3/01/2006

கொஞ்சம் மஸ்ஸெல்(mussel) நான்கு பேருக்கு...

நான்கு நான்காய் கோர்த்துக் கொண்டிருக்கும் சங்கிலியில் "முத்தான" முத்துக்குமரன், நான்கு முத்துகளில் ஒன்றாய் என்னையும் கோர்த்துவிட்ட முத்துக்குமரனுக்கு நன்றி! இங்கே எனக்கு எதிர்பார்ப்புகள் மிகக் குறைவு, அதனால் முத்துக்குமரனின் கோர்வை எனக்கு வியப்பு கலந்த மகிழ்ச்சியே...

இதற்கு முந்தைய பதிவு ஒன்றில் என்னைப் பற்றிய முழு விவரத்தையும் கோர்த்துவிட்டதால் அதில் கோர்க்க முடியாதவற்றை இங்கே கோர்க்கிறேன்.

பிடித்த நான்கு விடயங்கள்:

அரசியல்: அது இரத்தத்திலேயே ஊறிவிட்டது என்று நினைக்கிறேன். குடும்பத்தில் சித்தப்பாவைத் தவிர யாரும் தீவிர அரசியலில் இல்லாவிட்டலும் அரசியலை குடும்பத்தோடு கதைக்கும் வழக்க்ம் இன்று வரை தொடர்கிறது. அப்பா ஒரு முன்னாள் கம்யூனிஸ தோழர், அதனால் சிறு வயதிலேயே மார்க்ஸ், எங்கெல்ஸ்,V.P.சிந்தன் அவர்களை பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. சித்தப்பா திமுகவின் தீவிர உறுப்பினர், இதனால் 10 வயதிலேயே போடுங்கம்மா ஓட்டு என்று ஊரூராய் சுற்றிய அனுபவம் உண்டு. இன்று கூட சித்தப்பாவிடமும், அப்பாவிடமும் 1,2 மணி நேரம் தொலைபேசி அரசியல் கதைக்கும் வழக்கம் உள்ளது.

இசை:மொழி வேறுபாடு இருந்தாலும் நல்ல இசையை எவராலும் ரசிக்க இயலும். அந்த வகையில் எதாவது ஒரு இசை அது எந்த மொழியாக இருந்தாலும் சப்தமாக இருந்தாலும் கேட்டுக் கொண்டு இருப்பேன்.

எகிப்திய பிரமீடுகள்: இன்னமும் பல மர்மங்களை தன்னுள்ளே வைத்திருக்கும் எகிப்திய பிரமீடுகள் என்னுள்ளே ஒரு பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. என்னுடைய தேனிலவை அங்கு கொண்டாட ஆசை. ;-)

காதல்: தாகம் எடுப்பவனுக்கு தான் தண்ணீர் கூட தேவை. ஆனால் காதலைப் பற்றி கதைக்கவோ, எழுதவோ அல்லது காதலிக்க கூட எதுவுமே தேவையில்லை. மனம் மட்டும் இருந்தால் போதும். பிறந்தது முதல் காதலித்துக் கொண்டிருக்கிறேன், பலரை. காதலித்தேன், காதலிக்கிறேன், காதலிப்பேன்...திருமணம் என்பது சமூகத்திற்காக காட்டப்படும் ஒரு சம்பிரதாயமாக இருப்பதால் இதுவரை அதில் நம்பிக்கையில்லை.

என்னை கொல்லத் துணிந்திருக்கக்கூடிய நான்கு பெண்கள்:

செல்வி
நயனா
விம்மி
சிந்து
:-)

மீண்டும் மீண்டும் பார்த்த நான்கு திரைப்படங்கள்:

வேதம் புதிது
ஆளவந்தான்
life is beautiful
Gattaca

நான் எப்பொழுதும் ரசிக்கும் நான்கு பாடல்கள்:

தென்றல் வந்து தீண்டும் போது (அவதாரம்)
மயில் போல பொண்ணூ ஒன்னு (பாரதி)
Careless whisper (George Michael)வெறுமையாய் உணரும் பொழுது..:-)
Imagine (John Lennon)தனிமையாய் உணரும் பொழுது
எனக்குப் பிடித்த நான்கு உணவு:

அம்மா வைக்கும் சாம்பார் மற்றும் உருளைக்கிழங்கு பொரியல்,
சுடச் சுட இட்லி, மீன்குழம்பு தேங்காய் சட்னியோடு
ஆயா வைக்கும் மீன் குழம்பு (சட்டியில்)
அப்பா ஊட்டிவிடும் எந்தவொரு உணவும்.

