
உமிழ்ந்த சாந்திப்பாக்கின்
எச்சில் காய்வதற்குள்ளும்
இன்னொருவன் மணியடிக்க
ஈரமான தூமச்சீலை
ஈரமாகவே இருக்க
மற்றொருவன் குறியரிக்க
நான் என் குறியறுத்து
நீ உன் குறியடைத்து
போலி ஆண்மையும்
கூலி பெண்மையும்
ஒழித்தோடி
எக்குத்தப்பாய் அல்லாமல்
குறிபார்த்து எல்லோர்
முகத்திலும்
எட்டி உதைக்கலாம் வா
2 comments:
எக்ஸலண்ட் சபாஷ் பலெ !!!
இதுக்கும் தாவு தீருது மச்சான் :-(
சகோதரியும், நீங்களும் இணைந்து என்னை மட்டும் "குறி" பார்த்து எட்டி உதைக்காமல் மற்ற எல்லோரையும் உதைக்க வேண்டுமாய் எல்லாம் வல்ல மகர நெடுங்குழைகாதனை வேண்டுகிறேன்.
உங்கள் காதல் நிறைவேற வாழ்த்துக்கள்!
Post a Comment