1948ம் ஆண்டிலேயே தேசியக் குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட்டிருந்தாலும் 1968 வரையிலான காலம்வரை ஆஸ்திரேலியாவின் பூர்வீகக்குடிகளுக்கு ஓட்டுரிமை மறுக்கப்பட்டு வந்துள்ளது என்ற விடயம் திகைக்க வைக்கும் விடயமாகும். அதுமட்டுமன்றி இந்தகாலம் வரை இம்மக்கள் ஓட்டுரிமை என்று ஒன்று இருப்பதாகவே அறிந்திருக்கவில்லை. தெற்கு ஆஸ்திரேலியா, விக்டோரியா, நியூசவுத்வேல்ஸ் மாகாணங்களில் பரவலாக பூர்வீகக்குடிகள் தம் ஓட்டுரிமையை அவ்வெல்லையின் ஆளுகைக்குட்பட்ட அரசு பறித்திராவிட்டாலும், பூர்வீகக்குடிகளின் உரிமையை அவர்களுக்கு எடுத்துரைக்க தவறியது. இங்கே இப்படியென்றால் குயின்ஸ்லாந்து,வடக்கு மாகாணம், தாஸ்மேனியா, மேற்கு ஆஸ்திரேலிய மாநிலங்களில் பூர்வீகக்குடிகள் நாலாந்தரக் குடிமக்களாகவும், அடிமைகளாகவும் வலுக்கட்டாயமாக உரிமைகள் பறிக்கப்பட்டும் வந்துள்ளனர். மேலும் 1971ம் ஆண்டு வரை இம்மக்களை பரங்கித்தலை அரசாங்கமானது ஒரு மனித இனமாகவே அங்கீகரிக்காதது, அவர்களை ஆஸ்திரேலியாவின் சனத்தொகையின் அங்கமாக கணக்கெடுத்ததில்லை என்பதிலிருந்து அறிந்து கொள்ளலாம். இங்கிலாந்து அரசியின் அடிவருடி, அடிமையாகக் கருதப்பதும் ஆஸ்திரேலிய மக்கள் 1967ல் 90% அளவில் பூர்வீகக்குடிகளும் ஆஸ்திரேலியாவின் அங்கம் எனவும், அவர்களையும் சனத்தொகை கணக்கெடுப்பில் சேர்க்கப்படவேண்டும் என கருத்து தெரிவித்திருந்தாலும் 1971ல் தான் கும்பினிய அரசாங்கம் அதை செயல்படுத்தியது.
...இந்தியாவிலும் இது போன்ற அடக்குமுறைகள் பரங்கியரின் காலனியாதிக்க காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தாலும், இதிலும் பெரும்பாலும் விளிம்பு நிலையில் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட சமுதாயத்தினரே அடக்கியாளப்பட்டு வந்துள்ளனர் என்பதும் அதில் மறைந்துள்ள பார்ப்பனீய நுண்ணரசியலும் தெளிவாக நமக்கு விளங்கும். இந்தியாவின் பூர்வீகக்குடிகளாக அறியப்படுபவர்கள் பெருவாரியாக இருந்ததினாலேயே கும்பினியரும் சரி, அதற்கு முன் ஆண்டு வந்த இசுலாமியப் பேரரசர்களும் சரி அல்லது அதற்கு முன் மூடநம்பிக்கைகளின் பெயரிலும், தனது தரகு புத்தியினால் அதிகாரத்தை கைக்குள் கொண்டும் ஆரியப் பார்ப்பனர்கள் முழுவதுமான இனவொழிப்பை எற்படுத்த முயன்று அதில் தோல்வியைக் கண்டிருந்தனர். இந்தத் தோல்வியின் காரணத்தினாலேயே மனுவின் பெயரில் தேவ பாடையும், கற்பனையான வேத பாடங்களும் வருணாசிரம