எல்லாம் வல்ல
அரசா
எதுவும் வெல்ல
அரசா
வெள்ளைச் சொக்காய்
கொத்தடிமைகளை
கொண்டவளுக்கு ஒரு கனவு
அதுவும்
வல்லரசுக் கனவு
******
முப்பது ஆண்டுகட்கு பிறகு இம்மாதம் 21ம் தேதியன்று ஆஸ்திரேலிய தேசம் கடனில்லா நாடாக அறிவித்துக் கொண்டிருக்கிறது. இது தொடர்பான அந்நாட்டின் கருவூல அமைச்சரின் பேச்சை எழுத்து வடிவாக இங்கே காணலாம். ஆஸ்திரேலியாவிற்கென்று தனியொரு அளவில் பெரிதான வெளியுறவுக் கொள்கைகள் கிடையாது. ஆஸ்திரேலியாவின் இராணுவப் படையும் அவ்வளவாக பலமிக்கதும் இல்லை.ஆஸ்திரேலியாவின் கடற்படை, அதனுடைய எல்லைக்குட்பட்ட கடற்புறத்தைக் கூட காக்க இயலாத ஒன்று. அந்த ஒரு காரணத்தினாலேயே நேச நாடு என்ற போர்வையில் அமெரிக்காவிற்கு "சொம்பு" தூக்கிக் கொண்டிருக்கிறது. இதை ஆஸ்திரேலியர்களே வேண்டா வெறுப்பாக ஏற்றுக் கொண்டுள்ள உண்மை. ஆயினும் உணவுத் தேவையிலும், இன்னபிற அத்தியாவசியத் தேவைகளான எரிபொருள், மின்சாரம் போன்றவற்றிலும் தன்னிறைவை எட்டிக் கொண்டிருக்கிறது.
***
அமெரிக்காவின் ஏகாதிபதியமும், பொருளாதாரச் சுரண்டலும் உலகறிந்ததே.அமெரிக்காவிற்கும், ஒருங்கிணைந்த சோவியத் கூட்டமைப்பிற்கும் நடந்த, யார் பெரியவன் என்ற பனிப்போரில் அமெரிக்க 100% வெற்றியடைந்ததிற்கு காரணமாகச் சொல்லபடுவது அமெரிக்காவின் தன்னிறைவும், தன் மக்களிற்கு அத்தியாவசியத் தேவையைப் பூர்த்தி செய்ததுமேயாகும். அமெரிக்காவின் தன்னிறைவிற்கு காரணமாகக் கருதப் படுவது 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட தொழிற்புரட்சியும், அதைத் தொடர்ந்த பசுமைப் புரட்சியுமேயாகும். இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப் பட்ட அனைத்து பொருட்களும் (இரும்பு உலோகத்திலான) 'பிட்ஸ்பர்க்"ல் இருந்து தான் சென்றதாகவும் சொல்லக் கேள்வி. இந்த கால கட்டத்தில் அமெரிக்காவின் பெரும்பாலான மக்கள் "உழைக்கும் வர்க்கத்தை" சார்ந்தவர்கள்.
***
கனவு காணுங்கள் என்று இந்தியக் கூட்டமைப்பின் குடியரசுத் தலைவரே கூறிவரும் நிலையில், எந்தவொரு இந்தியக் குடியும் தனது தேசத்தை ஒரு வல்லரசாக சித்தரித்து கனவு காண்பதில் எவ்விதமானத் தவறும் இல்லை. அகில உலகில் இந்தியாவின் நிலையும் நிலவரமும், உலகின் அடுத்த வல்லரசு என்ற பிம்பமாக இந்தியருக்கும், ஏழை பிச்சைக்கார மற்றும் வெள்ளைச் சொக்காய் கூலிகளை உற்பத்தி செய்யும் நாடாக மேற்கத்தியவருக்கும் தெரிகிறது.
பலவிதமான வர்ணங்களும் வண்ணங்களும் அரசியல் குப்பையில் திளைத்தூறிக் கொண்டிருக்கிறது.எங்களின் பலமே சனநாயகமும், மதச்சார்பின்மையும் என்று கூறிக் கொண்டு ஐ ஐ டி களிலும் ஏ ஐ ஐ எம் எஸ் களிலும் வருங்கால வெள்ளைச்சொக்காய் அடிமைகள், பிச்சைகாரனை பிச்சைக்காரனாகவே இருக்க விடுங்கள் என்றப் போராட்டம் வேறு.
கல்வித்துறையின் கடந்த 50 ஆண்டுகளில் பெரிதான முன்னேற்றம் அடைந்திருந்தாலும், இன்றைய அளவில் இந்தியானின் ஒட்டுமொத்த மக்களில் 60% மட்டுமே கல்வியறிவு உள்ளவர்களாக இருக்கிறார்கள். இதில் 10% - 20% வரை வெறும் கையெழுத்து மட்டுமே போடத் தெரிந்தவர்களாக இருப்பார்கள்.உணவுத் தேவையிலாவது தன்னிறைவு அடைந்திருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. வசிப்பிடம் பற்றி கூறவேத் தேவையில்லை உலகின் மிகப்பெரிய சேரிகளும் இந்திய நகரங்களில் தான் இருக்கிறது. ஆக மனித வாழ்விற்குத் தேவையான அடிப்படை வசதிகளே இன்னமும் 50% கூட பூத்தியாகாத நிலையில் வல்லரசுக் கனவுத் தேவையா?
