8/24/2006

குறி அறு(ரி)ப்பு - அரசியல் - விளிம்பு நிலை

கடந்த வாரத்தில் பூனைக்கு மணி கட்டுவதாக நண்பர் லக்கி லுக்கின் லிவிங் ஸ்மைல் மீதான விமரிசனமும் அதைத் தொடர்ந்து எழுதப்பட்ட பல பதிவுகளும் பின்னூட்டங்களும் அவரவர் கருத்தை முன் வைத்தாலும் விடாது கருப்பு - ரோசாவசந்த் ஆகிய பதிவர்களின் சொற்போர் சில தன்னிலை விளக்கங்களையும் பல யோசிக்க வைக்கும் கருத்துகளையும் முன்வைத்திருந்தனர்.

இந்தியாவில் சுயமரியாதைக்கும் தற்பெருமைக்கும் வித்தியாசம் அறியாத அறியாமைக்கூட்டம் இருக்கும்வரை இது மாதிரியான கருத்துகள் ஏற்படுவதில் ஆச்சர்யம் இல்லை. இந்தியாவில் ஒரு ஆண் 30,35 வரை திருமணம் செய்ய விரும்பாமல் இருந்தால் அவனை குறியற்றவன் என்பதில் தொடங்கி அவனுக்கு "எயிட்ஸ்" என்பது வரையான கருத்துகளும் கிசுகிசுப்புகளும் ஏற்படுகின்ற வாய்ப்புள்ளது. இதுவே ஒரு பெண்ணுக்கு திருமணமாகாமல் இருந்தால் அவளை தேவடியா என்பதில் தொடங்கி ஒன்றுக்கும் உதவாத சாலையின் ஓரத்தில் ஓசி பீடிக்காக காத்திருக்கின்ற தெருபொறுக்கிகளும் தன் குறிஅரிப்பு தாங்காமல் நா கூசாமல் "வரியா" என்பது வரை கேட்பார்கள். இதுவே ஒரு இளம் விதவையாக இருந்து விட்டால் போதும் அவள் வேலை பார்க்கின்ற இடம் தொடங்கி குடியிருக்கும் வீடு வரை பார்க்கின்ற அனைத்து ஆண்களும் ஒரு நாள் படுப்பதற்காக அலையும் சமூகம் தான் "இந்திய" "தமிழக" சமூகம். மேலை நாடுகளிலும் இவை உள்ளது. ஆனால் அங்கெல்லாம் பாதிக்கப்படுகின்ற ஆணோ அல்லது பெண்ணோ வெளிப்படையாக எதிர் கொள்ள முடியும் ஆனால் இந்தியாவில் அது சாத்தியப்படுமாவென்று நாம் யோசிக்கக் கூட முடியாத நிலையில் இருக்கிறொம். என்னதான் பன்மொழிப் புலமை இருந்தாலும், மெத்தப் படித்திருந்தாலும் "கால் சென்டர்" பணியாட்களை விபச்சாரி என்று கட்டம் கட்டும் அளவிற்கு கீழ்த்தரமான சமூகம் நமது சமூகம். பாலியல் தொழிலாளர்களை விபச்சாரிகள் என்றழைக்கக் கூடாதெனவும் விபச்சாரம் என்பதையே அகராதியிலிருந்து எடுக்க வேன்டுமெனப் போராடி வரும் சமூகத்தினரும் இங்கே தான் இருக்கிறார்கள். அறியாமையினால் ஏற்படுகின்ற உடல் உபாதைகளையும், பால்வினை நோய்களையும் தவிர்க்கும் பொருட்டுதான் ஆணுறை போன்றவற்றை பயன்படுத்த அரசாங்கம் ஊக்குவிக்கின்றதேயொழிய அனைவரும் பாதுகாப்பான முறையில் குறி அரிப்பையும் இச்சையையும் தீர்த்துக் கொள்ள அல்ல என்பது இந்த படித்த முட்டாள்களின் மரமண்டைகளில் ஏறாதது வியப்பல்லவே.

உலகில் வேறெங்கும் இல்லாத அளவு நம்பிக்கை துரோகம் நடப்பது இந்தியாவில் மட்டுமே. குறி அரிப்பினால் என்றாவது தவறு செய்பவர்கள் தான் மேலை நாடுகளில் உண்டேயொழிய இந்தியாவைப் போன்று திருமாண பின்பும் விரையரிப்பு தாங்காமல் கள்ளக் காதலனோ, காதலியோ வைத்திருப்பவர்கள் மிகவும் குறைவு. இதனடிப்படையில் தான் நடிகைகளும் பெண்ணுரிமை பேசி வருகிறார்கள்.

கைக்கஞ்சு வாய்க்குப் பத்து சமாசாரம்...

இது போன்ற அனுபவங்கள் "விடாது கருப்பு" மட்டுமல்ல பலருக்கும் ஏற்படுகின்ற வாய்ப்புள்ளது. தனியாக வாழ முயல்கின்ற ஆண், பெண் என்கிற சமூகத்தினால்? அங்கீகரிக்கப்பட்ட பாலினத்துக்கே அதே சமூகத்தினால் ஏற்படுகின்ற துன்பங்களை எண்ணிப் பார்க்கும் பொழுது, பெற்றொர் தொடங்கி, உற்றார் உறவினர் சகோதரர் வரை அனைவராலும் ஏற்றுக்கொள்ள இயலாத ஒதுக்கப்பட்ட சமுகத்தைச் சார்ந்தவர்கள் பிச்சை எடுக்காமலோ இருன்ட தொழில் செய்யமலோ எப்படி வாழ முடியும். படிப்பறிவில்லமல், பொருளாதாரத்தில் நலிந்து அறியாமையினால் அல்லல் படுகின்ற ஆண் பெண் சமூகங்கள் இருக்கும் நிலையில் ஒருவர் நான் இவ்விரண்டிலும் சேராதவரின் சுய முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் எந்தளவிற்கு உள்ளது இந்த இந்திய வல்லரசில்?!. இன்று பார்பனரின் சூழ்ச்சியால் தான் சாதிகளும் பிரிவினைகளும் ஏற்பட்டதென்று இடஒதுக்கீட்டுக்காக போராடுகின்ற நாம் கேவலம் பிறப்பினால் உள்ள ஒரு சிறுகுறையை காரணம் காட்டி ஒரு பாலினத்தையே ஒதுக்கி ஒதுக்கி வைக்கிறோமே. அது தவறில்லையா? அவர்கள் கைக்கஞ்சு வாய்க்குப்பத்து ஏன் கேட்கப் போகிறார்கள் அவர்களுக்கும் ஆண், பெண்ணைப் போன்று சமமாகப் பாவித்து தொழிற்கூடங்களிலோ அல்லது இன்ன பிற பணிகளிலோ வேலை கொடுத்தால்...

இந்தியாவில் நான் அறிந்த வரையில் எந்த ஒரு படிவத்திலும் பாலினம் என்று நிரப்பப்பட வேண்டிய இடத்தில் ஆண், பெண் என்றுதான் இருக்குமேயொழிய "பிறர்" என்று ஒரு கட்டம் இருப்பதாக நான் அறிந்ததில்லை. ஆக இதன் மூலம் இந்திய அரசினாலேயே அங்கீகரிக்கப் படாத நிலையில் தான் "திருநங்கைகள்" இருக்கிறார்கள். இங்கொன்றும் அங்கொன்றுமாக அரசியலில் அதிகாரம் தரக்கூடிய பதவிகளில் சில "திருநங்கைகள்" இருந்தாலும் அவருடைய பண, படை பலத்திற்கு ஈடு கொடுக்க முடியாத காரணத்தினால் தானேயொழிய அவரை ஒரு "திருநங்கை" என அங்கீகரித்து சமூகத்தினால் கொடுக்கப்பட்டப் பதவிகளில்லை.

இப்படிபட்ட ஒரு சமூகத்தில் படித்து வேலை பெறுவதென்பது ஒரு போராட்டம் தான். அந்த போராட்டத்தில் போராடி வெற்றிபெற்று தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை நிறுவ முயன்று அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கின்ற "லிவிங் ஸ்மைல்" கர்வம் கொள்வதில் தவறேதும் இல்லை. மேலும் அவருக்கான இந்த வெற்றி ஒரு ஆணோ அல்லது ஒரு பெண்ணோ பெற்றிருக்கின்ற வெற்றியைப் போன்றே சமமாகப் பாவிக்கலாம். உதாரணத்திற்கு அச்சு ஊடகங்களில் தம்முடைய படைப்புகள் வெளியாவதையொட்டிய கர்வம் வலைபதிவருக்கு வருவதைப் போன்ற கர்வம் தம்முடைய சுய முயற்சியினால் வெற்றி பெருகின்ற சமூகத்தினால் ஒடுக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட ஒரு பாலினத்தை சேர்ந்தவரும் கொள்ளலாம்.

42 comments:

said...

