11/03/2006

தமிழ்மணம்-தேன்கூடு-இணையம்-அரசியல்

எப்படி தொடங்குவது என்று தெரியவில்லையெனினும், இது அனைவருக்கும் தெரிந்த அல்லது கதைக்க ஏற்ற நல்ல தலைப்பு என்றவகையில் எப்படியாவது ஒப்பேற்றிவிடுவேன் என்ற நம்பிக்கையில் எந்தவொரு "சமையலறைப்பகத்தின்" உதவியின்றி "கிழிஞ்சிது டவுசரு" என்று இன்னுமொரு முகமூடி (முகமூடியை அல்ல) வலைப்பூவில் என்னோட டவுசரை கழட்டிடாத வண்ணம் மிகுந்த எச்சரிக்கையுடனும், இன்று ஒரு நட்பு வட்டாரத்தின் புண்ணியத்தில் அடித்த "ஜிம் பீம்"ன் உதவியோடு எழுதுகிறேன் என்று என் சுய நினைவோடு ஒரு முன்னறிவிப்போடு இன்றைய இணையச்சார்பு (சார்ந்த) அரசியல் பதிவைத் தொடங்குகிறேன்.

தமிழ்மணம் கைமாறியதிலிருந்து ஏகப்பட்ட விமரிசனம், எதிர்வினைகள்...ஏன் விமரிசிக்கிறோம் என்று தெரியாமல் கூட ஒரு சல்லியடிப்பு நடந்து வருகிறது. அதில் பல எதிர்வினைகள் முக்காடிட்டு வந்து மூத்திரம் அடிப்பது போலவும் இருந்தது. இதில் என்னிடம் கூட சில வலைபதிவாளர்கள் (இணையத்தில்) தமிழ்மணம் ஒருபக்கச் சார்பாக நடந்து கொள்வதாக கதைத்துள்ளனர். தமிழ்மணம் என்பது வெறும் திரட்டி, அதில் கால நேரத்திற்கேற்றாற்போல் அளிக்கப்படும் வலைப்பதிவுகளை உள்வாங்கி முகப்பில் தெரியுமாறு செயல்படுகிறது. அதில் எப்படி ஒருபக்கச் சார்பாக நடந்து கொள்ள இயலும் என்று எனக்குத் தெரியவில்லை, யாராவது ஒருவர் ஒரு பட்டியலை வைத்துக் கொண்டு எப்பொழுதெல்லாம் இவர்கள் பதிவு போடுகிறார்கள் அல்லது இவர்களது வலைப்பதிவுகளில் எப்பொழுதெல்லாம் பின்னூட்டம் வருகிறதென்றறிந்து அவர்களுக்கு முன்னுரிமை அளிக்குமளவிற்கு வெட்டியாக தமிழ்மணத்தின் தற்போதைய நிர்வாகத்தில் இருப்பார்கள் என நான் நம்பவில்லை. குறிப்பாக சொல்லப் போனால் காசியின் தமிழ்மனத்தில் ஒரிரு "வயது முதிர்ந்த" வலை பதிவாளர்கள் பின்னூட்டத்திற்கென்றெல்லாம் கூட ஒரு வலைப்பூ வைத்திருந்தார்கள். அப்போதைய நிர்வாகத்திற்கு என்ன கெடுபிடியோ அதையெல்லாம் கூட திரட்டிக் கொண்டிருந்தார்கள். இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் பொழுது தற்போதைய தமிழ்மணம் என்னை பொறுத்தவரை எந்தவொரு பக்கச் சார்புமின்றி தன் வேலையை சரிவரச் செய்கின்றது.

