3/27/2006

மடிவதற்கான காலம்!

கொழுந்து விட்டு
எரியும் விளக்கின்
அருகில் வந்த விட்டில் பூச்சி
சொன்னது ...

என் மரணத்துக்கு
யாரும் காரணம் இல்லை !

******

அறிந்தோ அறியாமலோ மின் மினி பூச்சியையும், விட்டில் பூச்சியையும் ஒரே மாதிரியாக பாவித்ததாலும்., விட்டில் பூச்சியாக சிறகடித்து பறக்க விரும்பியதால், மடிவதற்கான காலமும் நெருங்கி விட்டதால், வீழ வேண்டியது நிச்சயமாகி விட்டது.

இங்கே பனிக்காலத்தின் துவக்கம் தொடங்கி விட்டதாலும், விட்டில் பூச்சிகளும் அதிகமாய் விட்டது. அளவிலும், வாழும் காலமும் சிறியதாக இருந்தாலும் எண்ணிக்கையில் அதிகமாக வந்து விட்டில் பூச்சிகள் பிரச்சினை கொடுக்கும் என்பதை சிலருக்கு நினைவு படுத்திவிட்டு மடிகிறேன் இன்றோடு.

இந்நட்சத்திர வாரத்தில் பலரும் பல எதிர்பார்ப்புகளோடு இருந்திருந்தாலும், இங்கே அவர்கள் எதிர்பார்ப்பது கிடைக்காது என்று முன்னமே அறிவுறுத்தி விட்டதாலும் எனக்குத் தோன்றியதை மட்டுமே எழுதினேன்...சிலருக்கு ஒப்புதலும், பலருக்கு அஜீரனக் கோளாரும் ஏற்பட்டதில் வியப்பேதும் இல்லை.

தமிழ்மணத்தின் கருவிப்பட்டையை நிறுவாததாலும், மட்டுறுத்தலில் ஒப்புதல் இல்லாததாலும், இதுவரை பின்னூட்டங்களில் மட்டுமே கவனமாக இருந்ததாலும் அதிகப் படியான அளவில் எவரும் பொட்"டீ"கடைக்கு வந்ததில்லை ஒரு சில நிரந்தர வாடிக்கையாளர்களைத் தவிர.

நிறையவே எழுத நினைத்திருந்தாலும், யோசித்து எழுதுவதால் சொல்ல வந்ததை விட தீர்க்கமான முடிவுகளைக் கொண்டே எழுத முடிகிறது. ஆகையால் எந்த ஒரு பதிவிலுமே முடிவை முன்வைக்காமல் அவரவர் கருத்துக்கேற்ப சிந்திக்க அன்றைய தினங்களில் எழுந்த கருத்துக்களையே முன்வைத்தேன்.

மேலும் இந்தவொரு வாரத்திற்கு மட்டும் பின்னூட்ட மட்டுறுத்தலை செயல்படுத்தலாம் என்றே எண்ணியிருந்தேன். ஆனால் என் மீது மட்டுமல்லாமல் பலர் மீதும் நிறைய முகம் மூடியவர்கள் (முகமூடியை அல்ல) அல்லது முகமே இல்லாதவர்களும் அன்பு கொண்டுள்ளதால் பின்னூட்ட மட்டுறுத்தலை நிரந்தரமாக செயல்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.எனினும் என்னை மட்டுமே வசை பாடி வந்த/வரும் பிரசுரிக்கத் தகுந்த பின்னூட்டங்களை வெளியிட்டுள்ளேன்/வெளியிடுவேன்.

சொல்ல வந்ததை நேரடியாக சொல்லிவிட்டதாலும், அதனால் ஏற்பட்ட சலசலப்பைக் கண்டு இந்த கருப்பன்காட்டு(நம்மூர்ல பனங்காடு கெடையாதுங்க, கரும்பு காடு தான்) குள்ள நரி அஞ்சாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

******
நன்றி

ஒரு வாரத்திற்கு தொடர்ந்து எழுதுவதற்கு வாய்ப்பளித்த தமிழ்மண நிர்வாகிகளுக்கும், பதிவை படித்த (படிக்கும் அளவிற்கு இல்லையென்றாலும்) அனைவருக்கும் எனது நன்றிகள். முக்காடிட்டு வந்தவருக்கும், முகம் இல்லாமல் வந்து என்னை மட்டுமே திட்டியவர்களுக்கும் எனது நன்றிகள். ஆதரவளித்தவர்களுக்கு இதயத்தில் இடம் உண்டு:-) இங்கு இல்லை.

