12/04/2005

பழம் தின்னு கொட்டை போடுவது


ஒரு விஞ்ஞானபூர்வமான கேள்வி, நம்ம தருமிக்கு! பழம் தின்னு கொட்டை போடுவது, கொட்டை போட்டு பழம் தின்னுவது! இதுல எது சரி? அவரோட விளக்கம் இங்கே!

என்னுடைய வாதம் என்னவென்றால், பழம் தின்று கொட்டை போடுவதே சரி. அதாவது நம்ம தருமி கேக்கறாரு, "அது எப்படி பழம்தின்னு கொட்டை போட்ட ஆளுன்னா ரொம்ப முத்தின கேசு..முச் experienced ஆளுன்னு அர்த்தம் வரும்? இப்போ பழம் இருக்கு; அத ஒருத்தர் தின்னுடறார்; கொட்டையைக் கீழே கடாசுறார். எல்லாமே ரொம்ப சின்ன, சாதாரணமான காரியம்தானே; இதிலெங்கே திறமை / experience/ வேற சிறப்பு இருக்கு? புரியலைங்களே!" னு...புரிய வெக்கிறது நம்ம கடமையில்லையா...

இங்க கொட்டை போடறது மேட்டர் இல்ல, கொட்டைய போட்டாக்கா இன்னும் ஒரு அஞ்சு இல்ல பத்து வருசம் கழிச்சு வேற யார்னா சாப்பிட ஒதவுமேன்னு முன்னாடியே தன்னோட நுண்ணறிவுக்கு எட்டி அந்த கொட்டைய சும்மானா தூக்கி போடாம ஒழுங்கா ஒரு எடத்துல போட்டு அதுக்கு தெனமும் தண்ணி ஊத்தி அதை வளக்கறார் பாருங்க, அது தாங்க அனுபவம்.அத தான் பழம் தின்னு கொட்டை போடறதுன்னு சொல்றாங்கன்னு நெனக்கிறன். மேற்படி நமக்கு எந்தவொரு அனுபவமும் கெடையாதுங்கொ...

ஆகா...தருமி புண்ணியத்துல ஒரு பதிவு! தாங்க்ஸ் வாத்தியாரே!!!

5 comments:

said...

சத்யா,
நும் விளக்கம் தருமியால் முழுமையாக ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்ளும் இந்த இனிய நேரத்தில்,அக்காரணம் குறித்து உமக்குப் பரிசினைத் தர இயலாமையை நினைத்துத் துயரம் யாம் கொண்டாலும், அதற்கு மீறி ஏதும் செய்யமுடியா கையறு நிலையில் உள்ளதைத் தங்களுக்குத் தெரியப்படுத்துகின்ற இந்த நேரத்தில் தங்கள் 'லின்க்' சரியாக என் பின்னூட்டப்பகுதியில் வரவில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.(அப்பாடா, மூச்சு வாங்கிக்கிறேன்!)

said...

அப்பப்போ கலாய்க்கறது - இப்படி ஒரு தலைப்பில் என் பதிவின் பெயர் உங்கள் முகப்புப் பக்கத்தில் இடம் பெற்றிருக்கிறது. மகிழ்ச்சி.ஆனால், அடிக்கடி வருவதுதான் இல்லை போலும்!!ம்..ம்ம்..

said...

தருமி அவர்களின் அப்பதிவுக்கு நான் இட்டப் பின்னூட்டத்தின் ஒரு பகுதி இதோ.

"வேப்பம் பழத்தைத் தின்று கொட்டையை எச்சமாக இடும் காகம். அவ்வாறு அக்காகத்தின் ஜீரண உறுப்புகள் வழியாக மறுபடியும் தரைக்கு வரும் அக்கொட்டை அமோகமாக விளையும்.

அதே போல ஒருவர் தான் உட்கொண்டதை ஜீரணித்து வெளியே தரும் கருத்துக்கள் புடம் போட்டது போல பிரகாசிக்கும். அவ்வாறு செய்பவர்கள் மிகவும் அனுபவசாலிகள் என்பதே இதன் பொருள்."

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

ரொம்ப நாளைக்குப் பிறகு வந்த தருமிக்கு நன்றி! உங்களுக்கு திருப்தி இல்லாததினாலும், அதனால் அந்த 1000______ ஐ தராததினாலும், எனக்கு மிகப் பெரிய கவலை இல்லை. ஏனென்றால் உங்களோட அந்த ஒரு ஐயத்தினால் தானே என்னால் ஒரு பதிவே பதிக்க முடிந்தது. மற்றபடி, டோண்டு சொல்வது தான் சரியாக இருக்கும் என்பது என் எண்ணம்.

வாங்க டோண்டு, முதல் முறையாக வந்திருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி! அடிக்கடி வாங்க...நீங்கள் எழுதும் எல்லா பதிவையும் படிப்பேன். நிறைய விசயங்களில் எனக்கு உடன்பாடு இல்லாத காரணத்தினால் பின்னூட்டம் இடுவதை தவிர்த்து விடுகிறேன்.

said...

பேருதான் பொட்"டீ"கடை. ஆணா international rangeக்கு இருக்கு உங்க ப்லாக்ல இருக்க செய்திகள். அற்புதம்

என்றும் அன்புடன்,

எதிரி
(சொல்லி அடிப்பேன்)