தேன்கூடுவின் பக்கச் சார்பும் அதன் கூட்டணியின் பின்புலமும் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதையெல்லாம் எழுதியோ கதைத்தோ யாரும் நேரவிரயம் செய்யவிரும்பவில்லை என்றாலும் "பார்டெண்டர்" அப்பட்டமாக தேன்கூட்டின் பக்கச்சார்பை இடித்துரைத்தது அனைவருக்கும் நினைவிருக்கும், அதுவும் பரிந்துரைக்கப்பட்ட நாட்டையும் எடுத்துப் போட்டதில் அவரவர் மண்டையும் காய்ந்துபோனது தான் மிச்சம்.ஆனால் என்னிடம் தமிழ்மணத்தின் பக்கச்சார்பை பற்றி உரையாடிய வலைபதியும் இணைய நண்பர்களின் கண்களில் தேன்கூட்டின் ஒருபக்கச்சார்பு தெரியாமல் போனது நகைப்பிற்குரியதாகத் தான் எனக்குத் தோன்றியது.

அதிலும் சமீப காலங்களில் அதாவது தமிழ்மணம் கைமாறுவதற்கு சற்று முன்பும் கைமாறிய பின்பும் பெயரின்றி அனாமதேயமாக பின்னூட்டி மிரட்டிவரும் சில மூளையற்ற, மனச்சிதைவு ஏற்பட்டு அதனால் என்ன எழுதுகிறோம் என்று தெரியாமலே பின்னூட்டமிட்டு வரும் வலைபதிவர்களின் எதிர்மறையான, அச்சுறுத்தும் வகையில் பரப்பிவரும் வதந்திகளையும் சில பதிவர்கள் வெளியிட்டு அவர்களின் ஒருபக்கச்சார்பை தெரிவித்துக் கொண்டனர். ஆனால் கொடுமை என்னவென்றால் இவர்தம்மை நடுநிலைவியாதியாய் வெளிப்படுத்திக் கொண்டு நுனலும் தன் வாயால் கெடும் என்பதைப் போல் அவர் எழுப்பிய கேள்வி அவருக்கே பொருந்தாத வண்ணம் மாட்டிக் கொண்டது தான். அவ்வாறான பதிவுகள் எவை என்பது சமீப காலங்களில் வலை பதிந்து வருபவருக்கும் தெரியுமென்பதால் அதைப் பற்றிக் குறிப்பிட வேண்டிய நிர்ப்பர்ந்தம் எனக்கில்லை.

அடுத்ததாக "பூங்கா" வலையிதழின் ஒருபக்கச்சார்பு. எந்தவொரு இதழாயிருந்தாலும் அதற்கென்று ஒரு ஆசிரியர் குழுவிருக்கும், அவர்களது எண்ணங்கள் அனைவரையும் திருப்திபடுத்த வேண்டுமென்ற அவசியமும் எந்தவொரு இதழுக்கும் ஏற்பட்டதுமில்லை, அதற்கு அவசியமும் இல்லை. மேலும் அவர்களது கருத்துக்கள் எவருக்கும் ஏற்பின்றி தனித்துவமாயும் இருக்கலாம், அதையெல்லாம் நீ ஏன் என்னை திருப்திபடுத்தும் வகையில் தொகுத்தளிக்கவில்லை என்று எவரும் கேள்வி எழுப்பவும் முடியாது.அப்படி கேள்வியெழுப்பினால் "சிறுபிள்ளைகளின் சில அறிவார்ந்த கேள்விகளுக்கு அது அப்படித்தான்" என்பதை போல் அறிவித்துவிட்டு சென்றுவிடலாம். ஒருவன் +வாக இருக்கலாம் அல்லது -வாக இருக்கலாம், இரண்டுக்குமிடையில் தான் இருப்பேன் அடம்பிடித்தால் அதற்கு எண்ணளவில் மதிப்பில்லை. அதுபோன்று தான் ஒருபக்கச்சார்பும். ஒருவனுக்கு ஒருகருத்தை சார்ந்த சார்பு தான் இருக்க முடியும், அது தவிர்த்து நான் நடுநிலைவியாதியாய் தான் இருப்பேன் என்றால் அதைக் கண்டு நகைக்கத்தான் முடியுமேயொழிய வேறொன்றும் செய்ய இயலாது.