******
தனிமனிதத் துவேஷம்

இந்த பதிவில் வட்டாரப் பேச்சு வழக்கையும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே பேசுவது பற்றியும் எழுதியிருந்தேன். அதில் பலரும் பலவிதமான கருத்துகளை முன்வைத்திருந்தாலும் நான் சொல்ல வந்ததை அவர்களால் புரிந்து கொள்ள இயலவில்லை அல்லது ஏதோ ஒரு கட்டாயத்தினால் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் என்பதே உண்மை. மேலும் அப்பதிவில் எந்தவொரு தனி மனிதனையும் தரக்குறைவாகவோ அல்லது சிலரைப் போல் மனம் போன போக்கில் நக்கலடித்துக் கொண்டும் இல்லை. தமிழ் வலை பதிவுகளை வெரும் இரண்டு மாதங்கள் மட்டுமே உற்று நோக்கியவருக்குத் தெரியும் யார் மகா வக்கிரம் பிடித்தவர்கள் என்று. மேலும் பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல் வக்கிர புத்திக் கொண்டவர்களை அதே வக்கிரமான அளவில் சிந்திக்கக் கூடிய என்னால் எளிதாக அடையாளங்கண்டு கொள்ள முடியும்.

எனினும் முக்காடிட்டுக் கொண்டு தனிப் பதிவில் சில்லு விளையாடிக் கொண்டிருக்கும் பன்னாடைகளுக்கு எனது சிறப்பான நன்றிகள்! They get what they deserve!

16 comments:

said...

சரி சரி, பால் ஆறிப்போறதுக்குள்ளே ' ஜோரா ஒரு மசாலா டீயும், தொட்டுக்க ஒரு மசால்வடையும்
கொண்டுவாங்க 'பார்க்கலாம்:-)))

said...

இன, மொழி, மத வெறிகளைக் காட்டும் ஓர் இடமாக '*பதிவு' ஆகிவிடக் கூடாதே என்ற ஆதங்கத்தின் காரணமாக இட்ட மொழியினைப் புரிந்து கொள்ளாமல், 'பம்மாத்து', அறியாமை' என்று சொல்லடியிருந்தாலும், தங்கள் பதிவுகளைப் படித்தவன் என்ற முறையில், நலமாக 'வாரம்' முடித்து, விடை பெறும் தங்களுக்கு என் வாழ்த்துக்கள்!

said...

பொட்டிக்கடை,

வெளியூர் சென்று இருந்ததால் உங்களின் அறிமுக பதிவைத்தவிர மற்றதை இன்னும் படிக்கவில்லை..ஆனால் இந்த தமிழ்மண நட்சத்திர வாரத்தின் இறுதி பதிவின் இறுதி வார்த்தைகள் நச்சென்று இருந்தது....மீதியை படிச்சிட்டு சொல்றங்ணா...

said...

வாழ்த்திய நல்லுள்ளங்களுக்கு நன்றிகள்!

துளசியக்கா,
நீங்க கேட்டது கண்டிப்பா கெடைக்கும்...:-)

நெருப்பு சிவா,
கார்ட்டூன் இணையத்திலிருந்து திருடியது!:-)
இதுக்கெல்லாம் நேரம் செலவழித்து வரைய வேண்டிய தேவை இல்லை என்று கருதுகிறேன்.

எஸ்கே,
தங்களுடைய பின்னூட்டத்திற்கான மறுமொழியே அது...கொஞ்சம் காரமாய் இருந்திருக்கலாம்!
வாழ்த்துக்கு நன்றிகள்!

