
இன்று காலை 30 குழந்தைகளை சுமந்து சென்ற வேன் விபத்துக்குள்ளானதில் 6 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் 6 குழந்தைகள் கவலைக்கிடமான நிலையில் கடலூர் அரசு மறுத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
வேனை ஓட்டிச் சென்ற ஓட்டுனர் செல்போனில் பேசிகொண்டே ஒரு பேருந்தை முந்த முயன்ற போது இவ்விபத்து நடைபெற்றதாக நண்பர்கள் தெரிவித்தனர்.
இறந்து போன குழந்தைகளில் சில குடும்ப நண்பர்களின் குழந்தைகளும் அடக்கம். ஒரு பாவமும் அறியாத இச்சிறார்களின் ஆன்மா அமைதியடைய என்னுடைய மௌன அஞ்சலி.
10 comments:
உயிர் பிரிந்த பிஞ்சு நெஞ்சங்களின் ஆத்மா சாந்தி அடைய பிரார்தனைகள்.:-(
மிக வருந்ததக்க நிகழ்ச்சி. நானும் உங்கள் அஞ்சலியில் பங்கு கொள்கிறேன்.
இறந்து போன அந்தக் குழந்தைகளுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன். அத்தோடு அந்தக் குழந்தைகளின் ஆத்மா சாந்தியடையவும் பிரார்த்தித்துக் கொள்கின்றேன்
எனது அஞலியையும் இதன் மூலம் தெரிவிக்கிறேன்.
உங்கள் துயரத்தில் நானும் பங்கு கொள்கிறென்
உங்களின் இரங்கல்களோடு என்னையும் இணைத்து கொள்கிறேன்.பிள்ளைச் செல்வங்களை இழந்து வாடும் பெற்றோர்க்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்
அலுவலக நண்பர் சொன்ன செய்தி அறிந்து துயரத்தில் நானும். பிள்ளைச் செல்வங்களை இழந்து வாடும் பெற்றோர்க்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
வாகனம் ஓட்டுகையில் செல் பேசிட தடை செய்ய வேண்டியது கட்டாயம்.
வாழும் வயதில் மரணத்தைத் தழுவிய "இளம் மலர்களுக்கு" என் அஞ்சலி! குழந்தைகளைப் பலி கொடுத்து வாடும் பெற்றோருக்கு மனவமைதியை இறைவனருள வேண்டி! இந்த செல்பேசி பாவித்துக் கொண்டு வாகனமோட்டும் சாரதிகளைத் ,திருத்த ஏதாவது அரசாங்கம் செய்யவேண்டும். இவர்களைக் கொலைகாரர்களாகக் கருதிக் கடும்;தண்டனை மேற்குலக நாடுகள் போல் கொடுக்க வேண்டும்.
யோகன் பாரிஸ்
இது மாபெரும் கொடுமை.
மன வருத்தத்துடன்....
தனிமனிதனின் கவனக்குறைவு எத்தகைய துயரத்துக்கு வழிகோலிற்று.
துயருறும் அனைவருடனும், துயர்பகிர்கின்றேன்.
Post a Comment