தர்மங்களும் உருவாக்கம் பெற்று இன்றுவரை ஒருசாராரின் உரிமைகள் ஆதிக்க சமுதாயத்தினரினால் ஒடுக்கப்பட்டவரின் உரிமைகள் மறுக்கப்பட்டே வந்திருக்கின்றன. இதன் சான்றுகளாகவே கீழ்வெண்மனிப் படுகொலையும், சிறுதொண்டமாதேவி பாலியல் வன்முறைகளும், பாப்பாரப்பட்டி,கீரிப்பட்டி ஓட்டுரிமை மறுப்பும் அரங்கேறி வந்துள்ளன...1890 தொடங்கி 1970 வரையிலான காலகட்டங்களில் சற்றேறக்குறைய 110,000 பூர்வக்குடிகளின் குழந்தைகள் வலுக்கட்டாயமாக பெற்றோரிடமிருந்து பறிக்கப்பட்டும் கடத்தப்பட்டும் அவர்களுடைய மொழி, கலாச்சாரம் வாழ்வியல் முறை மரூக்கப்பட்டும் ஆங்கிலப்பேரினவாத அரசதிகாரிகளால் "பூர்வக்குடிகளின் குடியுரிமை பாதுகாப்புச் சட்டம்" என்ற பெயரில் மனவியல் வன்முறையைக் கையாண்டு இனவொழிப்பை நடத்திவந்துள்ளனர். இவ்வாறு நாடுகடத்தப்பட்ட குழந்தைகளில் பெரும்பாலோனோர் 5 வயதிற்கு உட்பட்டவராகவும் எஞ்சியவர் பால்மனம் மறவாக் குழந்தைகளும் தாம். இவ்வாறு கடத்தப்பட்ட குழந்தைகள் அவர்தம் பெற்றொரை எவ்விதத்திலும் சந்திக்கவோ தொடர்பு கொள்ளவோ முடியாது.இவ்வாறு கடத்தப்பட்டக் குழந்தைகள் பல்லாயிரக்கணக்கான மைல்கற்களுக்கு அப்பால் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இவர்களது மொழியும் கலாச்சாரமும் வாழ்வியல் முறையும் மறக்கடிக்கப்பட்டு ஆங்கில மொழியையும், கலாச்சாரத்தையும் திணிக்கப்பெற்றனர்.இந்தக் குழந்தைகள் (HALF CASTE) பெரும்பாலும் வெள்ளைகாரனின் குறியரிப்பில் பலியான பூர்வக்குடியைச் சேர்ந்த பெண்களுக்கும் பிறந்தவர் தாம். இவர்களில் வெள்ளைக்காரனின் நிறத்தையொட்டிய குழந்தைகள் நகரங்களில் உள்ள பள்ளிகட்கு அனுப்பி வெள்ளைக்காரர்களாகவே பாவிக்கப்பட்டனர்.எஞ்சிய பெரும்பாலானவர்கள் பணக்கார வெள்ளைக்காரனின் பண்ணையில் வேலை செய்வதற்காகவே உடலளவிலும் மனதளவிலும் தயாரிக்கப்பட்டனர். இவர்களை "களவாடப்பட்ட சந்ததியினர்" என்றழைக்கப்படுகிறார்கள். இவ்வாறு 1931ல் களவாடப்பட்ட மூன்று இளஞ்சிறுமிகளின் கதையை திரைப்படமாக எடுக்கப்பட்டது தான் "RABBIT PROOF FENCE".இது 2002 ஆம் ஆண்டு உலகளவில் திரைக்கு வந்தபோது தான் "களவாடப்பட்ட சந்ததியினர்"ன் அவலங்களும் வெளியுலகிற்கு எட்டியது. இந்த மூன்று சிறுமிகளில் ஒருவரான "மோலி க்ரைக்"ன் மகளான "டோரிஸ் பில்கிங்டன் கர்ரிமரா" எழுதிய நாவலின் அடிப்படையாகக் கொண்டு இயக்கப்பட்டது தான் இந்தத் திரைப்படம்.
இனி "RABBIT PROOF FENCE" செல்வோம் .