கடைசியாக ஒரு விடயம். தமிழ்மணம் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், புலிகளுக்கு ஆதாராகவும் செயல்படுகிறது அதனால் பதிவருக்கு அமெரிக்கக் காவல்துறையின் பிடி நிச்சயம் என்று பெயரின்றி கூறித்திரியும் பொறம்போக்கு, உருப்படியாக தன்வேலையை பார்த்தால் நலம் என்று சொல்லிக் கொள்கிறேன்.

28 comments:

Anonymous said...

ஜிம்பிம் ஊக்கப்படுத்தி இருப்பினும், ஆழ்த கருத்துக்கள். தமிழ் மணத்தின் பக்கச்சார்பின்மை, கருத்து சுதந்திரத்துக்கு முன்னர் தேன் கூடு ஒரு தூசு, ஒரு ஜீஜிப்பி. பூங்காவை பொறுத்த வரைக்கும் தரமானவைதான் பிரசுரிக்கமுடியும். எல்லாவற்றையும் போட்டால் அது பூங்கா அல்ல குப்பை மேடு.

said...

தலை,
கூல் டவுன்....

:))

said...

அனானி,

வருகைக்கும் கருத்துப் பகிர்விற்கும் நன்றி.
ஆனாலும் இப்படியெல்லாம் கலாய்க்கக் கூடாது. ;)

***

ரவி,
தல நீங்களெ சொல்லிட்டீங்க...அப்புறமென்ன...ஜிம் பீம் வித் க்ரிஸ்ப் தான் இப்போ...கொஞ்சம் கூல் டவுன் பன்னத்தான் :))

said...

//அப்படி கேள்வியெழுப்பினால் "சிறுபிள்ளைகளின் சில அறிவார்ந்த கேள்விகளுக்கு அது அப்படித்தான்" என்பதை போல் அறிவித்துவிட்டு சென்றுவிடலாம்.//

நன்றி.

said...

ஓகை,
வருகைக்கு நன்றி!

said...

நண்பா , cool

அதுகள் அப்படித்தான் ;)


leave it


அப்படியே இந்தாண்ட வாரது......http://kuttapusky.blogspot.com/2006/10/mexican-madras.html

Anonymous said...
This post has been removed by a blog administrator.
Anonymous said...

ஆப்பு வந்துதான் தேன்கூட்டின் நடுநிலையை பற்றியும் ரகசியத் தகவல்களைப் பற்றியும் கிழித்து எறிய வேண்டும்.

said...

செந்தில்,
தல,நாம கூல் தான் எப்பவுமே அப்படியே நாம் சூடானுலும் நம்ம க்ளைமேட் கூலாக்கி விட்டுடும். இன்னக்கி போவ வேண்டிய சமாச்சாரத்துக்கு க்ளைமேட் இம்சையினால போவ முடியல நாளக்கி போயிட்டு வந்துர வேண்டியது தான் ;)

அதுகள் அப்படித்தான் என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் அதுகளைப் பற்றி அதுகளுக்கே சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு நம்மை தள்ளிவிட்டார்கள்.

;)

said...
This post has been removed by a blog administrator.
said...

அனானி 2,
கருத்துக்கு நன்றிங்கோ!
ஆப்பா...அவரு யாருங்கோ. தேன்கூட்டைப் பற்றி எல்லோருக்கும் தெரியும் அதனால் அதை பற்றிய ரகசியம் எதுவுமில்லைங்கோ...

Anonymous said...

