கிழக்கே உப்பு வாடையை வாங்கி வரும் கடற்காற்றை சுவாசமாகக் கொண்ட கடலூரையும், மேற்கே முக்கனிகளில் ஒன்றான பலாவை வாசமாகக் கொண்ட பண்ருட்டியையும், வடக்கே பெரும்பாலான் நாட்களில் வற்றிப் போய் கடலூர் மாவட்ட்த்தின் கட்டுமான பணிகளுக்கு தன்னையே இழந்துக் கொண்டிருக்கும் தென்பெண்ணையையும், தெற்கே தென்பெண்ணையின் சகோதரியாக நிற்கதியாய் வெறித்து பார்க்கும் வற்றிய தேகத்தைக் கொண்ட கெடிலம் ஆற்றையும் அதைச் சார்ந்த முந்திரிக்காடுகள் நிறைந்த செம்மண் குன்றுகளைகளையும் எல்லையாகக் கொண்டவள் தான் நெல்லிகுப்பம்.
ஒரு காலத்தில் நீர்வளமிக்கதாகவும், கரும்பு சோலைகள் நிறைந்த செழிப்பான பிரதேசமகவும் இருந்ததால் கடலூர் பழைய நகரில் வந்திறங்கிய பரங்கியரின "கிழக்கிந்திய கம்பெனியினர்" ஈ ஐ டி பாரி சர்க்கரைத் தொழிற்சாலையை நெல்லிக்குப்பத்தில் நிறுவி அவர்களுடைய வரலாற்றிற்காக நெல்லிகுப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டனர்.:-)
நெல்லிக்குப்பம் வாழ் மக்களுக்கு விவசாயாமும், அது சார்ந்த தொழிலுமே பிரதானமாக இருந்தது. ஓரளவு படித்தவர்கள் கரும்பு தொழிற்சாலையிலும் வேலைப் பார்த்துள்ளனர்.
சமூக ரீதியாக வன்னியர்கள் மற்றும் ஆதி தமிழர்கள் ஏறக்குறைய சரிசமமான விகிதத்திலும் (மொத்தமாக 65%) ஏனையோர் (இஸ்லாமியர், கிறித்துவர், இன்ன பிற சமூகத்தினர்) மீதி 35% பூர்த்தி செய்வார்கள்.
நெல்லிக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட எல்லையில் ஆதி தமிழர்கள் அதிகமாகவும், அதற்கு அடுத்த படியாக வன்னியர்களும், இஸ்லாமிய சமூகத்தினரும் வருவார்கள். ஆனால் தேர்தல் தொகுதிக்குட்பட்ட பகுதிகளான நெல்லிக்குப்பத்தை சுற்றியுள்ள ஊராட்சிகளிலும், பேரூராட்சிகளிலும் வன்னியர்கள் அதிகமாகவும், ஆதி தமிழர்கள் சிறுபான்மையினராகவும் இருக்கின்றனர்.
இங்கு இதுவரை திமுகவும், அதிமுகவும் மாறி மாறி வெற்றி பெற்றிருந்தாலும் சர்க்கரை ஆலை தொழிற்சங்கத்தின் கம்யூனிஸ தோழர்களும் இருக்கிறார்கள். ஆனால் இவர்களின் தற்போதைய நிலை பரிதாபமானதே. திரு. கோவிந்தராஜன் அவர்கள் தீவிர அரசியலிலும் தொழிற்சங்க அரசியலிலும் குரலற்றிருந்த நேரத்தில் அமரர்திரு. ஜி. ஆர். இராமலிங்கம் அவர்கள் தொழிற்சங்கத்தின் தலைவரானார். மேலும் கோவிந்தராஜன் ஒரு மேல்தட்டு அரசியல்வாதியாகவே எனக்கு காட்சியளித்தார். அவரை சாமானியர்கள் அவ்வளவு எளிதாக அணுக இயலாது. ஆனால் திரு.ஜி.ஆர் அவர்களை எவரும் எளிதாக அணுக முடியும், அனைத்து தரப்பு மக்களோடும் அன்பாகவும், கனிவாகவும் பழகக் கூடியவர். கட்சி வேறுபாடின்றி அனைவருக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்தவர். மேலும் அவர் இருந்திருந்தால் காங்கிரஸ் கட்சி வடமாவட்டங்களில் ஓரளவு செல்வாகாக இருந்திருக்கும்.
