அவரவர் படித்த ஆறு, பிடித்த ஆறு, வெறுத்த ஆறு, ரசித்த ஆறு, ருசித்த ஆறு, சிரித்த ஆறு என்று காட்டாற்றின் வெள்ளம் போல் அலையாய் அடித்து செல்ல, எனக்கென்று குறிப்பிட்டு சொல்ல ஒரு ஆறாவது இருக்கிறதா என்று தேடியலைந்து எப்பொழுதும் வற்றியே இருக்கும் தென்பெண்ணையின் கானல் ஆறாய் வெக்கையின் உக்கிரத்தில் மரித்து போகும் சிறு நீரோடையின் நானலாக சுருங்கி சருகாகி குப்பையாற்றில் சிக்கித்தவிக்கிறேன்.
ஏற்கனவே எனக்கு பிடித்தவைகளை இங்கும், முத்துக்குமரனின் முத்துச்சரத்தில் ஒரு நன்மணியாக இல்லாவிட்டாலும் சுவைக்கச் சிறந்த முஸ்ஸெல்(mussel) ஆக சிலவும் சமைத்தாயிற்று. ஆயினும் "விடாது கருப்பு"வின் விடாத அன்பின்பால் :-) ஏதாவது ஒரு ஆறு அல்லது 6 என்ற இலக்கம் வரும்படியாக சிறிது குப்பையை கிளறவே இந்த ஆறு.
69ம்...96ம்...
69 என்ற இலக்கம் சிலருக்கு எதை எதையோ அறுவறுப்பான, வெறுக்கத்தக்க எண்ணங்களை நினைவூட்டினாலும் எனக்கு அது ஒரு மகிழ்ச்சிகரமான நிகழ்வே. ஆம் நான் இங்கே குறிப்பிடுவது தமிழக அரசின 69% இடஒதுக்கீடு. இடஒதுக்கீடு என்றதும் முதலில் எனது நினைவுக்கு வருவது மருத்துவர் ராமதாசும், எம்ஜிஆரும், வி பி சிங்கும் தான். இன்று (நவீன கால)இந்திய அளவில் ஒரு சமூக மாற்றத்திற்கான எழுச்சி ஏற்படுவதற்கான வித்து தமிழ் நாட்டில் '86 களில் உருவாக்கிய பெருமை ராமதாசையே சாரும். ஒரு சமூகத்தின் பெயரினால் அன்று அவர் போராட்டங்களை நடத்தாமல் இருந்திருந்தால் இன்று பல சமூகத்தினரும் இட ஒதுக்கீட்டின் சுவையை ருசிக்கவும் "மரம் வெட்டி"கட்சி என்று அழைக்காமலும் இருந்திருக்க முடியும். இன்று என்னால் க்லென் மர்கட்டுடனும், பௌல் கீட்டிங்குடனும் பணி நிமித்தமாக உரையாட முடிகிறதென்றால் அதற்கு காரணம் '96 ல் எனக்கு கிட்டிய 69% ஒதுக்கீட்டின் வாய்ப்பு. அதற்காக என்னை விட நன்மதிப்பெண் பெற்றவர்களின் வாய்ப்பை நான் தட்டி பறித்து விட்டேன் என சிலர் கொக்கரித்தால் என்னால் அவர்களைப் பரிதாபமாகவே பார்க்க முடியும். சென்னையின் புகழ் பெற்ற, கட்டிடகலை நுழைவுத் தேர்விற்காக தயார் செய்யும் கட்டிடக் கலை நிபுனர் "சாலமன் வேதமுத்துவின்" மாணவர்களை விட ஓரளவு சிறப்பான மதிப்பெண்களையே கட்டிடக்கலை நுழைவுத்தேர்வில் பெற்றிருந்தேன். நிச்சயமாக தமிழக அளவில் முதல் 25 மாணவர்களில் ஒருவனாக இருந்திருப்பேன்.
ஆனால் இன்று பொருளாதார அளவிலேயே இடஒதுக்கீட்டை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கதறுபவர்களுக்கு புறநகரிலும், கிராமங்களிலும் வாழும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட சமூகத்தினரின் வாழ்க்கையைப் பற்றி என்ன தெரியும். கடலூர் புனித வளனாரில் படிக்கும் பொழுது, மூன்றாம் தயாரிப்புத் தேர்வு முடிந்த பின்னர் "இரட்சகர்" அனைத்து மாணாக்கரையும் கூட்டி தொழிற்கல்வி குறித்தும், இட ஒதுக்கீடு பற்றியும் பேசாமலிருந்திருந்தால் நானும் இந்நேரம் கடலூர் சிப்காட்டில் ஒரு கெமிச்டாகவோ இல்லை ஒரு இடை நிலை ஊழியனாகவோ இருந்திருப்பேன். கடலூர் புனித வளனாரில் படித்தவனுக்கே இந்நிலை என்றால் நெல்லிகுப்பம் மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள கிராமத்தில் படித்த அல்லது வசிக்கும் மாணவர்களுக்கு எந்த அளவிற்கு தொழிற்கல்வி பற்றிய அறிவு/தெரிவு இருக்கும்?
அது மட்டுமல்லாமல் அவர்கள் வளரும் சூழலில் பிஈ எம்பிபிஎஸ் என்ட்ரன்ஸ் எக்சாம் போன்ற பேச்சுக்களை விட தே... பையா, கன்... ஓழி போன்ற புனிதமான சொற்களையே கேட்டிருப்பார்கள். இந்த சூழலில் பள்ளிக் கல்வி முடித்தலே பெரிதான காரியம். அதுவும் தாய் தந்தையர் பள்ளிக் கூட வாசலைத் தாண்டாதவர்கள் என்னும் பட்சத்தில் நிலைமை இன்னமும் மோசம். பெற்றோருக்கே தொழிற்கல்வி பற்றிய புரிந்துணர்வு இல்லாத பட்சத்திலும், இட ஒதுக்கீடு என்றால் என்ன என்பது பற்றிய் தெளிவான தெரிதல் இல்லாத பட்சத்திலும் பொருளாதார அளவில் இட ஒதுக்கீடு என்ற கூப்பாடு அர்த்தமற்றது.
இங்கே விவாததிற்கான விடயம் ஒரு முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவன் இழக்கும் தொழிற்கல்வி பற்றியல்ல, சமூகத்தின் மிகப் பெரிய அங்கமாக உள்ள ஒரு சமுதாயத்தின் மொத்த சதவிகிதத்தில் எத்தனை சதவிகிதம் பேர் தொழிற்கல்வியோ அ சமூகத்தில் ஒரு சுய அந்தஸ்துடனோ இருக்கிறார்கள் என்பது தான்.
வடக்கில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் போராடியதை விட முற்பட்ட சமூகத்தினர் நடத்திய போராட்டங்களே அதிகமாக ஊடகங்களில் வெளிவந்தது. இதற்கான காரணம் என்னவாக இருக்கும்?வட இந்தியாவில் இட ஒதுக்கீடு என்றால் என்ன என்பது பற்றிய புரிந்துணர்வு இல்லாமலே இன்னமும் இருக்கின்றனர் பிற்படுத்தப்பட்ட மக்கள். அங்கே அனைத்திந்திய மருத்துவ மற்றும் அறிவியற் கழகத்தில் நடத்தியது போன்று இங்கே தமிழ்நாட்டில் நடத்தியிருக்க வேண்டியது தானே. அவர்களுக்கு தெரியும் இங்கே அவர்களின் நாடகங்களை அரங்கேற்ற முடியாதென்று. அப்படி நடத்தியிருந்தால் இங்கே இரத்த ஆறு ஓடியிருக்கும்.
இப்பொழுது தான் முதல் தலைமுறையே அனுபவிக்கத் தொடங்கியிருக்கும் இந்த சமூக ரீதியிலான 69% இட ஒதுக்கீடு இன்னும் 69 ஆண்டுகள் அவசியம் தேவை. அப்பொழுதாவது அனைவரும் பீ அள்ளவும், மயிர் திருத்தம் செய்யவும் சமச்சீராய் சமத்துவம் செய்வார்கள் என எதிர்பார்ப்போம்.
69ன் மற்றுமொரு சிறப்பம்சம் 1969 woodstock festival. அதை ஒரு "Revival of Gypsy life" எனவும் சொல்லலாம். அது மட்டுமல்லாமல் '69 ல் தான் உலகின் மிகச் சிறந்த கட்டிடக்கலை நிபுனர்களான வால்டர் க்ரூபியசும், மீஸ் வேன்டெற் றோ வும் இயற்கை எய்தினர்.

13 comments:
உண்மையைச் சொல்கிறேன், அருமையான பதிவு. நன்கு யோசித்து எழுதி இருக்கிறீர்கள்.
ரசித்தேன்!
இன்னொன்று, 69 கலைஞர் முதன் முறையாக அரியணையேறிய வருடம். போன முறை, 96ல் மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது அவருடைய கார் என் என்ன தெரியுமா - 6996 :-)
இம்முறை தெரியவில்லை.
//ஆனால் இன்று பொருளாதார அளவிலேயே இடஒதுக்கீட்டை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கதறுபவர்களுக்கு புறநகரிலும், கிராமங்களிலும் வாழும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட சமூகத்தினரின் வாழ்க்கையைப் பற்றி தெரியும்.//
வாழ்க்கையைப் பற்றி "என்ன" தெரியும்.
//கடலூர் புனித வளனாரில் படிக்கும் பொழுது, மூன்றாம் தயாரிப்புத் தேர்வு முடிந்த பின்னர் "இரட்சகர்" அனைத்து மாணாக்கரையும் கூட்டி தொழிற்கல்வி குறித்தும்..//
ஏங்க இவரு நிஜ ரட்சகரா இல்ல நம்ம உலக ரட்சகர் மாதிரி...
//அவருடைய கார் என் என்ன தெரியுமா - 6996//
ஹி ஹி
இதுவும் பணிக்கர் சோழி உருட்டி சொன்னபடி செய்ததுன்னு சொல்ல சிலர் கிளம்பி வரப்போறாங்க!!.
