நாம் எழுதும் சொற்கள் அனைத்தும் ஓரளவு ஒரே மாதிரி இருந்தாலும் பேச்சு வழக்கில் நாம் பலவாறான சொற்றொடர்களை பயன்படுத்துகிறோம்.பல்வேறு வட்டாரங்களைச் சார்ந்த நண்பர்களோடும் மனிதர்களோடும் பழகும் சந்தர்ப்பம் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது நான் படித்த பள்ளிகளும், கல்லூரிகளும். ஆனாலும் இது நாள்வரை எனக்கு பிடிபடாத விடயமாக இருப்பது இந்த வட்டார பேச்சு வழக்கு. புரிந்தாலும் புரியாவிட்டாலும் பல நேரங்களில் புரிந்த மாதிரி மண்டையை ஆட்டி விடுவேன்.
வட மாவட்டங்களில் "கொல்லிக்கு போய் மல்லாட்டை பறிச்சி தின்னலாம்" என்று வழங்குவார்கள்.
மதுரை - வயலுக்குப் போயி நெலக்கடல பரிச்சி சப்பிடலாம்லா...
மதுரை - வயலுக்குப் போயி நெலக்கடல பரிச்சி சப்பிடலாம்லா...
திருநெல்வேலி - ஏலா வயக்காட்டுக்கு வாலா...கல்லப்பருப்பு திம்போம்.
கொங்கு - என்ற கூட வெள்ளாமக் காட்டுக்கு வா., கடல திங்கோணும்.
தஞ்சை - கொல்லைக்கு வா கடலை சாப்பிடலாம்.
ஈழம் - 'வாருமப்பா கச்சான் தின்னுவம்'.
கன்னியாகுமரி - அண்ணாச்சி வாறியலா கல்ல சாப்பிடுவோம்.
இவை எல்லாம் புவியியல் ரீதியான வட்டார வழக்கு மொழிகள். இவ்வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் பிற வட்டாரத்தைச் சேர்ந்தவர்களோடு கதைக்கும் பொழுது அவரவர் வழக்கு மொழியையே பெரும்பாலும் பயன்படுத்துவர்கள். ஆனால் கல்லூரியிலோ அல்லது பணியிடங்களிலோ இருப்பவர்கள் இருக்கும் இடத்திற்கு தகுந்தாற் போல் பேச்சு வழக்கை மாற்றிக் கொள்வார்கள். மேலும் வட்டார மொழி ஒரு அடையாளமாகக் கருதப்படுகிறது(சாதி மதத்தைப் புறந்தள்ளி).
ஆனால் எனக்கு பிடிபடாத பொருளாக இருக்கும் ஒரே வட்டாரம் பார்ப்பன வட்டாரம், நாம் மேற்கண்ட சொற்றொடரை பார்ப்பன வட்டாரத்தில் - "ஷெத்த வயல் பக்கம் வர்றேளோ., வேர்கடலை ஷாப்பிடலாம்" என்று வழங்குவார்கள்.
சினிமாவில் மட்டுமே இவர்கள் பிறரோடு கதைக்கும் பொழுது அவா, இவா, அம்பி என்று வழங்கக் கண்டு இருக்கிறேன். ஆனால் நடைமுறையில் இவர்கள் மற்றவரைப் போல் சாதாரணமாகவே தமிழ் கதைத்தாலும், சக பார்ப்பனரைக் கண்டுவிட்டால் போதும். அவா இவா என்று கதைக்க ஆரம்பித்து விடுவார்கள். அது தனியாக இருந்தாலும் சரி, கூட்டமாக இருந்தாலும் சரி. இதனாலேயே இவர்கள் எந்த வட்டாரத்தைச் சேர்ந்தவர்களாகச் சேர்த்துக் கோள்வது என்று எனக்குத் தெரியவில்லை.
தாய்மொழி தமிழாக இருந்தாலும் வேறு மொழிச் சொற்களெ அதிகமாக அவர்களின் பேச்சு வழக்கில் இருக்கும். வாயிலேயே நுழையாத சொற்களை சர்வ சாதாரனமாக தமிழாக்கிக் கதைப்பார்கள்.
தமிழ் தமது தாய் மொழியில்லை என்று வாதாடுபவர்கள், ஏன் தங்களது தாய்மொழியிலேயே கதைக்க விரும்பவில்லை?
