3/24/2006

சுப்புனியும் அவனது மட(த்து) அரசியலும்...

புட்டபர்த்தி பரட்டையன் தொடங்கி சங்கராச்சாரி வரை அனைத்து வக்கிர குணம் படைத்தவனுக்கும் ஊரை ஏமாற்ற கிடைத்தது ஆன்மீகம் என்ற போர்வை. ஆன்மீகத்தின் பெயரால் இவர்கள் செய்த அட்டூழியங்கள் தான் எத்தனை...எத்தனை...குடிமக்கள் தொடங்கி நாட்டின் முதல்குடிமகன் வரை இவர்களது காலடியில்...இத்தகைய காலகட்டத்தில் இவர்களது களியாட்டங்க்களை மக்களுக்கு அவ்வப்பொழுது நினைவூட்ட வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமையாயிருக்கிறது.

இங்கே பழ.நெடுமாறன் ஐயா அவர்களின்>"மக்களிடம் மன்னிப்பு கேட்கட்டும்" என்ற தலைப்பில் வெளியான கட்டுரையை மறுபதிவு செய்கிறேன். இக்கட்டுரை ஐயாவை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் "தென்செய்தி"யிலும் தட்ஸ்தமிழ் இணையதளத்திலும் ஏற்கனவே வெளிவந்துள்ளது.

"ஆட்சியில் உயர் பதவி வகிக்கும் அரசியல் தலைவர்கள் மத உணர்வுகளைத் தங்களுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். தாம் வகிக்கும் பதவிப் பொறுப்புகளுக்குரிய மதிப்பு, பெருமை ஆகியனவற்றுக்கு இழுக்குத் தேடித் தராமல் நடந்து கொள்ள வேண்டும்.

ஆனால் நமது நாட்டில் மன்னர்கள் ஆண்ட காலத்தில் இராசகுருக்களின் தாள் பணிந்து கிடப்பதையே பெறற்கரிய பேறாக மன்னர்கள் கருதினார்கள். அந்தப் பாரம்பரியம் இன்றும் தொடர்கிறது.

பிரதமராக இந்திராகாந்தி இருந்த போது அவருக்கு இராசகுருவாகவும் ஆலோசகராகவும் திரேந்திர பிரம்மச்சாரி விளங்கினார். ஜெயப்பிரகாஷ் நாராயண், ஜெகஜீவன்ராம் போன்றவர்கள் அவருடைய சீடர்கள். இதைப் பயன்படுத்தி அரசாங்கத்தையே ஆட்டிப் படைக்கும் அளவுக்கு அவர் வளர்ந்தார். ஜனதாக்கட்சி ஆட்சியில் பல குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்

பிரதமராக பி.வி. நரசிம்மராவ் இருந்தபோது சந்திராசாமி இராசகுருவாக விளங்கினார். பிரதமர் சந்திரசேகருக்கும் அவரே இராசகுரு. இந்த நெருக்கத்தைப் பயன்படுத்திப் பல மோசடிகளைச் செய்ததாக அவர் மீது பிற்காலத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன.

குடியரசுத்தலைவராக ஆர். வெங்கட்ராமன், தலைமைத் தேர்தல் ஆணையாளராக டி.என். சேஷன் ஆகியோர் இருந்த போது காஞ்சி சங்கராச்சாரிக்கு இராசகுரு அந்தஸ்தை அளித்தனர். இதன் விளைவாக பிரதமர் ¬முதல் மாநில முதல்வர்கள் வரை அனைவரும் காஞ்சி நோக்கிப் பயணமாகி இராசகுருவின் தாள் பணிந்தனர்.

