3/18/2007

விடாது சிகப்பு

அடடா...அடடா...
தமிழ்மணத்தில் இருந்து விடாது கருப்பு, ஏமாறாதவன், இரவுக்கழுகார், விட்டுது சிகப்பு ஆகியோர் விலக்கப்பட்டு இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. காரணம் அழுவுணிகளும், சண்டியர்களும் இனி சண்டையிடுவதோ அல்லது மண்டியிடுவதோ எவ்விதத்திலும் நன்மை பயக்கப் போவதில்லை என்கிறபடியாலும், கவாஸ்கர் - பாண்டிங் சர்ச்சை மிகவும் நாகரிகமான நகைச்சுவை கட்டத்தை எட்டிக்கொண்டிருக்கிறது. இதில் இவன் செய்தது நியாயம் அவன் செய்தது அநியாயம் என்று சொல்லுவது சில குஞ்சுகளுக்கு உவப்பாய் இருந்தாலும், இதில் கவாஸ்கர் தன் சுயத்தை நக்கி மிகவும் அருவெறுக்கத்தக்க வகையில் இரண்டாம் இன்னிங்ஸ் ஆட்டத்தை தொடங்கி இருக்கிறார்.

நான் அவுஸ்திரேலிய அணியின் விசிறியாயிருந்தாலும், போண்டிங் கின் சமீபகால நடவடிக்கைகள் பிடிக்காததாலும், அவுஸ்திரேலிய அணியின் ஏகாதிப்பத்தியம் சமீபத்தில் வீழ்ந்தது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இது நாள் வரை ஒரு சாதாரண மாகாண அவுஸ்திரேலிய அணி கூட மற்ற நாடுகளின் தேசிய அணியை மண்ணைக் கவ்வ வைக்கும் என்கிற அதீத நம்பிக்கை தகர்க்கப்பட்டிருப்பது ஒரு விதத்தில் மகிழ்ச்சியே. அதன் பின்னரான கவாஸ்கரின் செவ்வியும் அதற்கு போண்டிங் கின் பதிலும் இந்தியாவில் மட்டுமே சலசலப்பை ஏற்படுபடுத்தியிருக்கிறது என்பது தான் உண்மை. அவுஸ்திரேலிய மக்கள் அதை ஒரு பொருட்டாக மதித்து அவ்வளவாக கதைப்பதில்லை. இதில் மூக்குடைப்பட்டவர் கவாஸ்கர் மட்டும் தான் என்பது ஊரறிந்த உலக ரகசியம். அடிபட்ட நாய் எட்டிச் சென்று வனாந்திரத்தில் குரைப்பது போன்று, கவாஸ்கரின் இரண்டாம் கட்ட பதில் உள்ளது. கவாஸ்கர் டேவிட் ஹூக்*ஐ பற்றி அதிகம் அறிந்திருப்பாரா அல்லது அவரது உயிர்பிரிந்த துயரமான சம்பவத்தை அறிந்திருப்பாரா என்பதும் சந்தேகமே!

கலாச்சாரம், மயிரு, மண்ணாங்கட்டி என்று பேசும் இந்தியத் திருநாட்டில் பிறந்த கவாஸ்கர் இறந்து போன ஒருவரை தூற்றியிருப்பது அவர் இப்பொழுது இருக்கின்ற இருப்பிற்கு உகந்ததாயில்லை. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, இங்கு கிரிக்கெட் வீரர்களோ அல்லது இன்னபிற நட்சத்திரங்களுக்கோ 5* தரமளித்து தலைமேல் தூக்கிவைத்து ஆடுவதில்லை. இந்தியாவில் இம்மாதிரியான நட்சத்திரங்கள் செல்லும் கள்ளுக்கடைகளுக்கு சாதாரணமாக குடியானவர்கள் செல்லமுடியாது. அப்படியே சென்றிருந்தாலும் அவ்வாறு ஒரு கிரிக்கெட் வீரரை அடிக்கும் அளவிற்கு துணிவிருக்காது இந்திய தேசபக்தர்களுக்கு. சமீபத்தில் கூட யுவராஜ் சிங் குடித்துவிட்டு செய்த கலாட்டாக்கள் செய்தியாக வந்திருந்தது. ஆக வழக்கம் போல் வெளியில் கலாச்சார கருமாந்திரம் பேசிவிட்டு இரவில் அவுத்துப் போட்டு ஆடுபவர்கள் தான் இந்திய கிரிக்கெட் வீரர்கள்.


