கடந்த 29ம் திகதி சாந்தி சௌந்தரராஜன் TIME பத்திரிகைக்கு அளித்த செவ்வி
http://www.time.com/time/world/article/0,8599,1919562,00.html
*****
கடந்த மூன்று நாட்களாக ஊடகங்களில் அதிகமான அளவில் எதிர்மறையான எண்ணங்களையும் கருத்துக்களையுமே சார்ந்து வீராங்கணை சாந்தியின் சர்ச்சைக்குரிய பதக்கப் பறிமுதல் விவாதிக்கப்பட்டுவந்தது.
நேற்று இந்து நாளிதழ் சாந்திக்கு இரயில்வேயில் வேலை மறுக்கப்பட்டதற்கு காரணமாக பாலினப் பரிசோதனையை கூறியது. மேலும் மற்ற மாநில அல்லது இந்திய அல்லக்கை பத்திரிகைகளைப் பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால் இந்து நாளிதழ் இம்மாதிரியான விளிம்பு நிலையில் வாழும் ஒரு பெண்ணுக்கு சிறிதளவாவது ஆதரவாக எழுதும் என நான் எதிர்பார்த்தேன்.ஆனால் அதுவும் ஒரு ஆதிக்க சிந்தையிலேயே செய்திகளை வெளியிட்டிருந்தது.இந்து நாளிதழ் மிகவும் சிரமப்பட்டு அந்த இரயில்வேயின் ஹைப்ரொஃபைல் அதிகாரியிடம் பெற்ற விடயத்தை வேறு எந்த மருத்துவரையோ அல்லது இந்திய விளையாட்டு சம்மேளன மருத்துவ அதிகாரியிடமோ பேட்டியெடுத்து சாந்திக்கு ஆதரவாக எழுதியிருந்தால் சந்தோசப்பட்டிருக்கலாம்.
காலையில் படித்த சந்திரசேகரின் பதிவு அதைவிட கேவலம். இங்கு கேவலம் என்று நான் சொல்வது அவரது வார்த்தைப் பிரயோகம் தான். வார்த்தைக்கு வார்த்தை நடுநிலை என்று இவராகவே ஒரு முன்முடிவை எடுக்கொண்டு எழுதுவது என்னைப் பொருத்தவரை கேவலம் தான். இதைத் தான் இன்றைய ஆதிக்க மனப்பான்மையுள்ள அச்சு ஊடகங்களும் செய்துவருகின்றன.ஹார்மோன் குறைபாடுகளும் உடலளவிலும் குறைபாடுகள் உள்ள திருநங்கைகளை பெண்களாக அல்லது அவர்களது விருப்பப்படி தனி பாலினமாகவோ அறிவிக்க வேண்டும் என அரசாங்கமே யோசித்துக் கொண்டிருக்கிற வேளையில், சாந்தியின் பாலினத்தை ஊறுகண்ணுடன் பார்த்து அதன் போக்கிலேயே எழுதியிருப்பது அறிவின்மையே.உடலளவிலும் மனதளவிலும் பெண்ணாகவே பிறந்து, பெண்ணாகவே வளர்ந்து ஏதோ ஒரு சில ஹார்மோன்களின் குறைபாடுகளால் பெண்ணாக “சாந்தி” என்கிற பெண் அங்கீகரிக்கப்படாதது எனக்கு வேதனையளித்தாலும், அந்தப் பெண் ஒரு வெற்றியாளர் தான்.அவர் பெண்ணாக தான் படித்துள்ளார், பெண்ணாகத் தான் வளர்ந்துள்ளார், பெண்ணாகத் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். ஆகையால் எவ்விதத்திலும் அவருடைய பெண்மையில் சந்தேகமில்லை. இதை எழுதுவது/விவாதிப்பதைக் கூட கேவலமாகத் தான் நினைக்கிறேன். இதற்காக அவரை விளக்கமளிக்கக் கோருபவர்கள் அறிவில் சிறியவர்களாகத் தான் என்னால் பார்க்க முடியும்.(உதாரணம்: எல்லாவகையிலும் ஆணாகவே வளர்ந்து வாழ்ந்து ஒரு கட்டத்தில் உயிரணு உற்பத்தி செய்ய இயலாத ஒருவனை நீ ஆணல்ல இன்றிலிருந்து பெண்களுக்கான இடமோ அல்லது சந்திர சேகர் சொல்கிற மாதிரி "நடுநிலை" என்று சொல்லும்போது ஒரு சராசரி ஆணாக தன்னைக் கருதி கொண்டிருப்பவனுக்கு எழும் அதே உணர்வு)