தற்போதைய சூழ்நிலையில் கம்யூனிஸமும், காங்கிரசும் குரலற்று போயிருக்கும் நிலையிலும், சமூகம் சார்ந்த ஓட்டுக்களே சமீபத்திய தேர்தல் முடிவுகளை நிர்ணயித்திருக்கும் நெல்லிக்குப்பத்தில் எந்த அணி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது என்று என் சிற்றறிவுக்கெட்டிய ஒரு அலசல்.
இதுவரை (1989 பொதுத் தேர்தல் தவிர்த்து) 50% அதிகமான ஓட்டுகளைப் பெற்ற கட்சியே வெற்றி வாகை சூடியுள்ளது. மேலும் 1991ல் பாமக உதயமானதால், அந்தத் தேர்தலில் இருந்து 2001 வரையிலான பொதுத்தேர்தல்களை மட்டுமே கணக்கில் எடுக்கப்பட்டுள்ளது.1996,1999(இடைத்தேர்தல்), 2001 தேர்தல்களில் திமுக, அதிமுகவினடையே நேரடிப் போட்டியும், 1991 அதிமுக(ஜெயா அணியும்) கம்யூனிஸ்ட்(திமுக கூட்டணி) இடையேயும் போட்டி இருந்தது.
1991 - தேர்தல் முடிவுகள்:

மும்முனை போட்டி (அதிமுக (ஜெ. அனி)& காங். - கம்யூனிஸ்ட்(திமுக) - பாமக)
ஒவ்வொரு கட்சியினரும் பெற்ற ஓட்டு விகிதங்கள்.
பதிவான ஓட்டுக்கள் - 69.71%
முடிவை நிர்ணயம் செய்தவை - இராஜீவ் படுகொலை
சி.தாமோதரன்(அதிமுக - ஜெ) - 59.61%
சி.கோவிந்தராஜன் (கம்யூ) - 23.13%
அ.தேவநாதன் (பாமக) - 16.22%
இந்த தேர்தலில் இருந்து சமூக ரீதியான ஓட்டுக்கள் நெல்லிக்குப்பம் சட்டமன்றத்தில் வெற்றியை நிர்ணயம் செய்யும் அளவிற்கு செல்வாக்கு பெற்றது. இதில் குறிப்பிடதக்க அளவில் பாமக தனித்து நின்று 16.22% ஓட்டுக்களை கள்ள ஓட்டு போடாமலும், பாமகவின் வேட்பாளர்கள் தத்தம் சொந்த பணத்தையே செலவிட்டு பெற்றவை. மேலும் பெரும்பாலான வன்னிய சமூகத்தினர் திமுகவின் ஓட்டு வங்கியாகவும், பெரும்பாலான ஆதி தமிழர்கள் அதிமுகவின் ஓட்டு வங்கியாகவே இருந்தனர். இதை அறிந்த கருனாநிதி 1991 தேர்தலுக்கு பிறகு பாமக சார்பு நிலை எடுத்தது அனைவரும் அறிந்ததே!
1996 - தேர்தல் முடிவுகள்:
ஐம்முனை போட்டி (அதிமுக & காங். - திமுக & தமாகா - பாமக - மதிமுக - பிஜேபி)
ஒவ்வொரு கட்சியினரும் பெற்ற ஓட்டு விகிதங்கள்.
பதிவான ஓட்டுக்கள் - 72.68%
முடிவை நிர்ணயம் செய்தவை - ஜெயலலிதா எதிர்ப்பலை
அ.மணி (திமுக) - 53.84%
சி.தாமோதரன்(அதிமுக) - 30.27%
அ.தேவநாதன் (பாமக) - 6.67%
வெ.கிருட்டிணமூர்த்தி(மதிமுக) - 5.41%
ம.செல்வக்குமார்(பிஜேபி) - 0.55%
கடந்த தேர்தலில் அடைந்த தோல்வியினாலும், தொண்டர்களுக்குத் தேவையான வைட்டமின் "ப"வும் இல்லாததினாலும் இங்கு பாமகவுக்கு மிகப் பெரிய சரிவு ஏற்பட்டது. அது மட்டுமல்லாமல் திரு. நெல்லிக்குப்பம் கிருட்டினமூர்த்தி அவர்கள் திமுகவிலும், பாமகவிலும் நிற்க இடம் கேட்டு கிடைக்காததால் நிற்பதற்கு ஆளே இல்லமல் இருந்த மதிமுகவில் நின்றதன் மூலம், சுற்றுப்புற கிராமங்களில் இருந்த தன் சொந்த செல்வாக்கினால் பாமகவின் ஓட்டுகளைப் பிரித்தார். அவரது சொந்த செல்வாக்கு என்று நான் கூறுவதற்கு காரணம் நான் அவ்வூரின் அரசியலை உற்று நோக்கியவன் என்பதினாலும், அடுத்து நடந்த தேர்தலின் முடிவுகள் அதைத் தெளிவாகப் பிரதிபலித்ததுமே!
