3/10/2006

ஸ்டாலின் VS வைகோ

வைகோ அதிமுகவுக்குத் தாவினாலும் தாவினார் கடந்த ஒரு வாரமாக வைகோ கொள்கையை அடகு வைத்துவிட்டார். வைகோ ஒரு தேர்ந்த அரசியல்வாதியாகி விட்டார். வைகோவின் செல்வாக்கு அவ்வளவு தான். வைகோவிற்கு நடுநிலையாளர்களின் வாக்குகளைத் தவற விட்டு விட்டார். வைகோ திமுக தொண்டர்களின் பரம எதிரியாகிவிட்டார்...லலலா...லலலா...
அப்பப்பா எவ்வளவு கருத்துரையாடல்கள், கருத்து வேறுபாடுகள்...நானும் கருத்து சொல்லலாம் என்று நினைக்கையில், நமது கருத்து பல பதிவுகளின் நோக்கங்களை திசை திருப்பிவிடக் கூடாது என்ற காரணத்தினால் தான் இந்த பதிவு.
வைகோ: திமுகவில் தொண்டனாக ஆரம்பித்து தன் பேச்சுத் திறமையால் திமுகவின் போர்வாளாகவும், கருனாநிதியின் வலது கரமாகவும் செயல்பட்டவர். பின்னர் ஜெயலலிதாவின் ஆட்சியில் அவரின் அரசியல் சானக்கியத்தனத்தால் அவரது உளவுத்துறையின் மூலம் "கருனாநிதியைக் கொல்லத் திட்டம் தீட்டினார்" என்று பொய் பிரச்சாரம் பரப்பப்பட்டு கருனாநிதியால் கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டவர்.பின்னர் மதிமுக என்று ஒரு கட்சியைத் தொடங்கி இன்று வரை ஒரு கட்சியாகவே இழுத்துக் கொண்டு வந்துள்ளார். அவர் ஒருவர் தான் இந்திய அரசியலில் உள்ள ஒரே ஒரு தன்மானம், கொள்கை மிக்க தலைவர் என்ற பிம்பத்தை வளர்த்து வந்திருக்கிறார் நேற்றுவரை. கட்சி ஆரம்பித்து பன்னிரெண்டு ஆண்டுகளாகியும் சட்டமன்றத்தில் பிரதிநித்துவம் இல்லாத கட்சி. கூட்டணி முதுகினில் சவாரி செய்து இரண்டு மூன்று முறை பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்களை அனுப்பியவர். கருனாநிதியை விட தமிழையும், தமிழீழத்தையும் அதிகமாக மேடைகளில் முழங்கியவர். மறைந்த காங்கிரஸ் தலைவர் இராஜீவ் இந்தியாவின் பிரதமராக இருந்த பொழுது அவரை மாநிலங்களவையில் பெயரிட்டு அழைத்த வீர மனிதர். மேடைகளில் நெப்போலியன் தொடங்கி திருவாசகம் வரை மேடைகளில் சரளமாகப் பேசக் கூடியவர்.

ஸ்டாலின்: இவருக்கு கருனாநிதியின் மகன் என்பதைத் தவிர வேறு எந்த ஒரு தகுதியும் இல்லை என்பது பலரது வாதம். இவரும் தன்னுடைய 21ம் வயதில்(1974) சென்னை மாநில கல்லூரியில் படிக்கும் பொழுது ஒரு சாதாரண தொண்டனாக திமுக இலைஞரணியில் இணைத்துக் கொண்டார். பெரிதாக கட்சி பணிகளில் ஈடுபடாவிட்டாலும் திமுக தலைவரின் மகன் என்ற ஒரே காரணத்தினாலேயே 1976 ம் ஆன்டு இந்திரா அரசு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்ட பொழுது சிறையில் அடைக்கப்பட்டார்.அதன் பின்னர் 1980கலில் திமுகவிற்கு இளைஞரணியின் பங்களிப்பு அவசியம் தேவை என்ற காரணத்தினால் அன்பழகனின் மேற்பார்வையில் இளைஞரனியில் புது இரத்தம் பாய்ச்சும் பொருட்டு களப்பணிகளில் தீவிரமாக இறங்கியவர். இன்றைய திமுகவின் இளரத்தங்கள் பெரும்பாலும் ஸ்டாலினின் விசுவாசிகளே. ஸ்டலினுக்கு வைகோவை போல் மேடைப்பேச்சு வராவிட்டாலும் அனைத்து வயதினரையும் அரவணைத்து செல்லும் பன்பை அறிந்தவர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
வைகோ திமுகவில் இருந்து பிரிந்து சென்ற போது அவரின் விசுவாசிகளும் திமுகவில் பதவி சுகம் கிட்டாதவரும் தான் வெளியேறினார்களேயொழிய ஸ்டாலினை பிடிக்காததால் வெளியேறினோம் என்று கூறியவர்கள் மிகச் சிலரே. அவ்வாறு கூறியவர்களில் பலரும், கடந்த காலங்களில் திமுகவொடு வந்து இணைந்த கதையும் உண்டு.

