11/27/2006

இருவீடு ஒருவாசல்


நமது முன்னோர்கள் ஆசியாவிலிருந்து படகு மூலமாகவோ, இன்று கடலில் மூழ்கடிக்கப்பட்ட தரைப்பாலம் வழியாகவோ ஆஸ்திரேலியாவிற்கு புலம் பெயர்ந்திருக்கலாம் என்று இன்றைய நாகரீக மக்கள் கதைக்கும் வேலையில், நம்முடைய முகவமைப்பு தென்னிந்தியாவின் தென்கோடியில் வாழும் பூர்வகுடிகள் சிலரைப் போலவும்,இந்தோனேசியாவில் இருக்கும் "செலிபிஸ்" மலைவாழ் பூர்வக்குடிகள் போலவும் மானிடவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்ற வேளையில், நாம் அதைப்பற்றி கதைக்காமல் அதை அவர் வழியில் ஆராயவிடுவோம்.

உண்மையில், "ரிறாத்ஜிங்கு"- எம்மின மக்கள் தொலைதூரத்திற்கு அப்பால் ஏதோ ஒரு கடல்பரப்பின் "பரால்க்கு" தீவிலிருந்தே எமது முன்னோர் "ட்ஜன்காவு" அவருடைய இரு தமக்கைகளோடு அதிகாலை நட்சத்திரத்தைத் தொடர்ந்து "ஆற்னெம்" கிழக்குக்கரையின் "ஏலங்காரா"வின் கரைகளை கிழக்குக்கரையின் படகின் மூலம் வந்தடந்திருக்கலாம் என அறிகிறோம். எம்மின மக்கள் இறக்கும்போது அவர்களுடைய ஆவிகள் எமது பூர்விக "பரால்க்கு" தீவைச் சென்றடையும்...

-Jennifer Isaacs
Australian Dreaming
40,000 years of aboriginal history.


*****
மனிதனுக்கு வெறுப்பும், பழிவாங்கும் உணர்வும் மேலோங்கிவிட்டால் அவன் அதற்காக எவ்விதமான செயலும் எவ்விதமான பயனங்களும் மேற்கொள்ளுவான். ரொட்டித்திருடர்களையும், பொட்டித்திருடர்களையும் தண்டிக்கும் பொருட்டு ஆஸ்திரேலியா வந்த பரங்கித் தலையர்கள் இங்கிருந்த கனிமவளங்களைக் கண்டு இங்கேயே கூடாரமிட்டனர். அத்தோடில்லாமல் இங்கிருந்த பூர்வக்குடிகளையும் அழித்து தம் ஏகாதிபத்தியத்தை நிலைநாட்டினர். இன்றும் கூட "வருந்தும் நாள்" என்று கைகுலுக்கும் நாளை பரங்கியர்கள் கொண்டாடினாலும் பூர்வ குடிகள் என்றும் "black fellas்" தான்.

பூர்வக்குடிகளின் சிலர் மனிதனின் ஆறறிவோடு மிருகத்திற்கு ஒப்பான அபூர்வமான மோப்பம் பிடிக்கும் திறனையும், அவர்களின் வாழ்வியல் நிலமான செம்மலை பூமியையும் அதன் சார்ந்த இடங்களையும் நன்றாகவே அறிந்திருந்தனர். இதனால் பிராதான நிலப்பகுதியில் சிறுதவறுகளைப் புரிந்து செம்மலை பூமியில் அடைக்கலமாகும் பூர்வக்குடியினரை சிற பிடிக்க இவ்விதமான அபூர்வத்திறனைக் கொண்ட இன்னுமொரு பூர்வக்குடியானவனையே தேர்ந்தெடுத்தனர். அதைப் போன்றதொரு "தடயவியலாளன்"ஐப் பற்றியதொரு திரைப்படம் தான் "The tracker".