அடுத்ததாக இந்தியா போன்ற வளர்கின்ற நாடுகளின் இன்றைய இன்றியமையாதத் தேவையாக இருப்பது எரிபொருள் தேவை. இது தான் அனைத்து பொருளாதாரத்தையும் தாங்கி நிற்கிறது.அனைத்து கனிம வளங்களும் சுருங்கி வருகிற நிலையில் அண்டை நாட்டில் கையேந்தி நிற்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது இந்தியா. நீர் சார்ந்த மின் உற்பத்தியும், நிலக்கரி சார்ந்த மின் உற்பத்தியும் ஏறக்குறைய அற்று போன நிலையில் மின் உற்பத்தி தனியார் மயமாக்கப்பட்டது. ஆயினும் மின்னுற்பத்தியில் இந்தியா இன்னமுன் தன்னிறைவை அடைவில்லை என்பதே உண்மை. எத்தனை சதவிகிதத்தினர் மின்சாரத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்ற புள்ளி விவரங்கள் சரிவரக் கிடைக்கவிடினும், விவசாயத்திற்கு இன்றியமையத்தத் தெவையாக இருப்பது மின்சாரம் மட்டுமே. ஆக உணவு உற்பத்தியும் மின்சாரத்தேவையை பொறுத்தே அமைகிறது. இந்தியாவின் தேசியத் தொழிலாகக் கருதப்படுவது விவசாயம். மின் தட்டுப்பாடினாலும், நடுவன் அரசின் பாரா முகத்தினாலும் விவசாயத் தொழில் இன்று நலிந்து வருகிறது.
இவ்வருடத்திற்கான இந்திய அரசின் செலவாணிய(பட்ஜெட்?) கணக்கில் இராணுவத்திற்கும், அணு ஆரய்ச்சிக்கும் ஒதுக்கிய தொகையில் எவ்வளவிற்கு மரபு சாரா எரிபொருள் ஆராய்ச்சிக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் என எண்ணும் பட்சத்தில் கேள்விக் குறியே மிஞ்சும். அன்னிய நாட்டினரிடமும், உலக வங்கியினிடமும் கடன் மேல் கடன் வாங்கி அணு ஆராய்ச்சியிலும், இராணுவத் தளவாடங்களிலும் செலவினத்தை அதிகரிப்பதை விட உள்ளூரில் கிடைப்பதைக் கொண்டு மின் உற்பத்தியை பெருக்குவது என்ற ஆராய்ச்சியில் செலவிட்டால் இந்தியா தன்னிறைவு அடைவதில் ஒரு படியாவது மேலெடுத்து வைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. உணவு உற்பத்தியில் தன்னிறைவும், அடிப்படை உள்கட்டமைப்பும் இல்லத வகையில் வருமை கோட்டிற்கு கீழே இருப்பவர்கள் கடைசி வரை அவ்வாறாகத் தான் இருப்பார்கள். இவர்கள் இந்தியாவின் மொத்த மக்கட்தொகையில் 50% மேற்பட்டவர்களாகவும் இருப்பார்கள். ஆக அன்னிய முதலீட்டினாலும், மேல் நடுத்தரக் குடிகள் மென்மேலும் முன்னேறுவதால் மட்டுமே இந்திய தேசம் வல்லரசாக முடியும் என்றால் அது ஒரு நிறைவேறாக் கனவு தான்.
நன்றி : திரு. ஆலன் கான் (அமெரிக்க சமூக & பொருளாதார நிபுனர்)
31 comments:
R u working? u bloody bugger sorry blogger...:-)
சத்யா மிக நல்ல பதிவு, வல்லரசாவதைவிட நல்லரசாக இருப்பதே தேவை என நம்புகிறவன்....
உயிர் ஆதார உரிமைப் பிரச்சனைகள் தான் முதலில் பிறகுதான் வல்லரசெல்லாம், சமூக ஏற்றத்தாழ்வுகள் எம் மக்களுக்கான தன்னிறைவு இல்லாத வல்லரசு தேவையில்லை...
2020ல் வல்லரசு என்ற என் பதிவின் சுட்டி இங்கே
குழலி,
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!
தங்களின் சுட்டியையும் படித்தேன்...கடைசி வரிகள் அருமை
//வயிறு குளிர்ந்து
வானம் பார்த்து
உயிர் வாழ
நல்லரசே போதும்//
தன்னிறைவின்றி வல்லரசாக உருவெடுக்க எந்தவொரு நாடாலும் முடியாது.அதுவும் உயிர் ஆதாரமான உணவுத் தேவையில் தன்னிறைவு இன்றியமையாத ஒன்று. 1930களில் அமெரிக்கா மின்சார மயமாக்கப் பட்டதும் அதன் மூலம் பசுமைப் புரட்சி ஏற்பட்டதும் தான் "அமெரிக்கா" வல்லரசாக இன்றும் உலகெங்கிலும் கோலோச்ச முடிகிறது.
//அணு ஆரய்ச்சிக்கும் ஒதுக்கிய தொகையில் எவ்வளவிற்கு மரபு சாரா எரிபொருள் ஆராய்ச்சிக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் என எண்ணும் பட்சத்தில் கேள்விக் குறியே மிஞ்சும்.// நல்ல கேள்வி, நம் அரசாங்கமும் நாமும் அந்நியரை பார்த்து உந்து படுகிறோம், நாமே ஆரம்பிப்பதில்லை. we are not early adapters, we are just follwers! 'Advanced Energy Initiative' என அடுத்த தேடுதலுக்கு அமெரிக்கர்கள் தொடங்கியது போல் நாம் தொடங்கவில்லை! இதை என் பதிவில், வேண்டும் இனி ஒரு புதிய ஷக்தி!யில் குறிப்பிட்டுருந்தேன்!
