நான் இரண்டாம் வகுப்பு படிக்கையில் வகுப்பாசிரியை அவர்கள், தலைமையாசிரியை அழைத்ததன் விளைவாக வகுப்பு மாணவர்கள் அனைவரும் அமைதியாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் அனைவரும் அமைதியாக இருக்கவும் என்று சொல்லிவிட்டு சென்று விட்டார். வகுப்பும் அமைதியாக தான் இருந்தது.
திடீரென எனக்கு முன் மூன்றாவது "பென்ச்"ல் அமர்ந்திருந்த "நிர்மல்", சத்தியா என்னை அடித்து விட்டான் என்று அலற ஆரம்பித்தான். நானோ அமைதியாக?! பக்கத்தில் அமர்ந்திருந்த "காயத்ரி"யோடு நாளைக்கு செய்ய வேண்டிய வீட்டுப் பாடத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். நிர்மலின் கூச்சலோ எனக்கு புரியாமலே இருந்தது. எட்டிப் பாய்ந்து அடித்தால் கூட 2 பென்ச் தாண்டி போய் தான் அவனை அடிக்க முடியும். மேலும், அவன் எனக்கு நண்பனும் இல்லை எதிரியும் இல்லை, அவனை போய் நான் எதற்கு அடிக்க வேண்டும்? அவன் முகம் கூட எனக்கு சரியாகத் தெரியாது.
இத்தனைக்கும் நிர்மல் சரியான சேட்டைக்காரன், க்ளாஸ் லீடரையே அடிக்கடி கலாய்ப்பான். யாராவது கேட்டால், எங்கப்பா ...எங்கம்மா, ரென்டு பேரும் டாக்டர்...அவங்ககிட்ட சொல்லி உனக்கு ஊசி போட்டுடுவேன்,எங்க தாத்தா எஸ்பி அவர்கிட்ட சொல்லி உன்னை ஜெயிலில் போட்டுடுவேன் என்று பயமுறுத்துவான். அதனாலேயே அவனை யாரும் சீந்தக் கூட மாட்டார்கள். நானோ ஒரு வாயில்லாப் பூச்சி?!, ரொம்ப அமைதியான சுபாவம்...அவனிடம் ஏதாவது கேட்டால் அடித்து விடுவானோ என்ற பயத்தில், அவன் என்னை பல முறை கலாய்த்த பொழுதும் இந்த காதில் வாங்கி அந்த காதில் தள்ளி விட்டு வந்துவிடுவேன். இப்படிபட்ட சூழ்நிலையில் அவன் என்னை பார்த்து அலறியது இன்று வரை எனக்கு புரியாத புதிராகவே உள்ளது.
ஆனால் நிர்மலின் இந்த ஆகாயப் புளுகை நம்பாத சின்னாவும், ராமனும் நிர்மலின் கதறலைப் பார்த்து கை கொட்டி வாய் விட்டு சிரித்து விட்டார்கள். ஏனென்றால் இவர்கள் இரண்டு பேருக்கும் நிர்மலின் சேட்டைகளும், நீலிக்கண்ணீரும், ஆகாயப் புளுகும் நன்கு பரிச்சயம். அவர்களோ சிரித்துக் கொண்டே நிர்மலிடம், என்னப்பா சத்தியா தான் 3 பென்ச் பின்னாடி உட்கார்ந்திருக்கானே அவன் எப்படி உன்னை அடித்திருக்க முடியும் என்று கேட்க...நிர்மலின் குய்யோ ...முறையோ...கூச்சல் அதிகமானதேயொழிய குறையவில்லை. அதோடு இல்லாமல் சின்னாவிடம், நீ சத்தியாவோட நெருங்கிய நண்பன், அதனால் தான் நான் வலியால் அழுவது கூட உங்களுக்கு சிரிப்பாகத் தெரிகிறது என்று சின்னாவின் மேலேயே குற்றஞ்சாட்ட ஆரம்பித்தான்.எனக்கோ நிர்மல் அழுது பார்ப்பது வித்தியாசமான அனுபவமாக இருந்ததால் அமைதியாக மனதுக்குள்ளே சிரித்துக் கொண்டிருந்தேன்.