மிகவும் சிறப்பான காட்சியமைப்புகளும், பூர்வக்குடிகளின் ஓவியக்கலை மற்றும் நாட்டியக்கலைகளையும், ஆஸ்திரேலியாவின் செம்மன் மலைப் பிரதேசங்களை மிகத் தத்ரூபாமாக படம்பிடித்த விதமும், பரங்கித்தலையர்களின் இனவெறுப்பும் அவர்களின் நிற ஏகதிபத்தியத்தை நிலைநாட்ட அவர்கள் நடத்திய முழுவதுமான இனவொழிப்பையும், பூர்வக்குடிகளின் கூட்டுவாழ்க்கை குடும்ப முறைகளையும் அவர்களின் நீதி வழங்கும் முறையையும் அருமையாக விளக்கிய திரைப்படம். பொதுவாக ஆஸ்திரேலிய திரைப்படங்கள் உலகளாவிய முக்கியத்துவம் பெறாவிட்டாலும் இதைப்போன்றதொரு சிறப்பான திரைப்படங்களும் அவ்வப்போது வந்துக் கொண்டுதானிருக்கின்றன.

இப்படத்தின் நாயகனாக வரும் தடவியலாளன் "கல்பிலில்" ஆஸ்திரேலியாவின் பூர்வக்குடிகளின் "தலைமகனாக"க் கருதப்படுபவர். இவரும் பூர்வக்குடியானாக இருப்பதாலோ என்னவோ அவருடைய நடிப்பும், உணர்ச்சிகளை வெளிப்படுத்திய விதமும் நம்மை 1922க்கே அழத்துச் செல்கின்றன. குற்றஞ்சாட்டப்பட்ட சக பூர்வக்குடியைத் தேடிச் செல்லும்போது நிறவெறி, இனவெறி பிடித்த பரங்கிய காவல்துறைத் தலைவன் வழியெங்கிலும் வன்முறையைக் கையான்டு பூர்வக்குடிகளின் உயிரைக் கொன்று சிதைக்கும் வலியைப் புன்னகையோடேந்தி அவனுடைய வழியிலேயே அவனுக்கு இறுதி தீர்ப்பை வாசிக்கும் பொழுது "கல்பிலில்" நமது மனதில் நிற்கிறார்.

*****

இன்றைய நுட்பம் சார்ந்த நாகரீக உலகில் இணையமும், இணைய அளாவல்களும் இன்றியமையா இடத்தை அடைகின்ற வேளையில் இணையம் சார்ந்த ஊடகங்களும் வலுப்பெறுகின்றன. அதனூடே ஊடகம் சார்ந்த வன்முறைகளும் பெருகிக் கொண்டுதான் இருக்கிறது. மனிதனில் மூலை ஒரு நகரை நிர்மானிக்கும் அறிவைப்பேற்றிருந்த போதிலும் அதே அறிவு அந்நகரை அழிக்கும் அணுகுண்டு போன்ற பேரழிவுமிக்க ஆயுதங்களையும் உருவாக்கியது. ஆக மிருகம் கூட பசியெடுத்தால் தான் வேட்டையாடும் என்றிருக்கையில் மனிதனின் பழிவாங்கும் போக்கும் அவன் தம் சாதி/மதத்தின் மேல் கொண்டுள்ள பற்றுதல்களும் அவனை உலகின் எவ்விதமான உயிரினங்களொடு ஒப்பிட இயலாத அளவிற்கு அவனுடைய நுண்ணறிவு வன்முறை அளவுகடந்து நிரம்பி வழிகின்றது.

