நம்மூரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசானதும், அதன் உறுப்பினர்களும் நடந்து கொள்ளும் முறையானது "கொட்டை" எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதாயிருப்பினும் அவர்களுடைய மக்களுக்கான பங்களிப்பு மத்திய அரசினாலும், மாநில அரசினாலும் கொடுக்கப்படுகின்ற நிதியானது அவ்வுறுப்பினர்களின் சொந்தத் தேவையை நிவர்த்தியபின் மிச்சமாகும் எச்சமே. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்காவது பெரியதொரு தொகுதி?!, அவர்களுடைய ஐந்தாண்டு கால நாடாளுமன்ற/சட்டமன்ற வாசத்தில் வருடத்திற்கிரு முறை தொகுதியை வலம் வந்து அதன் நலமறிந்தாலே அவர்களுக்கு வாக்களித்தவர்களுக்கு உறுப்பினர்கள் செய்யும் மிகப்பெரிய வேலையாயிருக்கிறது. இந்நிலையில் உள்ளாட்சி மன்றங்கள் தாம் அதற்கான அடிப்படை/அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள வேண்டும்.ஆனால் அங்கும் குழுப் பூசல்கள்...ஊழல்கள்...இத்யாதி...இத்யாதி...
*****
சிட்னி பல்கலைக்கழகத்தின் "திட்ட/வடிவமைப்பு ஆராய்ச்சி பணிமம்"(Planning Research Centre) என்ற அலுவலகம், நியூ சவுத் வேல்ஸ் மாகானத்தின் உள்ளூர் மக்களுக்குத் தேவையான பிரச்சினைகளை ஆராயும் பொருட்டு ஆண்டிற்கிருமுறை நகரமன்றத் தலைவர்களின் திட்ட/வடிவமைப்பு மாநாடு ஒன்றை இரண்டு நாட்களுக்கான பட்டறையாக நடத்துகிறது. இதில் மத்திய/மாநில அரசாங்கத்தின் தலையீடுகள் பெருவாரியாக இல்லாவிட்டாலும் அரசாங்கத்தின் பிரதிநிதிகளும், மாநிலத்தின் முக்கிய திட்டக் குழு அலுவலர்களும், மாநிலத்தின் முதன்மை கட்டிடக்கலை நிபுனரும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப் படுகிறது. அது மட்டுமன்றி மாகாணத்தின் அனைத்து மாமன்றங்களுக்கும் அதில் கலந்து கொள்ளுமாறு அழைப்பும் விடுக்கப்படுகிறது. ஆனால் இதில் கலந்து கொள்ள ஒரு குறைந்த அளவு கட்டணமும் கலந்து கொண்டவர்களுக்கு பட்டயமும் வழங்கப்படுகிறது.
இதன் முதல் மாமன்றத் தலைவர்களின் திட்ட/வடிவமைப்பு மாநாடு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இதில் நான் மாணவ உதவியாளனாகக் கலந்து கொண்டு மூன்று நகரமன்றங்களுக்கு (நகரமன்றத் தலைவருக்கு) பணிபுரிந்த அனுபவத்தையும், இரண்டாவது மாநாடு கடந்த அக்டோபெர் மாதத்தின் இறுதியில் நடைபெற்றது. இதில் நான் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளனாகப் பணிபுரிந்த அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ளும் பொருட்டு இதை எழுதுகிறேன். இது மட்டுமன்றி பொது மக்களின் வரிப்பணத்தையும், நலத்திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதியைத் தின்று கொழுத்திருக்கும் இந்திய/தமிழக அரசியல்வாதிகள் கற்றுக் கொள்ளவும், அரசாங்கத்தின் பணத்தில் இயங்குகின்ற முதன்மைக் கல்வி நிறுவனங்கள் எவ்வாறு நாட்டின்/உள்ளூர் கட்டமைப்பு வளர்ச்சியில் பங்கு கொள்கிறது என்பதையும் விளக்குவதற்காகவே இந்த பதிவு.
முதல் மாமன்றத் தலவர்களின் திட்ட/வடிவமைப்பு மாநாட்டில் ஒவ்வொரு நகரமன்றத்திற்கும் ஒரு மாணவர் உதவியாளனாக நியமிக்கப் படுவார். இதர்கான மாணவர் தேர்வு தன்னார்வத்தின் அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கப்படுவார்். அவருக்கு ஏற்படும் போக்குவரத்து, தொலைபேசி, அச்சுப்பிரதி ஆகியவற்றிற்கான செலவையும், அவருடைய உழைப்பிற்கான ஊதியமும் மாமன்றத் தலைவர்களின் நுழவுக் கட்டணமாக வசூலிக்கும் பணத்திலிருந்து கொடுக்கப் படுகிறது. இதில் மாணவரது பணியானது, அதாவது மாநட்டிற்கு முன்னரான தயாரிப்புப் பணியென்பது மாமன்றத் தலைவர் எந்தவொரு இடத்தில் அவர் எடுத்து வைக்கும் திட்டப்பணியானதை செயல் படுத்த நினைக்கிறாரோ அதைப்பற்றிய புலனாய்வும், அங்குள்ள இன்னபிற வடிவமைப்பிற்கான ஆராய்ச்சியும் அதைப்பற்றியதொறு கதைபுனைவும் உருவாக்க வேண்டும.(சைட் அனாலிசிஸ் & கேஸ் ஸ்டடி).
