3/27/2006

மடிவதற்கான காலம்!

கொழுந்து விட்டு
எரியும் விளக்கின்
அருகில் வந்த விட்டில் பூச்சி
சொன்னது ...

என் மரணத்துக்கு
யாரும் காரணம் இல்லை !

******

அறிந்தோ அறியாமலோ மின் மினி பூச்சியையும், விட்டில் பூச்சியையும் ஒரே மாதிரியாக பாவித்ததாலும்., விட்டில் பூச்சியாக சிறகடித்து பறக்க விரும்பியதால், மடிவதற்கான காலமும் நெருங்கி விட்டதால், வீழ வேண்டியது நிச்சயமாகி விட்டது.

இங்கே பனிக்காலத்தின் துவக்கம் தொடங்கி விட்டதாலும், விட்டில் பூச்சிகளும் அதிகமாய் விட்டது. அளவிலும், வாழும் காலமும் சிறியதாக இருந்தாலும் எண்ணிக்கையில் அதிகமாக வந்து விட்டில் பூச்சிகள் பிரச்சினை கொடுக்கும் என்பதை சிலருக்கு நினைவு படுத்திவிட்டு மடிகிறேன் இன்றோடு.

இந்நட்சத்திர வாரத்தில் பலரும் பல எதிர்பார்ப்புகளோடு இருந்திருந்தாலும், இங்கே அவர்கள் எதிர்பார்ப்பது கிடைக்காது என்று முன்னமே அறிவுறுத்தி விட்டதாலும் எனக்குத் தோன்றியதை மட்டுமே எழுதினேன்...சிலருக்கு ஒப்புதலும், பலருக்கு அஜீரனக் கோளாரும் ஏற்பட்டதில் வியப்பேதும் இல்லை.

தமிழ்மணத்தின் கருவிப்பட்டையை நிறுவாததாலும், மட்டுறுத்தலில் ஒப்புதல் இல்லாததாலும், இதுவரை பின்னூட்டங்களில் மட்டுமே கவனமாக இருந்ததாலும் அதிகப் படியான அளவில் எவரும் பொட்"டீ"கடைக்கு வந்ததில்லை ஒரு சில நிரந்தர வாடிக்கையாளர்களைத் தவிர.

நிறையவே எழுத நினைத்திருந்தாலும், யோசித்து எழுதுவதால் சொல்ல வந்ததை விட தீர்க்கமான முடிவுகளைக் கொண்டே எழுத முடிகிறது. ஆகையால் எந்த ஒரு பதிவிலுமே முடிவை முன்வைக்காமல் அவரவர் கருத்துக்கேற்ப சிந்திக்க அன்றைய தினங்களில் எழுந்த கருத்துக்களையே முன்வைத்தேன்.

மேலும் இந்தவொரு வாரத்திற்கு மட்டும் பின்னூட்ட மட்டுறுத்தலை செயல்படுத்தலாம் என்றே எண்ணியிருந்தேன். ஆனால் என் மீது மட்டுமல்லாமல் பலர் மீதும் நிறைய முகம் மூடியவர்கள் (முகமூடியை அல்ல) அல்லது முகமே இல்லாதவர்களும் அன்பு கொண்டுள்ளதால் பின்னூட்ட மட்டுறுத்தலை நிரந்தரமாக செயல்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.எனினும் என்னை மட்டுமே வசை பாடி வந்த/வரும் பிரசுரிக்கத் தகுந்த பின்னூட்டங்களை வெளியிட்டுள்ளேன்/வெளியிடுவேன்.

சொல்ல வந்ததை நேரடியாக சொல்லிவிட்டதாலும், அதனால் ஏற்பட்ட சலசலப்பைக் கண்டு இந்த கருப்பன்காட்டு(நம்மூர்ல பனங்காடு கெடையாதுங்க, கரும்பு காடு தான்) குள்ள நரி அஞ்சாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

******
நன்றி

ஒரு வாரத்திற்கு தொடர்ந்து எழுதுவதற்கு வாய்ப்பளித்த தமிழ்மண நிர்வாகிகளுக்கும், பதிவை படித்த (படிக்கும் அளவிற்கு இல்லையென்றாலும்) அனைவருக்கும் எனது நன்றிகள். முக்காடிட்டு வந்தவருக்கும், முகம் இல்லாமல் வந்து என்னை மட்டுமே திட்டியவர்களுக்கும் எனது நன்றிகள். ஆதரவளித்தவர்களுக்கு இதயத்தில் இடம் உண்டு:-) இங்கு இல்லை.

******
தனிமனிதத் துவேஷம்

இந்த பதிவில் வட்டாரப் பேச்சு வழக்கையும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே பேசுவது பற்றியும் எழுதியிருந்தேன். அதில் பலரும் பலவிதமான கருத்துகளை முன்வைத்திருந்தாலும் நான் சொல்ல வந்ததை அவர்களால் புரிந்து கொள்ள இயலவில்லை அல்லது ஏதோ ஒரு கட்டாயத்தினால் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் என்பதே உண்மை. மேலும் அப்பதிவில் எந்தவொரு தனி மனிதனையும் தரக்குறைவாகவோ அல்லது சிலரைப் போல் மனம் போன போக்கில் நக்கலடித்துக் கொண்டும் இல்லை. தமிழ் வலை பதிவுகளை வெரும் இரண்டு மாதங்கள் மட்டுமே உற்று நோக்கியவருக்குத் தெரியும் யார் மகா வக்கிரம் பிடித்தவர்கள் என்று. மேலும் பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல் வக்கிர புத்திக் கொண்டவர்களை அதே வக்கிரமான அளவில் சிந்திக்கக் கூடிய என்னால் எளிதாக அடையாளங்கண்டு கொள்ள முடியும்.

எனினும் முக்காடிட்டுக் கொண்டு தனிப் பதிவில் சில்லு விளையாடிக் கொண்டிருக்கும் பன்னாடைகளுக்கு எனது சிறப்பான நன்றிகள்! They get what they deserve!

3/25/2006

தமிழீழப் போராட்டமும், தமிழ் தேசியமும்!

ஈழம் பற்றிய இன்றைய தமிழக இளைஞர்களின் புரிதல் பற்றி பலரும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் இன்று. இதில் புரிந்து கொள்ள என்ன வேண்டியிருக்கிறது. தமிழைப் பற்றி என்னுடைய புரிதல் என்று நான் ஏதாவது எழுத முடியுமா? நான் பேசத் தொடங்கிய பொழுது தமிழில் தான் அம்மா, அப்பா என்று கூறினேன் அல்ல்து கூற வைக்கப்பெற்றேன். அதே போல் தான் ஈழத்தின் புரிதலும். எனக்கு கருத்து தெரியாத வயதிலிருந்தே எனது வீட்டில் எங்கு நோக்கினாலும் போராளிகளின் படம் தான் இருக்கும். ஓரளவு கருத்து தெரிய ஆரம்பித்த பொழுது ஈழத்துப் போராளிகள் சுதந்திரப் போராட்ட மாவீரர்களாவேத் தெரிந்தார்கள்.

கருவறையிலிருந்து வெளியே வரத் துடிக்கும் குழந்தையின் போராட்டத்திற்கு தாய் தன் வலியை பொருட்படுத்தாமல் குழந்தை வெளியே வர வேண்டும் என்ற ஒரு எண்ணம் தான் இருக்குமேயொழிய, வலியாறப் பொறுக்காது கொல்ல நினைப்பாளோ?

தமிழீழமும், ஆயுதப் போராட்டமும் எழுந்ததற்கான நிகழ்வுகளை உற்று நோக்கினால் புரியும் ரணமும் அதனுடைய வேதனையும்!

1983ல் நடந்த ஒட்டுமொத்த இனப்படுகொலை இன்னமும் நெஞ்சினில் இருந்து அகல மறுக்கின்றது.ஒரே நாளில் 1000 பேர் கழுத்தறுபட்டும், உயிரோடும் எரிக்கப்பட்டார்கள். ஆண்களூம் பெண்களும் பொதுவில் நிர்வாணப்படுத்தப் பட்டார்கள். இவையனைத்தும் சிங்கள இனவெறியர்கள் மற்றும் அவர்களின் பேரினவாத ஆதரவு அரசின் ஒத்துழைப்போடு நடைபெற்றன. இவ்வளவு அவமானங்களையும் தாண்டி அமைதியான முறையிலா போராட முடியும்?

1987ல் இராஜிவ் அரசிற்கும் & பேரினவாதி ஜெயவர்த்தனே அரசிற்கும் உடன்பாடு கையெழுத்தாகிறது. அதாவது இந்திய இராணுவப் படையினர் இலங்கையில் அமைதி காப்பார்களென்று. பிரபாகரன் எவ்வளவோ முயன்றும் சிங்கள - இந்திய அரசின் பிரகடனம் கையெழுத்தாவதை தடுக்க இயலவில்லை. அதற்கு மாறாக இராஜீவ், இந்தியப் படை புலிகளுக்கு உதவவே இலங்கை வருகிறது என்றும் தமிழ் மக்களின் மானம் காக்கப் படும் என்றும் உறுதியளிக்கின்றார். இதை பிரபாகரனின் யாழ்ப்பானத்தில் நடைபெற்ற கூட்டத்தின் பேச்சிலிருந்து அறிந்து கொள்ளலாம். ஆனால் அவர்கள் காத்த அமைதி திலீபன் என்ற மாவீரனின் மரணவாக்குமூலத்தினால் உடைந்து இன்றும் ஆயுதப் போராட்டமாகத் தெறிக்கிறது.

பதின்ம வயதில் நான் கண்ட ஆவணப்படங்களும், நேரிடையாய் சந்தித்த இரு போராளிகளின் வாக்குமூலமும் என்னுள்ளே அவ்வயதில் வெறியை ஏற்படுத்தியது என்றால் அது மிகையல்ல. இன்னமும் கூட ஈழத்தில் பிறந்திருக்கக் கூடாதாவென்ற ஏக்கம் அவ்வப்போது எழுவதும் உண்டு. எந்திரத் துப்பாக்கி ஏந்திப் போராடும் எம் சகோதரர்க்கு துணையாய் இருந்திருக்கலாமே என்ற எண்ணமும் எழுந்ததுண்டு. அது ஒவ்வொரு சராசரி இந்தியனுக்கு எழும் "பிணப்பெட்டியின் மேல் தேசியக் கொடி" போன்ற எண்ணம். ஆனால் அதற்கு முரணான வாழ்க்கையைத் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன்.

இன்றைய தமிழக இளைஞர்கள் இதைப் பற்றி முழுமையாக அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பதினாலும், தமிழக இளைஞர்கள் மட்டுமல்ல புலம் பெயர்ந்த ஈழத்துக் குழந்தைகளுக்கும் நம்முடைய அவலத்தை வணிகப்படுத்துவதன் மூலம் எளிதில் சென்றடையச்செய்ய கடமைப்பட்டுள்ளோம். இதற்கான வழிகளை தமிழ்சசியும், நந்தனும் அலசி இருக்கிறார்கள்.

ஆனால் இங்கே நாம் முன்வைப்பது, தற்போதைய புலம் பெயர்ந்தவர்களின் மன நிலையையும், வாழ்க்கைப் போராட்டத்தையும் தான். பெரும்பாலான ஆண்கள் ஈழப் போராட்டத்தையும், போராளிகளின் போரையும் ஆதரிக்கின்ற வேலையிலே பெண்களின் மன நிலையையும் நாம் அறிந்துக் கொள்வதில் தவறேதும் இல்லை. இங்கே நான் எனது தோழிகளொடு கதைத்ததை மட்டுமே உதாரணமாக வைக்கிறேன். போராளிகளின் பற்றிய அவர்களின் புரிதல் மிகவும் வித்தியாசமானதாகவே இருந்தது. புலிகளின் ஆய்தப் போராட்டத்திற்கு முன்னர் அவர்கள் மகிழ்ச்சியாகவே வாழ்ந்ததாகவும், ஆயுதப் போராட்டத்திற்கு பின்னரெ மின்சாரம் முதற்கொண்டு அனைத்து அத்தியாவசியத் தேவைகள் தடைபட்டதாகவும் தெரிவிக்கின்றனர். பெரும்பாலானவர்கள் அவர்களுடைய பதின்ம வயதின் ஆசைகள் நிராசையாகி நாடோடியாகச் சுற்றுவ(றிய)தற்கு காரணம் ஆயுதப் போராட்டமே என்றும் எண்ணியுள்ளனர். நான் அதை மறுதலித்துப் பேச முற்படும் பொழுது மூக்குடைபட்டே இருக்கிறேன்.(நீ படித்தும், வீடியோவில் பார்த்தும் இருப்பாய், நான் அனுபவித்திருக்கிறேன் என்று)

ஆக இப்பொழுதிருக்கும் இரண்டாம் தலைமுறையினரே இவ்வாறு இருக்கும் பட்சத்தில் மூன்றாம் தலைமுறையினருக்கு இது பற்றி தெரிய படுத்த வாய்ப்பு இருக்கிறதா?
செருமனியில் நாஜிப் படையினரால் யூதர்கள் பட்டத் துன்பங்களை (திரைப்படங்களில்) காணும் பொழுது ஏற்படும் பரிதாப உணர்வை ஏற்படுத்தினால் மட்டுமே ஈழத்து அவலங்கள் வெளியே தெரிய வாய்ப்புள்ளது. மேலும் இது பற்றியான குறும்படங்களையும் அனைத்து தரப்பு மக்களுக்கும் எளிதாக கிடைக்க வழி செய்ய வேண்டும்.

சமீபத்தில் "பேட்டல் ஆஃப் அல்ஜீர்ஸ்" என்ற திரைப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அத்திரைப்படம் அல்கீரிய மக்களின் ஃபிரெஞ்சுக் காலணி ஆதிக்கத்திற்கெதிரான சுதந்திர போராட்டத்தைப் பற்றியது. அதில் போராளிக்குழுவின் தலைவனை சிறைபிடித்து நாடு கடத்தி விடுவார்கள். ஆனாலும் இரண்டு அமைதியான ஆண்டுகள் கழித்து நாடே ஸ்தம்ப்பிக்கும் வகையில் மக்களின் போராட்டம் வெடிக்கும். அதுவே 1960 களில் அல்ஜீரிய சுதந்திரத்திற்கு வழி வகுத்தது.ஈழப் போராட்டத்திற்கும் இதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்றாலும் ஈழத்து மக்களின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதில் உள்ள ஆர்வமே இதை உதாரணமாக எடுத்தாள வேண்டியதாயிற்று.