மேலும் இலங்கையிலும், தென்கொரியாவிலும் ஏற்படாத இந்த பிரச்சினை தோகாவில் ஏற்பட்டதற்கான காரணம் “யாரோ” ஒரு போட்டியாளர் புகாரிட்டதனால் தான். இந்தப் புகார் கண்டிப்பாக வெளிநாட்டவரி ஒருவரினால் கொடுக்கப்பட்டிருக்குமா? என்பது என்னளவில் ஒரு கேள்விக்குறி தான். இந்திய அணி சார்பிலேயே அணியில் பங்கு கொண்டு இறுதி சுற்றுக்கு தகுதி பெற இயலாத ஒரு சக போட்டியாளர் கூட இதைச் செய்திருக்கலாம் என்று தான் எனக்கு எண்ணத் தோன்றுகிறது. அவசர அவசரமாக சாந்தி தோகாவிலிருந்து இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட பின் அவரது இடத்தைப் பூர்த்தி செய்த ஒரு பெண் போட்டியாளர் வழியிலேயே வழுக்கி விழுந்துள்ளார்…
இன்று சாந்திக்கு தமிழக முதல்வரினால் கொடுக்கப்பட்ட சன்மானத்தை கேள்விக்குள்ளாக்கி இருக்கும் பத்திரிகைகள் இந்திய விளையாட்டு சம்மேளனத்தைப் பார்த்து ஏதாவது கேள்வியெழுப்பி இருக்கிறதா என்றால் மிகக் குறைவே. சாந்தி ஹார்மோன் குறைபாடுள்ள பெண் எனத் தெரிந்த பின்னும் அவருக்கு அந்த குறைபாடுகளை நீக்க இந்திய ஒலிம்பிக் சம்மேளனமோ அல்லது சம்மந்தப்பட்ட விளையாட்டு ஆணையமமோ எந்தளவிற்கு சாந்தியை பெண் என்ற அந்த தகுதியை முழுமையாகப் பெறுவதற்கு எவ்வகையிலாவது உதவியதா என்றால் அதுவும் கேள்விக்குறி தான்.
அதுமட்டுமன்றி இங்கே பார்ப்பனர்களைப் பற்றியோ ஆத்திகத்தை பற்றியோ கேள்வியெழுப்பினால் ஓடோடி வந்து பதிலிடும் பதிவர்களும் சரி, ரஜினிக்கு பிறந்த நாள் என்று சந்தோசப்பட்ட சமூகசிந்தனையாளர்களும் சரி, இப்பிரச்சினையைப் பற்றி வாய் திறக்கவில்லை.
எது எப்படியோ கலைஞர் கூறிய இவ்வரிகள் எனக்கு பிடித்திருந்தது.
// When someone expressed doubts whether the cash award should be given, the Chief Minister said: “Finally, that is the body which ran and won. That’s all that matters.”
Asked why he had come out in support of her, he said: “That’s my training. That’s what a person who follows Periyar would do.”//
quoted from “THE HINDU”
34 comments:
mikka nanri nanbare!
நாமார்க்கும் குடியல்லோம்! அஞ்சோம்!
இருமுறை போதைப் பொருள் உட்கொண்டு இன்னும் இரண்டாண்டுகட்கு அகில உலக அளவில் போட்டியிடா வண்ணம் தடை வாங்கிய இந்தியாவின் மானத்தை வாங்கிய இந்திய பளுதூக்கும் விளையாட்டு சம்மேளனத்தையும், ஹாக்கியில் டவுசர் கழன்டவர்களையும் இங்கே கலாய்க்கலாம்...
