11/27/2006

இருவீடு ஒருவாசல்


நமது முன்னோர்கள் ஆசியாவிலிருந்து படகு மூலமாகவோ, இன்று கடலில் மூழ்கடிக்கப்பட்ட தரைப்பாலம் வழியாகவோ ஆஸ்திரேலியாவிற்கு புலம் பெயர்ந்திருக்கலாம் என்று இன்றைய நாகரீக மக்கள் கதைக்கும் வேலையில், நம்முடைய முகவமைப்பு தென்னிந்தியாவின் தென்கோடியில் வாழும் பூர்வகுடிகள் சிலரைப் போலவும்,இந்தோனேசியாவில் இருக்கும் "செலிபிஸ்" மலைவாழ் பூர்வக்குடிகள் போலவும் மானிடவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்ற வேளையில், நாம் அதைப்பற்றி கதைக்காமல் அதை அவர் வழியில் ஆராயவிடுவோம்.

உண்மையில், "ரிறாத்ஜிங்கு"- எம்மின மக்கள் தொலைதூரத்திற்கு அப்பால் ஏதோ ஒரு கடல்பரப்பின் "பரால்க்கு" தீவிலிருந்தே எமது முன்னோர் "ட்ஜன்காவு" அவருடைய இரு தமக்கைகளோடு அதிகாலை நட்சத்திரத்தைத் தொடர்ந்து "ஆற்னெம்" கிழக்குக்கரையின் "ஏலங்காரா"வின் கரைகளை கிழக்குக்கரையின் படகின் மூலம் வந்தடந்திருக்கலாம் என அறிகிறோம். எம்மின மக்கள் இறக்கும்போது அவர்களுடைய ஆவிகள் எமது பூர்விக "பரால்க்கு" தீவைச் சென்றடையும்...

-Jennifer Isaacs
Australian Dreaming
40,000 years of aboriginal history.


*****
மனிதனுக்கு வெறுப்பும், பழிவாங்கும் உணர்வும் மேலோங்கிவிட்டால் அவன் அதற்காக எவ்விதமான செயலும் எவ்விதமான பயனங்களும் மேற்கொள்ளுவான். ரொட்டித்திருடர்களையும், பொட்டித்திருடர்களையும் தண்டிக்கும் பொருட்டு ஆஸ்திரேலியா வந்த பரங்கித் தலையர்கள் இங்கிருந்த கனிமவளங்களைக் கண்டு இங்கேயே கூடாரமிட்டனர். அத்தோடில்லாமல் இங்கிருந்த பூர்வக்குடிகளையும் அழித்து தம் ஏகாதிபத்தியத்தை நிலைநாட்டினர். இன்றும் கூட "வருந்தும் நாள்" என்று கைகுலுக்கும் நாளை பரங்கியர்கள் கொண்டாடினாலும் பூர்வ குடிகள் என்றும் "black fellas்" தான்.

பூர்வக்குடிகளின் சிலர் மனிதனின் ஆறறிவோடு மிருகத்திற்கு ஒப்பான அபூர்வமான மோப்பம் பிடிக்கும் திறனையும், அவர்களின் வாழ்வியல் நிலமான செம்மலை பூமியையும் அதன் சார்ந்த இடங்களையும் நன்றாகவே அறிந்திருந்தனர். இதனால் பிராதான நிலப்பகுதியில் சிறுதவறுகளைப் புரிந்து செம்மலை பூமியில் அடைக்கலமாகும் பூர்வக்குடியினரை சிற பிடிக்க இவ்விதமான அபூர்வத்திறனைக் கொண்ட இன்னுமொரு பூர்வக்குடியானவனையே தேர்ந்தெடுத்தனர். அதைப் போன்றதொரு "தடயவியலாளன்"ஐப் பற்றியதொரு திரைப்படம் தான் "The tracker".