//இப்படிபட்ட ஒரு சமூகத்தில் படித்து வேலை பெறுவதென்பது ஒரு போராட்டம் தான். அந்த போராட்டத்தில் போராடி வெற்றிபெற்று தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை நிறுவ முயன்று அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கின்ற "லிவிங் ஸ்மைல்" கர்வம் கொள்வதில் தவறேதும் இல்லை. மேலும் அவருக்கான இந்த வெற்றி ஒரு ஆணோ அல்லது ஒரு பெண்ணோ பெற்றிருக்கின்ற வெற்றியைப் போன்றே சமமாகப் பாவிக்கலாம். உதாரணத்திற்கு அச்சு ஊடகங்களில் தம்முடைய படைப்புகள் வெளியாவதையொட்டிய கர்வம் வலைபதிவருக்கு வருவதைப் போன்ற கர்வம் தம்முடைய சுய முயற்சியினால் வெற்றி பெருகின்ற சமூகத்தினால் ஒடுக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட ஒரு பாலினத்தை சேர்ந்தவரும் கொள்ளலாம்.//

வெல்டன்! தாமதமானலும் நல்ல பதிவு..
அய்யையோ...நம்மாளுங்க அவரை கலியாணம் செய்துக்கிறியான்னு கேட்டு வைக்கப் போறாங்க... தேவையற்ர விவாதத்திற்கு இடம் கொடுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

said...

நேர்மையாக எழுதப்பட்ட பதிவு.

ஒரே ஒரு இடம் தான் எனக்குப் புரியவில்லை.

'லிவிங் ஸ்மைல்' கூட தானும் ஒரு பெண் எனவே ஒப்புக்கொள்ளப்பட வேண்டும் எனத்தானே சொல்கிறார்.
தனி அந்தஸ்து கேட்கவில்லையே!
மலடாக, கலவி சுகத்தை அனுபவிக்க முடியாதவர்களாக பல பெண்களின் நிலையை நான் அறிவேன், ஒரு மருத்துவர் எனும் முறையில்.
அவர்களுக்கும், திருநங்கைகளுக்கும் அகிக வேறுபாடு இருப்பதாக நான் நினைக்கவில்லை.
அப்படி இருக்க, விண்ணப்ப்பங்களில் மாற்றம் வேண்டுமென்பது சரியாகப் படவில்லையே!
அல்லது, நான் தான் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையெனக் கருதினால், தயவு செய்து விளக்கவும்.

நன்றி.

said...

நம்பி,
வருகைக்கு நன்றி.

*****
பாலபாரதி,
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

//நம்மாளுங்க அவரை கலியாணம் செய்துக்கிறியான்னு கேட்டு வைக்கப் போறாங்க... //

உண்மையிலேயே அன்பு கொண்டு கேட்டால் தவறேதும் இல்லையே.

//தேவையற்ர விவாதத்திற்கு இடம் கொடுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.//

நிச்சயமாக.

Anonymous said...

Nalla Pathivu

said...

மிகவும் தெளிவாகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

said...

தாமதமாக வந்தாலும் 'நச் பதிவு.அரைவேக்காட்டு பதிவுகளுக்கு நல்ல மறுமொழி.

வாழ்த்துக்கள்.Hats off to You

said...

எஸ்கே,

கருத்திற்கு நன்றி.
என்னால் இயன்றவரை விளக்க முயற்சி செய்கிறேன்.
//'லிவிங் ஸ்மைல்' கூட தானும் ஒரு பெண் எனவே ஒப்புக்கொள்ளப்பட வேண்டும் எனத்தானே சொல்கிறார்.தனி அந்தஸ்து கேட்கவில்லையே!//
அது அவரது விருப்பமாக இருக்கும் பட்சத்தில் அதை வரவேற்கலாம்.
"திருநங்கைகள்" என்ற பாலினத்திற்கான சமூக அங்கீகாரம், சமவேலைவாய்ப்புகள், கிடைக்கும் பட்சத்தில் அவர்கள் தம்மை பெண்ணாக பாவிக்க வேண்டுமென்ற கோரிக்கைகளை முன் வைப்பார்களா எனத் தெரியவில்லை.

கடந்த வருடத்தில் ஆஸ்திரேலியாவின் தொலைகாட்சியில் ஒரு "ரியாலிட்டி ஷோ" நடந்தது. அதை வழங்கியவர் "மிரியம்" என்கிற ஒரு சூப்பர் மாடல். அசப்பில் சல்மா ஹயக் போல் இருக்கும் அவர் ஒரு திருநங்கை. அவருக்கான அங்கீகாரம் கிடைத்து விட்டதால் தான் ஒரு திருநங்கையாகவே இருக்க விரும்புவதாக அவர் கூறினார்.அவருக்கும் திருமணம் செய்து கொள்ளும் ஆவல் இருப்பதாகவும் தனது பிறப்பினை அறிந்து அன்போடு பழகும் நண்பர்களில் எவரேனும் அவரை திருமணம் செய்து கொள்வார் என்றும் கூறினார்.

மருத்துவராக நீங்கள் நிறைய அறிந்திருக்கலாம். எனக்கு இது பற்றிய உயிரியல் ரீதியான அறிவு மிகவும் குறைவு.
ஆக என்னை பொறுத்தவரை இங்கு அங்கீகாரம் தான் பிரச்சினையேயொழிய பாலினம் என்பதில் இல்லை.

said...

மதி,

நன்றி.

******
ப்ரியன்,

நன்றி.