விடாது கருப்பு,
நன்றி! :-)
வழிப்போக்கன்,
வ்ருகைக்கும் தகவலுக்கும் நன்றி...
அருண்மொழி
//வாழ்க்கையைப் பற்றி "என்ன" தெரியும்.//
திருத்திவிட்டேன்!
//ஏங்க இவரு நிஜ ரட்சகரா இல்ல நம்ம உலக ரட்சகர் மாதிரி...//
இரட்சகர் நான் படித்த பள்ளியின் முதல்வர் ...:-))
மற்றபடி உலக இரட்சகரைப் பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது.
வருகைக்கு நன்றி!
குண்டக்க மண்டக்க.,
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. ஏற்கனவே பொட்டீகடையின் கதவை அவரவர் இடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் நீங்கள் வேறு...
நீங்கள் குறிப்பிட்ட இரு வலைபதிவரும் ஒருவர் தான் என்பதை வலைபதிவாளர்கள் அனைவரும் அறிவர்.
அதை அவர் தன் வாயாலேயே உளறிக் கொட்டியதையும் அனைவரும் அறிவர்.இதையெல்லாம் ஒரு பொருட்டாக யாரும் மதிப்பதில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன். ஆகவே தாங்களும் அந்த அற்ப டாபர்களை மன்னிக்கவும் டாபரை ஒரு பொருட்டாக கருத மாட்டீர்கள் என நினைக்கிறேன்.
என்ன பன்றது கலரில் மயங்குபவர்களை திருத்தவா முடியும் ...ஹி...ஹி...
பொட்டீக்கடை,
நல்ல பதிவு. உண்மையான கருத்து.
முத்து (தமிழினி),
வருகைக்கும் கருத்து?!க்கும் நன்றி.
:-)
meetings with 'pritzker' Glenn murcutt and PM Paul keating ?..thats interesting, can u blog on those experiences ?.. நன்றி
shivatma.
//கடலூர் புனித வளனாரில் படித்தவனுக்கே இந்நிலை//
அண்ணே நானும் புனித வளனார் தான்னா.
96-ல ஒன்பதாம் வகுப்பு படிச்சிட்டு இருந்தேன் :-).
நான் ஹாஸ்டல்ல தங்கி படிச்சேன்.
சிவாத்மா,
கண்டிப்பாக எழுதுவேன்.
தங்களுடைய வருகைக்கு நன்றி.
***
வெட்டிப்பயல்,
அண்ணே என்றெல்லாம் அழைத்து அன்னியனாய் ஆக்கிவிடாதீர். சத்யா (அ) பொட்"டீ"கடை என்றே அழைக்கவும்.
நானறிந்த வகையில் "குழலி"யும், தாய்லாந்து(செந்தழல்) ரவியும் என்னை விட் மூத்தவர்கள். நா 95ல் பள்ளிக்கூடத்த விட்டு எஸ்கேப்...96ல் ரிப்பீட்ட்டு ;)
அப்புறம், விகடனில் வெளிவந்ததற்கு வாழ்த்துக்கள்.
"இன்று என்னால் க்லென் மர்கட்டுடனும், பௌல் கீட்டிங்குடனும் பணி நிமித்தமாக உரையாட முடிகிறதென்றால் அதற்கு காரணம் '96 ல் எனக்கு கிட்டிய 69% ஒதுக்கீட்டின் வாய்ப்பு."
இதைப் படிக்கும் போது மிக மிக மகிழ்ந்தேன். ஒரு வசதியற்ற சூழலில் படித்து முன்னேறத்துடிக்கும் இளைஞர்களுக்குக் கைகொடுக்கும் சட்டங்கள்; உருவாக்குவது மாத்திரமல்ல!;அதை நடைமுறைப் படுத்தவும்; சிக்கலை உருவாக்காமல் இருப்பதே அழகு!
யோகன் பாரிஸ்
//அண்ணே என்றெல்லாம் அழைத்து அன்னியனாய் ஆக்கிவிடாதீர்//
அண்ணேனு சொன்னா எப்படி அன்னியமாகும் :-) (நான் உங்களைவிட சின்ன பையன்றதால அண்ணனு சொன்னேன்)
//நானறிந்த வகையில் "குழலி"யும், தாய்லாந்து(செந்தழல்) ரவியும் என்னை விட் மூத்தவர்கள். நா 95ல் பள்ளிக்கூடத்த விட்டு எஸ்கேப்...//
நம்ம ஸ்கூல்ல இருந்து பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் இருக்கீங்க... ரொம்ப சந்தோஷமா இருக்கு :-)
நான் 97ல +1 சேர்ந்து கொஞ்ச நாள்லையே கிளம்பிட்டேன்...
Ref.Ft. Ratchagarரும், Ref.Ft.Agnel இல்லாததால எனக்கு அங்க படிக்க பிடிக்காம பாதியிலே வேற ஸ்கூலுக்கு போயிட்டேன்...
//அப்புறம், விகடனில் வெளிவந்ததற்கு வாழ்த்துக்கள்.//
நன்றி
Post a Comment