மிகவும் சிறப்பான காட்சியமைப்புகளும், பூர்வக்குடிகளின் ஓவியக்கலை மற்றும் நாட்டியக்கலைகளையும், ஆஸ்திரேலியாவின் செம்மன் மலைப் பிரதேசங்களை மிகத் தத்ரூபாமாக படம்பிடித்த விதமும், பரங்கித்தலையர்களின் இனவெறுப்பும் அவர்களின் நிற ஏகதிபத்தியத்தை நிலைநாட்ட அவர்கள் நடத்திய முழுவதுமான இனவொழிப்பையும், பூர்வக்குடிகளின் கூட்டுவாழ்க்கை குடும்ப முறைகளையும் அவர்களின் நீதி வழங்கும் முறையையும் அருமையாக விளக்கிய திரைப்படம். பொதுவாக ஆஸ்திரேலிய திரைப்படங்கள் உலகளாவிய முக்கியத்துவம் பெறாவிட்டாலும் இதைப்போன்றதொரு சிறப்பான திரைப்படங்களும் அவ்வப்போது வந்துக் கொண்டுதானிருக்கின்றன.

இப்படத்தின் நாயகனாக வரும் தடவியலாளன் "கல்பிலில்" ஆஸ்திரேலியாவின் பூர்வக்குடிகளின் "தலைமகனாக"க் கருதப்படுபவர். இவரும் பூர்வக்குடியானாக இருப்பதாலோ என்னவோ அவருடைய நடிப்பும், உணர்ச்சிகளை வெளிப்படுத்திய விதமும் நம்மை 1922க்கே அழத்துச் செல்கின்றன. குற்றஞ்சாட்டப்பட்ட சக பூர்வக்குடியைத் தேடிச் செல்லும்போது நிறவெறி, இனவெறி பிடித்த பரங்கிய காவல்துறைத் தலைவன் வழியெங்கிலும் வன்முறையைக் கையான்டு பூர்வக்குடிகளின் உயிரைக் கொன்று சிதைக்கும் வலியைப் புன்னகையோடேந்தி அவனுடைய வழியிலேயே அவனுக்கு இறுதி தீர்ப்பை வாசிக்கும் பொழுது "கல்பிலில்" நமது மனதில் நிற்கிறார்.

*****

இன்றைய நுட்பம் சார்ந்த நாகரீக உலகில் இணையமும், இணைய அளாவல்களும் இன்றியமையா இடத்தை அடைகின்ற வேளையில் இணையம் சார்ந்த ஊடகங்களும் வலுப்பெறுகின்றன. அதனூடே ஊடகம் சார்ந்த வன்முறைகளும் பெருகிக் கொண்டுதான் இருக்கிறது. மனிதனில் மூலை ஒரு நகரை நிர்மானிக்கும் அறிவைப்பேற்றிருந்த போதிலும் அதே அறிவு அந்நகரை அழிக்கும் அணுகுண்டு போன்ற பேரழிவுமிக்க ஆயுதங்களையும் உருவாக்கியது. ஆக மிருகம் கூட பசியெடுத்தால் தான் வேட்டையாடும் என்றிருக்கையில் மனிதனின் பழிவாங்கும் போக்கும் அவன் தம் சாதி/மதத்தின் மேல் கொண்டுள்ள பற்றுதல்களும் அவனை உலகின் எவ்விதமான உயிரினங்களொடு ஒப்பிட இயலாத அளவிற்கு அவனுடைய நுண்ணறிவு வன்முறை அளவுகடந்து நிரம்பி வழிகின்றது.