Good Blog!! Well Done!!
And one more thing, In my opinion
India immediately needs
1. Permanent Membership in UN Security Council
2. US - India Nuke deal
வெளிக்கண்டநாதர்,
வருகைக்கு நன்றி!
//நம் அரசாங்கமும் நாமும் அந்நியரை பார்த்து உந்து படுகிறோம், நாமே ஆரம்பிப்பதில்லை. we are not early adapters, we are just follwers! 'Advanced Energy Initiative' என அடுத்த தேடுதலுக்கு அமெரிக்கர்கள் தொடங்கியது போல் நாம் தொடங்கவில்லை! //
இங்கே தான் சிக்கலே? கனிம வளங்கள் குன்றி வருகிற நிலையில் அணு சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கப் போகிறோம் என்று அமெரிக்காவிற்கு "சொம்பு" தூக்குவதைவிட, இந்திய நாட்டிலேயே கிடைக்கக் கூடிய பொருளை வைத்து மின்சாரம் தயாரிக்க முயற்சிக்க வேண்டும். சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் "வொல்லங்காங்" பல்கலையைச் சேர்ந்த ஒரு ஆராய்ச்சி மாணவர் கடல் அலையில் இருந்து, மிகக் குறைவான பொருட்செலவில் மின் உற்பத்தி செய்ய முடியும் என்று நிரூபித்துள்ளார். மேலும் ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான மின் உற்பத்தி பனிமலைகளை ஆதாரமாகக் கொண்டே உள்ளது. இந்தியாவில் கூட பனிப் பொழிவு இருக்கிறது தானே?
இம்மாதிரியான ஆராய்ச்சியில் வளர்ந்த தேசங்களை விட வளரும் தேசங்கள் தான் முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
ஆக எந்தவொரு உற்பத்தியிலும் (உயிர் ஆதாரத்தைச் சார்ந்த) தன்னிறைவு அடையாத நிலையில் கடன் மேல் கடன் வாங்கிக் கொண்டு, இந்தியா ஒளிர்கிறது., உலகின் அடுத்த வல்லரசு போன்ற போலி கோஷங்கள் தேவையற்றது.
சிவபாலன்,
நன்றி!
//India immediately needs
1. Permanent Membership in UN Security Council
2. US - India Nuke deal //
இதனால் இந்தியா என்ற தேசத்தின் "status-quo"வில் வேண்டுமானால் மாற்றம் ஏற்படுமேயொழிய, இந்திய தேசத்தின் பொருளாதார, உயிர் ஆதாரம் மற்றும் உள்கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுமா?
ஆக இன்றைய இந்திய மக்களின் தேவை அடிப்படை வசதிகளா இல்லை தேசத்தின் "status-quo" வா?
No, Sir. See, any company who wants invest in any country, should check the safety/ Credibility of the country.
Let us take, China, it got the Security Council by long ago. It encourages the western countries (even Chinese firms also) to invest more.
But, in certain context we nay not compare China with India.
In lager view, we should have the Security Council to establish ourselves in world forum which will enable a better economy to cater our people. And we will get Veto power which will be major break through in our robust economy.
இதனால் இந்தியா என்ற தேசத்தின் "status-quo"வில் வேண்டுமானால் மாற்றம் ஏற்படுமேயொழிய, இந்திய தேசத்தின் பொருளாதார, உயிர் ஆதாரம் மற்றும் உள்கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுமா?
ஆக இன்றைய இந்திய மக்களின் தேவை அடிப்படை வசதிகளா இல்லை தேசத்தின் "status-quo" வா? //
இவை இரண்டும் ஒரே சமயத்தில் ஏன் நடைபெறக்கூடாது என எனக்கு தெரியவில்லை.வல்லவன் தான் நல்லவனாக இருக்க முடியும்.பலகீனன் பேசும் நியாய தர்மத்தை யாரும் காதுகொடுத்து கேட்கமாட்டார்கள்.பூட்டானும் பிஜிதீவும் ஐநா சபையில் நீதியும் நேர்மையையும் பேசினால் கேட்பது யார்?
நம்மை சுற்றி உள்ள சீனா பாகிஸ்தான் போன்ற நாடுகள் ஆயுதப் பெருக்கம் செய்யும்போது நாம் சும்மா இருக்க முடியாது.உலகம் முழுவதும் அனைத்து நாடுகளும் (ஏழைநாடுகள் உட்பட) ஆயுதத்துக்கு செலவு செய்தே ஆகவேண்டும்.'அவனை நிறுத்த சொல்லு நான் நிறுத்தறேன்' என்பது போன்ற நிலைமை தான் இதில்.
unilateral disarmament கண்டிப்பாக வேலை செய்யாது.அனைத்து நாடுகளும் உட்கார்ந்து பேசித்தான் இதற்கு தீர்வு காணமுடியுமே தவிர இதற்கு வேறு தீர்வில்லை.
சிவபாலன்,
நீங்க "sir"ன்னு ஏன் சொன்னீங்கன்னு தெரியல. இருந்தாலும் தயவு செய்து அப்படி குறிப்பிட வேண்டாம். பொட்"டீ"கடை என்றோ அல்லது "சத்யா" என்றோ குறிப்பிடும் பட்சத்தில் மகிழ்ச்சியடைவேன்.