காஞ்சி சங்கராச்சாரி கைதாவதற்குச் சில நாட்களுக்கு முன்பு குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் சங்கர மடம் சென்று நின்று பணியும் காட்சி பத்திரிகைகளில் வெளிவந்தது. ஜெயேந்திரர் அமர்ந்திருக்க நாட்டின் குடியரசுத்தலைவர் நிற்கும் காட்சி அனைவரையும் வேதனைப்படுத்தியது.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்குச் சரியாசனம் வழங்கி அமரவைத்த ஜெயேந்திரர் மராட்டிய முதல்வராகயிருந்த ஷிண்டேயை தரையில் உட்கார வைத்தார். காரணம் முன்னவர் தன் சாதி. பின்னவர் தாழ்த்தப்பட்ட சாதி.
குடியரசுத்தலைவரிலிருந்து மாநில முதல்வர்கள் வரை பெரும் பதவிகளில் இருப்போர் தமது பொறுப்பிற்குரிய பெருமையைக் காற்றில் பறக்கவிட்டதேன்? இவர்கள் தனிநபர்களாக இருந்து யார் காலில் வேண்டுமானாலும் விழுந்து தொலைக்கட்டும், தன்மானமற்றவர்கள் என்பதை நிலைநாட்டிக் கொள்ளட்டும்.

ஆனால் பெரும்பதவி வகித்துக்கொண்டு அப்பதவிகளுக்குரிய மரியாதையைச் சீரழிக்கிறார்களே என்பதுதான் நமக்குத் தலைக்குனிவை ஏற்படுத்துகிறது. பிறநாடுகளின் தலைவர்கள் இப்படியா நடந்துகொள்கிறார்கள்?

அமெரிக்காவின் குடியரசுத்தலைவராக கென்னடி பதவிவகித்த போது ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இத்தாலிக்கும், வாட்டிகனுக்கும் சென்று போப்பாண்டவரைச் சந்திப்பதாகத் திட்டமிடப்பட்டது. இதில் ஒரு சிக்கலை அதிகாரிகள் கென்னடியிடம் சுட்டிக் காட்டினார்கள்.கென்னடி உலக வல்லரசான அமெரிக்காவின் அரசுத்தலைவர். ஆனால் அவர் கத்தோலிக்கக் கிறிஸ்துவர். எனவே போப்பாண்டவரைச் சந்திக்கும் போது அவர் முன் மண்டியிட்டு வணங்க வேண்டும். ஏனெனில் கத்தோலிக்க மதத்தவரின் மிகப்பெரிய குரு அவர். அமெரிக்கக் குடியரசுத்தலைவர் பதவியின் பெருமையைக் காப்பதா? அல்லது தனது மத மரபினைக் காப்பதா? என்ற கேள்வி எழுந்த போது இத்தாலியப் பயணத்தையே ரத்து செய்தார் கென்னடி.

திரேந்திர பிரம்மச்சாரி முதல் ஜெயேந்திரர் வரை இராசகுருக்களாக விளங்கியவர்கள் குற்றவாளிக் கூண்டுகளில் நிறுத்தப்பட்ட போது தேசம் அவமானப்பட்டிருக்கிறது. கொலை, களவு, சூது போன்ற கொடிய குற்றங்களைத் தயங்காமல் செய்யும் கபட வேடதாரிகளாகத்தான் இராசகுருக்கள் விளங்கி வந்திருக்கிறார்கள். இவர்களைத் தாங்களும் வணங்கி மற்றவர்களையும் வணங்கவைத்த அரசியல் தலைவர்கள்தான் மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டியவர்களாவார்கள்.
"

33 comments:

said...

கட்டுரையை இட்டமைக்கு நன்றி.

said...

சத்யா இந்த ஆச்சாரிகளின் போலி வேடம் பற்றி நிறைய எழுதலாம்...

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
said...

ஒரு முறை புட்டபர்த்தி மடத்தில் ஒரு கொலை நடந்த போது, இந்தியாவின் குடியரசுத்தலைவரே (ஷ. த. ஷர்மா) ஹெலிகாப்டரில் அங்கு அவசர விஜயம் மேற்கொண்டார்.

said...

