7/28/2007

யாரந்த தமிழச்சி?

யாரந்த தமிழச்சி?

ஊரெல்லாம் ஒரே பரபரப்பு...பதட்டம்...துப்பாக்கிச்சூடு...கலவரம்...

ஓசையார் கும்மியோடு கோலாட்டமும் வேண்டுமென்று இரு கைகளாலும் தம் குறுந்தாடியின் மயிர்களை எண்ணிக் கொண்டிருக்க, இன்னொரு தோழர் தன் லேடி ப்ராஜெக்ட் மேனேஜரோடு தென் - வட கொரிய
எல்லையில் ஏதோ ஒரு வாக்கிங் டிரெயிலில் கேம்ப்படித்து சாப்ட்வேர் டெஸ்டிங் செய்து கொண்டிருக்க...சிறுவாணிகன் பொட்"டீ"யான் மட்டும் பித்தம் தலைக்கேறி இஞ்சி சாறு குடிக்க, மேற்கத்திய சியர்ஸுக்கான
புதிய வியாக்கானத்தோடு தோழர் வரவனையான் ஓல்டு மாங்க் ஒரு கட்டிங் அடித்து என்னோடு வீடியோ கான்பெரண்ஸில் சியர்ஸ் சொல்லி ஒரே கல்ப்பில் குடித்து முடிக்குமுன்னே நான் தோழர்
தமிழச்சி பதிவில் இன்னொரு ஸ்பாம் "பிரசுரிக்க வேண்டாம்" என்ற தலைப்பில் இவ்வாரத்தின் மிகப்பெரிய ஜொள்ளோடு "தோழர் தாங்கள் யார்" என்று என்னிடமாவது சொல்லுங்கள் என்று
மண்டியிட்டு கெஞ்சிக் கொண்டிருக்க...ஊரெல்லாம் ஒரே பரபரப்பு!!!

இந்தியா தொடங்கி அமேரிக்கா,சிங்கப்பூர்...அவுசுதிரேலியா என்று கேஜிபியையும், எஃப் பி அய்யையும், ஏ எஃப் பியையும் மிஞ்சும் வகையில் இண்டர்போல் உதவியோடு யாரந்த தமிழச்சி என்று
வலைவீசித் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இன்னொரு சீக்ரெட் ஏஜெண்ட்...தமிழச்சிக்கு தூங்குவதைத் தவிர வேறெதுவும் வேலை அவ்வளவாக இல்லை. நீங்களே லாஜிக்கோடு யோசிச்சுப் பாருங்கள்
யாராவது 4 மாதாங்களில் நானூறு பதிவு போட முடியுமாவென்று? என்று என்னுடைய லாஜிக்கல் திங்கிங்கை கேவலப்படுத்த...நானோ அவர் மெத்ரோவில் பயனஞ்செய்யும் பொழுது(தோழர் விடாதுகருப்பு பயனத்தின் போது யோசிப்பது போல) அவருடைய மடிக்கணினியில்
தட்டச்சு செய்வார் என்று என்றோ சாரு நிவேதிதாவின் வாசகர் ஒருவரின் வாசிப்பு அனுபவத்தை உல்டா செய்து அல்டாப்பு விட்டுக் கொண்டிருக்க...கொழுப்பு மிதமிஞ்சி என்னுடைய சிறுமூளை சீழ்களாக
என் காதில் வழிய அதை ஒரு கையால் பக்கத்திலிருந்த பெர்ஃப்யூம்டு திசுவினால் வழித்து போட்டு இப்படி ஒரு டிஸ்கஸ்டிங்கான பதிவொண்டை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

என்ன பன்றது? ரெண்டு நாளா ஒடம்புக்கு ஓய்வு கொடுக்க சொல்லி உத்தரவு அதான் ஆன்லைனே கெதியென்று கிடக்கிறேன்...

நோ அப்யூஸ்...ஃபுல் & ஃபுல் மொக்கை தான்...எஞ்சாய் த வீக்கெண்ட்...

7/27/2007

...mud on our face...big disgrace...


