7/16/2007

ஏ அஜக்தா...எங்களாண்டேவா...

பின்னூட்டமிடக் கூட நேரமின்றி வெறும் மேய்ச்சலோடு நிறுத்திக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் தமிழ்மணம் எல் எல் சி யிடமிருந்து ஒரு மின்னஞ்சல். அதாவது தமிழ்மண வாசிப்பில் என்ற தலைப்பில் பூங்காவுக்காய் நான் எழுத வேண்டுமென்று...கொஞ்சம் நகைச்சுவையான விடயம்தான் என்றாலும் தமிழ்மண குசினி அரசியலில் மீண்டும் தலைகொடுத்து வால்வெட்டிக் கொள்வதில் நாட்டமில்லை என்பதாலும் மீண்டும் அவர் எழுப்பப்போகும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் அளவிற்கு என்னுடைய பணிப்பளு இடம் கொடுக்காது என்பதாலும், நான் பதிவெழுதி சில வாரங்கள் ஆகிறதென்பதாலும் சொந்த செலவில் சூனியம் வைக்கும் நப்பாசை மீண்டும் துளிர்த்ததாலும் கடந்த வார தமிழ்மண வாசிப்பு ஓரளவு சுவாரசியமாகவே இருந்தது.

கடந்த வாரத்தின் முற்பகுதியில் பிரபல பத்திரிகையாளர் மாலனின் எட்டியவரைக்கும் ஒரு எட்டு என்பதில் அவர் தம்முடைய அனுபவங்களையும் தமிழிணையப்பிதா மற்றும் அது தொடர்பான பெயரிலியின் விட்டதைத் தொட்டப் பதிவும் அதைத் தொடரும் பின்னூட்டங்களும் ஒரு சுவாரசியமான விடயம். அது சங்கிலித்தொடர் போல இன்னும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. எது என்னவோ இன்று நானும் இங்கே குப்பை பொறுக்குவதற்கும் பொறுக்கியதை கழிவதற்கும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த இணையத்தமிழின் மூத்தோர்களுக்கும் இன்னபிற பெயரறியா சிறியோர்களுக்கும் நன்றிகள்பல. என்னதான் கண்டுபிடிப்பு பெரியதாயிருந்தாலும் தமிழிணையத்தை செதுக்கிய யாருக்கும் வேர்ல்டு வைட் வெப்"பின் நாற்சந்தியில் சிலைவடித்து பட்டாபிசேகம் செய்ய இயலாது என்பது மட்டும் நிச்சயம்.

மாலன் அவர்கள் இத்தோடு நிறுத்தியிருந்தால் சுமுகமாயிருந்திருக்கும். ஆனால் வலைப்பதிவு சுதந்திரக் கொட்டையை நசுக்கும் விதமாக தேவையொரு திரட்டி என்ற ரீதியில் எழுதப்பட்ட பதிவும் அது தொடர்பான செல்லாவின் ரீஜண்டான பதில்களும் டண்டனக்கா தான். மாலன், அச்சுலக ஆசிரிய ஆதிக்க மனோபாவத்தை தமிழ்வலையுலகத்திலும் புகுத்தி "இண்டெலெக்சுவல்" பீடத்தை அமைக்க முயல்கிறாரோ எனத் தோன்றியது.

அடுத்ததாக வாசி,வாசி என்று அடச்"சீவாசி" திரைப்படத்தின் விமரிசனங்கள் குப்பைகளை விடவும் கேவலமாக தமிழ்மணத்தில் மணத்துக் கொண்டிருந்த வேளையில் ஈயத்தோடு கொஞ்சம் தங்கத்தையும் இழைத்து லட்சுமி அவர்கள் ஒரு வாதத்தைத் துவக்க, மோகன் தாஸ் அதற்கு தீவிரமான நகைச்சுவையோடு விளக்கம் தர அதற்கு மீண்டும் லட்சுமி பதில் கொடுக்க ஒரே கும்மிதான். தமிழ் திரைப்படங்களில் அதுவும் ரஜினியின் படங்களில் கதாநாயகியை முட்டாளாகவோ அல்லது ஒரு அல்லக்கையாகவோ வரும் வெறும் பாடலுக்கான சதைப்பிண்டங்கள் தான் கதாநாயகிகள். இதையறியா சிற்றிளம்குழந்தையா லட்சுமி அவர்கள்? ஆக தீவிரமாய் இருந்த இவ்விவாதம் ஆசிப் மீரானின் அவரது பாணியிலான இன்னொரு ஈயத்தினால் தற்போதைக்கு ஒரு முற்றுப்புள்ளி.

