10/25/2005

சாரு நிவேதிதா!


சாரு நிவேதிதா - இவருடைய எழுத்துக்களுடனான என்னுடைய அறிமுகம் மிகச் சிறியதே. முதன்முதலில் நான் சாருவின் "கோணல் பக்கங்கள்" சென்றது, அவர் இளையராசாவின் "திருவாசக இசைவடிவத்தின் மீதான விமரிசனத்தைப் படிக்க! படித்த மாத்தரத்தில் அவர் மீது எனக்கு ஒரு அருவருப்பான எண்ணம். இம்மாதிரியான மனிதர்களுக்கு இசைஞானமே கிடையாதா?(நான் என்னவோ பெரிய இசைக் கலைஞன் மாதிரி...)என்ற எண்ணமே என்னுள் எழுந்தது. அதன் பின் என்னுடைய மற்ற நண்பர்களுடனான பொதுப்படையான விமரிசனங்களை கேட்ட பொழுது மீண்டும் சென்று அந்தக் கட்டுரையைப் படித்தேன். இப்பொழுது நான் இசைஞானியின் ரசிகனாக அல்லாமல் ஒரு சராசரி மனிதனாக படித்துவிட்டு இசையை மெல்ல ஒடவிட்டேன்.அது ஒரு இரைச்சலாகவே எனக்கு தெரிந்தது.இளையராசாவின் ரசிகர்கள் என்னை மன்னிக்கவும்(நானும் இசைராசாவின் ரசிகன் தான்). பின்னர் அவ்வப்பொழுது "கோணல் பக்கங்கள்" செல்வதுண்டு(இப்பொழுது அடிக்கடி). சரி, இந்த மனிதர் யாரைத் தான் விட்டு வைத்திருக்கிறார் என்று பார்த்தால் எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கமலின் ரசிகன் என்று சொல்லிவிட்டு "விருமாண்டி" படத்தைப் பிடி பிடி என்று பிடித்திருக்கிரார்.நண்பர்கள் அனைவரையும் ஒரு வாரு வாரியிருக்கிறார்.
அவருடைய எழுத்துக்கள் மிக யதார்த்தமாக இருக்கிறது. எனக்கு என்னையே(என் மெய்) பார்ப்பதற்கான ஒரு வாய்ப்பு.என்னையே படிப்பதற்கான வாய்ப்பு.அவர் எழுத்துக்களைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த எண்ணமே இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு. ஆஹா, இப்படி எழுதுகிறரே ஒரு வார்த்தை பாராட்டலாம் என்றால், ஒரு விதமான பய ? உணர்வு...ஏனென்றால் அவரே சொல்லிவிட்டார், யாருக்கு வேணும் உன் பாராட்டு, மொதல்ல ஒசில படிக்கறத விட்டுட்டு பணம் கட்டிட்டு படி...அப்புறம் என்ன வேணும்னாலும் பாராட்டிக்கோ! அதுவும் சரிதான்! மிக சொற்பமான அளவே, அவருடைய எழுதுக்கள் பண மதிப்பு மிக்கவை என்று எண்ணுகிறார்கள். மற்றவர்கள் என்னை போல் ஒரு இலவச விரும்பியாகவே இருக்கிறார்கள். அதனாலேயே அவருக்கு நான் இதுவரை ஒரு பாராட்டு மின்னஞ்சல் கூட அனுப்பியதில்லை. மிகவிரைவில் அனுப்புவேன் என்னுடைய பங்களிப்பை! இதழியலுக்காண கட்டணத்தை!(பிறகு என் விமரிசனத்தையும்)...இதை எழுத கூட எனக்கு மனதல்லவே...ஆனாலும் இங்கே சொல்லுவார்கள்...If you want to appreciate someone, do it at that moment itself because Time Passes by, People do change and make mistakes!மேலும், பலர் சாருவை கொத்து கறி போட்டு விற்றுக் கொண்டிருக்கிறார்கள். அதற்கான ஒரு பதிலாகவே இதைக் கருதுகிறேன்.


நிழற்பட ஆதாரம் கோணல் பக்கங்கள்!

10/13/2005

தமிழ்மணத்தில் பதிந்துவிட்டேன்!