நண்பரே அநாவசியத்துக்குத் தமிழ்மணத்தினைத் திராவிடத்திரட்டி என்று வகைப்படுத்துகிறீர்களே? இது தமிழ்மணத்தின் பெயரைக் கெடுப்பதற்காகக் கூறப்படுவதாகத் தெரிகிறது. தமிழ்மணம் ஆரியத்திரட்டியுமல்ல திராவிடத்திரட்டியுமல்ல தமிழ்ப்பதிவுத்திரட்டி என்று கூறலாமே. தேன்கூட்டினையும் தமிழ்மணத்தினையும் போட்டிக்கு விடவேண்டிய அவசியமென்ன? தமிழ்மணம் அப்படியாக எங்கும் போட்டிக்குப் போகிறதா? அதற்கு அப்படியாகப் போட்டி போடவேண்டிய தேவை என்ன? பூங்கா தரமான படைப்புகளைத்தான் தேர்ந்தெடுக்கும் என்று சொல்லியிருக்கிறார்களே? ஆரியப்படைப்பு, திராவிடப்படைப்பு என்றா தேர்ந்தெடுக்குமென்று சொன்னார்கள்? அப்படியாகவா தேர்ந்தெடுக்கிறது? தமிழ்மணம், பூங்காவுக்கு ஆதரவாகப் பின்னூட்டம் எழுதுகிறோம் என்று சொல்கிறவர்களே தமிழ்மணம் பெயரைக் கெடுக்கும் நோக்கிலேதான் எழுதுகிறார்கள்போல் இருக்கிறதே?

said...

அனானி,

//தமிழ்மணம், பூங்காவுக்கு ஆதரவாகப் பின்னூட்டம் எழுதுகிறோம் என்று சொல்கிறவர்களே தமிழ்மணம் பெயரைக் கெடுக்கும் நோக்கிலேதான் எழுதுகிறார்கள்போல் இருக்கிறதே?//

மிகச் சரியாக சொல்லியிருக்கிறீர்கள்.

பொட்டிக்கடையார்,
சில்மிஷமான பின்னூட்டங்கள் எங்கிருந்து வந்தாலும் யோசித்து வெளியிடுங்கள்

said...

அனானி, மு.சு,
சில்மிஷ பின்னூட்டமும் அதற்கான எனது பின்னூட்டமும் அழிக்கப்பட்டது. இது போன்ற பிழை இனி ஏற்படாவண்ணம் கவனமாக இருக்கிறேன்.

said...

சத்யா,

தமிழ்மணத்தையும், தேன்கூட்டையும் ஒப்பிடுவதே பிழையான ஒன்று.

தமிழ்மணம் வலைப்பதிவுகள் என்ற பதத்துடன் ஒன்றாக பார்க்கப்படுகிறது. Tamil Blogs and Thamizmanam has become synonymous among the Tamil bloggers.

இவ்வாறு உருவான கருத்தினை உடைக்க சிலர் முனைந்து கொண்டிருக்கின்றனர். அதில் ஒரு வழி தான் "அனானிகள்" கொண்டு நடத்தப்படும் தாக்குதல். தமிழ்மணத்திற்கு சார்பு இருப்பதாக எழுப்பப்படும் பிம்பம்.

தமிழ்மணம் தொடங்கப்பட்டதில் இருந்தே இவ்வாறான தாக்குதல் நடந்து வருவதை நான் பார்த்து வந்திருக்கிறேன். அந்த தாக்குதலில் இருக்கும் அவதூறை உணர்ந்து வலைப்பதிவர்கள் அவற்றை புறந்தள்ளுவதையும் கவனித்து வந்திருக்கிறேன். நேரடியாக தாக்குதல் நடத்தி சாதிக்க முடியாததை மறைந்து நின்று சாதித்துக் கொள்ள சிலர் நினைக்கிறார்கள்.

என்னைக் கேட்டால், நான் சொல்வது Just ignore them

said...

நண்பா, பொட்"டீ",

நான் தமிழ்மணம் ரசிகர் மன்ற செயலாளர் இல்ல , ஆனால் நீங்கள் பேசிய அல்லது எழுதிய எழுத்துக்கள் அனைத்தும் சரியே.


ஐ வில் பி வித் யுவர் வேர்ட்ஸ்.......

( பார்ப்புகளின் மனம் மகிழ ) ;)

said...

