10/31/2006

தொடர்வூர்தி பயனங்களும் அதன்கால் நினைவுகளும...

சிறுவயது பருவம் முதலே வெளியூர்ப் பயனம் என்றாலே மனம் குதூகலத்தில் துள்ளி மகிழும்.ஆனால் நான் பிறந்து தவழ்ந்து வளர்ந்தது எல்லமே வடதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியையொட்டிய இடங்களேயாதலால் தொடர்வூர்திப் பயனம் என்பது எனக்கு எட்டாக் கனியாயிற்று. அதற்கு காரணம் வணிகம் தொடங்கி சிற்றுலா வரை சென்னை தொடங்கி வேளாங்கன்னியோடுமான அளவுக்குமிஞ்சிய பேருந்து போக்குவரத்தும் குறைத்த பயனநேரங்களும்தாம். அது மட்டுமன்றி சென்னை - வேளாங்கன்னி கடற்கரையையொட்டி அமைந்துள்ளதால் எப்பொழுதும் தண்ணீரற்ற ஆனால் எப்பொழுது வேண்டுமானாலும் அபாய அளவையும் தாண்டக்கூடிய நீரோடைகளாலும்,ஆறுகளினாலும் கட்டவேண்டிய பாலங்களின் செலவும், பொருட்தேவையும் அரசாங்கத்தினால் கூட என்னுடைய தொடர்வூர்திப் பயனம் தடைபட்டது என்று கூறினாலும் வியப்பல்லவே. இதனால் பெரும்பாலான சுற்றுலாக்களும், தொலைதூரப் பயனங்களும் மகிழ்வுந்துகள், பேருந்துகளோடே முடங்கியது. அவ்வப்போது பொருட்காட்சிகளிலும், வன்டலூர், மைசூர் வனவிலங்கு சரணாலயங்களிலும், உதகமண்டலம் ஏரிக்கரையோரத்திலும் இயங்குகின்ற மின்சார தொடர்வூர்தியின் பயனம் ஒன்று தான் எனக்கு அதிகமாகப்பட்டது என்னுடைய பதினேழு வயதுவரை.

ஒருவழியாகப் பள்ளிக்கல்வி முற்றுபெற்றதும் தொழிற்கல்விக்கான விண்ணப்பங்களுக்காக எனது மைத்துனனுடன் சென்னைக்குச் சென்றதும், தாம்பரத்தில் இறங்கி கிண்டி வரை மின் தொடர்வூர்தியில் பயனஞ்செய்தது தான் என்னுடைய நவீனவாழ்வின் தொடர்வூர்தியின் பயனத்தின் தொடக்கம். அந்தப் பயனம் சிறிது நாழிகையேயிருந்தாலும், வழியெங்கிலும் காணக்கிடைத்த குறுக்குச்சாலைகளும் ஆங்காங்கே எனக்காக வழிவிட்டு காத்திருந்த மக்களையும் பார்க்கையில் என்னுடைய முதல் தொடர்வூர்திப்பயனம் அவ்வளவு மகிழ்வானதல்லவே. அதே நேரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தொழிற்கல்விகளுக்கான விண்ணப்பப்படிவங்களுக்காக நெல்லிக்குப்பம் - அண்ணமலைநகர் பயனம் ஒருவகையில் மகிழ்ச்சியானதாகவும் இன்னொரு வகையில் அவமானமாகவும் இருந்தது...