மேலும் இது என்னுடைய கருத்து மட்டுமே. யாரோடும் கருத்து ரீதியாக மோதுவதற்கு போடப்பட்டதல்ல இந்த பதிவு.:-)

said...

கிள்ளி,
நன்றி.

நீங்கள் கில்லியா அல்லது கிள்ளியா? :-))

said...

//இப்படிபட்ட ஒரு சமூகத்தில் படித்து வேலை பெறுவதென்பது ஒரு போராட்டம் தான். அந்த போராட்டத்தில் போராடி வெற்றிபெற்று தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை நிறுவ முயன்று அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கின்ற "லிவிங் ஸ்மைல்" கர்வம் கொள்வதில் தவறேதும் இல்லை. மேலும் அவருக்கான இந்த வெற்றி ஒரு ஆணோ அல்லது ஒரு பெண்ணோ பெற்றிருக்கின்ற வெற்றியைப் போன்றே சமமாகப் பாவிக்கலாம்//
நல்ல பதிவு பொட்டீக்கடை. தெளிவாக எழுதி இருக்கீங்க..

இன்னும் கூட எழுதி இருக்கலாம்; பாலின அங்கீகாரம் இல்லாமல், அரசாங்கத்திலோ தனியார் நிறுவனங்களிலோ வேலை வாய்ப்பு பெற முடியாத இவர்களின் நிலையைப் பற்றிப் பேசாமல், "அவர்கள் பொதுவாக நல்ல தொழில் செய்வதே இல்லை", "நாட்டு வளம் சமமானது, சரியாகப் பயன்படுத்த வில்லை" என்று பேசுபவர்களுக்கு இன்னும் நிறைய சொல்ல வேண்டியது அவசியம் தான்..

said...

விளக்கத்துக்கு நன்றி.

இருப்பினும்,

தனக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்து விட்டதால், தன் போல் முயற்சிக்கும் அனைத்து திருநங்கைகளுக்குமாகச் சேர்த்துத்தான் லி.ஸ். குரல் கொடுத்து வருகிறார்.
அவலத்திலிருந்து.....இது அவலம் இல்லை எனத் தெளிந்து....இவர் போல அனைத்துத் திருநங்கைகளும் வரவேண்டும் என்பதே என் துணிபு, அவா.
இது நடக்கவேண்டும் என்றால், அவர்களும், ஆணிலிருந்து பெண்ணாக மாற்றப்பட்டிருக்கிறார்கள்...குழந்தை பெறும் வாய்ப்பினைத் தவிர, என்னும் கருத்தை வைத்துப் பார்க்கும் போது, இன்னமும் என்னால், விண்ணப்ப படிவங்களைப் பற்றி நீங்கள் எழுப்பிய வினா ஒவ்வாதது எனத்தான் எண்ணத் தோன்றுகிரது.

நன்றி.

said...

பொட்"டீ",
உண்மையிலேயே நல்ல அருமையான முற்போக்குச் சிந்தனையுள்ள பதிவு. உங்களின் பதிவில் நீங்கள் தெரிவித்துள்ள பல கருத்துக்களுடன் எனக்கும் உடன்பாடு உண்டு.

said...

இந்த எஸ்.கே என்ன சொல்ல வருகிறார் என்று தெரிந்தவர்கள் யாராவது எனக்கு விளக்கக்கூடாதா?


பொட்டீக்கடை,

நல்ல கட்டுரை.

said...

நல்ல பதிவு.

said...

மிகவும் நல்ல கட்டுரை. நல்ல கருத்துகள். தெளிவான தனிமனித, இன, மதத் தாக்குதல்களில் இறங்காத நாகரீகமான கருத்துப் பதிவு. அதற்கும் சேர்த்து எனது வாழ்த்துகள். இதில் நீங்கள் சொல்லியிருப்பதுதான் எனது கருத்தும்.

said...

நாகரிகமான நல்ல பதிவு!
பாராட்டுக்குரியது!

said...

////கடந்த வாரத்தில் பூனைக்கு மணி கட்டுவதாக நண்பர் லக்கி லுக்கின் லிவிங் ஸ்மைல் மீதான விமரிசனமும் /////

அவர் மீதான என் விமர்சனம் அவரது குறைபாடு அல்லது வரத்தின் மீதானது அல்ல.... என் மீது அவர் தொடுத்த தனிமனித தாக்குதல் காரணமாக ஏற்பட்ட எதிர்விளைவே என்பதை இங்கு பதிவு செய்துக் கொள்கிறேன்....

உங்கள் கட்டுரை தொடர்பான என் கருத்து.... அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.... நன்று....

இதுகுறித்த என் நிலைப்பாட்டை நண்பர் ரோசாவசந்தின் பதிவில் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன்.....

மற்றபடி இங்கே பின்னூட்டம் இட்ட சில அரைவேக்காடுகளுக்கு பிரச்சினை என்ன? எப்படி ஆரம்பித்தது என்று தெரியுமா என்பதே சந்தேகம் தான்.....

said...