இப்படி ஒரு மொழி வழக்கையே நிறுவிக் கொண்டதன் மூலம் அவர்கள் எதை நிலைநிறுத்த முயன்றார்கள். அதன் மூலம் தான் பார்ப்பனன் என்று பறைசாற்றியது தவிர வேறு ஏதாவது சாதித்தார்களா?
நல்ல வேலை நாங்கள் பேசுவது தான் தூய்மையான தமிழ், இதை தான் இனி தமிழக அரசு பேச்சு வழக்கிலும், எழுத்து வழக்கிலும் பயன்படுத்த வேன்டும் என்று சென்னையில் ஆரியக் கூத்தாடவில்லை.
வட்டார மொழிகளைக் கொடுத்துதவிய சகவலைபதிவு நண்பர்களுக்கு நன்றி!தவறாக இருக்கும் பட்சத்தில் சரியானவற்றை தெரிவுபடுத்தவும்,நன்றி!

30 comments:
நீங்கள் படத்தில் போட்டிருப்பதை நாங்கள் "கச்சான்" என்போம். கச்சான் எப்படி வந்ததென்று பெயரிலியிடம் கேட்கவும்.
தகவலுக்கு நன்றி வசந்தன்.
அப்படியே உங்களுடைய பேச்சு வழக்கில் அச்சொற்றொடரை அமைத்து கொடுத்தீர்களேயானால் நன்றாக இருக்கும்!:-)
எங்கள் வழக்கன்றி, என் வழக்கு மட்டுமே.
'வாருமன், கச்சான் தின்னுவம்'.
'வாருமப்பா கச்சான் தின்னுவம்'.
அல்லது வெறுமனே "கச்சான் தின்னுவமே?"
என்று வரும்.
'வாருமப்பா' என்றபின் 'தின்னுவமே?' என்று கேள்வி வராது.
(தின்னுதல் என்பது நான் அதிகம் பாவிப்பதுதான். பலர் இதை நாகரீகமற்றதாக நினைப்பதுண்டு. சாப்பிடுதல் என்ற வினையை அதிற்பொருத்திப் பாவிக்கலாம். நான் சூழ்நிலைக்கேற்ப, தின்னவோ சாப்பிடவோ செய்கிறேன். )
மலேசிய மொழியில் (மலாய்) நிலக்கடலையை கச்சான் அழைக்க படுகின்றது!
"ஈழம் - அட, வாவேனப்பா... கடலை தின்போமே?"
ஈழத்தில் கடலை என்று பாவிப்பதாக தெரியவில்லை
ஆனால் வசந்தன் சொன்னதுபோல் "கச்சான்" பாவனையில் உள்ளது. சில பகுதிகளில் "மள்ளாக் கொட்டை" என்றும் கூறுவர்.
தஞ்சை பகுதியில் பொதுவாகவே எல்லோரும் வேர்க்கடலை என்றுதான் சொல்லுவார்கள்.
வயல் பக்கம் வர்றேளோ., வேர்கடலை ஷாப்பிடலாம்
பார்ப்பனரல்லாத நான் இந்தியாவில் இருந்த போது 20 வருடங்கள் பல பார்ப்பனர்களோடு பழகியுள்ளேன். இது மாதிரி யாரும் சொல்லிக் கேட்டதில்லை !!!
//அதன் மூலம் தான் பார்ப்பனன் என்று பறைசாற்றியது தவிர வேறு ஏதாவது சாதித்தார்களா? **//
யாரு மேல என்ன கோவம். என்ன அண்ணாச்சி இப்படி சொல்லிட்டிய..என்னத்தையாவது பேசிட்டு போட்டுமே..இதெல்லாம் நாட்டுல பிரச்சினையா..என்ன நாஞ்சொல்றது..
(தப்பா ஏதாவது அர்த்ததுல எடுத்துட்டு திட்டிப்புடாதிய..என்ன :-))
இன்னொன்னு பொதுவா எங்க ஊரு காரவியல பாத்தா தானா 'ஏல! நல்லா இருக்கியா மக்கா' அப்படின்னு தானா வரும். ஆனா மத்தவுங்களை பாத்தா பேச்சு சாதாரணமா ஆகிடும். அப்படி பேசுறதுல ஒரு சொகம் இருக்குதுங்க. :-)
ஏங்க டீக்கடை காரரே,
//யார் வேண்டுமானாலும் வரலாம், என்ன வேண்டுமானாலும் பேசலாம்...பிறர்
மனது புண்படாதவரை! //
இப்படி உங்களைப் பத்திப் போட்டுக்கிட்டு, இங்கே பார்ப்பனர்களை இழுத்தது......