இன்று நாமும் வலைப்பதிகிறோம். ஒருவர் ஒன்றொ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வலைப்பதிவுகளையோ சொந்தப் பெயரிலோ அல்லது புனைப்பெயரிலோ அல்லது பெயர் மாற்றியோ எழுதிக்கொண்டு தான் வருகிறோம். அது அவரவர் கருத்து மட்டுமல்லாமல் கட்டிவைத்த அல்லது ஏற்றிவிடப்பட்ட பிம்பத்தை பொறுத்தது. ஒரு சிலர் நேரங்காலம் தெரியாமல் ஒரேபதிவில் அவர் அறியாமலே இன்னொரு "குசும்பு" பெயரில் பின்னூட்டி சந்து முதல் சந்தி சிரித்த அவலங்களும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றது. மற்றுமொரு கூட்டம் நட்புவட்டத்தின் பெயரை குலுக்கிப் போட்டும் இன்னொறுவரின் சொந்த வாழ்க்கையின் நிகழ்வுகளை சுருட்டி தனிப்பதிவில் அரங்கேற்றும் அவலங்களும் நடந்துக் கொண்டுதானிருக்கிறது. இதன் மூலம் சந்தி தம்மினம் சந்தி சிரிப்பதாத ஆழ்ந்த மனம் பிறழ்ந்த "கொலைப்பதிவர்" ஒருவர் எப்படியாவது தம்மின மக்களை காக்கும் பொருட்டு ஒரு "நாங்கு வரி" அவதார புருஷனாக முயற்சி செய்கையில் ஏழுகடல் தாண்டி வந்த அறிவுரையின் படி வலைபதிவர் அனைவருக்கும் இக்"கொலைபதிவர்" ஒரு மின்னஞ்சல் அனுப்பி தன் "நாய்" போன்ற மோப்ப சக்தியை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். இக்கொலைபதிவர் பல்வேறு காலகட்டங்களில் தர்ம அடி வாங்கி அமுக்கி வாசித்தவர் இப்போதும் தன் "ஜென்ம புத்தி"யை (நன்றி:மாயவரத்தான்) காட்டி தம்மினத்தை காக்க அவதாரம் எடுத்துள்ளார். இப்போது அவர் வெறும் "ஹின்ட்" மட்டும் கொடுத்து ஏற்கனவே டவுசர் கிழிந்து போன ஒரு டவுசர் பான்டியை வைத்து எழுத விடுகிறவர். இதை அவர் புத்திசாலித் தனமாக நினைத்து செய்வதாக நினைத்தாலும் இவர்கள் அழிக்க நினைக்கிற இன்னொரு கூட்டம் மற்றுமொரு நுண்ணறிவு தாக்குதலுக்கு தயாராகிவிட்டதாகவேத் தெரிகிறது.

கீழே வருவது அவருடைய "கூகிள்" தேடலின் அறிவால் வந்த "நுட்பறிவு"...

What is ReadNotify?

ReadNotify is the most powerful and reliable email tracking service that exists today. In short - ReadNotify tells you when email you sent gets read / re-opened / forwarded and so much more

How do I send a tracked email?

There are two ways you can send tracked emails:

  1. Simply add: .readnotify.com to the end of your recipients email address (they won't see this)
    or
  2. Install our ActiveTracker plugin to add the tracking for you.

Testing? If you send tracked emails to yourself, your anti-spam filters may block them (people don't usually write to themselves) - so we recommend you test by sending to other people.

What will you tell me about the tracked emails I send?

ReadNotify will endeavour to provide the following in your tracking reports:

  • Date and time opened
  • Location of recipient (per their ISP city /town)
  • Map of location (available on paid subscriptions)
  • Recipients IP address
  • Apparent email address of opening (if available)
  • Referrer details (ie; if accessed via web mail etc)
  • URL clicks
  • How long the email was read for
  • How many times your email was opened
  • If your email was forwarded, or opened on a different computer
All messages sent via ReadNotify benefit from our SPF compliant and Sender-ID compliant mail servers. This confirms safe transmission of your messages, and also enables us to report delivery status to you (including: bounce-backs, delays and success notifications). Delivery information is listed in your Personal Tracking Page.

Try hovering your mouse over the sections in our Live Sample Receipt for more information.

Note: ReadNotify.com does not use or contain any sp‌y-ware, ma‌l-ware, nor vi‌rues, it is not ill‌egal to use, and does not breach any pri‌vacy reg‌ulations in any countries.