உந்துதலுக்கு நன்றி செல்லா!
சத்யா!
கலைஞர் சாந்தியை ஆதரிப்பதாலோ என்னவோ இந்த பு.பி.க்கள் கச்சை கட்டிக் கொண்டு கிளம்பியிருக்கிறார்கள்...
நல்ல பதிவு பொட் "டீ" கடை
சாந்திக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். அவருடைய வெற்றி நிஜம். நமது முதல்வர், இவ்விஷயத்தில் காட்டிய தெளிவு அற்புதமானது. பாராட்டுகுரியது! வெற்றிப் பயணம் மேலும் தொடர தமிழகமே சாந்திக்குப் பின்னால் திரள வேண்டும். இந்த ஜெண்டர் டெஸ்ட் இன்னும் முழுமையானதல்ல, மேலும் இதை பெரும்பாலான சர்வதேசப் போட்டிகள் அங்கீகரிக்கவில்லை. நமது ஊடகங்கள் இந்த விஷயத்தை கையாண்ட விதம் கண்டனத்திற்குரியது.
http://valai.blogspirit.com/archive/2006/12/17/santhi.html
தகவல் அறிந்த அந்த இரவில் எழுதிய பதிவு!
இங்குள்ள சிலரது பின்னூட்டங்களையும் பாருங்கள்!
ஆம் நான் நினைத்துக் கொண்டு இருந்தேன் நீங்கள் சொல்லி விட்டீர்கள்
நன்றி
மக்கள் மன்றத்தில் ...அருமையாக பதிந்ததற்கு நன்றி
சாந்திக்கு மன தைரியம் கிடைக்க பிராத்திக்கிறேன்
நன்றி , கலைஞருக்கும் , உங்களுக்கும்.
உங்களின் அறச்சீற்றம் கண்டிப்பாக தேவையானது, சாந்திக்கு இதனால் ஏற்படும் உளவியல் பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்ற அச்சம் கடுமையாக வாட்டுகிறது, அதையெல்லாம் எதிர்கொண்டு சாதிக்க வேண்டும் அவர், ஆனால் இந்த பத்திரிக்கைகள் இதற்கு செய்யும் வினையை பார்க்கும் போது இதில் வேறு ஏதோ ஒரு அரிப்பு அவர்களுக்கு இருக்கிறது போலத் தோன்றுகின்றது.... மேலும் இவர் இதற்கு முன் பல சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார் அப்போது இதே சோதனைகளை வெற்றிகரமாக கடந்துள்ளாரே.... ஏன் மறு சோதனைக்கு கேட்கக்கூடாது? இதைப்பற்றி ஏனிந்த பத்திரிக்கைகள் முக்கிய இடம் கொடுக்கப்படவில்லை? இதையெல்லாம் பார்க்கும் போது நிச்சயம் இந்த பத்திரிக்கைகளுக்கு வேறு அரிப்பு இருப்பது நிச்சயம் தெரிகின்றது.
தேவையான நேரத்தில பதியப்பட்ட கருத்து!!!
ஊடகங்களின் லபோ திபோ கூச்சலைக் கேட்டும், சாந்திக்கு உதவுவதில் உறுதியாக இருந்த கலைஞரைப் பாராட்டாமல் இருக்க முடியாது!
குழலி சொன்னதைப்போல இந்தப் பத்திரிக்கைகளுக்கு வேறு அரிப்புதான் இருந்திருக்க வேண்டும்!!!
லக்கி,
வருகைக்கு நன்றி.
***
சிநேகிதன்,
நன்றி!
//நமது ஒலிம்பிக் சங்கமே அரசு செலவில் வெளிநாட்டுக்கு போய் கும்மாளம் அடிக்கும் கூட்டம் தான்.//
ஆமாம், உண்மை தான். காமன்வெல்த் 2008 ப்ரிவியூ என்று சொல்லி மெல்பர்ணில் சாய்ப் அலிகானையும், ராணி முகர்ஜியையும் ஆடவிட்டதில் இந்திய அரசுக்கு செலவு 50 கோடி!
