6/16/2006

என்ன எழவுடா இது!

இந்த "tag" பன்றது, "tag" பன்றதுங்கறாங்களே அது எப்பிடிங்கண்ணா. ஏதோ ஒரு நாதாரி நாய் "பார்ப்பன நாய்கள்"னு குறிப்பிட்டு என்னுடைய பதிவை "tag" பன்னிட்டு போயிருக்கு. எதேச்சையா தமிழ்மண சர்க்கஸ் கம்பெனியின் கட்டியங்காரரான மொகமூடியோட பதிவுக்கு போனா "பொட்"டீ"கடைய" போட்டு உருட்டிட்டு இருக்கறாங்க.

அவனவன் அனானியா வந்து மானாவாரியா அள்ளிக் கிடாசிட்டு போவானுங்களே, அந்த எழவையெல்லாம் நாம படிச்சி மட்டுறுத்தல், மயிருறுத்தல்ன்னு நம்ம நேரத்த வீணாக்க வேணாமேன்னு பின்னூட்டப் பகுதியையே எனக்காக மட்டும்னு போட்டு பூட்டி வெச்சிருந்தா வழக்கம் போல் "முகமூடி" மயிர பிச்சிக்கினு, கை நடுநடுக்க கட்டுரை கணக்கா எல்லா சாதிக்காரனுங்களையும் அசால்டா நாய்ங்க நாய்ங்கனு கடிச்சிக் கொதறிக்கினு கெடக்கறார்.

சப்ப மேட்டரா இருந்தா கூட பயங்கரமா அனாலிசிஸ் எல்லாம் பன்றவரு, இதுல எப்டி தகிடுதத்தோம் ஆடறார்னுதான் எனக்கு தெரியல. என்ன எழவோ! நா தப்பு பண்ணியிருந்தனா யார்கிட்டேயும் மன்னிப்பு கேட்பதற்கோ வருத்தம் தெரிவிக்கிறதுக்கோ தயங்கனது கெடையாது. முகமூடியின் சர்க்கஸ் பதிவில் நடந்து வரும் ஓரணா பொறாத சமாச்சாரத்துக்கும் அதாங்க இந்த "tagging" சமாச்சாரத்துக்கும் பொட்"டீ"கடைக்கும் எந்தவொரு கனெக்ஷனும் கெடையாது.

ஏற்கனவே ஒருத்தர் என்னை ஜாட்டான் (அது சரி, ஜாட்டான்னா என்னங்ணா) எனவும், ஜென்ம புத்தியை காட்டியதாகவும் சொல்லிட்டாரு. அடுத்ததா "மொகமூடி" புள்ளி புள்ளிய வெச்சி என்ன என்னவோ சொல்லிக்கினு இருக்கறாரு. எனக்கோ வழக்கம் போல தமாசோ தமாசு தான்...சிரிப்பு அடக்க முடியலீங்கோவ்...

இவ்ளோ பேச்சு பேசறீங்களே...என்னோட மின்னஞ்சல் முகவரி யாருக்கும் தெரியாதா என்ன? ஒரு மெயில் அடிச்சி கேக்க வேண்டியது தானே? அதை உட்டுபுட்டு "போலி" "போளி"ன்னு மறுபடியும் தமாசு பன்னிக்கினு இருக்கறீங்க...எது எப்டியோ எல்லாருக்கும் டைம் பாஸ் ஆனா சரிதான்.

இப்போதைக்கு நான் அப்பீட்டு!
பிகு: இங்கு நாய் என்பதை திருவாளர் என படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்

10 comments:

said...

சமீபகாலமாக பதிவுகள் எழுதாத காரணத்தினால் எழுந்த பிரச்சினையே இந்த "tagging" மேட்டர். இந்த பதிவை வகைப்படுத்தும் பொழுது தான் "taging" மேட்டரே எனக்குப் புரிந்தது. இதற்கு முந்தைய பதிவான "முகமூடி(கள்)" என்ற பதிவை காலையில் வகைப்படுத்த மறந்ததாலும் வேறு எவரோ விஷமத்தனமாக வகைப்படுத்தியும் "tag" செய்ததாலும், பலருக்கும் ஏற்பட்ட அனைத்து விதமான மன உளச்சலுக்கும் பொறுப்பேற்று பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

Anonymous said...

யாரோ உங்க பதிவை 'போடாப் புண்ணாக்குன்னு' வகைப் படுத்திட்டாங்க.

said...

