என்னை ஈன்றெடுத்த தாய்-தந்தைக்கு எனது இனிய காதலர் தின வாழ்த்துக்கள்!
நான் கல்லூரியில் சேர்ந்த கதை! - பாகம் 1
வெளியில் பெருமையாகச் சொல்லக் கூடிய அளவு என்னுடைய பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இல்லையென்ற போதிலும், என்னை விடக் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற என்னோடு பயின்ற சக மாணவர்கள் தமிழகத்தின் மிகச் சிறந்த கல்லூரிகளில் சேர்ந்துவிட எனக்கோ பெருத்த அவமானம்?!
எனது தந்தையும் எந்தெந்த கல்லூரி(கள்) எந்தெந்த ஊரில் படிக்க எனக்கு ஆசை என்று கேட்டார். படித்தால் திருச்சி புனித வளனார் அல்லது சென்னை கிறித்தவக் கல்லூரி என்று நான் கூறினேன். கிறித்தவ கல்லூரி இருபாலரும் படிக்கும் கல்லூரி என்பதனால் அது அடிபட்டுவிட ராயப்பேட்டை புதுக் கல்லூரி அதில் சேர்ந்துக் கொண்டது.இந்த இரு கல்லூரிகளுக்கும் விண்ணப்பம் போட்டு வைத்துவிட்டு கிரிக்கெட் மட்டையைத் தூக்கிக் கொண்டு ஊர் மேயச் சென்று விட்டேன்.
புதுக் கல்லூரி ஒரேடியாக ஆப்பு வைக்க, திருச்சி புனித வளனாரிடம் இருந்து நேர்முகத் தேர்விற்கு அழைப்பு வந்தது. நேர்முகத் தேர்வில் எனக்கு மாலைக் கல்லூரியில் வேதியியல் படிப்பிற்கு இடம் ஒதுக்கி 1 வாரக் கெடுவும் விதித்து சேர்க்கைக் கடிதமும் கொடுத்தனுப்பினர். இங்கே தான் என்னுடைய சேட்டை ஆரம்பித்தது. நான் மாலை நேரக் கல்லூரியில் படிக்க முடியாது, படித்தால் முழு நேரக்கல்லூரியில் விடுதியில் தங்கித்தான் படிப்பேன் என்று பிடிவாதம் பிடித்தேன்.
தந்தையும் சளைக்காமல் "வின்சென்ட்" மாமாவின் (அப்பாவின் நெருங்கிய தோழர்) உதவியை நாட, மாமாவும் சென்னை லயோலா கல்லூரியில் கணிதத் துறையில் விரிவுரையாளராக பணி புரியும் அவரது தம்பியை சந்திக்க என்னையும் அழைத்துச் சென்றார். மிக பிரமாண்டமான கல்லூரி. படித்தால் இங்கு தான் படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். மாமா என்னை அவரிடம் அவரிடம் அறிமுகப்படுத்திவிட்டு வந்த செய்தியை சுருக்கமாகவும் புரியும் படியும் எடுத்துக் கூறினார்.அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட பின்னர், விண்ணப்பதாரர் தலித்/தலித் கிறித்தவராக இருக்கும் பட்சத்தில் பரிந்துரைப்பது சுலபமாக இருக்க்கும் என்று விளக்கினார். பின்னர் மாமாவின் வற்புறுத்தலின் பேரில் திருச்சி புனித வளனார் கல்லூரி முதல்வருக்கு என்னை முழுநேரக் கல்லூரிக்குப் பரிந்துரை செய்து ஒரு கடிதம் ஒன்றும் கொடுத்தனுப்பினார்.
இதற்கிடையில் எனது தந்தை கடலூரில் பிரபலமான வழக்குறைநர்/குடும்ப நண்பருமான .... சாரிடம், திருச்சி தேசியக் கல்லூரிக்காக வேண்டி ஒரு பரிந்துரை கடிதமும் வாங்கி வந்திருந்தார்.
இதில் கொடுமை என்னவென்றால் இதில் தான் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்த எனக்கு பிற கல்லூரிகளுக்கும் விண்ணப்பப் படிவங்கள் போட வேண்டும் என்ற ஆர்வம் இல்லை. இதனால் என்னுடைய ஆர்வம் ஆசையாகப் போனது.
இரு கடிதங்களையும் எடுத்க் கொண்டு நானும் என் தந்தையும் திருச்சிக்குப் பயனமானோம். முதலில் தேசியக் கல்லூரியின் அலுவலகத்திற்கு சென்றோம். அனைத்தையும் கவனமாகப் படித்த அவர்கள் என்னிடம் நான் பிராமனனாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு பிரச்சினை ஏதும் இருக்காது என்று கூற நான் மட்டும் தனியாக புனித வளனார் கல்லூரிக்கு நடையைக் கட்டினேன்.
முதல்வரைச் சந்தித்து நான் கையில் கொண்டு சென்ற கடித்தைக் கொடுத்த பின்னர் அவர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி.நீ கிறித்தவனா? நான் இல்லையென்று கூறினேன். உடனே அவர் என்னிடம், மாலை நேரக் கல்லூரியில் சேர்ந்து விட்டாயா? இதுவரை இல்லையென்றால், முதலில் அதை செய் பின்னர் வரும் வாரத்தின் முதல் நாளில் தன்னை வந்து சந்திக்குமாறும் கூறினார். மகா சோம்பேறியான நான் என் தந்தையினிடத்திலும், மாமாவிடமும் அதை இருட்டடிப்புச் செய்து ஒரு பொய் மூட்டையை அவிழ்த்து விட்டு அவர்கள் அனைவரது முயற்சியையும் விழலுக்கு இறைத்த நீராய் ஆக்கினேன்.
இந்நேரத்தில் தமிழகத்திலுள்ள அனைத்துக் கல்லூரிகளிலும் வகுப்புகள் தொடங்கிவிட, என் விருப்பம் இல்லாமலேயே என் தந்தை அளித்திருந்த விண்ணப்பத்தினால் கடலூர் புனித வளனார் கல்லூரியில் இருந்து சேர்க்கைக் கடிதம் வந்திருந்தது...
சேர்ந்த கதை சோர்ந்த கதையாகத் தொடரும்...

4 comments:
கல்லூரியில் சேர்ரேன்னுட்டு நல்லா ஊர் சுத்தியிருக்கீங்க போலும். சீக்கிரம் வாங்க...உங்க நண்பர் குழாமைப் பார்க்கணும் போல இருக்கு..
கடைக்கு வந்த தருமிக்கு நன்றி!
வர்ரோம் வர்ரோம் வந்துகிட்டே இருக்கோம்...
இந்தக் கதையில் எத்தனை பாகம்-பா?? போற போக்கைப் பாத்தா காலேஜ் முடிக்கறதுக்குள்ள வயசாயுடும் போலிருக்கு!!!
சு
ஆகா, இனிய தமிழில் கதைத்திருக்கிறீர்கள்! என் கண்ணே பட்டு விடும் போல் இருக்கிறது!!!தங்களுடைய சௌகரியத்திற்காக என்னுடைய வலைப்பூவில் அனாமதேயங்கலும் பின்னூட்டமிடும்படி செய்திருக்கிறேன்!
பொட்"டீ"கடைக்கு வருகை தந்த "சு" க்கு எனது அன்பான நன்றிகள்!
Post a Comment