ஏவாளின் திருவுருவப் படம்...விழுந்து தொழுது கொள்ளவும்






இன்னபிற அஞ்சலையம்மனுக்கு ஆப்பு வெச்ச ஏவாளாத்தா வாழ்க வளர்க அவர் தம் புகழ்

7/26/2007

பாயும் தமிழச்சி பதுங்கும் செல்லா - ஓரத்தில் ஒதுங்கிய பொட்"டீ"கடை



ஏன் மகா ஏனாயித்து?
தும்ப கஷ்டாகித்துரீ
ஏன்ரீ

யேய் புண்ணாக்கு மண்டையா அதான் உனுக்கு வரலல்ல அப்றம் என்னா மயித்துக்கு ஏன்ரீ நோன்ரீன்னுகிட்டு...வந்த வேலைய பாரு...

தோழர் தமிழச்சி அவர்கள் தமிழ்கூறும் வலையுலக வரலாற்றிலேயே முதன்முறையாக "வெண்தாடி வேந்தன்" ஈ வே ராமசாமி பெரியாரின் பேச்சுக்களையும் எழுத்தையும் அவர் சம்மந்தப்பட்ட இன்னபிற
நிகழ்வுகளையும் வலையிலேற்றிவருகிறார். அதற்காக நன்றிப்பெருங்கடன் பட்டிருக்கிறோம் என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


டிஸ்கி:
அரைநான் கோவண நாகரீக முன்னோடியான திராவிட தமிழர்களின்(வலைக்குழு அல்ல) பெண்பால் தமிழச்சி என்று விளிக்கப்படும். க்ளோஸ் பிரெண்டுகளை என் தோழி "செல்லா" என்று தான் அழைப்பாள். இந்த பதிவு யாரையும் புண்படுத்த அல்ல. இங்கு எழுதப்பட்டதை யார் வேண்டுமானாலும் திருடிக்கொள்ளலாம். சிவாஜி த லாஸ் என்ற வலைப்பதிவர் முக்கியமாக இதைத் திருடிக் கொள்ளலாம்.

தோழர் "தமிழச்சி"யின் இரு இடுகைகள் இரண்டு நாட்களாக சுடச் சுட சூடாக தமிழ்மண முகப்பில் இருக்கிறது. தோழர் கும்முவதற்கு ஒத்துழைக்க மறுத்து ஒண்டிக்கு ஒண்டி கராத்தே போட கூப்பிடுகிறார். அதுவும் தொப்பையும் தொந்தியுமான அப்பாவி "ப்ரென்ச் தாடி" செல்லாவைப் பார்த்து. இன்று மாலை குட்டிக் கழுகார் கோவை "கை"சூப்பிரமணி டீக்கடையின் செல்லக்குட்டி "சிட்டுக்குருவி"யிடம் பிட்டு போட்டதில், தோழர் தமிழச்சியின் ஒண்டிக்கு ஒண்டியில் "ப்ரென்ச் தாடி" செல்லா "ஆட்டுதாடி" செல்லாவாகி விட்டாராம். தோழர் தமிழச்சி அவர்களே உங்களுக்கு ஏனிந்த ஒண்டிக்கு ஒண்டி கொலைவெறி... சாதா"ரண"மாக முறைத்தாலே குப்புற விழும் ஒரு அப்பாவியிடம் போய் ஒண்டிக்கொண்டி கராத்தே கூப்பிட்டு இருக்கிறீர்கள்.( சும்மா தமாசுக்கு தானே கூப்பிட்டீங்க...இல்லை சீரியாசாவேவா)...சீரியஸாகவென்றால் என்னைக் கூப்பிடுங்கள்...பிரான்ஸ் சுத்திப் பார்க்கவேண்டுமென்பது ரொம்ப நாள் கனவு...அதுவும் "கொர்பூசியே"வின்
ரான் சேம்ப் "சேப்பலையும்...யுனைட்டெட் ஹாபிட்டேசனயும்...வில்லா சாவொய்யும் பார்க்க ரொம்ப நாள் ஆசை.(ஆமா நீங்க ப்ளாக் பெல்ட்டா...பெல்ட்டு கட்டிட்டு சர்டிபிகேட் வாங்கும் போது எதுனா ப்லெட்ஜ் எடுத்தீங்களா...எடுத்திருந்தீங்கன்னா "ஆட்டு தாடி" செல்லாவை குமுறுவதற்கு ஒண்டிக்கொண்டி கூப்பிட்டு இருக்க மாட்டீர்கள்)




சரி ப்ரீயா விடுங்க...நீங்க மொதல்ல செய்ய வேண்டியது என்னான்ன உங்க வலைப்பூவோட முகப்பில "இங்கு இருக்கும் அனைத்தும் எனக்கே சொந்தம்" என் அனுமதியில்லாமல் யாரும் திருடக்கூடாது என்று ஒரு அறிவிப்பு போடுங்க...அது சரி விடுதலைல இருந்து சுடறீங்களே(சுட்டதா இல்லை அனுமதி வாங்கி தான் போடறீங்களா?) ஸ்கேண்டு கோப்புகள் இருந்தால் எனக்கு அனுப்பி வைக்கவும்.தமிழில் தட்டச்சு செய்து கொடுக்கிறேன்.

அப்பால ரிவீட்டு...இதக்காண்டி மார்சியல் ஆர்ட்ஸ் மொரையா கத்துக்கனுவுங்கோ எடுத்துக்கற மொத ப்லெட்ஜே யாராண்டையும் நா ஒயிட்டு நீ சட்டைய கயிட்டுன்னுட்ட சண்டைக்கு இழுக்கக் கூடாது.ஏன்னா மாமல்லபுரத்து செவந்த் மைல் ல நாங்களும் மூனுவருசம் முழுநேரமும் ஒரு தற்காப்பு பயிற்சி(மன்சூரியன்) வகுப்பில் ஓரமா "ஸ்பாரிங்" செஞ்சிகினு இருந்தவைங்க தான்.

இப்போதைக்கு நா அப்பீட்டு...அப்பாலிக்கா எனுக்கு அடிங்கோ ரிவீட்டுடுடுடு...........




7/21/2007

கூட்டமா வந்து கும்மாளம் போடறேளா?

7/19/2007

கேதரீனாவுக்காய் ஒரு காதல் கடிதம்

















உமிழ்ந்த சாந்திப்பாக்கின்
எச்சில் காய்வதற்குள்ளும்
இன்னொருவன் மணியடிக்க

ஈரமான தூமச்சீலை
ஈரமாகவே இருக்க
மற்றொருவன் குறியரிக்க

நான் என் குறியறுத்து
நீ உன் குறியடைத்து
போலி ஆண்மையும்
கூலி பெண்மையும்
ஒழித்தோடி

எக்குத்தப்பாய் அல்லாமல்
குறிபார்த்து எல்லோர்
முகத்திலும்
எட்டி உதைக்கலாம் வா

7/18/2007

பெண்ணீயம் பேசாதே





















புட்டத்தின் இடையில்
உரசியது
என்னவென்று தெரியாமல்
பிடித்துப் பார்த்தேன்

சிறிது மிருதுவாகவும்
சிறிது கடினமாகவும்
இருந்தது

வீணாய் பொரும மனதின்றி
கொட்டையுடன் பிடித்து
நசுக்கினேன்

கத்தமுடியாது வேதனையில்
சிந்திய அவனது
கண்ணீரில் எனது சுகம்

புலம் பெயர்ந்த சகோதரி "யேனல் அலமேலு" அவர்களின் 'குறியொடிப்பு '
என்ற கவிதைத் தொகுப்பிலிருந்து...

7/17/2007

மருத்துவன் அனீப் தீவிரவாதியா?

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய தூதரக அதிகாரி என்ற நாதாரி எங்கெல்லாம் கலாச்சார விழா என்ற பெயரில் பாலிவுட் டான்ஸ் நடக்கிறதோ அங்கெல்லாம் குண்டியை இருத்தி கைவலிக்க கைதட்டியும் வாய் வலிக்க ஜொள்ளு விட்டும் மட்டும் வருவார் ஆனால் ஒரு இந்தியக் குடிமகனை அதுவும் கெஜட்டட் தர அந்தஸ்து உள்ள ஒரு மருத்துவனை அவுசுதிரேலிய அரசாங்கமானது ஒரு சொறி நாயைவிட கேவலமாக நடத்தியும் ஒரு அறிக்கையோ அல்லது அவுஸ்திரேலிய அரசினை அறிவுறுத்தும்படியான எந்தவொரு வேண்டுகோளும் வைக்க முடியவில்லை.