இன்று நாமும் வலைப்பதிகிறோம். ஒருவர் ஒன்றொ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வலைப்பதிவுகளையோ சொந்தப் பெயரிலோ அல்லது புனைப்பெயரிலோ அல்லது பெயர் மாற்றியோ எழுதிக்கொண்டு தான் வருகிறோம். அது அவரவர் கருத்து மட்டுமல்லாமல் கட்டிவைத்த அல்லது ஏற்றிவிடப்பட்ட பிம்பத்தை பொறுத்தது. ஒரு சிலர் நேரங்காலம் தெரியாமல் ஒரேபதிவில் அவர் அறியாமலே இன்னொரு "குசும்பு" பெயரில் பின்னூட்டி சந்து முதல் சந்தி சிரித்த அவலங்களும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றது. மற்றுமொரு கூட்டம் நட்புவட்டத்தின் பெயரை குலுக்கிப் போட்டும் இன்னொறுவரின் சொந்த வாழ்க்கையின் நிகழ்வுகளை சுருட்டி தனிப்பதிவில் அரங்கேற்றும் அவலங்களும் நடந்துக் கொண்டுதானிருக்கிறது. இதன் மூலம் சந்தி தம்மினம் சந்தி சிரிப்பதாத ஆழ்ந்த மனம் பிறழ்ந்த "கொலைப்பதிவர்" ஒருவர் எப்படியாவது தம்மின மக்களை காக்கும் பொருட்டு ஒரு "நாங்கு வரி" அவதார புருஷனாக முயற்சி செய்கையில் ஏழுகடல் தாண்டி வந்த அறிவுரையின் படி வலைபதிவர் அனைவருக்கும் இக்"கொலைபதிவர்" ஒரு மின்னஞ்சல் அனுப்பி தன் "நாய்" போன்ற மோப்ப சக்தியை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். இக்கொலைபதிவர் பல்வேறு காலகட்டங்களில் தர்ம அடி வாங்கி அமுக்கி வாசித்தவர் இப்போதும் தன் "ஜென்ம புத்தி"யை (நன்றி:மாயவரத்தான்) காட்டி தம்மினத்தை காக்க அவதாரம் எடுத்துள்ளார். இப்போது அவர் வெறும் "ஹின்ட்" மட்டும் கொடுத்து ஏற்கனவே டவுசர் கிழிந்து போன ஒரு டவுசர் பான்டியை வைத்து எழுத விடுகிறவர். இதை அவர் புத்திசாலித் தனமாக நினைத்து செய்வதாக நினைத்தாலும் இவர்கள் அழிக்க நினைக்கிற இன்னொரு கூட்டம் மற்றுமொரு நுண்ணறிவு தாக்குதலுக்கு தயாராகிவிட்டதாகவேத் தெரிகிறது.

கீழே வருவது அவருடைய "கூகிள்" தேடலின் அறிவால் வந்த "நுட்பறிவு"...

What is ReadNotify?

ReadNotify is the most powerful and reliable email tracking service that exists today. In short - ReadNotify tells you when email you sent gets read / re-opened / forwarded and so much more

How do I send a tracked email?

There are two ways you can send tracked emails:

  1. Simply add: .readnotify.com to the end of your recipients email address (they won't see this)
    or
  2. Install our ActiveTracker plugin to add the tracking for you.

Testing? If you send tracked emails to yourself, your anti-spam filters may block them (people don't usually write to themselves) - so we recommend you test by sending to other people.

What will you tell me about the tracked emails I send?

ReadNotify will endeavour to provide the following in your tracking reports:

  • Date and time opened
  • Location of recipient (per their ISP city /town)
  • Map of location (available on paid subscriptions)
  • Recipients IP address
  • Apparent email address of opening (if available)
  • Referrer details (ie; if accessed via web mail etc)
  • URL clicks
  • How long the email was read for
  • How many times your email was opened
  • If your email was forwarded, or opened on a different computer
All messages sent via ReadNotify benefit from our SPF compliant and Sender-ID compliant mail servers. This confirms safe transmission of your messages, and also enables us to report delivery status to you (including: bounce-backs, delays and success notifications). Delivery information is listed in your Personal Tracking Page.

Try hovering your mouse over the sections in our Live Sample Receipt for more information.

Note: ReadNotify.com does not use or contain any sp‌y-ware, ma‌l-ware, nor vi‌rues, it is not ill‌egal to use, and does not breach any pri‌vacy reg‌ulations in any countries.

6 comments:

said...

சத்யா "The Tracker" படம் பார்க்கும் ஆவலை தூண்டிவிட்டீர்கள்.

//கீழே வருவது அவருடைய "கூகிள்" தேடலின் அறிவால் வந்த "நுட்பறிவு"...

What is ReadNotify?//
அது சரி இந்த ReadNotify தான் அந்த மோப்ப நாயா? அப்போ எஜமான் யாருங்க?

கலக்குறே சத்யா...

said...

குழலி,
நிச்சயமாக பார்க்க வேண்டிய திரைப்படம்தான்.

அதான் தெள்ளத்தெளிவாக சொல்லியிருக்கிறேனே...நாயையும் அதன் எசமானர்களையும்...:-))

chk this site
www.ReadNotify.com

said...

mayiladuthurai@gmail.com எனும் முகவரியில் இருந்து என்னுடைய பதிவின் லிங்கை உங்கள் பதிவில் இருந்து எடுத்து விடுங்கள் என்று அன்பு எச்சரிக்கை செய்து அதன் கீழ் ஒரு எச்.டிஎ.எல் கோப்பினை இணைத்து இதனை திறந்து பாருங்கள் என எழுதப் பட்டிருந்தது.

இப்போதுதான் தெரிகிறது குள்ளநரி பார்ப்பனர்களின் தந்திரம். நல்லவேளையாக கடாசி விட்டேன்!!!

இது அதுதானா?

said...

//அதான் தெள்ளத்தெளிவாக சொல்லியிருக்கிறேனே...நாயையும் அதன் எசமானர்களையும்...:-))
//
புரியுது.... புரியுது.... யாராரை மோப்பம் புடிக்க போனதோ....

Anonymous said...

விடாது கருப்பு எனும் மூர்த்தி இவ்வளவு முட்டளாக இருப்பார் என்று தெரியவில்லை. அட, அந்த மெயிலை திறந்து பார்த்தாலே போதும் என்று அந்த தளத்தில் தெள்ளத் தெளிவாக சொல்லியிருக்கிறதே. அப்புறம் இவர் அதை கடாசிவிட்டால் மட்டும் போனால் போகுது என்று விட்டு விடவா போகிறது. பலரின் டங்கு வார் இணையத்தில் இப்போது அறுந்து கொண்டிருப்பதும், பல புனித பிம்பங்கள் சாய இருப்பதும் புரிகிறது. இணைய தளத்தினுள் டிரேக்கரை வைத்து ப்லிம் காட்டிக் கொண்டிருந்த உங்களுக்கெல்லாம் இது தான் 'சூப்பர் ஆப்பு'

said...

Email spyware

It turns out that one of the methods HP investigators used was a service called ReadNotify. It’s a tracker that tells someone when an email is open by a designated recipient. Basically, it drops a small amount of html code into an email that reports back when you’ve opened the email (this is usually referred to as a web bug).

Email spyware? Yes, and remember that if you subscribe to newsletters and the like, chances are that email’s delivery is already being tracked through web bugs. And spammers have certainly used this trick to track what email addresses are live. But Readnotify is a little scarier — it’s not some nameless tracking of broad open rates on emails — it’s someone who is personally tracking the emails they’ve sent you.

Creepy? Yup.

Using ReadNotify is fairly straightforward (after you signup with their service): You can either download a plug-in, or you can simply append “.readnotify.com” after the end of an email.

The email looks normal, so the only way you can tell if you’re being tracked is by looking in the message header.

Or, if you read messages in plain text, you’ll see the web bug they put in the email, and can readily see if you’re being tracked (and also, if you’re in plain text, the tracking won’t work). The emails will also ask you for a Return Receipt (which I routinely ignore, despicable things that they are).

However, if you prefer to keep reading email with pretty fonts and graphics (as opposed to plain text, which is always the safest method), you can create a simple Outlook rule to look for Readnotify.

For example, you could create a simple rule in Outlook which puts a colored flag or some time of visual cue whenever someone sends you a Readnotify message. It’s not perfect, but it’s a start.

Simply create an Outlook rule, select "with specific words in the message header" and then add the following strings:

readnotify.com
readnotify
emsvr.com

(If you need help creating rules, twclark has a nice explanation of creating x-header rules — at least for spam — here.)

Also, turning off images in your email program should stop the notification to Readnotify as well..

As a side note, Emsvr.com, related to readnotify.com, has one of the creepier websites, using “The great leap forward” to describe their service. Never mind that the term “the great leap forward” is generally associated with Mao Tse Tung’s disastours attempt to rapidly advance China, leading to the deaths of, oh, about 14–20 million Chinese. The site also inserts “We hope you enjoyed your www.emsvr.com site visit” persistently into your clipboard.”. Like I said, creepy.

I’m sure some enterprising fellow will think up a better Outlook rule than me, so feel free to drop a comment if you’ve got a better idea. And keep in mind these rules will only work for Readnotify, and not other email tracking services — and will only work as long as Readnotify puts that domain into the email.