இவரும் தேர்தலில் நின்று தோல்வியை தழுவியிருந்தாலும் பின்வந்த காலங்களில் வெற்றியடைந்தவர். 25 ஆண்டுகட்கு பின் நடந்த சென்னை மாநகரத் தந்தை தேர்தலில் வரலாறு காணாத வெற்றியடைந்தவர். தொடர்ந்து வந்த தேர்தலிலும் அதிமுகவின் பல தில்லுமுல்லுகளுக்கு இடையேயும் மீண்டும் மாநகரத் தந்தையாகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர். ஒரு நேரத்தில் ஜெயலலிதா என்ற அகங்காரம் பிடித்த பெண்மணியே அவரை சட்டமன்றத்திற்கு வரவிடக்கூடாது என்ற எண்ணத்தில் ஒருவருக்கு ஒரு பதவி தான் என்ற சட்டத்தை இயற்றிய பொழுதும் மாநகரத் தந்தை பதவியை இராஜினாமா செஇது விட்டு சட்டமன்ற நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் பொருட்டு சட்டமன்ற உறுப்பினர் பதவியை தக்க வைத்துக் கொண்டவர்.

சட்டமன்றத்தில் ஜெயலலிதாவால் இவரை சிறுபிள்ளை போல் எள்ளி நகையாட முடிந்ததே தவிர வேறெதுவும் சாதிக்க இயலவில்லை. அப்படி சந்தர்ப்பம் வாய்த்த போதெள்ளம் ஒரு சிறந்த தலைவனுக்கான எடுத்துக்காட்டாக சிறு புன்முறுவலுடன் நிறுத்தி கொண்டாரே தவிர உணர்ச்சிவசப்பட்டு விவகாரமாக ஏதும் பேசாத பண்பட்ட மனிதர்.

இதுவரை இந்திய அரசியலில் இருந்த/இருக்கும் வாரிசு அரசியல் தலைவர்களிலேயே இவர் மட்டும் தான், தான் சார்ந்திருக்கும் கட்சிக்காகவும், மற்ற போராட்டங்களுக்காகவும் சிறைவாசம் அனுபவித்தவராக இருப்பார். இதனாலேயே மற்ற சில்லுண்டிகளின் வாதமான வாரிசு அரசியல் என்ற ஒரு வார்த்தை இவர் முன் வாதமற்று போய் விட்டது. வைகோ இடம் மாறியது கூட, ஜெயலலிதாவிற்கு ஸ்டாலின் மீது ஏற்பட்டிருக்கும் பயம் தானேயொழிய வேறேதும் இருக்க வாய்ப்பில்லை. அந்த ஒரு காரணத்தினாலேயே பெட்டியைக் கொடுத்து வைகோவை வலையில் வீழ்த்தினார்.

கருனாநிதிக்குப் பின் திமுகவின் தலைமை என்பது ஸ்டாலின் ஒருவரால் மட்டுமே என்பது மறுக்க இயலாத உண்மை. கருனாவிற்கு பின் வைகோ திமுகவை கையகப்படுத்துவது என்பது நடக்க இயலாத ஒரு கனவேயாகும். இதுவரை கழகத்தை கட்டி காத்து வந்த இரண்டாம் நிலைத் தலைவர்களுக்கு கருனாவின் முந்தைய நாள் வரையிலான வைகோவின் சகவாசம் என்றுமே பிடித்ததில்லை என்பது தான் உண்மை. அவர்கள் அனைவருமே ஸ்டாலினுக்காகவே உருவாக்கப்பட்டவர்கள், ஆகையால் கருனாவிற்கு பிறகு திமுக உடையும் என்பது ஒரு உப்பு சப்பில்லாத வாதம்.

தமிழ்நாட்டை ஆளும் அளவிற்கு ஸ்டாலினுக்கு தகுதியுள்ளதா என்று கேள்வியெழுப்பவர்கள், 1991 ம் ஆண்டு ஜெயலலிதாவின் கையில் தமிழ் மக்களின் தலைவிதியை ஒப்படைத்த பொழுது கேட்டார்களா என்றால் மௌனம் ஒன்றே பதிலாக வரும். அன்றைய ஜெயலலிதாவை இன்றைய ஸ்டாலினோடு ஒப்பிட்டால் ஸ்டாலின் பல நூறு மடங்கு சிறப்பாக செயலாற்றுவார் என்பதில் ஐயமே இல்லை.

24 comments:

said...

நல்ல வாதம். ஆனாலும் செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்களின் மேலண்மை[நான் ஜெ விசுவாசி அல்ல்] திரு. மு. க. ஸடாலினிடம் உண்டா என்பது கேள்விக் குறியே. வைகோ/மு.க/ஜெ.ஜெ அளவிற்கு வாதத் திறமை[மைய அரசு/மற்ற மாநில அரசுகளிடம் நிறைய் பேச வேண்டுமே] இல்லை எனறே கொள்ளலாம்.

நான் ஸடாலினிடம் நல்ல அரசியல்வாதியை பார்க்கிறேன். ஆனால் தேர்ந்த அரசியல்வாதியை அல்ல. தவறிந்தால் மன்னிக்கவும்.

என்றும் அன்புடன்,

said...

கார்த்திக்,

கடையான்ட வந்ததுக்கு நன்றி!

எதிராளியை முட்டாளாகப் பாவித்து நாம் செய்யும் எந்தவொரு வாதமும் சரியாகத் தோன்றும். அந்த வகையில் ஜெயலலிதாவுக்கு சிறந்த வாதத்திறமை உண்டு என்பதை ஒத்துக் கொள்கிறேன்.

முதலாளிகள், முதலாளிகளாகப் பாவித்துக் கொள்பவர்களுக்கு பிறப்பிலேயே மேலாண்மை உள்ளதாக ஒரு பிம்பம் உண்டு. பிறர்க்கு பழகினால்/பழக்கினால் மட்டுமே வரும்.

மன்னிப்பெல்லாம் எதுக்கு? நானும் ஒரு சராசரி மனிதன் தான். உங்கள் கருத்தைச் சொல்ல உங்களுக்கு முழு உரிமை உண்டு.

said...

டீ நல்ல இருந்ததுங்க...

எல்.கணேசன் மகன்,ப.சி மகன்,மூப்பனார் மகன், ராமதாஸ் மகன் என யார் வேண்டுமானலும் வரலாம்.(நல்ல வேளை,அம்மாக்கு குடும்பம் இல்லை. உடன் பிறவா சகோதரிக்கே இந்தப் பாடு என்றால் குடும்பம் இருந்த்திருந்தால்......) ஆனால் ஸ்டாலின் வர கூடாது. என்னப்பா நியாயம்? மாநகர தந்தையாய் சிறப்பாய் செயலாற்றியதால் தான் இரண்டாவது முறையும் அவரால் ஜெயிக்க முடிந்தது.