தமிழிழ தேவையும் தமிழ் தேசியமும்

இன்றைய மக்கட்தொகையில் ஏறக்குறைய 81/2 கோடி தமிழ் மக்களைக் கொண்டுள்ள இவ்வுலகில் நமக்கென்று ஒரு அங்கீகாரம் இல்லை...2 மில்லியன் மக்கட்தொகை கொண்ட சுலுவேனிய நாடு உருவானது மொழி, இனத்தின் அடிப்படையிலேயே. ஈராஇய, ஈராக்கிய, சிரிய, துருக்கிய தேசங்களும் இன்று வரை சுயமாக இயங்கிக் கொண்டிருக்கும் சதாமின் அடக்குமுறையில் ஒடுக்கப்பட்ட குர்தீய தேசக் கோரிக்கைகளும் மொழி இனத்தின் அடிப்படையிலேயே. வெரும் 2 மில்லியன் மக்கட்தொகை கொண்ட சுலுவேனிய மக்களின் சார்பாக அவர்களது மொழியில் பேசுவதற்கு அவர்களுக்கு அங்கீகாரம் அளித்து ஐநா சபையில் குரலெழுப்பிக் கொண்டிருக்கும் வேலையிலே நமக்கென்று ஒரு தேசமும் அங்கிகாரமும் தேவை என்று குரல் எழுப்புவது தவறா? தமிழ்நாட்டில் இதற்கான குரல் எழும்பொழுது தமிழக உணர்வாளர்களின் குரல்வலை நெறிபடும் வேளையிலே நம் ஈழத்து சகோதரர்கள் சுயமரியாதையோடு வாழ நாம் துணை நிற்க வேண்டாமோ? தமிழன் தலை நிமிர, தனக்கென்று ஒரு கலாச்சாரம், பண்பாடு மற்றும் உலக அளவில் தமிழனுக்கென்று ஒரு தனித்துவமான அடையாளத்தோடு வலம் வர முதல் படியாக தமிழீழம் அவசியமாகிறது.
பின்குறிப்பு: இராஜிவ் கொலையில் புலிகளுக்கெதிரான நிலையில் இருந்து நான் பின்வாங்க மாட்டேன். எனக்குப் பட்டதை சொல்ல எனக்கு முழு உரிமையுண்டு.

எங்க ஊரு நெல்லிக்குப்பம்!

கிழக்கே உப்பு வாடையை வாங்கி வரும் கடற்காற்றை சுவாசமாகக் கொண்ட கடலூரையும், மேற்கே முக்கனிகளில் ஒன்றான பலாவை வாசமாகக் கொண்ட பண்ருட்டியையும், வடக்கே பெரும்பாலான் நாட்களில் வற்றிப் போய் கடலூர் மாவட்ட்த்தின் கட்டுமான பணிகளுக்கு தன்னையே இழந்துக் கொண்டிருக்கும் தென்பெண்ணையையும், தெற்கே தென்பெண்ணையின் சகோதரியாக நிற்கதியாய் வெறித்து பார்க்கும் வற்றிய தேகத்தைக் கொண்ட கெடிலம் ஆற்றையும் அதைச் சார்ந்த முந்திரிக்காடுகள் நிறைந்த செம்மண் குன்றுகளைகளையும் எல்லையாகக் கொண்டவள் தான் நெல்லிகுப்பம்.

ஒரு காலத்தில் நீர்வளமிக்கதாகவும், கரும்பு சோலைகள் நிறைந்த செழிப்பான பிரதேசமகவும் இருந்ததால் கடலூர் பழைய நகரில் வந்திறங்கிய பரங்கியரின "கிழக்கிந்திய கம்பெனியினர்" ஈ ஐ டி பாரி சர்க்கரைத் தொழிற்சாலையை நெல்லிக்குப்பத்தில் நிறுவி அவர்களுடைய வரலாற்றிற்காக நெல்லிகுப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டனர்.:-)

நெல்லிக்குப்பம் வாழ் மக்களுக்கு விவசாயாமும், அது சார்ந்த தொழிலுமே பிரதானமாக இருந்தது. ஓரளவு படித்தவர்கள் கரும்பு தொழிற்சாலையிலும் வேலைப் பார்த்துள்ளனர்.
சமூக ரீதியாக வன்னியர்கள் மற்றும் ஆதி தமிழர்கள் ஏறக்குறைய சரிசமமான விகிதத்திலும் (மொத்தமாக 65%) ஏனையோர் (இஸ்லாமியர், கிறித்துவர், இன்ன பிற சமூகத்தினர்) மீதி 35% பூர்த்தி செய்வார்கள்.

நெல்லிக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட எல்லையில் ஆதி தமிழர்கள் அதிகமாகவும், அதற்கு அடுத்த படியாக வன்னியர்களும், இஸ்லாமிய சமூகத்தினரும் வருவார்கள். ஆனால் தேர்தல் தொகுதிக்குட்பட்ட பகுதிகளான நெல்லிக்குப்பத்தை சுற்றியுள்ள ஊராட்சிகளிலும், பேரூராட்சிகளிலும் வன்னியர்கள் அதிகமாகவும், ஆதி தமிழர்கள் சிறுபான்மையினராகவும் இருக்கின்றனர்.

இங்கு இதுவரை திமுகவும், அதிமுகவும் மாறி மாறி வெற்றி பெற்றிருந்தாலும் சர்க்கரை ஆலை தொழிற்சங்கத்தின் கம்யூனிஸ தோழர்களும் இருக்கிறார்கள். ஆனால் இவர்களின் தற்போதைய நிலை பரிதாபமானதே. திரு. கோவிந்தராஜன் அவர்கள் தீவிர அரசியலிலும் தொழிற்சங்க அரசியலிலும் குரலற்றிருந்த நேரத்தில் அமரர்திரு. ஜி. ஆர். இராமலிங்கம் அவர்கள் தொழிற்சங்கத்தின் தலைவரானார். மேலும் கோவிந்தராஜன் ஒரு மேல்தட்டு அரசியல்வாதியாகவே எனக்கு காட்சியளித்தார். அவரை சாமானியர்கள் அவ்வளவு எளிதாக அணுக இயலாது. ஆனால் திரு.ஜி.ஆர் அவர்களை எவரும் எளிதாக அணுக முடியும், அனைத்து தரப்பு மக்களோடும் அன்பாகவும், கனிவாகவும் பழகக் கூடியவர். கட்சி வேறுபாடின்றி அனைவருக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்தவர். மேலும் அவர் இருந்திருந்தால் காங்கிரஸ் கட்சி வடமாவட்டங்களில் ஓரளவு செல்வாகாக இருந்திருக்கும்.

தற்போதைய சூழ்நிலையில் கம்யூனிஸமும், காங்கிரசும் குரலற்று போயிருக்கும் நிலையிலும், சமூகம் சார்ந்த ஓட்டுக்களே சமீபத்திய தேர்தல் முடிவுகளை நிர்ணயித்திருக்கும் நெல்லிக்குப்பத்தில் எந்த அணி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது என்று என் சிற்றறிவுக்கெட்டிய ஒரு அலசல்.

இதுவரை (1989 பொதுத் தேர்தல் தவிர்த்து) 50% அதிகமான ஓட்டுகளைப் பெற்ற கட்சியே வெற்றி வாகை சூடியுள்ளது. மேலும் 1991ல் பாமக உதயமானதால், அந்தத் தேர்தலில் இருந்து 2001 வரையிலான பொதுத்தேர்தல்களை மட்டுமே கணக்கில் எடுக்கப்பட்டுள்ளது.1996,1999(இடைத்தேர்தல்), 2001 தேர்தல்களில் திமுக, அதிமுகவினடையே நேரடிப் போட்டியும், 1991 அதிமுக(ஜெயா அணியும்) கம்யூனிஸ்ட்(திமுக கூட்டணி) இடையேயும் போட்டி இருந்தது.

1991 - தேர்தல் முடிவுகள்:

மும்முனை போட்டி (அதிமுக (ஜெ. அனி)& காங். - கம்யூனிஸ்ட்(திமுக) - பாமக)
ஒவ்வொரு கட்சியினரும் பெற்ற ஓட்டு விகிதங்கள்.

பதிவான ஓட்டுக்கள் - 69.71%

முடிவை நிர்ணயம் செய்தவை - இராஜீவ் படுகொலை

சி.தாமோதரன்(அதிமுக - ஜெ) - 59.61%
சி.கோவிந்தராஜன் (கம்யூ) - 23.13%
அ.தேவநாதன் (பாமக) - 16.22%

இந்த தேர்தலில் இருந்து சமூக ரீதியான ஓட்டுக்கள் நெல்லிக்குப்பம் சட்டமன்றத்தில் வெற்றியை நிர்ணயம் செய்யும் அளவிற்கு செல்வாக்கு பெற்றது. இதில் குறிப்பிடதக்க அளவில் பாமக தனித்து நின்று 16.22% ஓட்டுக்களை கள்ள ஓட்டு போடாமலும், பாமகவின் வேட்பாளர்கள் தத்தம் சொந்த பணத்தையே செலவிட்டு பெற்றவை. மேலும் பெரும்பாலான வன்னிய சமூகத்தினர் திமுகவின் ஓட்டு வங்கியாகவும், பெரும்பாலான ஆதி தமிழர்கள் அதிமுகவின் ஓட்டு வங்கியாகவே இருந்தனர். இதை அறிந்த கருனாநிதி 1991 தேர்தலுக்கு பிறகு பாமக சார்பு நிலை எடுத்தது அனைவரும் அறிந்ததே!

1996 - தேர்தல் முடிவுகள்:

ஐம்முனை போட்டி (அதிமுக & காங். - திமுக & தமாகா - பாமக - மதிமுக - பிஜேபி)
ஒவ்வொரு கட்சியினரும் பெற்ற ஓட்டு விகிதங்கள்.

பதிவான ஓட்டுக்கள் - 72.68%
முடிவை நிர்ணயம் செய்தவை - ஜெயலலிதா எதிர்ப்பலை

அ.மணி (திமுக) - 53.84%
சி.தாமோதரன்(அதிமுக) - 30.27%
அ.தேவநாதன் (பாமக) - 6.67%
வெ.கிருட்டிணமூர்த்தி(மதிமுக) - 5.41%
ம.செல்வக்குமார்(பிஜேபி) - 0.55%

கடந்த தேர்தலில் அடைந்த தோல்வியினாலும், தொண்டர்களுக்குத் தேவையான வைட்டமின் "ப"வும் இல்லாததினாலும் இங்கு பாமகவுக்கு மிகப் பெரிய சரிவு ஏற்பட்டது. அது மட்டுமல்லாமல் திரு. நெல்லிக்குப்பம் கிருட்டினமூர்த்தி அவர்கள் திமுகவிலும், பாமகவிலும் நிற்க இடம் கேட்டு கிடைக்காததால் நிற்பதற்கு ஆளே இல்லமல் இருந்த மதிமுகவில் நின்றதன் மூலம், சுற்றுப்புற கிராமங்களில் இருந்த தன் சொந்த செல்வாக்கினால் பாமகவின் ஓட்டுகளைப் பிரித்தார். அவரது சொந்த செல்வாக்கு என்று நான் கூறுவதற்கு காரணம் நான் அவ்வூரின் அரசியலை உற்று நோக்கியவன் என்பதினாலும், அடுத்து நடந்த தேர்தலின் முடிவுகள் அதைத் தெளிவாகப் பிரதிபலித்ததுமே!

1999 இடைத்தேர்தல்:

முடிவை நிர்ணயம் செய்தவை - திமுகவின் ஆளுங்கட்சி ஆட்சி & வைட்டமின் "ப"

அதுவரை நெல்லிக்குப்பத்தின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திரு.மணி அவர்கள் காலமடைந்ததல் நடைபெற்ற இடைத்தேர்தலில் விரிவுரையாளர். திரு. சன்முகம் அவர்கள் வெற்றி பெற்றார். இவர் பழகுவதற்கு எளிமையான மனிதர், அனைத்து தரப்பினரையும் உரிமையாக அணுகுபவர். நான் உள்ளூரில் மதிக்கும் மனிதர்களில் இவரும் ஒருவர்.

2001 - தேர்தல் முடிவுகள்

மும்முனை போட்டி (அதிமுக & பாமக - திமுக & வி சி - மதிமுக)
ஒவ்வொரு கட்சியினரும் பெற்ற ஓட்டு விகிதங்கள்.

பதிவான ஓட்டுக்கள் - 68.95%
முடிவை நிர்ணயம் செய்தவை - பாமக மட்டுமே

எம்.சி.சம்பத் (அதிமுக) - 50.93%
வி.சி.சன்முகம்(திமுக) - 44.26%
சி.இராதாக்கிருட்டினன்(மதிமுக) - 2.45%

இந்த தேர்தலில் எந்தவொரு எதிர்ப்பலையும் இல்லாத நிலையில் சுலபமாக வெற்றி பெற்று விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த விரிவுரையாளருக்கு தோல்வியைக் கொடுத்தது பாமகவின் கடைசி நேர அணி மாற்றமே. மேலும் இந்தத் தேர்தல் பாமகவுக்கும், விடுதலை சிறுத்தைகளுக்கிடையே நடந்த நேரடி மோதலாகக் கருதப்படுகிறது.மேலும் இத்தேர்தலில் மதிமுக பெற்ற வாக்குகள் வெரும் 2.45% இது கடந்த தேர்தலை விட 55% குறைவு. ஆக பாமகவின் இடப்பொருத்தம் மட்டுமே இத்தேர்தலின் வெற்றியை நிர்ணயித்தது என்பது என்னுடைய கருத்து.

இன்றைய நிலை:

இன்றைய சூழலில் நெல்லிக்குப்பத்தில் திமுக, மதிமுகவினரிடையே தான் நேரடி போட்டி நடைபெறுவதாயிருக்கிறது. மேலும் நெல்லிக்குப்பத்தில் திமுக, அதிமுக, பாமக, விசி, காங்கிரஸுக்கு இருக்கும் அளவிற்கு கூட 10% கூட வேலை செய்யும் அளவிற்கு தொண்டர்கள் இருக்கிறார்களா என்றால் அது சந்தேகத்துக்குரிய கேள்வி தான். இது வரை அதிமுக கூட்டணி கட்சியினருக்கு கொடுக்காத தொகுதி. அதிமுகவில் சம்பத், சொரப்பூர் இராசேந்திரன் மற்றும் முன்னாள் அமைச்சர் தாமோதரன் ஆகியோர் இடம் கேட்டிருந்த நிலையில் மதிமுகவிற்கு கொடுத்திருப்பது அதிமுக தொண்டர்களைக் கண்டிப்பாக சோர்வடையச் செய்யும். ஆக என்னுடைய் அனுமானத்தின் படி அதிமுக கூட்டணியில் மதிமுகவிற்கு இத்தொகுதியைக் கொடுத்திருப்பது...கையில்லாத ஜாக்கியிடம் சவாரிக் குதிரையை கொடுத்தது போன்றது!

நெல்லிக்குப்பம் தேர்தல் முடிவு: 2006
திமுக - அதிமுக

வி.சி. சன்முகம் vs ?(யாராக இருந்தாலும்)

வெற்றி பெறப் போவது - வி.சி.சன்முகம் (திமுக)

மேலதிகத் தகவட்கு

3/24/2006

சுப்புனியும் அவனது மட(த்து) அரசியலும்...

புட்டபர்த்தி பரட்டையன் தொடங்கி சங்கராச்சாரி வரை அனைத்து வக்கிர குணம் படைத்தவனுக்கும் ஊரை ஏமாற்ற கிடைத்தது ஆன்மீகம் என்ற போர்வை. ஆன்மீகத்தின் பெயரால் இவர்கள் செய்த அட்டூழியங்கள் தான் எத்தனை...எத்தனை...குடிமக்கள் தொடங்கி நாட்டின் முதல்குடிமகன் வரை இவர்களது காலடியில்...இத்தகைய காலகட்டத்தில் இவர்களது களியாட்டங்க்களை மக்களுக்கு அவ்வப்பொழுது நினைவூட்ட வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமையாயிருக்கிறது.