ஆனால் நிர்மல் சின்னாவிடம் கூறியது எனக்கு கொஞ்சம் எரிச்சலாகவே இருந்தது. ஏனென்றால் நான் சின்னாவிடம் அதிகமாக பேசியதில்லை...அவன் வீட்டிற்கும் இதுவரை சென்றது கிடையாது. மேலும் சின்னா தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பவன் அவனும் நானும் எங்காவது மற்ற நண்பர்களின் வீட்டில் பார்த்தால் கூட பேசிக் கொண்டது இல்லை. அப்படிபட்ட நிலையில் நிர்மல் கூறியது யாருக்கும் எரிச்சல் ஏற்படுத்தவே செய்திருக்கும்.
அத்தோடு நில்லாமல் ஆதாரமாக என்னுடைய் பென்சிலை வேறு காட்டி, இதை வைத்து தான் சத்தியா என்னை குத்தினான் என்று என் மேல் குற்றச்சாட்டை வலுப்படுத்தினான். அது மட்டுமல்லாமல் பக்கத்து வகுப்பிற்கு சென்று அவனுக்கு தெரிந்தவர்களை வேறு உதவிக்கு அழைத்தான். உடனே சின்னாவும், ராமனும் நிர்மலிடம் சென்று...நிர்மல், உன்னைக் குத்தியது சத்தியா தான் என்று சந்தேகம் இருந்தால் வகுப்புத் தலைவனிடமோ அல்லது வகுப்பாசிரியரிடமோ கூறலாமே அதை விட்டு விட்டு பக்கத்து வகுப்பு ஆட்களையெல்லாம் ஏன் அழைக்கிறாய் என கேட்க, நிர்மலின் கூச்சல் இன்னும் அதிகமானது. இப்போது நிர்மலோடு இன்னும் இரண்டு பேர் வேறு சேர்ந்துக் கொண்டு, நிர்மலின் வேதனை எங்களுக்கு தான் தெரியும்...அதனால இந்த நேரத்தில் வகுப்பில் இல்லாமல் போன டீச்சரை கண்டிக்கிறோம் என கும்பலாக சேர்ந்து கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்கள்.
இப்பொழுது தான் எனக்கு ஒரு விடயம் புரிந்தது. அதாவது முந்தைய நாள் கடைசி மணி அடித்தவுடன் வீட்டிற்கு செல்லும் அவசரத்தில் பென்சிலைத் தவற விட்டு வந்தது நினைவில் வந்தது. இது அடிக்கடி நிகழும் ஒரு நிகழ்ச்சி தான். பல முறை எனது நண்பர்கள் பென்சிலை என்னிடமே தந்து விடுவார்கள். இதனால் பென்சில் பற்றிய் கவலையும் இல்லாமல் போனது. ஆனால் இந்த வாரம் "இழந்த பொருட்கள்" என ஒரு பெட்டி இருப்பதை இப்பொழுது தான் கவனித்தேன். அதாவது அதில் தவற விட்டுச் சென்ற பொருட்களை யார் வேண்டுமானாலும் அதில் போடவும், எடுக்கவும் முடியும் என்பது தான். அடடா இந்த விசயத்தை கவனிக்காமல் விட்டு விட்டோமே என என்னையே நொந்துக் கொண்டு, பிரச்சினையை பெரிதாக்க விரும்பாமல் மூன்று பேருக்கும் பொதுவாக மன்னிப்பு கேட்டுவிட்டு வந்து விட்டேன். ஆனாலும் நிர்மல் அமைதியாயிராமல் இந்த வகுப்புஆசிரியையினால் தான் பள்ளியின் அமைதியே குலைகிறது ஆகையினால் வகுப்புத் தலைவனும், வகுப்பாசிரியையும் எனது வேதனையை உணர்ந்து என்னிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று சம்மந்தாசம்மந்தமில்லாமல் பிதற்றிக் கொண்டிருந்தான். நானும் அதை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டேன்.
ஆனால் ஒரு வாரம் கழித்து தான் தெரிந்தது உண்மையான நிலவரம் என்னவென்று. சமீப காலங்களில் நிர்மல் மற்றும் அவனது சகாக்களை யாரும் அவ்வளவாகக் கண்டு கொள்ளாததால் எரிச்சல் அடைந்த நிர்மல், அவனாகவே என்னுடைய பென்சிலைத் திருடி அவனாகவே குத்திக் கொண்டு ஒரு வாரமாக அனைவரிடமும் சண்டியிட்டு வந்திருக்கிறான் என்று. இதனையறிந்த வகுப்பு மாணவர்கள் அனைவரும் "நிர்மல்"ஐ ஒரு மன நோயாளியாக கருதி அவனோடு கதைக்க வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டோம்.