கடந்த வாரத்தின் அசுரனின் வீரமணி மாமா பதிவில் தொடங்கி, வரவணை அசுரனை சந்தித்தேனில் வளர்ந்து இவ்வாரம் குழலியின் கம்மூனிஸ்ட் பார்ட்டி ஆஃப் மனுதர்மாவும் ஸ்டாலினின் எதிர்வினையும் விவாதம் வளர்வதையும் பலரறியா இயக்கச் செய்திகள் தோழர்கள் மூலமாகவும், திம்மிகள் மூலமாகவும் முரண்டுபட்டு சண்டைக்காளைகளாய் முட்டிக்கொண்டிருக்கின்றன.

செல்வேந்திரனை பின்னூட்டங்கள் வழிதான் தரிசித்திருந்தாலும், அவரது நட்சத்திர வாரத்தில் அவரது எழுத்துக்களை முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவிற்காகவாவது வாசிக்க முடிந்தது. மிகவும் நேர்த்தியாகவும் பல்சுவையோடும் இருந்தன. ஆனாலும் மார்க் போடச் சொல்லிக் கேட்டது தேவையில்லாதது என எனக்குப்பட்டது. மனித உரிமை ஆர்வலரும் சக ஊராரும் பதிவருமான புதுவை கோ. சுகுமாரனின் நேர்காணல் வெகுசன ஊடகமான ஆனந்தவிகடனில் வெளிவந்ததும் அது தொடர்பான விவாதம் செல்வநாயகியின் பதிவில் நடந்துவந்ததும், கடந்த ஆண்டில் மேதாபட்கரை ஒரு பதிவர் குழு சராமாரியாக இந்திய இறையாண்மைக்கு எதிரானவர் எனப் போலிக் குற்றச்சாட்டுகளை ஊகங்களினடிப்படையில் வெளியிட்டதும் அது தொடர்பாக ஒரு பொதுநலன் வழக்கு புஸ்வானகிப்போனதைப் பதிவு செய்ததும் கடந்தவார வாசிப்பில் மனதில் பதிந்தவையாகும்.

16 comments:

Anonymous said...

பொட்'டீ'கடை அய்யா..,

கொஞ்சம் சிரமம் எடுத்து, நீங்கள் சொல்லியிருக்கும் பதிவுகளுக்கு சுட்டி கொடுத்தால்.. காலத்தால் இந்த பதிவு நிற்கும். கொஞ்சம் சிரமப்படுங்களேன்.

கடும் சொற்கலால் வசைபாடாமல்.. இந்த வேண்டு கோளை எடுத்துக்கொள்ளுங்கள்.

நன்றி!

said...

ஆக பிரச்சினையை மட்டும் தான் நோக்குவீங்க போலிருக்கு ?

வாசிப்புன்னா எவன் எவன் அடிச்சிக்கிறான் என்பதை பார்ப்பது மட்டுமா ?

போய்யா நீயும் உன்னோட வாசிப்பும்...

நான் சொல்லவா

லக்கிலூக்கின் கதை அருமையாக இருந்தது...அதோட வலைச்சர வாசிப்பு பற்றி எழுதி இருந்தது நன்று...

அபி அப்பா போட்ட மொக்கைகள் இரண்டு நன்றி...

சட்னிவடை நானில்லைங்கோ என்ற மகேந்திரன் பதிவும் அதன் ஊடான கும்மியும்...மகேந்திரன் யாருங்கோ என்று கேட்கனும்போல இல்லையா...

கோவியாரின் பதிவு அருமை...எதைப்பத்தியா...அதை அங்கனபோயி பாரும்...ஹா ஹா

(இது அபிஷியல் பின்னூட்டம்...இதுக்கு மேல போடுற பின்னூட்டம் எல்லாம் என்னுது இல்ல)

said...