இங்கே பழ.நெடுமாறன் ஐயா அவர்களின்>"மக்களிடம் மன்னிப்பு கேட்கட்டும்" என்ற தலைப்பில் வெளியான கட்டுரையை மறுபதிவு செய்கிறேன். இக்கட்டுரை ஐயாவை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் "தென்செய்தி"யிலும் தட்ஸ்தமிழ் இணையதளத்திலும் ஏற்கனவே வெளிவந்துள்ளது.

"ஆட்சியில் உயர் பதவி வகிக்கும் அரசியல் தலைவர்கள் மத உணர்வுகளைத் தங்களுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். தாம் வகிக்கும் பதவிப் பொறுப்புகளுக்குரிய மதிப்பு, பெருமை ஆகியனவற்றுக்கு இழுக்குத் தேடித் தராமல் நடந்து கொள்ள வேண்டும்.

ஆனால் நமது நாட்டில் மன்னர்கள் ஆண்ட காலத்தில் இராசகுருக்களின் தாள் பணிந்து கிடப்பதையே பெறற்கரிய பேறாக மன்னர்கள் கருதினார்கள். அந்தப் பாரம்பரியம் இன்றும் தொடர்கிறது.

பிரதமராக இந்திராகாந்தி இருந்த போது அவருக்கு இராசகுருவாகவும் ஆலோசகராகவும் திரேந்திர பிரம்மச்சாரி விளங்கினார். ஜெயப்பிரகாஷ் நாராயண், ஜெகஜீவன்ராம் போன்றவர்கள் அவருடைய சீடர்கள். இதைப் பயன்படுத்தி அரசாங்கத்தையே ஆட்டிப் படைக்கும் அளவுக்கு அவர் வளர்ந்தார். ஜனதாக்கட்சி ஆட்சியில் பல குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்

பிரதமராக பி.வி. நரசிம்மராவ் இருந்தபோது சந்திராசாமி இராசகுருவாக விளங்கினார். பிரதமர் சந்திரசேகருக்கும் அவரே இராசகுரு. இந்த நெருக்கத்தைப் பயன்படுத்திப் பல மோசடிகளைச் செய்ததாக அவர் மீது பிற்காலத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன.

குடியரசுத்தலைவராக ஆர். வெங்கட்ராமன், தலைமைத் தேர்தல் ஆணையாளராக டி.என். சேஷன் ஆகியோர் இருந்த போது காஞ்சி சங்கராச்சாரிக்கு இராசகுரு அந்தஸ்தை அளித்தனர். இதன் விளைவாக பிரதமர் ¬முதல் மாநில முதல்வர்கள் வரை அனைவரும் காஞ்சி நோக்கிப் பயணமாகி இராசகுருவின் தாள் பணிந்தனர்.

காஞ்சி சங்கராச்சாரி கைதாவதற்குச் சில நாட்களுக்கு முன்பு குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் சங்கர மடம் சென்று நின்று பணியும் காட்சி பத்திரிகைகளில் வெளிவந்தது. ஜெயேந்திரர் அமர்ந்திருக்க நாட்டின் குடியரசுத்தலைவர் நிற்கும் காட்சி அனைவரையும் வேதனைப்படுத்தியது.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்குச் சரியாசனம் வழங்கி அமரவைத்த ஜெயேந்திரர் மராட்டிய முதல்வராகயிருந்த ஷிண்டேயை தரையில் உட்கார வைத்தார். காரணம் முன்னவர் தன் சாதி. பின்னவர் தாழ்த்தப்பட்ட சாதி.
குடியரசுத்தலைவரிலிருந்து மாநில முதல்வர்கள் வரை பெரும் பதவிகளில் இருப்போர் தமது பொறுப்பிற்குரிய பெருமையைக் காற்றில் பறக்கவிட்டதேன்? இவர்கள் தனிநபர்களாக இருந்து யார் காலில் வேண்டுமானாலும் விழுந்து தொலைக்கட்டும், தன்மானமற்றவர்கள் என்பதை நிலைநாட்டிக் கொள்ளட்டும்.

ஆனால் பெரும்பதவி வகித்துக்கொண்டு அப்பதவிகளுக்குரிய மரியாதையைச் சீரழிக்கிறார்களே என்பதுதான் நமக்குத் தலைக்குனிவை ஏற்படுத்துகிறது. பிறநாடுகளின் தலைவர்கள் இப்படியா நடந்துகொள்கிறார்கள்?

அமெரிக்காவின் குடியரசுத்தலைவராக கென்னடி பதவிவகித்த போது ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இத்தாலிக்கும், வாட்டிகனுக்கும் சென்று போப்பாண்டவரைச் சந்திப்பதாகத் திட்டமிடப்பட்டது. இதில் ஒரு சிக்கலை அதிகாரிகள் கென்னடியிடம் சுட்டிக் காட்டினார்கள்.கென்னடி உலக வல்லரசான அமெரிக்காவின் அரசுத்தலைவர். ஆனால் அவர் கத்தோலிக்கக் கிறிஸ்துவர். எனவே போப்பாண்டவரைச் சந்திக்கும் போது அவர் முன் மண்டியிட்டு வணங்க வேண்டும். ஏனெனில் கத்தோலிக்க மதத்தவரின் மிகப்பெரிய குரு அவர். அமெரிக்கக் குடியரசுத்தலைவர் பதவியின் பெருமையைக் காப்பதா? அல்லது தனது மத மரபினைக் காப்பதா? என்ற கேள்வி எழுந்த போது இத்தாலியப் பயணத்தையே ரத்து செய்தார் கென்னடி.

திரேந்திர பிரம்மச்சாரி முதல் ஜெயேந்திரர் வரை இராசகுருக்களாக விளங்கியவர்கள் குற்றவாளிக் கூண்டுகளில் நிறுத்தப்பட்ட போது தேசம் அவமானப்பட்டிருக்கிறது. கொலை, களவு, சூது போன்ற கொடிய குற்றங்களைத் தயங்காமல் செய்யும் கபட வேடதாரிகளாகத்தான் இராசகுருக்கள் விளங்கி வந்திருக்கிறார்கள். இவர்களைத் தாங்களும் வணங்கி மற்றவர்களையும் வணங்கவைத்த அரசியல் தலைவர்கள்தான் மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டியவர்களாவார்கள்.
"

3/23/2006

வூடு கட்டிக்கறாங்க! - 1 MIES VAN DER ROHE

பின்நவீனத்துவத்தை தாண்டி பல பரிணாமங்களைக் கண்டிருக்கும் இன்றைய கட்டிடக் கலை முன்னோடிகளில் எனக்குப் பிடித்த கட்டிடக்கலை நிபுணர்கள் இருவர். ஒருவர் மீஸ் வாண்டர் றொ (MIES VAN DER ROHE) மற்றொருவர் அந்தொனியா காடி (ANTONIO GAUDI) . இருவரின் வடிவமைப்பும் பின்புலமும் வெவ்வேறு மற்றும் ஒருவருக்கொருவர் தொடர்பில்லாத இரு துருவங்கள்.


MIES VAN DER ROHE

மீஸ் வாண்டர் றொ (1886 - 1969) செருமனி, ஆச்சேனில் (Aachen) பிறந்தவர். கட்டுமானப் பணியில் தேர்ந்தவராக இருந்த அவரது தந்தையோடு பத்தொன்பது வயது வரையிலும், பின்னர் பெர்லினில் இருந்த கைதேர்ந்த கட்டிடக்கலை நிபுணராக இருந்த பீட்டர் பெஹ்ரன்ஸ் (Peter Beherens) அவர்களின் கட்டிடக்கலைக் கூடத்தில் நான்காண்டுகள்(1908 - 1912) பணி புரிந்தார்.அங்கே அவர் ப்ருஷ்ய (prussia) கட்டிடக்கலையின்பாலும்,புதிய மேம்பட்ட கட்டிடவடிவமைப்பின்பாலும் கொண்ட ஆர்வத்தினால் பெர்லினிலேயே தனக்கென்று ஒரு சிறிய கட்டிடக்கலைக் கூடத்தை அதே ஆண்டில்(1912) தொடங்கினார். பின்னர் ப்ருஷ்ய(prussian) கட்டிடக்கலை நிவுனரான கார்ல் ஃப்ரீட்ரிச் ஷின்க்கெல் அவர்களின் வடிவமைப்பின் மீது ஊக்கம் கொண்டு, அதை தன்னுடைய இரும்பு மற்றும் கண்ணாடிகளால் கூடிய வடிவமைப்பிற்கு பயன்படுத்திக் கொண்டார். பெரும்பாலான இவரது கட்டிட வடிவமைப்புகளில் இரும்பும், கண்ணாடியும் பிரதானமாக இருந்தது.



>1929 ல் அகில உலக கண்காட்சிக்காக ஸ்பெயினில் நடந்த கண்காட்சியில் இவர் செருமனிக்காக கட்டிய "பெவிலியன்" இவரது கட்டிக்கலை நுட்பத்தையும், கட்டுமான பொருள்களும் இவரது "பின்நவீனத்துவ" கோட்பாடுகளைத் தெளிவாகப் பறைசாற்றியது.ஆனால் இக்கட்டிடம் அடுத்த ஒரு வருடத்திற்குள்ளாக, பிற பணிகளுக்காக இடம் வேண்டி இடிக்கப்பட்டுவிட்டது. ஆனால் இக்கலைஞனுக்கு மரியாதை செய்யும் விதமாக அதே கட்டிடம் சமீபத்தில் திரும்ப எழுப்பப் பட்டுவிடது.

1930களில் அவருடைய் வடிவமைப்புகள் எவையும் உருப்பெறவில்லை. இந்நிலையில் அவர் நவீனத்துவ-பின்நவீனத்துவ கட்டிடக்கலையை உருவாக்கிய/பயிற்றுவித்தப் பள்ளிகளில் முன்னோடியான "பாஹாஸ்" (BAUHAUS) பள்ளியின் இயக்குநர் ஆனார். ஆனால் அப்பள்ளி ஹிட்லரின் நாஜிப் படையினரால் மூடும்படி உத்தவிடப்பட்டும் மூடப்படாததால் 1933 ஆம் ஆண்டு தரைமட்டமாக்கப்பட்டது.

இவரது திருமண் வாழ்க்கை குறிப்பிட்டு சொல்லும்படி இல்லாவிட்டாலும், இவரது திருமண முறிவுக்கு பின்னரே இவர் தொழில் ரீதியாகப் பெரும் வளர்ச்சி கண்டார். இவரது 40 வது வயதில் தான் இவரது பணிகள் வெளியுலகிற்கு தெரிய வந்தது.

1932 ஆம் ஆண்டு, அவர் அமெரிக்காவின் சிறந்த கட்டிடக்கலை நிபுனர்களில் ஒருவரான ஃபிலிப் ஜான்ஸனோடு (philip Johnson) சேர்ந்து "நவீனத்துவ கட்டிடக்கலை - உலகளாவிய பார்வை" (Modern Architecture - International Exhibition) என்ற பெயரில் MOMA வில் அவருடைய கட்டப்பெறாத கட்டிடவடிவமைப்புகளைப் பொதுமக்களின் பார்வைக்காக வைத்தார். அதுவே பிற்காலத்தில் அவரை மிகச் சிறந்த கட்டிடக்கலை நிபுனனாகக் காட்டியது.

இவர் சிகாகோவின் IIT-ல் உள்ள கட்டிட கலைத்துறையின் இயக்குநராக தொடர்ந்து 20 அண்டுகள் (1938 - 1958) பதவி வகித்தார். இக்கால கட்டத்தில் இவர் சிகாகோவிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் கட்டிய கட்டிடங்கள் ஏராளம். அதில் குறிப்பிடத்தக்கவை,

மீஸ் அவர்கள் "குறைவே நிறை" (LESS IS MORE) என்பதை தாரக மந்திரமாகக் கொண்டு தன்னுடைய கட்டிடக் கலையை பிரபலப் படுத்தி வந்தார்.அதற்கு சிறந்த உதாரணம் ஃபார்ன்ஸ்வொர்த் வீடு. இது அமெரிக்காவின் இள்ளினாய்ஸ்-ல் 1950 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

இவ்வீட்டை வடிவமைத்ததம் மூலம் இவர் பின்நவீனத்துவ கட்டிடக் கலையில் "மினிமலிஸ்ட்" உருவாக்கத்தை முதன்முறையாகப் புகுத்தினார்.இரும்பு எலும்புகளையும் (steel bones) கண்ணாடி தோலையும் (glass skin) கொண்ட இவ்வீட்டில் எவரும் வசிக்க இயலாத நிலையில், இவ்வீட்டை அதன் சொந்தக்காரரான எடித் ஃபார்ன்ஸ்வொர்த் இங்கிலாந்தை சேர்ந்த பலும்போ என்ற பிரபுவிற்கு விற்று விட்டார்(விற்பனைக்கு காரணம் எடித் - மீஸ் இடையே இருந்த உறவு முறிந்ததே என்று இன்று வரை கிசுகிசுக்கப் படுகிறது :-)) இவ்வீட்டில் மீஸ் வடிவமைத்த மேசை நாற்காலிகள் இன்னபிற தட்டுமுட்டு சாமான்கள் என ஒரே மீஸ் மயமாக இருக்கும் என்றுக் கேள்விபட்டிருக்கிறேன். இது இன்றும் பொது மக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஃபான்ஸ்வொர்த் இல்லம், ஃபாக்ஸ் நதிக்கரையில், பிளானோ என்ற ஊரில் சுமார் 58 கிமீ சிகாகோவின் வடகிழக்கே அமைந்துள்ளது. அங்கே செல்ல farnsworth செல்லவும்.



இவரது மற்றொரு கட்டிடம் சிககோவின் "ஸீகிறாம்" (SEAGRAM) கட்டிடம். இது நெடிந்துயர்ந்த கட்டிடங்களுக்கான முன்னோடி. செப்டெம்பர் 11-ல் தரமட்டமாக்கப்பட்ட நியூயார்கின் இரட்டை கொபுர(மினொரு யமாசாகியால் 1977ல் கட்டி முடிக்கப்பட்டது) கட்டிடத்திற்கு கூட மீஸ்"இன் "ஸீகிறாமே" முன்னோடியாகும்.


860-880 LAKE SHORE DRIVE APARTMENTS - Chicago. இவை உலகளவில் கட்டிடக்கலை நிபுனர்களிடையே ஒரு பெரும் உந்துதலை ஏற்படுத்தியது. இது மட்டுமல்லாமல் இக்கட்டிடங்கள் தற்கால அமெரிக்காவின் நகர வாழ்க்கையையே மாற்றியமைத்தது என்றால் அது மிகையாகாது. இவை "கண்ணாடி கோபுரங்கள்" என்றும் அழைக்கப் படுகின்றன.

ஐஐடி சிககோவின் பல கட்டிடங்களையும் மீஸ் தான் வடிவமைத்தார்.