11/14/2006



அதிகாரத்தைப் பகிர்வதில்
போராளி போரிடுவதில்லை
உரிமையை நிலைநாட்டவும்
சுயமரியாதையைக் காக்கவுமே
போரிடுகிறான்


அதிகாரவர்க்கத்தையும்
ஏகாதிபத்தியத்திமிரையும்
ஆணவத்தனத்தையும்
அசைக்கலாம்
ஆண்மையோடு வா

11/08/2006

Mayors Design Forum

நம்மூரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசானதும், அதன் உறுப்பினர்களும் நடந்து கொள்ளும் முறையானது "கொட்டை" எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதாயிருப்பினும் அவர்களுடைய மக்களுக்கான பங்களிப்பு மத்திய அரசினாலும், மாநில அரசினாலும் கொடுக்கப்படுகின்ற நிதியானது அவ்வுறுப்பினர்களின் சொந்தத் தேவையை நிவர்த்தியபின் மிச்சமாகும் எச்சமே. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்காவது பெரியதொரு தொகுதி?!, அவர்களுடைய ஐந்தாண்டு கால நாடாளுமன்ற/சட்டமன்ற வாசத்தில் வருடத்திற்கிரு முறை தொகுதியை வலம் வந்து அதன் நலமறிந்தாலே அவர்களுக்கு வாக்களித்தவர்களுக்கு உறுப்பினர்கள் செய்யும் மிகப்பெரிய வேலையாயிருக்கிறது. இந்நிலையில் உள்ளாட்சி மன்றங்கள் தாம் அதற்கான அடிப்படை/அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள வேண்டும்.ஆனால் அங்கும் குழுப் பூசல்கள்...ஊழல்கள்...இத்யாதி...இத்யாதி...

*****

சிட்னி பல்கலைக்கழகத்தின் "திட்ட/வடிவமைப்பு ஆராய்ச்சி பணிமம்"(Planning Research Centre) என்ற அலுவலகம், நியூ சவுத் வேல்ஸ் மாகானத்தின் உள்ளூர் மக்களுக்குத் தேவையான பிரச்சினைகளை ஆராயும் பொருட்டு ஆண்டிற்கிருமுறை நகரமன்றத் தலைவர்களின் திட்ட/வடிவமைப்பு மாநாடு ஒன்றை இரண்டு நாட்களுக்கான பட்டறையாக நடத்துகிறது. இதில் மத்திய/மாநில அரசாங்கத்தின் தலையீடுகள் பெருவாரியாக இல்லாவிட்டாலும் அரசாங்கத்தின் பிரதிநிதிகளும், மாநிலத்தின் முக்கிய திட்டக் குழு அலுவலர்களும், மாநிலத்தின் முதன்மை கட்டிடக்கலை நிபுனரும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப் படுகிறது. அது மட்டுமன்றி மாகாணத்தின் அனைத்து மாமன்றங்களுக்கும் அதில் கலந்து கொள்ளுமாறு அழைப்பும் விடுக்கப்படுகிறது. ஆனால் இதில் கலந்து கொள்ள ஒரு குறைந்த அளவு கட்டணமும் கலந்து கொண்டவர்களுக்கு பட்டயமும் வழங்கப்படுகிறது.

இதன் முதல் மாமன்றத் தலைவர்களின் திட்ட/வடிவமைப்பு மாநாடு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இதில் நான் மாணவ உதவியாளனாகக் கலந்து கொண்டு மூன்று நகரமன்றங்களுக்கு (நகரமன்றத் தலைவருக்கு) பணிபுரிந்த அனுபவத்தையும், இரண்டாவது மாநாடு கடந்த அக்டோபெர் மாதத்தின் இறுதியில் நடைபெற்றது. இதில் நான் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளனாகப் பணிபுரிந்த அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ளும் பொருட்டு இதை எழுதுகிறேன். இது மட்டுமன்றி பொது மக்களின் வரிப்பணத்தையும், நலத்திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதியைத் தின்று கொழுத்திருக்கும் இந்திய/தமிழக அரசியல்வாதிகள் கற்றுக் கொள்ளவும், அரசாங்கத்தின் பணத்தில் இயங்குகின்ற முதன்மைக் கல்வி நிறுவனங்கள் எவ்வாறு நாட்டின்/உள்ளூர் கட்டமைப்பு வளர்ச்சியில் பங்கு கொள்கிறது என்பதையும் விளக்குவதற்காகவே இந்த பதிவு.