இப்பதிவின் நோக்கம் இந்தியாவின் வல்லரசுக் கனவு "உணவு மற்றும் அடிப்படை கட்டமைப்பு" வசதிகளில் தன்னிறைவைப் பொறுத்தே நனவாகும். அதற்கான ஆராய்ச்சிகளில் இந்திய அரசு எந்த அளவிற்கு பொருள் ஒதுக்கியுள்ளது? ஐ ஐ டி, ஐ ஐ எஸ்சி போன்ற "மேதாவிகளை" மட்டுமே உருவாக்கக் கூடிய கல்வி நிறுவனங்களில் எந்த அளவிற்கு மரபு சாரா எரிபொருள்(non-conventional energy) உற்பத்திக்கும், மாற்று எரிபொருள்(alternative energy) உற்பத்திக்கும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகிறது என்பதை விவாதிக்க மட்டுமே.
ஏனென்றால் இந்தியாவின் மொத்த மக்கட்தொகையில் 75% பேர் விவசாயத்தை சார்ந்தே(inter dependent) வாழ்ந்து வருகிறார்கள்.
மேலும், நிலத்தடி நீர் நிலைகள் வற்றி வரும் நிலையில் அரசாங்கமோ அல்லது மேற்கூறிய கல்வி நிறுவனங்களோ புதிய நீர்ப்பாசனத் தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறதா? அப்படியென்றால் அவை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறதா?
அல்லது அதற்கான ஆராய்ச்சியிலாவது ஈடுபட்டிருக்கிறதா?
இது பற்றி கருத்து இருந்தால் பகிர்ந்து கொள்ளவும்.
வீட்டோ பவரும்,ஆயுதக் குவிப்பும் இந்தியாவின் தனி மனித வருமானத்தை எவ்விதத்திலும் உயர்த்த வாய்ப்பில்லை.
***
செல்வன்,
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. மேற்கூறியவையே உங்களுக்கும் கூறிகொள்கிறேன்.
மற்றபடி பதிவின் நோக்கம் திசை திரும்பும் என்று கருதுகிறேன். சிரமத்திற்கு மன்னிக்கவும்.
/இப்பதிவின் நோக்கம் இந்தியாவின் வல்லரசுக் கனவு "உணவு மற்றும் அடிப்படை கட்டமைப்பு" வசதிகளில் தன்னிறைவைப் பொறுத்தே நனவாகும். அதற்கான ஆராய்ச்சிகளில் இந்திய அரசு எந்த அளவிற்கு பொருள் ஒதுக்கியுள்ளது? ஐ ஐ டி, ஐ ஐ எஸ்சி போன்ற "மேதாவிகளை" மட்டுமே உருவாக்கக் கூடிய கல்வி நிறுவனங்களில் எந்த அளவிற்கு மரபு சாரா எரிபொருள்(னொந்cஒன்வென்டிஒனல் எனெர்க்ய்) உற்பத்திக்கும், மாற்று எரிபொருள்(அல்டெர்னடிவெ எனெர்க்ய்) உற்பத்திக்கும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகிறது என்பதை விவாதிக்க மட்டுமே./
அருமையான கேள்வி.
மாற்று எரிபொருளை பொறுத்தவரை எத்தனால் கலந்த பெட்ரோல் ஐந்து சதவிகிதம் வரை தற்போது உபயோகப்படுத்தப்பட வேண்டுமென்று அரசு உத்தரவே இருக்கிறது.இந்த 5% என்பது சீக்கிரம் 25% அல்லது 50% வரை போக வேண்டுமென்பது லட்சியம்.மற்றபடி ஆரவாரமாக துவக்கபட்ட சாண எரிவாயு,காற்றாலை மின்சாரம் போன்றவை தோல்வியுற்றன என்றே சொல்ல வேண்டும்.தொகை எத்தனை ஒதுக்கப்பட்டது என தெரியவில்லை.ஆனால் நீங்கள் சொன்னதுபோல் இதற்கு எத்தனை ஒதுக்கினாலும் போதாது.இது சன்ரைஸ் இன்டஸ்ட்ரி என்பதால் நிறைய பணம் ஒதுக்க வேண்டியது அவசியம்.
//ஏனென்றால் இந்தியாவின் மொத்த மக்கட்தொகையில் 75% பேர் விவசாயத்தை சார்ந்தே(இன்டெர் டெபென்டென்ட்) வாழ்ந்து வருகிறார்கள்.
மேலும், நிலத்தடி நீர் நிலைகள் வற்றி வரும் நிலையில் அரசாங்கமோ அல்லது மேற்கூறிய கல்வி நிறுவனங்களோ புதிய நீர்ப்பாசனத் தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறதா? அப்படியென்றால் அவை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறதா?
அல்லது அதற்கான ஆராய்ச்சியிலாவது ஈடுபட்டிருக்கிறதா?
இது பற்றி கருத்து இருந்தால் பகிர்ந்து கொள்ளவும்.//
விவசாயத்துறையை மானியம் மூலமோ நீர்வளம் மூலமோ சீர்திருத்துதல் இயலாது.இந்தியாவில் நீங்கள் சொன்னதுபோல் 75% பேர் விவசாயத்தை நம்பியிருக்கையில் இத்தனை பேரையும் கைதூக்கி விடுதல் இயலாது.மேற்கத்திய நாடுகளில் 4% மக்கள் மட்டுமே விவசாயத்தை நம்பியுள்ளனர்.