என்னமோங்க திசை திரும்பும் அபாயம் இருக்கு. சொல்லணுமுன்னு தோணுதுங்க.
சொல்லிட்டேன்.
கூட்டாளி,
டீக்கடை ந்னு வேர பேர வச்சிருக்குராப்புல. அங்கனதேன் பல அரசியல் சண்டை எல்லாம் ஆரம்பிக்கும்.அது மாதிரி ஆக்கிராதிக.
// வேர்கடலை ஷாப்பிடலாம்"
காலைல இருந்து எலிசபத்து ராணி பேரபய மாதிரி பீட்டர் பாண்டியனா இருந்துட்டு, நம்ம ஊர்காரங்க கூட பேசும் போது, நம்ம பாசைல பேசலயா. அது மாதிரிதான் இது..
தப்பா ஏதாவது அர்த்ததுல எடுத்துட்டு திட்டிப்புடாதிங்க பாஸு ..என்னய :-)
1. பார்ப்பனர் தங்கள் சாதியை மேனியில் உள்ள 'நூல்' மூலம் காட்டுவது.
2. சட்டை போட்டு மூடியிருக்கும் பட்சத்தில் 'பேச்சு பாஷையின்' மூலம் காட்டுவது
3. மற்றபடி 'பார்க்கும் போதே' ஒரு மார்க்கமாக அவாளுக்கு அடையாளம் தெரியும் விதமாக இருப்பது
- இவையெல்லாம் 'வர்ணாஸ்ரமத்தை' நிலை நிறுத்தும் பொருட்டான உத்திகளே.
"நீ" வேறு , "நான்" வேறு என்கிற பறைசாற்றலின் வடிவம்தான் இவை.
இதைச் சரியாகவே சுட்டியிருகிறீர்கள்.
ஒரு குறிப்பிட்ட நில வட்டாரத்தில் - மற்ற எல்லாச் சமூகத்தாரும் ஒரே மாதிரியான 'வட்டார வழக்கு' பேசும்போதும், தங்களுக்கு என்று தமிழ்நாடு முழுக்க ஒரே மாதிரி 'பாஷை' "சமைத்து" - தங்கள் சாதி வழக்கை பிடித்துக் கொண்டிருக்கும் பார்ப்பனர்கள் - அதைச் சுட்டிக் காட்டுவது மட்டும் தவறு என்றால் எப்படி?
அதாவதுங்க - நீங்களும், நானும் அடிச்சாலும் புடிச்சாலும் இங்ஙன தமிழ்நாட்டுல மட்டும்தான் கெடக்க முடியும்.
'அவுக' - 'ஜலம்' அய்யங்காராயிருந்தாலும் 'தூத்தம்' அய்யராயிருந்தாலும் - இந்தியா பூராவும் இருக்கும் ஷர்மா, சாஸ்திரி, வேதி, த்விவேதி, திரிவேதி, சதுர்வேதி, மிஷ்ரா, கங்கோபாத்யா, ஜோஷி - மற்றும் மராட்டிய 'கர்' களுடன் போய்ச் சேந்துப்பாக இல்ல - அதுக்குத்தேன் அவுகளுக்கு 'தமிழின' அடையாளம்லாம் ஒரு தடைங்கிறேன் :)
Really sorry, i dont have comments on this post. It seems you want the cheap publicity and you got it.
Congrats....!
தமிழ்மணம் நிர்வாகிகள் இடுகைகளின் வகைப்பாட்டில், சினிமா, அரசியல் போல "ஜாதி,மத சண்டை" என்று ஒரு பிரிவு ஆரம்பித்தால் அத்தனை பதிவுகளும் அங்குதான் இருக்கும்!
அப்பாவி தமிழன் கலக்கி விட்டார். அவரை அறிவாளி தமிழன் என்றே கூறலாம்.
என்னப்பு ஒன்னும் தெரியாத்துன்னு ச்சொல்லி இப்படி போட்டு கலக்கிபுட்டிக !
ஏனுங்கோ சொல்லவந்தத வெளக்கமா சொல்லிடிங்கோ!