நல்லா நேர்மையா கருத்தைச் சொல்லியிருக்கிறீர்கள்

said...

எஸ்கே அண்ணே,

நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு எனக்கு சத்தியமா புரியல. திருநங்கைகள் எல்லோரும் பெண்ணாக மாற வேண்டுமென்றா? இல்லை திருநங்கைகள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட வயது வரை ஊராரின் நக்கலுக்கும் நையாண்டிக்கும் ஆட்பட்டு பின்னர் இருபது வயதிற்கு மேல் பெண்ணாக மாறி உரிமைக்காக போராடட்டுமென்றா?

இப்பொழுதிருக்கிற சூழலில் அரசாங்க சட்டதிட்டங்கள் மூலம் சமூகநீதி ஏற்பட வாய்ப்புள்ளதென்று நான் நினைக்கிறேன்.

திருநங்கைகள் அவர்களின் உடல் ரீதியாக ஏற்படுகின்ற மாற்றங்களை ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின்னரே அறிகின்ற வாய்ப்பிருக்கும் பட்சத்தில் நாமும் அவர்களை சக மனிதராக இயற்கையாக ஏற்றுக் கொள்ளக்கூடிய மனப்பான்மையை வளர்ப்பதும் அதற்கு அரசாங்கத்தின் துணையும் சட்டதிட்டங்களும் அவசியம் என நான் கருதுகிறேன்.

said...

பொன்ஸ்,
எழுதறதுன்னா எவ்ளொவேனாலும் எழுதலாம். இதெல்லாம் நம் மரமண்டைகளுக்குத் தெரியாததல்ல ஆனால் ஏற்றுக் கொள்ள மறுப்பது தான் நம் சமூகத்தின் அவலம்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

நக்கீரன்,வெற்றி,முத்து(தமிழினி) செல்வநாயகி,அதி ஜி ரா :)),வணக்கத்துடன், சிபி, குமரன் எண்ணம் ஆகியோரது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிகள் பல.

லக்கி,
வருகைக்கும் சுயவிளக்க கருத்துப்பதிவிற்கும் நன்றி.

Anonymous said...

நல்ல அருமையான பதிவு.
பொன்ஸ் சொல்வது போல் எழுதறதுன்னா எவ்ளொவேனாலும் எழுதலாம். இதெல்லாம் நம் மரமண்டைகளுக்குத் தெரியாததல்ல ஆனால் ஏற்றுக் கொள்ள மறுப்பது தான் நம் சமூகத்தின் அவலம்.

அன்புடன் - மயிலாடுதுறை கலாநிதி

said...

அருமையான பதிவு பொட்டீகடை. லிவிங் ஸ்மைல் கர்வம் கொள்வதில் தவறேதும் இல்லை. என்னைக் கேட்டால் அது அத்தியாவசியமும் கூட.

**

தனிமடல் பார்க்கவும்

said...

தேவையான பதிவு. நேர்த்தியாகச் சொல்லி இருக்கின்றீர்கள். பால் பிறழ்ந்து பிறந்தது அவர்கள் தாங்களாக செய்து கொண்டதல்லவே. அவர்களும் சரிசமமாக அல்லது சிறப்புச் சலுகையுடன் நடத்தப்பட்டு அங்கீகரிக்கப்படல் அவசியம்.

said...

சரியான நேர்மையான பதிவு

//அவர்கள் கைக்கஞ்சு வாய்க்குப்பத்து ஏன் கேட்கப் போகிறார்கள் அவர்களுக்கும் ஆண், பெண்ணைப் போன்று சமமாகப் பாவித்து தொழிற்கூடங்களிலோ அல்லது இன்ன பிற பணிகளிலோ வேலை கொடுத்தால்...
//
இடஒதுக்கீட்டிற்கு எதிரான உயர்சாதியினரை எதிர்த்து வைக்கும் அத்தனை வாதங்களும் இங்கே திருநங்கைகள் மற்றவர்கள் மீது வைக்கும் குற்றசாட்டிற்கு பொருந்தும், இது கருப்பு போன்றவர்களுக்கு ஏன் புரியவில்லை?

said...

மனதை தொட்ட பதிவு

said...

மிகவும் தேவையான ,தெளிவான ,முழுக்க நான் ஏற்றுக்கொள்ளும் பதிவு..பாராட்டுக்கள்!

said...

தெளிவாகத்தான் சொல்லியிருக்கிறேன்.
புரியவில்லை என்றால் நான் என்ன செய்வது?

'லி.ஸ்'உம் சரி, மற்ற திருநங்கைகளும் சரி, தங்களும் ஒரு 'சக மனுஷி'யாகப் பார்க்கப் படுவதில்லை என்றுதான் குறைப்படுகிறார்கள். தனிப்பிரிவாக பார்க்கப்பட அவர்களே விரும்புவதில்லை. உடை, நடை, பாவனை எல்லாமே பெண்டிர் போல இருப்பதில்தான் கவனம் செலுத்துகின்றனர்.

