இதில் டாஸ்மாக் நிறுவனம் குறிப்பிட்ட "மிடாஸ் கோல்டன் டிஸ்டிலரீஸ்' என்ற
நிறுவனத்தின் சரக்குகளை கொள்முதல் செய்வதிலும் விற்பனை செய்வதிலும் முன்னுரிமை காட்டி வந்ததாகவும், இதனால் "குடிமகன்'களுக்கு விருப்பமான சரக்குகள் கிடைப்பதில்லை என்றும் புகார்கள் எழுந்தன. மற்ற நிறுவனங்களின்
தயாரிப்புகளை விட "மிடாஸ்' நிறுவனத்தின் சரக்குகளே டாஸ்மாக் கடைகளில் அதிகம் விற்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. ஆனால், டாஸ்மாக் நிறுவனத்தின் இணையதளத்தில் உள்ள விவரங்கள் இந்த குற்றச்சாட்டுகள் தவறானவை என்பதை நிரூபிக்கின்றன.
அதாவது எந்தவொரு "புலன் விசாரணையுமின்றி" டாஸ்மாக் கின் ஆங்கிலத் தகவல்களை, அவர்களுக்கே உரித்தான பாணியில் தமிழாக்கிக் கொடுத்துள்ளனர். இதில் வேடிக்கை என்னவென்றால் இவ்வளவு நாளும் இதை வெளியிட வேண்டும் எனத் தோன்றாத தினமலருக்கு இன்று மட்டும் வெளியிட வேண்டியத் தேவை ஏன்?ஒருவேளை டாஸ்மாக்கின் வலைதளம் நேற்று தான் புதுப்பிக்கப் பட்டதனாலோ...?
இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள புள்ளி விவரப்படி மொத்தம் 91 வகையான
"பிராண்டுகள்' விற்பனை செய்யப்படுகின்றன. 13 வகையான பீர் வகைகள் விற்பனை
செய்யப்படுகின்றன. இவற்றில் "குவார்ட்டர்' எனப்படும் 180 மி.லி., பாட்டில்களின்
விற்பனை தான் அதிகம். மொத்த விற்பனையில் 82.31 சதவீதம் "குவார்ட்டர்' பாட்டில்கள் தான் விற்பனையாகின்றன. இதில் விற்பனையில் முதல் 10 இடங்களில் உள்ள சரக்குகளின் பட்டியலை பார்க்கும் போது, மிடாஸ்
நிறுவனத்தின் சரக்கு ஆறாவது இடத்தில் தான் உள்ளது. பீர் வகைகளில்
முதல் ஐந்து இடங்களை பிடித்துள்ள நிறுவனங்களில் மிடாஸ் நிறுவனமே
இடம்பெறவில்லை.
இந்த டாஸ்மாக் வலைதளத்தை தினமும் புதுப்பிப்பதாக வலைதளத்திலேயே சொல்கிறார்கள். எந்தவொரு அரசு/தனியார் கழகமும் நிறுவனமயமாக்கப் பட்டதாக இருக்கும் பட்சத்தில், கொள்முதல் - நிகர லாபம் போன்றவற்றை ஒரு நிதியாண்டின் அளவில் தான் குறிப்பிடுவார்கள். ஆனால் இங்கோ மது வியாபாரம் அரசு வியாபாரமாக்கப்பட்ட நாள் தொடங்கி முந்தைய நாள் (DURING THE PERIOD 29-11-2003 TO 30-04-2006) வரையிலான "குவார்ட்டர்" மற்றும் "பியர்" சரக்கின் விற்பனையை மட்டும் தொகுத்தளித்துள்ளாகள். வலைதளம் போடுமளவுக்கு மூளை இருக்கும் அரசிற்கு அதை எவ்வாறு தொகுத்தளிக்க வேண்டும் எனத் தெரியாதோ? வலைதளத்தில் தகல்வல்களை அளிப்பதின் மூலம் தமிழக அரசு தன்னுடைய "transparency" காட்ட முனைந்தாலும், பின்வரும் வாக்கியம் எதனால் சேர்க்கப்பட்டது, அது எப்பொழுது சேர்க்கப்பட்டது என்பது வலைதளத்தை "edit" செய்தவருக்கே வெளிச்சம்.
No preferential treatment is given to any supplier and the systems mentioned above (which has been computerized) is strictly followed since 1998. After take over of retail vending by TASMAC also the same procedure is being followed without any change.
வாழ்க தினமலரின் தரகுப் பாசம்.


















ஐஐடி சிககோவின் பல கட்டிடங்களையும் மீஸ் தான் வடிவமைத்தார். 


