10/08/2005

நாய் வாலை நிமிர்த்த முடியுமா?

தமிழ்மணத்தில் பதிய வேண்டுமானால் மூன்று பதிவுகள் போட வேண்டுமாம். சரி, குஷ்பு விவகாரம் பற்றி பதியலாம் என்றால்...பாவம்டா...பெண் பாவம் பொல்லாதது என்று உள்மனது சொல்கிறது. சரி என்று வலைப்பூக்களை நோண்டினால் ஆளாளுக்கு இன்னமும் எதிர்த்தும் ஆதரித்தும் பேசிக் கொண்டு இருக்கிறார்கள்...நான் எழுதினேன் என்றால் கண்டிப்பாக எதிர்த்து தான் எழுதியிருப்பேன். ஏன் என்றால் நான் ஒரு ஆணாதிக்கவாதி.உதாரணம் இங்கே!அசை போடுவதற்கு நமக்கு சிறிது அவல் கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருந்த போது, கவலைப்படாதே சகோதரா, நான் இருக்கிறேன் என்று ஒரு குரல். எங்கேயோ கேட்ட குரல் மாதிரி இருக்கிறதே என்று திரும்பிப் பார்த்தால், உங்களை மாதிரி ஆட்கள் வலைப்பதிவுகள் போட்டுத் தாக்கிக் கொள்வதற்கு நாங்கள் இருக்கிறோம் என்றபடி நம்ம தமாசு நடிகர் வந்து நிற்கிறார்.
நம்ம தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் நாங்கள் தான் இந்தியாவின் மிகச் சிறந்த காமெடியன்கள் என்று சொன்னால், நம்மூர் நடிகர்கள் ஒரு படி மேலே சென்று உங்களுக்கு சற்றும் சளைத்தவர்களல்ல என்று அரசியல்வாதிகளுக்கு அவ்வப்போது நினைவூட்டுகிறார்கள். கொஞ்ச நாள் அவர்களுடைய பெயர் ஊடகங்களில் அடிபடவில்லை என்றால் அவர்களுக்குத் தூக்கமே வராது போலிருக்கிறது. அப்படிபட்ட ஒருவர் தான் நமது தமாசு நடிகர் மற்றும் காமெடி அரசியல்வாதி எஸ்.எஸ்.சந்திரன். மிகச் சிறந்த பகுத்தறிவாளர் ஆயிற்றே அவர், அதுவும் தி.மு.க வின் பாசறையில் வளர்ந்து, அம்மாவின் உறை(ரை)வாளா(லா)க இருக்கும் வீரப் பூனை ஆயிற்றே.

கருனாநிதியால் தொடங்கப் பெற்ற அல்லது திறக்கப் பெற்ற திட்டங்கள் என்பதாலேயே வள்ளுவர் கோட்டம், காவேரி பூம்பட்டினம் மற்றும் கன்னியாகுமரியில் உள்ள வள்ளுவர் சிற்பம் ஆகியவை சரியாக பராமரிக்கப் படாமல் இருந்து வருகிறது.அதேப் போன்று தான் நம்ம தமாசு நடிகரின் சமீபத்திய மேடைப் பேச்சும் உள்ளது.அவர் பேசிய பேச்சுப் பின்வருமாறு:"கன்னியாகுமரியில் இடுப்பை வளைச்சுக்கிட்டு திருவள்ளுவர் சிலை இருக்கு. அந்த சிலையை பார்க்கிற வெளிநாட்டுக்காரன், "இதென்ன அனுமார் சிலையா? வாலைக் காணோமே என்று கேட்பான்."
ஆதாரம்
எனக்குப் புரியாதது எல்லாம், அவர் உலகப் பொதுமறையை இயற்றிய "வான் புகழ் வள்ளுவன்" ஐ அவமதித்தாரா அல்லது இந்துக்கள் தெய்வமாக வழிபடும் "சிரஞ்சீவி மலை ஏந்திய அனுமார்" ஐ குரங்கு என்று பகுத்தறிந்து உளரினாரா என்பது தான்.இந்தியக் குடியரசில் அனைவருக்கும் கருத்துச் சுதந்திரம். வாழ்க சனநாயகம்!

4 comments:

said...

அப்படியே தமிழ்மணத்தில் இணைந்து விடுங்கள்.

said...

எஸ்.எஸ். சந்திரன்லாம் ஒரு ஆளு.... அவன் பேச்சையும் மக்கள் கேட்பாங்கனு கூட்டத்துக்கு அவனை கூப்பிடுறாங்க..

என்ன பண்ண.. தமிழ் மக்களுக்கு கலாசாரம் தான் பெரிது.. வேறெதுவுமில்ல....

செந்தில் @ http://yaathirigan.blogspot.com

said...

சகோ, தமிழ்மணத்தில் பதிந்துவிட்டேன். ஆனால், என் வலைப்பூ வெளியிடப்படவில்லை! தங்கள் ஆதரவிற்கு நன்றி!

செந்தில், தங்கள் வருகைக்கு நன்றி!அடிக்கடி வாங்க

said...

செந்தில்,
//என்ன பண்ண.. தமிழ் மக்களுக்கு கலாசாரம் தான் பெரிது.. வேறெதுவுமில்ல....//

இங்கே எங்கே ஐயா கலாச்சாரம் வந்தது. சற்றே விளக்க இயலுமா?