இந்தியாவில் இருந்த "தடா" "பொடா" சட்டத்தைப் போல் இங்கும் "கண்டாரஓழி" சட்டம் உள்ளது. அதாவது விசாரணைக்கைதியாக எத்தனை வருடம் வேண்டுமானாலும் "பெயில்" இல்லாமல் சிறைப்படுத்தி வைத்திருக்கலாம். அதில் கைது செய்யப்பட்டு கேவலமாக நடத்தபட்டும் நீதிபதிகளே கடுப்பாகுமளவுக்கு அலைகழிக்கப்பட்டும் வருகிறார். பாரதப் பிரதமரோ "விவகாரங்களை உன்னிப்பாக கவனித்து வருவதாக" செய்தியாளர்களிடம் அறிக்கை விடுகிறார். இங்கு அனீப் குற்றவாளியாகவே இருந்தாலும் கூட இம்மாதிரியான துன்புறுத்தல் மனித உரிமையை மீறும் செயலாகும். அனீப்பின் விவகாரம் அவுஸ்திரேலியாவையே "கலக்கி" வருகிற வேளையில் இந்தியாவில் இது தொடர்பாக எந்தவொரு நிகழ்வும் நடந்ததாகத் தெரியவில்லை.

இங்கு அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய விடயம், குற்றம் நடந்த இடம் க்ளாஸ்கோ விமான நிலையம், ஸ்காட்லாந்து. அங்கு கூட அனீப்பின் மேல் குற்றம் பதிவாயிருக்கவில்லை. இங்கும்கூட குற்றஞ்சாட்டப்பட்டிருக்கறாரேயொழிய குற்றம் புரிந்து மாட்டிக் கொண்டவராயில்லை. ஆக என்னளவில் அவர் ஒரு அப்பாவி தான் இன்னிமிடம் வரை. அவர் மேல் எனக்கும் கடந்த வாரம் சந்தேகம் இருந்தது ஆனால் அவுசுதிரேலிய போலிசார் அவர் மீது பதிந்த வழக்கினடிப்படையில் அவர் ஒரு அப்பாவி என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. அதே அடிப்படையிலேயே நீதிபதியும் அனீப்புக்கு பெயில் அளித்து தீர்ப்பு கூறினார். ஆனால் தீர்ப்பு வழங்கிய சில மணித்துளிகளில் அவுசுதிரேலிய விருந்தாளிக்குப் பிறந்த குடியமர்வுத்துறை அமைச்சர் அனீப்பின் விசாவை "நடத்தை சரியில்லதவர்" என்ற ஒரு செல்லாக்காசு காரணத்தைக்கூறி ரத்து செய்துவிட்டார்.

குடியமர்வுத்துறை சட்டதிட்டங்களின் படி ஒருவரின் விசா காலாவதியானாலோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ அவர் உடனடியாக நாடு கடத்தப்படுவார். ஆனால் அனீப் நாடு கடத்த வேண்டுமென்றால் அவர் முதலில் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட வேண்டும். ஆனால் இந்த வழக்கானது முடிவு பெற சிலமாதங்களோ அல்லது சில வருடங்களோ கூட ஆகலாம். ஆகையால் அதுவரை அவர் சட்டவிரோதமாக தங்கியிருப்பதினால் அவரை சிட்னியில் உள்ள "வில்லாவுட் டிடென்சன் செண்டர்"ல் அடைக்க முடிவு செய்தே அமைச்சர் இம்மாதிரியான பொறுக்கித்தனமான சில்லரைத்தனமான வேலையில் ஈடுபட்டுள்ளார்.

வில்லாவுட்டில் அடைக்கப்படுவதனால் ஏற்படும் சிரமங்கள்.

1. தற்போது இலவச சட்ட ஆலோசனையும், அவருக்காக வழக்காடிவரும் வழக்குறைஞர் பீட்டர் ரூஸோ பிரிஸ்பர்ணில் இருக்கிறார். இதனால் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கும் வழக்குறைஞருக்குமான தொடர்பை வெகுவாக குறைத்து அனீப்பை தனிமைப்படுத்தலாம்.

2.ஒவ்வொரு முறையும் பிரிஸ்பேனுக்கு அழைத்துவரப்பட்டு தான் நீதிமன்றத்தின் முன் நிறுத்தமுடியும். இதனால் வாரம் ஒரு முறை அல்லது இரண்டு வாரங்களுக்கொரு முறை தோன்றுவது சாத்திய்ப்படாததலால்
சிலமாதங்களுக்கு ஒருமுறை வரும்படி வழக்கை கால விரையப்படுத்தலாம்.

அரசாங்கத்தினருக்கு ஏற்படும் "மலிவு" நன்மைகள்

1.அடுத்த வருடம் நடைபெற இருக்கிற பொது தேர்தலில் தற்போதைய "ஹோவர்டு" தலைமையிலான ஆளும் கூட்டணி கண்டிப்பாக மண்ணைக் கவ்வுவது உறுதி என்ற அடிப்படையில் பார்த்தால் "தீவிரவாத அச்சுறுத்தல்" என்ற பெயரில் யாராவது ஒரு அப்பாவியை பலிகிடாவாக்கி ஒரு சில சில்லரை ஓட்டுக்களை அல்லலாம். ( A cheap old scare tactic used by Bastard Bush jr.)

2.எதிர் கட்சியான "கெவின் ரட்" தலைமையிலான "லேபர் பார்ட்டி"யும் அதனடிப்படையிலேயே அரசாங்கத்தினருக்கு எதிராக குரல் கொடுக்காமல் அவர்களின் செயல்களை ஆதரிக்க முனைந்துள்ளனர்.

முடிவு

எப்பாடுபட்டாவது அடுத்தவருடத்திற்குள் அனீப்பை ஏதாவது ஒரு குற்றஞ்சுமத்தி பலிகிடாவாக்கியே ஆகவேண்டும் என்ற நிர்ப்பந்தம்.

இதெல்லாம் அடுத்தவருடத்திற்கான தேர்தலை முன்னிருத்தி நடக்கிறதென வைத்துக்கொண்டாலும் இந்திய அரசாங்கம் ஒரு இந்தியப் பிரஜையின் தனி மனித உரிமையை காக்கவும், அவன் நல்லவன் தான் என நிரூபிப்பதற்கு எவ்விதத்தில் அவனுக்கு உதவியுள்ளனர் என்று தெரியவில்லை. கன்சு"லேட்" ஜெனரல் கனபதி அவர்கள் யாருடைய மயிரைப் புடுங்கிக் கொண்டிருக்கிறாரென எனக்குத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லவும்.

அனீப்பின் ஒரே தவறு.

பயம் காரணமாக அவசர அவசரமாக ஊரைவிட்டு வெளியேற முயன்றது தான்...:((

தொடர்பான இணைப்புகள்

Haneef visa revoke full copy

Haneef bail delay option

outraged prominent lawyer

bail then jail

where is the justice for Dr.Haneef

7/16/2007

ஏ அஜக்தா...எங்களாண்டேவா...

பின்னூட்டமிடக் கூட நேரமின்றி வெறும் மேய்ச்சலோடு நிறுத்திக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் தமிழ்மணம் எல் எல் சி யிடமிருந்து ஒரு மின்னஞ்சல். அதாவது தமிழ்மண வாசிப்பில் என்ற தலைப்பில் பூங்காவுக்காய் நான் எழுத வேண்டுமென்று...கொஞ்சம் நகைச்சுவையான விடயம்தான் என்றாலும் தமிழ்மண குசினி அரசியலில் மீண்டும் தலைகொடுத்து வால்வெட்டிக் கொள்வதில் நாட்டமில்லை என்பதாலும் மீண்டும் அவர் எழுப்பப்போகும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் அளவிற்கு என்னுடைய பணிப்பளு இடம் கொடுக்காது என்பதாலும், நான் பதிவெழுதி சில வாரங்கள் ஆகிறதென்பதாலும் சொந்த செலவில் சூனியம் வைக்கும் நப்பாசை மீண்டும் துளிர்த்ததாலும் கடந்த வார தமிழ்மண வாசிப்பு ஓரளவு சுவாரசியமாகவே இருந்தது.

கடந்த வாரத்தின் முற்பகுதியில் பிரபல பத்திரிகையாளர் மாலனின் எட்டியவரைக்கும் ஒரு எட்டு என்பதில் அவர் தம்முடைய அனுபவங்களையும் தமிழிணையப்பிதா மற்றும் அது தொடர்பான பெயரிலியின் விட்டதைத் தொட்டப் பதிவும் அதைத் தொடரும் பின்னூட்டங்களும் ஒரு சுவாரசியமான விடயம். அது சங்கிலித்தொடர் போல இன்னும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. எது என்னவோ இன்று நானும் இங்கே குப்பை பொறுக்குவதற்கும் பொறுக்கியதை கழிவதற்கும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த இணையத்தமிழின் மூத்தோர்களுக்கும் இன்னபிற பெயரறியா சிறியோர்களுக்கும் நன்றிகள்பல. என்னதான் கண்டுபிடிப்பு பெரியதாயிருந்தாலும் தமிழிணையத்தை செதுக்கிய யாருக்கும் வேர்ல்டு வைட் வெப்"பின் நாற்சந்தியில் சிலைவடித்து பட்டாபிசேகம் செய்ய இயலாது என்பது மட்டும் நிச்சயம்.

மாலன் அவர்கள் இத்தோடு நிறுத்தியிருந்தால் சுமுகமாயிருந்திருக்கும். ஆனால் வலைப்பதிவு சுதந்திரக் கொட்டையை நசுக்கும் விதமாக தேவையொரு திரட்டி என்ற ரீதியில் எழுதப்பட்ட பதிவும் அது தொடர்பான செல்லாவின் ரீஜண்டான பதில்களும் டண்டனக்கா தான். மாலன், அச்சுலக ஆசிரிய ஆதிக்க மனோபாவத்தை தமிழ்வலையுலகத்திலும் புகுத்தி "இண்டெலெக்சுவல்" பீடத்தை அமைக்க முயல்கிறாரோ எனத் தோன்றியது.

அடுத்ததாக வாசி,வாசி என்று அடச்"சீவாசி" திரைப்படத்தின் விமரிசனங்கள் குப்பைகளை விடவும் கேவலமாக தமிழ்மணத்தில் மணத்துக் கொண்டிருந்த வேளையில் ஈயத்தோடு கொஞ்சம் தங்கத்தையும் இழைத்து லட்சுமி அவர்கள் ஒரு வாதத்தைத் துவக்க, மோகன் தாஸ் அதற்கு தீவிரமான நகைச்சுவையோடு விளக்கம் தர அதற்கு மீண்டும் லட்சுமி பதில் கொடுக்க ஒரே கும்மிதான். தமிழ் திரைப்படங்களில் அதுவும் ரஜினியின் படங்களில் கதாநாயகியை முட்டாளாகவோ அல்லது ஒரு அல்லக்கையாகவோ வரும் வெறும் பாடலுக்கான சதைப்பிண்டங்கள் தான் கதாநாயகிகள். இதையறியா சிற்றிளம்குழந்தையா லட்சுமி அவர்கள்? ஆக தீவிரமாய் இருந்த இவ்விவாதம் ஆசிப் மீரானின் அவரது பாணியிலான இன்னொரு ஈயத்தினால் தற்போதைக்கு ஒரு முற்றுப்புள்ளி.

கடந்த வாரத்தின் அசுரனின் வீரமணி மாமா பதிவில் தொடங்கி, வரவணை அசுரனை சந்தித்தேனில் வளர்ந்து இவ்வாரம் குழலியின் கம்மூனிஸ்ட் பார்ட்டி ஆஃப் மனுதர்மாவும் ஸ்டாலினின் எதிர்வினையும் விவாதம் வளர்வதையும் பலரறியா இயக்கச் செய்திகள் தோழர்கள் மூலமாகவும், திம்மிகள் மூலமாகவும் முரண்டுபட்டு சண்டைக்காளைகளாய் முட்டிக்கொண்டிருக்கின்றன.

செல்வேந்திரனை பின்னூட்டங்கள் வழிதான் தரிசித்திருந்தாலும், அவரது நட்சத்திர வாரத்தில் அவரது எழுத்துக்களை முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவிற்காகவாவது வாசிக்க முடிந்தது. மிகவும் நேர்த்தியாகவும் பல்சுவையோடும் இருந்தன. ஆனாலும் மார்க் போடச் சொல்லிக் கேட்டது தேவையில்லாதது என எனக்குப்பட்டது. மனித உரிமை ஆர்வலரும் சக ஊராரும் பதிவருமான புதுவை கோ. சுகுமாரனின் நேர்காணல் வெகுசன ஊடகமான ஆனந்தவிகடனில் வெளிவந்ததும் அது தொடர்பான விவாதம் செல்வநாயகியின் பதிவில் நடந்துவந்ததும், கடந்த ஆண்டில் மேதாபட்கரை ஒரு பதிவர் குழு சராமாரியாக இந்திய இறையாண்மைக்கு எதிரானவர் எனப் போலிக் குற்றச்சாட்டுகளை ஊகங்களினடிப்படையில் வெளியிட்டதும் அது தொடர்பாக ஒரு பொதுநலன் வழக்கு புஸ்வானகிப்போனதைப் பதிவு செய்ததும் கடந்தவார வாசிப்பில் மனதில் பதிந்தவையாகும்.

7/02/2007

சாம கால பூஜைகள், பஜனையுடன்...


நன்னா சாஷ்டாங்கமா வுழுந்து சேவிச்சுக்கோங்கடா அம்பிகளா....