7/17/2007

மருத்துவன் அனீப் தீவிரவாதியா?

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய தூதரக அதிகாரி என்ற நாதாரி எங்கெல்லாம் கலாச்சார விழா என்ற பெயரில் பாலிவுட் டான்ஸ் நடக்கிறதோ அங்கெல்லாம் குண்டியை இருத்தி கைவலிக்க கைதட்டியும் வாய் வலிக்க ஜொள்ளு விட்டும் மட்டும் வருவார் ஆனால் ஒரு இந்தியக் குடிமகனை அதுவும் கெஜட்டட் தர அந்தஸ்து உள்ள ஒரு மருத்துவனை அவுசுதிரேலிய அரசாங்கமானது ஒரு சொறி நாயைவிட கேவலமாக நடத்தியும் ஒரு அறிக்கையோ அல்லது அவுஸ்திரேலிய அரசினை அறிவுறுத்தும்படியான எந்தவொரு வேண்டுகோளும் வைக்க முடியவில்லை.

இந்தியாவில் இருந்த "தடா" "பொடா" சட்டத்தைப் போல் இங்கும் "கண்டாரஓழி" சட்டம் உள்ளது. அதாவது விசாரணைக்கைதியாக எத்தனை வருடம் வேண்டுமானாலும் "பெயில்" இல்லாமல் சிறைப்படுத்தி வைத்திருக்கலாம். அதில் கைது செய்யப்பட்டு கேவலமாக நடத்தபட்டும் நீதிபதிகளே கடுப்பாகுமளவுக்கு அலைகழிக்கப்பட்டும் வருகிறார். பாரதப் பிரதமரோ "விவகாரங்களை உன்னிப்பாக கவனித்து வருவதாக" செய்தியாளர்களிடம் அறிக்கை விடுகிறார். இங்கு அனீப் குற்றவாளியாகவே இருந்தாலும் கூட இம்மாதிரியான துன்புறுத்தல் மனித உரிமையை மீறும் செயலாகும். அனீப்பின் விவகாரம் அவுஸ்திரேலியாவையே "கலக்கி" வருகிற வேளையில் இந்தியாவில் இது தொடர்பாக எந்தவொரு நிகழ்வும் நடந்ததாகத் தெரியவில்லை.

இங்கு அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய விடயம், குற்றம் நடந்த இடம் க்ளாஸ்கோ விமான நிலையம், ஸ்காட்லாந்து. அங்கு கூட அனீப்பின் மேல் குற்றம் பதிவாயிருக்கவில்லை. இங்கும்கூட குற்றஞ்சாட்டப்பட்டிருக்கறாரேயொழிய குற்றம் புரிந்து மாட்டிக் கொண்டவராயில்லை. ஆக என்னளவில் அவர் ஒரு அப்பாவி தான் இன்னிமிடம் வரை. அவர் மேல் எனக்கும் கடந்த வாரம் சந்தேகம் இருந்தது ஆனால் அவுசுதிரேலிய போலிசார் அவர் மீது பதிந்த வழக்கினடிப்படையில் அவர் ஒரு அப்பாவி என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. அதே அடிப்படையிலேயே நீதிபதியும் அனீப்புக்கு பெயில் அளித்து தீர்ப்பு கூறினார். ஆனால் தீர்ப்பு வழங்கிய சில மணித்துளிகளில் அவுசுதிரேலிய விருந்தாளிக்குப் பிறந்த குடியமர்வுத்துறை அமைச்சர் அனீப்பின் விசாவை "நடத்தை சரியில்லதவர்" என்ற ஒரு செல்லாக்காசு காரணத்தைக்கூறி ரத்து செய்துவிட்டார்.

குடியமர்வுத்துறை சட்டதிட்டங்களின் படி ஒருவரின் விசா காலாவதியானாலோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ அவர் உடனடியாக நாடு கடத்தப்படுவார். ஆனால் அனீப் நாடு கடத்த வேண்டுமென்றால் அவர் முதலில் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட வேண்டும். ஆனால் இந்த வழக்கானது முடிவு பெற சிலமாதங்களோ அல்லது சில வருடங்களோ கூட ஆகலாம். ஆகையால் அதுவரை அவர் சட்டவிரோதமாக தங்கியிருப்பதினால் அவரை சிட்னியில் உள்ள "வில்லாவுட் டிடென்சன் செண்டர்"ல் அடைக்க முடிவு செய்தே அமைச்சர் இம்மாதிரியான பொறுக்கித்தனமான சில்லரைத்தனமான வேலையில் ஈடுபட்டுள்ளார்.

வில்லாவுட்டில் அடைக்கப்படுவதனால் ஏற்படும் சிரமங்கள்.