////காஞ்சி சங்கராச்சாரி கைதாவதற்குச் சில நாட்களுக்கு முன்பு குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் சங்கர மடம் சென்று நின்று பணியும் காட்சி பத்திரிகைகளில் வெளிவந்தது. ஜெயேந்திரர் அமர்ந்திருக்க நாட்டின் குடியரசுத்தலைவர் நிற்கும் காட்சி அனைவரையும் வேதனைப்படுத்தியது.////

சத்யநாராயணன்,
ஒரு சின்னத் திருத்தம். தகவலைச் சரிபார்க்கவும். அப்துல்கலாம் சங்கரமடம் சென்றாய் நீங்கள் கூறியிருப்பது சரியா என்று உறுதிசெய்துகொள்ளவும். அதுபோல் நான் கேள்விப்படவே இல்லை. ஏதாவது ஒருஇடத்திலோ அல்லது ஒரு பொதுநிகழ்ச்சியிலோ தற்செயலாய் இருவரும் சந்தித்து அந்தப் புகைப்படம் நாளிதழ்களில் வந்திருக்கக்கூடும். உங்களின் தவறான தகவல்கள், கட்டுரையின் நம்பகத்தன்மை, அல்லது சொல்ல வந்த கருத்தினை நீர்த்துபோக வைத்துவிடக்கூடும் என்று தோன்றியதால் இதை மறுமொழிந்திருக்கிறேன்.

said...

இது பொட்' டீ' கடையின் கார வடையா ?
சும்மா நச்சினு இருக்கு
சம்மட்டி

Anonymous said...

சிறப்பான பதிவு
அடுத்து அப்படியே வாடிகன் சாமியார்கள் ஆண் குழந்தைகளை பாலுறவு பலாத்காரம் செய்வது பற்றியும், மதரஸாக்களில் பாலுறவு பலாத்காரம் நடப்பது பற்றியும் எழுதுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

Anonymous said...

சத்யா., கட்டுரையை வெளியிட்டதற்கு நன்றி.

Anonymous said...

எந்த ஒரு மனிதன் தன் நிலையில் இருந்து நழுவுகிறானோ அவனை மரியாதை கொடுத்து அழைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அனுராதா ரமணன் என்ற மூத்த பத்திரிக்கையாளர் தொலைக்காட்சியிலும் பத்திரிக்கையிலும் அழுது பேட்டி கொடுத்ததை படித்து இருக்கிறீர்களா? இளமை புதுமையான சொர்ணமால்யாவை எல்லாம் தொட்ட அந்த கைகள் கேவலம் கிழவி அனுராதாரமணனைத் தொட்டபோது மனிதாபிமானத்துடன் தாங்கள் உங்கள் ஜாதி ஜெயேந்திரனை எதிர்க்கேள்வி கேட்டிருக்க வேண்டாமோ?

இன்றைக்கு மட்டுமல்ல உலகம் உருவான நாளில் இருந்து எனக்குத் தெரிந்து எந்த ஒரு பிராமனனும் தன் வீட்டில் தாழ்த்தப்பட்டவனை விட்டதில்லை. தோட்டத்தில் வேலை செய்கிறான், பீயள்ளுகிறான் என்று நீங்களே சொல்கிறீர்கள். ஆமாம் தலித்துகள் உங்கள் வீட்டில் பீயள்ளா விட்டால் உங்கள் வீடு அவனின் வீட்டைவிட நாறும் என்பது உங்களுக்குத் தெரியுமா? தலித்துகள் தோட்ட வேலை செய்யும் அய்யர்களின் வீட்டை தாங்கள் எனக்கு கணக்கு காட்ட வேண்டாம். எந்த அய்யரின் வீட்டில் எந்த தலித்து எத்தனை மணிக்கு நுழைந்தார் என்பதை தகுந்த ஆதாரத்துடன் நிரூபியுங்கள். நீங்கள் சொல்வதனை நான் கேட்கிறேன்.

