ஒரு முன் குறிப்பு:
மாஃபியா என்பது "ரகசிய குற்றங்கள் புரியும் ஒரு சிறு/பெரு" கூட்டத்தைக் குறிப்பது.இந்த கூட்டங்கள் ஐரோப்பிய வந்தேறிகளால் துவங்கப்பெற்றது என்றாலும் பின்னாளில் அமெரிக்கா மற்றும் உலகெங்கும் இந்தியா உட்பட வேரூன்றி வளர்ந்து விட்டது.
மாஃபியாவின் உண்மையான உள்ளூர் சொற்றொடரில் இதை அழகான, வசீகரமான, துணிவுமிக்க, தன்னம்பிக்கை போன்ற பொருள்படும்படியே பயன்படுத்தி வந்தனர்.
சந்திக் குறிப்பு:
"...இதற்கு மாற்றாக தமிழிசையை முதன்மைப்படுத்தி சென்னை இசை மாஃபியாவை மீறி இசை நிகழ்ச்சி நடத்துவது என்பது எளிதான காரியமல்ல. அதைத் தொடர்ச்சியாகச் செய்துவரும் தமிழிசைச் சங்கத்துக்கும் பொங்குதமிழ்ப் பண்ணிசைப் பெருமன்றத்துக்கும் நமது பாராட்டுகள்.
தமிழிசையை மைய நீரோட்டத்துக்குள் கொண்டுவரமுடியும் என்றே நினைக்கிறேன். அதற்குச் சில வருடங்கள் பிடிக்கலாம். இன்னமும் அதிகமான புரவலர்கள் தேவை. இரண்டு நாள்கள் மட்டும் நடக்கும் விழா போதாது. 10௧5 நாள்கள் தொடர்ச்சியாக நடக்கும் விழாக்கள் - பல இடங்களிலும் - தேவை. முக்கியமான சபாக்களை தமிழிசை ரசிகர்கள் ஊடுருவி உறுப்பினர்களாக வேண்டும். பின் தேர்தல்களில் நின்று அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும். அதன்பின்னர் ஒவ்வொரு டிசம்பர் இசை நிகழ்ச்சியிலும் குறைந்தது 25% முழுத்தமிழ் இசைக்காக நேரம் ஒதுக்கவேண்டும். பாடகர்களை தமிழிசையை அதிகப்படுத்தச் சொல்லவேண்டும். சென்னை இசை மாஃபியாக்களை ஒழிக்க இது ஒன்றுதான் வழி."

என்று இசை மாஃபியாக்களைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.அதைத் தப்பித்தவறி, தட்டுத்தடுமாறி தமிழை எழுத்துக்கூட்டி படித்துவிட்ட சில/பல ஒன்றிரண்டு இசை மாஃபியாக்களின் சகோதரர்களும்/மாமாக்களும்/மைத்துனர்களும் கடுஞ்சினம் கொண்டு, பத்ரி அவர்கள் உணர்ச்சிவசப்பட்டுவிட்டார் என்று மிகப் பொறுமையோடும், பொறுப்புணர்ச்சியோடும் கேள்வியெழுப்பியிருக்கிறார்கள். அவர்கள் இந்த சந்திக்குறிப்பிற்கு முன் உள்ள முன்குறிப்பை கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு படித்தார்களேயானால் மிகத் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.
ஒரு பின்குறிப்பு:
இந்தப் பதிவில் எந்தவொரு உள்குத்தும் கிடையாது. மாஃபியாவின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்து கொள்ளுவது, அவரவர் மனவளர்ச்சியைப் பொறுத்தது!மாஃபியாவைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள இங்கே செல்லவும்.
1 comments:
அவரின் நியாயமான ஆதங்கத்தை கூட கொச்சைப்படுத்த முயற்சி நடக்கிறதா?
இது வன்மையாக கண்டிக்கதக்கது.
Post a Comment