இவன்தான் தமிழன்!
கவிவேந்தர் வேழவேந்தன்
வந்தவர்க்கே பந்திவைப்பான் தமிழன்;வந்தோர்
வாய்மொழிக்கே தாள்திறப்பான் தமிழன்;வீட்டுள்
எந்தமொழி நுழைந்தாலும் தலைமேல் தூக்கிஏற்றி
அதைப் போற்றிடுவான் தமிழன்; ஈன்ற
சொந்தமொழி நொந்தழிந்தே நைந்த போதும்
சுரணையின்றி உறங்கிடுவான் தமிழன்; இஃது
செந்தமிழ்த்தாய் பெற்றுவந்த சாபம்; இன்றேல்
திருந்தாத இவன்வந்தா பிறந்தி ருப்பான்?
ஒற்றுமையா என்னவிலை? என்றே கேட்கும்
உன்மத்தன் மறுபெயர்தான் தமிழன்; ஈது
வெற்றுரையா வரலாற்றை உற்றுப் பார்த்தால்
வீரமுடன் போரிட்டோர் யார்? யார்? சேரன்
முற்றுகையால் சோழர்களை வென்றான்; சோழன்
முனைப்போடு பாண்டியரைக் கொன்றான் என்றால்,
உற்றஉடன் பிறப்புடனே மோதி மோதி
உதிரநிதி ஓடவிட்டோன் தமிழன் தானே!
இனப்பற்றா என்ன பொருள்? என்றே கேட்கும்
என்தமிழன் மாண்புக்கோர் சான்றாய் ஆங்கே
மனையிழந்தும், உறவிழந்தும், உயிர்கள் ஈந்தும்
மனப்போர் நகழ்த்துகிறான் ஈழத் தோழன்!
வினைப்போரில் தமிழீழம் வென்றால், ஐ நா சபையின்
வெளிமுகப்பில் தமிழர்கொடி பறக்கும்; ஆனால்
தினையளவும் துணைநல்க முனைந் திடாமல்
5/18/2006
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment