10/14/2006

நகரங்களும் அதன்கால் நினைவுகளும்


...அங்கிருந்து தொடங்கி கிழக்கை நோக்கி மூன்று நாட்களுக்கு பயனித்தால் நீ "தியோமிரா"வை அடையலாம். தியோமிரா மாநகரம் வெள்ளி முலாம் வேய்ந்த அறுபது கோபுரங்களையும், வெண்கலத்தினால் செய்யப்பட்ட கடவுள்களின் சிலைகளையும், காரீயத்தால் பணிக்கப்பட்ட சாலைகளையும், படிகத்தினால் செதுக்கப்பட்ட நாட்டிய அரங்கத்தையும், தினம் காலையில் அனைவருக்கும் விடியலைக் கூவி அறிவிக்கும் பொன்னிற சேவல் வசிக்கும் கோபுரத்தையும் கொண்டது. இவ்வளவு பரிச்சயமான அழகான காட்சிகளையுடைய நகரவமைப்பை நீ வேறு எந்தவொரு நகரத்திலும் கண்டிருக்கலாம். ஆனால் இந்நகரத்தின் சிறப்பம்சமே குறை பகல் பொழுதினையுடைய "செப்தம்பர்" மாதத்தின் மாலைப்பொழுதில் பலவண்ண விளக்குகளால் மின்னும் சிற்றுண்டிச்சாலைகளும், சாளரத்தின் வழியே வெட்கத்தினால் முகத்தினை மறைத்து வெறுங்குரலை மட்டுமே தூதுவனுப்பும் "ஓ"வென அலறும் பெண்டிரும்!, இவை ஏற்கனவே அனுபவித்ததாக ஏற்படும் உணர்வும் அதன்கால் அப்பொழுது ஒருவனுக்கு ஏற்பட்ட களிப்பும் நிச்சயமாக அவனுக்கு பொறாமையாயிருக்கும்...

- Italo Calvino
Invisible Cities

0 comments: