
என்னுடைய தீய்ந்து போன முகம்.இந்த படத்தை தான் என்னுடைய் "போர்ட்ஃபோலியோ"விலும் போட்டு இருக்கேன். இதை வெச்சி தான் இந்தியாவிலும் சரி, வெளியூரிலும் சரி பல்கலை முதல் தற்போதைய பணியிடம் வரை அனைத்தையும் வெற்றிகரமாக "அச்சீவ்" செய்திருக்கிறேன்.
அதை விடக் கொடுமையான மேட்டர் என்னன்னா, இந்த் மூஞ்சியப் பாத்துட்டு நம்ம நண்பரான "சாரு", உனக்கு அருமையான "சோழ மண்டல" முகம்னு சொல்லி ஒரு "போர்ட்ரைட்டு" போட்டு ஒரு ஃப்ரென்ச்காரிக்கு வித்துப்புட்டான். அவளும் ஒரு டிபிக்கல் "திராவிட மொகம்" கிடச்சதேன்னு வாங்கி இருக்கலாம்?! :-)) ஆக மொத்தம் வெளியூரிலும் நம்ம மொகம் "ஷோ" காமிச்சிகினு இருக்கும்.
மத்தபடி எங்க தாத்தாவிலிருந்து இன்ன பிற நண்பர்கள் வரை அனைவரும் "அக்யூஸ்டு" ஃபேஸ் மாதிரி இருக்கு இத மொதல்ல மாத்துன்னு சொல்லி அலுத்து போயிட்டாங்க. ஆனாலும் "சுயத்த" மறைக்க முடியுங்களா? முடியாதில்ல...அதான் எல்லாரும் பாத்துக்கோங்க.
5 comments:
பார்த்துட்டேனுங்.....
ஒரு அரசியல்வாதி உருவாகுகிறான் :-))
//ஆனாலும் "சுயத்த" மறைக்க முடியுங்களா? //
:))
வாழ்த்துக்கள் ! (மாடல் செய்கிறீர்கள் தானே ?)
முத்து,
//ஒரு அரசியல்வாதி உருவாகுகிறான் :-))//
இதெல்லாம் ஓவரப்பா...சோசியம் சொல்றீரோ? நமக்கு அதுலல்லாம் நாட்டம் இல்லப்பா...
;-)
*****
தமிழினி,
உண்மைய சொன்னா ஒங்களுக்கெல்லாம் நெக்கலா இருக்கா...ஹி..ஹி...
;-)
மணியன்,
வாழ்த்துக்களுக்கு நன்றிங்க...
//(மாடல் செய்கிறீர்கள் தானே ?//
அதெப்பிடி கரெக்டா கண்டுபிடிச்சீங்க...இன்னக்கி நேத்திக்கு இல்ல '96 ல் இருந்து மாடல்(கள்) செய்து கொண்டிருக்கிறேன்...
from study models to scale models...வயித்துப் பொழப்பு ஆச்சே!
மாடலிங் செய்ததுண்டு...கல்லூரிப் பருவத்தில் ;-)
Post a Comment