இன்னப்பா நீ, இப்டி போட்டு ஒடுச்சிட்டியே !
என்னங்க நல்லாவே வாரியிருக்கிங்க !
கலக்குற மச்சி
சம்மட்டி
வட்டார வழக்கு என்பது ஒரு தெளி நீரோடை மாதிரியப்பு., அதில் ஒரு வார்த்தை பல சரித்திரங்கள் சொல்லும். எங்க ஊர் பக்கம் பிறகென்ன? என்பதை மருக என்னா? அப்படிப்பாங்க. இது கொச்சைத் தமிழாகத் தெரிந்ததால்., இது என்ன இப்படியொரு வார்த்தை என ஒரு தமிழாசியரிடம் கேட்டு அவர் சரித்திரத்தை சொன்னாரு பாருங்க, காரைக்குடிப் பக்கம் பெரும்பாலும் வார்த்தைகள் நமக்குப் புதிதாக இருக்கும். என் தோழியின் வீட்டிற்கு அவளுடன் விடுமுறைக்கு காரைக்குடி சென்ற போது அவங்க 'ஆயம்மா' வாம்மா... இரு!! என்றார் ., அட, இங்கயிருக்கத்தானே, வந்திருக்கோம்னு நினைத்துக்கொண்டிருக்கும் போது என் தோழி சொன்னாள்., உட்காரு என்கிறார்கள் என்று. இப்படி அங்கு பைய (மெதுவாக), அப்பச்சி, ஐத்தயாண்டி (இது அண்ணி என்கிற பொருள்), திருணை (திண்ணயப்பா...!), வளவு, கழுத்திரு(தாலி, என்ன ஒரு நயமான வார்த்தை பாருங்கள்) என்று ஏகப்பட்ட புது வார்த்தைகள். பேசும் போதே கேலி தெரித்து விழும் நெல்லை தமிழ்., இதே நையாண்டி கோயம்புத்தூர் பக்க தமிழிழும் குறைச்சலில்லை. அதிகாரம் இல்லா தஞ்சைத் தமிழ் (எனக்குத் தெரிந்து கொஞ்சம் 'பம்மிய' தமிழ்., தஞ்சைத் தமிழ்தான்.) நிறைய தூய தமிழ் வார்த்தைகள் கொண்ட ஈழத் தமிழ்., சில கொச்சையான வார்த்தைகள் இருந்தாலும் சிங்கைத் தமிழ். இதற்கு மேல் சங்கத் தமிழ், அனைத்திலிருக்கும் வார்த்தைகளைத் தொகுத்தால்., தமிழைக் கடலென எவ்வளவு குறுகியதாக சிந்தித்திருக்கிறார்கள் என்பது தெரியும்!!.
காட்டுக்கு போறேன், தோட்டத்துக்கு போறேன், கொல்லைக்கு போறேன், two bathroom போறேன், loo க்கு போறேன் என்றெல்லாம் மற்றவர்கள் தம் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுத்து வளர்க்கும்போது பார்ப்பான்கள் மட்டும் ஆய் போறேன் என்று சொல்லிக்கொடுத்து குழந்தைகளை வளர்ப்பது எனக்கும் சமூகத்துக்கும் மிகப்பெரிய ப்ரச்னையாக உள்ளது என்பதுதான் தாங்களின் அடுத்த பதிவா நட்சத்திரமே?
அனைவரது கருத்துக்கும் நன்றிகள். வழக்கு மொழி பற்றியெழுந்த ஐயத்தினாலே இப்பதிவை நான் எழுதினேன். பலரும் அவரவர் வட்டாரத்தைப் பற்றி விளக்கியிருக்கிறீர்கள்:-) அதற்கும் எனது நன்றிகள்:-)
பலருக்கும் ஊர்க்காரனைப் பார்த்தால் வரும் மொழிபாசத்திற்கும் தன் சாதிக்காரனைப் பார்த்தால் வரும் மொழிப்பாசத்திற்கும் வித்தியாசம் இருக்கு. மொழியில் கூட சாதியை திணித்து இப்பதிவை எழுதத் தூண்டியவர்களுக்கு நன்றி.