என்னோடும், என் வயதையொத்த ஆனால் மற்ற பள்ளிகளில் படித்த மாணவர்களெல்லாம் ஓரளவு என்னை விட படிப்பிலும் பொருளாதாரத்திலும் சிறப்பாக இருந்ததினால் அவர்களுக்கு என்னை அவர்களுடனான செயல்பாடுகளில் ஒதுக்கியே வைத்திருந்தனர். இதனாலேயெ என்னுடைய ஒரே நண்பனாக "குட்டி" ஒருவனே இருந்தான். இவனும் வசதியான குடும்பத்தை சேர்ந்திருந்தாலும், நன்றாக படிப்பவனாயிருந்தாலும் என் வீட்டையொட்டி இருந்ததினால் எங்கள் இருவருக்குமிடையேயான புரிந்துணர்வு நன்றாக இருந்தது. மேலும் அவனும் நானும் சமகாலங்களில் ஒரே பள்ளி, ஒரே வகுப்பில் படித்ததினாலும் அந்த புரிந்துணர்வு ஏற்பட்டிருக்கலாம் அல்லது அவனும் என்னைப் போன்றே மற்ற நண்பர்களால் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்ததால் எங்கள் கூட்டணி அமைந்திருக்கலாம்...

ஆக பிறரது கல்வி மற்றும் எதிர்காலத்திட்டங்கள் குறித்த கலந்துரையாடல்களில் நாங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் நாங்களிருவரும் ஒரு நன்னாளில் விண்ணப்பபடிவம் வாங்கலாம் என்று முடிவு செய்து தொடர்வூர்திப் பயனமே வசதியானதாக இருக்கும் என ஒருமனதாக தீர்மானமியற்றினோம். அதிலும் காலை 5:50 வண்டியை தவிர்த்து 6:30 வண்டியில் சென்றால் இரண்டு தொடர்வூர்தியில் பயனம் செய்யலாம் அதுவும் ஒரு பயனத்திற்கான பணத்தில் இரண்டு வண்டியில் பயனம் என்று அதிமேதாவித்தனமாக திட்டமிடப்பட்டது. குட்டியின் அப்ப மெத்தப் படித்தவர் சிறிது கண்டிப்பானவரும் கூட. அதனால் என்னுடைய அப்பாவிற்கு "குட்டி"யின் மேல் அளவு கடந்த மதிப்பு. ஆகையினால் குட்டி பெயரை சொல்லி நான் செய்த லீலைகள் ஏராளம்...

அன்று காலை குட்டியின் அப்பவும், என்னுடைய அப்பவும் எங்களை வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர். எனக்கோ ஒரு இடத்தில் இருப்பு கொள்ள இயலாது அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தேன். இடையே நாண்கைந்து பட்டையப்படிப்பு படிக்கும் மாணவர்கள் வந்து என்னை உள்ளே சென்று அமருமாறு அறிவுறுத்திவிட்டு லாவகமாக படியில் நின்று புகை பிடிக்க ஆரம்பித்தனர். இன்னும் ஒருசிலர் நம்முடைய மூதாதையரை நினைவூட்டும் பொருட்டு "ஜன்னல்" வழியாக தேரையைப் போல் தாவி பெண்கள் பயனஞ்செய்யும் பெட்டியை நோக்கி சாகசம் புரிந்து கொண்டிருந்தனர்...