நாம் செய்ய வேண்டியது விவசாயிகளின் குழந்தைகளுக்கு கல்விஅறிவு புகட்டி மெதுவாக அவர்களை வேறு துறைக்கு மாற்றுவதுதான்.5 அல்லது 10% பேர் மட்டுமே விவசாயத்தை நம்பியிருக்கும்படி செய்வதே விவசாயத்துக்கு நல்லது,விவசாயிகளுக்கும் நல்லது.இது நீண்டகால திட்டமாக வைத்துக்கொண்டு தற்காலிக அடிப்படையில் வேறு திட்டங்களை(பஞ்சாப் அரசைபோல்) செயல்படுத்த வேண்டும்.
உண்மையை சொல்லப்போனால் தற்போது விவசயத்துக்கு ஒதுக்கப்படும் தொகையை ஊழலன்றி அவர்களிடம் கொண்டுபோய் சேர்த்தாலே போதுமானது.வேறு செலவுகளை குறைக்க வேண்டுவதில்லை.
//வீட்டோ பவரும்,ஆயுதக் குவிப்பும் இந்தியாவின் தனி மனித வருமானத்தை எவ்விதத்திலும் உயர்த்த வாய்ப்பில்லை.//
அந்த நோக்கத்துக்காக அவற்றை யாரும் கோரவில்லை.
// பதிவின் நோக்கம் திசை திரும்பும் என்று கருதுகிறேன். சிரமத்திற்கு மன்னிக்கவும் //
சத்யா, I do agree with you.
No problem. Please go ahead.
Thanks for allowing me to post my comments.
"தன்னிறைவு கனவு" கொண்டுள்ள எந்த ஒரு நாடும், படை பலத்தையோ, அல்லது, பணபலத்தையோ பெருக்கும் நேரத்தை, அணுசக்தி, ஆக்க சக்தி, எரிவாயு சக்தி இவற்றைப் பெருக்குவதில் முனைகிறது என்பதே உண்மை.
நாட்டின் அலவு, எல்லை, மொழி, மற்றும் சார்புக்கொள்கை இவற்றின் அடிப்படையிலேயெ இந்த நாடுகளால் இதில் தீவிரமாக ஈடுபட முடிகிறது என்னும் மறுக்க முடியாத உண்மையையும் நாம் புரிந்து கொள்ள்ல் வேண்டும்.
நம்மை திசை திருப்பும் சக்திகளுக்கு அடிபணியாமல், ஒரு சில துறைகளாவது குறித்த இலக்கை நோக்கி பயணிக்க உதவி செய்தால் மட்டுமே, இந்திய போன்ற பல மாநிலக் கூட்டமைப்பில் இது சாத்தியப்படும்.
ஒரு கிரிக்கெட் டீமைத் தேர்ந்தெடுக்கும் பணியில் கூட இத்தனை குளறுபடிகள், விருப்பு-வெறுப்புகள் இருக்கின்ற நிலையைக் கருத்தில் கொண்டால் நான் சொல்வதின் உட்பொருள் விளங்கும்.
மற்றபடி, பிரச்சினையை திசை திருப்பும் எண்ணமில்லை.
சிந்திக்க வைக்கும் பதிவு!
செல்வன்,
விளக்கத்திற்கு நன்றி!
//மற்றபடி ஆரவாரமாக துவக்கபட்ட சாண எரிவாயு,காற்றாலை மின்சாரம் போன்றவை தோல்வியுற்றன என்றே சொல்ல வேண்டும்.//
தோல்வியுற்றன என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அது எதனால் என்று தெரியுமா? அல்லது அது தோல்வியுற்ற திட்டம் என்று குறிப்பிடுவதற்கு ஏதாவது ஆதாரம் உள்ளதா? அல்லது அது ஏன் தோல்வியுற்றது என்று சம்பந்தப்பட்டவர்கள் ஆராய்ந்தார்களா?
நான் 7ம் வகுப்பு படிக்கும் பொழுது "வயலும் வாழ்வும்" என்று ஒரு நிகழ்ச்சி டிடியில் வரும். தினமும் அந்நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்னர், "பஞ்சாப் மாநிலத்தில் ஜபல்பூர் என்றொரு கிராமம்...இக்கிராமத்தில் மரபு சாரா எரிசக்தி துறையின் உதவியோடு...சாண எரிவாயு, புகை குறைந்த அடுப்பு, சூரிய சக்தியைப் பயன்படுத்தி மின்சாதனங்களைப் பயன்படுத்துகிறார்கள்"என்று 5 - 7 நிமிடத்திற்கு தொடரும் அந்த ஆவணப்படம். அதாவது இது நடந்தது 80களின் பிற்பகுதியில். அப்பொழுதே சாண எரிவாயு, சூரிய சக்தி எரிவாயு போன்ற மரபுசாரா எரிசக்தி மற்றும் மாற்று எரிசக்தியைப் பயன்படுத்த ஆரம்பித்த இந்திய, தற்போது ஏறத்தாழ 15- 20 ஆண்டுகள் ஓடி விட்ட நிலையில் அதில் எந்த அளவிற்கு முன்னேற்றம் அடைந்துள்ளது.
//விவசாயத்துறையை மானியம் மூலமோ நீர்வளம் மூலமோ சீர்திருத்துதல் இயலாது.//
மானியம் மூலமாகவும், புதிய தொழில்நுட்ப நீர் பாசனம் மூலமாகவும் மட்டுமே உணவு உற்பத்தியில் சீர்திருத்தங்களைக் கொண்டு வர முடியும்.