ஆனா, இதுல தான் என்ன சொல்ல வரீங்கன்னு புரியல.
//தன் பேரனுக்கு அமைச்சர் பதவி கிடைக்க மத்திய அரசை மிரட்டிய மு.க இதற்கும் அதே பாணியில் மிரட்டி சாதித்தால் பாராட்டப்படுவார்.// மத்தபடி கலைஞர் அவரால் செய்ய இயன்றதை செய்துவிட்டார்.
***
செந்தில்குமரன், கிருஷ்ணா, சுந்தர், இராஜராஜன்
வருகைக்கும், கருத்துப்பகிர்வுக்கும் நன்றி.
****
சிந்தாநதி,
உங்கள் பதிவின் மூலம் தான் எனக்கு முதன்முதலில் செய்தி அறியக்கிடைத்தது. ஆனாலும் பொய்யாக இருக்க வேண்டும் என்று நம்பிக்கையோடு இருந்தேன். இப்பொழுதும் ஒன்றும் குறைந்துவிடவில்லை. சாந்தி உடலாலும் உள்ளத்தாலும் பெண்ணாகத்தான் இருக்கிறார். அவர் சாதித்தும் இருக்கிறார்.
குழலி & அருட்பெருங்கோ,
நன்றி!
சாந்திக்கு இழைக்கப்படுவது துரோகம். இந்த விசயத்தில் விளையாட்டுத்துறையின் சில கோட்பாடுகளை களைய, மறுபரிசீலனை செய்ய வேண்டிய தருணம். இந்த விசயத்தில் இந்திய அரசு சாந்திக்கு முழுமையான ஆதரவு அளிக்கவேண்டும்.
காசுக்காக எழுத்துக்களை கூறுகட்டி விற்கும் (சில) பத்திரிகையாளர்களே.....சாந்தி நமக்கு கிடைத்திருக்கிற பொக்கிஷம்... பாதுகாத்து...பட்டை தீட்டி....ஊக்கப்படுத்துங்கள். வெற்றிப்பதாகையினை எல்லோரும் கொண்டாலாம்.
எல்லோரும் அமைதியாக இருப்பதை விட, சாந்திக்கு ஆதரவினை அனைவரும் தெரிவிப்பது கண்டிப்பாக மைய அரசின் செவிகளை தட்டும் என எதிர்பார்க்கிறேன். அனைவரும் செய்வோமாக.
இந்த விஷ்யத்த ஒருத்தர் ரெம்ப கீழ்த்தரமா எழுதியிருந்ததப் பார்த்தேன்.
கலைஞ்ரை பாராட்ட வேண்டும்.
வெற்றிபெற்றவர்களுக்கு வாரிவழங்கும் நம் அரசாங்கங்கள் நீங்கள் சொல்வதுபோல ஹார்மோன் திருத்தம் செய்யும் மருத்துவம் செய்ய முன்னமே முன்வராதது ஏனோ தெரியவில்லை.
நம்ம ஊர் விளையாட்டு வீரர்களுக்கு கிடைக்கும் சொற்ப இன்ஸ்பிரேஷனைக் கொண்டு, தனி நபர்ர் திறமையிலேயே இவர்கள் வளர்ந்து பெரியவர்களாகிறார்கள்.
சாந்திக்கு என் வருத்தங்கள். கலைஞருக்கு வாழ்த்துக்கள்... உங்களுக்கும்.
அன்பு நண்பரே!
உங்கள் விரியமான எழுத்துகளுடன் எனக்கு முழு ஒப்புதல் இல்லாவிடினும், எப்போதுமே ரசிப்பதுண்டு!
சாந்தியைப் பற்றி, அது முடிந்து கிட்டத்தட்ட ஒரு வாரம் முடிந்துவிட்ட நிலையில் நின்ஙள் இட்டிருக்கும் இப்பதிவில் இருந்த ஒரு குறிப்பு என்னை இங்கு எழுதத் தூண்டியது.
அதில் குறிப்பிடும் ஒரு அடிப்படைத் தகுதி எனக்கிருப்பதால், இதற்கு மறுமொழியளிக்க விழைகிறேன்.
