ஆதிக்க சாதி வெறி பிடித்த பார்ப்பனர்கள் கதறுவது மனதுக்கு இதமாக இருக்கின்ற பொழுதும் இது மாதிரியான வக்கிரம் உனக்குத் தேவையா என்று உள்மனம் தலையின் மேல் செல்லமாக குட்டுகின்ற பொழுதும், நூற்றுக்கணக்கான ஆண்டுகள் இல்லாத ஒன்றைச் சொல்லி அடிமைப்படுத்திய சமத்துவம்(சாதி ரீதியிலான) என்ற வார்த்தை இச்சமூகத்தில் உருவாவதற்கு காரணமாக இருந்த மனு தர்மத்தை உருவாக்கியவனும் அவன் வழி வந்தவனும் கதறியழுவதைப் பார்ப்பதற்கும் அதை இந்நூற்றாண்டில் கண்டு களிப்பதற்கும் இதமாகவே இருக்கின்றது.
இன்று இணைய ஊடகம் உட்பட இந்தியாவின் அனைத்து ஊடகங்களும் மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணிக்கும் அனைத்திந்திய மருத்துவ அறிவியற்கழகத்தின் இயக்குநர் வேணுகோபாலுக்கும் இடையேயான அல்லது மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்துக்கும் அதன் பராமரிப்பில் இயங்கி வரும் அனைத்திந்திய மருத்துவ அறிவியற்கழகத்திற்கும் இடையேயான நிர்வாக மோதலை அளவிற்கதிகமாகவே ஊதி பெரிதாக்கி விட்டன. அதற்கான காரண காரிய உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெள்ளத் தெளிவாக இருந்தாலும் அதைப் புரிந்து கொள்ள ஆதிக்க மற்றும் தரகு சாதி வெறி பிடித்த மரமண்டைகள் மறுக்கலாம்.
இங்கு எனக்குத் தோன்றும் கேள்விகள் மிக இயல்பான ஒன்றே. இதையே தான் முத்து(தமிழினி)வின் முந்தைய பதிவில் எழுப்பியிருந்தேன். அதற்கு இதுவரை யாரும் பதிலளித்ததாகவோ அல்லது அது தொடர்பாக விவாதித்ததாகவோ தெரியவில்லை. வலைபதிவில் விவாதிப்பதின் மூலம் ஒரு மயிரையும் யாரும் சாதித்ததாக தெரியவில்லை என்றாலும் வலைபதிவாளர்கள் ஒரு சமூகமாக இருப்பதினால் ஏற்பட்ட சில பல கருத்துப்பரிமாற்றங்களினால் பலரும் (நான் உட்பட) சிலபல விடயங்களை அறிந்து கொண்டதுண்டு.
ஆனால் சிறப்பானதொரு எழுத்தை வழங்கிக் கொண்டிருப்பதாக தனக்குள்ளேயே(தங்களுக்குள்ளெயே) மார் தட்டி கொண்டிருக்கும் அறிவுக் கொழுந்துகளுக்கு இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் போனதேன்?எந்த அடிப்படை அறிவு???
மத்திய அரசாங்கத்தினால் செயல்படுத்தப்படவிருக்கின்ற ஒரு சட்டவடிவம் அனைத்திந்திய் மருத்துவ அறிவியற்கழகத்தின் மருத்துவர்களை எவ்விதத்தில் பாதிக்கும்? அதற்காக 3 வாரங்கள் வேலைநிறுத்தம் செய்ய வேண்டிய அவசியம் என்ன? அரசாங்க பணத்தின் மூலம் இயங்கும் எந்தவொறு நிறுவனமும், அத்தொழிலாளிகளுக்கு எவ்விதத்திலும் பாதிப்பு வராத வகையில் இம்மாதிரியான தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதாக வரலாறு கூறவில்லை. அப்படியே இருந்தாலும் இட ஒதுக்கீடுக்கும் தற்போது வேலையில் இருக்கும் மருத்துவர்களுக்கும் என்ன சம்மந்தம். பின்னாளில் இட ஒதுக்கீட்டின் மூலம் நியமனம் ஏற்படுகின்ற நிலையை எதிர்த்து இந்த போராட்டம் நடந்தது என்று பலரும் பல்லிளிக்கும் பட்சத்தில், தகுதியுடைய பிற்பட்ட வகுப்பை சேர்ந்த ஒரு மருத்துவன் மருத்துவனாக வேலை செய்வதில் தவறில்லையே..என என்னாலும் சவடால் விட இயலும். இன்று உலகின் பல சிறந்த நிபுணர்களும், அறிவாளிகளும் அனுபவத்தினால் கற்று கொண்டு முன்னேறியவர்களேயொழிய வானத்திலிருந்து பறந்து வரும் தேவதைகளைப் போன்று பல்கலைக்கழகத்திலிருந்து நேரடியாக குதித்தவரல்லர்.
ஒரு நிறுவனத்தின் மூலம் கல்வி பயிலும் மாணவர்கள் ஒரு போராட்டம் நடத்தும் பட்சத்தில் அது ஒரு அடையாள வேலை நிறுத்தமாக மட்டுமே இருக்கும் (அதுவும் அவர்களை நேரடியாக பாதிக்காத வகையில்). ஆனால் இங்கே அரசாங்க பணத்தில் கல்வி பயிலும் மாணவர்களும், அரசாங்க பணத்தை சம்பளமாகப் பெற்று ஊழியம் செய்ய வேண்டிய மருத்துவர்களும் தங்களுக்கு துளியும் சம்மந்தமில்லாத ஒரு சட்டத்திற்காக அடாவடித் தனத்தில் ஈடுபடுகிறார்கள். இதைத் திறம்பட சமாளிக்க வேண்டிய இயக்குநர்(வேணு) அதை தீர்க்க முயலாது மாணவர்களை மட்டுமல்லாமல் ஊழியம் செய்ய வேண்டிய மருத்துவப் பணியாளர்களையும் தூண்டி விட்டு அனைத்திந்திய மருத்துவ அறிவியற்கழகத்தின் பணிகளை முடக்கி விட்டுக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல், மாணவர் ஊழியர் மட்டுமன்றி சில பல வெளியாட்களையும் அரசாங்கக் கட்டிடத்தில் கூட்டம் போட்டு அரசாங்கத்திறு எதிராக ஆற்ற வேன்டிய பணிகளைப் பற்றி விவாதிக்கிறார்கள். இதையெல்லாம் கூலிக்கு மாரடிக்கும் எழவு வீட்டுப் பெண்களைப்போல தெள்ளத் தெளிவாக அரங்கேற்றியிருக்கிறான் பிஜேபியைச் சேர்ந்த சாதி வெறி பிடித்த வேணுகோபால்.
இதைப் பார்த்துக் கொண்டு அமைச்சரும் அமைச்சகமும் சும்மா கைகட்டி வாய்பொத்தியிருக்க வேண்டுமாம்.
வேணுகோபால் செய்தது தவறு என்றே வைத்துக்கொண்டாலும் கூட அவருக்கு என்ன தவறுசெய்தீர்கள் என்று அறியத்தந்து அவர் தரப்பு வாதத்தினை கேட்ட பிறகல்லவா மேல் நடவடிக்கைஎடுக்க வேண்டும்.
என்னே ஒரு சாதிப்பாசம் ஸ்ரீனிவாஸுக்கு...
ஜெயலலிதாவின் ஆணவப் போக்கையும், அன்புமணியின் கடமையாற்றலையும் சரிசமானமாகப் பார்ப்பதே தவறு என்பேன் நான். தமிழ்நாட்டில் நடந்தது அரசு ஊழியர்கள் தமக்கன அவசிய/தேவையான படியுயர்வு சம்பள உயர்வு தொடர்பாக போராட்டம் நடத்தினார்கள். அது தொடர்பான எந்தவொரு கோரிக்கைக்கும் ஜெயலலிதா செவி மடுக்க மறுத்ததால் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்ந்தது. இதனால் டெஸ்மா சட்டத்தை இயற்றி அனைவரையும் வேலையிலிருந்து தூக்கியெறிந்தது இந்த ஆணவம் பிடித்த பெண்மணி. பின்னர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கம் போல் குட்டு வாங்கியும், பாராளுமன்றத் தேர்தலில் தர்ம அடி வாங்கியும் பசு வேடம் பூண்டது ஜெயா என்கிற பிசாசு.
ஆனால் அனைத்திந்திய மருத்துவ அறிவியற்கழகத்தில் நடைபெறும் சமாச்சாரமோ இதற்கு நேரெதிர். துளியும் சம்மந்தமில்லாத விடயம். இரண்டையும் சம்மந்தப்படுத்துவதன் மூலம் மற்றுமொரு முறை ஸ்ரீனிவாஸ் தம்முடைய மங்கிய மூளையை இவ்வாறாக வெளிப்படுத்துகிறார்.
ஒட்டுமொத்தமாக அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்த ஜெயலலிதாவின்நடவடிக்கைக்கும், அன்புமணி செய்திருப்பதற்கும் என்ன வேறுபாடு.
மொத்தத்தில் நிர்வாகத்தை திறம்பட இயக்க வேண்டிய இயக்குநர் நிர்வாகத்தை ஒட்டு மொத்தமாக சீர்குலைத்து விட்டார். இதை விளக்கமளிக்க வேண்டிய நேரத்தில் விடுப்பு எடுத்துக் கொண்டு திருட்டுப் பூனை மாதிரி ஓடி ஓளிந்து கொண்டார். இவரை வேலையிலிருந்து துரத்தியடித்தது மிகச் சரியே. திறமை மிக்கவர் பேரறிவாளி என்று கதறுபவர்கள் இவரது இந்த கேடுகெட்ட நிர்வாகத்தைப் பற்றியும் சிறிது எழுதினால் நானும் படித்து தெரிந்து கொள்வேன்.
பலரும் இள வயது அமைச்சரினால் தான் இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம் என்று அலறுவதைக் கண்டு சிரிப்பதா அழுவதாவென்று தெரியவில்லை.ஒரு சாதாரண இயக்குநருக்கே உதவாக்கரை கட்சியான பிஜேபியின் ஆதரவு இருக்கும் பொழுது பழம் தின்னு கொட்டை போட்ட பல தலைவர்களின் ஆதரிவிலேயே அன்புமணி செயல்பாடுகள் அமைகிறது என்பதில் ஐயமேதும் இல்லை.
அது மட்டுமல்லாமல் கம்யூனிஸத் தோழரான யெச்சூரி முகத்தில் துப்பினாலும் தகும். அன்றாடங்காய்சிகளின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக 18ம் நூற்றாண்டில் ஏற்படுத்திய தொழிலாளர்களூக்கான தொழிற் புரட்சி இந்தியாவில் பார்ப்பனரின் அடிவருடுவது கேவலமான விடயம்.
14 comments:
பத்மவியூகத்தில் அரவாணன் அடிக்கும் அபிமன்யூக்கள் என்ற பதிவிலும் பத்மவியூகம் - அபிமன்யு,அரவாணன் என்ற பதிவுகளில் கூறியது
//பெரியவர்களின் கட்டமைப்புகள் பெரியாரினால் உடைக்கப்பட்டதால் அபிமன்யூக்கள் வாழ இங்கே அரவாணன்கள் கிடைப்பதில்லை, புழுத்துப்போன வீச்சங்களை எதிர்த்து அரவாணன்கள் உரக்க சமூகநீதிக் குரல் எழுப்புவதால் அரவாணன்கள் மீதே அபிமன்யூக்களின் தாக்குதல். பீடங்கள் உடைந்து அரவாணன்கள் எழுந்து கொண்டிருக்கும் காலம் இது, அபிமன்யூக்கள் புரிந்து கொள்ளவில்லையென்றால் அரவாணன்களின் பத்மவியூகத்தில் மாட்டி அடிபட நேரிடும்.//
அடிவாங்கிய முதல் அபிமன்யூ வேணுகோபால், இனியும் பல அபிமன்யூக்கள் அடிபடுவார்கள்...