அது மட்டுமல்லாமல், அவர் இன்றளவிலும் பிரபலமாக உள்ள பல அலுவலக மேசை நாற்காலிகளையும் வடிவமைத்துள்ளார்.

இவ்வளவு சிறப்பம்சம் மிக்க படைப்புகளைக் கொடுத்தாலும் அவரின் கட்டிடங்கள் மனிதத்தை இழந்து, வெறும் இயந்திரமாகவே இயங்குவதாகவும் பல விமர்சனங்கள் எழுந்ததுண்டு. மிகவும் குறைந்த அளவிலேயே அவருடைய வடிவமைப்புகள் உருபெற்றன.அவர் 1969ம் ஆண்டு சிகாகோவில் காலமானார்.ஆயினும் இன்றைய கட்டிடக்கலைத் துறைக்கு அவரது படைப்புகள் பெரும் பங்காற்றிக் கொண்டு இருக்கிறது.

The Presence of Mies by Ludwig Mies Van Der Rohe

3/22/2006

வேர்க் கடலையும் வட்டார மொழியும்!

நாம் எழுதும் சொற்கள் அனைத்தும் ஓரளவு ஒரே மாதிரி இருந்தாலும் பேச்சு வழக்கில் நாம் பலவாறான சொற்றொடர்களை பயன்படுத்துகிறோம்.பல்வேறு வட்டாரங்களைச் சார்ந்த நண்பர்களோடும் மனிதர்களோடும் பழகும் சந்தர்ப்பம் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது நான் படித்த பள்ளிகளும், கல்லூரிகளும். ஆனாலும் இது நாள்வரை எனக்கு பிடிபடாத விடயமாக இருப்பது இந்த வட்டார பேச்சு வழக்கு. புரிந்தாலும் புரியாவிட்டாலும் பல நேரங்களில் புரிந்த மாதிரி மண்டையை ஆட்டி விடுவேன்.
உதாரணத்திற்கு, வயலுக்குச் சென்று வேர்க்கடலைப் பறித்து உண்ணலாம்" என்பதை
வட மாவட்டங்களில் "கொல்லிக்கு போய் மல்லாட்டை பறிச்சி தின்னலாம்" என்று வழங்குவார்கள்.
மதுரை - வயலுக்குப் போயி நெலக்கடல பரிச்சி சப்பிடலாம்லா...
திருநெல்வேலி - ஏலா வயக்காட்டுக்கு வாலா...கல்லப்பருப்பு திம்போம்.
கொங்கு - என்ற கூட வெள்ளாமக் காட்டுக்கு வா., கடல திங்கோணும்.
தஞ்சை - கொல்லைக்கு வா கடலை சாப்பிடலாம்.
ஈழம் - 'வாருமப்பா கச்சான் தின்னுவம்'.
கன்னியாகுமரி - அண்ணாச்சி வாறியலா கல்ல சாப்பிடுவோம்.

இவை எல்லாம் புவியியல் ரீதியான வட்டார வழக்கு மொழிகள். இவ்வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் பிற வட்டாரத்தைச் சேர்ந்தவர்களோடு கதைக்கும் பொழுது அவரவர் வழக்கு மொழியையே பெரும்பாலும் பயன்படுத்துவர்கள். ஆனால் கல்லூரியிலோ அல்லது பணியிடங்களிலோ இருப்பவர்கள் இருக்கும் இடத்திற்கு தகுந்தாற் போல் பேச்சு வழக்கை மாற்றிக் கொள்வார்கள். மேலும் வட்டார மொழி ஒரு அடையாளமாகக் கருதப்படுகிறது(சாதி மதத்தைப் புறந்தள்ளி).

ஆனால் எனக்கு பிடிபடாத பொருளாக இருக்கும் ஒரே வட்டாரம் பார்ப்பன வட்டாரம், நாம் மேற்கண்ட சொற்றொடரை பார்ப்பன வட்டாரத்தில் - "ஷெத்த வயல் பக்கம் வர்றேளோ., வேர்கடலை ஷாப்பிடலாம்" என்று வழங்குவார்கள்.

சினிமாவில் மட்டுமே இவர்கள் பிறரோடு கதைக்கும் பொழுது அவா, இவா, அம்பி என்று வழங்கக் கண்டு இருக்கிறேன். ஆனால் நடைமுறையில் இவர்கள் மற்றவரைப் போல் சாதாரணமாகவே தமிழ் கதைத்தாலும், சக பார்ப்பனரைக் கண்டுவிட்டால் போதும். அவா இவா என்று கதைக்க ஆரம்பித்து விடுவார்கள். அது தனியாக இருந்தாலும் சரி, கூட்டமாக இருந்தாலும் சரி. இதனாலேயே இவர்கள் எந்த வட்டாரத்தைச் சேர்ந்தவர்களாகச் சேர்த்துக் கோள்வது என்று எனக்குத் தெரியவில்லை.

தாய்மொழி தமிழாக இருந்தாலும் வேறு மொழிச் சொற்களெ அதிகமாக அவர்களின் பேச்சு வழக்கில் இருக்கும். வாயிலேயே நுழையாத சொற்களை சர்வ சாதாரனமாக தமிழாக்கிக் கதைப்பார்கள்.
தமிழ் தமது தாய் மொழியில்லை என்று வாதாடுபவர்கள், ஏன் தங்களது தாய்மொழியிலேயே கதைக்க விரும்பவில்லை?

இப்படி ஒரு மொழி வழக்கையே நிறுவிக் கொண்டதன் மூலம் அவர்கள் எதை நிலைநிறுத்த முயன்றார்கள். அதன் மூலம் தான் பார்ப்பனன் என்று பறைசாற்றியது தவிர வேறு ஏதாவது சாதித்தார்களா?

நல்ல வேலை நாங்கள் பேசுவது தான் தூய்மையான தமிழ், இதை தான் இனி தமிழக அரசு பேச்சு வழக்கிலும், எழுத்து வழக்கிலும் பயன்படுத்த வேன்டும் என்று சென்னையில் ஆரியக் கூத்தாடவில்லை.

வட்டார மொழிகளைக் கொடுத்துதவிய சகவலைபதிவு நண்பர்களுக்கு நன்றி!தவறாக இருக்கும் பட்சத்தில் சரியானவற்றை தெரிவுபடுத்தவும்,நன்றி!

3/13/2006

விட்டில் பூச்சி!

வின்மீன்கள் உலவுகின்ற
இத்தமிழ்மண வானில்
எரிகல்லாய் எரி(றி)ந்து
வீழவிரும்பவில்லை

தமிழ்மணம் வீசும்
நந்தவனத்தில்
சிறுவிட்டில் பூச்சியாய்
சிறகடித்து பறந்திட
விரும்புகிறேன்.

விட்டில் பூச்சிகள் இவை யாரையும் பொதுவாகத் தாக்காது, கடிக்காது, விஷத் தன்மையற்றவை. இவற்றால் வேகமாகவும் பறக்க இயலாது. இவை ஈ, கொசுக்களைப் போன்று கொடிய வியாதிகளைப் பரப்புவதும் கிடையாது.

தமிழுக்கும் எனக்குமான தொடர்பு தாய்க்கும், குழந்தைக்குமான தொடர்பாய் இருந்தாலும்., எழுத்துக்கும் எனக்குமான தொடர்பு அவ்வளவு பெரிதானதாக சொல்லிக் கொள்ளவதில்லை... சிறு வயதில் சில வரலாறுகளையும், காப்பியங்களையும் என்னுடைய அம்மா படிக்கக் கேட்டது தவிர எனக்கென்று ஒரு தேடலும் இருந்ததில்லை. சில நேரங்களில் நானாக ஆர்வபட்டு படிக்க முயன்ற பொழுதும், எனக்கென்றே எனக்குள் இருக்கும் சிற்றறிவினால் எந்தவொரு எழுத்தையும் சுதந்திரமாக அணுக முடிந்ததில்லை.
இவை பழுப்பு நிறத்தில் 7/16" இருந்து 9/16" வரை வளரும். மிருதுவான, நீள் வடிவமான உடலினைக் கொண்டது. பொதுவாக இவை வசந்தகால மாலைப் பொழுதினில் காண கிடைக்கும். இவற்றின் வாழ்க்கை காலம் 3 நாட்களிலிருந்து 1 வாரம் வரை இருப்பதாக அதிகாரபூர்வமற்ற செய்திகள் கூறுகின்றன.

இவ்விட்டில் பூச்சியின் காலம் சிறிதளவே என்பதனால் என்னைப் பற்றி நீண்டதொரு விளக்கம் தேவை இல்லை. எதற்காகவோ எதையோத் தேடி அலைந்த பொழுது கண்ணில் பட்டது தமிழ்மணத்தின் தலைவாசல். இங்கு கூட நான் எதையும் குறிப்பிட்டு தேடியதில்லை. தலைவாசலின் வழியாக வீட்டினுள் நுழையும் காற்று சிறிது சாளரத்தின் வழியாகவும் சிறிது தாழ்வாரத்தின் வழியாகப் புகுந்து சமையலறைக்குச் சென்று அங்கே சமைக்கப் படும் உணவின் வாசத்தையும் தோட்டத்தில் இருக்கும் தொழுவத்தின் சாண வாசத்தையும் எடுத்துக் கொண்டு பொதுவில் கலந்து விடும். அதில் சிலருக்கு சாணத்தின் வாசம் பெரியதாகவும், சிலருக்கு சமையலின் வாசம் பெரியதாகவும் தெரியும். இப்படித்தான் எழுத்துக்களும் இங்கே இனம் பிரிக்கப்பட்டிருந்தது.

தமிழ்மணத்தின் தலைவாசலில் "குழலி"யின் பெயரால் கவரப்பட்டு "கடலூர் காட்டானின் களத்து மேட்டிற்கு" முதல் முறை சென்றேன். அதுவே தமிழ்மணம் என்னும் பெருவெளியில் கொண்டுவந்து விட்டது. களத்துமேட்டிற்கான உக்கிரம்:-) (குழலி மன்னிப்பாராக!) தாங்காது சிறிது காற்று வாங்க சுரேஷ் அண்ணாச்சியின் "தேம்ஸ் நதிக்கரையோரம்" உலாவினேன். பின்னர் குழலி, மற்றும் சுரேஷ் அண்ணாச்சியின் உதவியினாலும் ஊக்கத்தினாலும் தமிழில் பின்னூட்டமிட கற்றுக் கொண்டேன். இடையே "காசியின் உன் கோடு, என் கோடு தனி(யூனி)கோடு" பதிவின் மூலம் யூனிகோடு என்றால் என்ன என்பது ஓரளவு புரிந்தது. பின்னாளில் அது ஒரு உப்பு சப்பில்லாத பொட்"டீ"கடை ஒன்றைத் திறந்து "ஈ"யடிக்கும்படி ஆகிவிட்டது. என்னை வலை பதிய ஊக்குவித்த குழலி மற்றும் சுரேஷ் அண்ணாச்சி அவர்களுக்கு எனது நன்றிகள்.

இவற்றின் உடலிலிருந்து வரும் ஒளிவெள்ளமானது தனித்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதன் முழு சக்தியும் ஒளிக்கீற்றாக வெளியேற்றப்படுவதாகத் தெரிந்தாலும், வெறும் 10% மட்டுமே ஒளியாகவும் பிற 90% வெப்பசக்தியாகவும் வெளியேற்றப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக இவற்றின் பின் பகுதியிலிருந்தே ஒளியானது வெளிக் கொணரப்படுகிறது. இதன் பின் பகுதி, கிடைக்கற்கரிய இரசயானங்களான லூசிஃபெரின், லுசிஃபெரஸ் போன்றவற்றை உள்ளடக்கியது. அதன் உடலில் உள்ள அடினோஸின் ட்ரை ஃபாஸ்பேட் மாற்றும் சக்தியாக இருந்து லூசிஃபெரின், லுசிஃபெரஸ் கலவையை ஒளி சக்தியாக மாற்றுகிறது. அனைத்து உயிரின செல்களிலும் ஏடிபி இருக்கின்ற காரணத்தால் விட்டில் பூச்சியின் இரசாயனக் கலவையை மனித உடலில் ஏற்றும் பொழுது, செல்களுக்குள் ஏற்படும் இரசாயன மாற்றத்தினால் புற்று நோய்க்கான அறிகுறிகளையும் இன்ன பிற மருத்துவ பயன்பாட்டிற்கும் இவை உதவுகின்றன.

நான் என்னதான் குப்பையை கிளறினாலும் என்னை ஊக்குவித்த வாத்தியார் தருமி , அப்பிடிபோடு அக்கா, முத்துகுமரன் மற்றும் கடைக்கு வந்து போன பலருக்கும் எனது நன்றிகள். இதுவரை பின்னூட்டங்கள் மட்டுமே அதிக அளவில் (இடுகைகளை விட) எழுதிய என்னை பிடறியில் தட்டி, இனி தப்பிக்க இயலாத வண்ணம் நட்சத்திரமாக்கி விட்ட "மதி"க்கு எனது நன்றிகள்(நற நற..)

இது மட்டுமல்லாமல் கழிவு நீர் சுத்திகரிப்பு, சுற்று சூழல் பாதுகாப்பு மற்றூம் பன்றிகளின் உயர் இரத்தாழுத்தை போக்குவதற்கும் விட்டில் பூச்சிகள் தேவையாக இருக்கின்றது. அது மட்டுமல்லாமல் வின்வெளித்துரையிலும் இதன் பயன்பாடுகள் அதிக அளவில் உள்ளது.

இவற்றின் இரசயானங்களை செயற்கையான முறையில் உற்பத்தி செய்ய இயலாத காரணத்தால், வளர்ந்த நாடுகள் பல இவற்றை பெருக்கம் செய்வதில் ஆர்வமாக இருக்கின்றன.

இந்த ஒருவார காலத்திற்கு தொடர்ந்து எழுத வேண்டும். என்னை எழுத அழைத்த அனைவருடைய, நம்பிக்கையை பொய்ப்பிக்காத வண்ணம் தினமும், வின்மீனாக மின்ன இயலாவிட்டாலும் சிறு விட்டில் பூச்சியாகப் பறந்து சில சிறார்களை மகிழ்விக்கும் பொருட்டு ஏதாவது எழுதி இந்த ஒரு வாரத்தை பூர்த்தி செய்ய முயற்சிக்கிறேன்.

அதனால் அனைவரும் பொட்"டீ"கடைக்கு இந்த ஒரு வாரம் மட்டும் ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்...:-).

பின்குறிப்பு: எனக்கு இலக்கணமும் தெரியாது, இலக்கியமும் தெரியாது - தெரிந்து கொள்ளும் ஆர்வமும் இல்லை. அதனால் அதிகம் எதிர்பார்த்து ஏமாற்றம் அடைய வேண்டாம் :-)). ஆனால் வாழ்க்கையை உற்று நோக்கி அறிந்திருப்பதால்., அவைகளை வைப்பேன் இங்கு.