//எதிராளியை முட்டாளாகப் பாவித்து நாம் செய்யும் எந்தவொரு வாதமும் சரியாகத் தோன்றும். அந்த வகையில் ஜெயலலிதாவுக்கு சிறந்த வாதத்திறமை உண்டு என்பதை ஒத்துக் கொள்கிறேன்.//

//சட்டமன்றத்தில் ஜெயலலிதாவால் இவரை சிறுபிள்ளை போல் எள்ளி நகையாட முடிந்ததே தவிர வேறெதுவும் சாதிக்க இயலவில்லை.//

மிக சரியே.

said...

தமிழ்நாட்டை ஆளும் அளவிற்கு ஸ்டாலினுக்கு தகுதியுள்ளதா என்று கேள்வியெழுப்பவர்கள், 1991 ம் ஆண்டு ஜெயலலிதாவின் கையில் தமிழ் மக்களின் தலைவிதியை ஒப்படைத்த பொழுது கேட்டார்களா; இல்லை, ராஜீவ் காந்தியிடம் நாடே ஒப்படைக்கப்பட்டபோது கேட்டார்களா?; இல்லை, இந்திரா காந்தியைப் பற்றி கேள்வி எழுந்ததா? ( நாளை ராகுல் காந்திக்குக் கேள்வி வருமா?).......

said...

மனசு,
"டீ நல்ல இருந்ததுங்க..."

மிக்க நன்றி...


"நல்ல வேளை,அம்மாக்கு குடும்பம் இல்லை. உடன் பிறவா சகோதரிக்கே இந்தப் பாடு என்றால் குடும்பம் இருந்த்திருந்தால்...."

நா சொல்றதுக்கு எதுவும் இல்ல...
*****

தருமி,

ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கீங்க...ரொம்ப நன்றி!
கருனாவின் வாரிசைவிட வேறு எவருடைய வாரிசும் அரசியலில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்!

said...

சத்தியா,

சொல்லவே இல்லை நீங்கதானா இந்த வாரம் நட்சத்திரம்.... வாழ்த்துக்கள்.

முதல் டீயே சூடா போட்டு இருக்கீங்க...

ஸ்டாலின் மீது கொஞ்சம் பரிவோடு பேசி இருக்கிறீர்கள். சவால்களை எதிர்கொள்கிற திறன் அவருக்கு இருக்கிறதா என்பது கேள்விக்குறியே. மேலும் அவரது அரசியல் முடிவுகளிலும் முதிர்ச்சியையோ, சாதுர்யத்தையோ எதிர்பார்க்க முடியாது. மிகச் சிறந்த எடுத்துகாட்டு 2001 அவர் மேற்பார்வையில் அமைக்கப்பட்ட கூட்டணி. தன்னைத் துதிபாடுபவர்களை ரசிக்கிறாரே ஒழிய எதார்த்தத்தை உணர்ந்ததாக தெரியவில்லை. அதே போல் ஒருவருக்கு ஒருபதவி என ஜெ நினைத்தபோது அவர் துணிந்து சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து மேயராக தொடர்ந்திருக்க வேண்டும். மாநில தலைநகரில் முதல்வருக்கு போட்டியாக அவர் அப்பதவியில் நீடித்திருக்க வேண்டும். அந்த துணிவு அவருக்கு இல்லை.

தன்னால் தி.மு.க வை கைப்பற்ற முடியாது என்பது வை.கோ ஏற்கனவே உணர்ந்த ஒன்று. அதைப் பற்றி அவரும் கவலைப்படவில்லை. தொண்டர்களை கட்டிப்போடும் பேச்சுத்திறமை வை.கோவிற்கு உண்டு, ஸ்டாலினுக்கு அது கிடையாது. கலைஞருக்கு பிறகான சூழலில் இது முக்கியப்பங்காற்றும். தன்னால் கொண்டுவரப்பட்ட நிர்வாகிகள் மட்டும் ஸ்டாலினுக்கு அரசியல் அரங்கில் முழுத்துணையாக இருந்துவிட முடியாது..

இந்தத் தேர்தல் முடிவிற்கு பின் வை.கோ, ஸ்டாலின் இருவரின் இருப்புகள் குறித்து ஒரு தெளிவான முடிவுகள் கிடைக்கும். பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.

said...

