10/13/2005

தமிழ்மணத்தில் பதிந்துவிட்டேன்!

தமிழ்மணத்தில் பதிந்து விட்டேன், ஆனால் என்னுடைய வலைப்பூ தமிழ்மணம் தலைவாசலில் வெளியிடப்படவில்லை. ஏன் என்றும் தெரியவில்லை. புகார் கூறவும் விருப்பம் இல்லை. இன்னும் ஒரு இருபத்திநாண்கு மணி நேரம் காத்திருக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். நாளை மீண்டும் முயற்சி செய்கிறேன். கண்கள் அசதியாக உள்ளது, உறங்கலாமாவென உள்மனம் ஏங்குகிறது. ஆனால் நாளை நடக்கவிருக்கும் பேராசிரியருடனான சந்திப்பை நினைத்தால் இமை மூட மறுக்கிறது. அப்படியே கொஞ்சம் " ஆட்டோகேட்" ஐ திறக்கிறேன்.

1 comments:

said...

சத்யா,

உங்களுடைய பதிவை தமிழ்மணத்தில் இன்னொரு தடவை இணைத்துக் கொள்கிறீர்களா(முடியுமென்றால்/விருப்பமென்றால்).

என்ன பிரச்சினையென்று பார்க்க முடியும்.

-மதி
-தமிழ்மணம் நிர்வாகிகள் சார்பாக -

பி.கு.: வார இறுதியென்பதால் வீட்டில் இல்லை. மன்றத்தின் நுழைவுச் சொல் மறந்துவிட்டது. ஆகையால் இங்கே எழுதுகிறேன்.