போலியென்றார்
பொறம்போக்கென்றார்
ஜாட்டானென்றார்
ஜென்ம புத்தியென்றார்
சாதி வெறியனென்றார்
சாதிப்பெருமை
பேசுகின்றேனென்றார்
சூரியத்தனமான
கண்டுபிடிப்பென்றார்
குழுவென்றார்
குழுமமென்றார்
கீழ்ப்பாக்கத்திற்கு
வழிதேடும்
கீழ்ப்பாக்கமென்றார்
நடுநடுவே
நட்சத்திரமென்றார்
உப்புசப்பில்லாமல்
எழுதியதை
அச்சேட்டிலேற்றினார்
அதை மறுபதிவு
செய்து
பின்னூட்டப்புகழ்
பட்டமளித்தார்
ஒருகூட்டார்
தவழ்ந்தேன்
நடந்தேன்
ஓடினேன்
மூச்சிரைத்தேன்
முக்கினேன்
முனகினேன்
திக்கினேன்
தவறினேன்
எட்டி நின்று
பார்த்ததில்
நானும் கடந்த
பத்து மாதங்களாக
கிறுக்கியதில்
குறைப் பிரசவமாய்
இதுவும் ஐம்பதாக
இன்னுமொரு பதிவு
***
-ஐக்கிய அமெரிக்க மாகாணங்களின் எண்ணிக்கை 50.
-தொலைக்காட்சி ஒளிபரப்பான ஹவாய் 5O என்றிருப்பது,ஹவாய் 50ம் மாகாணமாய் இருப்பதால் தான்.
-தானியங்கி துப்பாக்கியின் தோட்டாவின் அளவு 0.50 அங்குலம்.
-யூதர்களின் மர்ம? குழுவான கபாலாவில் உண்மையை புரிந்துணர 50 கதவுகளும், அசுத்தத்தை உணர 50 கதவுகளும் திறக்கப்பட வேண்டும்.
-சொல் வழக்கத்தில் சரிசமான பகுதியை 50 - 50 என்று விளிப்பதுண்டு.
-புகழ்பெற்ற அமெரிக்க கானாப் புகழ் பாடகர் ஒருவரின் அடையாளப் பெயர் 50 சென்ட்ஸ்.
-திருமண வாழ்வில் 50 ஆண்டு நிறைவை பொன்விழாவாகவும் கொண்டாடுவர்.
-இந்தியா குடியரசானது 1950ல்.
-புகழ் பெற்ற இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் மொகிந்தர் அமர்நாத் பிறந்ததும், சுதந்திர இந்தியாவின் அரசியல் நட்சத்திரமான இந்தியாவின் இரும்பு மனிதன் "சர்தார் வல்லபாய் படேல்" இறந்ததும் 1950.
-நவீன இந்தியாவின் சாத்தானாகக் கருதப்படும் குசராத்தின் முதன்மந்திரி "மோடி" பிறந்ததும் 1950 தான்.
- 565 சுயாட்சி, சார்பு சுயாட்சி மாகாணங்கள் இணைக்கப்பட்டு இந்தியா என்ற ஒரு குடியரசு நாடு உருவானதும் '50ல் தான்.
8/05/2006
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
வாழ்த்துகள்,
மென்மேலும் வளர, உயர!
எஸ்கே,
வாழ்த்துக்களுக்கு நன்றி!
50க்கு வாழ்த்துக்கள்..
100 க்கு இப்பொழுதே வாழ்த்துக்கள்.
//நானும் கடந்த
பத்து மாதங்களாக
கிறுக்கியதில்
குறைப் பிரசவமாய்
இதுவும் ஐம்பதாக
இன்னுமொரு பதிவு//
50 அப்புறமும் ஆசை வரட்டும் :)
பி.கு :
பின்னூட்டம் இந்தவரிகளுக்கு மட்டும் :)
சிவபாலன்,
வாழ்த்துக்களுக்கு நன்றி!
***
கோவி.கண்ணன்,
நன்றி...