//ஸ்டாலின் மீது கொஞ்சம் பரிவோடு பேசி இருக்கிறீர்கள். //

இந்த இடத்தில் இது :-))))))) விட்டு போயிடுச்சு. அதையும் சேர்த்தே வாசியுங்கள்:-)))))))))

said...

பொட்டீக்கடை கலக்குங்க போங்க வாழ்த்துக்கள்.

Anonymous said...

//தமிழ்நாட்டை ஆளும் அளவிற்கு ஸ்டாலினுக்கு தகுதியுள்ளதா என்று கேள்வியெழுப்பவர்கள்//

எம். ஜி. ஆருக்கு “சின்னவீடு“ என்ற ஒரு தகுதியை மட்டும் வைத்து ஆட்சியை கைப்பற்றிய போது செயலலிதாவின் வாரிசு உரிமை பற்றி பேசாதவர்கள் இப்போது மட்டும் போசுகிறார்கள்.

ஆட்சி செய்ய “சின்னவீடு“ தகுதி போதுமா? என்ற கேள்வியை யாரும் கேட்டதாக தெரியவில்லை.

said...

பொட்டிக்கடை,

நட்சத்திர வாரம் சிறப்பாய் அமைய வாழ்த்துக்கள்.

said...

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி, முத்துக்குமரன்.

"இந்தத் தேர்தல் முடிவிற்கு பின் வை.கோ, ஸ்டாலின் இருவரின் இருப்புகள் குறித்து ஒரு தெளிவான முடிவுகள் கிடைக்கும். பார்ப்போம் என்ன நடக்கிறது என்று."

பார்க்கலாம்...:-)

"அதே போல் ஒருவருக்கு ஒருபதவி என ஜெ நினைத்தபோது அவர் துணிந்து சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து மேயராக தொடர்ந்திருக்க வேண்டும்."

ஸ்டாலின் மாமன்ற தந்தையாக இருந்த பொழுது பல முட்டுக்கட்டைகள் போடப்பட்டன. உதாரணத்திற்கு மாமன்றத் தலைவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது போன்றவை. இதனால் அங்கு ஒரு மைனாரிட்டியாக மாமன்றத்தை நடத்திச் செல்வது என்பது அடிதடியிலேயே முடிந்திருக்கும். ஆனால் எதிர்கட்சியின் அங்கத்தினனாக சட்டமன்றத்தில் அமர்ந்திருப்பது, எதிர்காலத்திற்கான ஒரு வெள்ளோட்டமே. மற்றபடி 2001 தேர்தலில் அவர் தவறான கூட்டணிக்கு வழி செஇதது அவரது முதிர்ச்சியின்மையே...அதன் மூலம் அவர் அரசியல் பாடம் கற்றுக்கொண்டிருக்கலாம்?!

"தொண்டர்களை கட்டிப்போடும் பேச்சுத்திறமை வை.கோவிற்கு உண்டு, ஸ்டாலினுக்கு அது கிடையாது."

"வெறும்" பேச்சுத் திறமையால் தொண்டர்களை வழி நடத்தி செல்ல இயலுமா?

"தன்னால் கொண்டுவரப்பட்ட நிர்வாகிகள் மட்டும் ஸ்டாலினுக்கு அரசியல் அரங்கில் முழுத்துணையாக இருந்துவிட முடியாது..."

ஸ்டாலினால் கொண்டுவரப்பட்ட (நிர்வாகிளால் கொண்டுவரப்பட்ட) தொண்டர்கள் மூலமே எதிர்கால திமுக இயங்கும் என்பது என் எண்ணம்!

said...

மோகன்தாஸ் மற்றும் ஸ்ருசல்,
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி!

said...

தமிழன்,
அது சின்ன வீடில்ல, கொ ப செ!:-)
கருத்திற்கு நன்றி

Anonymous said...

//மறைந்த காங்கிரஸ் தலைவர் இராஜீவ் இந்தியாவின் பிரதமராக இருந்த பொழுது அவரை மாநிலங்களவையில் பெயரிட்டு அழைத்த வீர மனிதர். //

ஆமா.......!

