கும் கெடுபிடிகளும் வாழ்க்கை முறையும் பிடிக்காத "மொல்லி" அங்கிருந்து தப்பிக்க திட்டமிட்டு தனது தங்கையையும், சின்னம்மாவின் மகளையும் தன்னோடு வருமாறு அழைக்கிறாள். இதில் "க்ரேஸி"க்கு உடன்பாடில்லாவிட்டலும் அரைமனதோடு முகாமிலிருந்து தப்பிக்க ஒத்துழைக்கிறாள். மூவரில் சகோதரிகள் இருவர் மட்டும் நம்பிக்கையிழக்காமல் 9 வாரங்கள் 1500 மைல்கற்களை நடந்தே கடந்து அவர்களுடைய பூர்விகமான "ஜிகலாங்"கிற்கு வந்து தமது அன்னையோடு தஞ்சமடைகின்றனர். இடையே "டெவில்" என்றழைக்கடும் மிஸ்டர் "னெவ்வில்"(பூர்வீகக் குடிகளின் மறுவாழ்வு புனரைப்பின் தலைவர்) அவர்களின் தந்திர சூழ்ச்சியால் "க்ரேஸி" மட்டும் பிரிக்கப்பட்டும் மீண்டும் "மூர் ரிவர்" முகாமிற்கு மீண்டும் கடத்தப்படுகிறாள். படத்தின் பிண்ணனி இசையும், தத்ரூபமான ஓளிஓவியமும் படத்தை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் பிரமிப்பை ஏற்படுத்தும். இந்த திரைப்படத்திலும் ஆஸ்திரேலியாவின் பல்வேறுபட்ட நிலவமைப்பினை அழகாகக் காட்டியுள்ளனர். மேலும் உண்மை நிகழ்வு என்று சொல்லப்படுவதால் "க்ரைக்" சகோதரிகளில் மூத்தவளான "மோல்லி"யின் பிரமிக்க வைக்கும் அறிவுத்திறனும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.



எவ்வித தடய அடையாளமுமின்றி தம்முடைய பூர்வீகமான "ஜிகலாங்"கின் வழியே செல்லும் "Rabbit Proof Fence"ஐத் தேடி அதில் வெற்றியுமடைந்து தமது பூர்வீகத்தை வந்தடைகின்றனர் "க்ரைக்" சகோதரிகள். வழியில் வனாந்திரத்தின் நடுவில் "வேலி" துண்டிக்கப்பட்டிருந்தலும் நிச்சயமாக மீண்டும் "வேலியை" அடைய முடியும் எங்கிற "மோல்லியின்" தன்னம்பிக்கை பிரமிக்க வைக்கிறது.





RABBIT-PROOF FENCE

Miramax Hanway and the Australian Film Corp.
A Rumbalara Films & Olsen Levy production
Producers: John Winter, Phillip Noyce, Christine Olsen
Director: Phillip Noyce
Executive producers: David Elfick, Jeremy Thomas, Kathleen McLaughlin
Screenwriter: Christine Olsen Based on the book "Follow the Rabbit-Proof Fence" by: Doris Pilkington Garimara
Director of photography: Christopher Doyle
Production designer/costume designer: Roger Ford
Editors: John Scott, Veronika Jenet
Color/stereo Cast:
Molly: Everlyn Sampi
Daisy: Tianna Sansbury
Gracie: Laura Monaghan
Mr. A.O. Neville: Kenneth Branagh
Moodoo: David Gulpilil
Maude: Ningali Lawford
Mavis: Deborah Mailman
Constable Riggs: Jason Clarke