3/10/2006

ஸ்டாலின் VS வைகோ

வைகோ அதிமுகவுக்குத் தாவினாலும் தாவினார் கடந்த ஒரு வாரமாக வைகோ கொள்கையை அடகு வைத்துவிட்டார். வைகோ ஒரு தேர்ந்த அரசியல்வாதியாகி விட்டார். வைகோவின் செல்வாக்கு அவ்வளவு தான். வைகோவிற்கு நடுநிலையாளர்களின் வாக்குகளைத் தவற விட்டு விட்டார். வைகோ திமுக தொண்டர்களின் பரம எதிரியாகிவிட்டார்...லலலா...லலலா...
அப்பப்பா எவ்வளவு கருத்துரையாடல்கள், கருத்து வேறுபாடுகள்...நானும் கருத்து சொல்லலாம் என்று நினைக்கையில், நமது கருத்து பல பதிவுகளின் நோக்கங்களை திசை திருப்பிவிடக் கூடாது என்ற காரணத்தினால் தான் இந்த பதிவு.
வைகோ: திமுகவில் தொண்டனாக ஆரம்பித்து தன் பேச்சுத் திறமையால் திமுகவின் போர்வாளாகவும், கருனாநிதியின் வலது கரமாகவும் செயல்பட்டவர். பின்னர் ஜெயலலிதாவின் ஆட்சியில் அவரின் அரசியல் சானக்கியத்தனத்தால் அவரது உளவுத்துறையின் மூலம் "கருனாநிதியைக் கொல்லத் திட்டம் தீட்டினார்" என்று பொய் பிரச்சாரம் பரப்பப்பட்டு கருனாநிதியால் கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டவர்.பின்னர் மதிமுக என்று ஒரு கட்சியைத் தொடங்கி இன்று வரை ஒரு கட்சியாகவே இழுத்துக் கொண்டு வந்துள்ளார். அவர் ஒருவர் தான் இந்திய அரசியலில் உள்ள ஒரே ஒரு தன்மானம், கொள்கை மிக்க தலைவர் என்ற பிம்பத்தை வளர்த்து வந்திருக்கிறார் நேற்றுவரை. கட்சி ஆரம்பித்து பன்னிரெண்டு ஆண்டுகளாகியும் சட்டமன்றத்தில் பிரதிநித்துவம் இல்லாத கட்சி. கூட்டணி முதுகினில் சவாரி செய்து இரண்டு மூன்று முறை பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்களை அனுப்பியவர். கருனாநிதியை விட தமிழையும், தமிழீழத்தையும் அதிகமாக மேடைகளில் முழங்கியவர். மறைந்த காங்கிரஸ் தலைவர் இராஜீவ் இந்தியாவின் பிரதமராக இருந்த பொழுது அவரை மாநிலங்களவையில் பெயரிட்டு அழைத்த வீர மனிதர். மேடைகளில் நெப்போலியன் தொடங்கி திருவாசகம் வரை மேடைகளில் சரளமாகப் பேசக் கூடியவர்.

ஸ்டாலின்: இவருக்கு கருனாநிதியின் மகன் என்பதைத் தவிர வேறு எந்த ஒரு தகுதியும் இல்லை என்பது பலரது வாதம். இவரும் தன்னுடைய 21ம் வயதில்(1974) சென்னை மாநில கல்லூரியில் படிக்கும் பொழுது ஒரு சாதாரண தொண்டனாக திமுக இலைஞரணியில் இணைத்துக் கொண்டார். பெரிதாக கட்சி பணிகளில் ஈடுபடாவிட்டாலும் திமுக தலைவரின் மகன் என்ற ஒரே காரணத்தினாலேயே 1976 ம் ஆன்டு இந்திரா அரசு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்ட பொழுது சிறையில் அடைக்கப்பட்டார்.அதன் பின்னர் 1980கலில் திமுகவிற்கு இளைஞரணியின் பங்களிப்பு அவசியம் தேவை என்ற காரணத்தினால் அன்பழகனின் மேற்பார்வையில் இளைஞரனியில் புது இரத்தம் பாய்ச்சும் பொருட்டு களப்பணிகளில் தீவிரமாக இறங்கியவர். இன்றைய திமுகவின் இளரத்தங்கள் பெரும்பாலும் ஸ்டாலினின் விசுவாசிகளே. ஸ்டலினுக்கு வைகோவை போல் மேடைப்பேச்சு வராவிட்டாலும் அனைத்து வயதினரையும் அரவணைத்து செல்லும் பன்பை அறிந்தவர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
வைகோ திமுகவில் இருந்து பிரிந்து சென்ற போது அவரின் விசுவாசிகளும் திமுகவில் பதவி சுகம் கிட்டாதவரும் தான் வெளியேறினார்களேயொழிய ஸ்டாலினை பிடிக்காததால் வெளியேறினோம் என்று கூறியவர்கள் மிகச் சிலரே. அவ்வாறு கூறியவர்களில் பலரும், கடந்த காலங்களில் திமுகவொடு வந்து இணைந்த கதையும் உண்டு.

இவரும் தேர்தலில் நின்று தோல்வியை தழுவியிருந்தாலும் பின்வந்த காலங்களில் வெற்றியடைந்தவர். 25 ஆண்டுகட்கு பின் நடந்த சென்னை மாநகரத் தந்தை தேர்தலில் வரலாறு காணாத வெற்றியடைந்தவர். தொடர்ந்து வந்த தேர்தலிலும் அதிமுகவின் பல தில்லுமுல்லுகளுக்கு இடையேயும் மீண்டும் மாநகரத் தந்தையாகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர். ஒரு நேரத்தில் ஜெயலலிதா என்ற அகங்காரம் பிடித்த பெண்மணியே அவரை சட்டமன்றத்திற்கு வரவிடக்கூடாது என்ற எண்ணத்தில் ஒருவருக்கு ஒரு பதவி தான் என்ற சட்டத்தை இயற்றிய பொழுதும் மாநகரத் தந்தை பதவியை இராஜினாமா செஇது விட்டு சட்டமன்ற நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் பொருட்டு சட்டமன்ற உறுப்பினர் பதவியை தக்க வைத்துக் கொண்டவர்.

சட்டமன்றத்தில் ஜெயலலிதாவால் இவரை சிறுபிள்ளை போல் எள்ளி நகையாட முடிந்ததே தவிர வேறெதுவும் சாதிக்க இயலவில்லை. அப்படி சந்தர்ப்பம் வாய்த்த போதெள்ளம் ஒரு சிறந்த தலைவனுக்கான எடுத்துக்காட்டாக சிறு புன்முறுவலுடன் நிறுத்தி கொண்டாரே தவிர உணர்ச்சிவசப்பட்டு விவகாரமாக ஏதும் பேசாத பண்பட்ட மனிதர்.

இதுவரை இந்திய அரசியலில் இருந்த/இருக்கும் வாரிசு அரசியல் தலைவர்களிலேயே இவர் மட்டும் தான், தான் சார்ந்திருக்கும் கட்சிக்காகவும், மற்ற போராட்டங்களுக்காகவும் சிறைவாசம் அனுபவித்தவராக இருப்பார். இதனாலேயே மற்ற சில்லுண்டிகளின் வாதமான வாரிசு அரசியல் என்ற ஒரு வார்த்தை இவர் முன் வாதமற்று போய் விட்டது. வைகோ இடம் மாறியது கூட, ஜெயலலிதாவிற்கு ஸ்டாலின் மீது ஏற்பட்டிருக்கும் பயம் தானேயொழிய வேறேதும் இருக்க வாய்ப்பில்லை. அந்த ஒரு காரணத்தினாலேயே பெட்டியைக் கொடுத்து வைகோவை வலையில் வீழ்த்தினார்.

கருனாநிதிக்குப் பின் திமுகவின் தலைமை என்பது ஸ்டாலின் ஒருவரால் மட்டுமே என்பது மறுக்க இயலாத உண்மை. கருனாவிற்கு பின் வைகோ திமுகவை கையகப்படுத்துவது என்பது நடக்க இயலாத ஒரு கனவேயாகும். இதுவரை கழகத்தை கட்டி காத்து வந்த இரண்டாம் நிலைத் தலைவர்களுக்கு கருனாவின் முந்தைய நாள் வரையிலான வைகோவின் சகவாசம் என்றுமே பிடித்ததில்லை என்பது தான் உண்மை. அவர்கள் அனைவருமே ஸ்டாலினுக்காகவே உருவாக்கப்பட்டவர்கள், ஆகையால் கருனாவிற்கு பிறகு திமுக உடையும் என்பது ஒரு உப்பு சப்பில்லாத வாதம்.

தமிழ்நாட்டை ஆளும் அளவிற்கு ஸ்டாலினுக்கு தகுதியுள்ளதா என்று கேள்வியெழுப்பவர்கள், 1991 ம் ஆண்டு ஜெயலலிதாவின் கையில் தமிழ் மக்களின் தலைவிதியை ஒப்படைத்த பொழுது கேட்டார்களா என்றால் மௌனம் ஒன்றே பதிலாக வரும். அன்றைய ஜெயலலிதாவை இன்றைய ஸ்டாலினோடு ஒப்பிட்டால் ஸ்டாலின் பல நூறு மடங்கு சிறப்பாக செயலாற்றுவார் என்பதில் ஐயமே இல்லை.

3/01/2006

கொஞ்சம் மஸ்ஸெல்(mussel) நான்கு பேருக்கு...

நான்கு நான்காய் கோர்த்துக் கொண்டிருக்கும் சங்கிலியில் "முத்தான" முத்துக்குமரன், நான்கு முத்துகளில் ஒன்றாய் என்னையும் கோர்த்துவிட்ட முத்துக்குமரனுக்கு நன்றி! இங்கே எனக்கு எதிர்பார்ப்புகள் மிகக் குறைவு, அதனால் முத்துக்குமரனின் கோர்வை எனக்கு வியப்பு கலந்த மகிழ்ச்சியே...

இதற்கு முந்தைய பதிவு ஒன்றில் என்னைப் பற்றிய முழு விவரத்தையும் கோர்த்துவிட்டதால் அதில் கோர்க்க முடியாதவற்றை இங்கே கோர்க்கிறேன்.

பிடித்த நான்கு விடயங்கள்:

அரசியல்: அது இரத்தத்திலேயே ஊறிவிட்டது என்று நினைக்கிறேன். குடும்பத்தில் சித்தப்பாவைத் தவிர யாரும் தீவிர அரசியலில் இல்லாவிட்டலும் அரசியலை குடும்பத்தோடு கதைக்கும் வழக்க்ம் இன்று வரை தொடர்கிறது. அப்பா ஒரு முன்னாள் கம்யூனிஸ தோழர், அதனால் சிறு வயதிலேயே மார்க்ஸ், எங்கெல்ஸ்,V.P.சிந்தன் அவர்களை பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. சித்தப்பா திமுகவின் தீவிர உறுப்பினர், இதனால் 10 வயதிலேயே போடுங்கம்மா ஓட்டு என்று ஊரூராய் சுற்றிய அனுபவம் உண்டு. இன்று கூட சித்தப்பாவிடமும், அப்பாவிடமும் 1,2 மணி நேரம் தொலைபேசி அரசியல் கதைக்கும் வழக்கம் உள்ளது.

இசை:மொழி வேறுபாடு இருந்தாலும் நல்ல இசையை எவராலும் ரசிக்க இயலும். அந்த வகையில் எதாவது ஒரு இசை அது எந்த மொழியாக இருந்தாலும் சப்தமாக இருந்தாலும் கேட்டுக் கொண்டு இருப்பேன்.

எகிப்திய பிரமீடுகள்: இன்னமும் பல மர்மங்களை தன்னுள்ளே வைத்திருக்கும் எகிப்திய பிரமீடுகள் என்னுள்ளே ஒரு பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. என்னுடைய தேனிலவை அங்கு கொண்டாட ஆசை. ;-)

காதல்: தாகம் எடுப்பவனுக்கு தான் தண்ணீர் கூட தேவை. ஆனால் காதலைப் பற்றி கதைக்கவோ, எழுதவோ அல்லது காதலிக்க கூட எதுவுமே தேவையில்லை. மனம் மட்டும் இருந்தால் போதும். பிறந்தது முதல் காதலித்துக் கொண்டிருக்கிறேன், பலரை. காதலித்தேன், காதலிக்கிறேன், காதலிப்பேன்...திருமணம் என்பது சமூகத்திற்காக காட்டப்படும் ஒரு சம்பிரதாயமாக இருப்பதால் இதுவரை அதில் நம்பிக்கையில்லை.

என்னை கொல்லத் துணிந்திருக்கக்கூடிய நான்கு பெண்கள்:

செல்வி
நயனா
விம்மி
சிந்து
:-)

மீண்டும் மீண்டும் பார்த்த நான்கு திரைப்படங்கள்:

வேதம் புதிது
ஆளவந்தான்
life is beautiful
Gattaca

நான் எப்பொழுதும் ரசிக்கும் நான்கு பாடல்கள்:

தென்றல் வந்து தீண்டும் போது (அவதாரம்)
மயில் போல பொண்ணூ ஒன்னு (பாரதி)
Careless whisper (George Michael)வெறுமையாய் உணரும் பொழுது..:-)
Imagine (John Lennon)தனிமையாய் உணரும் பொழுது
எனக்குப் பிடித்த நான்கு உணவு:

அம்மா வைக்கும் சாம்பார் மற்றும் உருளைக்கிழங்கு பொரியல்,
சுடச் சுட இட்லி, மீன்குழம்பு தேங்காய் சட்னியோடு
ஆயா வைக்கும் மீன் குழம்பு (சட்டியில்)
அப்பா ஊட்டிவிடும் எந்தவொரு உணவும்.

இரண்டு மாதங்களுக்கு மேல் தாக்குபிடித்த நான்கு கல்லூரிகள்:

சென்னைக் கிறித்தவக் கல்லூரி
அருள்மிகு மீனாட்சியம்மன் பொறியியல் கல்லூரி
இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி
சிட்னி பல்கலைக்கழகம்

இருபத்தி"நான்கு" மணி நேரமும் திறந்திருக்கும் இணையதளங்கள்:
தமிழ்மணம்
ஜிமெயில்
டெய்லி டெலிகிராப்
கிரிக் இன்ஃபோ

நான் அழைக்க விரும்பும் நான்கு நன்மணிகள்:

அப்பிடிப்போடு அக்கா
குழலி
நிலவு நண்பன்
நண்பன்

ஏற்கனவே பிறர் கோர்த்திருந்தாலும், நானும் அவர்களைக் கோர்த்து விடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். :-)



2/17/2006

காதல் கொண்டான்

காட்டாறாய் ஓடிக் கொண்டிருந்தவனை
பாறையாய் வந்து
அணைக்கப் பார்த்தாள்.


சிறிது சிறிதாய் வருடிய
அவன்
மூழ்கடித்தான் அவளை
முழுவதுமாக!

2/14/2006

நான் கல்லூரியில் சேர்ந்த கதை! - பாகம் 1

என்னை ஈன்றெடுத்த தாய்-தந்தைக்கு எனது இனிய காதலர் தின வாழ்த்துக்கள்!

நான் கல்லூரியில் சேர்ந்த கதை! - பாகம் 1

வெளியில் பெருமையாகச் சொல்லக் கூடிய அளவு என்னுடைய பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இல்லையென்ற போதிலும், என்னை விடக் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற என்னோடு பயின்ற சக மாணவர்கள் தமிழகத்தின் மிகச் சிறந்த கல்லூரிகளில் சேர்ந்துவிட எனக்கோ பெருத்த அவமானம்?!