//மேற்கத்திய நாடுகளில் 4% மக்கள் மட்டுமே விவசாயத்தை நம்பியுள்ளனர்.நாம் செய்ய வேண்டியது விவசாயிகளின் குழந்தைகளுக்கு கல்விஅறிவு புகட்டி மெதுவாக அவர்களை வேறு துறைக்கு மாற்றுவதுதான்.5 அல்லது 10% பேர் மட்டுமே விவசாயத்தை நம்பியிருக்கும்படி செய்வதே//
மேற்கத்திய நாடுகளில் விவசாயம் என்பது மக்களை நம்பியில்லை. அங்கெல்லாம் விவசாயம் நிறுவனமயமாக்கப் பட்டுவிட்டது. விதைத்தல், உரமிடுதல், அறுவடை செய்தல் என அனைத்தையுமே ஒரு மனிதனால் இயங்கக் கூடிய எந்திரங்கள் மூலமே முடித்து விட முடியும்.மேலும் அங்கு குறைந்த அளவாகக் கருதப்படுவது 250 ஏக்கர் அளவில் உள்ள விவசாயப் பண்ணைகளே. இந்தியாவில் அப்படியா? காவேறி டெல்டாவில் எத்தனை குறு நில விவசாயிகள் இருக்கிறார்கள்? இவர்கள் அனைவரையும் ஒரு "நீண்ட காலத் திட்டத்தின்" மூலம் மாற்றிவிட முடியுமா?
கிராமப்புற விவசாயிகள் தங்கள் குழந்தைகளுக்கு கல்வியறிவு ஊட்ட வேண்டும். அதன் மூலம் வருங்கால சந்ததியினரின் வாழ்க்கை முன்னேற்றமடையும் என்பது முற்றிலும் உண்மை. உயிர் வாழ்வதற்கே ஆதாரம் இல்லாத நிலையில் கல்வியில் எவ்வாறு அவர்களுக்கு ஆர்வம் எழும். கருனாநிதியின் ஆட்சியில் கிராமப்புறப் பள்ளியில் பயின்றவர்களுக்கு "தொழிற்கல்வியில் இட ஒதுக்கீடு"என்ற திட்டத்தைக் கொண்டு வந்தார். அது இன்று செயல் முறையில் இருக்கிறதா என்றேத் தெரியவில்லை.
மேலும் இந்தியாவில் 75% பேர் விவசாயத்தை சார்ந்து இருக்கிறார்கள் என்று கூறியதற்கு காரணம், நாற்று நடுவது, களை பறிப்பது, உரமிடுவது, அறுவடை செய்வது என்று கிராமப்புற மக்கள் ஒரு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பது விவசாயம். ஆக விவசாயம் இந்தியாவில் நிறுவனமயாக்கும் பட்சத்தில் விவச்சயத்தை சார்ந்து இருப்பவர்கள் குறைய வாய்ப்பிருக்கிறது. ஆனால் இதை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டவர்க்கு எவ்வித்ததில் மாற்று ஏற்பாடு செய்ய இயலும்?
சிவபாலன்,
புரிதலுக்கு நன்றி!
எஸ்கே,
வருகைக்கு நன்றி, உங்களுடைய பின்னூட்டத்தில் முதல் பத்தியைத் தவிர வேறெதுவும் எனக்கு விளங்கவில்லை.
பதிவோடு நேரடியாக சம்பந்தப்பட்ட வகையில் தங்களுடைய பதிலை பின்னூட்டமிடவும்.
நன்றி!
//அன்னிய முதலீட்டினாலும், மேல் நடுத்தரக் குடிகள் மென்மேலும் முன்னேறுவதால் மட்டுமே இந்திய தேசம் வல்லரசாக முடியும் என்றால் அது ஒரு நிறைவேறாக் கனவு தான்.//
தங்களுக்குப் புரியவில்லை என்பதை ஒத்துக் கொள்கிறேன்.
ஆனால், பதிவுக்கு சம்பந்தம் இல்லாதது என்பது வியப்பாக உள்ளது.
'நிறைவேறாக்கனவு' எப்படி நிறைவேற முடியும் என எனது கருத்துக்களைத் தெரிவித்திருந்தேன்.
நன்றி.
varuviyaa???varamaattiyaa??? varalanna un pechu kaa...
Instead of complaining about IITs,IIMs and IISc why dont you check their websites and learn
about what they are doing in issues
relating to power sector.There is an OBC university called Anna
University.What are they doing.
India is self-sufficient in food
production.We dont import food to meet our needs, except as a buffer.
Your post is full of unsubstantiated accusations.
The problem is you all beleive more
in rhetoric than in facts.This
applies to many bloggers (muthu,
kuzhali etc) who are repeating
what political parties say in
different words.Try to think.
Dear Anony,
Dont you think that your comment is an absolute gibberish. I dont have to chk. the websites.If they have done enough, India should have achieved "self-sustainability" long back. If you are arguing that they are doing really good, acc. to my perspective it hasn't reached the public yet. If they are doing more on alternative energy & non-conventional energy, why do India have to depend on America for Nuclear/atomic energy (in the name of civil energy)
I would really appreciate if you can give some strong evidences.Btw, dont live on fake "super power" dream.
Do you really think Anna Uni. is still stands tall with IITs, IIMs & IISc?
