1/08/2006

புரட்சி(பயிற்சி) சப்-இன்ஸ்பெக்டர்

நேற்றுக் காலை "இந்து" நாளிதழை மேய்ந்துக் கொண்டிருந்த பொழுது கண்ணில் பட்ட நம்முடைய வட்டாரச் செய்தி.கடலூரில் ஒரு பயிற்சி காவலர்,தனக்கு கீழே பணிபுரியும் ஒரு தலைமைக் காவலரை "பளார்" என கண்ணத்தில் அறை விட்டதாகவும், தலைமைக்காவலர் கண்கலங்கி விட்டதாகவும், இதை விசாரித்த உயர்-அதிகாரி இருவரையும் பணிமாற்றம் செய்து உத்தரவிட்டதாகவும் அந்த செய்தி கூறுகிறது.
மேலும் இது "இந்து"வில் வெளிவந்ததற்கு காரணம் அறை விட்டவர் ஒரு பெண் அதிகாரி என்பதனாலா அல்லது அவர் ஒரு பயிற்சி அதிகாரி என்பதனாலா என்பதை யாராவது தெளிவுபடுத்தினால் நன்றாயிருக்கும்.

இது மாதிரியான கொடுக்கல்-வாங்கல், இந்திய/தமிழக காவல்துறையில் மிகச் சாதாரணம் என்றாலும், கொஞ்சம் கூடுதலாக யோசிக்க/திருத்தப்பட வேண்டிய செயல். ஒரு சக பணியாளரையே மனிதனாக நடத்தத் தெரியாத ஒரு அதிகாரி, குற்றவாளியிடம் எப்படி நடப்பார் என்று நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. மேலும் இந்தக் கொடுக்கல்/வாங்கலுக்கான சாராம்சம் மிகச் சாதாரனம். நானறிந்தவகையில் தமிழகத்தில் மட்டும் தான் இரு குற்றவாளிகளுக்கு/குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஒரு காவலர் பாதுகாப்பிற்காகச் செல்ல முடியும். இது உலகில் வேறெங்கும் காண இயலாது. இது மாதிரியான நிகழ்வுகள் உருவாகக் காரணம், அதிகாரிகள் குற்றவாளிகளிடம்/குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடம் கையூட்டுப் பெற்றுக்கொண்டு அவர்கள் தப்பித்துச் செல்வதற்கு ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருவது தான். இதனால் நேரிலையே பாதிக்கப்படுவது பாதுகாப்பிற்காகச் செல்லும் காவலர் தானேயொழிய, அதிகாரி கிடையாது.

தமிழக காவல்துறை ஒரு வெறி பிடித்த அடிமை கூட்டம் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. சிறு அளவில் நடக்கும் கலவரங்கள் / போராட்டங்களைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு பயிற்சி காவலர்களையே அனுப்புவார்கள். இவர்களுடைய மனநிலை, வாயில் எச்சில் ஊறிக் கொண்டிருக்கும் ஒரு வெறிநாயைப் போன்றது(இது பயிற்சியில் இருந்த நண்பர் ஒருவரே கூறியது). கலவரக்காரர்களை கடித்துக் குதறி விடுவார்கள்.இவர்களுடைய இந்த மனநிலைக்கு காரணம், பயிற்சி காலத்தில் இவர்களை நெறி படுத்தாததும் "ட்ரில்" என்ற பெயரில் "முதுகெலும்பை" உடைத்து எடுப்பதுவும் தான். பயிற்சி காலத்தில் இவர்களுக்கு "சகிப்புத்தன்மை" பற்றி கொஞ்சமேனும் கற்றுக் கொடுக்கிறார்களா என்று எனக்குத் தெரியவில்லை(ஏட்டளவில் உண்டு என்றே கருதுகிறேன்).

ஆஸ்திரேலியாவில் நண்பர் ஒருவர் கூறக் கேட்டது. காவலருக்கான நேர்முகத் தேர்வு பல சுற்றுக்களைக் கொண்டது. அதில் முக்கியமானது இரண்டாவது சுற்று என்பதும், அது சகிப்புத்தன்மையை சோதிப்பத்தான சுற்று என்பதும் என்னில் வியப்பை ஏற்படுத்தியது. இச்சுற்றில் நேற்காணலுக்கு வந்திருப்பவரை எந்த அளவுக்கு கேவலமான வார்த்தைகளால் திட்ட முடியுமோ அந்த அளவுக்கு திட்டுவதும் அதில் பொறுமை காப்பவரே அடுத்த சுற்றுக்கு தகுதியடைய முடியும். எனக்குத் தெரிந்து உலகிலேயே "ஆஸ்திரேலிய காவல்துறை" தான் குற்றவாளிகளிடத்தில் மிகப் பொறுமையாகவும், நிதானாகவும், பண்போடும் நடத்துபவர்கள். குற்றத்தின் சாரம் எவ்வளவு அதிகமானதாக இருந்தாலும் குற்றவாளிகள் / குற்றஞ்சட்டப்பட்டவர்கள் கண்ணியமாகவும் நடத்தப்படுகிறார்கள்.

தமிழகத்தில் இம்மதிரியான சகிப்புத்தன்மை மற்றூம் பயிற்சி வகுப்புகள் உண்டா என்று தெரியவில்லை. மேலும், பயிற்சி காவலர்களும் பயிற்சி காலத்தில் கண்ணியமாகவும்/அடிமைத்தனம் இல்லாமலும் நடத்தப்படும் வரை இம்மதிரியான கொடுக்கல்/வாங்கல் தமிழக காவல்துறையில் நடைபெற்று கொண்டுதான் இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை!

4 comments:

Anonymous said...

அட., இப்பத்தான் காக்க, காக்கவ இன்னொருமுறை பார்க்கலாம்னு பார்த்துட்டு. , (கவுதம(டைரடக்கரு) திட்டுதிட்டுன்னு திட்டிட்டு) தமிழ் மணத்திற்குள் வந்தால்., மொத கண்ணுல பட்டது உங்க பதிவு. நட்சத்திரங்களை இணையுங்கள்.

said...

மொத தடவையா "பொட்டீகடை"க்கு வந்த அக்காவுக்கு எனது நன்றி கலந்த வணக்கங்கள்!
நட்சத்திரமா...நா எஸ்கேப்...:-)

said...

satya,

enakku oru madal pOda mudiyumaa?

mathygrps at gmail dot com

nandri.

-Mathy

said...

காவல்துறையினருக்கு தண்டிகும் உரிமையுடன், இந்த தவறுகள் மீண்டும் அவர்கள் செய்யாதவாறு திருத்தும் பொறுப்பும் உண்டு என்பதை உணர வேண்டும்.. தாங்கள் தான் எஜமானர்கள், மற்ற சாமானியர் அனைவரும் அடிமைகள் என்பது போன்ற மனப்பான்மை மாறவேண்டும்... ஒருவேளை இதற்கெல்லாம் அடிப்படை இவர்களின் சேர்க்கையில் அரசியல் புகுந்து விளையாடுவதாலும், தகுதியற்றவர்கள் சேர்வதும், பணியில் முன்னேற்றம் பெருவதுமாலா ?

-
Senthil/செந்தில்