12/13/2006

இராகு காலம் - நீங்களும் சொல்லுங்க

புலம் பெயர்ந்த ஈழ எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் மகாராஜாவின் இரயில் வண்டி என்ற சிறுகதை தொகுப்பிலிருந்து...

...ஆனால் வெகுகாலமாகியும் மாரியோவுக்குப் பிடிபடாத விஷயம் ஒன்று இருந்தது. அது தான் ராகு காலம்.

ஒரு நாள் பதட்டமாக வந்து சேர்ந்தான். டொன் அவனைக் கடுமையாகத் திட்டிவிட்டதாகச் சொன்னான்.காரணம் அவன் பத்து நிமிடகாலம் தாமதமாக வந்ததுதான். அன்று அவர் வெளிநாட்டுப் பயனத்திற்காக விமான நிலையம் செல்வதற்கு இருந்தார். அது ஒரு வெள்ளிக்கிழமை. பிளேன் பின்னேரம் இரண்டு மணிக்குத்தான் புறப்படுவதாக இருந்ததாம். டொன் என்றால் காலை பத்து மணிக்கு முன்பெ வீட்டை விட்டுக் கிளம்புவதற்குத் தயாராய் இருந்தார். அன்று பார்த்து மாரியோ லேட்டாக வந்ததால், ராகு காலம் தொடங்கிவிட்டதாக அவனைக் கண்டித்து,பயனத்தையே கான்ஸல் பண்ணிவிட்டார்.

ஓர் ஆப்பிரிக்க டிரைவருக்கு ராகு காலத்தின் சூட்சுமம் பற்றி விளக்குவது எவ்வளவு கடினம் என்பதைக் கற்பனை திறன் உள்ளவர்களிடம் விட்டுவிடுகிறேன்.மாரியோவின் முகத்தைப் பார்த்த பிறகு எப்படியும் இந்த ராகு கால மர்மத்தை இவனுக்குத் தெளிவுபடுத்த வேண்டுமென்று தீர்மானித்தேன்.

விஷ்ணு எப்படி மோகினியாக மாறி அமிர்தம் பங்கிட்டாரென்றும், அதை ராகு, தேவ உருவத்தில் பெற முயற்சித்தததையும், சூரிய சந்திரர் இதை அறிந்து விஷ்ணுவுக்குக் கோள் சொல்லியதால் ராகுவுக்கும் சூரிய சந்திரருக்கும் தீராப் பகை ஏற்பட்டதையும் விவரித்தேன். ராகுவின் பழி தீர்க்க்கும் படலம் இன்றும் தொடர்கிறது. சூரிய சந்திரர் இயக்கத்தில் பிறக்கும் ஒவ்வொரு நாளிலும் ஒரு சில மணி நேரங்களை ராகு பீடித்துக் கோள்கிறான். அதுதான் ராகு காலம், அந்தக் காலங்களில் என்ன செய்தாலும் அது உருப்படாது என்று விளக்கினேன்.


ஒரு சிறுபிள்ளையின் குதூகலம் அப்போது மாரியோவுக்கு ஏற்பட்டது.விளக்கம் இவ்வளவு சுலபமாக இருக்கும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை போலும். எந்த நாட்களீல் எவ்வளவு மணி நேரங்களை ராகு பாதிப்பான் என்று அவன் கேட்டதற்கும் என்னிடம் ஒரு சூத்திரம் தயாராக இருந்தது.

MOTHER SAW FATHER WEARING THE TURBAN SURELY .இந்த வசனத்தை அவனை மனப்பாடம் செய்ய வைத்தேன். இந்த ஏழு வார்த்தைகளும் ஏழு நாட்களை குறிக்கும். முதலாவது வார்த்தை MONDAY என்றால் இரண்டாவது வார்த்தை SATURDAY, மூன்றாவது FRIDAY. இப்படியே கடைசி வார்த்தை SUNDAYயை குறிக்கும். இந்த முறைப்படி முதலாம் நாள் இராகு காலம் ஏழரை முதல் ஒன்பது வரை நீடிக்கும்.ஒரண்டாம் நாள் ஒன்பது முதல் பத்தரை, மூன்றாம் நாள் பத்தரை முதல் பன்னிரண்டு இப்படியே விரியும் என்று விளக்கினேன். அவனும் புரிந்தது போல பெரிதாகத் தலையை ஆட்டினான்...

2 comments:

Anonymous said...

"திருநாள் சந்தடி வெயில் புழுதியில் விளையாடச் செல்லாமா"

:)

said...

தமிழில் கதைத்த :)) அனானிக்கு நன்றி!

****

ஐயா நல்ல உள்ளங்களே,

நான் ரசித்தது இராகு காலம் உருவான கதையை...மத்தபடி அந்த எழவையெல்லாம் பாத்துகிட்டு இருந்தா எந்த பேமானியும் யு எஸ் எம்பஸில நேர்முகக்காணல் ல பாஸ் பன்னியிருக்க முடியாது.

உங்களுக்கும் ஏதாவது சுவாரசியமான இராகுகால கதை தெரிந்தால் பகிர்ந்து கொள்ளவும்...திக காரங்க நெறையா கத சொல்லுவாங்க...ஆனா இது சம்மந்தமா நா கேட்டதில்ல.

பெருசுங்களும் சொல்லுவாங்க...யார்னா சொல்லுங்கப்பா...