உங்க தலய மட்டுமில்லாம தமிழ்மண நிர்வாகிங்க தலையெல்லாம் உருட்டறாங்க, அதான் பக்கத்திலேயே தெரிவிக்க என்று ஒரு பொத்தான் இருக்கே, அதை தட்டிவிட்டு கொஞ்சம் காத்திருக்கலாமே, அதை விட்டுட்டு தமிழ்மண நிர்வாகிங்க 24 மணி நேரம் தமிழ்மணத்தில யார் என்ன செய்றாங்கனு போலீஸ் வேலை பார்த்துக்கிட்டு இருக்க முடியுமா? இப்படி ஒரு tag உருவாக்கியது (இது தானியங்கி முறையில் வேலை செய்வது என்னமோ தமிழ்மண நிர்வாகிகள் செய்வதல்ல) யாராயிருந்தாலும் அது கேவலமான செயல்....

said...

குழலி மற்றும் அனானி,
வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.

ஒன்னுமே புரியல!!! வகைப்படுத்தாதவைன்னு வகைப்படுத்திய பிறகும் எப்டி "tag" பன்றாங்க. இந்த "tagging" ரொம்ப அவசியமா? என்ன எழவய்யா இது...

tag பன்னவே நான் விரும்பலைன்னு இருக்கப்போ இந்த இம்ச புடிச்ச ஆப்ஷன ஏன் வெச்சிருக்காங்க?

Anonymous said...

//வகைப்படுத்தாதவைன்னு வகைப்படுத்திய பிறகும் //
:):):)

said...

tag பண்ண விரும்பவில்லை என்கிற option இருக்கணும் போல...

ஆக்கபூர்வமா சிந்திக்கறதைவிட்டு, இப்படி எல்லாம் ஏன் செய்யறாங்கன்னு தெரியலை....
வேலை இல்லாம இருக்கறவங்க நம்ம ஊரிலே நிறையபேர் போல...

said...

தலைவா நானும் பதிவுகள் எழுதி ரொம்ப நாளாச்சு..நம்பள பத்தி எங்கேயாவது கிழிச்சாங்கனா ஒரு மெயில் அனுப்புங்க தலைவா...
தமிழ்மணத்தில் இருக்கும் சில கோமாளிகள் கூட்டம் விரும்பும் வகையில் என் பதிவுகள் இல்லாததே அதற்கு காரணம்

said...

பொட்டீகடை, அந்த கருமத்தை நீங்கள் செய்தீர்கள் என்று நான் நம்பவில்லை. யார்வேணும்னாலும் யாரைவேணும்னாலும் சந்தேகப்படலாம். விடுங்க லூஸ்ல...

பயனரே செய்யலாம் என்றால் யார்வேண்டும்னாலும் செய்யமுடியும் என்றுதானே அர்த்தம்? யார்யாருக்கு யார்யார் மேல் சந்தேகம் உள்ளதோ அவங்க்வுங்கமேலே அவங்கவுங்க எழுதி கீசிடலாம் விடுங்க ;-)

நீதி: இருண்டவன் கண்ணுக்கு பக்கத்துல இருக்குற இருட்டு பூதமாம்!

said...

கார்த்திக், நம்பிக்கைக்கு நன்றி.
அவாளுக்கெல்லாம் கொஞ்சம் கொறிக்க அவல் கிடைத்ததென்ற வகையில் எனக்கு சந்தோசமே. மற்றபடி திருவாளர் டாபராயிருந்தாலும் சரி, பொமரேனியனாயிருந்தாலும் சரி எனக்கு எந்தவொரு பிரச்சினையுமில்லை. அவனவனுக்கு இருக்கிற பிரச்சினையே பெரிய தலைவலியாக இருக்கும் பொழுது, திருவாளர்களின் சாதியெல்லாம் கிளறி ஆராய்ச்சி செய்கின்ற அளவிற்கு நமக்கு நேரமும் இல்லை, துணிவும் இல்லை. :-))

பிகு:முந்தைய பதிவின் முகம் தீய்ந்த திருவாளரே இங்கு திருவாளராக விளிக்கப்படுகிறார்.

said...

அனானி,

:-))

ஜீவா,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
//tag பண்ண விரும்பவில்லை என்கிற option இருக்கணும் போல...//

வகைப்படுத்தாதவை என்று ஒரு வகைப்படுத்தும் முறை இருக்கும்பட்சத்தில் "tag"செய்யப்படாதவை என்றும் ஒரு "குறியீட்டு முறை" வைக்கலாம்.

whatever it is, these stuffs are too complicated for me. i like it simple and user friendly.

//வேலை இல்லாம இருக்கறவங்க நம்ம ஊரிலே நிறையபேர் போல...//
அவனவனுக்கு பொழுது போக வேண்டாமா? :-))...அதுவும் வேறொருத்தன் தலை கிடைத்ததென்றால் லேசில் விடுவார்களா...

தரன்,
வருகைக்கு நன்றி. கூத்துன்னா கட்டியங்காரர் ஒருத்தர் தானே இருப்பார்...நீங்க பன்மையில சொல்லியிருக்கீங்க? நீங்க தான் மத்தவங்களை எனக்கு காட்டனும்...:-))