தமிழ்மணத்தில் பதிந்து விட்டேன், ஆனால் என்னுடைய வலைப்பூ தமிழ்மணம் தலைவாசலில் வெளியிடப்படவில்லை. ஏன் என்றும் தெரியவில்லை. புகார் கூறவும் விருப்பம் இல்லை. இன்னும் ஒரு இருபத்திநாண்கு மணி நேரம் காத்திருக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். நாளை மீண்டும் முயற்சி செய்கிறேன். கண்கள் அசதியாக உள்ளது, உறங்கலாமாவென உள்மனம் ஏங்குகிறது. ஆனால் நாளை நடக்கவிருக்கும் பேராசிரியருடனான சந்திப்பை நினைத்தால் இமை மூட மறுக்கிறது. அப்படியே கொஞ்சம் " ஆட்டோகேட்" ஐ திறக்கிறேன்.

10/08/2005

நாய் வாலை நிமிர்த்த முடியுமா?

தமிழ்மணத்தில் பதிய வேண்டுமானால் மூன்று பதிவுகள் போட வேண்டுமாம். சரி, குஷ்பு விவகாரம் பற்றி பதியலாம் என்றால்...பாவம்டா...பெண் பாவம் பொல்லாதது என்று உள்மனது சொல்கிறது. சரி என்று வலைப்பூக்களை நோண்டினால் ஆளாளுக்கு இன்னமும் எதிர்த்தும் ஆதரித்தும் பேசிக் கொண்டு இருக்கிறார்கள்...நான் எழுதினேன் என்றால் கண்டிப்பாக எதிர்த்து தான் எழுதியிருப்பேன். ஏன் என்றால் நான் ஒரு ஆணாதிக்கவாதி.உதாரணம் இங்கே!அசை போடுவதற்கு நமக்கு சிறிது அவல் கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருந்த போது, கவலைப்படாதே சகோதரா, நான் இருக்கிறேன் என்று ஒரு குரல். எங்கேயோ கேட்ட குரல் மாதிரி இருக்கிறதே என்று திரும்பிப் பார்த்தால், உங்களை மாதிரி ஆட்கள் வலைப்பதிவுகள் போட்டுத் தாக்கிக் கொள்வதற்கு நாங்கள் இருக்கிறோம் என்றபடி நம்ம தமாசு நடிகர் வந்து நிற்கிறார்.
நம்ம தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் நாங்கள் தான் இந்தியாவின் மிகச் சிறந்த காமெடியன்கள் என்று சொன்னால், நம்மூர் நடிகர்கள் ஒரு படி மேலே சென்று உங்களுக்கு சற்றும் சளைத்தவர்களல்ல என்று அரசியல்வாதிகளுக்கு அவ்வப்போது நினைவூட்டுகிறார்கள். கொஞ்ச நாள் அவர்களுடைய பெயர் ஊடகங்களில் அடிபடவில்லை என்றால் அவர்களுக்குத் தூக்கமே வராது போலிருக்கிறது. அப்படிபட்ட ஒருவர் தான் நமது தமாசு நடிகர் மற்றும் காமெடி அரசியல்வாதி எஸ்.எஸ்.சந்திரன். மிகச் சிறந்த பகுத்தறிவாளர் ஆயிற்றே அவர், அதுவும் தி.மு.க வின் பாசறையில் வளர்ந்து, அம்மாவின் உறை(ரை)வாளா(லா)க இருக்கும் வீரப் பூனை ஆயிற்றே.

கருனாநிதியால் தொடங்கப் பெற்ற அல்லது திறக்கப் பெற்ற திட்டங்கள் என்பதாலேயே வள்ளுவர் கோட்டம், காவேரி பூம்பட்டினம் மற்றும் கன்னியாகுமரியில் உள்ள வள்ளுவர் சிற்பம் ஆகியவை சரியாக பராமரிக்கப் படாமல் இருந்து வருகிறது.அதேப் போன்று தான் நம்ம தமாசு நடிகரின் சமீபத்திய மேடைப் பேச்சும் உள்ளது.அவர் பேசிய பேச்சுப் பின்வருமாறு:"கன்னியாகுமரியில் இடுப்பை வளைச்சுக்கிட்டு திருவள்ளுவர் சிலை இருக்கு. அந்த சிலையை பார்க்கிற வெளிநாட்டுக்காரன், "இதென்ன அனுமார் சிலையா? வாலைக் காணோமே என்று கேட்பான்."
ஆதாரம்
எனக்குப் புரியாதது எல்லாம், அவர் உலகப் பொதுமறையை இயற்றிய "வான் புகழ் வள்ளுவன்" ஐ அவமதித்தாரா அல்லது இந்துக்கள் தெய்வமாக வழிபடும் "சிரஞ்சீவி மலை ஏந்திய அனுமார்" ஐ குரங்கு என்று பகுத்தறிந்து உளரினாரா என்பது தான்.இந்தியக் குடியரசில் அனைவருக்கும் கருத்துச் சுதந்திரம். வாழ்க சனநாயகம்!