தலித்துகள் இன்று வரைக்கும் அய்யர் வீட்டில் நுழைய முடியவில்லை என்பதனை நான் உங்களுக்கு நிரூபிக்கிறேன். ஆனால் அதற்கு முன் உங்கள் முகவரி குடுங்கள். தலித்தோடு நான் உடனே என் செலவில் வருகிறேன்.

said...

மறுமொழிந்த அனைவருக்கும் நன்றிகள்!

முத்து,

இது பழ.நெடு. ஐயா அவர்களுடைய கட்டுரையின் பதிப்பேயாகும்.

//ஒரு சின்னத் திருத்தம். தகவலைச் சரிபார்க்கவும். அப்துல்கலாம் சங்கரமடம் சென்றாய் நீங்கள் கூறியிருப்பது சரியா என்று உறுதிசெய்துகொள்ளவும். அதுபோல் நான் கேள்விப்படவே இல்லை. ஏதாவது ஒருஇடத்திலோ அல்லது ஒரு பொதுநிகழ்ச்சியிலோ தற்செயலாய் இருவரும் சந்தித்து அந்தப் புகைப்படம் நாளிதழ்களில் வந்திருக்கக்கூடும்.//

தங்களுடைய ஆதரவிற்கு நன்றி. இது அனைவருக்கும் தெரிந்திருக்கக் கூடும் என்பதினால் புகைப்படத்தை வெளியிடும் ஆர்வமில்லை. ஜூனியர் விகடனில் வெளிவந்தது என்று நினைக்கிறேன்.

கலாமும், ஷின்டேவும் கீழே அமரவைக்கப்பட்ட பொழுது ஜெயலலிதாவுக்கு மட்டும் ஏன் நாற்காலி என்று பலரும் விமரிசனம் செய்த பொழுது, மருத்துவ ரீதியாக ஜெயலலிதாவினால் தரையில் நிலை கொள்ள இயலாது என்று "மட"ச் சாம்பிரானிகளால் வியாக்கானம் வைக்கப்பட்டது. இது அனைவருக்கும் தெரிந்ததே என்பதினால் ஆதாரம் தேவையற்றது என்று கருதுகிறேன்.

Anonymous said...

இந்துத்வா பற்றி திரு. பழ. நெடுமாறன் ஐயா புதிய நூல் ஒன்று எழுதியுள்ளார் எனக் கேள்விப்பட்டேன். இதைப்பற்றி மேல் விவரம் யாருக்காவது தெரியுமா?

நன்றி,
- பாண்டி

Anonymous said...

காவிக் காலிகளும் அவர்கள் காலடியில் கிடக்கும் தேசத்தின் தலமைகளும் நம் தேசத்தின் சாபங்கள் தான்.
ஆனால் அதை சொல்லுவதற்கு இந்த விடுதலைப் புலிகளின் இந்திய கைகூலிக்கு தகுதி இருப்பதாக நீங்கள் நம்பவேண்டாம்.

Anonymous said...

பொட்டீக்கடைக்கு!
நல்ல கட்டுரை; அதில் குறிப்பிட்ட குடியரசுத்தலைவர் பற்றிய சர்ச்சை வந்தணைந்ததும்,உண்மை. சங்கர மடம் ஓடும் ,செம்பொன்னும் ஒக்க நோக்குவதே இல்லை என்பதும் ,அதைவிட உண்மை. அடிப்பொடிகள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
நண்றி
யோகன்
பாரிஸ்

said...

பாண்டி,

நெடுமாறன் அய்யா அவர்களின் புதிய நூல் உருவாகாத இந்திய தேசியமும் உருவான இந்து பாசிசமும் 28.03.2006 சென்னையில் வெளியிடப்படுகிறது. மேலதிக விபரங்களுக்கு www.thenseide.com பாருங்கள்.

நன்றி

said...

இது போன்ற பதிவுகளுக்கு மறுமொழி இடுவதே ஒருவித அங்கீகாரத்தை அளித்துவிடும் என்று அஞ்சினாலும், கூட இருந்து பார்த்தது போல எழுதும் உம் போன்ற இன-வெறியாளர்களால்தான் இங்கே விஷ வித்துக்கள் விதைக்கப் பட்டு முன்னேறத் துடிக்கும் இளைய சமுதாயத்திற்கு தடைக்கற்களாய் அமைந்து போகின்றன என்பதே இன்றைய நிஜமான சோகம்!

நல்லவேளையாக, இதையும் தாண்டி பீடுநடை போட்டு வெல்லத் துள்ளும் இளைஞர்களுக்கு இன்னும் குறைவில்லாமல் இருப்பதே ஒரு மெல்லிய சந்தோஷக் கீற்று!

இதனாலெல்லாம் என்ன சாதித்தீர்கள் என்று நாளை நீங்களே உங்களைக் கேட்டுக்கொள்ளத்தான் போகிறீர்கள்!

said...

முத்துக்குமரன்,
இணைப்புக்கு நன்றி!

சாரா,
வருகைக்கு நன்றி!

எஸ்கே,
தங்களது கருத்துக்கு நன்றி! :-)
உங்களைப் போன்றவர்களின் பின்னூட்டங்களால் எனக்கு அங்கீகாரம் கிடைத்து விடும் என்று நீங்கள் நினைத்தால் அது உங்களின் அறியாமையே!
சந்தர்ப்ப சூழ்நிலையால் குற்றம் புரிந்தவருக்கும், ஆட்சியாளர்களே தமது காலடியில் என்ற மமதையில் திட்டமிட்டு கொலை,கொள்ளை மற்றும் பாலியல் பலாத்காரம் செய்தவனுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. அறியாமையின் உச்சானிக் கொம்பில் இருக்கும் உம்மைப் போன்றவர்க்கு அது புரியாது.புரிந்து கொள்ளவும் இயலாது...

//...உம் போன்ற இன-வெறியாளர்களால்தான்...//

நான் இன வெறியனே, தமிழின வெறியனாக இருப்பதில் மெத்த மகிழ்ச்சியே! மேலும் இன வெறிக்கும் இப்பதிவிற்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்பது தமிழ் படிக்கத் தெரிந்தவர்களுக்கு நன்றாகவே புலப்படும். அது உங்களுக்கு தெரியாததில் வியப்பேதும் இல்லை.

உங்களுடைய பம்மாத்துகளை, உங்களுக்காக "ஐலேசா" போடும் இடங்களோடு மட்டும் நிறுத்திக் கொள்ளுங்கள்!

//நல்லவேளையாக, இதையும் தாண்டி பீடுநடை போட்டு வெல்லத் துள்ளும் இளைஞர்களுக்கு இன்னும் குறைவில்லாமல் இருப்பதே ஒரு மெல்லிய சந்தோஷக் கீற்று!//

உங்களுடைய சமூக உணர்விற்கும் சேவைக்கும் எனது பாராட்டுக்கள்!

//இதனாலெல்லாம் என்ன சாதித்தீர்கள் என்று நாளை நீங்களே உங்களைக் கேட்டுக்கொள்ளத்தான் போகிறீர்கள்!//

அதற்கு அவசியம் இல்லை, எஸ்கே. இணையதளத்தில் எழுத வந்தது எதையும் சாதிப்பதற்காக அல்லவே! என் எண்ணங்களை எவரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாமல் எழும் ஆற்றாமையை போக்க மட்டுமே!

said...
This comment has been removed by a blog administrator.
said...
This comment has been removed by a blog administrator.
said...

பின்னூட்டங்களை எவ்வாறு எடிட் செய்வது என்று யாராவது சொல்லி கொடுத்தீங்கனா உபகாரமா இருக்கும்!

said...