//நேரடியாக தாக்குதல் நடத்தி சாதிக்க முடியாததை மறைந்து நின்று சாதித்துக் கொள்ள சிலர் நினைக்கிறார்கள். //

thamizhsasi sonna sariyaa thaan irukkum. Illeengalaa thamizh sasi annaa?!

said...

சசி,
மிகச் சரியாக சொன்னீர்கள். உங்களுடைய கருத்தில் எனக்கு முழுமையான உடன்பாடு உண்டு. இந்தியாவில் இருந்தவரை வெகுசன ஊடகங்களிலும், எழுத்தாளர் என்றால் வெறும் "பாலகுமாரன்", "சுஜாதா" போன்றோர் மட்டுமே என்று எண்ணியிருந்த எனக்கும் பல எழுத்தாளர்களையும், முகம், மெய்யான பெயர் கூடத் தெரியாத நட்பு வட்டாரத்தையும் ஏற்படுத்திக் கொடுத்ததும் தமிழ்மணம் தான்.

தமிழ்மணம் தான் தமிழ் வலைப்பதிவுகளின் முன்னோடி என்று சொன்னால் அது மிகையாகாது.

இங்கும் குழுக்கள் அடிதடிகள் ஏற்படக் காரணம் அரசமரத்தடி, ஆலமரத்தடி, தெருமுக்கு காபிக்கடை, ஆயாவீட்டுத் திண்ணை என்று சந்தி சிரித்தவர்கள் எல்லாம் இங்கும் வந்து அவர்களுடைய அரசியலை அரங்கேற்றியது தான்.

மாயவரத்தாண்ணே,
உங்களோடு ஒரே நகைச்சுவையாய் இருக்கிறதப்பா...:))

வூட்டான்ட வந்ததுக்கு நன்றிங்கோ!

said...

செந்தில,
தல,ஐடியா கொடுத்துட்டீங்களா...பாருங்க கூடிய சீக்கிரத்தில் அடிலேய்ட், பரமட்டா,லண்டன் போன்ற உலக நகரங்களில் இருந்து ரசிகர் மன்ற "ஃப்ரான்ச்சைஸ்" எடுக்கப் போறாங்க ...;)

said...

// thamizhsasi sonna sariyaa thaan irukkum. Illeengalaa thamizh sasi annaa?!

மயாவரத்தான் தம்பி,

உங்களுக்கே விளங்கிடுச்சின்னா, எல்லோருக்கும் விளங்கின மாதிரி தான் :-))

said...

ஒரு மண்ணும் புரியல.

said...

//ஒரு மண்ணும் புரியல.//

அப்டியே புரிஞ்சிட்டாலும்...:)))

Anonymous said...

//thamizhsasi sonna sariyaa thaan irukkum. Illeengalaa thamizh sasi annaa?!//

தமிழ்சசி சார் - மாயவரத்தாருக்குப் பிடிக்காத கருத்துக்களையெல்லாம் நீங்க எழுதலாமா வலைப்பதிவுல, கோவிச்சுக்க மாட்டாரு அவரு? உங்களுக்காக இன்னொரு நாலுவரிப் பதிவைத் தர்ப்பணம், சாரி அர்ப்பணம் பண்ணியிருக்காரு பாருங்க அவரோட பதிவுல. இனி அனாமதேயங்கள் நாலு பேர் வந்து செந்தமிழ்க் கவிதையிலர்ந்து முழநீள முக்கல் முனகல் வரை போட்டு *&^$( விரோதி தமிழ்சசின்னு மாத்தி மாத்தி பஞ்சர் பண்ணாட்டி உங்களுக்குப் புரியாது போல? ஒழுங்கு மரியாதையா இணைய தாசில்தார் மாயவரத்தார்கிட்ட கமெண்ட் போடறதுக்கு முன்னாடி அப்ரூவல் சர்ட்டிவிக்கேட்டும், சட்டிவிக்கெட்டோட தலை கால் இடை தொடைன்னு அதுக்கு நாலு இடத்துல அட்டெஸ்டேஷனும் வாங்கிக்குங்க. அதை ரெண்டு ஜெராக்ஸ் காப்பி எடுத்து மீதி இருக்கற கிளை துணை வட்டம் குறுவட்டங்கள் எல்லார்கிட்டயும் பச்சை இங்குல ரெண்டாங் கையெழுத்து வாங்கிக்கோங்க, கமெண்டுக்குக் கீழ சட்டிவிக்கெட்டை ஸ்கான் செஞ்சு போட்டுருங்க. மரியாதையா நடந்துக்கோங்க, தெரியுதில்ல? சும்மா ஜாட்டான் மாதிரியெல்லாம் கொமண்டு போடாதீங்க சரியா? நீங்க நினைக்கறதையெல்லாம் வெளிப்படையா சொல்றதுக்கு இங்கே என்ன தர்மசத்திரமா நடத்தறானுக? நாட்டு நிலவரம் புரியமாட்டேங்குதே உங்களுக்கு?