ஒரு நிறுவனத்தின் மூலம் கல்வி பயிலும் மாணவர்கள் ஒரு போராட்டம் நடத்தும் பட்சத்தில் அது ஒரு அடையாள வேலை நிறுத்தமாக மட்டுமே இருக்கும் (அதுவும் அவர்களை நேரடியாக பாதிக்காத வகையில்). ஆனால் இங்கே அரசாங்க பணத்தில் கல்வி பயிலும் மாணவர்களும், அரசாங்க பணத்தை சம்பளமாகப் பெற்று ஊழியம் செய்ய வேண்டிய மருத்துவர்களும் தங்களுக்கு துளியும் சம்மந்தமில்லாத ஒரு சட்டத்திற்காக அடாவடித் தனத்தில் ஈடுபடுகிறார்கள்.
பொழுது போகாமல் அவர்கள் வேலை நிறுத்தம் செய்தார்களா இல்லை மேற்படிப்பில் இட ஒதுக்கீடு, உயர்கல்வியில் இட ஒதுக்கீடு தங்கள் வாய்ப்புகளை பாதிக்கும் என்று வேலை நிறுத்தம் செய்தார்களா என்பது கூடத் தெரியாமல் எழுதும் பொட்டிக்கடை கற்றது கடுகளவு கூட இல்லை,
நினைப்பு ஏதோ எல்லாம் தெரியும் என்று.
ரவி ஸ்ரினிவாஸின் சாதி வெறியை நன்றாகத் தோலுரித்துள்ளீர்கள்...இப்படி பலர் முன்வந்து செய்தால் இவர் இணையத்தை விட்டு ஓடிவிடுவார்
அந்த 'சாதி வெறி'க்கு ஒரு உதாரணம் இது
http://ravisrinivas.blogspot.com/2005/05/blog-post_15.html
குழலி,
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
//அடிவாங்கிய முதல் அபிமன்யூ வேணுகோபால், இனியும் பல அபிமன்யூக்கள் அடிபடுவார்கள்...//
அடி கொடுக்க வேண்டும்...அதுவும் பிடறியில் கொடுக்க வேண்டும் சுதாரிப்பதற்கு வாய்ப்பு தராமல்...
jafar_ali_khan,
வருகைக்கு நன்றி.
அனானி,
நான் கற்றது அணுவளவு கூட அல்ல என்பது எனக்கு நன்றாகவே தெரியும். கடுகளவென்று தாங்களாகவே ஏற்றி விடாதீர்கள்.
இந்தியாவில் வேறெங்குமே மத்திய அரசின் தொழிற்கல்வி மற்றும் உயர்கல்வி நிலையங்கள் இல்லையோ? உண்மையிலேயே இது பெரும்பான்மையான மாணவர்களை பாதிக்குமெனில் இந்நேரம் இந்திய தேசமேயல்லவா ஸ்தம்பித்திருக்க வேண்டும். ஒரு வேணுகோபால் என்னும் வெட்டி அரசியல்வாதியின் சொந்த நலனுக்காக நடந்ததே அந்த அனைத்திந்திய மருத்துவ அறிவியற்கழகத்தில் அரங்கேறிய கூத்து...
உமக்கு இந்த விளக்கம் புரியாமலும் போகலாம் அல்லது புரிந்து கொள்ளவும் மறுக்கலாம். ஆரிய மாயையில் இதெல்லாம் சகஜம் தானே.
/*வலைபதிவில் விவாதிப்பதின் மூலம் ஒரு மயிரையும் யாரும் சாதித்ததாக தெரியவில்லை
*/
:)))
//பின்னர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கம் போல் குட்டு வாங்கியும், //
பொருட்குற்றம். 2003 சுப்ரீம் கோர்ட் அம்மாவை தட்டி
கொடுத்தது. எப்படி என்றால் 'Government employees
do not have moral, ethical, legal right
to strike' என்று சொன்னது.
AIIMS டாக்டர்களுக்கும் இது பொருந்தும்.
2006 சுப்ரீம் கோர்ட் என்ன சொல்லுதுன்னு பார்ப்போம்.
விடாது கறுப்பு அவர்களின் பின்னூட்டம்.
********
இட ஒதுக்கீடு என்ற பேச்சை எடுத்தாலே பார்ப்பனர்களுக்கு எங்கெல்லாமோ நோகுது! பார்ப்பன மாணவர்களைத் தூண்டிவிட்டு போராட்டம் செய்யச் சொன்ன வேணுகோபாலை நடுத்தெருவில் நிறுத்திவைத்து சவுக்கால் அடிக்க வேண்டும். அவனை பதவி நீக்கம் செய்தது சரியே.
அவனுக்கு ஆதரவாக பதிவுகள் எழுதும் அன்புடன்பாலா, ரவி சீனிவாஸ், பரம்ஸ் போன்ற குஞ்சுகளை அடித்து துரத்துவோம்.
thala enRenrum ampudan valavooda venugopal kuzhalisaiyaik keeddeengalaa? 18 vayathiyE doctor aaginaaraam. ithai anpumaniya hate paNratha solRatha illa veNugopal mEla lovennu solRathA?
ஆதிரை,
பிழையை சுட்டியதற்கு நன்றி.
நானும் ஆகஸ்ட் 17ம் தேதிக்காக காத்திருக்கிறேன். பார்க்கலாம் சமூக நீதி எவ்வாறு சந்தி சிரிக்கப் போகிறதென்று...
பரமு,
வந்துட்டியாப்பா...
//Mr. பொட்டி எ கருப்பு எ திராவிட மாயையே,//
காமெடி டைம் இல்லப்பா இது. உமக்கு எப்பவுமே தமாசு தான்.
//வேணுகோபால் போன்றவர்கள் உலகத் தரம் வாய்ந்த AIIMS உருவாக காரணமாக இருந்தவர்கள். //
வேணுவே AIIMS ல தான் படிச்சதா சொல்றாங்க. நீர் என்னன்னா AIIMS உருவாகவே காரணம் என்று வேணுவை சுட்டுகிறீர்.
என்னவோ போங்க...
ரவி சீனிவாசு இத்தனை காலமும் காட்டிவந்த முற்போக்கு வேடம் கலைக்கப்பட்டதற்கு நன்றி.
செல்லக்கிளி
//இன்று இணைய ஊடகம் உட்பட இந்தியாவின் அனைத்து ஊடகங்களும் மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணிக்கும் அனைத்திந்திய மருத்துவ அறிவியற்கழகத்தின் இயக்குநர் வேணுகோபாலுக்கும் இடையேயான அல்லது மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்துக்கும் அதன் பராமரிப்பில் இயங்கி வரும் அனைத்திந்திய மருத்துவ அறிவியற்கழகத்திற்கும் இடையேயான நிர்வாக மோதலை அளவிற்கதிகமாகவே ஊதி பெரிதாக்கி விட்டன.//
அவாளுக்கு எதிரா எது நடந்தாலும் அப்படித்தான் குய்யோ முறையோ என்று கத்துவார்கள்.
ரோட்ல போர எவனயாவது புடிச்சி மண்ணண்ணெய ஊத்தி கொளுத்திட்டு இட ஒதுக்கீட எதிர்த்து தீக்குளித்தார், அப்படின்னு பத்திரிக்கையில அவனுவளே எழுதிவிடுவானுங்க. என்ன பண்றது.
///வலைபதிவில் விவாதிப்பதின் மூலம் ஒரு மயிரையும் யாரும் சாதித்ததாக தெரியவில்லை/////
இதனாலதான்ப்பு நான் ரொம்ப நாளா எதுவும் எழுதல...
Post a Comment