11/06/2006























மூவாயிரமாண்டு வரலாற்றை
அழித்து புதியதொரு
உலகத்தினைப் படைக்க
சிலுவைப்போரென்று கழிந்தான்
சாத்தானொருவன்

தனது புடுக்கறு்படுவது
தெரியாது மனிதவுரிமையை
நிலைநாட்ட நிகழ்த்தினான்
உலகளாவிய படுகொலையொன்றை!

தலைப்புச் செய்தியில்
சொன்னார்கள்
சதாமுக்கு தூக்குத்தண்டனையாம்
அடடா இவனையும்
போராளியாக்கி விட்டார்களே!

எது எப்படியோ
இனி அமேரிக்கக்காரனின்
கக்கூஸில் கூட
பாம்ப் ஸ்க்வாடு நிற்கும்

13 comments:

said...

டீக்கடைகாரரே அமெரிக்காவில் தேர்தல் வருதே உங்களுக்கு தெரியாதா இப்படி யாரையாவது கொன்னாத்தான் ஜெயிக்க முடியும். முன்னாடி எல்லாம் ஜனநாயகத்தை கொலை பண்ணி ஜெயிச்சிட்டு இருந்தாங்க இப்ப ஆளுங்களை கொலை பண்ணி ஜெயிச்சிட்டு இருக்காங்க. வாழ்க சனநாயகம்.

said...

வாங்க சந்தோஷ்,

நீங்க மேற்கூறிய விடயங்கள் நானும் அறிந்தது தான். அதுக்குத்தானே இந்த வரியே சேர்த்திருக்கிறேன்.//தனது புடுக்கறு்படுவத//

said...

எப்படி நண்பா ! நீங்க பிறக்கும் போதே ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வோடவே பிறந்திங்களா?



அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒழிக.....

said...

தல, இந்த நெக்கல் தானே வேணாங்கறது...
அமெரிக்காவின் மறுகாலனியாதிக்கம் ஒழிக...ஜார்ஜ் புஷ் ஒழிக...அமெரிக்காவே ஒழிக...


அது சரி, மெக்சிகன் மெட்ராஸ் பார்ட் - 2 எப்போ ரிலீஸ்?

said...

அடக்குமுறை
அமெரிக்க ஏகாதிபத்தியமும்
ஆதிக்கவெறி சமுதாயமும்
அழிக....

said...

///
எது எப்படியோ
இனி அமேரிக்கக்காரனின்
கக்கூஸில் கூட
பாம்ப் ஸ்க்வாடு நிற்கும்
///

வேதனையான உண்மை ஆனாலும் படிச்சு சிரிச்சேன்.

said...

கத்தியை எடுத்தவன் கத்தியால் சாவான் என்பது உண்மையாகிவிட்டதே!

said...

லக்கி,
ஆதரவிற்கும் வருகைக்கும் நன்றி.

*****
செந்தில் குமரன்,
வருகைக்கு நன்றி.

*****
கார்மேக ராஜா,
நான் அதெல்லாம் சினிமாவில் மட்டும் தான் என்று எண்ணியிருந்தேன். அது சரி, அப்போ கத்தியை கொடுக்கிறவனுக்கு எதில் சாவு?

நன்றி.

*****
சடையப்பா,
நீர் சொல்வது ஏதும் எனக்கு விளங்கவில்லை. உங்களுடைய இரண்டாவது பின்னூட்டம் அவசியமற்றதாகப் படுகிறது, நீங்கள் மேற்கூறிய பதிவை நான் ஏற்கனவே படித்துவிட்டதால்...

வருகைக்கு நன்றி.

said...

Sadaiappa,

No worries, mate!

said...

அப்டி போட்டு தாக்கு...!!

said...

//அப்டி போட்டு தாக்கு//

ரவி அய்யா,

யாரை தாக்க சொல்றீங்க?
ஜார்ஜ் புஷையா, சடையப்பாவையா?

பாலா

said...

செந்தழல் ரவி,
தல, தாக்கிடுவோம்...பாகம் - 5 எப்போ? செம சுவாரசியாமா எழுதறீங்க...அனுபவத்தை எப்படி எழுதறதுன்னு உங்ககிட்ட தான் கத்துக்கனும்.

வருகைக்கு நன்றி.

*****
பாலா,
உமக்கு சந்துல "சிந்து" பாடறதே வேலையாப் போச்சு.

கடையான்ட வந்ததுக்கு நன்றிங்கோ.

Anonymous said...

யப்பா, ஏதோ தலைப்பை பாத்து பார்ப்புகளை தான் காய்ச்ச போரியோன்னு பாத்த 'புஷ்'ஷுனு ஆயிடுச்சி.