"சிந்தாநதி" பதிவு வந்த ஓரிரு நாட்களிலேயே, அதில் இக்குறைபாடு பற்றிய ஒரு விரிவான விளக்கத்தையும், இது குறித்த என் நிலைப்பாட்டையும் நான் தெளிவு படுத்தினேன்.
http://valai.blogspirit.com/archive/2006/12/17/santhi
அவர் அனுப்பியுள்ள பதிவின் சுட்டியைத் தட்டி, பின்னூட்டங்களைப் படித்தாலே, இது உங்களுக்குத் தெரியவரும்.
[அந்த பதிவைப் படித்ததாக வேறு சொல்லியிருக்கிறீர்கள். பின்னூட்டங்களைப் படிக்கவில்லை போலும்!]
மேலும், எத்தனை பேர் இதனைப் பார்ப்பார்களோ என்ற எண்ணத்தில், இதனையே 'விக்கிபசங்க' பதிவிலும் போய் இட்டேன், ஓகையாரின் கேள்விக்கு பதிலாக, சமூக அக்கறை காரணமாக!
இது குறித்து, ஒரு விளக்கத்தை [நான் பதிவிட்டிருப்பதை] உங்கள் பதிவில் எதிர்பார்ப்பது அதிகமில்லை, நேர்மையில் நம்பிக்கையுள்ளவர் நீங்கள் என்பதால்!
நன்றி.
பதிவுகளில் காணும் மனவக்கிரங்களைப் பார்த்து மிகவும் ஆயாசமாகத் தோன்றுகிறது. ஒவ்வொருவருக்கும் தனித்தனி சித்தாந்தங்கள் இருக்கலாம், சாதி,மதம் குறித்த கருத்து வேறுபாடுகளைக்கூட புரிந்து கொள்ளலாம். ஆனால் இந்த விஷயத்தில் சிலர் காட்டும் அதீத வக்கிரங்கள்...என்பதிவில் அனானி ஒருவர் வக்கிரத்தின் உச்சத்துக்கே சென்றிருந்தார். அவரது நோக்கம் புரியாமல் முதலில் அவரது பின்னூட்டத்தை விட்டு விட்டேன். பிறகே புரிந்து அந்த குறிப்பிட்ட வரிகளை நீக்கினேன்.
பிறப்பிலும் வளர்ப்பிலும் அவர் பெண்தான் என்று நிரூபிக்கப் பட்டிருந்தும் இந்த விஷயம் கொச்சைப் படுத்தப்பட்டு வருகிறது.
//////////
/ When someone expressed doubts whether the cash award should be given, the Chief Minister said: “Finally, that is the body which ran and won. That’s all that matters.”
Asked why he had come out in support of her, he said: “That’s my training. That’s what a person who follows Periyar would do.”//
/////////////
Salute-eeeeeeee...
பொட்டீக் கடை!
தகவலுக்கு நன்றி!!
அதாவது கலைஞர் கொடுத்த பணத்தைத் திரும்பிவாங்கவிரும்பவில்லை எனும் தகவலுக்கு; மிக மகிழ்ச்சியாகவுள்ளது.
கலைஞருக்குத் தலைவணங்குகிறேன்.
யோகன் பாரிஸ்
எஸ்கே,
உங்களது கருத்துக்கு நன்றி.
உங்கள் தகவலுக்காக; சாந்தி ஒரு வாரத்திற்கு முன்னரே இந்தியாவிற்கு திரும்பினாலும் இந்நிகழ்வு திங்களன்று தான் அச்சு ஊடகங்களில் கதைக்கப்பட்டது.