1999 இடைத்தேர்தல்:
முடிவை நிர்ணயம் செய்தவை - திமுகவின் ஆளுங்கட்சி ஆட்சி & வைட்டமின் "ப"
அதுவரை நெல்லிக்குப்பத்தின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திரு.மணி அவர்கள் காலமடைந்ததல் நடைபெற்ற இடைத்தேர்தலில் விரிவுரையாளர். திரு. சன்முகம் அவர்கள் வெற்றி பெற்றார். இவர் பழகுவதற்கு எளிமையான மனிதர், அனைத்து தரப்பினரையும் உரிமையாக அணுகுபவர். நான் உள்ளூரில் மதிக்கும் மனிதர்களில் இவரும் ஒருவர்.
2001 - தேர்தல் முடிவுகள்

மும்முனை போட்டி (அதிமுக & பாமக - திமுக & வி சி - மதிமுக)
ஒவ்வொரு கட்சியினரும் பெற்ற ஓட்டு விகிதங்கள்.
பதிவான ஓட்டுக்கள் - 68.95%
முடிவை நிர்ணயம் செய்தவை - பாமக மட்டுமே
எம்.சி.சம்பத் (அதிமுக) - 50.93%
வி.சி.சன்முகம்(திமுக) - 44.26%
சி.இராதாக்கிருட்டினன்(மதிமுக) - 2.45%
இந்த தேர்தலில் எந்தவொரு எதிர்ப்பலையும் இல்லாத நிலையில் சுலபமாக வெற்றி பெற்று விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த விரிவுரையாளருக்கு தோல்வியைக் கொடுத்தது பாமகவின் கடைசி நேர அணி மாற்றமே. மேலும் இந்தத் தேர்தல் பாமகவுக்கும், விடுதலை சிறுத்தைகளுக்கிடையே நடந்த நேரடி மோதலாகக் கருதப்படுகிறது.மேலும் இத்தேர்தலில் மதிமுக பெற்ற வாக்குகள் வெரும் 2.45% இது கடந்த தேர்தலை விட 55% குறைவு. ஆக பாமகவின் இடப்பொருத்தம் மட்டுமே இத்தேர்தலின் வெற்றியை நிர்ணயித்தது என்பது என்னுடைய கருத்து.
இன்றைய நிலை:
இன்றைய சூழலில் நெல்லிக்குப்பத்தில் திமுக, மதிமுகவினரிடையே தான் நேரடி போட்டி நடைபெறுவதாயிருக்கிறது. மேலும் நெல்லிக்குப்பத்தில் திமுக, அதிமுக, பாமக, விசி, காங்கிரஸுக்கு இருக்கும் அளவிற்கு கூட 10% கூட வேலை செய்யும் அளவிற்கு தொண்டர்கள் இருக்கிறார்களா என்றால் அது சந்தேகத்துக்குரிய கேள்வி தான். இது வரை அதிமுக கூட்டணி கட்சியினருக்கு கொடுக்காத தொகுதி. அதிமுகவில் சம்பத், சொரப்பூர் இராசேந்திரன் மற்றும் முன்னாள் அமைச்சர் தாமோதரன் ஆகியோர் இடம் கேட்டிருந்த நிலையில் மதிமுகவிற்கு கொடுத்திருப்பது அதிமுக தொண்டர்களைக் கண்டிப்பாக சோர்வடையச் செய்யும். ஆக என்னுடைய் அனுமானத்தின் படி அதிமுக கூட்டணியில் மதிமுகவிற்கு இத்தொகுதியைக் கொடுத்திருப்பது...கையில்லாத ஜாக்கியிடம் சவாரிக் குதிரையை கொடுத்தது போன்றது!
நெல்லிக்குப்பம் தேர்தல் முடிவு: 2006
திமுக - அதிமுக
வி.சி. சன்முகம் vs ?(யாராக இருந்தாலும்)
வெற்றி பெறப் போவது - வி.சி.சன்முகம் (திமுக)
மேலதிகத் தகவட்கு
7 comments:
நெல்லிக்குப்பம் தொகுதியின் நாடித்துடிப்பை சரியாக கூறியுள்ளீர்... தொகுதியை மதிமுகவிற்கு கொடுத்துள்ளதால் வி.சி.எஸ் சின் வெற்றி கிட்டத்தட்ட முடிவு செய்த மாதிரி
//அதிமுக கூட்டணியில் மதிமுகவிற்கு இத்தொகுதியைக் கொடுத்திருப்பது...கையில்லாத ஜாக்கியிடம் சவாரிக் குதிரையை கொடுத்தது போன்றது!
