10/25/2005

சாரு நிவேதிதா!


சாரு நிவேதிதா - இவருடைய எழுத்துக்களுடனான என்னுடைய அறிமுகம் மிகச் சிறியதே. முதன்முதலில் நான் சாருவின் "கோணல் பக்கங்கள்" சென்றது, அவர் இளையராசாவின் "திருவாசக இசைவடிவத்தின் மீதான விமரிசனத்தைப் படிக்க! படித்த மாத்தரத்தில் அவர் மீது எனக்கு ஒரு அருவருப்பான எண்ணம். இம்மாதிரியான மனிதர்களுக்கு இசைஞானமே கிடையாதா?(நான் என்னவோ பெரிய இசைக் கலைஞன் மாதிரி...)என்ற எண்ணமே என்னுள் எழுந்தது. அதன் பின் என்னுடைய மற்ற நண்பர்களுடனான பொதுப்படையான விமரிசனங்களை கேட்ட பொழுது மீண்டும் சென்று அந்தக் கட்டுரையைப் படித்தேன். இப்பொழுது நான் இசைஞானியின் ரசிகனாக அல்லாமல் ஒரு சராசரி மனிதனாக படித்துவிட்டு இசையை மெல்ல ஒடவிட்டேன்.அது ஒரு இரைச்சலாகவே எனக்கு தெரிந்தது.இளையராசாவின் ரசிகர்கள் என்னை மன்னிக்கவும்(நானும் இசைராசாவின் ரசிகன் தான்). பின்னர் அவ்வப்பொழுது "கோணல் பக்கங்கள்" செல்வதுண்டு(இப்பொழுது அடிக்கடி). சரி, இந்த மனிதர் யாரைத் தான் விட்டு வைத்திருக்கிறார் என்று பார்த்தால் எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கமலின் ரசிகன் என்று சொல்லிவிட்டு "விருமாண்டி" படத்தைப் பிடி பிடி என்று பிடித்திருக்கிரார்.நண்பர்கள் அனைவரையும் ஒரு வாரு வாரியிருக்கிறார்.
அவருடைய எழுத்துக்கள் மிக யதார்த்தமாக இருக்கிறது. எனக்கு என்னையே(என் மெய்) பார்ப்பதற்கான ஒரு வாய்ப்பு.என்னையே படிப்பதற்கான வாய்ப்பு.அவர் எழுத்துக்களைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த எண்ணமே இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு. ஆஹா, இப்படி எழுதுகிறரே ஒரு வார்த்தை பாராட்டலாம் என்றால், ஒரு விதமான பய ? உணர்வு...ஏனென்றால் அவரே சொல்லிவிட்டார், யாருக்கு வேணும் உன் பாராட்டு, மொதல்ல ஒசில படிக்கறத விட்டுட்டு பணம் கட்டிட்டு படி...அப்புறம் என்ன வேணும்னாலும் பாராட்டிக்கோ! அதுவும் சரிதான்! மிக சொற்பமான அளவே, அவருடைய எழுதுக்கள் பண மதிப்பு மிக்கவை என்று எண்ணுகிறார்கள். மற்றவர்கள் என்னை போல் ஒரு இலவச விரும்பியாகவே இருக்கிறார்கள். அதனாலேயே அவருக்கு நான் இதுவரை ஒரு பாராட்டு மின்னஞ்சல் கூட அனுப்பியதில்லை. மிகவிரைவில் அனுப்புவேன் என்னுடைய பங்களிப்பை! இதழியலுக்காண கட்டணத்தை!(பிறகு என் விமரிசனத்தையும்)...இதை எழுத கூட எனக்கு மனதல்லவே...ஆனாலும் இங்கே சொல்லுவார்கள்...If you want to appreciate someone, do it at that moment itself because Time Passes by, People do change and make mistakes!மேலும், பலர் சாருவை கொத்து கறி போட்டு விற்றுக் கொண்டிருக்கிறார்கள். அதற்கான ஒரு பதிலாகவே இதைக் கருதுகிறேன்.


நிழற்பட ஆதாரம் கோணல் பக்கங்கள்!

6 comments:

said...

நல்ல பதிவு சத்யா !!

எனக்கும் சாரு நிவேதிதா பற்றிய கலந்து பட்ட அபிப்ராயங்கள் உண்டு.

அவரது கருத்துக்களில் அவ்வளவு ஒப்புதல் இல்லையென்றாலும் அவ்வப்போது கோணல் பக்கங்களை எட்டிப்பார்ப்பதுண்டு.

said...

சாருவை பின்னி பெடல் எடுத்திருக்கிறீர்கள்.

said...

வணக்கம் சத்யா,
சாருவைப்பற்றிய சிறுகுறிப்பு இங்கே...

http://kuzhali.blogspot.com/2005/03/charunivedhitha-intro.html

இது வரை எனக்கு சாருவைப் பற்றி மிக உயர்ந்த அபிப்பிராயமே உள்ளது.

said...

saruvaip pattriya kurippugal nalla irukkuthu.
nanri

said...

ரொம்ப நாளைக்கு பிறகு பொட்டீக்கடைப் பக்கம் எட்டிப் பார்த்த சகோ சுரேசு மற்றும் குழலிக்கு நன்றிகள்.
வணக்கம் குழலி, உங்கள் பதிவையும் படித்தேன்.
short & sweet :))
மூர்த்தி, வாங்க...வாங்க...கடையான்ட வந்ததுக்கு தாங்க்ஸ்!
//சாருவை பின்னி பெடல் எடுத்திருக்கிறீர்கள்.//
சாருவை எங்கே பின்னி பெடல் எடுத்திருக்கிறேன்?
நிலவு நண்பன், உங்களுக்கும் நன்றி.
உங்களுடைய "ஒரு நிலாக்கால கல்லூரி பேருந்துப் பயணம்" ரசித்திருக்கிரேன்.

said...

குழலி, எனக்கும் சாருவைப் பற்றி மிக உயர்ந்த அபிப்பிராயமே உள்ளது.