இப்பொழுது வண்டி கடலூர் திருப்பாதிரிப்புலியூரை நெருங்கிக் கொண்டிருந்தது. புகை பிடித்தவர்களும், தாவிக் கொண்டிருந்தவர்களும் பச்சைக் குழந்தையைப் போன்று அவரவர் இருக்கையில் அமைதியாக அமர்ந்தனர். அங்கே இன்னுமொரு கூட்டமேற கூடவே இரண்டு பரிசோதகர்களும் பெண்களுக்கான பெட்டியில் ஏறி அமர்ந்தனர். தொடர்வூர்தி கடலூர் பழையநகரை நெருங்கிக் கொண்டிருந்தது. அண்ணமலைநகர் செல்பவர்கல் இங்கே இறங்கி இன்னுமொரு ஊர்த்திக்கு மாற வேண்டும். வண்டியின் வேகம் குறைந்த நிலயில் எங்களொடு அமர்ந்திருந்த மாணவர்களும் பணியாளர்களும் வண்டியிலிருந்து குதித்துக் கொண்டிருந்தனர். நான் எனக்கருகில் அமர்ந்திருந்தவரைப் பார்க்க அவரும் புரிந்தவராஇ, "வண்டி நின்றபின் இறன்க்கினால் அந்த வண்டியில் இடம் கிடைக்காது" என்று கூறி அவரும் குதித்து விட்டார். சரியென்று நான் குட்டியை பார்க்க குட்டி என்னை முதலில் குதிக்கும்படி கூற நான் பின்னோக்கி குதித்து சிறிதளவு தடுமாறி விழுந்து எழுந்தேன். எனக்கு முன்னால் இப்பொழுது குட்டி குதிக்க அவன் முன்னே இரு "மத்திய காவலர்கள்". அவன் எழுந்தவுடன் பளீரென்று ஒரு அரை...அதைப் பார்த்து நான் ஓட முயற்சிக்க இன்னுமொரு காவலன் என் பிடறியை பிடித்து தரதரவென்று இழுத்துச் சென்றா
ன. அங்கே கண்கள் கலங்கிய நிலையில் "குட்டி" நிற்க, என் முறை இப்பொழுது. நச்சென்று நடு மண்டையில் ஒரு கொட்டு. இன்னுமொரு காவலன் வந்து பளீரென்று ஒரு அரை விட்டான்.பின்னர் தான் தெரிந்தது, ஓடிய நாதாரிகள் எதுவும் முறையான பயனச்சீட்டு இல்லாததும் நாங்களும் அதைப் போன்றே இருந்திருப்போம் என்று அடித்து விட்டதாக கூறினான். அது மட்டுமல்லாமல் ஆளுக்கு பத்து நிமிடம் அறிவுரை வேறு...

இந்த அவமானத்தை மறக்க வேண்டுமென்றால் எங்காவது சற்று இளைப்பாற வேண்டுமென முடிவு செய்துவிட்டு இன்னுமொரு தொடர்வூர்தியில் பயனத்தை தொடரும் பொருட்டு இருக்கையில் அமர்ந்தோம். எங்கள் போதாத நேரம் கடலூர் பழைய நகரைச் சேர்ந்த அருணும், முத்துவும் அனைத்து கூத்தையும் பார்த்துவிட்டு நக்கலாக சிரித்துக் கொண்டே எங்களுக்கு அருகில் அமர்ந்தனர். அவர்களிடம் அவர்கள் பார்த்ததை யாரிடமும் செல்ல வேண்டாம் என்று கூறிவிட்டு வாய்க்கு வந்தபடி அந்தவிரு காவலர்களையும் கறுவினோம்.

அது மட்டுமன்றி பல தலைவர்கள் தொடங்கி பரங்கித்தலையன் பிரேமானந்தா வரை வாசம் செய்த/செய்கின்ற கடலூர் நடுவன் சிறைச்சாலை அமைந்திருக்கின்ற கேப்பர்மலை என்கிற புண்ணிய பூமியையும் அறிமுகப்படுத்தியது இந்த தொடர்வூர்திப் பயனம் தான். கேப்பர்மலையின் மணற்குன்றுகள் பல செல்வங்களைக் கொண்டது. இங்கு கிடைக்கும் நிலத்தடி நீர் அலாதி சுவையானது. அத்தோடுகூட இங்கு பல வகையான கீரை வகைகள் இயற்கையிலேயே கிடைக்கும். பயனத்தினூடே அங்கு படர்ந்துவிரிந்து கிடக்கும் வல்லாரைக் கீரைச்செடிகள் கண்ணுக்கு குளிர்ச்சியூட்டும். நான் முன்னரே கூறியபடி கடலூர் - சிதம்பரம் வரையிலானத் தடம் பல ஓடைகளையும் கடக்கவேண்டியிருக்கிறபடியால் ஆங்காங்கே பச்சைப் பசேலென்ற கோரைகளும் பஞ்சைப் போன்று வெண்மையாக பூத்துக் குலுங்குகின்ற ஆனால் வன்மையான காற்றின் வேகம் தாங்கமுடியாது தன்தலை நாணுகின்ற நாணல்களும், அதன் நிழலில் நீந்துகின்ற வாத்துகளின் கூட்டமும் ஒரு அழகான பயனத்தின் அனுபவமாயிருந்தது.ஆனால் பின்னாளில் கிள்ளைக்கு அருகேயிருக்கும் ஒரு ஓடையில் நாவரசுவின் கையை ஜான்டேவிட் வீசுவான் என்று நான் எண்ணியிருக்கவில்லை...