முகமூடி, உங்களுடைய பின்னூட்டத்தை கேள்வியாக எண்ணாமல், ஒரு யோசனையாக எடுத்துக் கொண்டு அதை பரிசீலனை செய்கிறேன். அது எப்படிங்க உங்களால மட்டும் இப்படி யோசனைகள் கொடுக்க முடியுது?:-)
தமிழிலேயே சிறந்தத் தமிழான சென்னைச் செந்தமிழைப் பற்றி ஒரு வரியும் குறிப்பிடாததை வன்மையாகக் கண்டிக்கிறேன். :)
'ழ' என்ற உச்சரிக்கக் கடினமான ஒலிக்கு பதிலாக 'ய' போன்ற சுலபமான மாற்றுக்களை உபயோகித்து (உ-ம், வாயப்பயம்) உச்சரிப்பை எளிமையாக்கியது, மற்றும் வாழ்வின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் மொழியையும் சுருக்கி வழங்கியது, (உ-ம், இருக்கிறது --> கீது)........ இது போல் சென்னைத் தமிழின் அருமை பெருமைகள் ஏராளம்.
//நல்ல வேலை நாங்கள் பேசுவது தான் தூய்மையான தமிழ், இதை தான் இனி தமிழக அரசு பேச்சு வழக்கிலும், எழுத்து வழக்கிலும் பயன்படுத்த வேன்டும் என்று சென்னையில் ஆரியக் கூத்தாடவில்லை.//
என்ன பச்சப்பிள்ளையா இருக்கீங்க...
தமிழகத்தின் விடிவெள்ளி சக்கரவர்த்தி ராசகோபாலாச்சாரியர் 1938ல் சென்னை மாகாண முதல்வராக வந்த போது நன்னாவே கூத்து கட்டியிருக்கிறார். வணக்கம் என்று ஷொல்லபுடாது ''நமஸ்காரம்'' என்றுதான் சொல்ல வேண்டும், திரு/திருமதி போடப்படாது ஸ்ரீ/ஸ்ரீமதி தான் போட வேண்டும் என்று அரசாணையே போட்டார். தாடிப் பெரிசு மாற்று இயக்கம் நடத்தி, போராட்டம் பண்ணி அதை பரணில் போட வைத்தார்.
என்னமோ போங்க...
நமக்கு எல்லாம் வரலாறு சொல்லிகொடுக்க ஆள் இல்லாமே போச்சு:-)))
Entha brahmanarkalum thangal Tamizhar illai enru chola villai. Neengal than, ungalai ponravar than cholkirarkal.Chilappathikarathil Kannagi Madurai Nagarai eriththapothu kooda, Anthanar, Aravor, Penngal, Kuzhanthaikal agiavarkalai vittu vittu matravarkalaithan pidikkumpadi chonnal. Anthanar enbathu thooya thamizh chol.Marai othuvathal Maraiyor enru vedam othubavarkalai mattum kurippiduvarkal. Neengal intha chinna vishayathile etharku jathi ellam kondu varukireerkal.
வட்டார வழக்கைத்தாண்டியும், பாட்டி என்பதற்கு, ஆச்சி, ஆத்தா, அப்பத்தா, அம்மம்மா என பல வழக்குகள் சாதி அல்லது இனவாரியாக பயன்படுத்தப் படுகின்றன. இது போன்று பல சொற்கள் உண்டென்று நான் சொல்ல வேண்டியதில்லை
அது சரி, மத்தவங்க பேசரதெல்லாம் இயற்கை. பிராமணர்கள் மட்டும் மாநாடு நடத்தி, திட்டமிட்டு, அகராதி போட்டு இப்படி பேசப் பழகினார்கள். அப்படி சொல்லாட்டி நாமெல்லாம் என்ன பகுத்தறிவுத் தமிழன். 50 வருடமா திராவிடக்கட்சிகள் ஆண்டதற்கு ஒரு அர்த்தம் வேண்டாமா, நடத்துங்க...
மற்றபடி, வட்டார வழக்கு என்ற அருமையான விசயத்தை வீணடித்துவிட்டதற்கும் வருத்தமே
பொட்டிக்கடை,
இந்த பிரச்சனையெல்லாம் தீர ஒரு வழி இருக்குதுங்க. இந்த மாதிரி உங்களுக்கு பிடிக்காத பாசை பேசரவங்க என்ன ஒரு லாரி தேறுவாங்களா, வெங்காயம் இருக்காதுங்கறார், இன்னும் ஒரு தம்பி கூட இப்டிதான் சொல்றாரு, (வெங்காயமும் இவரும் ஒரே ஆளா?)இவங்களை ஒரு லாரில ஏத்தி எங்கயாவது கொண்டு போயி தீர்த்துக்கட்டிட்டா, உங்களுக்கு, உங்களை நட்சத்திரமாக்கி சந்தோசப்படர ஆளுங்களுக்கு திருப்தியா போயிருமில்ல? அதையும் செஞ்சுறுங்க.
