உயிர்த்தெழுவான் என்று
தெரியாமலே
மரிக்கப்பட்டான் ஒருநாள்!
பிறிதொரு நாளில்
கடவுளாய் அவதரித்தான்
உலகினை காக்க
ஆனால் அவன்
இயேசு மட்டுமல்ல!
4/14/2006
Subscribe to:
Post Comments (Atom)
யார் வேண்டுமானாலும் வரலாம், என்ன வேண்டுமானாலும் பேசலாம்...என் மனம் மகிழும்வரை :-))
4 comments:
கொஞ்சம் 'நோட்ஸ்' போடலாமே?!
""உயிர்த்தெழுவோம் எனத்
தெரிந்தே
மரித்தான் ஒருவன் !
பிறக்கும் போதே
கடவுளாய் அவதரித்தான்
உலகைக் காக்க
அவன் தான்
யேசு !""
உண்மையைத்
திரித்து கூறியே
உவகை கொள்வார் சிலர்!
குற்றம் கண்டு பிடித்தே
பெயர் வாங்கும்
புலவரைப் போல!
நல்ல நாளிலே
நாட்டில் பலரும்
நடுவில் அறைந்தோனை
நினைவில் கொண்டு
நெகிழ்ந்திருக்கும்
நேரத்தில்
நயமின்றி
நீவிர் உரைத்திட்ட
நாலு வரிக் கவிதையினை
நானும் மறுத்திங்கே
"நேசமுடன்" செப்பிடுவேன்
நீவிர் திருந்திடுக!
"உயிர்த்தெழுதல்"
மானிடராய் வந்தோர்ககும்-
உரித்து!
மானிடனாய் வந்து
வழிசொல்லிப் போன
அவன்
தாளினை நீர்
தொடவேண்டாம் போம்!
வேளைகளில்
நீவிர்-
நாளும் உறங்கி
மறுநாள் விழிப்பில்
உயிர்த்திடுதல் உண்மையெனில்
மரணித்து
மீண்டும் உயிர்த்தல்
இறைவனுக்கு இயலாதோ?
ஏசு
இறைவனோ
இறைவன் மகனோ
ஏதும் அறிகிலேன்
எனினும்
அவன் "விழிப்பில்"
மீண்டும் நாம்
"உயிர்த்தெழுதல்" வேண்டும்.
இந்த விழிப்பு
துன்பச் சிலுவைகளைச்
சுமப்பதற்காய் அல்ல!
அல்ல அல்ல...
எல்லா உயிர்களுக்கும்
இன்பம் விளைப்பதற்கே!
மீண்டும் மீண்டும்
ஆண்டுகள் தோறும்
வருகின்ற இறைநாட்கள்-
(இந்துவோ இஸ்லாமோ ஏசுவின்தூதர்களோ
கொண்டாடும் நாட்கள்)
எல்லாம் நம்
இதயத்தில்
இறைவனைக் கொண்டுவந்து
இருத்தற்கே!
வேண்டுமெனில் கொள்க
வி்ட்டுவிடல் சித்தமெனில்
பட்டுத்தெளிக!
பரமண்டலத்தினில் நாம்
மீண்டும் கரம் கோர்க்கும் வேளைதனில்
மறுபடியும் வினவலாம்
"உயிர்த்தெழுதல் என்றால் என்ன?"
தெரிந்தவிடை
ஒன்றே!
தெரிந்த விடைக்கு
மீணடும் வினா எதற்கு?
புரிதலின்றி
திரித்துத் திரியும்
எஸ்கேவின்
பதிலுரைக்கு நானும்
கவிபாடத் தான்
வேண்டுமோ?
***
இந்துமகேஷ்,
தங்கள் வருகைக்கு நன்றி!
Post a Comment