//தமிழ்நாட்டை ஆளும் அளவிற்கு ஸ்டாலினுக்கு தகுதியுள்ளதா என்று கேள்வியெழுப்பவர்கள், 1991 ம் ஆண்டு ஜெயலலிதாவின் கையில் தமிழ் மக்களின் தலைவிதியை ஒப்படைத்த பொழுது கேட்டார்களா என்றால் மௌனம் ஒன்றே பதிலாக வரும். அன்றைய ஜெயலலிதாவை இன்றைய ஸ்டாலினோடு ஒப்பிட்டால் ஸ்டாலின் பல நூறு மடங்கு சிறப்பாக செயலாற்றுவார் என்பதில் ஐயமே இல்லை.//

இதற்கு அவர் மேயாரான பின்னுள்ள சென்னையே சான்று., என்ன செய்ததையெல்லாம்., பட்டியல் போட்டு மக்களுக்கு நியாபகப் படுத்த ஆளில்ல., சன் டி,வியும் இதெல்லாம் விட்டுபுட்டு., விட்டுட்டு போனவங்க வீருநடைய (உள்ளருந்து வர்றப்ப) காட்டுவாங்க. கட்சியில் உள்ள ஆட்களை தாயுள்ளத்தோடு அரவணைக்கும் ஆற்றல் ஒன்றுமட்டும் இன்னும் கொஞ்சமிருந்தால்.... இருந்தால்...?., மற்றவைகளை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்!!. 'பேச்செல்லாம்' இப்ப கதைக்கு ஆகாதுதான்., உட்கார்ந்து கேட்க யாருக்கு நேரமிருக்கு?.

Anonymous said...

//ராஜீவ் காந்தியிடம் நாடே ஒப்படைக்கப்பட்டபோது கேட்டார்களா?; இல்லை, இந்திரா காந்தியைப் பற்றி கேள்வி எழுந்ததா? ( நாளை ராகுல் காந்திக்குக் கேள்வி வருமா?)....... //

கேட்க மாட்டாங்களே?.... மாநிலத்துலதான் கேள்வி., கேப்பமாவு எல்லாம். இங்க கூட நாளைக்கு அம்மா யரையாவது கட்சியக் காக்க கையக்காட்டினா யாரும் வாய்திறக்க மாட்டாங்க., குறிப்பா பத்திரிக்கைகள்.... தினமும் மலரும் மலர்கள்... இப்பப் பாருங்க ஒரு ரூபா கடுப்புல என்னன்னமோ பினாத்துக... :)).

said...

பொட்டிக்கடை!

பிடியுங்க என் பாராட்டுக்களை :)

கோபால்சாமியார் மீது நம் நண்பர்கள் சிலர் அதீத பாசத்தினால - ஸ்டாலினை விட பெரிய தலைவர் போல சித்தரிக்க முயல்வது தேவையற்றது. மூன்று முறை கலைஞர் ராஜ்யசபாவுக்கு அனுப்பியபோது கிடைத்த நட்பு வட்டாரத்தை வைத்துத்தான் இன்னமும் கோபால்சாமியார் படம் காட்டி வருகிறார்.

அவர் 'கர்ஜனை' எல்லாம் "புரட்சித்தலைவி அம்மா" முன்பாக அழிந்து போச்சு!

நேருவே - மோதிலால் நேருவின் 'வாரிசாக'தான் 1910 களில் இந்தியயார்அசியல் உலகுக்கு அறிமுகமானார். அவர் மகள் இந்திரா, அவர் மகன் ராஜீவ், அவரின் இன்னொரு மகன் சஞ்சய், அவர் மனைவி மேனகா, இப்போ ராகுல் காந்தி - இவர்களெல்லாம் இந்த 'வாரிசு' பாட்டு பாடுகிற மேதாவிக கண்ணுக்குத் தெரிய மாட்டாக!

செயலலிதாவும் 'உடன்கட்டை' புராணமும் - இந்த அறிவுசீவிகளுக்கு மறந்திருக்கும் போல!

said...

