4/29/2006

இன்றுடன் முப்பது நாள்!

ஒரு துன்பியல் சம்பவம்...

எவ்வித எதிர்பார்ப்புமின்றி, காளையாய் திரிந்திருந்த என்னை உலகறியப் போட்டுத் தள்ளிய தினமலருக்காக கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குகிறேன். எங்களுடைய சுற்றத்தில் 16ம் நாள் நடைபெறும் கருமகாரியத்தைவிட 30ம் நாள் நடக்கும் ஒப்பாரியே முக்கியத்துவம் வாய்ந்தது. தினமலரில் என்னுடைய வலைப்பூவை குறிப்பிட வேண்டிய அவசியம் என்னவென்று எனக்கு இதுவரை ஒரு புரியாத புதிராகவே இருந்து வந்துள்ளது. ஆயினும் துக்கத்தை அடக்க முடியாததாலும், எனக்கு நடுநிலைவியாதி இல்லாததாலும் - நடுநிலை பத்திரிகையான தினமலரை விமர்சிக்கும் தகுதி எனக்கு இல்லாததனாலும், உலகறிய ஒப்பாரியில் கலந்து கொள்ள வருமாறு வருத்தத்துடன் அழைக்கிறோம்.

அங்கீகாரம் = கேலிக்கூத்து

உதாரணத்திற்கு சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களின் பின்னூட்டங்கள். அவர் சுயமாகவே சிந்தித்து பின்னூட்டமிடுபவராய் இருந்தாலும் தினமலரின் கேலிக்கூத்தைக் கணக்கில் கொண்டு என்னுடைய பதிவுகளை அங்கீகரித்து வாழ்த்து கூறி இருக்கிறார். அவரிட்ட பின்னூட்டம் இங்கே!இதனுடைய தமிழாக்கம்
"தினமலர் உங்கள் இன்றையப் பதிவை பற்றி போட்டு இருக்கிறார்கள்.நடுவில் சறுக்கினாலும் உங்கள் பதிவு நல்ல விதமாக முடிந்ததற்கு வாழ்த்துக்கள்"


நடுவில் சறுக்கிய என்னுடைய பதிவுகள், தினமலரில் ஒரு துன்பியல் சம்பவமாக அச்சேறிய காரணத்தால் எனக்கு வாழ்த்துக்கள்...வெட்கக்கேடு!!!


இதற்கு அவர், உம்மையெல்லாம் எப்படி தினமலரில்...? என போட்டிருந்தால் மிக்க மகிழ்ச்சியாய் இருந்திருக்கும்.

தேன்கூடு = வெரும்கூடு

தேன்கூடு பதிவுகள் திரட்டிக்கு யாரோ ஒரு சகோதரி/சகோதரர் தான் தினம் ஒரு வலைபூவை அறிமுகம் செய்து வருகிறார், அவராவது கொஞ்சம் யோசித்திருக்க வேண்டாம்? என்னுடைய வலைப்பதிவு யாருக்கும் எவ்விதத்திலும் உபயோகமாய் இருந்ததில்லை, உபத்திரமாகவே இருந்திருக்கிறது. தினமலரில் போட்டு விட்டார்கள் என்ற காரணத்தினாலேயே என்னுடைய வலைப்பூவை அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏன்? தினமலராவது பரவாயில்லை ஒரு பத்தியளவிற்கு என்னைக் கிழித்துக் கொன்றிருந்தது. தேன்கூட்டிற்கு எதைக் குறிப்பிட்டு என் பதிவை அறிமுகப்படுத்துவது என்று தெரியாமல் "பின்னூட்டப்புகழ் சத்யா" என்று குறிப்பிட்டிருந்தனர். ஆக இப்படியெல்லாம் என்னை அவமானப் படுத்த வேண்டுமா? என்று என்னுடைய துக்ககரமான இந்த முப்பதாவது நாளில் ஒரு சிறு கேள்வியோடு முடித்துக் கொண்டு, சுற்றத்தார் அனைவரையும் ஒப்பாரியில் கலந்து கொள்ள வருத்தத்துடன் அழைக்கிறேன்.

6 comments:

said...

தேன்கூட்டில் அவ்வப்போது பதிவாளர்களை கவுரவித்து முன்பக்கத்தில் போடுவது கேவிராஜா என்பவர். இவர் கொசப்பேட்டை என்ற பெயரிலும் கேவிராஜா என்ற பெயரிலும் உலவுகிறார்!!!