எனது தந்தையும் எந்தெந்த கல்லூரி(கள்) எந்தெந்த ஊரில் படிக்க எனக்கு ஆசை என்று கேட்டார். படித்தால் திருச்சி புனித வளனார் அல்லது சென்னை கிறித்தவக் கல்லூரி என்று நான் கூறினேன். கிறித்தவ கல்லூரி இருபாலரும் படிக்கும் கல்லூரி என்பதனால் அது அடிபட்டுவிட ராயப்பேட்டை புதுக் கல்லூரி அதில் சேர்ந்துக் கொண்டது.இந்த இரு கல்லூரிகளுக்கும் விண்ணப்பம் போட்டு வைத்துவிட்டு கிரிக்கெட் மட்டையைத் தூக்கிக் கொண்டு ஊர் மேயச் சென்று விட்டேன்.

புதுக் கல்லூரி ஒரேடியாக ஆப்பு வைக்க, திருச்சி புனித வளனாரிடம் இருந்து நேர்முகத் தேர்விற்கு அழைப்பு வந்தது. நேர்முகத் தேர்வில் எனக்கு மாலைக் கல்லூரியில் வேதியியல் படிப்பிற்கு இடம் ஒதுக்கி 1 வாரக் கெடுவும் விதித்து சேர்க்கைக் கடிதமும் கொடுத்தனுப்பினர். இங்கே தான் என்னுடைய சேட்டை ஆரம்பித்தது. நான் மாலை நேரக் கல்லூரியில் படிக்க முடியாது, படித்தால் முழு நேரக்கல்லூரியில் விடுதியில் தங்கித்தான் படிப்பேன் என்று பிடிவாதம் பிடித்தேன்.

தந்தையும் சளைக்காமல் "வின்சென்ட்" மாமாவின் (அப்பாவின் நெருங்கிய தோழர்) உதவியை நாட, மாமாவும் சென்னை லயோலா கல்லூரியில் கணிதத் துறையில் விரிவுரையாளராக பணி புரியும் அவரது தம்பியை சந்திக்க என்னையும் அழைத்துச் சென்றார். மிக பிரமாண்டமான கல்லூரி. படித்தால் இங்கு தான் படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். மாமா என்னை அவரிடம் அவரிடம் அறிமுகப்படுத்திவிட்டு வந்த செய்தியை சுருக்கமாகவும் புரியும் படியும் எடுத்துக் கூறினார்.அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட பின்னர், விண்ணப்பதாரர் தலித்/தலித் கிறித்தவராக இருக்கும் பட்சத்தில் பரிந்துரைப்பது சுலபமாக இருக்க்கும் என்று விளக்கினார். பின்னர் மாமாவின் வற்புறுத்தலின் பேரில் திருச்சி புனித வளனார் கல்லூரி முதல்வருக்கு என்னை முழுநேரக் கல்லூரிக்குப் பரிந்துரை செய்து ஒரு கடிதம் ஒன்றும் கொடுத்தனுப்பினார்.

இதற்கிடையில் எனது தந்தை கடலூரில் பிரபலமான வழக்குறைநர்/குடும்ப நண்பருமான .... சாரிடம், திருச்சி தேசியக் கல்லூரிக்காக வேண்டி ஒரு பரிந்துரை கடிதமும் வாங்கி வந்திருந்தார்.

இதில் கொடுமை என்னவென்றால் இதில் தான் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்த எனக்கு பிற கல்லூரிகளுக்கும் விண்ணப்பப் படிவங்கள் போட வேண்டும் என்ற ஆர்வம் இல்லை. இதனால் என்னுடைய ஆர்வம் ஆசையாகப் போனது.

இரு கடிதங்களையும் எடுத்க் கொண்டு நானும் என் தந்தையும் திருச்சிக்குப் பயனமானோம். முதலில் தேசியக் கல்லூரியின் அலுவலகத்திற்கு சென்றோம். அனைத்தையும் கவனமாகப் படித்த அவர்கள் என்னிடம் நான் பிராமனனாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு பிரச்சினை ஏதும் இருக்காது என்று கூற நான் மட்டும் தனியாக புனித வளனார் கல்லூரிக்கு நடையைக் கட்டினேன்.

முதல்வரைச் சந்தித்து நான் கையில் கொண்டு சென்ற கடித்தைக் கொடுத்த பின்னர் அவர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி.நீ கிறித்தவனா? நான் இல்லையென்று கூறினேன். உடனே அவர் என்னிடம், மாலை நேரக் கல்லூரியில் சேர்ந்து விட்டாயா? இதுவரை இல்லையென்றால், முதலில் அதை செய் பின்னர் வரும் வாரத்தின் முதல் நாளில் தன்னை வந்து சந்திக்குமாறும் கூறினார். மகா சோம்பேறியான நான் என் தந்தையினிடத்திலும், மாமாவிடமும் அதை இருட்டடிப்புச் செய்து ஒரு பொய் மூட்டையை அவிழ்த்து விட்டு அவர்கள் அனைவரது முயற்சியையும் விழலுக்கு இறைத்த நீராய் ஆக்கினேன்.

இந்நேரத்தில் தமிழகத்திலுள்ள அனைத்துக் கல்லூரிகளிலும் வகுப்புகள் தொடங்கிவிட, என் விருப்பம் இல்லாமலேயே என் தந்தை அளித்திருந்த விண்ணப்பத்தினால் கடலூர் புனித வளனார் கல்லூரியில் இருந்து சேர்க்கைக் கடிதம் வந்திருந்தது...

சேர்ந்த கதை சோர்ந்த கதையாகத் தொடரும்...

1/08/2006

புரட்சி(பயிற்சி) சப்-இன்ஸ்பெக்டர்

நேற்றுக் காலை "இந்து" நாளிதழை மேய்ந்துக் கொண்டிருந்த பொழுது கண்ணில் பட்ட நம்முடைய வட்டாரச் செய்தி.கடலூரில் ஒரு பயிற்சி காவலர்,தனக்கு கீழே பணிபுரியும் ஒரு தலைமைக் காவலரை "பளார்" என கண்ணத்தில் அறை விட்டதாகவும், தலைமைக்காவலர் கண்கலங்கி விட்டதாகவும், இதை விசாரித்த உயர்-அதிகாரி இருவரையும் பணிமாற்றம் செய்து உத்தரவிட்டதாகவும் அந்த செய்தி கூறுகிறது.
மேலும் இது "இந்து"வில் வெளிவந்ததற்கு காரணம் அறை விட்டவர் ஒரு பெண் அதிகாரி என்பதனாலா அல்லது அவர் ஒரு பயிற்சி அதிகாரி என்பதனாலா என்பதை யாராவது தெளிவுபடுத்தினால் நன்றாயிருக்கும்.

இது மாதிரியான கொடுக்கல்-வாங்கல், இந்திய/தமிழக காவல்துறையில் மிகச் சாதாரணம் என்றாலும், கொஞ்சம் கூடுதலாக யோசிக்க/திருத்தப்பட வேண்டிய செயல். ஒரு சக பணியாளரையே மனிதனாக நடத்தத் தெரியாத ஒரு அதிகாரி, குற்றவாளியிடம் எப்படி நடப்பார் என்று நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. மேலும் இந்தக் கொடுக்கல்/வாங்கலுக்கான சாராம்சம் மிகச் சாதாரனம். நானறிந்தவகையில் தமிழகத்தில் மட்டும் தான் இரு குற்றவாளிகளுக்கு/குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஒரு காவலர் பாதுகாப்பிற்காகச் செல்ல முடியும். இது உலகில் வேறெங்கும் காண இயலாது. இது மாதிரியான நிகழ்வுகள் உருவாகக் காரணம், அதிகாரிகள் குற்றவாளிகளிடம்/குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடம் கையூட்டுப் பெற்றுக்கொண்டு அவர்கள் தப்பித்துச் செல்வதற்கு ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருவது தான். இதனால் நேரிலையே பாதிக்கப்படுவது பாதுகாப்பிற்காகச் செல்லும் காவலர் தானேயொழிய, அதிகாரி கிடையாது.

தமிழக காவல்துறை ஒரு வெறி பிடித்த அடிமை கூட்டம் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. சிறு அளவில் நடக்கும் கலவரங்கள் / போராட்டங்களைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு பயிற்சி காவலர்களையே அனுப்புவார்கள். இவர்களுடைய மனநிலை, வாயில் எச்சில் ஊறிக் கொண்டிருக்கும் ஒரு வெறிநாயைப் போன்றது(இது பயிற்சியில் இருந்த நண்பர் ஒருவரே கூறியது). கலவரக்காரர்களை கடித்துக் குதறி விடுவார்கள்.இவர்களுடைய இந்த மனநிலைக்கு காரணம், பயிற்சி காலத்தில் இவர்களை நெறி படுத்தாததும் "ட்ரில்" என்ற பெயரில் "முதுகெலும்பை" உடைத்து எடுப்பதுவும் தான். பயிற்சி காலத்தில் இவர்களுக்கு "சகிப்புத்தன்மை" பற்றி கொஞ்சமேனும் கற்றுக் கொடுக்கிறார்களா என்று எனக்குத் தெரியவில்லை(ஏட்டளவில் உண்டு என்றே கருதுகிறேன்).

ஆஸ்திரேலியாவில் நண்பர் ஒருவர் கூறக் கேட்டது. காவலருக்கான நேர்முகத் தேர்வு பல சுற்றுக்களைக் கொண்டது. அதில் முக்கியமானது இரண்டாவது சுற்று என்பதும், அது சகிப்புத்தன்மையை சோதிப்பத்தான சுற்று என்பதும் என்னில் வியப்பை ஏற்படுத்தியது. இச்சுற்றில் நேற்காணலுக்கு வந்திருப்பவரை எந்த அளவுக்கு கேவலமான வார்த்தைகளால் திட்ட முடியுமோ அந்த அளவுக்கு திட்டுவதும் அதில் பொறுமை காப்பவரே அடுத்த சுற்றுக்கு தகுதியடைய முடியும். எனக்குத் தெரிந்து உலகிலேயே "ஆஸ்திரேலிய காவல்துறை" தான் குற்றவாளிகளிடத்தில் மிகப் பொறுமையாகவும், நிதானாகவும், பண்போடும் நடத்துபவர்கள். குற்றத்தின் சாரம் எவ்வளவு அதிகமானதாக இருந்தாலும் குற்றவாளிகள் / குற்றஞ்சட்டப்பட்டவர்கள் கண்ணியமாகவும் நடத்தப்படுகிறார்கள்.

தமிழகத்தில் இம்மதிரியான சகிப்புத்தன்மை மற்றூம் பயிற்சி வகுப்புகள் உண்டா என்று தெரியவில்லை. மேலும், பயிற்சி காவலர்களும் பயிற்சி காலத்தில் கண்ணியமாகவும்/அடிமைத்தனம் இல்லாமலும் நடத்தப்படும் வரை இம்மதிரியான கொடுக்கல்/வாங்கல் தமிழக காவல்துறையில் நடைபெற்று கொண்டுதான் இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை!

12/24/2005

கேள்வி கேட்ட தருமிக்கு...

மூன்று வருடங்களாய்
நட்போடு உறவாடிய
நாங்கள்
மூன்றே மாதங்களில்
காதலில் கசந்து
இனி நீ, நான்
என இருப்போம் என்று
விடைபெற்ற அந்த
"pot-tea-shop" -ஐ
சொல்லவா

பெங்களுரில்
100 அடி -ஐ
மறு வடிவம் செய்ததால்
உருவான அந்த
"botique shop" - ஐ
சொல்லவா

ஒரு "தம்"
அடிக்க ஊரை விட்டு
வெளியே
ஆறு கல்
பயனம் செய்த
அந்த பொட்டிக்கடையை
சொல்லவா

தமிழ் சினிமாவின் வயது - 75*

"You ain't heard nothing yet" 1927-ல் வெளியான வார்னர் பிரதர்ஸின் 'தி ஜாஸ் ஸிங்கர்' படத்தில் நடிகர் அல்கோல்சன் பேசிய இந்த வரிதான் உலக சினிமாவின் முதல் குரல்!
இதற்கு நான்கு வருடங்கள் கழித்து 1931-ல் தமிழ்சினிமா தனது பலவருட மௌனத்தை களைந்து பேசத்துவங்கியது. முதல்படம் H.M. ரெட்டியின் 'காளிதாஸ்'. ஆக, 1931-ல் பேசத்துவங்கிய தமிழ்சினிமா தனது 75-வயது கொண்டாட்டத்தை துவக்கியிருக்கும் தருணம் இது. இந்த நேரத்தில் தமிழ்சினிமா- குறிப்பாக அதன் குரல் எப்படி வளர்ச்சியடைந்திருக்கிறது என்று பார்ப்பது சாலப்பொருந்தும்.
மௌனப்படங்கள் காலத்தில் சினிமாவுக்கு மொழி கொடுத்தவர்கள் 'டாக்கி'கள். படம் திரையிடப்படும்பொழுது இந்த டாக்கிகள் திரை அருகில் நின்று உரத்த குரலில் காட்சிகளை அதன் செய்திகளை கதையின் பின்புலத்தை விளக்குவார்கள். உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்ட இந்தமுறைதான் தமிழிலிலும் நடைமுறையில் இருந்தது.
இந்நிலையில் 1926-ம் ஆண்டு ஹாலிவுட்டின் வார்னர் பிரதர்ஸ் ஸ்டுடியோ விட்டாபோன் முறையை அமுல்படுத்தியது. உரையாடல்கள் பெரிய தகடுகளில் (Discs) பதிவு செய்து பின்பு அவை திரையில் நடக்கும் காட்சிகளுக்கு ஏற்ப பொருத்தப்படுவதே விட்டாபோன் முறை. படப்பிடிப்பின்போதே மைக்கின் உதவியுடன் உரையாடல்களும், இசையும் பதிவு செய்யப்பட்டன.
தமிழின் முதல் பேசும்படம் 'காளிதாஸ்' இந்த முறையில்தான் உருவாக்கப்பட்டது. 1931-ல் விட்டாபோன் முறை வழக்கொழிந்தது.
"லீ டீ பாரஸ்ட்" என்ற அமெரிக்கர் ஒலியை நேரடியாக பிலிமில் பதிவு செய்யும் 'மூவிடோன்' முறையை இந்த வருடத்தில்தான் கண்டுபிடித்தார்.
'மூவிடோன்'னின் அடுத்தக்கட்ட வளர்ச்சி DAT டெக்னாலஜி. இது எட்டு ட்ராக்குகளை கொண்டது. ஒலி மிக துல்லியமாக DAT முறையில் பதிவு செய்யப்பட்டது.
பிறகு DAT, 2DAT -ஆக வளர்ச்சியடைந்தது. இதில் மொத்தம் பதினாறு ட்ராக்குகள். சினிமாவில் குரலை துல்லியப்படுத்த 2DAT டெக்னாலஜி பெரிதும் உதவியது. Computerised Unlimited Track Technology விரைவில் திரைப்படங்களில் பயன்படுத்தப்படவுள்ளது. இது உபயோகத்துக்கு வரும்போது சினிமா ஒலி தனது உச்சபட்ச துல்லியத்தை எட்டும். ஒலியை பதிவு செய்வதில் ஏற்பட்ட இந்த வளர்ச்சியுடன் சேர்ந்து ஒலியின் quality-யும் முன்னேற்றமடைந்தது.
ஆரம்பகாலக்கட்டத்தில் Mono-வாக இருந்த ஒலியின் தரம் டால்பி, டி.டி.எஸ். என்று குறுகிய காலத்தில் பெரிய வளர்ச்சியை எட்டியது. Mono-வுக்கும் டால்பி, டி.டி.எஸ்.க்கும் உள்ள முக்கிய வேறுபாடு அதன் Base Frequency.
சரவுண்ட் சிஸ்டம் எனப்படும் DTS - ஒலி அமைப்பில் மூன்று சி.டி.க்களில் ஒலி பதிவு செய்யப்பட்டு திரைப்படத்துடன் ஓடவிடப்படும். சி.டி.க்களில் உள்ள code-ஐ புரொஜக்டர் read செய்தவுடன் System வேலை செய்யதுவங்கும். இந்தியாவிலேயே முதன்முதலில் டால்பி ஒலி அமைப்பில் தயாரான படம் கமலின் 'குருதிப்புனல்'. அது போல் DTS ஒலி அமைப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது ஆபாவாணனின் 'கறுப்பு ரோஜா' படம். சினிமா ஒலி தொழில்நுட்பத்தில் தமிழ்சினிமவின் பங்கை விளக்கும் எளிய உதாரணங்கள் இவ்விரு திரைப்படங்கள்.
DTS-க்குஅடுத்தபடியாக SBBS என்ற ஹைடெக் தொழில்நுட்பம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஹாலிவுட்டில் இது அறிமுகமான சில வருடங்களில் தமிழ்சினிமா இதனை சுவீகரித்துக்கொள்ளும் என்று நம்பலாம். லீ டி பாரஸ்ட் கண்டுபிடித்த மூவிடோன் முறையில் பிலிமின் ஒரு ஓரம் சவுண்ட் ட்ராக் இடம்பெற்றது.
தற்போது அறிமுகமாகியுள்ள சூப்பர் 35 எம்.எம். தொழில் நுட்பத்தில் சவுண்டுக்கு என தனி ட்ராக் ஏதுமின்றி பிலிமிலேயே இமேஜுடன் சேர்த்து ஒலி பதிவு செய்யப்படுகிறது. இதனால் பிலிம் இமேஜ் மட்டுமின்றி ஒலியும் அதன் உச்சபட்ச துல்லியத்தை எட்டமுடியும்.