முதல்
மாமன்றத் தலவர்களின் திட்ட/வடிவமைப்பு மாநாட்டில் ஒவ்வொரு நகரமன்றத்திற்கும் ஒரு மாணவர் உதவியாளனாக நியமிக்கப் படுவார். இதர்கான மாணவர் தேர்வு தன்னார்வத்தின் அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கப்படுவார்். அவருக்கு ஏற்படும் போக்குவரத்து, தொலைபேசி, அச்சுப்பிரதி ஆகியவற்றிற்கான செலவையும், அவருடைய உழைப்பிற்கான ஊதியமும் மாமன்றத் தலைவர்களின் நுழவுக் கட்டணமாக வசூலிக்கும் பணத்திலிருந்து கொடுக்கப் படுகிறது. இதில் மாணவரது பணியானது, அதாவது மாநட்டிற்கு முன்னரான தயாரிப்புப் பணியென்பது மாமன்றத் தலைவர் எந்தவொரு இடத்தில் அவர் எடுத்து வைக்கும் திட்டப்பணியானதை செயல் படுத்த நினைக்கிறாரோ அதைப்பற்றிய புலனாய்வும், அங்குள்ள இன்னபிற வடிவமைப்பிற்கான ஆராய்ச்சியும் அதைப்பற்றியதொறு கதைபுனைவும் உருவாக்க வேண்டும.(சைட் அனாலிசிஸ் & கேஸ் ஸ்டடி).

இத்தோடு மாணவரது பணி முடிந்துவிடும். அதன் பின்னர் மாநாட்டின் இரண்டாம் நாளில் வடிவமைப்பிற்கான பட்டறை நடைபெறும். இதில் மாமன்றத்தலைவர் மட்டுமல்லாது எதிர்க் கட்சியை சார்ந்தவர்களும், இன்னபிற மன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளலாம். இவர்களுக்கான குறைந்தபட்ச கட்டணமும் தனியாக வசூலிக்கப்படும். அங்கே ஏற்கனவே மாணவரால் உருவாக்கப்பட்ட அனைவராலும் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய "ஸ்டோரி போர்டு" இருக்கும். அதில் முன்வைக்கப்பட்டிருந்த பிரச்சினைகளுக்கு ஏற்றவாறு "மாஸ்டர் ப்ளானிங்" விவாதிக்கப்படும். விவாதிப்பவர்கள் பிற நகரமன்றத் தலைவர்களும், ஒரு திட்ட/வடிவமைப்பு விரிவுரையாளரும் குறிப்பெடுக்க மாணவரும் இருப்பர். மூன்று மணி நேரம் மின்னல் வேகத்தில் தொடரும் இப்பட்டறையின் இறுதியில் மாணவர்கள் எடுத்த குறிப்பின் அடிப்படையில் வடிவமைப்பிற்கான மாதிரிப் படமும், அலசப்பட்ட பிரச்சினைகளின் வரைபடமும் ஸ்கேன் செய்யப்பட்டு கணிணியில் ஏற்றப்படு அந்நாளின் இறுதியில் சம்மந்தப்பட்ட மாமன்றத்தலைவரால் பார்வையாளர்களுக்கு தொகுத்தளிக்கப்படும்.