அவர்கள் எப்போது, எந்த வயதில் உணர்கிறார்கள் என்பது இங்கு விவாதத்திற்கில்லை.

அரசும், திருநங்கைகள் பெண்கள் அல்ல என்று எந்தவொரு சட்டத்தின் மூலமும் தடுக்கவில்லை.

அப்படி இருக்கையில், இதில், அரசை அனாவசியமாக இழுத்துக் குழப்புவானேன் என்றுதான் கேட்டேன்.

புரிதல் என்பது அனைவருக்கும் வர வேண்டும். நாமும் உணர வேண்டும்; 'லி.ஸ்.' போல உயரலாம் என மற்ற திருநங்கைகளும் உணர வேண்டும். இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையிலிருந்து வெளிவர வேண்டும். இதைத்தான் என் அவா எனவும் சொல்லியிருந்தேனே!

'பிறர்' என்று போட்டு இன்னொரு பிரிவை ஏன் உண்டாக்க வேண்டும்,... அவர்களே அப்படி விரும்பாத போது என்பதுதான் என் கேள்வி.

தெளிவான இப்பதிவில் அது மட்டும் முரணாகப் பட்டதால் சொன்னேன்.

மற்ற எல்லாவற்றையும் பாராட்டித்தானே சொல்லியிருந்தேன்!

இது உங்களுக்கு என் நிலையைத் தெளிவாக்கவே!

முத்து[தமிழினி]க்கு இது புரியாமல் போனதில் எனாகு ஒன்றும் வியப்பாயில்லை!

said...

யோவ் பொட்டி,

எப்படிய்யா இதெல்லாம். மனதைத்தொட்ட பதிவு. சுமா சொல்லக்கூடாது. இப்பெல்லாம் சூப்பரா எழுதறேள்!

said...

மேலே உள்ள "பரமபிதா"வின் பின்னூட்டத்தை வெளியிட விரும்பாவிட்டாலும் வெளியிட்டதற்கு காரணம் அவருடைய "காலத்திற்கு தகுந்தாற்போல் நகைச்சுவையை வெளிப்படுத்தும் திறனை" பாராட்டுவதற்கே.

எல்லோரும் சிரிச்சிக்குங்க...:-)))))

said...

கலாநிதி, முத்து, குழலி,தாசு,ஜோ,கருப்பு ஆகியோருக்கு நன்றிகள்.

எஸ்கே,
தங்களது விளக்கத்திற்கு நன்றி. எனக்கு அதில் வேறுபட்ட கருத்து உள்ளது. வேறெங்காவது இதன் தொடர்பை விவாதிக்கலாம்.(பிரிதொரு பதிவில்)

Anonymous said...

அடடே யாரது, செனேட்டர் மெக்கார்த்தியா? எப்பய்யா மறுபடி எந்திரிச்சு வந்தீரு? பரம பிதா சிரம குதான்னு பேர் போட்டாலும் கழிஞ்சு தள்றதைப் படிக்கறச்சே முகம் கெக்கேபிக்கேன்னு தெளிவா இளிக்குதே, பார்த்து ஓய், யாராவது நீர்தான் சோகஜாடின்னு புரளி கிளப்பிறப்போறா!!

said...

பதிவிற்கு நன்றி...

// உதாரணத்திற்கு அச்சு ஊடகங்களில் தம்முடைய படைப்புகள் வெளியாவதையொட்டிய கர்வம் வலைபதிவருக்கு வருவதைப் போன்ற கர்வம் தம்முடைய சுய முயற்சியினால் வெற்றி பெருகின்ற சமூகத்தினால் ஒடுக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட ஒரு பாலினத்தை சேர்ந்தவரும் கொள்ளலாம். //


மிகச்சரி, இது குறித்து என் விளக்கம்..

நான் ஏன் கர்வமற்றவளாக, (நல்லவளாக) இருக்க வேண்டும்...? எத்தனை இயல்பான ஆண்/பெண் நல்லவராக உள்ளனர். ஒரு உ.ம். ஏன் ஆண்கள் யாரும் திருடுவதில்லையா அல்லது திருடர்கள் யாரும் ஆண்களில்லையா...? அப்படியிருக்க ஆண்களெல்லாம் திருடர்கள், கொலைகாரர்கள் என பொத்தாம் பொதுவாக பட்டம் கட்டுவது சரியாகுமா..?