செல்வராகவனின் 'புதுப்பேட்டை' மற்றும் கமலின் 'வேட்டையாடு விளையாடு' படங்கள் சூப்பர் 35 எம்.எம்.பிலிமில் தயாராகின்றன. ரெக்கார்டிங் தொழில்நுட்பத்தை பொறுத்தவரை, ஹாலிவுட் சினிமாவுக்கான இசையை தன் சொந்த ஸ்டுடியோவிலேயே பதிவு செய்கிறார் ஏ.ஆர். ரஹ்மான்.
"அவரது ஸ்டுடியோவை போலவே பல ஹைடெக் ரெக்கார்டிங் தியேட்டர்களை தன்னகத்தே கொண்டுள்ளது தமிழ்நாடு."
கதை திரைக்கதையில் உலகதரத்தில் ஒரு சினிமா தமிழில் உள்ளதா என்ற கேள்விக்கான பதில் தடுமாற்றத்துடன் வெளிவரலாம். ஆனால் ஒலி தொழில் நுட்பத்தில் உலகதரத்துக்கு இணையான வளர்ச்சியை அடைந்திருக்கிறது தமிழ்சினிமா. ஐந்து முதல்வர்கள் ஐயாயிரத்து ஐநூறுக்கும் மேல் திரைப்படங்கள் அளவிடமுடியாத மக்கள் நாயகர்கள்... தமிழ்சினிமாவின் இந்த 75 வருட சாதனைகளுடன் அதன் 'குரலை'யும் நாம் தாராளமாக சேர்த்துக்கொள்ளலாம்!
செய்தியை திருடியது இங்கே!

12/19/2005

இசை மாஃபியாவும், சில குறிப்புகளும்!

ஒரு முன் குறிப்பு:
மாஃபியா என்பது "ரகசிய குற்றங்கள் புரியும் ஒரு சிறு/பெரு" கூட்டத்தைக் குறிப்பது.இந்த கூட்டங்கள் ஐரோப்பிய வந்தேறிகளால் துவங்கப்பெற்றது என்றாலும் பின்னாளில் அமெரிக்கா மற்றும் உலகெங்கும் இந்தியா உட்பட வேரூன்றி வளர்ந்து விட்டது.

மாஃபியாவின் உண்மையான உள்ளூர் சொற்றொடரில் இதை அழகான, வசீகரமான, துணிவுமிக்க, தன்னம்பிக்கை போன்ற பொருள்படும்படியே பயன்படுத்தி வந்தனர்.

சந்திக் குறிப்பு:
சக வலைபதிவாளர் பத்ரிஅவர்கள் "தமிழிசை விழா"பற்றி ஒரு பதிவை தொடுத்தியிருந்தார்.அதில்
"...இதற்கு மாற்றாக தமிழிசையை முதன்மைப்படுத்தி சென்னை இசை மாஃபியாவை மீறி இசை நிகழ்ச்சி நடத்துவது என்பது எளிதான காரியமல்ல. அதைத் தொடர்ச்சியாகச் செய்துவரும் தமிழிசைச் சங்கத்துக்கும் பொங்குதமிழ்ப் பண்ணிசைப் பெருமன்றத்துக்கும் நமது பாராட்டுகள்.
தமிழிசையை மைய நீரோட்டத்துக்குள் கொண்டுவரமுடியும் என்றே நினைக்கிறேன். அதற்குச் சில வருடங்கள் பிடிக்கலாம். இன்னமும் அதிகமான புரவலர்கள் தேவை. இரண்டு நாள்கள் மட்டும் நடக்கும் விழா போதாது. 10௧5 நாள்கள் தொடர்ச்சியாக நடக்கும் விழாக்கள் - பல இடங்களிலும் - தேவை. முக்கியமான சபாக்களை தமிழிசை ரசிகர்கள் ஊடுருவி உறுப்பினர்களாக வேண்டும். பின் தேர்தல்களில் நின்று அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும். அதன்பின்னர் ஒவ்வொரு டிசம்பர் இசை நிகழ்ச்சியிலும் குறைந்தது 25% முழுத்தமிழ் இசைக்காக நேரம் ஒதுக்கவேண்டும். பாடகர்களை தமிழிசையை அதிகப்படுத்தச் சொல்லவேண்டும். சென்னை
இசை மாஃபியாக்களை ஒழிக்க இது ஒன்றுதான் வழி."

என்று இசை மாஃபியாக்களைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.அதைத் தப்பித்தவறி, தட்டுத்தடுமாறி தமிழை எழுத்துக்கூட்டி படித்துவிட்ட சில/பல ஒன்றிரண்டு இசை மாஃபியாக்களின் சகோதரர்களும்/மாமாக்களும்/மைத்துனர்களும் கடுஞ்சினம் கொண்டு, பத்ரி அவர்கள் உணர்ச்சிவசப்பட்டுவிட்டார் என்று மிகப் பொறுமையோடும், பொறுப்புணர்ச்சியோடும் கேள்வியெழுப்பியிருக்கிறார்கள். அவர்கள் இந்த சந்திக்குறிப்பிற்கு முன் உள்ள முன்குறிப்பை கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு படித்தார்களேயானால் மிகத் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

ஒரு பின்குறிப்பு:
இந்தப் பதிவில் எந்தவொரு உள்குத்தும் கிடையாது. மாஃபியாவின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்து கொள்ளுவது, அவரவர் மனவளர்ச்சியைப் பொறுத்தது!மாஃபியாவைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள
இங்கே செல்லவும்.

12/17/2005

நான் இந்தியனா?

இன்று காலை "தாழ்வாரத்தில்" அமர்ந்து, "மோக்கா"வையும் புகையையும் ருசி பார்த்துக் கொண்டிருந்த பொழுது நமது "வெள்ளைக்கார" நண்பர் வந்தார். வந்தவர் ஒரு "வணக்கம்" சொல்லி விட்டுச் சென்றிருந்தால் பரவாயில்லை. நாக்கைப் பிடுங்குகிற மாதிரி நாண்கு கேள்விகள் கேட்டார்.

He:namast'e
Me:Goodmorning? Howaya?
He:freaking great! How you's doing?
Me:Awesome mate.
He:Hey, Do you smoke?
Me:yep, Sometimes!
He:But You are an Indian. You are god fearing, disciplined Hindu, right?
Me:So what?
He:The few Indians that I have met 's been telling me that Indians dont eat Non-Veg (especially cow), dont share a bed with a woman before a marriage, dont smoke, dont even drink n getting pissed.
Me:Mate, I got drunk & pissed. I do smoke. I eat all those meats available in the market irrespective of cow or pork.A'ight.
He:Then why are'nt wearing turban?
Me:OMG, That's different religion mate. They are sikhs.
He:You mean they are sick. hehehe
Me:I think You r still drolling with lastnite's piss. Anyways I am not that kind of "Indian" whom you have met.
He:A'ight, Then why do u converse in English with your other Indian mates? Hindi is supposed to Indian's mother toungue, isn't it? and its your national language too...
Me:yep, I agree with one. Hindi is our National language. But its not my mother tongue.
He:oh is it. well, then you should refer yourself with the race you belong to, not the Country you belong mate.
Me:I'm sorry, I didnt get you? You aint a racist ...right...hehehe
He:Mate! Take a french guy born in canada, He will refer himself as a french canadian. Not a Canadian. So you shud tell that You are a Tamil-Indian.
Me:I understood what you are saying, mate. But India is my native and I was born over there. So I think I should call myself as an Indian.
He:Whateva. Its up to you mate!cheers...

ஒரு வழியாக நான் இந்தியன் என்று கூறி "தப்பி" விட்டாலும், இந்த கேள்வி என்னுள்ளே பலமுறை எழுந்துள்ளது. இது வரை நான் சந்தித்த அல்லது அடிக்கடி உரையாடக்கூடிய "இந்தி"/இந்தி மட்டுமே" பேசும் நபர்கள்/நண்பர்கள் மிகச் சிலரே. இந்தி பேசும் நண்பர்களை விட பிரெஞ்சு/ஜெர்மன்/இட்டலி மொழி பேசும் நண்பர்களே எனக்கு அதிகம். ஆகையால் ஆங்கிலத்தைத் தவிர நான் வேறொரு மொழி கற்க அல்லது பேச முயன்றேன் என்றால் அது பிரெஞ்சு தானேயொழிய இந்தி அல்ல. நான் வட இந்தியாவிலேயே வசிக்க (சில காலமேயென்றாலும்) நேரிட்டிருந்தால் கூட எனக்கு இந்தியின் மேல் ஆர்வம் ஏற்பட்டிருக்கும்.எனக்கு இதுவரை அந்த வாய்ப்பு கிட்டவில்லை. மேலும் இந்தியா முழுதிலும்(வட-கிழக்கைத் தவிர்த்து) பயனம் செய்திருந்த போதிலும், டில்லி தவிர வேறு எங்கேயும் எனக்கு அவ்வளவாக "கம்யூனிகேஷன்" பிரச்சினை ஏற்பட்டதும் இல்லை. டில்லியில் கூட ஓரளவு சமாளித்து விட்டேன் என்றே சொல்லலாம். டில்லியில் எனக்கேற்பட்ட "கம்யூனிகேஷன்" பிரச்சினை எனக்கு மொழி தெரியாததால் ஏற்பட்டதன்று. அது ஒரு படித்த மொழி வெறி (IIC secretary) பிடித்த ஐஏஎஸ் ஆபிசரினால் ஏற்பட்டது.
Delhi, Lodhi Estate, India International Centre ல் உள்ள ஒரு IAS OFFICER . ஒரு Study க்காக வேண்டி அங்கே சில தகவல்கள் சேகரிக்க வேண்டி இருந்தது. அதற்காக அந்த IAS OFFICER சந்தித்து உரையாடிய போது தான் எனக்கு இந்த அனுபவம் ஏற்பட்டது. நான் ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்க அவர் எனக்கு இந்தியில் பதிலளித்துக் கொண்டிருந்தார். நான் எனது ஊர் மேயும் "இந்தி"ய அனுபவத்தினால் ஒரளவு "make-up" செய்து விட்டேன் என்று கூறலாம். இருந்தாலும் பிழை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதினால் அவருடைய "ஸ்டெனோ" விடம் நான் ஆங்கிலத்தில் என்னுடைய இயலாமையைக் கூற, அவர் என்னிடம் ஆங்கிலத்தில் எங்கிருந்து வருகிறாய்? என்று கேட்டார். நான் சென்னை என்றுக் கூறியவுடன் அவர் முகத்தில் ஒரு மலர்ச்சி. அட மலையாளத்துச் சேச்சி. சட சடவென்று தமிழில் பேசினார். அவர் மற்றொரு பிரிவிற்கு அழைத்து சென்று இன்னொரு சேட்டனிடம் அறிமுகப் படுத்தி அனைத்து உதவிகளையும் செய்தார். அவர் திருச்சியில் ஐந்தாண்டு காலம் ஒரு மத்திய அரசு நிறுவனத்தில் வேலை செய்ததாகவும் அதனால் தமிழ் நன்றாக பேச முடிகிறது என்றும் கூறினார்.


மற்றபடி "இந்தி" என் வாழ்வில் ஒரு தேவையில்லாத விசயம். மேலும் இந்தியை நான் பள்ளியில் கற்றிருந்தால் தாய்மொழியை மறக்க வேண்டியதாய் இருந்திருக்கும். ஏனென்றால் எனக்குத் தெரிந்த சில தெலுங்கு நண்பர்கள் அவர்களுக்குள்ளேயே கூட பல நேரங்களில் இந்தியிலேயேப் பேசியிருக்கிறார்கள். அவர்களைப் பார்க்கும் போது, அண்ணா இராஜாஜி...போன்றவர்களுக்கு நன்றி சொல்லத் தோன்றும்.

மற்றபடி, நான் இந்தியனாய் அறிமுகப்படுத்திக் கொள்வதை விட "தமிழனாய்" அறிமுகப்படுத்திக் கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன்.
குறைந்தபட்சம் எனக்கு என் தாய்மொழியை "பேசவும், எழுதவும்" தெரியும். அந்த ஒரு காரணம் போதும்...இந்த "இந்தி"ய வெறி பிடித்தவர்களிடத்தில் நான் தமிழன் என்று சொல்ல!

Hindu-Hindustan-Hindi-Hindia--------India வந்தது என்றால் எனக்கு எதுவுமே தேவையில்லை.

12/11/2005

சச்சின் - சிறந்த பத்து சதங்கள்!