இந்த மாநாட்டின் சிறப்பம்சமே, கட்டிட வடிவமைப்போ, திட்ட வடிவமைப்பைப் பற்றியோ எந்தவொரு அனுபவமும் இல்லாத சாதாரண மனிதர்களாகிய மாமன்றத்தலைவர்களின் அறிவுக்கெட்டிய வகையில் அவர்களாலேயே அவருடைய நகரத்திற்கு தேவையான கட்டமைப்பு/வடிவமைப்பின் ஆதாரத்தையும் இதனால் ஏற்படக்கூடிய எதிர்வரும் பிரச்சினைகளுக்கான தீர்வும் அவர்களாலேயே அவர்களுக்குப் புரிந்த மொழியிலேயே எடுத்து வைப்பது தான். அது மட்டுமன்றி பல்வேறு நகரமன்றத் தலவர்களின் பங்களிப்பும் ஈடுபாடும், ஒருகால் ஒரே வகையான பிரச்சினையாய் இருப்பின் அவர்தம் முந்தைய சொந்த அனுபவத்தில் அதை அவர் எப்படி எதிர்கொண்டார் என்பதை விளக்குவதற்கும் ஏதுவாக இருக்கும். இதனால் புதியதொரு தெளிவோடும், தீர்வோடும் மாநாடு முற்றுபெறும்.

இது போன்றதொரு மாநாடோ, பட்டறையோ நான் இந்தியாவில் இருந்த வரை எந்தவொரு பல்கலையிலோ, புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களாளோ எடுத்து வைக்கப்பட்டதாய் நான் அறியவில்லை. ஆனால் அவ்வப்பொழுது கட்டிடக்கலை மாணவர்களும்/கல்வியாளர்களும் மட்டும் அரசாங்கத்தின் மீது குறை சொல்லும் வழக்கம் இருந்து வருகிறது. அவ்வளவு ஏன்? அண்ணா பல்கலையின் கட்டிடக்கலை மற்றும் நகரவடிவப்பு பள்ளியின் தலைவராக இருந்த, வெளிநாட்டில் படித்த இந்திய/தமிழக அரசாங்கத்தின் அனைத்து தொடர்புகளும் கொண்ட பேராசிரியர் ஹாரிஸ் அவர்களாலேயே ஒன்றும் செய்ய இயலாமல் போனது தான் வேதனையான விடயம். இந்திய அளவில் நடக்கும் NASA(National Association for Students of Architecture)விலும் சரி தென்கிழக்கில் நடக்கும் ZONASAவிலும் சரி மாணவர்களுக்கான உப்புக்கு பெறாத போட்டிகளும், ஆட்டமும் பாட்டமும் தான் அரங்கேறும். வேறொன்றும் உருப்படியான விவாதமோ அல்லது நடப்பாண்டில் நாடு எதிர்கொள்ளவிருக்கின்ற பிரச்சினைகளுக்கான பட்டறையோ விவாதமோ நடைபெற்றதில்லை.். அடுத்தமுறை நான் இந்தியா செல்லும் பொழுது இதற்கான முயற்சிகளில் ஈடுபடும் எண்ணம் இருக்கிறது. பார்க்கலாம் எந்தவகையில் அது வெற்றிகரமாய் அமைகிறதென்று!!!

11/06/2006























மூவாயிரமாண்டு வரலாற்றை
அழித்து புதியதொரு
உலகத்தினைப் படைக்க
சிலுவைப்போரென்று கழிந்தான்
சாத்தானொருவன்

தனது புடுக்கறு்படுவது
தெரியாது மனிதவுரிமையை
நிலைநாட்ட நிகழ்த்தினான்
உலகளாவிய படுகொலையொன்றை!

தலைப்புச் செய்தியில்
சொன்னார்கள்
சதாமுக்கு தூக்குத்தண்டனையாம்
அடடா இவனையும்
போராளியாக்கி விட்டார்களே!