இரண்டு மாதங்களுக்கு மேல் தாக்குபிடித்த நான்கு கல்லூரிகள்:

சென்னைக் கிறித்தவக் கல்லூரி
அருள்மிகு மீனாட்சியம்மன் பொறியியல் கல்லூரி
இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி
சிட்னி பல்கலைக்கழகம்

இருபத்தி"நான்கு" மணி நேரமும் திறந்திருக்கும் இணையதளங்கள்:
தமிழ்மணம்
ஜிமெயில்
டெய்லி டெலிகிராப்
கிரிக் இன்ஃபோ

நான் அழைக்க விரும்பும் நான்கு நன்மணிகள்:

அப்பிடிப்போடு அக்கா
குழலி
நிலவு நண்பன்
நண்பன்

ஏற்கனவே பிறர் கோர்த்திருந்தாலும், நானும் அவர்களைக் கோர்த்து விடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். :-)



5 comments:

said...

//அப்பா ஒரு முன்னாள் கம்யூனிஸ தோழர்,//

அடடா என்ன ஒரு ஒற்றுமை என் அப்பாவும் ஒரு தோழர்தான். அவர் சங்கப்பணிகளை என்னை கல்லூரியில் சேர்த்த பிறகுதான் துறந்தார். பணிக்காலத்துல் சங்கத் தேர்தலில் நின்றூ ஒருமுறைகூட தோத்தது கிடையாது. அவர்கள் சங்கத்திலேயே 95 விழுக்காடு ஓட்டு வாங்கி வெற்றி பெற்றவர் அவர்தான். ஒவ்வொரு இரண்டு ஆண்டும் அவருக்கும் அவர் அணிக்கும் ஓட்டளிக்க வேண்டி தபால் அட்டை எழுதும் பணி மட்டும் என்னுடையது:-)))) அப்போது முணகுவேன். கை வலிக்கிறதென்று. இப்போது மகிழ்வாக இருக்கிறது. கொஞ்சமாவது களப்பணி செய்திருக்கோம் என்றூ:-))))))

said...

உங்களை கொல்லத் துணிந்தவர்கள் பற்றி விபரங்கள் அளித்தால் உதவுவதற்கு தயாராகவே இருக்கிறேன்:-))))))))))).

நல்ல முத்துமணிகளை கோர்த்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

said...

கடைப்பக்கம் வந்ததற்கு நன்றி, முத்துக்குமரன்.
தாங்களும் கம்யூனிஸ பின்புலத்தில் இருந்து வந்தவர் என்பதில் ஒரு இனம்புரியா மகிழ்ச்சி.

//உங்களை கொல்லத் துணிந்தவர்கள் பற்றி விபரங்கள் அளித்தால் உதவுவதற்கு தயாராகவே இருக்கிறேன்:-)))))))))))//

நான் நிம்மதியா இருக்கறது புடிக்கலையோ! :-)))))))))

said...

//இனம்புரியா மகிழ்ச்சி.//

இனம் இனத்தோடு சேர்வது இயற்கைதானே ....

//நான் நிம்மதியா இருக்கறது புடிக்கலையோ! :-))))))))) //

ஏதோ மனிதாபிமானத்தால் கேட்டுவிட்டேன். கோச்சுக்காதீங்க சத்தியா:-((((

said...

//செல்வி
நயனா
விம்மி
சிந்து
:-)//

சுட்டி கொடுத்தா வசதியா இருக்கும்:-))))))))