இந்த வாரிசு அரசியல் பாட்டை சோ போன்ற சில அரசியல் பத்திரிக்கையாளர்களும்,தினமலர் போன்ற சில பத்திரிக்கைகளும் தான் அதிகமாக கிளப்பி விடுவது.ஆனால் இவர்கள் எல்லாம் நேரு குடும்பத்தை பற்றி வாயே திறக்கமாட்டார்கள் என்பது தான் உண்மை.

நன்றாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.

Anonymous said...

ஸ்டாலின் அதிகம் பேசாதவர். ஆனால் திறமையானவர். அவர் கட்டிய மேம்பாலங்களால்தான் இன்று சென்னை ட்ராபிக் சுலபமாகி இருக்கிறது. இன்னும் மூன்று கட்ட எண்ணியிருந்தார். அதற்குள் அம்மா விளையாடி விட்டார்.

Anonymous said...

டீ,

மிகச்சிறப்பான கட்டுரை என்பேன். ஜெயலலிதா என்ன அரசியலில் மாஸ்டர் பட்டம் பெற்றவரா? சொல்லப் போனால் ஜெயலலிதாவைவிட அரசியல் அனுபவம் நிறைய உள்ளவர் ஸ்டாலின். மிசா போராட்டத்தின்போது சிறை சென்று உள்ளிருந்தவர். சற்றேறக்குறைய 30 வருடங்களுக்குமேல் அரசியலில் இருக்கிறார். சிறந்த மேயராக, சிறந்த சட்டமன்ற உறுப்பினராக இருந்து இருக்கிறார். ஜெவுடன் ஒப்பிடும்போது இவரால் கொள்ளையடிக்க முடியவில்லை என்பது மட்டுமே உண்மை. இந்த ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் முதல்வராக வரட்டும், ஆனால் நல்லாட்சி ஒன்றையே நானும் விரும்புகிறேன்

said...

டீ நல்லா இருந்ததுங்க!
சுக்கு கலந்தீங்களோ! கொஞ்சம் காரமா இருக்கு!

இதுவரை நான் பார்த்திராத கோணத்தில் வாதம் வைத்துள்ளீர்கள்.
சபாஷ்! சரியான போட்"டீ"

(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)

said...

//மிசா போராட்டத்தின்போது சிறை சென்று உள்ளிருந்தவர். சற்றேறக்குறைய 30 வருடங்களுக்குமேல் அரசியலில் இருக்கிறார். //

ம்ம்ம்ம்.... இன்னமும் இருக்கிறார் இளைஞரணி தலைவராக... திமுகவில் இளைஞர்களே இல்லை போல..

said...

கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட அப்டிபோடு அக்கா, நியோ,சாமிநாதன்,அனானிமஸ்,நாமக்கல் சிபி,செல்வன்,உதய்குமார்,ப்ரதிபா ஆகியோருக்கு நன்றிகள்.

செல்வன்,
உங்களுடைய ஒரு பின்னூட்டம் பிரசுரிக்கத் தகுதியற்றது எனறு நான் கருதியதால் அதை வெளியிடவில்லை. மன்னிக்கவும்!

Anonymous said...

pootikadi

kalikipootinggea........

nalla comaparison....

ithuvari naan neriya blogs padichiruken..but ithukku mattum thann pathil podnum pool ullathu..

yarum think pannaatha koonathil aaryinthu ullergal....

stalin is better than vaiko and jaya

paul

said...

சத்யா, நல்ல ஒப்பீடு. இதில் தயாநிதி மாறனையும் சேர்த்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.

கருணாநிதிக்கு பிறகான காலகட்டத்தில் ஸ்டாலினுக்கு எதிராக வரப்போவது வெளியில் இருக்கும் வைகோ இல்லை. உள்ளே இருக்கும் தயாநிதி தான். அவர் முரசொலி மாறனைப் போல மத்தியிலேயே முடங்கிவிடும் எண்ணத்தில் இல்லை என்று எனக்கு தோன்றுகிறது. தொடக்கத்தில் ஸ்டாலின் கைக்கு திமுக சென்றாலும் அடுத்த சிறிது காலத்திலேயே தயாநிதி அவரிடம் இருந்து தட்டிப் பறிப்பார் என்று தோன்றுகிறது.