எது எப்படியோ
இனி அமேரிக்கக்காரனின்
கக்கூஸில் கூட
பாம்ப் ஸ்க்வாடு நிற்கும்

11/03/2006

தமிழ்மணம்-தேன்கூடு-இணையம்-அரசியல்

எப்படி தொடங்குவது என்று தெரியவில்லையெனினும், இது அனைவருக்கும் தெரிந்த அல்லது கதைக்க ஏற்ற நல்ல தலைப்பு என்றவகையில் எப்படியாவது ஒப்பேற்றிவிடுவேன் என்ற நம்பிக்கையில் எந்தவொரு "சமையலறைப்பகத்தின்" உதவியின்றி "கிழிஞ்சிது டவுசரு" என்று இன்னுமொரு முகமூடி (முகமூடியை அல்ல) வலைப்பூவில் என்னோட டவுசரை கழட்டிடாத வண்ணம் மிகுந்த எச்சரிக்கையுடனும், இன்று ஒரு நட்பு வட்டாரத்தின் புண்ணியத்தில் அடித்த "ஜிம் பீம்"ன் உதவியோடு எழுதுகிறேன் என்று என் சுய நினைவோடு ஒரு முன்னறிவிப்போடு இன்றைய இணையச்சார்பு (சார்ந்த) அரசியல் பதிவைத் தொடங்குகிறேன்.

தமிழ்மணம் கைமாறியதிலிருந்து ஏகப்பட்ட விமரிசனம், எதிர்வினைகள்...ஏன் விமரிசிக்கிறோம் என்று தெரியாமல் கூட ஒரு சல்லியடிப்பு நடந்து வருகிறது. அதில் பல எதிர்வினைகள் முக்காடிட்டு வந்து மூத்திரம் அடிப்பது போலவும் இருந்தது. இதில் என்னிடம் கூட சில வலைபதிவாளர்கள் (இணையத்தில்) தமிழ்மணம் ஒருபக்கச் சார்பாக நடந்து கொள்வதாக கதைத்துள்ளனர். தமிழ்மணம் என்பது வெறும் திரட்டி, அதில் கால நேரத்திற்கேற்றாற்போல் அளிக்கப்படும் வலைப்பதிவுகளை உள்வாங்கி முகப்பில் தெரியுமாறு செயல்படுகிறது. அதில் எப்படி ஒருபக்கச் சார்பாக நடந்து கொள்ள இயலும் என்று எனக்குத் தெரியவில்லை, யாராவது ஒருவர் ஒரு பட்டியலை வைத்துக் கொண்டு எப்பொழுதெல்லாம் இவர்கள் பதிவு போடுகிறார்கள் அல்லது இவர்களது வலைப்பதிவுகளில் எப்பொழுதெல்லாம் பின்னூட்டம் வருகிறதென்றறிந்து அவர்களுக்கு முன்னுரிமை அளிக்குமளவிற்கு வெட்டியாக தமிழ்மணத்தின் தற்போதைய நிர்வாகத்தில் இருப்பார்கள் என நான் நம்பவில்லை. குறிப்பாக சொல்லப் போனால் காசியின் தமிழ்மனத்தில் ஒரிரு "வயது முதிர்ந்த" வலை பதிவாளர்கள் பின்னூட்டத்திற்கென்றெல்லாம் கூட ஒரு வலைப்பூ வைத்திருந்தார்கள். அப்போதைய நிர்வாகத்திற்கு என்ன கெடுபிடியோ அதையெல்லாம் கூட திரட்டிக் கொண்டிருந்தார்கள். இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் பொழுது தற்போதைய தமிழ்மணம் என்னை பொறுத்தவரை எந்தவொரு பக்கச் சார்புமின்றி தன் வேலையை சரிவரச் செய்கின்றது.

தேன்கூடுவின் பக்கச் சார்பும் அதன் கூட்டணியின் பின்புலமும் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதையெல்லாம் எழுதியோ கதைத்தோ யாரும் நேரவிரயம் செய்யவிரும்பவில்லை என்றாலும் "பார்டெண்டர்" அப்பட்டமாக தேன்கூட்டின் பக்கச்சார்பை இடித்துரைத்தது அனைவருக்கும் நினைவிருக்கும், அதுவும் பரிந்துரைக்கப்பட்ட நாட்டையும் எடுத்துப் போட்டதில் அவரவர் மண்டையும் காய்ந்துபோனது தான் மிச்சம்.ஆனால் என்னிடம் தமிழ்மணத்தின் பக்கச்சார்பை பற்றி உரையாடிய வலைபதியும் இணைய நண்பர்களின் கண்களில் தேன்கூட்டின் ஒருபக்கச்சார்பு தெரியாமல் போனது நகைப்பிற்குரியதாகத் தான் எனக்குத் தோன்றியது.