அருணும், முத்துவும் அன்று மதியம் சிதம்பரம் மாரியப்பாவில் படம் பார்க்க போவதாகவும் எங்களுடைய திட்டமென்ன என்பதையும் கேட்க, எங்களது மனநிலை சரியில்லையெனவும் நாங்கள் பிச்சாவரம் செல்லப்போவதாகவும், மதியம் அவர்களுக்கு நாங்கள் அனுமதி சீட்டுப் பெறுவதெனவும், அவர்கள் எங்களுக்காக விண்ணப்பப்படிவங்கள் வாங்க வேண்டுமெனவும் தீர்மாணிக்கப்பட்டது. அன்று நானும், குட்டியும் பிச்சாவரத்தின் சதுப்புநிலக் காடுகளை ரசித்ததும் அருணுக்கும், முத்துவுக்கும் மதியம் அனுமதிச்சீட்டிற்கான பணத்தைக் கொடுத்து படம் பார்க்காமல் 2:50 வண்டியைப் பிடித்து வீடு வந்து சேர்ந்தோம்...

அடுத்த பயனம் சென்னையிலிருந்து..."ஒரு மலைக்குன்றும் ஐந்து ஆடுகளும்
"

10 comments:

said...

படிக்க சுவாரசியமாக இருந்தது..

நன்றி

said...

ம்!!!

said...

கேட்டவுடன் கொடுத்த சிவபாலனுக்கு நன்றியோ நன்றிகள்! ;)

said...

குடாத் தமிழன்,

//ம்!!!//இதுக்கு என்ன அர்த்தம்...இதுக்கு என்ன அர்த்தம்?

வருகைக்கும் ஒரு எழுத்தில் உலகளாவிய கருத்தை தெரிவித்ததற்கும் கோடானு கோடி நன்றிகள்.

said...

//வருகைக்கும் ஒரு எழுத்தில் உலகளாவிய கருத்தை தெரிவித்ததற்கும் கோடானு கோடி நன்றிகள்//
summma than!!

said...

குடாத் தமிழன்,

//summma than!!//

அது சரி!!! :)))

said...

மெல்லிய உணர்வுகளை எனக்குள் மீட்டிய பதிவு

வாழ்த்துக்கள் நண்பா....

said...

வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி தோழா! ;)

said...

"தோழர் நீங்கள் கள் குடித்தீர்களா"

" ஓம் தோழர் "

" நீங்கள் நம் இயக்க விதிகளை மீறிவிட்டீர்கள் தோழர் "

" ஓம் தோழர் , ஆனால் காவல் நிலையம் மீது குண்டு வீச பயமாய் இருந்தது , தைரியத்திற்காக குடித்தேன் தோழர் "
" நான் உங்களை தண்டிக்கலாமா தோழர் "

" ஓம் தோழர் "


:)))))

ஷோபா ஷக்தியின் பிரதி ஒன்றில்.......

said...

ஆனாலும் அந்தத் தோழர் பணியின்போது கள்ளடித்தது தவறு தான். கள்ளைக் கூறி பியரை ஞாபகப்படுத்தி விட்டீர்கள். போத்தல்கடைக்கு ஆள் அனுப்பியிருக்கிறேன்.

:)) இன்று சூரியனின் உக்கிரம் தாங்க முடியவில்லை.