நீங்கள் இதுவரை படித்தது 20 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு நிகழ்வு.
இதை என் மனவலையில் எழுப்பியது தற்போது முகமூடியின் பதிவில் அனாமதேயமாக பின்னூட்டமிட்டு வரும் ச.திருமலை எங்கிற ஒரு "அனானி". அவர் உறுப்பினாராகவே அல்லாத ஒரு வலை திரட்டியில் ஒரு "குறிப்பிட்ட சமூகத்தை" தரக்குறைவாக "குறி"யீட்டு சொல் இருந்ததால் இவர் சொல்லொனாத் துயரம் அடைந்ததாகவும், ஆனால் தமிழ்மண நிர்வாகி(கள்) இதை கண்டு கொள்ளாமல் விட்டதாகவும் எழுதுகிறார். தமிழ்மண நிர்வாகிகளுக்கு அவர் என்ன மாதா மாதம் படியளக்கிறாரா என்ன? ஆற்றில் ஓடுகிற நீரை ஆளுக்கொரு வாய் என்ற வகையில் பயன்படுத்திக் கொண்டிருக்கிற வகையில் உலகின் ஏதோ ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு இவர் மனம் வேதனை அடையுமாம், அதை உலகின் இன்னொரு மூலையில் இருக்கின்ற நிர்வாகிகள் புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டுமாம்.
குறைந்த பட்சம் சிந்திக்கக் கூடிய மனிதர்களுக்கு கூட "ஒரு சுய புத்தி" இருக்கும். ஆனால் பத்தி பத்தியாய் எழுதுகின்ற "திருமலை", அந்த "வேதைனையளிக்கும் "குறி"யீடை"ப் பார்த்த பின் தமிழ்மணத்தில் புகார் கூறக் கூடத் தோன்றாமல் "முகமூடி"யின் பதிவில் வந்து பின்னூட்டமிடுகிறார். அங்கேயே வேதனைப் படுகிறார் வேறு. நான் தான் ஒரு பதிவே போட்டு என்னையறியாமல் ஏற்பட்டுவிட்ட இந்த தவறுக்கு பொறூப்பேற்று பகிரங்கமாக வருத்தம் தெரிவித்த பின்னும் அரைத்த சுண்ணாம்பையே திரும்ப அரைக்கும் செக்கு மாட்டை போன்று சுற்றி சுற்றி வந்து அனைவரையும் தாக்குகிறார். அது மட்டுமல்லாமல்,
"உங்களுக்கு பொட்டீக்கடை நெருக்கமான நண்பர் போலிருக்கிறது. அவர் சொல்லியிருக்க
மாட்டார் என்று உறுதியாக அவருக்காக உங்களால் வக்காலத்து வாங்க முடிகிறது. நான்
இவ்வளவு சொன்ன பொழுதும் இது வரை தமிழ் மணத்தில் இருந்து முறையாக யாரும் வந்து, அது
தவறுதான் அல்லது தவறு இல்லை, எப்படி அது நடந்தது, இனி நடக்காமல் இருக்க என்ன
செய்துள்ளோம் என்றெல்லாம் எதுவும் சொல்லவில்லை."
என்று உரிமையோடு ஆதங்கப் படுகிறார்.இதுவரை சன்னாசி பெயரை கேள்விபட்டிருக்கிறேனேயொழிய இதுவரை நாங்கள் இருவரும் வேறு ஒருவரின் பதிவில் கூட அவருடன் உரையாடியதாய் நினைவில்லை. அவர் பதிவிற்காகவாவது சென்றிருக்கிறேனா என்றால் அது கூட நினைவில்லை. ஆனால் "ச.திருமலை" அவரை எனது நெருங்கிய நண்பராக அறிவித்திருக்கிறார். இது ச.திருமலை என்கிற அனானியின் மனநோயின் உச்சத்தையே காட்டுகிறதுஇவர் முறையாக உறுப்பினராகவே(அ)பதிவாளராகவே இல்லாமல் ஒரு அமைப்பிடமிருந்து இவருக்கு விளக்கம் அளிக்க வேண்டுமாம். இவர் என்ன வலையுலக பிராமண சங்கத்தின் தலைவரா? இவரிடம் வந்து தமிழ்மண நிர்வாகிகள் விளக்கமளிக்க... "பார்ப்பன நாய்கள்" என எழுதி என் பதிவை "tag" செய்ததே ச.திருமலை எங்கிற அனானி தான் என நான் நினைக்கிறேன். விளக்கமளிப்பாரா ச.திருமலை?..."ஸ்க்றீன் ஷாட்ஸ்" எடுத்து வைத்திருப்பதாகக் கூறுகிறார்.ஃபொட்டோஷாப் மென்பொருள் இருந்தால் எட்டாம் வகுப்பு படிக்கும் சிறு பிள்ளை கூட 300 ஸ்க்ரீன் ஷாட்ஸ் எடுக்கலாம். இதையெல்லம் ஒரு கேள்வியாக எழுப்பி ச.திருமலை என்கிற அனானி அளவிற்கு நான் இறங்க விரும்பவில்லையென்ற போதிலும், இன்னமும் "பொட்'டீ'கடை"யின் கதவை "முகமூடி"யின் பதிவில் இடித்துக் கொண்டிருப்பதால் ஒரு சிறு "சுயத்த" விளக்கும் பதிவு.
பிகு ; இதையும் மீறிப் பிராண்டிக் கொண்டிருந்தால் நடுவிரலைத் தூக்கி முகத்தின் எதிரே காட்டுவதைத் தவிர வேறு வழியில்லை.
4 comments:
பொட்"டீ" கடை,
பிதற்றலின் உச்சகட்டம் - தி க காரர்கள் எலக்ஷன் நேரங்களில் அக்ரகாரங்களில் சென்று பாம்பை விட்டும், சோடா பாட்டில் அடித்து அவர்களை ஓட்டுச் சாவடி பக்கம் போகாதவாறு மிரட்டுவார்கள், பூணூல் அறுப்பது போன்ற பல ரவுடித்தனங்களை நடத்தி மிரட்டுவதும் அவர்களுக்கு பொழுது போக்கு. அது போல இன்று தமிழ் இணையத்தில் யாராவது எழுத முயன்றாலே அவர்களை ஆபாசமாக மிரட்டும் உத்திகளும் பதிவுகளும்தான் நடந்து வருகின்றன.
மன நோயாளிகளுக்கு நீங்க எழுதுவது தெரியவா போகிறது?
அப்படி என்ன பாப்பான்னா ஒசத்தி? அவன்கள பற்றி எழுதினால் இந்த ஆள் கொடுக்கும் பட்டங்கள் - "மன நோயாளி" "கேடு கெட்ட மிருகம்" "வெறி பிடித்து அலையும் கும்பல்" "மிருகங்கள்"
இப்ப கூட காசியின் பதிவில் மலம்மிட்டு இருக்கான் ஒரு பாப்பான். இது மட்டும் ஒழுங்கா?
- பெயரா முக்கியம்
ஆனா, வெறி பிடித்து அலையும் பார்ப்பன எதிர்பாளர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்.
அவர்களால் தமிழ்மணமும் நாறுகிறதே...!
பொட்டீக்கடை ,
டீ ரொம்ப சூடாக இருக்கே ஆத்தி தான் குடிக்கனும் ,டீயவிட நீங்களும் சூடாக இருக்கிங்களே. இத எல்லாம் பேச பேச தான் வளரும். நீங்க உங்க விளக்கத்தை தந்ததா சொல்லிடிங்க அதுவே போதும். அது புரியாதவங்களுக்கு இது புரியுமா என்ன?
(நான் இந்த விவகாரத்தின் ஆரம்பத்தை படித்து எஸ்கேப் ஆகிட்டேன் வம்பா இருக்கேனு ,போய் மிச்ச சொச்சமும் படிக்கனும் அப்போ)
சத்யா இதெல்லாம் மற்றவர்களை தடுக்கும் ஒரு உத்தி... கண்டுக்காம நீங்க போய்கிட்டே இருங்க....
நன்றி
குழலி
Post a Comment