//India is self-sufficient in food
production.//
THis is news for me!
I dont know where you live? but if you are living in India you must be aware of this news too... it was headline in "the Hindu" too..
AWBvsIND
1,If you read carefully you would not have given the link.India imports to maintain a buffer stock.
2,Much work is being done in india on alternative sources of energy.
We have a long way to go, but this true of all countries in this field.Some technologies may work
well in lab but may not be commercially feasible or profitable.
3,IITs and IIMs are contributing to
the country in so many ways.You wont check web sites but will
recycle some junk produced by
somebody.
Dear Anony,
Did you read the post in fuller sense? If not, read it again & then argue with "factual" details.
Thanks for your comments
Have a great weekend!
அருமையாக சமூக பொறுப்போடு எழுதுகிறீர்கள்... உங்களைப் போன்ற சிந்தனை கொண்டவர்களால் இந்தியா நிச்சயம் நல்லரசாக திகழும்....
//இவ்வருடத்திற்கான இந்திய அரசின் செலவாணிய(பட்ஜெட்?) கணக்கில் இராணுவத்திற்கும், அணு ஆரய்ச்சிக்கும் ஒதுக்கிய தொகையில் எவ்வளவிற்கு மரபு சாரா எரிபொருள் ஆராய்ச்சிக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் என எண்ணும் பட்சத்தில் கேள்விக் குறியே மிஞ்சும்.//
பாபாவின் முன்றுஅடுக்கு தோரியம் based அணுமின் உற்பத்தி திட்டத்தை பற்றி ஆசிரியர் கேள்விபட்டதே இல்லையா?
thorium,FBR,Kamini,PFBR ...ஹும்.
இரானுவ செலவை எதற்க்கு எடுத்தாலும் இழுக்க வேண்டாம்.இன்னும் நமது விரர்களுக்கு உருப்படியான ஷுக்களை கூட வாங்கி கொடுக்க முடியாது வெட்கம் கெட்ட நாடாக தான் இருக்கிறோம்.
//உலக வங்கியினிடமும் கடன் மேல் கடன் வாங்கி அணு ஆராய்ச்சியிலும்,//
புதிய கண்டுபிடிப்பு தான்.
உலக வங்கி அணு ஆராய்ச்சிக்கும் இரானுவ செலவுக்கும் கடன் கொடுப்பது இல்லையே.எப்போது அந்த வேலைய செய்ய ஆரம்பித்தார்கள்.
கோவைக்கு குடிதன்னீர் வழங்கும் அத்திகடவு திட்டதிற்க்கு ஒலக வங்கி தான் கடன் கொடுத்தது.
அதுவும் "ஆணு அராய்ச்சி மற்றும் இரானுவ செல்வுகள்" பிரிவில் தான் வருகிறதோ?
//உலகின் மிகப்பெரிய சேரிகளும் இந்திய நகரங்களில் தான் இருக்கிறது//
அவை இருந்தால் தானே அரசியல் கட்சிகள் வோட்டுக்காக குவாட்டரும், மழை காலத்தில் உப்புமாவும் செய்து போட்டு மக்களை எமாற்றி கொண்டே இருக்கலாம்.எவனாவது low cost urban housingஐ பற்றி பேசியிருப்பானா?
முடிந்த அளவுக்கு குட்டைகளையும், ஆக்கிரமிப்புகளையும் பட்டா போட்டு கொடுக்கிறேன் என்று வோட்டு வாங்கும் அரசியவாதிகளை தான் இதற்க்கு குற்றம் சொல்ல வேண்டும்.
//ஏழை பிச்சைக்கார மற்றும் வெள்ளைச் சொக்காய் கூலிகளை உற்பத்தி செய்யும் நாடாக மேற்கத்தியவருக்கும் தெரிகிறது.
//
எந்த "மேற்கத்தியவருக்கு" அப்படி தெரிகிறதாம்? இதை எழுதியவருக்கா?
எனக்கு தெரிந்து இந்தியர்களை கல்வியில் - முக்கியமாக கனிதத்தில் சிறந்தவர்கள் என்பர்கள் தாம் அமெரிக்காவுலும் "மேற்க்கிலும்" அதிகம்.
//சொம்பு//
நம்மை நாமே காப்பாற்றிகொள்ள முடியாத நிலை வந்தால் யாருக்காவது சொம்பு தூக்கியே ஆக வேண்டும் என்று தெரிந்து கொண்டால் சரி.
(யாருப்பா அங்க இரானுவ செலவ பத்தி பேசுறது...)
//உள்ளூரில் கிடைப்பதைக் கொண்டு மின் உற்பத்தியை பெருக்குவது என்ற ஆராய்ச்சியில் செலவிட்டால் இந்தியா தன்னிறைவு அடைவதில் ஒரு படியாவது மேலெடுத்து வைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.//
உள்ளூரில் என்ன கிடைக்கிறதாம் மின்சார உற்பத்தி செய்ய?
நீங்களே நிலக்கரியும், நீர் மின் உற்பத்தியும் "அற்று" போய்விட்டது என்று சொல்லிவிட்டீர்கள்.இருப்பது தோரியமும் காற்றும் சூரிய ஒளியும் தான்.
Could you please provide a hyperlink to the original article by the American?
samudra,
//Could you please provide a hyperlink to the original article by the American?//
He was a vistor/Researcher with whom I had to work for few days. His part in this post was upto the info. on pittsburgh/elecrification/postwar green revolution in USA.(Excerpts from our discussion)
I will give u detailed reply in tamil by tonite/tomorrow.