நிற்க... நாங்கள் கேட்பது இதுதான் சம அங்கீகாரம், அது கிடைக்கிற பட்சத்தில் ஒருவர் புனிதராக இருப்பது வரவேற்கத்தக்கதே.. ஆனால், கர்வம் கொள்வது, ஆணவமாய் இருப்பது, சாந்த குணம், எரிந்து விழுவது, சந்தேக குணம் இவை தனி நபர் எல்லாருக்குமே இருக்கக் கூடியது தான். அதுவே தான் எங்களுக்கும். அப்படியிருக்க நான் (நாங்களும்) மட்டும் நல்லவளாகவே (புனிதாத்மாவாகவே) இருக்க வேண்டிய தேவையென்ன...?

******

//'லிவிங் ஸ்மைல்' கூட தானும் ஒரு பெண் எனவே ஒப்புக்கொள்ளப்பட வேண்டும் எனத்தானே சொல்கிறார்.
தனி அந்தஸ்து கேட்கவில்லையே!
மலடாக, கலவி சுகத்தை அனுபவிக்க முடியாதவர்களாக பல பெண்களின் நிலையை நான் அறிவேன், ஒரு மருத்துவர் எனும் முறையில்.
அவர்களுக்கும், திருநங்கைகளுக்கும் அகிக வேறுபாடு இருப்பதாக நான் நினைக்கவில்லை.
அப்படி இருக்க, விண்ணப்ப்பங்களில் மாற்றம் வேண்டுமென்பது சரியாகப் படவில்லையே!//

சரி தான் எங்களைப் பெண்களாக பாவிக்கத்தான் விரும்புகிறோம்.. ஆனால், எங்கள் பால்பிறழ்வினால் கற்கும் நாட்களில் அக மற்றும் புற மன உலைச்சளுக்கு ஆளாகிறோம்..

தொடர்ந்து கற்க முடியாத நிலை..

குடும்பம் என்ற கட்டமைப்பு(பாதுகாப்பும்), வாழ்க்கையில் நிரந்தரமின்மை போன்ற காரணங்களினால் சலுகைகள் அவசியாமாகிறது. இதனால், பொருளாதார முன்னேற்றமும் அதைத் தொடர்ந்து கிடைக்கக் கூடிய சமூக அந்தஸ்தும்,பாதுகாப்பும் கிடைக்கக் கூடிய பட்சத்தில் இட ஒதுக்கீடு நிச்சயம் தேவையே..

சுருக்காமாக, பெண்களுக்கான இட ஒதுக்கீட்டில் உள்-ஒதுக்கீடாகத்தான் இதனை வலியுருத்துகிறேன்..

மற்றபடி பெண்ணா/ அதர்ஸா என்பதை அரசும், திருநங்கைகளும் ஒரு அமர்வினை ஏற்படுத்தி தொலைநோக்கோடு விவாதித்து முடிவெடுப்பதே சரியாக இருக்கும். என் கருத்தை முடிந்தவரை பக்குவமானதொரு தனிப் பதிவாக பின்னர் இடுகிறேன்.

// திருநங்கைகள் அவர்களின் உடல் ரீதியாக ஏற்படுகின்ற மாற்றங்களை ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின்னரே அறிகின்ற வாய்ப்பிருக்கும் பட்சத்தில் நாமும் அவர்களை சக மனிதராக இயற்கையாக ஏற்றுக் கொள்ளக்கூடிய மனப்பான்மையை வளர்ப்பதும் அதற்கு அரசாங்கத்தின் துணையும் சட்டதிட்டங்களும் அவசியம் என நான் கருதுகிறேன். //

மிக மிக சரியாக சொன்னீர்கள்

பதிவிற்கும், பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்

said...

லிவிங் ஸ்மைல்,
வருகைக்கும் கருத்துப் பகிர்தலுக்கும் நன்றி.

said...

மிக்க நன்றி, லி.ஸ்., வந்து தெளிவு படுத்தியதற்கு!

இப்பவாவது புரிஞ்சிருக்கும் என நம்புகிறேன்!

said...

நல்லா சொன்னீங்க...:))

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா தந்தீங்க.

said...

ரெம்ப நல்ல பதிவு பொட்டிக்கடை .. ஒரு சின்ன வட்டத்திலிருந்த பிரச்சனையின் சமூகப் பிண்ணணியை விளக்கியிருக்கிறீர்கள். லக்கி லுக்கின் நோக்கமும் (பதில் தனிமனித தாக்குதல்) ஓரளவுக்கு சரியானதே.. அப்படிச் செய்வதன் மூலம் (பச்சாதாபத்தை தவிர்த்து) லி.ஸ் க்கு சம அந்தஸ்த்து தந்திருக்கிறாரோ என்றே தோன்றுகிறது..

இன்னொரு முக்கியமான 'கால் செண்டர்' கமெண்டையும் இதில் சேர்த்துக்கொண்டது இன்னும் சிறப்பனது.