ஆக கிரிக்கெட் தான் எங்களது ரிலிஜியன், சச்சின் தான் கடவுள் என கொக்கரிக்கும் அரைவாண்டுகளும் சற்றே சிந்தித்துப் பார்த்தால் தெரியும், அய் சி சி யின் பொறுப்பில் இருக்கும் ஒரு மனிதன் அவனது இருப்பை விட்டு இறங்கி வந்து ஒரு அணியின் காப்டனிடம் சரிக்கு சரியாக சண்டை போடுவது நன்றல்ல. இதனால் பி சி சி அய் க்கு தான் நட்டமேயொழிய் கிரிக்கெட் அவுஸ்திரேலியாவிற்கு அல்ல. இந்திய தேசிய ஜல்லிகள் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டங்களை கண்டு சலித்துவிட்டதால் அவுஸ்திரேலியாவிடம் அதிக ஆட்டங்கள் ஆடினால் நன்றாக வசூலாகும் என்ற கனவிலிருக்கும்பொழுது கவாஸ்கரின் இந்த அரைவேக்காட்டுத் தனமான உளறல்கள் இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளை பலப்படுத்தப்போவதில்லை. மாறாக வெறுப்புணர்ச்சியை தான் வளர்க்கும்...இங்கு ஏற்கனவே சில அரைவேக்காடுகள் கவாஸ்கர்-பார்டர் டிராபி என்ற பெயரிலிருந்து கவாஸ்கர் பெயரை நீக்க வேண்டுமென கூவ ஆரம்பித்துவிட்டன.


சரிவிடுவோம்...அதற்கும் இப்பதிவிற்கும் சம்மந்தம் இல்லை...


அடுத்ததாக நான் ஆவலோடு எதிர்பார்த்த ரக்பி லீக் போட்டிகள் ஆரம்பித்துவிட்டன இங்கு. நடப்பு சாம்பியனான பிரிஸ்பேன் ப்ரோங்க்கோசும், நம்மூரின் கவ்பாய்ஸும் நேற்றைய துவக்க ஆட்டத்தில் மோதினர். கடந்த நாண்கு ஆண்டுகளாக பிரிஸ்பேன் ப்ரோங்கோசு விசிறிதான் என்றாலும் நம்மூரின் கவ்பாய்ஸை விட்டுக்கொடுக்க முடியாத நிலை. போட்டியின் ஆரம்பம் முதல் கவ்பாய்ஸின் ஆதிக்கமே மேலோங்கியிருந்தது.பிரிஸ்பேனின் முதல்பகுதி ஆட்டம் நடப்பு சாம்பியன் அணி ஆடியது போல் இல்லை. விளைவு கவ்பாய்ஸ் 16-6 புள்ளிகளில் முன்னணி பெற்றிருந்தார்கள். ஆனால் பிரிஸ்பேன் அணியினரின் மீள்வருகை மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். கடந்த வருட அரையிறுதிப் போட்டியில் பிரிஸ்பேன் அணியினர், கேண்டர்பரி புள்டாக்ஸுடனான போட்டியில் 0-20 என்ற புள்ளியளவில் ஆட்டத்தின் முதல்பாதியில் பின் தங்கியிருந்தனர்.ஆனால் அடுத்தப் பகுதியாட்டாத்தில் 28-20 என்ற கணக்கில் வெற்றியும் பெற்றனர். அதுமாதிரி இப்போட்டியையும் வென்று விடுவார்களெனவே நானும் நினைத்திருந்தேன். அதே போல் ஆட்டம் முடிய கடைசி நிமிடம் வரை 16-16 என்ற சமன்பாட்டிலேயே இருந்தது. ஆனால் கடைசி நிமிடத்தில் மேட் போவெனின் ற்றையும் அதற்கடுத்து கடைசி வினாடியின் கள கோலும் 23-16 என்ற அளவில் கவ்பாய்ஸ் வெற்றி பெற்றிருந்தனர்.

அதற்கடுத்ததாக மெல்பர்ன் ஸ்டார்ம்ஸின் சிட்னி வெஸ்ட் டைகர்ஸ்க்கு எதிரான வெற்றி. மிகவும் பரபரப்பான ஆட்டத்தில் 18-16 என்ற அளவில் மெல்பர்ன் வெற்றி பெற்றது. சென்ற ஆண்டு வரை பிரிஸ்பேன் தான் புது டீன் ஏஜ் மிருகங்கங்களை களத்தில் இறக்கி விடும் அணியாகவும், டீம் டு பீட் என்ற எதிர்பார்ப்புடனும் இருக்கும். ஆனால் அதை இவ்வாண்டு மெல்பர்ன் ஸ்டார்ம்ஸ் எடுத்துக் கொண்டது. கடந்த ஆண்டு சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சில துரதிர்ஷ்டமான முடிவுகளால் தோல்வியைத் தழுவிய மெல்பர்ன் இவ்வாண்டு அதிர்ஷ்டமாக இருக்குமென நம்புவோம்.


அட இதுவும் பதிவிற்கு சம்மந்தம் இல்லை...