இவ்விடயத்தை முதலில் பதிந்தவர் சிந்தாநதி. பதியப்பட்ட அன்றே பதிவை படித்தாலும் அதிலுள்ள உங்களது பின்னூட்டத்தை இன்று செல்லா பதிவை படித்த பின்னூட்டம் இட்ட பின்னரே மீண்டும் சிந்தாநதியின் பதிவில் உங்களது விளக்கத்தைப் படித்தேன். தெளிவாக எழுதியமைக்கு நன்றி. தங்களது விளக்கத்தின் படி, சாந்தியின் இந்த ஹார்மோன் பிரச்சினை நிவர்த்தி செய்யக்கூடியதே என்று புரிந்து கொள்கிறேன். இதை நீங்கள் பதிவாக இட்டிருந்தால் நான் முன்னரே படித்திருப்பேன் இங்கு மருத்துவர்கள் என்ற பதத்தை பயன்படுத்தியிருக்க மாட்டேன். தங்களுக்கு நெருடலாக இருந்தால் மன்னிக்க கோருகிறேன்.
சாந்தியின் விடயத்தில் அவர் ஆணா? பெண்ணா? அல்லது எத்தனை முறை மாட்டினார் எங்கெங்கெல்லாம் மாட்டினார் என்று ஆராய்ச்சி செய்யும் அச்சு ஊடகங்கள் ஒரு மருத்துவரின் கருத்தை பிரதானமாக வெளியிடாதது தான் என்னுடைய வருத்தம்.
பெரியாரின் வழி வாழும் அல்லது வாழ்வதாக சொல்லிக் கொள்ளும் கலைஞர் நிச்சயம் சாந்திக்கு உதவுவார் என்றும் நம்புகிறேன்.
சிந்தாநதி,
விடயத்தின் வீரியமும், அதன் பொருளும் அறியாதவர்கள் அனானியாகவும் திரித்தும் பிதற்றுகிறார்கள். அதை உதறிவிட்டு எட்டிச் செல்ல வேண்டியது தான்.
சிறில் & நாகு,
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
நெருப்பிலிருந்து உயிர்விக்கும் அன்பில பறவையைப் போன்று சாந்தி இத்தடைகளை தகர்த்தெரிந்து மீண்டும் சாதிக்க கலைஞரின் அரசாங்கமானது உதவும் என நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
***
யோகன்,
கருத்துக்கு நன்றி.
உண்மையில் சாந்தி இச்சன்மானத்தைப் பெறுவதற்காக கோட்டைக்குச் சென்றிருந்த பொழுது இவர் மட்டும் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு முதல்வரின் அறைக்கு வெளியே காக்க வைக்கப்பட்டிருக்கிறார். கலைஞர் தான் அமைச்சக செயலாளரிடம் சாந்தி என்ற பெண் எங்கேயெனக் கேட்டு அவரை உள்ளழைத்து சன்மானம் வழங்கி இருக்கிறார்.
என் ஆதரவையும் இங்கு பதிவு செய்கிறேன்,
நல்ல பதிவு பொட்"டீ".
இப்படி ஒற்றை வார்த்தையில் சொன்னாலும், மிகமகிழ்ச்சியாய் இருக்கிறது. கலைஞர் மட்டுமல்ல இந்த பதிவை எழுதியவர் யாராக இருந்தாலும் தொடரும் ஆங்கிலவரிகள் சொல்வதுதான் உண்மை "That’s what a person who follows Periyar would do"
a simple sporting sprit is enough to see the following view.
/*
“Finally, that is the body which ran and won. That’s all that matters.”
*/
Even with out the medal, SHE DID IT - deserves to be congratulated, and CM deserves an appreciation for such a enthusiastic sportsmanship view.
After all for the common media, the sport of India is the *f**king cricket*, they will lick cricketer's ...., but they pass judgment on other sportsmen.
KEEP GOING SHANTHI... MORE TO ACHIEVE... KEEP SHINING.
ramesh krishnan aangal tennis potiyil kalundhu kollum podhu, indha media en kelvi ketkavillai?? Pathi per avar aattam pengal tennis pol thanae uladhu endru solvargal:)) Appa enga pochu endha sozhiyum kudimigal? athu color phobiava alladhu class phobiava? nari ungal padhivukku.
//ramesh krishnan aangal tennis potiyil kalundhu kollum podhu, indha media en kelvi ketkavillai?? Pathi per avar aattam pengal tennis pol thanae uladhu endru solvargal:)) Appa enga pochu endha sozhiyum kudimigal? athu color phobiava alladhu class phobiava? nari ungal padhivukku. //
இன்னும் பலருக்கு பெண்கள் பிரிவில் ஆண் தன்மை மிகுந்தவரை அனுமதிக்காததன் நோக்கமே தெரியவில்லை. பெண் மனம் அது இதுவென்று பேசுகின்றனர்.