இத்தோடு மாணவரது பணி முடிந்துவிடும். அதன் பின்னர் மாநாட்டின் இரண்டாம் நாளில் வடிவமைப்பிற்கான பட்டறை நடைபெறும். இதில் மாமன்றத்தலைவர் மட்டுமல்லாது எதிர்க் கட்சியை சார்ந்தவர்களும், இன்னபிற மன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளலாம். இவர்களுக்கான குறைந்தபட்ச கட்டணமும் தனியாக வசூலிக்கப்படும். அங்கே ஏற்கனவே மாணவரால் உருவாக்கப்பட்ட அனைவராலும் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய "ஸ்டோரி போர்டு" இருக்கும். அதில் முன்வைக்கப்பட்டிருந்த பிரச்சினைகளுக்கு ஏற்றவாறு "மாஸ்டர் ப்ளானிங்" விவாதிக்கப்படும். விவாதிப்பவர்கள் பிற நகரமன்றத் தலைவர்களும், ஒரு திட்ட/வடிவமைப்பு விரிவுரையாளரும் குறிப்பெடுக்க மாணவரும் இருப்பர். மூன்று மணி நேரம் மின்னல் வேகத்தில் தொடரும் இப்பட்டறையின் இறுதியில் மாணவர்கள் எடுத்த குறிப்பின் அடிப்படையில் வடிவமைப்பிற்கான மாதிரிப் படமும், அலசப்பட்ட பிரச்சினைகளின் வரைபடமும் ஸ்கேன் செய்யப்பட்டு கணிணியில் ஏற்றப்படு அந்நாளின் இறுதியில் சம்மந்தப்பட்ட மாமன்றத்தலைவரால் பார்வையாளர்களுக்கு தொகுத்தளிக்கப்படும்.
இந்த மாநாட்டின் சிறப்பம்சமே, கட்டிட வடிவமைப்போ, திட்ட வடிவமைப்பைப் பற்றியோ எந்தவொரு அனுபவமும் இல்லாத சாதாரண மனிதர்களாகிய மாமன்றத்தலைவர்களின் அறிவுக்கெட்டிய வகையில் அவர்களாலேயே அவருடைய நகரத்திற்கு தேவையான கட்டமைப்பு/வடிவமைப்பின் ஆதாரத்தையும் இதனால் ஏற்படக்கூடிய எதிர்வரும் பிரச்சினைகளுக்கான தீர்வும் அவர்களாலேயே அவர்களுக்குப் புரிந்த மொழியிலேயே எடுத்து வைப்பது தான். அது மட்டுமன்றி பல்வேறு நகரமன்றத் தலவர்களின் பங்களிப்பும் ஈடுபாடும், ஒருகால் ஒரே வகையான பிரச்சினையாய் இருப்பின் அவர்தம் முந்தைய சொந்த அனுபவத்தில் அதை அவர் எப்படி எதிர்கொண்டார் என்பதை விளக்குவதற்கும் ஏதுவாக இருக்கும். இதனால் புதியதொரு தெளிவோடும், தீர்வோடும் மாநாடு முற்றுபெறும்.
இது போன்றதொரு மாநாடோ, பட்டறையோ நான் இந்தியாவில் இருந்த வரை எந்தவொரு பல்கலையிலோ, புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களாளோ எடுத்து வைக்கப்பட்டதாய் நான் அறியவில்லை. ஆனால் அவ்வப்பொழுது கட்டிடக்கலை மாணவர்களும்/கல்வியாளர்களும் மட்டும் அரசாங்கத்தின் மீது குறை சொல்லும் வழக்கம் இருந்து வருகிறது. அவ்வளவு ஏன்? அண்ணா பல்கலையின் கட்டிடக்கலை மற்றும் நகரவடிவப்பு பள்ளியின் தலைவராக இருந்த, வெளிநாட்டில் படித்த இந்திய/தமிழக அரசாங்கத்தின் அனைத்து தொடர்புகளும் கொண்ட பேராசிரியர் ஹாரிஸ் அவர்களாலேயே ஒன்றும் செய்ய இயலாமல் போனது தான் வேதனையான விடயம். இந்திய அளவில் நடக்கும் NASA(National Association for Students of Architecture)விலும் சரி தென்கிழக்கில் நடக்கும் ZONASAவிலும் சரி மாணவர்களுக்கான உப்புக்கு பெறாத போட்டிகளும், ஆட்டமும் பாட்டமும் தான் அரங்கேறும். வேறொன்றும் உருப்படியான விவாதமோ அல்லது நடப்பாண்டில் நாடு எதிர்கொள்ளவிருக்கின்ற பிரச்சினைகளுக்கான பட்டறையோ விவாதமோ நடைபெற்றதில்லை.். அடுத்தமுறை நான் இந்தியா செல்லும் பொழுது இதற்கான முயற்சிகளில் ஈடுபடும் எண்ணம் இருக்கிறது. பார்க்கலாம் எந்தவகையில் அது வெற்றிகரமாய் அமைகிறதென்று!!!