அடுத்தபடியாக நேற்றே மெல்பர்னில் தொடங்கிவிட்ட F1 திருவிழா. ஒவ்வொரு ஆண்டும் எம்மாதிரியான சூழ்நிலையிலும் தவறாமல் கலந்துகொள்வேன். இவ்வாண்டு சிலபல பிரச்சினைகளால் செல்ல இயலவில்லை. அதுவுமல்லாமல் "தல" சூமேக்கர் ஓட்டாததும் ஒரு காரணமாயிருக்கலாம். ஆனால் இவ்வருடம் ரெய்க்கனன்னுக்கு சாதகமாக இருக்குமென எதிர்பார்க்கிறேன். வழக்கம் போல இன்றைய தகுதிசுற்றிலும் சிறிதளவு தூறல் போட்டு ஓட்டுனர்களுக்கு ஒருவிதமான கிலி ஏற்படுத்திவிட்டது. ஈரமான ஓட்டுகளத்தின் "தல" சூமேக்கர் இல்லாததால் இவ்வருடம் ஈரபாதையில் பந்தயம் நடைபெரும்பட்சத்தில் நிறைய நிகழ்வுகள் நடைபெற வாய்ப்பிருக்கிறது.என்னுடைய நண்பர்கள் சொல்லுவதுண்டு, டெண்டுல்கர் ரிட்டையராகிவிட்டால் இந்தியாவில் கிரிக்கெட் செத்துவிடும் என்று. ஆனால் சூமேக்கர் ரிட்டயர் ஆனதால் F1 போட்டியே என்னைப் போன்ற பலருக்கு ஒருசுவாரசியம் குறைந்த நிகழ்வாகவே தெரிகிறது. சூமேக்கரின் அசாத்திய துணிச்சலும், இண்ட்ஸ்டண்ட் திங்க்கிங் இன்னமும் எந்தவொரு ஓட்டுனருக்குமில்லை என்று தான் நான் கருதுகிறேன்.

ஆனாலும் சென்ற முறை தவறவிட்டதை இம்முறை விடாது சிகப்பு பெர்ராரி!!!!!!!!!!
வ்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரூரூம்.....

4 comments:

said...

:) Kallakku

said...

எதிர்பார்த்தபடியே சிகப்பு கைவிடவில்லை. ரெய்க்கெனன் பெர்ராரிக்காக முதலிடமும், மெக்லாரனின் அலோன்சோ, புதுமுகம் ஹாமில்டன் முறையே இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பிடித்தனர்.

மற்றொரு சிவப்புக்குதிரை ஓட்டுனர் பெலிப்மாசா துவக்க வரிசையில் 22ம் இடத்திலிருந்து துவங்கினாலும், 6 இடத்தில் பாயிண்டுகளுடன் பந்தயத்தை நிறைவு செய்தார். அவருக்கும் ரெனால்ட் ஓட்டுனர் பிசிச்செல்லாவுக்கும் அருமையான போட்டி இருந்தது ஐந்தாம் இடத்தைப் பிடிக்க.ஆனால் பிசிச்செல்லா விடாக்கண்டனாய் இருந்து தனது ஐந்தாம் இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

இப்போட்டியில் என்னைக் கவர்ந்தவர் புதுமுகம் ஹாமில்டன். 1976க்கு பிறகு பிரித்தானியவை சேர்ந்த ஒருவர் சீசனின் முதல் போட்டியில் போடியம் ஏறியவர் என்ற பெருமையையும் பெறுகிறார். ஹாமில்டன் அழகாக நடப்பு சாம்பியனான அலோன்சோவை அவுட்க்ளாஸ் செய்தார். ஆனால் பிட் ரூமில் என்ன நடந்ததோ தெரியவில்லை ஹாமில்டனின் இரண்டாவது பிட் ஸ்டாப்பில் அதிக நேரம் எடுத்து அலோன்சோவை இரண்டாமிடம் பிடிக்க வைத்தனர்.

இந்த சீசனில் அதிகமாக பேசப்படுபவர் ஹாமில்டனாக இருக்கலாமென்று கருதுகிறேன்.

said...

நான் எண்ணியது சரியாகவே நடந்தது. வழக்கமாக சிகப்பால நிறைந்திருக்கும் ஆல்பர்ட் பார்க் வழக்கத்திற்கு மாறாக மிகக்குறைவான அளவிலேயே இருந்தது.பின்லாந்து ரெய்க்கன்னுக்கு கூட சிகப்பு உடை அவ்வளவாக செட்டாகவில்லை :-))

"தல" சூமேக்கர்னா ரெட்டு...ரெட்டுன்னா தல சூமேக்கர் தான்.

இன்னொரு நல்ல விசயம், அங்கிங்கென்று ஒன்றிரண்டு விபத்துகள் நடந்தாலும் யாருக்கும் எவ்வித சேதமும் இல்லாமல் பாதுகாப்பு வாகனம் இல்லாமல் இந்த பந்தயம் இனிதே நிறைவு பெற்றது.

Anonymous said...

நான் ஒரு இந்து. தாழ்த்தப்பட்ட ஹரிஜன வகுப்பை சேர்ந்தவன். என்னையும் உயர்ஜாதி என்று ஏற்றுக் கொள்வார்களா பார்ப்பனர்கள்? அவர்கள் போட்டுக் கொள்ளும் பூனூலை நானும் போட்டுக்கலாமா? நான் அவர்கள் வீட்டு திண்ணையில் கொஞ்ச நேரம் அமர்ந்தால் திண்ணையை கழுவாமல் இருப்பார்களா பார்ப்பனர்? எனக்கு பார்ப்பனர் பெண் கட்டித்தருவார்களா?