//இது அபிஷியல் பின்னூட்டம்...இதுக்கு மேல போடுற பின்னூட்டம் எல்லாம் என்னுது இல்ல//

ஆமாமா... மேலே,கீழே போட்டு இருக்குற/போடுற.. என்று வாசிக்கவும்.

Anonymous said...

உங்களையும் எழுத சொன்ன அந்த ஆத்மா.. தன்னைத்தானே நொந்து கொண்டிருக்கும். :))))

Anonymous said...

//பின்னூட்டமிடக் கூட நேரமின்றி//

பெரிய இவரு... போயா... அந்த பக்கம்.

Anonymous said...

ஆனாலும், தமிழ்பதிவுலகிற்கு பதிவுகள் மட்டுமே எழுதி வந்த பத்ரி போன்றோர் வளர்ச்சிக்கு உதவினார்கள் என்று மாலன் சொல்லுவது.. அப்பட்டமான... ----அரசியல்.

Anonymous said...

எங்கே என் பின்னூட்டம்?

said...

தூங்கீட்டியா...? யோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

said...

அடப்போயா, நான் வேற இடம் பார்த்து போகிறேன். பை...

said...

//கடந்த ஆண்டில் மேதாபட்கரை ஒரு பதிவர் குழு சராமாரியாக //
அருந்ததி ராயைச் சொல்றீங்களோ?

said...

////கடந்த ஆண்டில் மேதாபட்கரை ஒரு பதிவர் குழு சராமாரியாக //
அருந்ததி ராயைச் சொல்றீங்களோ///

அட என்னம்மா? இப்புடி கேட்டுபுட்ட? வஜ்ரா, ரவி எல்லாம் கும்பகூடியில்ல மேதா மேல சேத்த வாரி எரச்சானுங்க...
இந்தியாவோட ஸ்திரத்தன்மைய கொரைக்கனுமின்னுட்டு வெளினாட்டு சக்திகள்ட்ட பணம் வாங்கிட்டு ஏஜெண்டு வேலை பாக்கறாங்கன்னிட்டு...
இப்புடி அப்பாவியா இருக்கியேம்மா...

said...

ந்ந்ந்ந்தா வந்துட்டேன்...பார் வரைக்கும் பீருக்கு போயிருந்தேன்...

கருமம் புடிச்சவனுங்க...கருவாடு சைட் டிஷ்ஷாம். அதை சாஸ்ல தொட்டு திங்கனுமாம்...

பத்து டாலர் வேஸ்ட்டு...

மேக்கொண்டு ஆவுற வேலையை பாக்குறேன்...

said...

///பொட்'டீ'கடை அய்யா..,

கொஞ்சம் சிரமம் எடுத்து, நீங்கள் சொல்லியிருக்கும் பதிவுகளுக்கு சுட்டி கொடுத்தால்.. காலத்தால் இந்த பதிவு நிற்கும். கொஞ்சம் சிரமப்படுங்களேன்.

கடும் சொற்கலால் வசைபாடாமல்.. இந்த வேண்டு கோளை எடுத்துக்கொள்ளுங்கள்.

நன்றி! //


இது யாருன்னு எனக்கு தெரியாது.

Anonymous said...

பொட்டீக்கடை ஸார்...இருக்கேளா ?

Anonymous said...

பொட்டீ," மொகத்தாட்சன்யம் இல்லாம சொல்லுறதுன்ன ஒரு 15 நாளைக்கு முன்னால் நானும் மொக்கை பாலா மாமாவும் உம்ம எழுத்துகளைதான் பேசிகிட்டு இருந்தோம். உண்மையாவே நான் ரசிக்கும் எழுத்து நடை உம்முடையது. இந்த நடை உமக்கு கைவந்திருப்பது நன்றே அதை பொது அலங்காரம் மற்றும் ஓழுக்கவிதிகளுக்கு கட்டுபடுத்தி எழுத்தின் அழகை குறைத்து விடாதீர்கள்

வரவணையான்

said...

வரவணை கமண்டு ஜூப்பர்.

அப்ப எல்லாரையும் திட்டனும்ங்கறாங்க.

அது ஒரு ஸ்ஸ்டைலாம்ல்ல..