***
நண்பன் என்ற பெயரில் பின்னூட்டமிட்ட அனானியின் மட்டுறுத்தப்பட்ட பின்னூட்டம்.

said...

துக்கம் தொண்டைய அடைக்குதுங்க...

:-)...ஐயையோ...ஸ்மைலிய மாத்திப் போட்டுட்டேனே.... இருங்க இருங்க...

:-(( இப்பதான் சரியா இருக்கு!!!!

Anonymous said...

yet another cheap publicity stunt shame on you.

said...

ரொம்ப நன்றி அருட்பெருங்கோ!
நீங்களாவது என்னுடய துக்கத்தில் பங்கு கொண்டீர்களே, என்னுடைய் சோகம் ஒரு 5% குறைந்த மாதிரி இருக்கு!

***
அனானி அக்கா,
புதுசா எதுனா சொல்லிட்டுப் போங்க...அது எப்படி நான் எழுதினா மட்டும் "cheap publicity stunt" அப்டின்னு வாய் கூசாம சொல்லிட்டுப் போறீங்க!
நானே என்னோட சோகத்துல ஒரு 50% யாவது எறக்கி வெக்கலாம்னு இருக்கேன். நீங்க இப்டி வந்து வெந்த புண்ல கொள்ளிக் கட்டைய சொருவிட்டுப் போறிங்களே!:((

said...

//தேன்கூட்டில் அவ்வப்போது பதிவாளர்களை கவுரவித்து முன்பக்கத்தில் போடுவது கேவிராஜா என்பவர். இவர் கொசப்பேட்டை என்ற பெயரிலும் கேவிராஜா என்ற பெயரிலும் உலவுகிறார்!!! //

அன்பு சத்யா,

தேன்கூடு பரிந்துரையில் எனக்கு நன்கு பரிச்சயம் உள்ள ஒரு சிலரை பற்றி எப்பொழுதாவது எழுதியது உண்டு. மற்றபடி எல்லா நாளும் எழுதுவது நான் இல்லை.

உங்களை எனக்கு சமீபகாலமாக மட்டுமே தெரியும். இடையில் சில மாதங்கள் வேலை காரணமாக வலைப்பதிவுகளில் உலா வர முடியாமை காரணமாக உங்களது பதிவுகள் எல்லாம் அதிகம் வாசித்தது இல்லை. சமீபமாக உங்களது தேர்தல் பதிவுகளைப் படித்தே நீங்கள் நெல்லிக்குப்பம் என்பது கூட அறிந்துகொண்டேன். மற்றபடி உங்களை பற்றி அதிகம் தெரியாது. அதிகம் பரிச்சயம் இல்லாதவர்களை பற்றி நான் எழுதுவது இல்லை.

நான் அறிந்தவரையில் தேன்கூட்டில் வாசகர்கள் பலர் தங்களது நண்பர்களை பற்றி எழுதி அனுப்புகிறார்கள். அது போல உங்களுடையதையும் அனுப்பி இருக்கலாம்

மற்றபடி, என்னை பற்றி அதிகம் தெரிந்தவர் போல எழுதிய நண்பருக்கு எனது நன்றி (வேற எதுனா சொன்னா, பிறகு ஊர்ல உள்ள அத்தனை முகமூடியும் போட்டுக்கிட்டு வந்து அர்ச்சனை மேலே அர்ச்சனையா செய்வாரு. எதுக்கு வேலில போற ஓணானை எடுத்து வேட்டிக்குள்ளே விட்டுக்கணும்).

said...

கேவிஆர்,

விளக்கத்திற்கு நன்றி.
அந்த அனானியும் புரிந்து கொள்வார் என நம்புகிறேன். எனக்கு "வாசகர் வட்டமும்" கிடையாது. பதிவுலக "நண்பர் வட்டாரமும்" கிடையாது.மேலும் என்னுடைய பதிவை எந்தவொரு நண்பரும் "தேன்கூடு" திரட்டிக்கு பரிந்துரைத்திருக்க வாய்ப்புகளும் குறைவு.

//தினமலரில் போட்டு விட்டார்கள் என்ற காரணத்தினாலேயே என்னுடைய வலைப்பூவை அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏன்?//
இதைத்தான் நான் கேள்வியாக எழுப்பியிருக்கிறேன்.

நான் கொசப்பேட்டை.காமின் ரசிகன்...:-)

நன்றி.