தமிழினி,
பயனம் இனிதாக இருந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்.:-)
சும்மா "நச்" அது இதுன்னு ஏத்தி விடாதீங்கண்ணா...:-)

Anonymous said...

தம்பி, நல்லா இருந்தது வாரம்., தமிழீழப் போராட்டமும், தமிழ் தேசியமும், அருமை!!. நெல்லிக்குப்பம் தேர்தல் அலசல்., உங்களுக்களின் அரசியல் ஈடுபாட்டைக் காட்டுவது மட்டுமல்ல., நடைமுறை அரசியலை எவ்வளவு தெளிவாக அறிந்துள்ளீர்கள் என உணர வைக்கிறது. அரசியல் மாற்றங்களால் சமூக மாற்றம் சாத்தியமா என்பது கேள்விக்குரியது., ஆனாலும் நடைமுறை அரசியலை நம் இளைஞர்கள் அறிந்துகொள்வதும்., ஆர்வத்துடன் பங்கெடுப்பதும் முக்கியம். MIES VAN DER ROHE பற்றிய பதிவும் நன்றாக இருந்தது. ANTONIO GAUDI பற்றி அதிகம் சொல்லியிருக்கலாம்.

//எனினும் முக்காடிட்டுக் கொண்டு தனிப் பதிவில் சில்லு விளையாடிக் கொண்டிருக்கும் பன்னாடைகளுக்கு//

இதையெல்லாம் நீங்கள் கண்டுகொண்டா இருக்கிறீர்கள்?., நல்ல நகைச்சுவையப்பா :)))))))). மொத்தத்தில் நல்ல....உ.... வாரம் தம்பி.... நன்றி :)))).

said...

நன்றி சத்யா...நல்ல வாரம்.

said...

வழக்கமா வர்ர மவராசாங்ககூட சிலரு வராம போய்ட்டாய்ங்க ...கண்டுக்காதீங்க..வெளியூர் பயணம்..தமிழ் தகராறு.. ரெஸ்ட் ரொம்ப எடுக்க வேணாம்..

said...

'ஏன் இதையெல்லாம் எழுதுகிறேன் என்று கேட்காதீர்கள், ஏன் இவையெல்லாம் இருக்கிறதென்று கேளுங்கள்' (நாளை மற்றொரு நாளே, ஜி.நாகராஜன்) சொன்னது பலருக்கு புரியாது, தேவை இல்லாததாய் இருக்கையில் நீங்கள் உங்களது கேள்விகளை, ஆதங்கங்களை முன் வைத்தீர்கள் என்று புரிந்துகொள்கிறேன். நன்றி.

said...

இனிமையான வாரம்:-)))

நேரப்பற்றாக்குறை காரணமாக அதிகமாக பின்னூட்டமிடவில்லை. நட்சத்திர வாரத்தில் இதைத்தான் எழுத வேண்டும் என்ற எந்த சட்டமும் இல்லை.

ஆனா பல பேரு வயித்தெரிச்சல கிளப்புன நட்சத்திர பதிவர் நீங்கதான்னு நினைக்கிறேன்:-))

மனதில் பட்டதை சொல்லும் உங்கள் இயல்பை ரசித்தேன். தொடருங்கள்...

வாழ்த்துக்கள்

said...

அப்டிபோடு அக்கா,
தங்களுடைய வாழ்த்திற்கு நன்றி!

"அரசியல் மாற்றங்களால் சமூக மாற்றம் சாத்தியமா என்பது கேள்விக்குரியது.,"

கேள்வி எழுந்தால் தானே பதிலும் வரும்...சாத்தியம் என்பதே சொல் அல்ல செயல் தான் (ஒரு நடிகன் சொன்னது)...அதற்கான வெள்ளோட்டங்கள் ஆரம்பித்துவிட்டதாகவே நான் அறிகிறேன்.

"ANTONIO GAUDI பற்றி அதிகம் சொல்லியிருக்கலாம்."

இவரைப் பற்றி ஒரு தனிப்பதிவு இடுவதாக எண்ணியுள்ளேன்.