11/08/2006
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
இந்த பதிவு ஏன் தமிழ்மண முகப்பில் இன்னும் வரவில்லை?
ஆகா அருமையான பதிவு.
மிக நல்ல சிந்தனை..
நிச்சயம் இந்தியாவிலும் வரும்.. நம்புவோமாக..
பதிவை பகிந்துகொண்டமைக்கு நன்றி.
//Pot"tea" kadai said...
இந்த பதிவு ஏன் தமிழ்மண முகப்பில் இன்னும் வரவில்லை? //
miratathinga
aLL aLLUku thamizmaantha miratuvathee veelaiyaa pochu
வருகைக்கு நன்றி சிபா.
***
தல, நானெல்லாம் சப்ப பையன். நா கொடுக்கறதுக்கு முன்னாடியே அதுவா எடுத்துக்கிட்டு "புது இடுகைகள் எதுவும் காணப்படவில்லை" சன்னலை மூடுன்னு சொல்லிடுத்து. அப்புறம் முகப்புல பாத்தா ஒன்னையும் காணோம்...அதான் பின்னூட்டக் கயமை பன்னேன். அதுக்கு போயி "மிரட்டரேன்" அது இதுன்னு சொல்லறிங்களே.
தல ரொம்பத்தான் உணர்ச்சிவசப்பட்ரீங்க. ப்ளாக்ஸ்பாட்ல ஒரு தடவ போஸ்டு பண்ணிட்டு, இன்னொரு தடவ லிட்டில் சேஞ்ச் பண்ணிட்டு இன்னொரு தடவ போஸ்டு பண்ணுறீங்களா, தமிழ்மணத்துல சேர்க்கப் போறாப்ப புது இடுகைகள் எதுவும் காணப்படவில்லைன்னுதான் சொல்லும். எனக்கு ரொம்ப தடவ நடந்திருக்கு. கொஞ்ச டைமு குடுத்து திரும்ப புது ட்ராப்டுல போட்டு போஸ்டு பண்ணிடுங்க. தமிழ்மணத்துல வந்துடும். இல்லேன்னா தமிழ்மணத்துக்கு உங்க டவுட்டை ஒரு மெயிலு விட்டு கேளுங்க. படார்ன்னு உங்க டவுட்டுல தமிழ்மணத்த மெரட்றீங்களே. அவுங்க ஏற்கனவே போட்டாலும் குத்தம் போடாம விட்டாலும் குத்தமுன்னு எல்லா பக்கத்துலயும் விநாயக் கடமா நொந்திட்டிருக்காங்க. வதந்திய கெளப்பாம விட்ருங்க தல.
யப்பா,
ஆளாளுக்கு இப்பிடி கும்முனா என்ன ஆவறது.
மன்னிச்சுங்கப்பா....தமிழ்மணமே மன்னித்துவிடு என்னை!
தெரியாம கேட்டுட்டேன்...அதான் பின்னூட்டக் கயமைன்னு சொல்லிட்டன்ல...
தங்களுடைய தகவலுக்கு நன்றி அனானி அவர்களே.
Useful post. Write more of something like this than blog politics.
Thanks
your wellwisher
my wellwisher,
Thanks for the support!
//Anonymous said...
Useful post. Write more of something like this than blog politics.
Thanks
your wellwisher
2:30 PM //
அய்ய்...
இது நல்லாருக்கே.
பொட்"டீ" , ஆளே இல்லாத கடையில யாருக்குப்பா டீ ஆத்துற
//இது நல்லாருக்கே.
பொட்"டீ" , ஆளே இல்லாத கடையில யாருக்குப்பா டீ ஆத்துற//
அய்...எப்டீ இவ்ளோ கரீக்டா கண்டுபுடிச்சீங்க...நம்ம கடைக்கு பக்கத்துல தான் பங்"க்" வெச்சிருக்கீங்களோ?
தல, அந்த பங்க்கடையை உடைச்சி போடலாம , நம்மகிட்டயே ராங்கு பன்றான்.
த்தா டேய்ய்ய்ய்ய்ய்ய்
தல, இதுக்கெல்லாம் கோவப்பட்டா எப்படி? ஏதோ அவர் புண்ணியத்துல ஒரு காமெண்ட் போட்டு பின்னூட்டக் கயமை பன்றார்...எஞ்ஜாய் பண்ணுவீங்களா...
(அந்த பின்னூட்டம் போட்டவரை கண்டுபிடிச்சிட்டேன்)
ஹி...ஹி...:))))))
Post a Comment