JUST FOR cheap publicity.. Log live. you got your publicity.
I don't know how can he become an star when he Purposefully hurting others feeling. Usually telugu or malayalm people in Tamilnadu usually speaks tamil in public and use their native tongue in their house. This doesn’t mean that their language is higher or lower t7han Tamil. It’s because from childhood they talked with their people in that language/ accent so they automatically speaks that when they meet their people. Same to with Brahmins also. We don’t talk intentionally to degrade Tamil. But since we used to talk with our relatives in such accent we use that. How can you don’t understand this simple logic????
"Mottai thalaikkum muzhankaalukkum mudichi". Very cheap technique. Ippo ellam inaiyathula ippadi eluthuna thaan famous aaga mudiyuthu. Puliya paarthu poonai soodu pottukkonda kathai thaan engey. Did you see yesterday hindu news about untouchability existence? If you have real 'akkarai', do something constructively. Don't write this kind of 'kadalai' nonsense.
பொட்டீக்கடை, நான் இந்த பதிவை பார்த்ததும் எழுதணும்னு நினைத்ததை அனானி எழுதியிருக்கார்.அதை ஏன் அனானியா எழுதினார்னு தெரியலை.
சொல்லப்போனா என்னையே எடுத்துக்கொங்களேன். சாதாரணமா இப்ப உங்கக்கூடயெல்லாம் பேசுறப்போ எங்க அப்பா எங்க சித்தப்பான்னெல்லாம் சொல்லி பேசுவோம். ஆனால் எங்க சொந்தக்காரங்கக் கிட்ட பேசுறப்போ, நைனா சின்நைனா அப்படின்னு தான் சொல்லுவோம். உங்கக்கூட பேசுறப்போ எப்படி எங்க நைனான்னு சொல்லுறது தப்பாயிருக்குமோ அப்படித்தான். எங்க வீட்டில் பேசுறப்போ அப்பா அப்படின்னு சொல்லி பேசுறதும் இருக்கும். அதே போல் மேலும் சில தெலுங்கு வார்த்தைகளும் எனக்குத்தெரிந்து உபயோகப்படுத்துவோம்.
நீங்கள் சொல்லியிருக்கும் கருத்துக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இருக்கிறதான்னு தெரியாது. எனக்கு தாய்மொழி தமிழ் தான் ஆனாலும் இது தான் பழக்கவழக்கம், இன்றைக்கு வரைக்கும் இப்படித்தான் செய்துவருகிறேன். இது எங்கேர்ந்து தப்பாச்சுன்னு தெரியலை.
எதற்கும் இருக்கட்டும்னு ஏற்கனவே http://neposarakku.blogspot.com/2006/03/blog-post_21.html இல் இட்டதை இங்கும் இடுகிறேன். இதற்கு அதிகமாக எனக்கு எதுவும் சொல்ல இருப்பதாக தெரியவில்லை.
அந்த பதிவில் (நீங்கள் லிங்க் கொடுத்திருக்கலாம்)எழுதியிருப்பதை போலவே, அப்படியே நான் பார்ப்பதில்லை என்றாலும், இந்தியாவின் எந்த பகுதியிலும் இல்லாதபடி தமிழ்நாட்டில் மட்டும், பார்பனர்கள் தங்களுக்கு என்று ஒரு தனித்துவமான (பல இடங்களில் சமஸ்கிருதமயப்படுத்தப்பட்ட, அந்த வட்டாரத்துடன் இயைந்து போகாமல், அதே நேரம் தமிழகம் முழுக்க ஒரு யூனிவர்சல்தன்மையுடன்) பாஷை வைத்திருப்பதன் பிண்ணணி என்ன என்பதை பற்றி கேட்பதிலும், விவாதிலும் என்ன நாற்றம் அடிக்கிறது என்று என் சிற்றறிவிற்கு புரியவில்லை. 'தண்ணி' என்று சொல்லக்கூடாது 'ஜலம், தீர்த்தம்' என்றுதான் சொல்லவேண்டும் என்று தங்கள் குழந்தைகளுக்கு புகட்டுவதை பற்றி பேசினால், புகட்டுவதில் உள்ள வெறுப்பு தெரியாமல், அதை பேசுவது இங்கே உள்ளவர்களுக்கு துவேஷமாய் தெரியும்.