"இதையெல்லாம் நீங்கள் கண்டுகொண்டா இருக்கிறீர்கள்?., நல்ல நகைச்சுவையப்பா :))))))))"
அது நியூட்டனின் மூன்றாம் விதி...நமக்கும் இயற்பியல் தெரியும்னு காட்டிட்டேன் ... கொஞ்சம் நகைச்சுவை உணர்வோடு:-)

குழலிக்கு அடியேனின் நன்றிகள் உரித்தாகுக!!!:-)

தருமி,
என்னுடைய தலைவர் நீங்கள் தான் (நற...நற...)
நீங்கள் "அ" என்று தட்டினாலே அறுபது பின்னூட்டங்கள் இட்டது மாதிரி.
தங்களுடைய ஆதரவிற்கு நன்றி!

தங்கமணி,
மிக்க நன்றி...என்னால் சொல்ல இயலாததை நீங்கள் அழகாக கூறிவிட்டீர்கள்!

முத்துக்குமரன்,
ரொம்ப நன்றிங்கய்யா:-)))
என்னைப் பொறுத்த வரை நட்சத்திர வாரம் என்பது தொடர்ந்து ஏழு பதிவுகள் போடுவது...அதை நான் பூர்த்தி செய்து விட்டேன்:-))))

"ஆனா பல பேரு வயித்தெரிச்சல கிளப்புன நட்சத்திர பதிவர் நீங்கதான்னு நினைக்கிறேன்:-))"

பசிக்கறப்போ சாப்பிடலனா எல்லாருக்கும் தான் வயித்தெரிச்சல் வரும்...அதுக்கெல்லாம் நாம காரணமா இருக்க முடியுமா! :-)

சிவனடியார்,
உங்களுக்கு எனது கோடானுகோ"டீ" :-) நன்றிகள்!
என்னுடைய அனைத்துப் பதிவுகளுக்கும் தவறாமல் கருத்துகள் பகிர்ந்து கொண்டமைக்காக உங்களுக்கு நம்ம கடையில் எப்பொழுதுமே ஸ்பெஷல் "டீ" தான்! :-)

said...

உங்களின் நட்சத்ர வாரம் அனைத்து பதிவுகளையும் படித்து முடித்தேன். இவ்வளவு அருமையாகச் செய்து இருக்கிறீர்கள். நானேகூட நம்பவில்லை. அவ்வளவு நன்றாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்களேன்.

said...

Dina malar ungal inraiya pathivai patri pottu irukkirathu. Naduvil charukkinalum ungal pathivu nalla vidhamaga mudinthatharku vazhthukkal.

said...

உங்கள் பதிவு நேற்றைய தினமலரில்.
http://www.dinamalar.com/2006mar30/flash.asp

said...

தலைவர் நீங்கள் தான் (நற...நற...)
பயம்ம்ம்ம்ம்மா இருக்கே.. :-(

said...

//உங்கள் பதிவு நேற்றைய தினமலரில்.
http://www.dinamalar.com/2006mar30/flash.asp
//

பொட்டீக்கடை என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த அதிர்ச்சியில் இருந்து விரைவில் மீண்டு வர வேண்டுகிறேன்....

சாச்சுபுட்டாய்ங்களேபா சாச்சுபுட்டாய்ங்களே...

said...

தமிழீழம் பற்றிய உங்கள் சென்ற பதிவும், வேர்க்கடலையும் வட்டார மொழியும் பதிவும் சில பல ஐந்தாம்படைகளுக்கு கடுப்பைத் தந்ததில் ஆச்சரியம் இல்லை! தொடர்ந்து அவாள்களுக்கு கடுப்பைத்தரும் 'கடுப்பு சிறப்புத் தேநீர்' வழங்கும்படி உங்களிக் கேட்டுக் கொள்கிறேன்! (கார்ட்டூன் சூப்பரப்பு!) :)

சிறப்பான வாரமாக இருந்தது - உங்கள் எளிய இயல்பான நடை ரசிக்கும்படியாக உள்ளது :)