பெண்கள் பிரிவில் ஆண் தன்மை மிகுந்தவரை அனுமதித்தால், மற்ற சாதாரண பெண்கள் இவருடன் போட்டியிட முடியாது, அது நியாயமாக இருக்காது என்பதால்தான் அனுமதிப்பதில்லை.
ஆண்கள் பிரிவில் பெண்களே கலந்து கொண்டாலும் மற்ற ஆண்களுக்கு எவ்வித பாதிப்பும் வராது. எனவேதான் ஆண் போட்டியாளர்களிடையே பாலினப் பரிசோதனையே கிடையாது.
நல்ல பதிவு.
//ஹார்மோன் குறைபாடுகளும் உடலளவிலும் குறைபாடுகள் உள்ள திருநங்கைகளை பெண்களாக அல்லது அவர்களது விருப்பப்படி தனி பாலினமாகவோ அறிவிக்க வேண்டும் என அரசாங்கமே யோசித்துக் கொண்டிருக்கிற வேளையில்,//
நீங்கள் எடுத்துப் போட்டிருக்கிற கருணாநிதியின் வரிகளும்... தேவையானவை. இந்த மாதிரி ஒரு விடயத்தில் நடு நிலமை என்று நின்று "எதையாவது" நிலைநிறுத்திக் கொள்ளலாம். அத்தோடு, உடலில் ஒருவருடைய தேர்வில்லாமல் இயற்கையாலேயே வழங்கப்பட்டிருக்கிற விடயங்களை முன்வைத்தும் அவர்களை கீழிறைக்கலாம் என நினைப்பதற்கு பெயர் நடுநிலமையாய் இருக்க முடியுமா?! எங்களுடைய சூழலில் இவற்றால் எல்லாம் பாதிக்கப்படுகிறவர்களாக அந்தப் பெண்ணும் அவர் சார்ந்தவர்களுமே இருக்கிறார்கள். செய்தியில் படித்தபோது சிரமமாக இருந்தது அதுவே.
//விளிம்பு நிலையில் வாழும் ஒரு பெண்ணுக்கு சிறிதளவாவது ஆதரவாக எழுதும் என நான் எதிர்பார்த்தேன்//
தவறான எதிர்பார்ப்பு சத்யா, மவுண்ட் ரோடு விஷ்ணு இடதுசாரி வேசம் போடும் இந்துத்துவம். கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளுக்கு விளக்கு பிடித்துத் திரியும் இந்திய ஊடகங்கள், இது போன்று வென்று வருபவர்களை தூக்கிப் பிடிக்கவேண்டாம் குத்திக் கிழிக்காது இருந்தாலே போதும்.
எப்படி அய்யா ''இந்து''விற்கு எரியாமல் போகும். சாந்தியின் பூர்வீகம் இலங்கை, மேலுமவர் ஒரு தலித்(பத்திரிக்கைகளின் புலநாய்வு), நரம்பிற்குள் ஓடுவது துடிக்கிறது.
கலைஞரின் வரிகள் மிகுந்த ஆறுதலாக இருக்கிறது. இங்கு சட்டாம்பிள்ளை தனம் பேசுபவர்களிடம் இருந்து எது நீண்டாலும் அறுக்க வேண்டும்.
did u see this weak kumudam repoter,what ashame they had wriiten.it is horrible.
நல்ல பதிவு.
வரவணை, வினையூக்கி,ஒரு பொடிச்சி, ரியோ, முத்துக்குமரன் ஆகியோரின் கருத்துகளுக்கு நன்றி.
***
விவன்னியன்,
ரமேஷ்கிருட்டிணன் அவர்களுடைய குறைபாடு, அந்த காலத்தில் அவர் மட்டுமே டென்னிஸை கற்றுக்கொண்டிருந்தது மட்டுமே...ஆனால் உலகளாவிய அளவில் முன்னணி வீரர்களுடன் அவர் மோதும் பொழுது அவரை செத்தப் பாம்பு கணக்காக எல்லாரும் அடிப்பார்கள்.
