பேரன்புடையீர்!
அனைவருக்கும் வணக்கம்,
நமது தாய்த்தமிழ்ப் பள்ளி, பிரிஸ்பேன் தமிழ்ச் சமூகத்தினருக்குச் சிறப்பான கல்வியை தரமாக
வழங்கி வருவது நீங்கள் அனைவரும் அறிந்தததே. தமிழ்க் கல்வி கற்பிப்பது
மட்டுமல்லாமல் சமூகத்தினரிடையே வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கவும்,
இலக்கியத்தில் நாட்டம் கொண்டோரிடையே புத்தகப் பரிமாற்றம்
செய்வதற்கேதுவாகவும் தாய்த்தமிழ்ப் பள்ளி நூலகம் ஒன்றையும் நடத்திக்
கொண்டுவருகிறது.
இதன் அடுத்த நகர்வாக தமிழ்ச் சமூகத்தினரிடையே தமிழிலக்கியத்தை வளர்த்தெடுப்பதற்காகவும், அவர்தம் அனுபவம், எழுத்தாளுமை, கற்பனைத்திறனை பரந்துபட்ட வாசகர்களிடையே பகிர்ந்துகொள்ளும் பொருட்டு “ஆஸ்திரேலியா – பல கதைகள்” என்ற தலைப்பில் தமிழ்ச்சிறுகதைப் போட்டி ஒன்றை நடத்தவிருக்கிறது. இது ஆஸ்திரேலிய கண்டத்துக்குட்பட்ட ஒரு போட்டியாகும்.
இதன் அடுத்த நகர்வாக தமிழ்ச் சமூகத்தினரிடையே தமிழிலக்கியத்தை வளர்த்தெடுப்பதற்காகவும், அவர்தம் அனுபவம், எழுத்தாளுமை, கற்பனைத்திறனை பரந்துபட்ட வாசகர்களிடையே பகிர்ந்துகொள்ளும் பொருட்டு “ஆஸ்திரேலியா – பல கதைகள்” என்ற தலைப்பில் தமிழ்ச்சிறுகதைப் போட்டி ஒன்றை நடத்தவிருக்கிறது. இது ஆஸ்திரேலிய கண்டத்துக்குட்பட்ட ஒரு போட்டியாகும்.
இப்போட்டியானது இரண்டு பிரிவுகளில் நடத்தப்படும்.
இளையோர் பிரிவு – 17 வயதிற்குட்பட்டோர்
பெரியோர் பிரிவு – 17 வயதிற்கு மேற்பட்டோர்
போட்டியின் விதிமுறைகள்
1. போட்டியில் கலந்துகொள்வோர் ஆஸ்திரேலிய கண்டத்தைச் சேர்ந்த நாடுகளில் ஒன்றை வசிப்பிடமாகக் கொண்டிருக்க வேண்டும்.
2. கதைக்களம் மற்றும் சூழல் ஆ ஸ்திரேலிய கண்டத்தை மையமாகக் கொண்டிருக்க வேண்டும்.
3. கதைக்களன் குடும்பம், காதல், அமானுஷ்யம், அனுபவம், மர்மம், நகைச்சுவை என எப்படி வேண்டு மானாலும் இருக்கலாம். உண்மைக் கதையாகவும் இருக்கலாம், புனைக்கதையாகவும் இருக்கலாம்.

4. கதையின் அளவு 500 வார்த்தைகளுக்குக் குறையா மலும் 1500 வார்த்தைகளுக்கு மிகாமலு ம் இருக்க வேண்டும்.
5. ஒருவர் ஒன்றிற்கும் மேற்பட்ட கதைகளை அனுப்பலாம். ஆனால் வெவ்வேறு கதைக்களன்களில் இருக்கவேண்டும்.
6. போட்டிக்கு வரும் சிறுகதை எந்தவொரு வடிவிலும் வேறெங்கிலும் வெளியாகியிருக்கக் கூடாது.
7. வெற்றிபெறும் கதைகளையும் போட்டியில் பங்கெடுக்கும் கதை களையும் போட்டி நடத்தும் அமைப் பு பயன்படுத்திக் கொள்ளலாம்
8. ஒவ்வொரு பிரிவிலும் போட் டிக்கு வரும் கதைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து 10 முதல் 20 கதைகள் வரை ஆஸ்திரேலிய தோ் வுக் குழுவினரால் தெரிவு செய்யப் படும். அவை தமிழகத் தேர்வுக்குழுவினருக்கு அனுப்பிவைக்கப்படும். தேர்வுக்குழு ஒருங்கிணைப்பாளர்களாக இளம் பத்திரிகையாளர்கள் திரு.அதிஷா, திரு.யுவகிருஷ்ணா ஆகியோரும், நடுவர்களாக கதாசிரியர் திரு.பாஸ்கர் சக்தி அவர்களும், தங்கமீன் இணைய இதழ் ஆசிரியர் திரு.பாலு மணிமாறன் அவர்களும் இருப்பார்கள். ஒவ்வொரு பிரிவிலும் மூன்று பரிசுகள் வழங்கப்படும்.
9. போட்டியில் தெரிவு செய்யப்படாத கதைகள் எக்காரணம் கொண்டும் திருப்பியனுப்பப்பட மாட்டாது.
10. கதைகளின் காப்புரிமை “தாய்த்தமிழ்ப் பள்ளி”க்குச் சொந்தமானது.
இப்போட்டியைப் பொறுத்தவரையில் தேர்வுக்குழுவினரின் முடிவே இற ுதியானது.
கதைகள் அனுப்புவதற்கான கடைசி நாள் யூன் (June) 30/06/2012.
இப்போட்டியின் முடிவுகள் ஜுன் ம ாதம் அறிவிக்கப்பட்டு, பரிசுகள் தாய்த்தமிழ்ப் பள்ளியின் ஆண்டு விழாவின் போது கொடுக்கப்படும். பரிசும், அதை தேர்வு செய்யும் நடுவரும் பின்னர் அறிவிக்கப்படும்.
மேலும் போட்டிக்கு வரும் கதை களில் முத்திரைக் கதைகள் தொகுக்கப்பட்டு சிறுகதைத் தொகுதி புத்தகமாக அச்சிடப்பட்டு வெளியி டப்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. இதன் மூலம் கதாசிரி யர்களின் திறன் ஊரறியச் செய்யப்படும். கதைகளை PDF கோப்பு வடிவில் தாய்த்தமி ழ்ப் பள்ளியின் மின்னஞ்சல் மு கவரியான thaaitamilschool@gmail.com க்கு அனுப்பவும். கத ைகளை அச்சுப்பிரதியாக ( Hard copy) அனுப்ப விரும்புவோர் ப ள்ளியின் தபால் பெட்டிக்கு அனுப்பலாம்.
தாய்த்தமிழ்ப் பள்ளி த.பெ முகவரி
Thaai Tamil School Queensland
PO Box 6212 Fairfield Gardens, QLD 4103
PO Box 6212 Fairfield Gardens, QLD 4103
மேலும் விவரங்களுக்கு தாய்த்தமிழ்ப் பள்ளியின் இணையதளத்தின் வழியாக தொடர்புகொள்ளலாம்.www. thaaitamilschool.com
அல்லது கீழ் உள்ள கைத்தொலைப்பேசி எண் வழியாகவும் தொடர்பு கொள்ளலாம்.
பார்த்தீபன் 0432276977
முகுந்த்ராஜ் 0423730122
1 comments:
நமக்கு நாமே!
Post a Comment