11/25/2005

படமும், செய்தியும்!


எல்லோரும் படம் போடறாங்களே, நாமளும் கொஞ்சம் படம் காட்டலாம்னு தோணிச்சு. அதான் சந்துல "சிந்து" பாடிட்டேன்! அப்புறம் இன்னொறு விசயம்...இந்த மாதிரி நிறைய பேர் இருக்காங்க.இவர் கொஞ்சம் பிரபலமானவர் என்பதால் உலகறிய தன் ஆண் நண்பரை கரம் பிடிக்கிறார். நம்மூரிலும் பல ஜோடிகள் திருமணத்திற்காக காத்துக் கிடக்கின்றார்கள்.

இங்கு சமபாலுறவுத் திருமணம் சரியா, தவறா என்ற விவாதத்தை நான் முன்னிருத்தவில்லை. பல மனிதர்கள் பெண்கள் மேல் ஜொள்ளும், ல்வ்வும் விடுவது போல் சில மனிதர்கள் ஆண்கள் மேல் ஜொள்ளும், லவ்வும் விடுகிறார்கள். இதில் கூச்சப்படவோ, அருவருக்கதக்கவோ எதுவும் இல்லை. வாழ்க காதல், வளர்க காதல் திருமணங்கள்! :)


  • படமும், செய்தியும்!
  • 3 comments:

    said...

    yess!
    May they have a happpppy life!
    ஓரினச்சேர்க்கை என்ற சொல்லைப் பாவித்ததற்கு 'சமபாலுறவாளர்கள்' என்ற சொல்லை நண்பர் சுந்தரவடிவேல் பரிந்துரைத்தார். அந்தச் சொல் இந்த இடத்தில் இன்னும் பொருத்தமாய் இருக்கும்!

    said...

    ஒரு பொடிச்சி,
    சுட்டிக் காட்டியதற்கு நன்றி!
    No offences mate!
    மாற்றிவிட்டேன்! உண்மையிலேயே அருமையான தமிழாக்கம்!

    said...

    சென்ற செவ்வாய்கிழமை நண்பர் ஒருவரை விமானநிலயத்தில் விடச்சென்றபோது.. இரு ஆண் நண்பர்கள் கட்டியணைத்துக்கொண்டு முத்தமிட்டதைக்கண்டதும்.. பயங்கர அதிர்ச்சிதான் எனக்கு.. என்னதான் கேள்விப்பட்டிருந்தாலும்.. நேரில், பொது இடத்தில் காணயில் எதிர்கொள்ள இயலவில்லை..

    சில விஷயங்கள் சரியாக சிறுவயதில் போதிக்கப்பட்டால் அவர்கள் சமூகமாகும் போது சரியாய்போகும் என்பது இதுதானா...

    -
    செந்தில்/Senthil