போட்டீக்கடை,

போலிச்சாமியார்களின் உண்மை முகங்களை புட்டுப்புட்டு வைத்திருக்கிறீர்கள். ஆனால் எஸ்கே என்பவருக்கு உங்கள் மேல் கோபம் வந்து விட்டது. உங்களை இனமத வெறியர் என்பதுபோல சித்தரித்து இருக்கிறார்.

இவர் ஜெயேந்திரர், புட்டபர்த்தி ஆகியோருக்கு ஆதரவாக எழுதியதால் நான் அப்படிச் சொன்னேன். தவறென்றால் பின்னூட்டத்தினை அழித்து விடுங்கள்.

ப்ளாக்கரில் எடிட் செய்யும் வசதி இல்லை.

said...

விடாது கருப்பு,
புரிதலுக்கு நன்றி!

said...

"பின்னூட்டங்களை எவ்வாறு எடிட் செய்வது என்று யாராவது சொல்லி கொடுத்தீங்கனா உபகாரமா இருக்கும்!"

சொன்னால் போயிற்று. எடிட் செய்ய வேண்டிய பின்னூட்டத்தை நகலெடுத்துக் கொள்ளவும். பிறகு மட்டுறுத்தல் பெட்டியில் அப்பின்னூட்டத்தை ரிஜெக்ட் செய்யவும். நகலெடுத்ததை உங்கள் பின்னூட்டமாக ஒட்டி, அதற்கு மேல் இது பலானவர் இட்டப் பின்னூட்டம் என்று எழுதி விடவும். இப்போது நீங்கள் நகலெடுத்தப் பின்னூட்டத்தை எடிட் செய்யலாம்தானே.

சந்தேகம் இன்னும் ஏதேனும் இருந்தால் சிவனடியாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும். ஆனால் என்ன, என்னுடையப் பின்னூட்டத்தை எடிட் எல்லாம் செய்யவில்லை. ஆனாலும் என் பெயரில் வெளியிடாமல் டோண்டுவின் பின்னூட்டம் இதோ என்று போட்டார். ஏன் அவ்வாறு செய்தீர்கள் என்பதற்கு மட்டும் பதில் கூற மறுத்து விட்டார்.

இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்டுவதற்காக அதன் நகலை என்னுடையத் தனிப்பதிவில் பின்னூட்டமாக இடுவேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

டோன்டு,
தகவலுக்கு நன்றி! உபயோகமாக இருந்தது.

said...

எந்த ஒரு மனிதன் தன் நிலையில் இருந்து நழுவுகிறானோ அவனை மரியாதை கொடுத்து அழைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அனுராதா ரமணன் என்ற மூத்த பத்திரிக்கையாளர் தொலைக்காட்சியிலும் பத்திரிக்கையிலும் அழுது பேட்டி கொடுத்ததை படித்து இருக்கிறீர்களா? இளமை புதுமையான சொர்ணமால்யாவை எல்லாம் தொட்ட அந்த கைகள் கேவலம் கிழவி அனுராதாரமணனைத் தொட்டபோது மனிதாபிமானத்துடன் தாங்கள் உங்கள் ஜாதி ஜெயேந்திரனை எதிர்க்கேள்வி கேட்டிருக்க வேண்டாமோ?

***
விடாதுகருப்பு அவர்களின் இப்பின்னூட்டம் தணிக்கை செய்யப்பட்டுள்ளது!

said...

நல்லது. இப்போது நீங்கள் நீக்கிய விடாது கருப்புவின் பின்னூட்டத்தை எடிட் செய்துப் போடலாம்தானே. கமெண்டுகள் உங்கள் மின்னஞ்சல் பெட்டியில் அப்படியே இருக்கும்தானே.

இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைப் பார்க்க இம்முறை போட்டோ மற்றும் எலிக்குட்டி சோதனை வைத்து சரியான ப்ளாக்கர் எண் 4800161 வருகிறதா என்பதைப் பார்த்து சரி பார்த்துக் கொள்ளவும். இரண்டும் சேர்ந்து சரீயாக இருக்க வேண்டும். இல்லையென்றால் போலி டோண்டு என்னும் இழிபிறவி வந்து விடுவான்.

அதர் ஆப்ஷனை உபயோகித்து, என் ப்ளாக்கர் எண் எலிக்குட்டி சோதனையில் தெரியச் செய்வான். அல்லது போட்டோ போடுவான் ஆனால் எலிகுட்டி சோதனையில் வேறு எண் தெரியும் கவனம் இருக்கட்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

உண்மையைச் சொன்னால் நெருப்பாகச் சுடும் சில இனமதவெறி பிடித்தவர்களுக்கு. யாருக்கும் எதற்கும் கலங்காமல் படையுங்கள். ஜெயேந்திரர், புட்டபர்த்தியின் உண்மைகளையும் சொன்னால் இங்கே சிலருக்கு ஏன் கோபம் வருகிறது என்று தெரியவில்லை?

***
விடாதுகருப்பு அவர்களின் இப்பின்னூட்டம் தணிக்கை செய்யப்பட்டுள்ளது!

said...

Naye Naye....Nedumaran oru peria manusan enakku theriyeville...unakku oru arippu samiyarkalai thittamunnu...Thittivittai. Appuram ennna Nedumaran pinnaadi oliyarathu

***
அனானிமஸின் இப்பின்னூட்டம் படிக்கக் கூடிய அளவில் தணிக்கை செய்யப் பட்டுள்ளது. வெளியிடக் கூடிய அளவிலும் என் மேல் மட்டுமே எச்சிலை துப்பும் மறுமொழிகளை வெளியிடுவேன். பிறரை தனிப்பட்ட முறையில் திட்டி எழுதும் பொறம்போக்குகளுக்கு(anonymous) இங்கு இடமில்லை.

said...

டோன்டு,
உங்களுடைய எழுத்துகளை என்னால் எளிதாக அடையாளங்கண்டு கொள்ள முடியும்...அதே போல் தான் போலி டோன்டுவின் எழுத்தும்...

ஆனால் நீங்கள் இன்னமும் எலிக்குட்டி, பூனைக்குடி என்று பல சோதனைகளைக் கூறுவது தனிப்பட்ட முறையில் எனக்கு வெறுப்பாகவே இருக்கிறது...
***
இப்பின்னூட்டத்தை மட்டுமே மையமாகக் கொண்டு பின்னூட்டமிடுபவர்களின்(டோன்டுவைத் தவிர) பின்னூட்டங்கள் குப்பைத் தொட்டியில் போடப் படும்!

said...

டோன்டு & சிவனடியார்,
தயவு செய்து உங்கள் தனிப்பட்ட கருத்துகளை (பதிவிற்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாத) இத்தோடு நிறுத்திக் கொள்ளவும்!

said...

//எடிட் செய்ய வேண்டிய பின்னூட்டத்தை நகலெடுத்துக் கொள்ளவும். பிறகு மட்டுறுத்தல் பெட்டியில் அப்பின்னூட்டத்தை ரிஜெக்ட் செய்யவும். நகலெடுத்ததை உங்கள் பின்னூட்டமாக ஒட்டி, அதற்கு மேல் இது பலானவர் இட்டப் பின்னூட்டம் என்று எழுதி விடவும். இப்போது நீங்கள் நகலெடுத்தப் பின்னூட்டத்தை எடிட் செய்யலாம்தானே.//

பலானவர்????:))))))

said...

உண்மையைச் சொன்னாலும் அவாள்களுக்கு கடுக்கிறது! தொடர்ந்து இதுபோல் எழுதுங்கள் பொட்டிக்க்டையாரே!

said...
This comment has been removed by the author.
said...
This comment has been removed by the author.