10)பாகிஸ்தானுக்கெதிராக "முல்தான்"-ல் நடைபெற்ற ஆட்டம்
வருடம் - 2004
பெற்ற ஓட்டங்கள் - 194*




9)ஆஸ்திரேலியாவுக்கெதிரான "சிட்னி"-ல் நடைபெற்ற ஆட்டம்
வருடம் - 2004
பெற்ற ஓட்டங்கள் - 241*



8)இங்கிலாந்துக்கெதிரான "ஹெடிங்லி"-ல் நடைபெற்ற ஆட்டம்
வருடம் - 2002
பெற்ற ஓட்டங்கள் - 193



7)மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான "போர்ட்-ஆப்-ஸ்பெய்ன்"-ல் நடைபெற்ற ஆட்டம்
வருடம் - 2002
பெற்ற ஓட்டங்கள் - 117



6)தென்னாப்பிரிக்காவுக்கெதிரான் "ப்லூம்பொன்டெய்ன்"-ல் நடைபெற்ற ஆட்டம்
வருடம் - 2001
பெற்ற ஓட்டங்கள் - 155



5)ஆஸ்திரேலியாவுக்கெதிரான "சென்னை"-ல் நடைபெற்ற ஆட்டம்
வருடம் - 2001
பெற்ற ஓட்டங்கள் - 126



4)பாகிஸ்தானுக்கெதிராக "சென்னை"-ல் நடைபெற்ற ஆட்டம்
வருடம் - 199
பெற்ற ஓட்டங்கள் - 136



3)ஆஸ்திரேலியாவுக்கெதிரான "சென்னை"-ல் நடைபெற்ற ஆட்டம்
வருடம் - 1998
பெற்ற ஓட்டங்கள் - 155



2)ஆஸ்திரேலியாவுக்கெதிரான "பெர்த்"-ல் நடைபெற்ற ஆட்டம்
வருடம் - 1992
பெற்ற ஓட்டங்கள் - 155



1)இங்கிலாந்துக்கெதிரான "ஒல்ட் ட்ராப்போர்ட்"-ல் நடைபெற்ற ஆட்டம்
வருடம் - 1990
பெற்ற ஓட்டங்கள் - 119




ஆதாரம்

12/05/2005

In the Mood for Love


நேற்று ஒரு அனாவசியமான கருத்து வேறுபாடு. அதனால் இன்னும் ஒரு வாரத்துக்கு செல் பேசினாலும், தொலை பேசினாலும் மறுமுனையில் வெறும் மவுனமும், மூச்சுக் காற்றுமே பதிலாக வருமென்பதால் வீட்டிலேயே செல் பேசியை போட்டு விட்டு, ஆமாம் போட்டுவிட்டு தான்...அருகிலுள்ள பல்கலை நூலகத்தை நோக்கிச் சென்றேன். என்ன தான் செல்பேசியை வீட்டிலேயே விட்டு(போட்டு)ச் சென்றாலும் மனத்தில் இருந்து மறைவதில்லை நினைவுகள். "MOOD" சரியில்லாத காரணத்தினால் பட்டியலைத் திறந்து நமக்கு என்ன "MOOD" இருக்கிறதோ அதை கனிணியில் தட்ட, வந்து விழுந்ததோ "In the mood for love".
சரி, என்ன தான் அந்த புத்தகத்தில் இருக்கிறது என்று பார்த்தால் அது புத்தகமே கிடையாது, திரைப்படம்! 2000 -ம் ஆண்டு "கேன்" திரைப்பட விழாவில் சிறந்த நடிகர், ஒளி ஓவியம் மற்றும் எடிட்டிங் (காட்சி அமைப்பு?) ஆகியவற்றிற்கான விருதுகளை குவித்த திரைப்படம். இதன் இயக்குநர், "வோங்-காவ் வாய்". இது இவருக்கு 7வது திரைப்படம்.

சரி, இந்த திரைப்படத்தை இன்று பார்த்துவிட வேண்டுமென்று எனது துறையிலிருந்து நழுவி, Fischer AV reserve -க்கு நடந்தேன்.

திரைப்படத்திற்கு செல்லும் முன்னால் ஹாங்-காங் வாழ்க்கை முறையைப் பற்றி ஒரு சிறு குறிப்பு. ஹாங்-காங் - உலகின் மிக நெரிசலான நகரங்களில் ஒன்று. ஒரு இரட்டைப் படுக்கையறை கொண்ட வீட்டில் நான்கைந்து குடும்பங்கள் வசிக்கும் படியான நெரிசல். இரவு வாழ்க்கைக்கு சரியான எடுத்துகாட்டு. இது ஒரு தூங்கா நகரம் என்று சொல்லலாம். ஆசிய மற்றும் ஐரோப்பிய கலவை கொண்ட வாழ்க்கைமுறை. வெறும் கட்டிடங்களையும், மக்களையும் கொண்ட மருந்துக்கு கூட மரங்களைப் பார்க்க முடியாத நகரம்.நகரின் பல வீதிகளும், சாலைகளும் நம் டி-நகர் இரங்கநாதன் வீதியை ஞாபகப்படுத்தும்.

In the Mood for Love

இப்படிபட்ட நகரில், ஒரு குடியிருப்பில் இரு அடுத்தடுத்த வீடுகளில் இரு குடும்பங்கள் குடியேருகின்றன. இரு குடும்பத்தின் துணைகளும் களவொழுக்கத்தில் ஈடுபடுகிறார்கள். இதைக் கண்டறிகிறார்கள் பாதிக்கப்பட்ட துணைவியர். காலப்போக்கில் பாதிக்கப்பட்ட இருவரும் அன்பிற்காக ஏங்கி தன் மனவலியை தாங்கி வருவது தெரிய வருகிறது. ஆனாலும் தங்கள் துணைகளைப் போல் அத்து மீறக் கூடாது என்பதிலும் நட்போடு மட்டுமே பழக வேண்டும் என்று உறுதியாக இருந்தாலும், இருவரும் ஒரு இனம் புரியாத அன்பினால் பிணைக்கப்படுகின்றனர். இதனால் இந்த இருவரும் தங்கள் மனம் ஒத்தபடியால், அதிக நேரம் ஒன்றாக செலவிடுகின்றனர்.இருவ்ரும் பரஸ்பரம் உதவிக்கொள்கிறனர். இது குடியிருப்பில் ஒருவித சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஆகையால் இருவரும் மனம் ஒத்தாவிடிலும், இருவரின் குடும்ப நலனுக்காக வேண்டிப் பிரிகின்றனர்.

இதுதான் கதைச் சுருக்கம் என்றாலும், படத்தின் ஒளிப்பதிவு, மற்றும் பின்னணி இசையமைப்பினால் ஒரு மிகப் பெரிய மன அதிர்வினை ஏற்படுத்துவது மறுக்க முடியாத உண்மை. பின்னணி இசை என்பது ஒரு திரைப்படத்திற்கு எவ்வளவு வலு ஏற்படுத்தும் என்பதை நம்மூர் ஹாரிஸ் ஜெயராஜ் போன்றோர் இத்திரைப்படத்தை பார்த்தால் புரிந்துக் கொள்வார்கள்.

பின்னணி இசை அமைத்தவர் - மைக் கெலாசொ, கீ-போர்டு மற்றும் வயலின் போன்ற வாத்தியங்கள் மூலம் ஒரு மெல்லிசையை இரு கதாபாத்திரங்களை காட்டும் பொழுதும், ஒரு ஸ்பானிய மென் - காதற் பாடலை இரு கதாபாத்திரங்களின் மன நிலையை விவரிக்கும் பொழுதும், அவ்வப்பொழுது கூட்டுக் குடும்பங்களின் பேச்சு மற்றும் வானொலி இசையை மட்டுமே பின்னணி இசையாகக் கையாண்டிருக்கிறார்.

ஒளி ஓவியம் - கிறிஸ்டோபர் டொய்ல் மற்றும் மார்க் லீ பிங் பின். படம் முழுதும்/முக்கால் வாசி இரவு நேரங்களிலும், நான்கு சுவர்களுக்குள்ளேயும் மட்டுமே நடைபெருவதால் ஒளியை அருமையாகக் கையாண்டிருக்கிறார்கள். அதிலும் முடிவு காட்சியில் அத்தோடு இவர்கள் உடலால் மனதால் பிரிந்தாலும் அன்பினால் ஒன்றி வாழ்கிறார்கள் என்ற வரிகளோடு அங்கோர்வட்டின் சிற்ப கலையோடு ஒன்றி வரும் ஒளி ஒவியமும், இசையும் (சுமார் 2 நிமிடங்கள்) ஒரு வலிய மனாதிர்வினை அனைவருக்கும் ஏற்படுத்தும்.

இத்திரைப்படதின் மற்றொரு சிறப்பம்சம் கதைக்கு காரணமான அந்த இரு(களவொழுக்கத்தில் ஈடுபடும்) கதாபாத்திரங்களின் முகங்களை காட்டாதது.

It's a beautiful movie which is rich in visualization rather than conversation!

12/04/2005

பழம் தின்னு கொட்டை போடுவது


ஒரு விஞ்ஞானபூர்வமான கேள்வி, நம்ம தருமிக்கு! பழம் தின்னு கொட்டை போடுவது, கொட்டை போட்டு பழம் தின்னுவது! இதுல எது சரி? அவரோட விளக்கம் இங்கே!

என்னுடைய வாதம் என்னவென்றால், பழம் தின்று கொட்டை போடுவதே சரி. அதாவது நம்ம தருமி கேக்கறாரு, "அது எப்படி பழம்தின்னு கொட்டை போட்ட ஆளுன்னா ரொம்ப முத்தின கேசு..முச் experienced ஆளுன்னு அர்த்தம் வரும்? இப்போ பழம் இருக்கு; அத ஒருத்தர் தின்னுடறார்; கொட்டையைக் கீழே கடாசுறார். எல்லாமே ரொம்ப சின்ன, சாதாரணமான காரியம்தானே; இதிலெங்கே திறமை / experience/ வேற சிறப்பு இருக்கு? புரியலைங்களே!" னு...புரிய வெக்கிறது நம்ம கடமையில்லையா...

இங்க கொட்டை போடறது மேட்டர் இல்ல, கொட்டைய போட்டாக்கா இன்னும் ஒரு அஞ்சு இல்ல பத்து வருசம் கழிச்சு வேற யார்னா சாப்பிட ஒதவுமேன்னு முன்னாடியே தன்னோட நுண்ணறிவுக்கு எட்டி அந்த கொட்டைய சும்மானா தூக்கி போடாம ஒழுங்கா ஒரு எடத்துல போட்டு அதுக்கு தெனமும் தண்ணி ஊத்தி அதை வளக்கறார் பாருங்க, அது தாங்க அனுபவம்.அத தான் பழம் தின்னு கொட்டை போடறதுன்னு சொல்றாங்கன்னு நெனக்கிறன். மேற்படி நமக்கு எந்தவொரு அனுபவமும் கெடையாதுங்கொ...

ஆகா...தருமி புண்ணியத்துல ஒரு பதிவு! தாங்க்ஸ் வாத்தியாரே!!!

அரசியலும் கில்லியடிப்பதும்!


அரசியலும் கில்லியடிப்பதும் ஒரு சேரப் பிறந்தது. இந்தியாவாகட்டும், தென் ஆப்பிரிக்காவாகட்டும் அல்லது ஜிம்பாப்வே ஆகட்டும். அவரவர் லெவெலுக்குத் தகுந்த மாதிரி அவரவர் நாடுகளில் அரசியல் கில்லியடிக்கிறது என்பதே உண்மை.சர்வே என்பது ஒரு உப்புச்ப்பில்லாத விசயம் என்றாலும், சமீப காலத்து சர்வே ஒரு மிகச் சிறந்தக் காமெடியாகவேத் தெரிகிறது. NDTV மற்றும் தினமலர் போன்ற செய்தித்துறை ஊடகங்களில் எடுக்கப்பெற்ற ஒரு சர்வே. அதாவது, BCCI தலைவராக சரத்பவார் தேர்ந்தெடுக்கப்பட்டது கிரிக்கெட்டில் அரசியலைப் புகுத்திவிடுமா? என்பதே. கிரிக்கெட்டே ஒரு அரசியல் விளையாட்டு என்பது இவர்களுக்குத் தெரியாதா, என்ன? பட்டோடி, மாதவ்ராவ் சிந்தியா, ஜடேஜா போன்ற இவர்கள் அனைவருமே அரசியல் மூலமே கிரிக்கெட்டில் புகுந்தது. அதில் சிந்தியா அவர்கள் BCCI தலைவராக இருந்தது இவர்கள் அறியாததா? மேலும் கவாஸ்கர், டால்மியா போன்றோர் ஆடாத பிரதேச அரசியலா சரத்பவார் ஆடிவிடப் போகிறார். டால்மியா ஒரு மிகச்சிறந்த அரசியல்வாதி பிறகு தான் கிரிக்கெட் போர்டு தலைவர். இந்திய கிரிக்கெட் அணியைத் தேர்வு செய்யும் கமிட்டி கூட்டத்தில் வெறும் வங்காள கிரிக்கெட் போர்டு தலைவருக்கு என்ன வேலை? அரசியல் என்பது அதிகாரத்தைக் குறிக்கும் சொல் என்றால் டால்மியா செய்யாத எந்தவொரு அரசியல் தலையீட்டயும் விடப் பெரிதாக பவாரால் செய்ய இயலாது. சரத்பவார் அரசியல்வாதி என்றால் அந்த அரசியல்வாதியையே தோற்கடிக்கக் கூடிய அரசியல் பாடம் தெரிந்தவர் டால்மியா. இல்லாவிட்டால் வெற்றி பெற வாய்ப்பே இல்லாத ஒருவரை நிறுத்தி தானே 4 ஓட்டுக்கள் போட்டு ஒரு டம்மியை BCCI தலைவராக்கிய அரசியல் சித்தம் அறிந்தவர் டால்மியா. சரத்பவார் ஒரு அரசியல்வாதியாக இருந்தாலும், பலகாலம் மத்திய அமைச்சராய் இருந்து மேலாண்மை செய்தவர். அவருக்கு கிரிக்கெட் அரசியல் எப்படி ஆடவேண்டும் என்று நன்றாகவேத் தெரியும். மற்றபடி இவர் பிரதேச அரசியலைப் பின்பற்றாமல் இருந்தால் சரி!

கொசுறு செய்தி!

ஜிம்பாப்வே கிரிக்கெட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைக்கு காரணம், கங்குலியின "அந்த" ஒரு சதத்தையே காரணியாக காட்டுகிறார்கள். இதனாலேயே தாய்புவின் சம்பளம் குறைக்கப்பட்டதும், அவரைக் கொல்லப்போவதாக மிரட்டியதாகவும் தெரிய வருகிறது. ஆக மொத்தம் இந்திய கிரிக்கெட்டில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியதை விட உலகளவில் ஒரு தேசிய அணியை நிலைகுலையச் செய்த கங்குலிக்கு வாழ்த்துக்கள்.:)

சற்று முன்னர் வந்த செய்தி!

தனது பார்ம் ஐ நிருபிக்காமல் இருக்கவே மழை, புயல் அடிக்கும் சென்னையில் போட்டியை அமைத்ததற்காக புதிதாக பதவியேற்றுள்ள BCCI தலைவர் சரத்பவார் மீது கங்குலி குற்றஞ்சாட்டியுள்ளார். :)