1. தற்போது இலவச சட்ட ஆலோசனையும், அவருக்காக வழக்காடிவரும் வழக்குறைஞர் பீட்டர் ரூஸோ பிரிஸ்பர்ணில் இருக்கிறார். இதனால் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கும் வழக்குறைஞருக்குமான தொடர்பை வெகுவாக குறைத்து அனீப்பை தனிமைப்படுத்தலாம்.

2.ஒவ்வொரு முறையும் பிரிஸ்பேனுக்கு அழைத்துவரப்பட்டு தான் நீதிமன்றத்தின் முன் நிறுத்தமுடியும். இதனால் வாரம் ஒரு முறை அல்லது இரண்டு வாரங்களுக்கொரு முறை தோன்றுவது சாத்திய்ப்படாததலால்
சிலமாதங்களுக்கு ஒருமுறை வரும்படி வழக்கை கால விரையப்படுத்தலாம்.

அரசாங்கத்தினருக்கு ஏற்படும் "மலிவு" நன்மைகள்

1.அடுத்த வருடம் நடைபெற இருக்கிற பொது தேர்தலில் தற்போதைய "ஹோவர்டு" தலைமையிலான ஆளும் கூட்டணி கண்டிப்பாக மண்ணைக் கவ்வுவது உறுதி என்ற அடிப்படையில் பார்த்தால் "தீவிரவாத அச்சுறுத்தல்" என்ற பெயரில் யாராவது ஒரு அப்பாவியை பலிகிடாவாக்கி ஒரு சில சில்லரை ஓட்டுக்களை அல்லலாம். ( A cheap old scare tactic used by Bastard Bush jr.)

2.எதிர் கட்சியான "கெவின் ரட்" தலைமையிலான "லேபர் பார்ட்டி"யும் அதனடிப்படையிலேயே அரசாங்கத்தினருக்கு எதிராக குரல் கொடுக்காமல் அவர்களின் செயல்களை ஆதரிக்க முனைந்துள்ளனர்.

முடிவு

எப்பாடுபட்டாவது அடுத்தவருடத்திற்குள் அனீப்பை ஏதாவது ஒரு குற்றஞ்சுமத்தி பலிகிடாவாக்கியே ஆகவேண்டும் என்ற நிர்ப்பந்தம்.

இதெல்லாம் அடுத்தவருடத்திற்கான தேர்தலை முன்னிருத்தி நடக்கிறதென வைத்துக்கொண்டாலும் இந்திய அரசாங்கம் ஒரு இந்தியப் பிரஜையின் தனி மனித உரிமையை காக்கவும், அவன் நல்லவன் தான் என நிரூபிப்பதற்கு எவ்விதத்தில் அவனுக்கு உதவியுள்ளனர் என்று தெரியவில்லை. கன்சு"லேட்" ஜெனரல் கனபதி அவர்கள் யாருடைய மயிரைப் புடுங்கிக் கொண்டிருக்கிறாரென எனக்குத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லவும்.

அனீப்பின் ஒரே தவறு.

பயம் காரணமாக அவசர அவசரமாக ஊரைவிட்டு வெளியேற முயன்றது தான்...:((

தொடர்பான இணைப்புகள்

Haneef visa revoke full copy

Haneef bail delay option

outraged prominent lawyer

bail then jail

where is the justice for Dr.Haneef

17 comments:

said...

நல்லா எழுதியிருக்கீங்க...

முஸ்லீம் என்றாலே தீவிரவாத முத்திரை குத்தும் போக்கு என்று தான் ஒழியுமோ தெரியவில்லை...

அதற்கு தகுந்த மாதிரி மதத்தை வைத்து ப்ரெயின்வாஷ் செய்து தீவிரவாத பாதைக்கு இளைஞர்களை திருப்பும் பன்றிக்கூட்டம் என்று ஒழியுமோ என்றும் தெரியவில்லை...

Anonymous said...

ஆடலாமா ?

Anonymous said...

என்னுடைய கடையில் 60 டொலருக்கு பொருள் வாங்கினால் ஒரு மணப்பாறை முறுக்கு பாக்கெட் ப்ரீ.

வாரீங்களா ?

Anonymous said...

எலோய் என்னை விட்டூட்டீய

இங்க வாரும்யா நான் பாம்பே தரேன்.

Anonymous said...

டேய் அது சைனா டவுன். ஹாங்காங் ஷாங்காய் மார்க்கெட் இல்ல.

Anonymous said...

காய்கறி மார்க்கெட்டுன்னு நான் சொன்னனா..

நான் சொன்னது ஷேர் மார்க்கெட்.

said...

கருத்தளிக்க முடியாத நிலையில் கூட இருக்கிறோம் ;-(

said...