இதே பிரச்சனை பற்றி உஷா போன்றவர்கள் (மேலோட்டமாக) எழுதினார்கள். அது முற்றிலும் பார்பன தன்னிலை சார்ந்து இருந்தது. மற்றவர்கள் வேறு மாதிரி பார்பதை வெளியிலிருந்து(உண்மையில் அதன் உண்மை நிலவரம் சரியாகக் கூட தெரியாமல்) அது குறித்து அதே மேலோட்டத்துடன் தங்கள் பார்வையில் கருத்துக்களை சொல்கிறார்கள். அதை விவதிப்பது என்பதே சாதிக்கு அப்பாற்பட்டவர்களாக பாவனை செய்யும் 'மஞ்சள் ரத்த' (நேரடி அருத்தத்தில் இல்லை) ஜெண்டில் மேன்களுக்கு பொத்து கொண்டுவருகிறது.
Ithu vattara vazhaku mathiri illai. Silly oru thalaippai vachu parpanarkalai soothadikka ezhuthiyathu......Jamaida naye....Nan Iyyerumillai Iyankarumillai.... Vanniayan
ROSAVASANTH,
//இந்தியாவின் எந்த பகுதியிலும் இல்லாதபடி தமிழ்நாட்டில் மட்டும், பார்பனர்கள் தங்களுக்கு என்று ஒரு தனித்துவமான (பல இடங்களில் சமஸ்கிருதமயப்படுத்தப்பட்ட, அந்த வட்டாரத்துடன் இயைந்து போகாமல், அதே நேரம் தமிழகம் முழுக்க ஒரு யூனிவர்சல்தன்மையுடன்) பாஷை வைத்திருப்பதன் பிண்ணணி என்ன என்பதை பற்றி கேட்பதிலும், விவாதிலும் என்ன நாற்றம் அடிக்கிறது என்று என் சிற்றறிவிற்கு புரியவில்லை.//
ரோசாவின் இந்த கேள்விதான் எனக்கும் தோன்றியது. தங்களுக்குள் பேசிக் கொள்வதாயிருந்தாலும் இஸ்லாமிய மற்றும் கிருத்துவர்களும் அந்தந்த வட்டார வழக்கிலேயே பேசுகிறார்கள். ஆனால் இந்த வட்டாரங்களைத் தாண்டிய பொது வழக்கு குறிப்பிட்ட சாதியினரிடம் எப்படி வந்தது என்று கேள்வி கேட்பது கூட குற்றமா?
பொட்டீகடையில் தர்மஅடி விழுந்திருப்பதை பார்த்தால் ஏதோ சத்யா சொல்லக்கூடாததை சொன்னது போல ஒரு மாயையை ஏற்பட்டுள்ளது தெரிகின்றது, ஏற்கனவே பலமுறை அலசி ஓய்ந்த விவாதங்களாக இருந்தாலும் பரவாயில்லை, ஆனால் இந்த பதிவின் கருத்துகள் இது வரை தமிழ்மண தளத்தில் பேசப்படாத ஒன்று, இந்த பதிவில் சொல்லப்பட்ட கருத்துகள் தவறென கருதுபவர்கள் அவர்கள் கருத்துகளை எடுத்து வைப்பதை விட தர்ம அடி போடுவதிலேயே சிரத்தை எடுத்துள்ளது இது விவாதிக்கப்படவே கூடாது என்ற அவசரத்தில் இருந்ததும் புரிகின்றது.
எந்த ஜாட்டானும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று கூறிவிட்டு ஒருவர் செல்லமுடியும், பிராமணர்களுக்கு இதற்கெல்லாம் நேரமில்லை அவர்கள் படித்து முன்னேறுகின்றார்கள் உங்களுக்கு ஏனிந்த தாழ்வுமனப்பான்மை என்று டோண்டு அய்யா கூறிவிட்டு தர்ம அடி வாங்காமல் செல்லமுடியும் ஆனால் நாட்டில் நடந்து கொண்டிருக்கும் ஒரு விடயத்தை விவாதத்திற்கு கொண்டு வந்ததற்கு அழுகிய வேர்கடலை அது இது என இத்தனை ஆர்பாட்டமா?