வயசு அதிகமானா ஆசையும் அதிகமாகும்னு சொல்லறாங்க:-))
//பின்னூட்டம் இந்தவரிகளுக்கு மட்டும் :)//
ஆனாலும் இது கொஞ்சம் ஒவர். ஏதோ மத்தவங்க எல்லாம் நா இணையத்தில் வாங்கின பட்டங்களுக்கு வாழ்த்து சொன்னா மாதிரி...:-)))))))
காத கொடுங்க...ஒரு சீக்ரட் மேட்டர் கேக்கனும்...சமீபமா கோவி.கண்ணன் என்ற பேர அடிக்கடி நியூஸ்ல பாக்கரேன். நீர் தானா அது...;-)
சும்மா தமாசுக்கு தான் கேட்டேன். ஆட்டோவெல்லம் அனுப்பிடாதீங்க.
வாழ்த்துக்கள் அசைவப்புகழ் பொட்டீக்கடை அவர்களே
பானை[pot],
//போலியென்றார்
பொறம்போக்கென்றார்
ஜாட்டானென்றார்
ஜென்ம புத்தியென்றார்
சாதி வெறியனென்றார்
சாதிப்பெருமை
பேசுகின்றேனென்றார்
சூரியத்தனமான
கண்டுபிடிப்பென்றார்//
ஆகா.அருமை.எளிய தமிழில் அழகாகச் சொல்லியுள்ளீர்கள். உங்களின் பல பதிவுகளைப் படித்துச் சுவைத்திருக்கிறேன். 50வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
தமிழினி,
வாழ்த்துக்களுக்கு நன்றி...
அசைவப்புகழா? செயல் தலையே இப்படி சொல்லிட்டா நா எங்க போவரது?
:-(
***
வெற்றி,
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.
உங்களைப் போன்றோரின் ஆதரவில் தான் நான் இன்னமும் இணையத்தில் காலம் தள்ளிக் கொண்டிருக்கிறேன்.
யோவ் இலக்கியவாதி ஆகிட்டேங்கிறதை சொல்லவே இல்லை.
50க்கு வாழ்த்துகள்
முத்துக்குமரன்,
இலக்கியவாதின்னு பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதீங்க ஓய்!
அப்புறம் மெய்யான "எளக்கியவாதிங்க" சண்டைக்கு வந்துடப் போறாங்க...
என்னவோ...வந்திருந்து வாழ்த்தியதற்கு மிக்க நன்றி.
//காத கொடுங்க...ஒரு சீக்ரட் மேட்டர் கேக்கனும்...சமீபமா கோவி.கண்ணன் என்ற பேர அடிக்கடி நியூஸ்ல பாக்கரேன். நீர் தானா அது...;-)
சும்மா தமாசுக்கு தான் கேட்டேன். ஆட்டோவெல்லம் அனுப்பிடாதீங்க.//
அடிக்கடி நீயூஸ்ல வர்றவங்களுக்கு போலிப் பதிவு தான் இருக்கும் ... என் பெயரில் போலி ஆளே இருக்கு !
ஆட்டோவா ? ஆட்டை அனுப்பலாம் ... அதான் கோவிலில் கெடா வெட்டலாம் என்று சொல்லிட்டாங்களே !
:))
ஆகா எல்லாரும் அம்பது கொண்டாட்ரீங்களா ? நான் என்னோட நாலு வலை ப்பூவையும் சேத்து 150 தாண்டியாச்சேய்யா :( நான் மிஸ் பன்னிட்டேன் சரி 500 வது பதிவுக்கு பார்ட்டி வச்சா போச்சு
சரி சரி சொந்த கதை எதுக்கு வந்த வேலைய பாக்கலாம்
வாழ்த்துக்கள்
பொட்டீக்கடை,
வாழ்த்துக்கள்!!
சீக்கிரமே நூறு தாண்டவும்... :)
வாழ்த்துகள், கலக்குங்க
Post a Comment