//
சரியாக கூறியுள்ளீர், ஆச்சரியமான ஆச்சரியம் நெல்லிக்குப்பம் தொகுதிக்கு சம்பத்,தாமோதரன்,சொரத்தூர் ராஜேந்திரன் என பல தலைகள் போட்டியிட இருக்கும் போது நெல்லிக்குப்பத்தை மதிமுகவிடம் கொடுத்துவிட்டு அதிமுக வின் பலவீனமான தொகுதியான கடலூரில் போட்டியிடுகின்றது(மதிமுக பத்மநாபன் போட்டியிட்டிருந்தால் கடலூர் தொகுதி கடும் போட்டியிலிருக்கும்- பழிதீர்ப்பாரா பத்மநாபன் என்று ஒரு பதிவெழுதி வைத்திருந்தேன், இனி பயன்படாது) விளைவு திமுக கூட்டணிக்கு எளிதாக விசிஎஸ், புகழேந்தி(கடலூர்) என இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள்...
குழலி,
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!
தேர்தலுக்கு முன்னரே மதிமுகவின் அழிவு தொடங்கி விட்டது என்றே நான் நினைக்கிறேன்.
நெல்லிக்குப்பம், கடலூராவது பரவாயில்லை...குறிஞ்சிப்பாடியையும் மதிமுகவிற்கு தாரை வார்த்தது எதன் அடிப்படையில் என்று தெரியவில்லை.
2001 தேர்தலில் திமுகவில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்!
//...குறிஞ்சிப்பாடியையும் மதிமுகவிற்கு தாரை வார்த்தது எதன் அடிப்படையில் என்று தெரியவில்லை.
//
ம்...குறிஞ்சிப்பாடியிலும் மதிமுகவுக்கு தோல்விதானென நினைக்கின்றேன், எம்.ஆர்.கே.பியின் கோட்டையில் இந்த முறையும் ஓட்டை விழாது மதிமுக போட்டியிடுவதால் எம்.ஆர்.கே.பியின் வெற்றி எளிதாகவே இருக்குமென நினைக்கின்றேன்....
மதிமுக மாவட்டசெயலாளர் பத்மனாபன் நெல்லிக்குப்பம் அல்லது குறிஞ்சிப்பாடியில் போட்டி இடுவார் என நினைக்கின்றேன், கடலூரில் தனிப்பட்ட செல்வாக்குள்ள பத்மனாபன் மதிமுகவில் போட்டியிட்டுருந்தால் கடும் போட்டியிருந்திருக்கும், நெல்லிக்குப்பம்,குறிஞ்சிப்பாடியென்றால் சொல்வதற்கு ஒன்றுமில்லை
ஜெயலலிதா விவரமாக தோல்வி தொகுதிகளை மதிமுகவிற்கு தாரை வார்த்துள்ளார்... விசி பரவாயில்லை தொகுதிகளை விவரமாகவே வாங்கியுள்ளார், கடலூர் மாவட்ட தொகுதிகள் அலசல் விரைவில் என் பதிவில் வரும்
//கடலூர் மாவட்ட்த்தின் கட்டுமான பணிகளுக்கு தன்னையே இழந்துக் கொண்டிருக்கும் தென்பெண்ணையையும்//
ஹா..ஹா!!
உங்க ஊர் தெர்ர்தல் முடிவு இப்பவே தெரிஞ்சு போச்சு!!.
நல்ல அலசல்!
வைகோவுக்கு இது தேவைதான்!
.v.c.shanmugam is not dmk candidate in nellikuppam ,it has given to mr. sababathy rajendren but any how dmk is going to win this election in this town no dought in it.savadeyan has given a clear report .hats off.
ஐயா தொழிலதிபரே...
உமக்கு குசும்பு ஓவர் ப்பா...உன்னைத் தவிர என்னை வேறு எவனும் "சாவடியான்"னு கூப்பிட மாட்டான். ஏழைகளின் உறைவிடம் சாவடி...சாவடி...சாவடி...:-))
சபாவின் வெற்றி தான் அனைவரும் அறிந்ததாயிற்றே!
கன்னுக்குட்டி "சபா" அங்கிளோடு பிரச்சாரத்திற்கு வந்தானா?
தேதி குறித்தாகிவிட்டதா? அடிக்கடி வந்து போகவும்...
Post a Comment