ஸ்டெஃபான் எட்பர்க் ஒரு டேவிஸ் கோப்பைப் போட்டியில் ரமேஷ் கிருட்டிணனை வென்றுவிட்டு பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியது:
இதுவரி இம்மாதிரியான படு மெதுவான சர்வீஸை என் வாழ்நாளில் எதிர்கொண்டதில்லை :-))
***
அனானி,
நானும் படித்தேன். என்னவொரு எச்சக்கலைத்தனமான கேள்வி. சாந்தியின் சகோதரியிடம், உங்களது அக்கா வயசுக்கு வந்துட்டாரா என்று கேள்வியெழுப்பியுள்ளனர். அந்த நிருபரின் சட்டையைப் பிடித்து அவருடைய தாய் அவரை அவருடைய தந்தைக்கு தான் பெற்றாரா என்று கேட்கத் தோன்றுகிறது.
*
நான் தானீய மீசியோனில் படிக்கும் பொழுது ஒரு தமிழாசிரியை இருந்தார். அவரையும் இப்படித்தான் கேலி பேசுவார்கள்...அவருடைய ஏழ்மை நிலை அவரால் போஷாக்கான உணவுகளை உட்கொண்டு தகுந்த நேரத்தில் நடைபேற வேண்டிய மாற்றங்கள் ஏற்படாமல் போயிருக்கலாம். அவருக்கு வசதிகள் வந்த நேரத்தில் அவருடைய உடல் மாற்றத்தினை ஏற்கும் நிலையை கடந்திருக்கலாம். அதே போன்றதொரு நிலை சாந்திக்கும் ஏற்பட்டிருக்கலாம் அதை மலிவான பத்திரிகை வியாபாரத்திற்கு பயன்படுத்தும் உத்தி கேவலமான தரகுத் தனம்.
*
புலனாய்வு பத்திரிகையான ரிப்போர்ட்டர், சசிகலா கணவர் நடராஜனிடம், சசிகலாவுக்கும் உங்களுக்கும் "அது" நடந்ததா, அப்படியென்றால் அவர் ஏன் ஜெயலலிதாவுடன் இருக்கிறார் என்று கேள்வியெழுப்புமா?
//தடகளப் பயிற்சியாளர்கள் சிலரிடம் இவ்விவகாரம் குறித்துக் கேட்டபோது, அவர்கள் சாந்திக்கு சாதகமாக வேறுசில சந்தேகங்களை எழுப்பினர்.
‘‘தோஹா விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ள தகுதியானவர்களைத் தேர்வு செய்யும்போதே பலருடைய தலையீடும் குறுக்கிட்டது. வழக்கமாக வட மாநில கோச்சர்கள் தங்கள் மாநில வீரர்கள் தேர்வாகப் பல சாமர்த்தியங்களைக் கையாள்வார்கள். இதனால் அதிகம் பாதிக்கப்படுவது தென்மாநில வீரர்கள்தான். இந்தத் தடைகளை எல்லாம் தாண்டித்தான் சாந்தி தேர்வானார்.
தோஹா விளையாட்டுப் போட்டியில் யாருக்குமே ஆணா, பெண்ணா என சோதிக்கிற ஜெண்டர் டெஸ்ட் செய்யப்படவில்லை. ஆனால், இந்தியப் பயிற்சியாளர்கள் சிலர்தான் சாந்தியின் பாலின சர்ச்சையைப் பற்றி தோஹா அமைப்புக்குத் தகவல் சொல்லி இருக்கிறார்கள். அதன்பிறகுதான் சாந்திக்கு சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. அதை வைத்து சர்ச்சைகளும் கிளம்பி விட்டது’’ என்றனர் அந்தப் பயிற்சியாளர்கள்.//
விகடனிலிருந்து...
inthap pathivukku nanRikaL pala naNbarE! meeNdum virivAkap pinnar ezuthukiREn :)
Post a Comment