இது சத்யாவிற்கு மட்டும் தோன்றியது அல்ல, நானும் இது தொடர்பாக சில நண்பர்களிடம் பேசியுள்ளேன், இருந்தாலும் தமிழ்மணத்தில் இதை எழுதாததற்கு பெரியதாக ஒன்றும் காரணமில்லை சாதாரணமாக எல்லா சாதியினரும் அவரவர்களின் வட்டார வழங்கு மொழியில் பேசும் போது உலகெங்கும் அவர்களுக்கு மட்டும் ஒரே வழங்கு மொழி எப்படி சாத்தியமானது? இந்த கேள்விக்கான காரணத்தை கூறுங்கள் தெரிந்து கொள்கின்றோம், தெரிந்து கொண்டு நினைப்பு தவறாயின் மாற்றிக்கொள்கின்றேன், அதை விடுத்து தர்ம அடி போடும் அவசரமென்ன?
யூதர்கள் 800 ஆண்டுகளுக்கும் மேல் ஐரோப்பிய நாடுகளில் விரவி வாழ்ந்த போதும் கடும் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் தங்கள் மொழி மதத்தை வீட்டினுள் வைத்து பொத்தி பொத்தி வளர்த்தனர், கத்தோலிக்க மதம், மொழி, நாடு என எந்த நீரோட்டத்திலும் கலக்காமல் யூதர்கள் என்றே தனித்துவமாக வைத்திருந்தனர், இதற்கு முக்கிய காரணம் யூதர்களின் தம் மதம், தம் மொழி, தன் இனம் எல்லாவற்றையும் விட உயர்ந்தது என்ற அவர்களின் உயர் மனப்பான்மை, ஒரு வேளை இதைத் தான் அசோகமித்திரன் பிராமணர்கள் யூதர்களைப்போல என்று கூறியிருப்பாரோ? (எல்லோரையும் குறிப்பிடவில்லை, தனிப்பட்ட வாழ்க்கையில் இதை எல்லாம் பார்க்காதவர்கள், பொது தளத்தில் பேசும் போது தனிப்பட்ட வாழ்க்கையை வைத்து இப்படி எதுவுமே இல்லை என கூறும் பிரச்சினைகள் வருவதுன்டு)
//வட்டார வழக்கைத்தாண்டியும், பாட்டி என்பதற்கு, ஆச்சி, ஆத்தா, அப்பத்தா, அம்மம்மா என பல வழக்குகள் சாதி அல்லது இனவாரியாக பயன்படுத்தப் படுகின்றன
//
சாணக்கியன் அவர்கள் இப்படி கூப்பிடுவது வட்டார மொழியா அல்லது எந்த சாதி மொழி என்று தெளிவாகவே கூறலாமே? ஆச்சி என்பது காரைக்குடியில் வயதான எல்லாரையும் அப்படித்தான் கூப்பிடுவார்கள், அப்பு நானும் 4 வருடங்கள் காரைக்குடியில் குப்பைக்கொட்டியவன், அவ்வளவு ஏன் என் மாமியாரின் அம்மாவை நாங்கள் கூப்பிடுவது ஆச்சி என்றுதான்.
// அதை விவதிப்பது என்பதே சாதிக்கு அப்பாற்பட்டவர்களாக பாவனை செய்யும் 'மஞ்சள் ரத்த' (நேரடி அருத்தத்தில் இல்லை) ஜெண்டில் மேன்களுக்கு பொத்து கொண்டுவருகிறது.
//
ரோசாவின் இதே கேள்விதான் முதன் முதலில் இந்த பின்னூட்டங்களை படிக்கும் போது எனக்கும் தோன்றியது.
கடலூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் தலித்கள் 'செம்பு' என்று வழங்குவர், சில இடங்களில் இதை வைத்து தலித்தா என அடையாளம் காண்பார்கள், ஆனால் இதுவும் கூட வட்டார வழக்கு தான், சீர்காழி,சிதம்பரம் பகுதிகளிலும் கள்ளக்குறிச்சி,விழுப்புரம் மாவட்டங்களிலும் செம்பு என்று வழங்குவர்.
Post a Comment