//அனீப்பின் ஒரே தவறு.

பயம் காரணமாக அவசர அவசரமாக ஊரைவிட்டு வெளியேற முயன்றது தான்...:((//

வேறு என்னங்க செய்யமுடியும்? :-((

said...

http://au.news.yahoo.com/070717/2/13zlt.html

மேலெ உள்ள சுட்டியைப் பார்க்கவும்,

said...

//கன்சு"லேட்" ஜெனரல் கனபதி அவர்கள் யாருடைய மயிரைப் புடுங்கிக் கொண்டிருக்கிறாரென எனக்குத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லவும்//

இதுவரை யாருக்குமே தெரியலையா? கொஞ்சம் முயற்சி செய்து தெரியப்படுத்துங்கப்பா...

said...

//முஸ்லீம் என்றாலே தீவிரவாத முத்திரை குத்தும் போக்கு என்று தான் ஒழியுமோ தெரியவில்லை...

அதற்கு தகுந்த மாதிரி மதத்தை வைத்து ப்ரெயின்வாஷ் செய்து தீவிரவாத பாதைக்கு இளைஞர்களை திருப்பும் பன்றிக்கூட்டம் என்று ஒழியுமோ என்றும் தெரியவில்லை...

செந்தழல் ரவி//

முஸ்லீம் என்றாலே தீவிரவாத முத்திரை குத்தும் போக்கு என்று ஒழிகிறதோ, அன்றே ப்ரெயின்வாஷ் செய்து தீவிரவாத பாதைக்கு இளைஞர்களை திருப்பும் பன்றிக்கூட்டங்களும் ஒழிந்து விடும்.

என்ன நான் சொல்றது சரிதானுங்களே (செந்தழல் ரவி) அண்ணாச்சி...

said...

இது குறித்து The Age Poll rate:

http://www.theage.com.au/polls/form.html

ஆனால் ஹனீஃபுக்கு ஆதரவாக வெறும் 17% தான் வந்திருக்கிறது :-(

Anonymous said...

சில வருடங்களுக்கு முன்னர் கல்கத்தா பக்கம் (கொல்கத்தா இப்பொழுது) பக்கத்து கிராமம் என்று நினைவு. எவனோ சில பேர் (தீவிரவாதிகள்) ஆகாயத்தில் நின்றும் (aeroplane ) ல் நின்றும் பயங்கர ஆயுதம்களை வீசினார்களே வெளி நாட்டு வெள்ளை தீவிர வாதிகள். நமது அரசாங்கம் அவர்களை கோர்ட்டு, கீர்ட்டு என்று சும்மா கொஞ்ச நாள் வைத்து விட்டு வெளியில் விட்டு விட்டார்கள் என்று நினைக்கிறேன். கையும் களவுமாக பிடித்தும் என்ன பிரயோஜனம். அவர்கள் வெள்ளை காரர்கள் அல்லவா. அனீப் அப்படியா இந்திய காரன் அல்லவா? இந்திய தூதர் கணபதி யா கன்பத்தியா அவர் இப்பொழுது பெல்லி டான்ஸ் கிளப்பில் பிஸியாக இருப்பார். மடசாம்பிராணிகள்.

asalamone

said...

ஜெசிலா

//இது குறித்து The Age Poll rate:

http://www.theage.com.au/polls/form.html

ஆனால் ஹனீஃபுக்கு ஆதரவாக வெறும் 17% தான் வந்திருக்கிறது :-(//

Dr Mohamed Haneef : Should Dr Mohamed Haneef be held in immigration detention?

Yes - 17%
No - 83%
Total Votes: 5045 Poll date: 16/07/07

டிடென்சன்ல வெக்க கூடாதுன்னு 83% பேர் சொல்லிருக்காங்களே!!!

Anonymous said...

Why was he afraid? did every muslim try to leave Australia with oneway ticket?

i'm sucking my thumb

Anonymous said...

//கலாச்சார விழா என்ற பெயரில் பாலிவுட் டான்ஸ் நடக்கிறதோ //

அதானே.கோடம்பாக்க கும்பலையும்,கனிமொழியையும் கூப்பிட்டு கலாசார விழா நடத்தினா சரின்னு ஒப்புத்துக்கலாம்.அதை விட்டு விட்டு, பாலிவுட்டான்,பாலிவுட்.
முதலில் திராவிட தீவிரவாத கும்பலை உள்ள தள்ளனும்.

Anonymous said...

Dr. Hanif's only mistake he gave his sim card to Kaleel. If he is a terrorist cuase he has given sim card to another terrorist, the all members of AHAD in USA also are terrorists. they helped Narendra modi for Gujrat carnage