4/09/2006

எல்லோரும் வாய்விட்டு சிரிச்சிக்கோங்க...

இதுவரை "இது தான்டா போலிஸ்" போன்ற திரைப்படங்களில் மட்டுமே கண்டு வந்த "டயலாக்"குகள் இன்றைய தமிழக அரசியலிலும் அரங்கேறி வருகின்றன. அதில் ஒன்று தான் இன்றைய தமிழக முதல்வரான ஜெயலலிதாவின் பேச்சும்! அவர் பேசியது பின்வருமாறு...
கருத்துக் கணிப்பு முடிவுகள் அதிமுகவுக்கு சாதமாக இருப்பதால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து தேர்தலை நிறுத்த திமுக சதி செய்கிறது என முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரை நகரில் தீவிர பிரசாரம் மேற்கொண்ட ஜெயலலிதா செய்தியாளர்களிடம் பேசுகையில்,
எப்படியாவது தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலை நடத்த விடாமல் தடுக்க திமுக தலைவரும், அவரது கூட்டாளிகளும் பயங்கர சதித் திட்டத்தை தீட்டியிருக்கிறார்கள்.

பல்வேறு பத்திரிகைகள், நிறுவனங்கள் நடத்தி வரும் கருத்துக் கணிப்பு முடிவுகள் அதிமுக கூட்டணிக்கு சாதகமாக இருப்பதால், தேர்தலைய நடத்த விடாமல் செய்வதே அவர்களது இப்போதைய ஒரே திட்டமாக உள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு அத்தனை கருத்துக் கணிப்புகளிலும் அதிமுக கூட்டணிக்கு சாதகமாக முடிவுகள் வந்து கொண்டுள்ளன. அதிமுக மிகப் பெரிய மெஜாரிட்டியோடு ஆட்சி அமைக்கும் என்று கருத்துக் கணிப்புகள் கூறி வருகின்றன.

எனவே திமுகவும், கூட்டணிக் கட்சிகளும் பெரும் தோல்வியை சந்திக்கும் என்பதை உணர்ந்ததால் திட்டமிட்டபடி மே 8ம் தேதி தேர்தலை நடத்த விடாமல் செய்ய வேண்டும் என்று அவர்கள் சதித் திட்டம் தீட்டியுள்ளனர்.அவர்களுடைய திட்டமே இதுதான். கூலிப்படைகளை வைத்து தமிழகம் முழுவதும் வன்முறையைக் கட்டவிழ்த்து விட வேண்டும். அதன் பின்னர் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்று காரணம் காட்டி தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்த முடியாது என்று சொல்லி தேர்தலையே ஒத்திப்போட வேண்டும்.

இதுதான் அவர்களுடைய திட்டம். கருணாநிதியின் திட்டம்.

மே 21ம் தேதி வரை தேர்தல் நடைபெறவில்லை என்றால் மே 21ம் தேதிக்குப் பிறகு குடியரசுத் தலைவர் ஆட்சி தானாகவே வந்து விடும். அதன் பின்னர் ஆளுனர்தான் ஆட்சி செய்வார்.

அத்தகைய சூழ்நிலையில் தேர்ததல் நடத்தப்பட்டால் தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள். இதுதான் அவர்களுடைய திட்டம். இதற்கு முதல்படியாகத்தான் பசுபதி பாண்டியன் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் அவர் தப்பி விட்டார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரது மனைவி இறந்து விட்டார். இதுதான் அவர்களது திட்டத்தின் முதல்படி.

அவர்கள் எதிர்பார்த்தபடி இந்த சம்பவம் அமையவில்லை.இந்த சதித் திட்டம் நம்பகமான சில தகவல்கள் மூலம் எனக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவேதான் இதனை மக்களுக்குத் தெரிவிக்கிறேன். மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும்.

எங்கேயும் வன்முறை சம்பவத்துக்கு இடம் அளித்து விடக் கூடாது. காவல்துறையினர் நிச்சயம் விழிப்புணர்வுடன் இருப்பார்கள். ஆனால் கருணாநிதியும், அவரது கூட்டாளிகளும் எவ்வளவு கீழ்த்தரமான அரசியல் நடத்தத் துணிந்து விட்டார்கள் என்பதை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்பதற்காக இதைச் சொல்கிறேன் என்றார் ஜெயலலிதா.
எப்படி ஒரு பொறுப்புள்ள முதல்வர் இவ்வாறெல்லாம் பேச முடியும்? இவருக்கு நம்பகச் செய்திகள் வந்துள்ளதாக கூறுகிறார்.அப்படியென்றால் சம்பந்தப்பட்டவரைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தியிருக்கலாமே, சங்கர மடத்துக்காரர்களைக் கைது செய்தது போல்...

கீழ்த்தரமான அரசியல் பற்றி ஜெயாவெல்லாம் பேசும்படி ஆகிவிட்டது தமிழக அரசியல்.

4 comments:

said...

சிரித்துடுவோம்..ஆனால்

Anonymous said...

//கூலிப்படைகளை வைத்து தமிழகம் முழுவதும் வன்முறையைக் கட்டவிழ்த்து விட வேண்டும். அதன் பின்னர் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்று காரணம் காட்டி தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்த முடியாது என்று சொல்லி தேர்தலையே ஒத்திப்போட வேண்டும்.//

அப்ப திட்டம் ரெடி போல??!!.

said...

ada ithuku poi alatikalama .... arasiyala ithellam sagajamappa ....

Anonymous said...

அடியாள் கலாச்சாரம் வளர்ந்ததே ஜெயா காலத்தில்தான். எம்ஜிஆர், கருணாநிதி காலத்தில் இல்லை.