உங்களைப் போல சமூக உணர்வுகளை படித்துப் பயிலும் வகையில் எழுதுபவர்கள் குறைவே... பலரும் வெறும் குறைகூறலோடும் திட்டித் தீர்ப்பதிலேயும் நின்றுவிடுகின்றனர் இதனால் பல நல்ல கருத்துக்களும் ஏற்றுக்கொள்ளாமல் விடப்பட்டுப் போகின்றன..

பதிவுக்கு வாழ்த்துக்கள் நன்றி.

Anonymous said...

///இடஒதுக்கீட்டுக்காக போராடுகின்ற நாம் கேவலம் பிறப்பினால் உள்ள ஒரு சிறுகுறையை காரணம் காட்டி ஒரு பாலினத்தையே ஒதுக்கி ஒதுக்கி வைக்கிறோமே. அது தவறில்லையா? //

எல்லாம் சரிதான் பொட் டீ,

நீங்களும் அதை குறைன்னு பார்க்கறததான் எப்படி பார்க்குறதுன்னு தெரியலை.. "வித்தியாசமா இருந்தாலே தவறு" மனோபாவாமா?


நல்ல அனானி :)

said...

நல்ல பதிவு பொட்டிகடைகாரரே...

said...

ரவி,சந்தோஷ்
நன்றி.
****

சிறில்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
****
நல்ல அனானி,
கருத்துக்கு நன்றி.
செம்மத்தியா மடக்கிட்டீங்க.
ஆணாகவும் இருக்க முடியாமல் பெண்ணாகவும் ஏற்றுக் கொள்ள இச்சமூகம் இடம் தராத வகையில் அவர்களை நாம் இருத்தி வைக்கும் இடம் எது?
அதற்காக தான் அவர்களை தனி பாலினமாகவோ அல்லது லிவிங் ஸ்மைல் சொல்கிற மாதிரி பெண்பாலின் உட்பிரிவாகவோ வழங்கலாம்.

வித்தியாசமாக இருந்தால் வித்தியாசம் என்கிற மனோபாவமேயொழிய தவறு என்றல்ல.அது ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வித்தியாசம் போன்றது தான். மேலும் நான் அதை குறையாக பார்க்கவில்லை. நீங்களும் அதை குறையாக பார்க்க மாட்டீர்கள்.ஆனால் உங்களையும் என்னையும்(சேர்த்த) தவிர்த்த ஏனையோர் அடங்கியது தான் சமூகம். சென்னை பல்லவனிலோ அல்லது இன்னபிற பொது இடங்களிலோ நமக்கருகில் ஒரு ஆண் உட்காரும்போது இருக்கும் இயல்பான நிலையோ அல்லது ஒரு பெண் அமரும் போது எழுகின்ற கிலுகிலுப்பான நிலையோ ஒரு திருநங்கை அமரும் பொழுது ஏற்படுகிறதா? சிலர் நேரடியாக முகஞ்சுளிப்பர் அல்லது சிலர் எட்டி சென்று அமருவர் இன்னும் சிலர் எரிச்சலோடு முகத்தை வேறு பக்கம் திருப்பி கொண்டு செல்வார்கள்.

இவ்வாறு புறக்கணிக்கப் படுவதை தான் நான் தவறு என்கிறேன். இவ்வாறு புறக்கணிக்கப் படுவதற்கு நாம் எடுத்து வைக்கும் காரணங்கள் பிறப்பியல் ரீதியான குறை தான். அப்படியில்லையென்றால் தனியானதொரு பாலினமாக அறிவிக்காமல் ஏன் "ட்ரான்ஸ்" என்று வழங்குகிறோம்?

said...

/////லக்கி லுக்கின் நோக்கமும் (பதில் தனிமனித தாக்குதல்) ஓரளவுக்கு சரியானதே.. அப்படிச் செய்வதன் மூலம் (பச்சாதாபத்தை தவிர்த்து) லி.ஸ் க்கு சம அந்தஸ்த்து தந்திருக்கிறாரோ என்றே தோன்றுகிறது..
//////

சிறில் அண்ணாத்தே!

உங்களுக்கு ஒரு கோடி நன்றிகள்!!!!

Anonymous said...

இடஒதுக்கீட்டிற்கு எதிரான உயர்சாதியினரை எதிர்த்து வைக்கும் அத்தனை வாதங்களும் இங்கே திருநங்கைகள் மற்றவர்கள் மீது வைக்கும் குற்றசாட்டிற்கு பொருந்தும், இது கருப்பு போன்றவர்களுக்கு ஏன் புரியவில்லை?///////////////////////////////////////////////////////
எங்கே போனாலும் விடமாட்டேன் அய்யா.......... குழலி சார் கொஞ்சம் வெளிச்சத்துக்கு வாங்க உங்க பின்னூட்டம் எங்க பாத்தாலும் இதே தான் பேசுது :)

Anonymous said...

நல்லதொரு பதிவு. இந்த மாதிரியான பதிவுகள்தான் நம்பிக்கை தருகின்றன.