அதிலும் சமீப காலங்களில் அதாவது தமிழ்மணம் கைமாறுவதற்கு சற்று முன்பும் கைமாறிய பின்பும் பெயரின்றி அனாமதேயமாக பின்னூட்டி மிரட்டிவரும் சில மூளையற்ற, மனச்சிதைவு ஏற்பட்டு அதனால் என்ன எழுதுகிறோம் என்று தெரியாமலே பின்னூட்டமிட்டு வரும் வலைபதிவர்களின் எதிர்மறையான, அச்சுறுத்தும் வகையில் பரப்பிவரும் வதந்திகளையும் சில பதிவர்கள் வெளியிட்டு அவர்களின் ஒருபக்கச்சார்பை தெரிவித்துக் கொண்டனர். ஆனால் கொடுமை என்னவென்றால் இவர்தம்மை நடுநிலைவியாதியாய் வெளிப்படுத்திக் கொண்டு நுனலும் தன் வாயால் கெடும் என்பதைப் போல் அவர் எழுப்பிய கேள்வி அவருக்கே பொருந்தாத வண்ணம் மாட்டிக் கொண்டது தான். அவ்வாறான பதிவுகள் எவை என்பது சமீப காலங்களில் வலை பதிந்து வருபவருக்கும் தெரியுமென்பதால் அதைப் பற்றிக் குறிப்பிட வேண்டிய நிர்ப்பர்ந்தம் எனக்கில்லை.

அடுத்ததாக "பூங்கா" வலையிதழின் ஒருபக்கச்சார்பு. எந்தவொரு இதழாயிருந்தாலும் அதற்கென்று ஒரு ஆசிரியர் குழுவிருக்கும், அவர்களது எண்ணங்கள் அனைவரையும் திருப்திபடுத்த வேண்டுமென்ற அவசியமும் எந்தவொரு இதழுக்கும் ஏற்பட்டதுமில்லை, அதற்கு அவசியமும் இல்லை. மேலும் அவர்களது கருத்துக்கள் எவருக்கும் ஏற்பின்றி தனித்துவமாயும் இருக்கலாம், அதையெல்லாம் நீ ஏன் என்னை திருப்திபடுத்தும் வகையில் தொகுத்தளிக்கவில்லை என்று எவரும் கேள்வி எழுப்பவும் முடியாது.அப்படி கேள்வியெழுப்பினால் "சிறுபிள்ளைகளின் சில அறிவார்ந்த கேள்விகளுக்கு அது அப்படித்தான்" என்பதை போல் அறிவித்துவிட்டு சென்றுவிடலாம். ஒருவன் +வாக இருக்கலாம் அல்லது -வாக இருக்கலாம், இரண்டுக்குமிடையில் தான் இருப்பேன் அடம்பிடித்தால் அதற்கு எண்ணளவில் மதிப்பில்லை. அதுபோன்று தான் ஒருபக்கச்சார்பும். ஒருவனுக்கு ஒருகருத்தை சார்ந்த சார்பு தான் இருக்க முடியும், அது தவிர்த்து நான் நடுநிலைவியாதியாய் தான் இருப்பேன் என்றால் அதைக் கண்டு நகைக்கத்தான் முடியுமேயொழிய வேறொன்றும் செய்ய இயலாது.

கடைசியாக ஒரு விடயம். தமிழ்மணம் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், புலிகளுக்கு ஆதாராகவும் செயல்படுகிறது அதனால் பதிவருக்கு அமெரிக்கக் காவல்துறையின் பிடி நிச்சயம் என்று பெயரின்றி கூறித்திரியும் பொறம்போக்கு, உருப்படியாக தன்வேலையை பார்த்தால் நலம் என்று சொல்லிக் கொள்கிறேன்.