Thanks
//ஒருங்கிணைந்த சோவியத் கூட்டமைப்பிற்கும் நடந்த, யார் பெரியவன் என்ற பனிப்போரில் அமெரிக்க 100% வெற்றியடைந்ததிற்கு காரணமாகச் சொல்லபடுவது அமெரிக்காவின் தன்னிறைவும், தன் மக்களிற்கு அத்தியாவசியத் தேவையைப் பூர்த்தி செய்ததுமேயாகும்.//
அமெரிக்கா 100 சத வெற்றி அடையவில்லை. பனிப்போரில் சி.ஐ.ஏ வின் சதிப்போர் தான் வெற்றி அடைந்தது. அமெரிக்கா உலக மேலாதிக்க வெறி கொண்டு அலைவதால் உலகமக்கள் அனைவருக்குமே அது இழப்பாகும்.
சமுத்ரா,
விளக்கமளிக்க கூடிய அளவிற்கு உங்களுடைய கேள்விகள் இல்லையென்றாலும், உங்களுக்கு ஒரு சிறு விண்ணப்பம்.கேள்வியெழுப்பும் முன் பதிவையும், அதன் நோக்கத்தையும் அதன் பின் நடந்த பின்னூட்ட உரையாடல்களையும் சற்றே நிதானமாகப் படித்து தெளிக.
//அவை இருந்தால் தானே அரசியல் கட்சிகள் வோட்டுக்காக குவாட்டரும், மழை காலத்தில் உப்புமாவும் செய்து போட்டு மக்களை எமாற்றி கொண்டே இருக்கலாம்.எவனாவது low cost urban housing பற்றி பேசியிருப்பானா?//
பதிவிற்கு சிறிதளவாவது தொடர்பு இருப்பதனால் இதற்கு மட்டும் விளக்கமளிக்கிறேன். நீங்கள் எழுப்பியுள்ள கேல்வி அவசியம் தேவையான ஒன்று தான். இன்றைய கால கட்டத்தில் "urban scenerio"வில் "low cost housing" சாத்தியம் இல்லை. ஆனால் "cost effective housing" சாத்தியமே.அதைத் தான் பல்லாண்டுகளாக ஹட்கோ(HUDCO), குடிசை மாற்று வாரியங்கள் செய்துக் கொண்டு வந்திருக்கின்றன. இவற்றில் அரசியல்வாதிகளின் நேரடித் தலையீடைக் குறைத்து, தேர்ந்த தகுதியுள்ள அதிகாரிகள் மூலம் நடைமுறைபடுத்தினால் மட்டுமே மாற்றங்கள் நிகழும். அதன் மூலம் கிராமங்களின் தேவை பூர்த்திகள் நிவர்த்தி செய்யப்படும் பட்சத்தில் கிராமத்தை விட்டு நகரங்களுக்கு இடம்மாறும் நிகழ்வுகள் குறையும். அதனால் தற்போது நகரங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் "population burst" வெகுவாகக் குறையும்.ஆனால் இவை அனைத்துமே ஓரளவாவது மத்திய அரசின் உதவியோடு நடந்து கொண்டிருந்தாலும், முழுவதுமாக கிராமப்புற மக்களை சென்றடையவில்லை.
//விளக்கமளிக்க கூடிய அளவிற்கு உங்களுடைய கேள்விகள் இல்லையென்றாலும்//
உங்களின் "உலக வங்கியினிடமும் கடன் மேல் கடன் வாங்கி அணு ஆராய்ச்சியிலும்" என்ற கூப்பாடு தவறானதா இல்லையா?
உலக வங்கி அனு ஆராய்ச்சிக்கு கடன் கொடுக்கிறதா?
அப்படி கொடுக்கிறது என்றால் எந்த அனு ஆராய்ச்சி திட்டதிற்க்கு கடன் கொடுத்தது?
Please put forth your arguments based on facts.
Samudra,
India's budget itself runs with aids from foreign & world bank.(otherwise we wouldnt be having deficits) If you have a problem of understanding the simple tamil, i reckon i cant help you.
Instead of cutting & pasting few words from the sentence, you can try to read whole sentence with broader sense. It might help you.
//Samudra,
India's budget itself runs with aids from foreign & world bank.(otherwise we wouldnt be having deficits) If you have a problem of understanding the simple tamil, i reckon i cant help you.//
A Finance Ministry report I read today says that "This worsening of the deficit came about
through a combination of weak tax revenues,a sharp increase in the wage bill, rising interest payments, and rising subsidies." and not because of aid money as you claim.
Here, let me explain a little more.
When cash inflow of the central government is lower than its TOTAL EXPENDITURE, it has to borrow money to meet the shortfall. It does so from various domestic and foreign sources:
1. Reserve Bank of India (RBI), commercial banks and financial institutions;
2. From investors by issuing Treasury Bills and other government securities, which are auctioned on the government’s behalf by RBI;
3. From foreign governments and international financial institutions such as IMF, World Bank, etc.
Together, all such domestic and foreign borrowings are known as the government’s market borrowings.
For the year 2004-2005, total borrowing were about 1,35,071 crores.
On an average, 93.57 per cent of the borrowings were used for either the repayment of principal or the interest.(per CAG Report).
So we're not financing nuclear projects with aid money.
In the budget 2000-2001, revenue from external assitance i.e.WB IMF etc has been quoted as -44 crores!
Post a Comment