ஜிகலாங் என்னும் இடத்தில் "மோல்லி க்ரைக்"(13 வயது),"டெய்சி க்ரைக்"(5 வயது) இவர்களின் சின்னம்மாவின் மகளான "க்ரேசி ஃபீல்ட்ஸ்"(9 வயது) ஆகிய மூவரும் "கலப்பினமாக" அடையாளம் காணப்பட்டு வலுக்கட்டாயமாக 1500 மைல்கற்களுக்கு அப்பால் உள்ள "மூர் ரிவர்" பூர்வீகக்குடிகளின் முகாமிற்கு கடத்தப்படுகின்றனர். இம்முகாமில் நடக்கும் கெடுபிடிகளும் வாழ்க்கை முறையும் பிடிக்காத "மொல்லி" அங்கிருந்து தப்பிக்க திட்டமிட்டு தனது தங்கையையும், சின்னம்மாவின் மகளையும் தன்னோடு வருமாறு அழைக்கிறாள். இதில் "க்ரேஸி"க்கு உடன்பாடில்லாவிட்டலும் அரைமனதோடு முகாமிலிருந்து தப்பிக்க ஒத்துழைக்கிறாள். மூவரில் சகோதரிகள் இருவர் மட்டும் நம்பிக்கையிழக்காமல் 9 வாரங்கள் 1500 மைல்கற்களை நடந்தே கடந்து அவர்களுடைய பூர்விகமான "ஜிகலாங்"கிற்கு வந்து தமது அன்னையோடு தஞ்சமடைகின்றனர். இடையே "டெவில்" என்றழைக்கடும் மிஸ்டர் "னெவ்வில்"(பூர்வீகக் குடிகளின் மறுவாழ்வு புனரைப்பின் தலைவர்) அவர்களின் தந்திர சூழ்ச்சியால் "க்ரேஸி" மட்டும் பிரிக்கப்பட்டும் மீண்டும் "மூர் ரிவர்" முகாமிற்கு மீண்டும் கடத்தப்படுகிறாள். படத்தின் பிண்ணனி இசையும், தத்ரூபமான ஓளிஓவியமும் படத்தை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் பிரமிப்பை ஏற்படுத்தும். இந்த திரைப்படத்திலும் ஆஸ்திரேலியாவின் பல்வேறுபட்ட நிலவமைப்பினை அழகாகக் காட்டியுள்ளனர். மேலும் உண்மை நிகழ்வு என்று சொல்லப்படுவதால் "க்ரைக்" சகோதரிகளில் மூத்தவளான "மோல்லி"யின் பிரமிக்க வைக்கும் அறிவுத்திறனும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

எவ்வித தடய அடையாளமுமின்றி தம்முடைய பூர்வீகமான "ஜிகலாங்"கின் வழியே செல்லும் "Rabbit Proof Fence"ஐத் தேடி அதில் வெற்றியுமடைந்து தமது பூர்வீகத்தை வந்தடைகின்றனர் "க்ரைக்" சகோதரிகள். வழியில் வனாந்திரத்தின் நடுவில் "வேலி" துண்டிக்கப்பட்டிருந்தலும் நிச்சயமாக மீண்டும் "வேலியை" அடைய முடியும் எங்கிற "மோல்லியின்" தன்னம்பிக்கை பிரமிக்க வைக்கிறது.



RABBIT-PROOF FENCE
Miramax Hanway and the Australian Film Corp.
A Rumbalara Films & Olsen Levy production
Producers: John Winter, Phillip Noyce, Christine Olsen
Director: Phillip Noyce
Executive producers: David Elfick, Jeremy Thomas, Kathleen McLaughlin
Screenwriter: Christine Olsen Based on the book "Follow the Rabbit-Proof Fence" by: Doris Pilkington Garimara
Director of photography: Christopher Doyle
Production designer/costume designer: Roger Ford
Editors: John Scott, Veronika Jenet
Color/stereo Cast:
Molly: Everlyn Sampi
Daisy: Tianna Sansbury
Gracie: Laura Monaghan
Mr. A.O. Neville: Kenneth Branagh
Moodoo: David Gulpilil
Maude: Ningali Lawford
Mavis: Deborah Mailman
Constable Riggs: Jason Clarke