said...

/தமிழ்மணம் தான் தமிழ் வலைப்பதிவுகளின் முன்னோடி என்று சொன்னால் அது மிகையாகாது./

இது கொஞ்சம் ஓவராய்த் தெரிகிறது. இணையத்தமிழ்வளர்ச்சியிலே எவரும் திட்டமிட்டுங்கூட மறைக்கமுடியாதவளவுக்குத் தமிழ்மணத்துக்கு அதற்கான இடம் நிச்சயமாக இருக்கிறது. ஆனால், அதற்காக, "தமிழ்மணம் தான் தமிழ் வலைப்பதிவுகளின் முன்னோடி" என்பது கொஞ்சம் அதிகம்.

said...

அடடே.. யாருப்பா இது பெயரிலி அநாமதேயம்.. அட.. கடைசி 'கொமெண்டு' விட்ட பெயரிலி சாரை சொல்லல. அதுக்கு முன்னாடி ஒரு கொமண்ட் விட்ட அநாமதேயத்தை சொன்னேன்.

அட..அட..அட.. என்னா மேட்டருன்னே புரியாம உள்ளே புகுந்த ஆளா.. இல்லாங்காட்டி 'மேட்டரு' புரிஞ்சிடுச்சேன்னு பேரு போடாம வந்த ஆளா..?!

said...

என்னங்க டீக்கடைக்காரரே,

சுகமா இருக்கீங்களா?

ஆமாம்.....எதோ சிந்தனையிலே இருக்கீங்க போல. அங்கென பாருங்க,
பால் பொங்கி வழியுது.

யாவாரத்தைக் கவனிங்க:-)))

said...

வாங்கமா,
நான் நலம் நீங்க நலமா?

ஏதோ சிந்தனையா? அதெல்லாம் பெரியவங்க சமாச்சாரம்...நானெல்லாம் ஜுஜுபி :))

ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கீங்க, சும்மா போனா எப்பிடி? :)

"நீட்"டா இருந்தா அது பேரு காபி ஷாப். அப்பிடி இப்பிடி இருந்தா தானே அது டீக்கடை? என்ன நா சொல்றது சரிதானே? ;)

கடையான்ட வந்ததுக்காக அம்மாவுக்கு ஒரு மசாலா பால் பார்சல்...

said...

எந்தவொரு பதிவரையும் தரம் தாழ்ந்தோ, அல்லது அவரது சுய விவரங்களைத் தாங்கியோ வரும் பின்னூட்டங்கள் வெளியிடப்படா...ப்ளீஸ் பாய்ஸ், அப்பீட்டு ஆயிடுங்கோ!

எனக்கு ஏற்கனவே எக்கச்சக்க பட்டங்கள் கொடுத்திருக்காங்க நீங்க இன்னும் நிறைய கொடுக்க வெச்சிடுவீங்க போலிருக்கே...